Tnpsc Model Question Paper 44 – General Studies in Tamil & English
1. கூற்று (A): தேவையே கண்டுபிடிப்பின் தாய்
காரணம் (R): யார் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையோ, அதன் தவறுகளை மீண்டும் செய்ய நேரிடும்.
Assertion (A): Necessity is the mother of invention
Reason (R): Those who do not learn from the past are doomed to repeat its mistakes.
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A), (R) இரண்டும் சரி, (R) என்பது (A)வின் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)
(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true
(d) (A), (R) இரண்டும் சரி, (R) என்பது (A)வின் சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
2. சில வேட்டையாடும் உயிரினங்கள், அவற்றின் நிறத்தின் காரணமாகச் சில சாத்தியமான இரையை உண்பதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்ளும். அதே போல மற்ற இனங்கள் உண்பதைத் தவிர்ப்பதற்காக அதே நிறத்தைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகளைச் சில உயிரினங்கள் உருவாக்கியுள்ளன. இருப்பினும் அவற்றிடமே சில விரும்பத்தகாத அல்லது நச்சு இரசாயனங்கள் உள்ளன. இந்த நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
While some predators learn to avoid eating certain potential prey because of their coloration, other species have evoleved mechanisms to imitate this coloration to avoid being eaten, even though they themselves may not be unpleasant to eat or contain toxic chemicals. This phenomenon is called
(a) நச்சுத்தன்மை / Toxicity
(b) உயிரி கறைபடிதல் / Biofouling
(c) மிமிக்ரி / Mimicry
(d) தழுவல் / Adaptation
3. யூகேரியாட் செல்லிலுள்ள மிகப்பெரிய உறுப்பு
The largest organelle within a eukaryotic cell is ——-
(a) மைட்டோகாண்ட்ரியா / Mitochondria
(b) கோல்ஜி உறுப்புகள் / Golgi Apparatus
(c) உட்கரு / Nucleus
(d) ரைபோசோம் / Ribosome
4. 68வது ஐ.நா.பொதுக்குழு ——– ஆம் ஆண்டினை சர்வதேச மண் ஆண்டாக அறிவித்துள்ளது
The 68th UN General Assembly declared ——— year as the international year of soils.
(a) 2005
(b) 2010
(c) 2015
(d) 2020
5. மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கை பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது?
The Blue print for making ultra durable synthetic material is mimicked from
(a) தாமரை இலை / Lotus leaf
(b) மார்ஃபோ பட்டாம்பூச்சி / Morpho butterfly
(c) கிளிமீன் / Parrot Fish
(d) மயிலிறகு / Peacock Feather
6. பின்வருவனவற்றில் எது ஹைட்ரைடு சேர்மங்களின் காரத்தன்மையின் சரியான வரிசை
Which of the following is the correct order of basicity of hydride compounds?
(a) NH3 < PH3 < Ash3 < SbH3
(b) PH3 < AsH3 < NH3 < SbH3
(c) SbH3 < AsH3 < PH3 < NH3
(d) SbH3 < PH3 < AsH3 < NH3
7. கூற்று (A): கண்ணாடியை வெட்டுவதற்கு வைரம் பயன்படுத்தப்படுகிறது
காரணம் (R): வைரமானது அதிக ஒளிவிலகல் குறியீட்டைக் கொண்டுள்ளது
Assertion (A) : Diamond is used for cutting glass
Reason (R): Diamond has a high refractive index
(a) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A)இன் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(b) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனால் (R) என்பது (A)இன், சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
(c) (A) உண்மை ஆனால் (R) உண்மையல்ல / (A) is true but (R) is false
(d) (A) உண்மையல்ல ஆனால் (R) உண்மை / (A) is false but (R) is True
8. மின்னோட்டத்தின் அலகு ——- ஆகும்
The unit of electric current is —–
(a) வோல்ட் / Volt
(b) மோல் / mole
(c) கேண்ட்லா / Candela
(d) ஆம்பியர் / Ampere
9. பொருத்துக:
அ. கார்போட்ரோச்சி கேசிரெசியே 1. எபோகாடுகளின் பாதுகாவலன்
ஆ. விக்டோரியா பொலிவியானா 2. பெர்டா கோசரிஸ்
இ. இம்பேசியன்ஸ் பேனன் 3. சர்க்கரை வள்ளி
ஈ. ஐஃபோமியா அக்யுவாடோரியன்சிஸ் 4. கியு ஹெர்பேரியம்
Match the following:
a. Carpotroche caceresiae 1. Guardian of the forest of EBO
b. Victoria boliviana 2. Berta coceres
c. Impatiens banen 3. Sweet potato
d. Ipomoea aequatoriensis 4. Kew’s Herbarium
a b c d
a. 2 4 1 3
b. 1 3 4 2
c. 3 4 1 2
d. 4 3 2 1
10. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கிணற்று நீர்ப்பாசனம் அதிக அளவில் உள்ளது?
Which district has highest well irrigation in Tamil Nadu?
(a) தஞ்சாவூர் / Thanjavur
(b) விழுப்புரம் / Villupuram
(c) கோயம்புத்தூர் / coimbatore
(d) திருவண்ணாமலை / Thiruvannamalai
11. சஞ்சீவனி திட்டம் தொடர்பான சரியான கூற்றுக்களைத் தேர்ந்தெடுக்கவும்
அ. இது இமாச்சலப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டது
ஆ. இத்திட்டம் தொலை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு அவர்களின் வீட்டு வாசலில் வசதியான மற்றும் உயர்தர காலநடை பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.
இ. மேலும், இத்திட்டம் மூலம் கால்நடை வளர்ப்போருக்கு மூலிகை சார்ந்த மருந்துகளும் வழங்கப்படுகிறது
Choose the correct statements pertaining to “Sanjeevani” project:
1. It was implemented in Himachal Pradesh
2. The project uses telemedicine and technology to provide convenient and high quality livestock care services to farmers at their doorsteps.
3. It was also provided herbal based medicines to the cattle farmers.
(a) ஆ மட்டும் / only 2
(b) ஆ மற்றும் இ மட்டும் / only 2 and 3
(c) அ மற்றும் ஆ மட்டும் / only 1 and 2
(d) அ மற்றும் இ மட்டும் / only 1 and 3
12. பதிவுரிமை பெற்ற ஒரு அரசியல் கட்சி பல கோஷ்டிகளாக உடைபடும் போது ஏதோ ஒரு கோஷ்டியை மட்டும் பதிவுரிமை பெற்ற கட்சியாக அங்கீகரிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
When a recognized political party gets split up into splinter groups, the power of recognizing one such faction or group as original political party is vested with
(a) இந்திய உச்ச நீதிமன்றம் / Supreme court of India
(b) மக்களவையின் அவைத் தலைவர்/ Speaker of Lok sabha
(c) சட்டப் பேரவையின் அவைத் தலைவர் / Speaker of Legislative Assembly
(d) இந்தியத் தேர்தல் ஆணையம்/ Election commission of India
13. பணவீக்கத்தைப் பொறுத்தவரை பின்வருவனவற்றில் எது சரியானது?
Which of the following is correct with respect to inflation?
(a) பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிகப்பு / rise in budget deficit
(b) பணத்திற்கான தேவை அதிகரிப்பு / rise in demand for money
(c) பொது விலைக் குறியீட்டில் உயர்வு/ rise in general price index
(d) நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வு / rise in prices of consumer goods
14. “துடிப்பான கிராமங்கள் திட்டம்” பற்றிய பின்வரும் அறிக்கைகளை பரிசீலித்து சரியான விருப்பத்தை தேர்வு செய்யவும்.
Consider the following statements about ‘vibrant villages programme’ and choose the right option:
(a) வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு நிதி வழங்குதல் / Providing funds for flood prone villages
(b) பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணம் வழங்குதல் / Providing relief for famine affected villages
(c) நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் / Providing infrastructure for earthquake prone regions
(d) நாட்டின் வடக்கு நில எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் / Developing infrastructure along northern land border of the country
15. —— பல்வேறு நடவடிக்கைகள் மூலம் போதைப் பொருள் துஷ்பிரயோகம் பற்றி விழிப்புணர்வை மக்களிடம் சென்றடைய விரும்புகிறது
——– intends to reach out to the masses and spread awareness about substance abuse through various activities.
(a) போதைப்பொருள் விழிப்புணர்வு இயக்கம் / Drug Awareness movements
(b) நாஷா முகத் பாரத் அபியான் / Nasha Mukt Bharat Abhiyaan
(c) போதைப் பொருள் விழிப்புணர்வு / Narcotic Awareness
(d) மது விழிப்புணர்வு / Alcohol Awareness
16. கோப்பனின் காலநிலை வகைபாட்டில் As வகை குறிக்கும் காலநிலை எது?
In the Koppen’s classification of climate As type of climate represents
(a) அயன சவானா வகை / Tropical Savana type
(b) அயன பருவக்காற்று வகை / Tropical monsoon type
(c) அயன ஈரப்பத வகை / Tropical moist type
(d) வெப்ப பாலை வகை / Hot desert type
17. இந்தியாவில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் மைல் கற்களின் கால வரிசையை வரிசைப்படுத்தவும்
1. முதல் கம்பியில்லா தந்தி நிலையம் சாகர் தீவுக்கும் சாண்ட்ஹெட்ஸ் இடையே நிறுவப்பட்டது.
2. சிம்லாவில் முதல் தானியங்கி பரிமாற்றம் நிறுவப்பட்டது
3. UK மற்றும் இந்தியாவுக்கு இடையே ரேடியோ தொலைபேசி அமைப்பு துவங்கப்பட்டது
4. உள்நாட்டு தகவல் தொடர்புக்கான முதல் செயற்கை கோள் பூமி நிலையம் செகந்திராபாத் ஆந்திர பிரதேசத்தில் நிறுவப்பட்டது
Arrange in chronological order the milestones of the development of communication technology in India:
1. First wireless telegraphs stations established between Sagar island and Sandheads.
2. First Automatic Exchange installed in Shimla
3. Radiotelephone system inaugurated between UK and India
4. First satellite earth station for domestic communications established at Secunderabad A.P.
(a) 1, 4, 2, 3
(b) 1, 2, 3, 4
(c) 2, 1, 4, 3
(d) 3, 2, 1, 4
18. இந்தியாவில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம்
The world largest single solar power plant is located in the state of ———- in India
(a) கேரளா / Kerala
(b) கர்நாடகா / Karnataka
(c) ஆந்திரபிரதேசம் / Andhra Pradesh
(d) தமிழ்நாடு/ Tamil Nadu
19. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
Which among the following is the longest river in India?
(a) கங்கை / Ganga
(b) பிரம்பபுத்திரா / Brahmaputra
(c) சிந்து / Sindhu
(d) நர்மதா / Narmadha
20. பொருத்துக:
அ. பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் 1. உலக வெப்பமயமாதல்
ஆ. நைட்ரஜன் ஆக்ஸைடு 2. உயிரியப்பெருக்கம்
இ. கார்பன்டை ஆக்ஸைடு 3. ப்ளுபேபி சின்ரோம் (நீலக் குழந்தை நோய்க்குறி)
ஈ. குடிநீரில் நைட்ரேட் 4. சுவாச நோய்கள்
Match the following:
a. Pesticide residues 1. Global warming
b. Nitrogen Dioxide 2. Biomagnification
c. Carbondioxide 3. Blue baby syndrome
d. Nitrate in drinking water 4. Respiratory disorders
a b c d
a. 1 4 3 2
b. 4 3 2 1
c. 3 4 1 2
d. 2 4 1 3
21. மெஹ்ரோலி இரும்புத்தூண் தற்போது —————ல் உள்ளது.
The Mehrauli Iron pillar is currently located in —–
(a) டெல்லி / Delhi
(b) அலகாபாத் / Allahabad
(c) மெஹ்ரோலி / Mehrauli
(d) சாரநாத் / Saranath
22. அக்பர் தனது (வளர்ப்பு) சகோதரர் மிர்சா அஜீஸ் கோக்காவை ——இன் ஆளுநராக நியமித்தார்.
Akbar appointed his Foster brother, Mirza Aziz Kokah as the Governor of ——–
(a) வங்காளம் / Bengal
(b) பீகார் / Bihar
(c) காபூல் / Kabul
(d) ஜான்பூர் / Jaunpur
23. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தவறானவற்றைத் தேர்ந்தெடுக்க
Pick out the incorrect matched from the following:
a. முஹாதாசிஸ் / Muhtasibs – பொது ஒழுக்க தணிக்கை/ Censor of Public Morals
b. வாக்கியா நவிஸ் / Waqia Navis – செய்தி நிருபர்கள் / News Reporters
c. குஃபியா நவிஸ் / Khufia Navis – ரகசிய கடிதம் எழுதுபவர்கள் / Secret letter Writers
d. ஹராகாரஸ் / Harakarah’s – நீதித்துறை ஆய்வாளர் / Judicial Inspector
24. 1573இல் தோடர்மால் ——-இல் இருந்த அனைத்து நிலங்களையும் தனது பிரபலமான நில அளவியல் முறையில் அளவீடு செய்தார்
In 1573, Todarmal conducted his famous systematic survey of all the lands of ——
(a) குஜராத் / Gujarat
(b) வங்காளம் / Bengal
(c) பீகார் / Bihar
(d) ஒரிசா / Orissa
25. பாதிரியார் தாமஸ் ஸ்டீவன்ஸ் ஆக்ஸ்போர்டில் இருந்து வந்து ——- நகரில் நாற்பது ஆண்டுகள் தங்கினார்.
Father Thomas Stevens, a Jesuit from Oxford, arrived in ——– and remained there for forty years.
(a) பாண்டிச்சேரி / Pondicherry
(b) கோவா / Goa
(c) காம்போ / Cambay
(d) வங்காளம் / Bengal
26. பெத்துவான் பள்ளி பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகரால் ——–ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது
Bethvan School was established by Pandit Ishwarchandra Vidya Sagar in the year ——— at Calcutta
(a) 1843
(b) 1845
(c) 1847
(d) 1849
27. பின்வருவனவற்றைப் பொருத்துக:
அ. ராஷ்டிர கூடர்கள் 1. அதிக எண்ணிக்கையிலான கோட்டைகள்
ஆ. சோழர்கள் 2. கிராம உள்ளுர் தன்னாட்சி
இ. பல்லவர்கள் 3. கட்டடக் கலைக்கு ஆதரவு
ஈ. சாளுக்கியர்கள் 4. வேசரா கட்டடக்கலை
Match the following:
a. Rashtrakutas 1. Large number of forts
b. Cholas 2. Village self-government
c. Pallavas 3. Patronage of architecture
d. Chalukyas 4. Vesara Style of Architecture
a b c d
a. 1 2 3 4
b. 4 1 2 3
c. 2 3 4 1
d. 3 4 1 2
28. ஹரப்பாவில் இறந்தவர்களை புதைக்கப்பட்டிருக்கும் இடத்தின் ஆதாரத்தை ———- என பெயரிடப்பட்டுள்ளது
The evidence of the disposal of the dead at Harappa was named as ——-
(a) கல்லறை R -37/ Cementery R-37
(b) கல்லறை S -77/ Cemetery S-77
(c) கல்லறை T – 67/ Cementery T-67
(b) கல்லறை U – 87/ Cemetery U-87
29. லோக்பாலை குறித்ததான சொற்றொடர்களில் கீழ்வருவனவற்றுள் எவை சரியானவை?
1. லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒரு தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப்படுகின்றனர்.
2. 50 சதவீதத்திற்கும் குறையாமல் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோர் பரிசீலனைக் குழுவில் இடம் பெறல் வேண்டும்
3. இதன் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது இவற்றுள் எது முந்தையதோ அது ஆகும்.
Which of the following statements are true about the Lokpal?
i. Chairperson and members of the Lokpal are selected by a selection committee
ii. Not less than 50 percent of the members of the search committee shall be from amongst the persons who belong to SC/ST, OBC, minorities and women.
iii. The term of office is 3 years or 65 years of age whichever is earlier.
(a) 1 மட்டும்/ i only
(b) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(c) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only
(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
30. கீழ்வரும் வாக்கியங்களை கவனிக்கவும்.
1. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றலாம்.
2. தேவை ஏற்பட்டால், உச்ச நீதிமன்றம் இந்தியாவின் எந்தப்பகுதியிலிருந்தும் செயல்படலாம்.
3. உறுப்பு 144 உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை அதிகாரங்களை கையாள்கிறது
4. ஆட்கொணர்வு நீதிப்பேராணை அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
மேற்கூறிய வாக்கியங்களுள் எவை சரியானவை?
Consider the following statements:
1. An ex-judge of the supreme Court may act as a Supreme Court Judge again.
2. If there is a need, Supreme Court can function from any part of India.
3. Article 144 deals with advisory jurisdiction of Supreme Court.
4. Only Supreme Court can issue Habeas Corpus Writ
Which of the above statements are correct?
(a) 1, 2 மற்றும் 3 சரியானவை / 1, 2 and 3 are correct
(b) 2, 3 மற்றும் 4 சரியானவை / 2, 3 and 4 are correct
(c) 1 மற்றும் 2 சரியானவை / 1 and 2 are correct
(d) 2 மற்றும் 3 சரியானவை / 2 and 3 are correct
31. பின்வரும் எந்தச் சட்டத்தின் மூலம் மாநில அரசுகள் மத்திய அரசின் ஒப்புதலோடு வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற முடியும்.
Under which Act the States have the power to borrow outside India with the consent of the centre?
(a) இந்திய அரசு சட்டம், 1909/ Government of India Act, 1909
(b) இந்திய அரசு சட்டம், 1919Government of India Act, 1919
(c) இந்திய அரசு சட்டம், 1935/ Government of India Act, 1935
(d) இந்திய அரசு சட்டம், 1947/ Government of India Act, 1947
32. கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
- அரசமைப்பு விதியின்படி ஒரு மாநில சட்ட மன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இருமுறை கூட வேண்டும்.
2. சட்ட மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு வரியும் விலக்கிக் கொள்ள முடியாது
3. சட்ட மன்றத்தின் பதவிக்காலமான ஐந்து ஆண்டுகள் ஒரு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நீட்டிக்கப்படலாம்
4. மாநிலத்தின் நிதியை சட்டமன்றம் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது
மேற்கூறியவற்றுள் எவை சரியானவை?
Consider the following Statements:
1. As per the constitution a State Legislative assembly must sit atleast twice a year
2. No tax can be withdrawn without the approval of the legislative assembly
3. The five year term of legislative assembly can be extended by a Parliamentary law.
4. Legislative Assembly controls the finance of the state.
Which of the above statements are correct?
(a) 2, 3 மற்றும் 4 சரியானவை/ 2, 3 and 4 are correct
(b) 1, 2 மற்றும் 4 சரியானவை / 1, 2 and 4 are correct
(c) 1, 2, 3 மற்றும் 4 சரியானவை / 1, 2, 3 and 4 are correct
(d) 1, 3 மற்றும் 4 சரியானவை / 1, 3 and 4 are correct
33. மக்களவையின் சபாநாயகர் தான் வகிக்கும் பதவியின் காரணமாக கீழ்வரும் எந்த நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக செயல்படுகிறார்?
1. அலுவல் ஆலோசனை குழுவின்
2. பொது நோக்கு குழுவின்
3. விதி குழுவின்
4. மதிப்பீட்டு குழுவின்
The speaker of the Lok Sabha is the ex-officio Chairman of which of following Parliamentary Committees?
i. Business Advisory Committee
ii. General Purpose Committee
iii. Rules Committee
iv. Estimates Committee
(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(b) 1, 2 மற்றும் 3 மட்டும்/ i, ii and iii only
(c) 1 மற்றும் 4 மட்டும்/ i and iv only
(d) 3 மற்றும் 4 மட்டும் / iii and iv only
34. கீழ்கண்டவற்றை பொருத்துக:
அ. விதி 350 A 1. ஆரம்ப பள்ளி நிலைகளில் தாய்மொழிக் கல்வி
ஆ. விதி 351 2. ஹிந்தி பாடத்தினை பரவி மேன்மையடையச் செய்தல்
இ. விதி 335 3. SC மற்றும் ST பிரிவினருக்கு பணி நியமனம்
ஈ. விதி 51 4. சர்வதேச அமைதி மேம்பாடு
Match the following:
a. Art 350 1. Mother tongue at Primary School level
b. Art 351 2. Spread and development of Hindi
c. Art 351 3. Appointment of SC and ST
d. Art 51 4. Promotion of International Peace
a b c d
a. 1 2 3 4
b. 4 3 2 1
c. 1 4 3 2
d. 2 3 4 1
35. 1978-ம் ஆண்டு 44வது சட்டத் திருத்தம் மூலம் சொத்துரிமை எடுக்கப்பட்டு எந்த அரசியலமைப்பு விதியின் கீழ் சட்ட உரிமையாக இணைக்கப்பட்டுள்ளது
The right to property was taken away as a Fundamental Rights by the 44th Amendment Act, 1978 and converted as a legal Right Under Article:
(a) 300 A
(b) 206A
(c) 200 A
(d) 400 A
36. பின்வரும் கூற்றை கூறியது யார்?
“சுயராஜ்ஜியம் என்பது இந்திய மக்கள் சுதந்திரமாக தங்கள் பிரதிநிதிகள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதாகும்”
Who said the following statement “Swaraj must spring from the wishes of the people of India as expressed through their freely chosen representatives”?
(a) மகாத்மா காந்தி / Mahatma Gandhi
(b) B.R.அம்பேத்கர்/ B.R.Ambedkar
(c) நெல்சன் மண்டேலா / Nelson Mandela
(d) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
37. எந்த வகை வேலையின்மை வேளாண் துறையில் அதிகமாக காணப்படுகிறது?
Which type of unemployment that largely exist in the agricultural sector is?
(a) விருப்ப வேலையின்மை / Voluntary unemployment
(b) விருப்பமற்ற வேலையின்மை / Involuntary unemployment
(c) அமைப்பு வேலையின்மை / Structural unemployment
(d) மறைமுக வேலையின்மை / Disguised unemployment
38. தொழில் துறையின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு எந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது?
Which Act empowers the Central Government to take promotional and regulatory measures for the orderly development of industrial sector?
(a) தொழில்கள் மேம்பாடு மற்றும் ஸ்தாபன சட்டம் / Industries Promotion and Establishment Act
(b) நலிவடைந்த தொழில்கள் நிறுவனங்கள் சட்டம் / Sick Industrial Companies Act
(c) சிறுதொழில்கள் சேவைகள் சட்டம் / Small Industries Services Act
(d) தொழில்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டம் / Industries Development and Regulation Act
39. இந்தியாவில் நிதி குழுவின் பணிகள்
1. நிகர வரி வருவாயை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பகிர்தல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே அவற்றிற்கான பங்கினை ஒதுக்கீடு செய்தல்.
2. மாநிலங்களுக்கான மத்திய அரசின் மானியங்கள் மற்றும் நிதி உதவிக்கான நெறிகள் பற்றி வழிகாட்டுதல்
The functions of Finance Commission in India are
(a) The distribution of net proceeds of texes to be shared between the Union and the States and the allocation of Shares of such proceeds among the states.
(b) The Principles which should govern the Payment by the Union of grants in aid to the revenue of the states.
(a) 1 சரி 2 தவறு / a is correct b is false
(b) 1 தவறு 2 சரி / a is false (b) is correct
(c) 1 மற்றும் 2 சரி / a and b are correct
(d) 1 மற்றும் 2 தவறு / a and b are false
40. ரெப்போ விகிதம் என்பதன் பொருள் என்ன?
What is meant by Repo rate?
(a) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டியை குறிக்கும் / The rate of interest charged by the RBI to commercial banks
(b) வங்கி விகிதக் கொள்கை / Bank rate
(c) தள்ளுபடி விகிதக் கொள்கை / Discounting rate
(d) கடன் பங்கீடு / Rationing of Credit
41. கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
நீல பொருளாதாரம் எதனுடன் தொடர்புடையது அல்ல
1. மீன் உற்பத்தி அதிகரித்தல்
2. மீன் தொடர்புடைய செயல்களில் இளைஞர்களை செயல்பட வைத்தல்
3. தேன் உற்பத்தி அதிகரித்தல்
4. மீன் ஏற்றுமதி அதிகரித்தல்
கீழ்கண்டவற்றில் எது/எவை தவறானது?
Consider the following statement:
Blue Economy deals with
1. Raising of fish production
2. Youth to be involved in Fishery Extension activities
3. Raising of honey production
4. Fishery exports to be raised
Which one of the answer is/are incorrect?
(a) 3 மட்டும் / 3 only
(b) 1 மற்றும் 2/ 1 and 2
(c) 1 மற்றும் 4/ 1 and 4
(d) 3 மற்றும் 2/ 3 and 2
42. கீழ்க்கண்டவற்றுள் எது இந்தியாவில் மகா ரத்னா தொழிற்சாலை இல்லை?
Which of the following is not a Maharatna Industry in India?
(a) கெயில் / GAIL
(b) பெல் / BHEL
(c) கோல் இந்தியா லிமிடெட் / Coal India Ltd.
(d) இந்திய விமானப் போக்குவரத்து கழகம் / Airport Authority of India
43. நிதி ஆயோக்கின் தலைவர் யார்?
Who is the Chairperson of Niti Aayog?
(a) நிதி அமைச்சர் / Finance Minister
(b) குடியரசுத் தலைவர்/ President of India
(c) பிரதம மந்திரி / Prime Minister
(d) ரிசர்வ் வங்கி கவர்னர் / RBI Governor
44. இந்துக்களும், முஸ்லிம்களும் “இந்தியா என்ற அழகிய மணப்பெண்னின் இரு கண்கள்” என சித்தரித்தவர் யார்?
Who described the Hindus and Muslims as “two eyes of the beautiful bride that was India”?
(a) சர் சையத் அஹமத் கான் / Sir Syed Ahmed Khan
(b) சர் மன்சர்ஜி பௌநாக்ரி / Sir Mancherjee Bhwnaggree
(c) டாக்டர் லால் பஹதூர் / Dr.Lal Bahadur
(d) மதன் மோஹன் மாலவியா / Madan Mohan Malviya
45. பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
i. சம்பரான் சத்தியாகிரகம்
ii. மகத் சத்தியாகிரகம்
iii. தண்டி உப்புச் சத்தியாகிரகம்
iv. கேதா சத்தியாகிரகம்
Arrange the launching of the following events in chronological order:
i. The champaran Satyagraha
ii. The Mahad Satyagraha
iii. The Dandi Salt Satyagraha
iv. The Kheda Satyagraha
(a) ii, iii, iv, i
(b) iii, ii, i, iv
(c) i, iv, ii, iii
(d) i, ii, iv, iii
46. “ஐம்பதாயிரம் நன்கு பயிற்சிப்பெற்ற படைவீரர்களால் என்ன செய்யமுடியவில்லையோ, அதனை மகாத்மா செய்து முடித்தார். அவர் அமைதியை ஏற்படுத்தினார். அவர் ஓர் தனிமனித படை” இதனை கூறியது யார்?
“What fifty thousand well-eqipped soldiers could not do, the Mahatma has done – he has brought peace. He is one-man boundary force”; who said this?
(a) லுயி ஃபிஷ்ஷர் / Louis Fischer
(b) ஹாலிஃபாக்ஸ் பிரபு / Lord Halifax
(c) டாக்டர்.இராஜேந்திர பிரசாத் / Dr.Rajendra Prasad
(d) மவுண்ட்பேட்டன் பிரபு / Lord Mountbatten
47. மது ஒழிப்பு மீதான விவாதமொன்றில் பங்குபெற்ற ——- என்பவர் “இந்தியா உட்பட எந்த நாட்டிலும் மது ஒழிப்பு கொள்கை நடைமுறைபடுத்துவது என்பது ஏற்புடைய கொள்கை அல்ல” என்றார்.
—— was the select committee member who observed during Liquor prohibition debate that prohibition was not suitable policy to be adopted in any country including India.
(a) டி.டி.கிருஷ்ணமாச்சாரி / T.T.Krishnamachari
(b) எம்.சி.இராஜா / M.C.Raja
(c) வில்லியம் ரைட் / William Wright
(d) வைத்யநாதர் / Vaidyanathar
48. கி.பி. 1920-ல் நடைபெற்ற இந்திய குடிமைப் பணித் தேர்வில் நான்காவதாக இடம் பிடித்ததும் ஆனால் பயிற்சி காலம் முடிப்பதற்கு முன்பே அந்த பொறுப்பை இராஜினாமா செய்தவரை கண்டுபிடிக்க?
Identify the Indian who secured fourth place in Indian Civil service exam in 1920 but resigned before completing his probation
(a) ஆனந்த மோகன் போஸ்/ Anandh Mohan Bose
(b) கேர்பால் கணேஷ் அகர்கர் / Gopal Ganesh Agarkar
(c) சுபாஷ் சந்திர போஸ் / Subash Chandra Bose
(d) சித்ரன்ஜன்தாஸ் / Chitranjan Doss
49. ——— தான் அநேகமாக சமதர்ம தத்துவம் மற்றும் போல்ஷ்விஸம் பற்றி எழுதிய முதல் இந்திய எழுத்தாளர் ஆவார்.
——- was possibly the first Indian writer to write about socialism and Bolshevism?
(a) மனபேந்திர நாத் ராய் / Manabendira Nath Roy
(b) லாலா லஜ்பதி ராய்/ Lala Lajat Roy
(c) நளினி குப்தா / Nalini Gupta
(d) S.A.டாங்கோ/ S.A.Dange
50. 1806ல் வேலூர் கலகம் நடந்த போது சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்தவர் யார்?
Who was the Governor of Madras Presidency when Vellore Mutiny took place in 1806?
(a) வில்லியம் மேடோவ்ஸ் / William Medows
(b) சர் சார்லஸ் ஓக்காலே / Sir Charles Oakeley
(c) வில்லியம் பென்டிங் / William Bentinck
(d) சர் ஜார்ஜ் பார்லோவ்/ Sir George Barlow
51. கீழே கொடுக்கப்பட்ட தென்னிந்திய புரட்சிக்கான பொருளாதார காரணங்களில் எது தவறு என்பதை எழுதுக:
1. திண்டுக்கல்லில் 25% அதிகமாக வரி உயர்த்தப்பட்டது
2. 50% வரி மக்களின் நலனுக்கு உபயோகப்படுத்தப்பட்டது
3. பிரிட்டிஷார் மன்னர்களிடம் கடன் பெற்றனர்
4. 1798ல் அங்கே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது
Which of the following Statements about the economic causes for South Indian Rebellion are False?
i. Taxes were raised upto 25% in Dindigul
ii. 50% of Taxes were spent for the welfare of the people
iii. British got loans from Kings.
iv. There was a famine in 1798
(a) 1 மற்றும் 2 சரி 3 மற்றும் 4 தவறு / i and ii are True iii and iv are false
(b) 3 மற்றும் 4 சரி 1 மற்றும் 2 தவறு / iii and iv are True i and ii are false
(c) 1 மற்றும் 4 சரி 2 மற்றும் 3 தவறு / i and iv are True ii and iii are false
(d) 2 மற்றும் 3 சரி 1 மற்றும் 4 தவறு / ii and iii are True i and iv are false
52. தமிழ்ச்சமூகம் பெற்றிருக்கும் வாய்மொழி வழக்காறுகளை என்னவென்று கூறலாம்?
1. பாண் மரபு
2. பாணர் மரபு
What can be said about the oral traditions that in the Tamil Society?
i. Paan Legacy
ii. Paanar Legacy
(a) 1 மட்டும் / i only (b) 2 மட்டும்/ ii only
(c) 1 மற்றும் 2/ i and ii
(d) மேற்காணும் எவையுமல்ல / None of the above
53. கோடிட்ட இடங்களை நிரப்புக:
வெட்சி நிறைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது —— யாம் உட்கா எதிரூன்றல் ——–
Fill in the blanks:
“vetchi niraikavardhal meettal karandhaiyam vatkar melselvadu ———-yam, utkathu edhinoondral ——
(a) வஞ்சி, காஞ்சி / Vanchi, Kanchi
(b) தும்பை, வாகை / Thumbai, Vagai
(c) நொச்சி, உழிஞை / Nochi, Uzhignai
(d) முல்லை, பாலை / Mullai, Palai
54. “உடுக்கை இழந்தவன் கைபோல” ஒருவனின் துன்பத்தை எது போக்குவதாகத் திருவள்ளுவர் கூறுகின்றார்?
“If does your dress does slip.” The hands do rush in to help so does —- should be says Thiruvalluvar
(a) அன்பு / Love (Anbu)
(b) நட்பு / Firendship (Natpu)
(c) பண்பு / Character (Panbu)
(d) கருணை / Compassion (Karunai)
55. கோடிட்ட இடங்களை நிரப்புக:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது ——–, பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும் இல்லது ——-
Fill in the blanks:
Thalla vilaiyoolum thakkarum Thazhvilaa selvarum servathu —–
Pal kuzhuvum Paazhseyum uttpagaiyum vendalaikkum kol kurumbum illathu ——-
(a) நகரம், நாடு / Nagaram, Naadu
(b) நாடு, நாடு / Naadu, Naadu
(c) ) நகரம், நகரம் / Nagaram, Nagaram
(d) நாடு, நகரம் / Naadu, Nagaram
56. உலக வாழ்க்கைக்கு அடிப்படை உயிர் யார்? அல்லது எது?
Who or what adds vitality to the fundamental worldly life?
(a) அரசன் / King
(b) நெல் / Paddy
(c) நீர் / Water
(d) இம்மூன்றும் / All three
57. கீழ்வருவனவற்றுள் எவை சோழர்கள் காலத்தில் கல்வி மையமாகத் திகழ்ந்தது?
1. எண்ணாயிரம்
2. திருபுவனம்
3. திருமுக்கூடல்
4. திருவெற்றியூர்
Which one of the following was educational centre(s) under the cholas?
1. Ennayiram
2. Thirubhuvanam
3. Thirumukkudal
4. Thiruvetriyur
(a) 1, 2 மட்டும் / 1, 2 only
(b) 2, 3 மட்டும் / 2, 3 only
(c) 4 மட்டும் /4 only
(d) மேற்கூறிய அனைத்தும் / All the above
58. வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல்
Name the text which is also called as scripture of Agriculture (Velaan Vedam)
(a) திரிகடுகம் / Thirukadugam
(b) ஏலாதி / Elaathi
(c) இனியவை நாற்பது / Iniyavai Narpathu
(d) நாலடியார் / Naladiyar
59. திருவள்ளுவர் எப்போழுது யாக்கைக்கு மருந்து என்பது தேவைப்படுவதில்லை எனக் கூறுகிறார்?
According to Thiruvalluvar when does one’s body not require medicines?
(a) அளவாக உண்டால் / By eating limited food
(b) சமைத்து உண்டால் / By eating cooked food only
(c) உடலுக்கு ஏற்புடையது உண்டால் / By eating food that your body accepts
(d) அருந்தியது அற்றது உண்டால் / By eating only after proper digestion of food
60. வெண்மணி நிகழ்வை மையப்படுத்தி வெளிவந்த இந்திரா பார்த்தசாரதியின் புதினம் எது?
Which novel by Indian Parthsarathy was based on the Venmani incident?
(a) கால வெள்ளம் / Kaala Vellam
(b) புளிய மரத்தின் கதை / Pulliya Marathin Kathai
(c) நித்திய கன்னி / Nithiya Kanni
(d) குருதிப்புனல்/ Kuruthipunal
61. காங்கிரஸ் அமைப்பிற்கு சாதகமாக செயல்பட்ட மதராஸ் இளைஞர் குழுவை ஒருங்கமைத்தது ——-
——– organized the Madras Youth League, a Pro-congress Organisation.
(a) M.முஹம்மத் ஆயிஷா கனி / M.Mohamed Aysha Gani
(b) K.அங்கசி அம்மாள் / K.Angachiammal
(c) கிருஷ்ணாபாய் நிம்ப்கர் / Krishnabhai Nimbkar
(d) T.V.ஜானகி அம்மாள் / T.V.Janaki Ammal
62. ஈ.வே.ரா பெரியார் திராவிட கழகத்தை துவக்கிய ஆண்டு
E.V.R. Periyar started Dravida Kazhagam in
(a) 1944
(b) 1945
(c) 1947
(d) 1951
63. தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதை தெடராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தது யார்?
Who took measures to discontinue the teaching of Hindi in Government schools in Tamil Nadu?
(a) சி.என்.அண்ணாதுரை / C.N.Annadurai
(b) செல்வி.ஜெ.ஜெயலலிதா / Ms.J.Jayalalithaa
(c) மு.கருணாநிதி/ M.Karunanidhi
(d) எம்.ஜி.இராமசந்திரன் / M.G.Ramachandran
64. ஆதிச்சநல்லூர் தொல்பொருள் ஆய்வுகள் குறித்த கூற்றுகளில் சரியான கூற்று எது?
1. ஆதிச்சநல்லூர் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த ஊர் ஆகும்.
2. ராபர்ட் புரூஸ் ஃபுட் என்பவர் ஆதிச்சநல்லூரில் தொல் பொருள் ஆய்வுகள் நடத்தினார்
3. ஆதிச்சநல்லூர் தொல்பொருள் தாதுக்களில் இரும்பாலாகிய வேலும் வெண்கலத்தாலாகிய சேவற் கொடியும் காணக் கிடைக்கின்றது.
4. ஆதிச்சநல்லூரில் பொன்னால் ஆன வாய் மூடிகள் காணக் கிடைக்கின்றன.
Which one of the following statements is/are correct regarding Adichanallur Excavation?
1. Adichanallur locates in Tirunelveli District.
2. Rober Bruce Foote made excavation in Adichanallur
3. The iron spear and bronze cock flag found in Adichanallur.
4. The gold lids found in Adichanallur.
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும்/ 2 only
(c) 1, 2, 3 மட்டும்/ 1, 2, 3 only
(d) 1, 2, 3, 4
65. சதுர் தண்டி பிரகாசிகா என்ற நூலை எழுதியவர் ——-
The book entitled Chatur Dandi Prakasika was written by —–
(a) வேங்கட முகி / Venkata Mukhi
(b) சாமா சாஸ்திரிகள் / Shama Sastriyar
(c) முத்துசாமி தீட்சிதர் / Muthusamy Dikshitar
(d) வேதநாயகம் பிள்ளை / Vedanayakam Pillai
66. தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
Who introduced cradle baby scheme?
(a) அறிஞர் அண்ணா / Arignar Anna
(b) எம்.ஜி.ராமச்சந்திரன்/ M.G.Ramachandran
(c) மு.கருணாநிதி / M.Karunanithi
(d) ஜெ.ஜெயலலிதா / J.Jayalalithaa
67. சுகாதார சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முதல் குழு அறிக்கை ——— ஆகும்
The first committee report submitted for an integrated approach to health services is ——–
(a) முகர்ஜி குழு / Mukerji Committee
(b) சர்.சி.வி.ராமன் குழு / Sir.C.V.Raman Committee
(c) சர்.ஜான் மார்ஷல் குழு / Sir John Marshall Committee 3
(d) சர் ஜோசப் ஃபோர் குழு / Sir Joseph Bhore Committee
68. NSDP 2019-2020ன் படி, தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் ————- தரவரிசையில் உள்ளது.
According to NSDP, 2019-20 Tamilnadu occupied —— rank in per capita income.
(a) மூன்றாவது / Third
(b) நான்காவது / Fourth
(c) ஐந்தாவது / Fifth
(d) ஆறாவது / Sixth
69. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் இங்கு அமைந்துள்ளது?
The Central Leather Research Institute is located in
(a) திண்டுக்கல் / Dindigul
(b) வேலூர் / Vellore
(c) ஈரோடு / Erode
(d) சென்னை / Chennai
70. கிரிஷி ஸ்ராமிக் சமாஜிக் சுரக்க்ஷா யோஜ்னா வின் முக்கிய நோக்கம் —–
The main objective of Krishi Sharamik Samajik Suraksha Yojana is —-
(a) 18 முதல் 60 வயதிற்குட்பட்ட வேளாண் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அளிப்பது / To give social security benefits to agricultural labourers on hire in the age group of 18 to 60 years.
(b) போதுமான அளவு உணவு தானிய இருப்பை உறுதி செய்வது / To ensure availability of appropriate quality of food grains.
(c) வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவரின் குழந்தைகளுக்கு மாதம் ரூ.100 கல்வி படி வழங்குவது / To give educational allowance of Rs.100 per month to each child of parents living below poverty line.
(d) ஏழைகளுக்கு மிகக் குறைந்தவட்டியில் கடன் முன்பணம் வழங்குவது/ To give advance loans to the poor at very low rate of interest
71. தவறான அறிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் சேவைகள் அடங்குவன
1. 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தல்
2. பின் தங்கிய சமூக மக்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வியை மேம்படுத்தல்.
3. பாலின சார்புப் பார்வையுடன் குறிப்பிட்ட மாற்றுப் பாலினத்தைப் புறந்தள்ளுவதைத் தடுத்தல்
Choose the wrong statement:
Services of Integrated Child Development Scheme (ICDS) includes:
i. To improve the nutritional and health status of children in the age group 0-6 years.
ii. To improve the health, nutrition and education of the target community.
iii. Prevention of gender biased sex selective elimination
(a) 1 மற்றும் 2 மட்டும் / I and ii only
(b) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
(c) 1 மட்டும் / I only
(d) 3 மட்டும் / iii only
72. கூற்று (A) : தமிழ்நாட்டின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி. (ஐ.சி.டி.எ.சி.டி) தொடங்கப்பட்டது.
காரணம் (R): தொழில்களுக்கு மட்டுமே பயிற்சித் திட்டத்தை நடத்த உதவுகிறது.
Assertion (A): The information and communication Technology Academy of Tamilnadu (ICTACT) launched.
Reason (R): Helps to conduct training programme for only industries.
(a) (A) உண்மை ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (R) (A)வுக்கு சரியான விளக்கம் / (R) is the exact explanation for (A)
(c) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை / Both (A) and (R) are true
(d) (A) மற்றும்(R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false
73. Covid 19 எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் பேக்கேஜ் இன்சூரன்ஸ் திட்டத்தில் பின்வருவனவற்றில் எது உண்மையானது?
1. மொத்தம் 22.12 லட்சம் பொது சுகாதாரப் பாதுகாப்பாளருக்கு 90 நாட்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை வழங்குதல்
2. கோவிட் 19 நோயாளிகளின் நேரடித் தொடர்பு மற்றும் பராமரிப்பில் இருக்க வேண்டிய சமூக சுகாதாரப் பணியாளர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
Which of the following is/are true with reference to Pradhan Mantri Garib Kalyan package insurance scheme for health workers fighting Covid 19?
i. To provide an insurance cover of Rs.20lakshs for 90 days to total of around 22.12 lakh Pubic Health Care Providers.
ii. Includes Community Health workers who may have to be in direct contact and care of Covid 19 Patients and who may be at risk of being impacted by this
(a) 1 மட்டும்/ i only
(b) 2 மட்டும் / ii only
(c) 1 மற்றும் 2 இரண்டும் / Both i and ii
(d) 1 மற்றும் 2 இல்லை / Neither i nor ii
74. உலக உயிர்க்கோள இருப்பு வலைதளத்தில் தமிழ்நாட்டின் —- மற்றும் தாவர விலங்கினங்களைப் பாதுகாக்க சேர்க்கப்பட்டுள்ளது.
In world network of biosphere reserves ——- and ——– of Tamilnadu have been included to protect the flora and fauna.
(a) பெரிய நிக்கோபார் மற்றும் நீலகிரி / Great Nicobar and The Nilgiris
(b) மன்னார் வளைகுடா மற்றும் நீலகிரி / Gulf of Mannar and The Nilgiris
(c) மன்னார் வளைகுடா மற்றும் அகஸ்தியமலை / Gulf of Mannar and Agasthyamalai
(d) பெரிய நிக்கோபார் மற்றும் அகஸ்தியமலை / Great Nicobar and Agasthyamalai
75. தமிழ்நாடு கிராமப்புற வாழ்விட முன்னேற்ற திட்டத்தின் தேவையான குறிக்கோள் என்ன?
Main aim of Tamil Nadu village Habitations Improvement Scheme
(a) மின்சாரம் வழங்குதல் / Provide Electricity
(b) குடிநீர் வழங்குதல் / Provide drinking water facility
(c) வாழ்விடமில்லாதவருக்கு குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வழங்குதல்/ Provide minimum basic requirement infrastructure facilities to the inhabitants
(d) ஒழுங்கற்ற முறையிலான வினியோக முறையை கடந்து வருதல் / Overcome the uneven distribution of resources