Tnpsc Model Question Paper 32 – General Studies in Tamil & English
1. CSIR (அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்) தன்னாட்சி அமைப்பாக கீழ் பதிவு செய்யப்பட்டது.
CSIR (Council of Scientific and Industrial Research) is an autonomous body registered under the
(a) 1860-ன் உடைய சமூகச் சட்டத்தினுடைய பதிவின் / Registration of Societies Act of 1860
(b) 1860-ன் உடைய இந்தியச் சட்டத்தினுடைய பதிவின் / Registration of Indian Act of 1860
(c) 1860-ன் உடைய குடியுரிமைச் சட்டத்தினுடைய பதிவின் / Registration of Civil Act of 1860
(d) 1860-ன் உடைய மேம்பாட்டுச் சட்டத்தினுடைய பதிவின் / Registration of Developmental Act of 1860
2. சூழல் மண்டலத்தின் இரு முக்கியக் கூறுகள் என அழைக்கப்படுபவை
The two major components of an Ecosystem are
(a) சூழலியல் மற்றும் மண் காரணிகள் / Ecologic and Edaphic
(b) நீர் மற்றும் நிலம் / Water and Land
(c) உயிரற்ற மற்றும் உயிருள்ள காரணிகள் / Abiotic and Biotic
(d) காற்று மற்றும் நீர் / Air and water
3. —— என்பது ஒரு பொருளை பின்னர் நினைவில் கொள்வது ஆகும்.
——— is the ability to remember the material at a later time
(a) தக்க வைத்தல் / Retention
(b) கேள்வி கேட்டல் / Questioning
(c) பதிலளித்தல் / Reply
(d) விடையளித்தல் / Answering
4. “இமாஸ்குலேஷன்” என்ற சொல் எதனை குறிப்பிடுகிறது
The term “Emasculation” refers to
(a) பூவை நீக்குவது / Removal of flowers
(b) மகரந்த தாள்களை நீக்குவது / Removal of anthers
(c) சூலகத்தை நீக்குவது / Removal of Carpels
(d) பூவிதழ்களை நீக்குவது / Removal of perianth
5. டீசல் எரிபொருளின் பற்றவைப்புத் தரத்தை —— எண்ணாக வெளிப்படுத்தலாம்
The ignition quality of diesel fuel is expressed by —– number
(a) ஆக்டேன் / Octane
(b) சீடேன் / Cetane
(c) ஐசோபென்டேன் / Isopentane
(d) அயோடின் / Iodine
6. வைரம் போன்று மிகக் கடினமான சேர்மம்
A compound as hard as diamond is
(a) சிலிக்கான் கார்பைடு / Silicon Carbide
(b) சிலிக்கான்டெட்ரா குளோரைடு / Silicontetra Chloride
(c) சிலிக்கா / Silica
(d) சிலிக்கோ ஈத்தேன் / Silico ethane
7. திசைவேகத்தின் மாறுபடு வீதம் ——–ஆகும்
The rate of change of velocity is
(a) வேகம் / Speed
(b) முடுக்கம் / Acceleration
(c) உந்தம் / Momentum
(d) இடப்பெயர்ச்சி / Displacement
8. வளி மண்டலத்தில் சூரியனின் புறஊதாக்கதிரில் இருந்து நம்மை காக்கும் வாயு எது?
Which gas in the atmosphere saves us from the ultraviolet rays of the sun?
(a) ஆக்ஸிஜன் / Oxygen
(b) ஓசோன் / Ozone
(c) நைட்ரஜன் / Nitrogen
(d) கார்பன் மோனாக்ஸைடு / Carbon Monoxide
9. ஈரானில், 1971இல் கையெழுத்திடப்பட்டு ——— பெயருடன் ஈரநிலங்கள் உலக அளவில் பாதுகாக்கப்படுகின்றன.
Globally wetlands are conserved with the designation of ——- which was signed in Iran, 1971
(a) ராம்சார் தளங்கள் / Ramsar Sites
(b) தேசிய பூங்காக்கள் / National Parks
(c) சரணாலயங்கள் Sanctuaries
(d) மெகா பல்லுயிர் மையங்கள் / Mega biodiversity centers
10. பட்டாம்பூச்சிகள் சுற்றுச்சூழல் மாற்றத்தின் உணர்திறன் குறிகாட்டிகளாகவும், குடை இனமாகவும் அங்கீகரிக்கப்படுகின்றன. அவற்றின் இலக்கு பாதுகாப்பு குறைவாக அறியப்பட்ட அச்சுறுத்தும் பட்டியலில் உள்ள உயிரினங்களுக்கு பயன் அளிக்கிறது. சிவப்புப் பட்டியலின் படி குடை இனங்களில் பெரும்பாலானவை ——– என வகைப்படுத்தப்படுகிறது
Butterflies are recognized as sensitive indicators of an environmental change and as an umbrella species whose targeted conservation benefits wider communities of lesser known, threatened species. According to the IUCN Red List categories the majority of the Umbrella species as being
(a) அழியும் அல்லது அச்சுறுத்தல் / Endangered or threatened
(b) அழிந்து போனது / Extinct
(c) குறைந்த அக்கறை / Least concern
(d) தரவு குறைபாடு மற்றும் மதிப்பீடு செய்யப்படவில்லை/ Data deficient and not evaluated
11. மார்ச் 2022ன் சராசரி வெப்பநிலை கடந்த 122 ஆண்டுகளில் இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலையாகும். மேலும் இதை முன்கூட்டியே கணிப்பதும் கடினமாக இருந்தது. இதன் பின்னணியில் உள்ள காரணம்
The average temperature of March 2022 is India’s highest temperature in the last 122 years and it was very difficult to predict in advance. The reason behind this is
(a) பருவநிலை மாற்றம் / Climate change
(b) லா-நினோ / La-Nino
(c) அபேலியன் / Abelian
(d) பெரிஹேலியன் / Perihelion
12. கூற்று (A) : ஜாதி என்பது மதிப்புவாய்ந்த, நம்பிக்கையுள்ள, நடைமுறையினைக் காத்துவரக்கூடிய ஒரு வகுப்பின், பிரிவினர்களின் கொள்கை பிடிப்பு
காரணம் (R): நடைமுறை வாழ்க்கையில் ஜாதி என்பது கல்வியாலும், தொழிலாலும், பண சொத்தின் அந்தஸ்துகளினாலும் ஓரளவு குறைந்தாலும், சமூகத்தில் முழுமையாக அனைவரையும் ஒன்றிணைக்கவில்லை
Assertion (A): Caste can be defined as a closed rank status group, with a set of values, beliefs and practices.
Reason (R) : Nowadays, though caste system has disappeared due to education, occupation, status etc. to a certain extent, it exists in all groups still.
(a) கூற்று (A) சரியானது ஆனால் (R) தவறானது / (A) is true but (R) is false
(b) கூற்று (A)வும் (R)ம் சரியானவைகள் ஆனால் காரணம் (R) கூற்று (A)க்கு சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true; but (R) is not correct explanation of (A)
(c) கூற்று (A) தவறானது, மற்றும் காரணம் (R) சரியானது / (A) is false and (R) is true
(d) காரணம், கூற்றுகள் (A)ம் (R)ம், மக்களின் மனநிலைக்கேற்றவாறு சரியானவையே / Both (A) and (R) are true
13. இந்திய நிதி ஆணையத்தின் முதல் தலைவர்
The Chairman of the first Finance Commission of India was
(a) முனைவர் பி.வி.ராஜமன்னார் / Dr.P.V.Rajamannar
(b) திரு.ஏ.கே.சந்தா / Shri.A.K.Chanda
(c) திரு.கே.சந்தானம் / Shri.K.Santhanam
(d) திரு.கே.சி.நியோகி / Shri.K.C.Neogy
14. ——— திட்டம் குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு சுகாதார பாதுகாப்பை அளிக்கிறது
———- scheme is to provide health care for low income group.
(a) வன் தன் / Van dhan
(b) ஆயள் காப்பீடு / Life Insurance
(c) புதிய சுகாதார காப்பீடு / New Health Insurance
(d) ஆயுஸ்மான் பாரதம் / Ayushman Bharat
15. இந்தியாவின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் காணப்படும் பகுதியானது
Largest mangrove forest region found in India is at
(a) சுந்தரவனக்காடுகள் / Sundarbans
(b) பிச்சாவரம் / Pichavaram
(c) கோதாவரி கிருஷ்ணா சதுப்பு நிலம் / Godavari-Krishna Mangrove
(d) பாராடங்தீவு / Baratang Island
16. மக்கள் தொகையில் தேக்க நிலை ஏற்பட்ட காலகட்டம் எது?
The period of stagnant population occurred in
(a) 1901-1911
(b) 1911-1921
(c) 1921-1931
(d) 1901-1921
17. பந்திப்பூர் புலிகள் சரணாலயம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
In which state Bandipur Tiger reserve Located in India?
(a) ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
(b) கர்நாடகா / Karnataka
(c) கேரளா / Kerala
(d) தமிழ்நாடு / Tamil Nadu
18. இந்தியாவில் கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ——- அமைந்துள்ளது
In India, ——— is located at the confluence of river Ganga and Yamuna
(a) அலகாபாத் / Allahabad
(b) உத்திரபிரதேசம் / Uttar Pradesh
(c) அவுரங்காபாத் ? Aurangabad
(d) பஞ்சாப் / Punjab
19. இமயமலையில் லாஹீல் மற்றும் ஸ்பிட்டி எங்கே அமைந்துள்ளது?
Where Lahaul and Spiti are located in Himalayas?
(a) சிக்கிம் இமயமலை / Sikkim Himalayas
(b) இமாச்சல் இமயமலை / Himachal Himalayas
(c) காஷ்மீர் இமயமலை / Kashmir Himalayas
(d) அஸ்ஸாம் இமயமலை / Assam Himalayas
20. இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை
The number of languages recognized by the Indian Constitution is
(a) 43
(b) 22
(c) 31
(d) 27
21. வேறுபட்ட தனித்துவமிக்க மொழி மற்றும் கலாச்சாரத்தையுடைய மக்களினை பாதுகாப்பதில் தொடர்புடைய இந்திய அரசியலமைப்பின் பிரிவு
The article of the constitution of India related to the right to conserve the people of distinct languages and culture is
(a) பிரிவு-22 / Article 22
(b) பிரிவு-29(1) / Article 29 (1)
(c) பிரிவு-31 (2) / Article 31 (2)
(d) பிரிவு-32 (2) / Article 32 (2)
22. ஹம்பி ——- நதிக்கரையில் அமைந்துள்ளது
Hampi is located on the banks of river
(a) கிருஷ்ணா / Krishna
(b) கோதாவரி / Godavari
(c) துங்கபத்திரா / Tungabhadra
(d) நர்மதை / Narmada
23. சுல்தானிய ஆட்சி காலத்தில் சில்வர் டங்கா மற்றும் காப்பர் ஜிட்டால் ஆகிய இரண்டு நாணயங்களையும் அறிமுகப்படுத்திய சுல்தானின் பெயரைக் குறிப்பிடுக.
Name the Dlhi Sultan who introduced the Silver Tanka and the Copper Jital-the two basic coins during Sultanate period
(a) குத்புதின் ஐய்பெக் / Qutb-ud-din Aibak
(b) இல்டுமிஷ் / Iltumish
(c) சுல்தானா ரஸியா / Sultana Raziya
(d) கியாசுதின் பால்பான் / Ghiyas-Ud-Din Balban
24. “தஷபோதா” யாரால் எழுதப்பட்டது?
Dashabodha was written by
(a) நாம்தேவா / Namdev
(b) ஞானேஸ்வரா / Jnanesvara
(c) நிம்பர்க்கா / Nimbarka
(d) ராம்ராஸ் / Ram Das
25. சிவாஜியின் ஆன்மீக குருவாக இருந்தவரின் பெயரிடுக:
Name the religious Guru of Shivaji
(a) ஏக்நாத் / Eknath
(b) வார்மான் பண்டிட் / Varman Pandit
(c) ராம் தாஸ் / Ram Das
(d) சூர் தாஸ் / Sur Das
26. பாமனி சாம்ராஜ்ஜியமும் விஜய நகரப் பேரரசும் அடிக்கடி ——– நிலப்பகுதிக்காக மோதிக் கொண்டனர்
The Bahmani kingdom and Vijayanagar empire clashed frequently over the territory of
(a) மதுரை / Madurai
(b) வாரலங்கல் / Warrangal
(c) மலபார் / Malabar
(d) ராச்சூர் டோப் / Raichur Doab
27. பாமினி சுல்தானை சேர்ந்த மூன்றாம் முகமத் ஷாவின் அமைச்சராக இருந்தவர்
Muhammad Shah III of Bhamini Sultan’s Vizier was
(a) ஹீமாயூன் / Humayun
(b) மாலிக் ஹசன் / Malik Hasan
(c) முகமது கவான் / Mohamed Gawan
(d) நிசாம் ஷா / Nizam Shah
28. சிக்கந்தர் இசானி என்ற பட்டத்தை கொண்ட டெல்லி சுல்தானின் பெயர்
Name the Sultan of Delhi who assumed the title of Sikandar-i-Sani
(a) குத்புதீன் ஐபக் / Qutb-din Aibak
(b) பெரோஷா துக்ளக் / Firozshah Tughlaq
(c) அலாவுதீன் கில்ஜி / Alau-ud-din Khilji
(d) பால்பன் / Balban
29. இந்திய அரசு சட்டம், 1935ன் படி தேசிய அளவில் நீதிமன்றமானது நிறுவப்பட்டது. அதன் பெயர் யாது?
What was the first name of the All India Court established under the Act of 1935?
(a) அனைத்திந்திய நீதிமன்றம் / All India Court
(b) இந்திய உச்ச நீதிமன்றம் / Supreme court of India
(c) இந்தியக் கூட்டாட்சி நீதிமன்றம் / Federal Court of India
(d) அனைத்திந்திய உச்ச நீதிமன்றம் / All India Supreme Court
30. அரசியல் சட்டப் பிரிவு 263 மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்கியதன் நோக்கம்
Article 263 contemplates the establishment of an Inter-state council to
(a) மாநில அரசுகளுக்கு இடையிலும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலும் வலிமையான ஒத்துழைப்பினை ஏற்படுத்தி ஒருமைப்பாட்டை வலியுறுத்த/ Effect co-ordination between the states and between centre and states
(b) பல்வேறு மாநிலங்களின் திட்டச் செயலாக்கத்தை ஒருங்கிணைக்க / Co-ordinate the planning activities of various states
(c) மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வருவாயைப் பிரித்திறிய / Divide the revenues between the centre governments and the state
(d) வணிக மேம்பாட்டிற்காக / Enable development of trade
31. கூற்றுகளைக் கவனிக்க:
1. அசோக் மேத்தா குழு
2. சிங்வி குழு
3. பல்வந்த்ராய் மேத்தா குழு
Consider the following:
1. Ashok Mehta committee
2. LM Singhvi committee
3. Balwant Rai Mehta committee
Give the chronological sequence of above mentioned committees
(a) 3, 1 மற்றும் 2/ 3, 1 and 2
(b) 3, 2 மற்றும் 1/3, 2 and 1
(c) 1, 2 மற்றும் 3/ 1, 2 and 3 (d) 2, 1 மற்றும் 3/ 2, 1 and 3
32. பின்வரும் எந்த விதிகள் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய வழி வகுக்கின்றது?
Which of the following articles provide for the impeachment of the pr3esident?
(a) விதி 52 மற்றும் 61 / Art 52 and 61 (b) விதி 53 மற்றும் 61 / Art 53 and 61
(c) விதி 56(1)(b) மற்றும் 61 / Article 56 (1) (b) and 61
(d) விதி 58 மற்றும் 61 / Article 58 and 61
33. இந்திய அரசமைப்பில் எந்த விதிகளில் அடிப்படைக் கடமைகள் கொடுக்கப்பட்டுள்ளன?
Which Article enumerates Fundamental Duties in the Indian Constitution?
(a) விதி 12 முதல் 35 வரை / Article 12-35
(b) விதி 51 A / Article 51A
(c) விதி 36 முதல் 50 வரை / Article 36-50
(d) விதி 19 / Article 19
34. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 5 எதை கையாள்கிறது?
Article 5 of the constitution of India deals with
(a) இந்திய நாடாளுமன்ற முறையின் தன்மை / Nature of the Indian Parliamentary system
(b) மாநிலங்கள் உருவாக்கும் முறை / Formation of States
(c) இந்தியக் குடியுரிமை / Indian Citizenship
(d) அரசமைப்புத் திருத்த முறை / Amendment procedures
35. இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் மக்களிடம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட உணர்வு
The enactment of Right to Information Act in India is supposed to inculcate a sense of
(a) சமூக நீதி / Social Justice
(b) பொருளாதார நீதி / Economic Justice
(c) சமூக உட்சேர்க்கை / Social Inclusion
(d) தகவலறிந்த குடியுரிமைப் பண்பாடு / Culture of informed citizenry
36. பின்வருவனவற்றில் எது சிறு அரசியலமைப்பு என்று அழைக்கப்படுகின்றது?
Which of the following is called “Mini Constitution”?
(a) இந்திய அரச சட்டம் 1935 / Government of India Act, 1935
(b) 42வது அரசியலமைப்புத் திருத்தம் / 42nd Constitutional Amendment
(c) 44வது அரசியலமைப்புத் திருத்தம் / 44th Constitutional Amendment
(d) இந்திய அரசு சட்டம் 1919 / Government of India Act, 1919
37. 2011 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 54.6 சதவிகித தொழிலாளர்கள் ———- துறையை சார்ந்துள்ளனர்.
As per census – 2011, 54.6 prcentage of labourers in India was engaged in ——— sector.
(a) விவசாயம் / Agricultural
(b) தொழில் / Industrial
(c) நிறுவன பணியாளர்கள் / Service Sector
(d) தகவல் தொழில்நுட்பம் / IT
38. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ————- கீழ் மதிப்பிடப்பட்டுள்ளது
100 days of employment programme is assured under
(a) ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் / Jawaha Razgar Yojana
(c) தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் / National Rural Employment Guarantee Scheme
(c) வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் / Empolyment Assurance Scheme
(d) எதுவும் இல்லை /None
39. கீழ்க்கண்டவற்றுள் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளோடு தொடர்புடையவை எவை?
1. இடைத்தரகர்களை ஒழித்தல்.
2. நிலக்குத்தசை சட்டம்.
3. அதிக மகசூல் தரும் விதை வகைகள்.
4. நில உச்ச வரம்பு.
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றிலிருந்து சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
Which of the following are associated with land reform measures?
1. Abolition of intermediaries
2. Tenancy legislation
3. HYV seeds
4. Ceiling on land holdings
Select the correct answer using the codes given below:
(a) 1, 2 மற்றும் 4 மட்டும் / 1, 2 and 4 only
(b) 1, 3 மற்றும் 4 மட்டும் / 1, 3 and 4 only
(c) 2 மற்றும் 4 மட்டும் / 2 and 4 only
(d) 1, 2, 3 மற்றும் 4/ 1, 2, 3 and 4
40. 1954ம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமுல்படுத்திய முதல் நாடுகள் ——- ஆகும்
அ. அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்
ஆ. பிரான்ஸ்
இ. ஜெர்மனி
ஈ. இத்தாலி
——- was the World’s First Country/s to implement the GST Law in the year 1954
i. United States of America
ii. France
iii. Germany
iv. Italy
(a) அ மட்டும் / i only
(b) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(c) ஆ மட்டும் / ii only
(d) இ மட்டும்/ iii only
41. மத்திய அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட “நிதிச்சீர்திருத்த வசதி” எந்த நிதிக் குழுவில் கொண்டுவரப்பட்டது?
Fiscal Reform Facility was introduced by the Central Government through which Finance Commission?
(a) IX
(b) X
(c) XI
(d) XII
42. NITI ஆயோக்கை விரிவுபடுத்துங்கள்
Expand NITI Aayog
(a) மாற்றத்தை நோக்கிய இந்தியாவின் தேசிய நிறுவனம் / National Institute for Transforming India
(b) தொழிலநுட்ப இந்தியாவிற்கான தேசிய நிறுவனம் / National Institute for Technology India
(c) இந்திய தேசிய உருமாற்ற நிறுவனம் / National Indian Transforming Institute
(d) இந்திய தேசிய தகவல் தொழில்நுட்பம்/ National Information Technology of India
43. 1944-ல் “காந்தியத் திட்டத்தை” உருவாக்கியவர் யார்?
In 1944, The Gandhian plan was formulated by
(a) Mr.M.N.ராவ் / Mr.M.N.Rao
(b) சர்.M.விஸ்வேஸ்வர்யா / Sir.M.Visheshvraya
(c) ஸ்ரீ ஸ்ரீமன் நாராயண் / Shri Sriman Narayan
(d) பண்டிட் ஜவகர்லால் நேரு / Pt.Jawaharlal Nehru
44. “திராவிட மாவோ” என அறியப்படுபவர் யார்?
Who is popularly referred as “Dravidan Mao”?
(a) பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை / Perarignar C.N.Annaduari
(b) கலைஞர் மு.கருணாநிதி / Kalaignar M.Karunanidhi
(c) டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் / Dr.M.G.Ramachandiran
(d) சிவாஜி கணேசன் / Shivaji Ganesan
45. பூர்ண ஸ்வராஜ் எப்போது அறிவிக்கப்பட்டது?
When was PUrna Swaraj declared?
(a) 26 ஜனவரி 1930 / 26 January 1930
(b) 15 ஆகஸ்ட் 1930 / 15 August 1930
(c) 26 நவம்பர் 1930 / 26 November 1930
(d) 29 ஜனவரி 1930 / 29 January 1930
46. கீழ்காண்பவற்றில் எது இந்தியாவில் நடந்த முதல் சத்தியாகிரக இயக்கம்?
Which one of the following was India’s first Satyagraha Movement?
(a) சம்பரான் சத்தியாகிரகம் / Champaran Satyagrah
(b) தண்டி யாத்திரை / Dhandi March
(c) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் Vedaranyam Salt Satyagraha
(d) கேடா சத்தியாகிரகம் / Kheda Satyagraha
47. காந்தியடிகளின் தண்டியாத்திரை சபர்மதி ஆசிரமத்திலிருந்து எப்போது தொடங்கப்பட்டது?
The Dandi March of Gandhi from Sabarmathi Ashram started on
(a) மார்ச் 12, 1930 / 12th March 1930
(b) மார்ச் 12, 1931 / 12th March 1931
(c) பிப்ரவரி 12, 1932 / 12th February 1932
(d) பிப்ரவரி 12, 1933 /12th February 1933
48. தமிழ்நாட்டில் நீதிக்கட்சி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்யது?
How many years did the Justice party rule Tamilnadu?
(a) 15 ஆண்டுகள் / 15 Years
(b) 16 ஆண்டுகள் / 16 Years
(c) 13 ஆண்டுகள் /13 Years
(d) 18 ஆண்டுகள் /18 Years
49. ஈ.வெ.இராமசாமி 1924ம் ஆண்டு வைக்கம் எனும்இடத்தில் எதற்காகப் போராட்டம் மேற்கொண்டார்?
E.V.Ramasamy led an agitation in 1924 at Vaikom for
(a) பெண்கள் விடுதலைக்காக / The liberty of women
(b) இந்தியச் சுதந்திரத்தை அடைவதற்கு / The attainment of India’s independence
(c) கல்வியறிவின்மையை ஒழிப்பதற்கு / The eradication of illiteracy
(d) கோவில் கருவறைக்குள் ஈழவர்களi அனுமதிக்க / The entry of Ezhavas to the sanctum sanctorum of the temple
50.1784-ஆம் ஆண்டு “வங்காள ஆசியச் சங்கம்” நிறுவ காரணமானவர் யார்?
Who was responsible for the establishment of the Asiatic society of Bengal in 1784?
(a) வில்லியம் ஜோன்ஸ் / William Jones
(b) மெக்காலே / Macaulay
(c) ஜார்ஜ் தாம்ஸன் / George Thomson
(d) ஜி.வி.ஜோஷ் / G.V.Joshi
51. பின்வரும் துறைமுகங்களில் சங்ககால துறைமுகமில்லாத நகரம் எது?
Which of the following place was not a port town during the Sangam period?
(a) புகார் / Puhar
(b) கொற்கை / Korkai
(c) தொண்டி / Thondi
(d) உறையூர் / Uraiyur
52. மன்னனை, “இறை” என்று குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் யார்?
Who used the word “Irai” to indicate the King?
(a) திருவள்ளுவர் / Thiruvalluvar
(b) கம்பர் / Kambar
(c) இளங்கோவடிகள் / Ilango Adigal
(c) சீத்தலைசாத்தனார் / Seethalai Sattanar
53. தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர்
Non Co-operation movement in Tamil Nadu was led by
(a) வ.உ.சிதம்பரம் / V.O.Chidambaram
(b) ராஜாஜி / Rajaji
(c) சுப்பிரமணிய சிவா / Siva
(d) சுப்பாராயன் / Subbarayan
54. 1927-ஆம் ஆண்டு காந்தியடிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்த பொழுது மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் காந்தியடிகளை சந்தித்து, தனது சமூக நலத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடினார். இது பற்றிய விபரத்தை காந்தியடிகள் எந்த பத்திரிக்கையில் வெளியிட்டார்?
When Gandhiji visited Tamil Nadu in 1927, Dr.Muthulakshmi Reddy met Gandhiji and discussed about her “Social Welfare Schemes”. Those were published by Gandhiji in which magazine?
(a) ஆனந்த விகடன் / Anandha Vikatan
(b) தேச அபிமானி / Desabhamani
(c) யங் இந்தியா / Young India
(d) சுதேசமித்ரன் / Swadeshmithran
55. மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்த சட்டத்தின்படி, மெட்ராஸ் மாகாணத்தில் முதல் நேரடி தேர்தல் நடைபெற்ற ஆண்டு.
According to the Montague-Chelmsford Reforms Act, when did the first direct election held in the Madras Presidency?
(a) 1919
(b) 1920
(c) 1921
(d) 1922
56. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் முதலமைச்சர் யார்?
Who was the first Non-Congress Chief Minister of Tamil Nadu?
(a) க.காமராசர் / K.Kamarajar
(b) ஈ.வெ.கி.சம்பத் / E.V.K.Sampath
(c) கலைஞர்.மு.கருணாநிதி / Kalaignar.M.Karunanidhi
(d) சி.என்.அண்ணாதுரை / C.N.Annadurai
57. எப்போது ஈ.வெ.இராமஸ்வாமி பெரியார் சுயமரியாதை இயக்த்தினைத் தொடங்கினார்?
When did E.V.Ramasamy Periyar start self Respect Movement?
(a) 1920
(b) 1924
(c) 1926
(d) 1944
58. “திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்”
என்ற குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம் எது?
“Thiranarinthu Solluga Sollai Aranum
Porulum Athaninoongu ill”
Under the Which section of Thirukkural does this Kural appear?
(a) பண்புடைமை / Panpudaimai
(b) வினைசெயல் வகை / Vinai Seyal Vagai
(c) சொல்வன்மை / Solvanmai
(d) வினைத் தூய்மை / Vinaithooimai
59. ஒரு நல்ல நாட்டிற்கு அழகு எதுவெனத் திருவள்ளுவர் கூறுகிறார்?
What adds beauty to the well-run government of a country according to Thirukkural?
(a) மலையும், அருவியும் / Mountain and waterfall
(b) நடுநிலையாளரும், வணிகரும் / Neutral mediators and merchant
(c) செல்வமும், விளைச்சலும் / Wealth and yield
(d) பகையின்மையும் பிணியின்மையும் / Without enmity and without disease
60. பின்வரும் கூற்றுக்கு பொருத்தமான குறளை எழுதுக:
மரங்கள் தமக்காக வாழாது பிறர்க்காகவே வாழ்கின்றன.
இந்த ஜீவன்களுக்கு மனிதர்கள் செய்யும் கொடுமை……!?
இழுத்தும், பறித்தும், வெட்டியும், வளைத்தும், உடைத்தும்
முடமாக்கிவிடுகிறார்கள். அடியோடு வெட்டி அழித்தே
விடுகிறார்களே. இப்படிக் கொடுமை செய்யும் மனிதர்களுக்கு
தாவரங்கள் புகட்டும் பாடம், ஒப்பற்ற உயர்ந்த பாடம்…
Find out the appropriate Thirukkural for the Assertion given below:
“Trees are selfless and live for others
But the harms that humans do to them…!
They pull them, pluck them, bend, break and
Cripple them and destroy them cutting their roots
Completely. But, the lesion that the trees teach these
Humans is the greatest and incomparable.
(a) இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் /
Inna Seidharai Oruththal Avar nana
Nannayam Seiduvidal
(b) மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ஓடா தவர் /
Mannodu Iyaindha Marathnayar Kannodu
Iyaindukan Oda Davar
(c) தீயினால் சுட்ட புண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு /
Theeyinaal Suttapun Ullarum Aaradhe
Navinal Sutta Vadu
(d) யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லழுக்கப் பட்டு /
Yagavarayinum Nakakka Kavakkal
Sogappar Sollizhukku Pattu
61. ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொதழிபெயர்த்த முதுல் தமிழ் நூல் இது.
This was the first Tamil Text Translated by G.U.Pope?
(a) திருவாசகம் / Thruvasagam (b) புறநானூறு / Purananooru
(c) திருக்குறள் / Thirukkural (d) நாலடியார் / Naaladiyaar
62. “ரத்தம் ஒரே நிறம்” என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் யார்?
Who is the author of the historical novel “Ratham ore niram?”
(a) சாண்டில்யன் / Sandilyan
(b) கோவி.மணிசேகரன் / Kovi.Manisekaran
(c) சுஜாதா / Sujatha
(d) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி / Kalki.R.Krishnamoorthy
63. பக்தி இயக்கம் “மக்கள் இயக்கமாக” இவரால் ஆக்கப்பட்டது
“Bhakthi Movement” was transformed into a “Mass movement” by
(a) திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
(b) திருஞானசம்பந்தர் / Thirugnanasambandar
(c) சுந்தரர் / Sundarar
(d) மாணிக்கவாசகர் / Manickavasagar
64. “ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை” – பாடியவர் யார்?
Who sang : “Oruvanai Oruvan aduthalum Tholaithalum
Pudhuvathu andru ivvulagathu iyarkai”
(a) இடைக்குன்றூர்க்கிழார்/ Idaikndroorkilaar
(b) பெருஞ்சித்திரனார் / Perumchithranaar
(c) நல்லுருத்திரன் / Nalluruthiran
(d) இளநாகனார் / Ilanaganaar
65. கீழ்க்காணும் கூற்றுகளில் ஸ்ரீவைகுண்ட சுவாமிகளின் அன்புக்கொடி பற்றிய சரியான தகவல்கள் எவை?
அ. வைகுண்ட சுவாமிகள் ஓர் இஸ்லாமிய சீர்திருத்தவாதி
ஆ. அவர் தன்னை பின்பற்றியவர்களை “அன்புக் கொடி மக்கள்” என்று அழைத்தார்
இ. சுவாமிகளைப் பின்பற்றுபவர்கள் இன்றளவும் அன்புக் கொடியை ஏற்றுகின்றனர்
Which of the following statements are true about Love-Flag of Srivaikunda Swamigal?
i. Vaikunda Swamigal was a reformer of Islam
ii. He called his followers as “Anbukodimakkal”
iii. The followers of Swamigal even now hoist the lov-flag
(a) அ மட்டும் / i only
(b) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(c) அ மற்றும் இ மட்டும் / i and iii only
(d) ஆ மற்றும் இ மட்டும் / ii and iii only
66. தமிழ் மெய் நிகர் பல்கலைக்கழகம் 2010ம் ஆண்டில் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
Tamil Virtual University (TVU) was renamed in the year 2010 as
(a) தமிழ் மெய்நிகர் கல்வி / Tamil Virtual Education
(b) தமிழ் இணையப் பேரண்டம் / Tamil Virtual Universe
(c) தமிழ் மெய்நிகர் எழுத்தறிவு / Tamil Virtual Literacy
(d) தமிழ் இணையக் கல்விக் கழகம் / Tamil Virtual Academy
67. 2021ஆம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் ——– மாநிலம் அதிகமான காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்கிறது
——- State is the largest producer of wind energy in India as per 2021 statistics.
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) கேரளா / Kerala
(c) கர்நாடகா / Karnataka
(d) குஜராத் / Gujarat
68. 2021-22ஆம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த உணவு உற்பத்தியின் அளவு
The level of total food grains production in Tamil Nadu during 2021-22 was
(a) 125 (இலட்சம் மெட்ரிக் டன்) / 125 (Lakh metric tonnes)
(b) 150 (இலட்சம் மெட்ரிக் டன்)/ 150 (Lakh metric tonnes)
(c) 160 (இலட்சம் மெட்ரிக் டன்)/ 160 (Lakh metric tonnes)
(d) 110 (இலட்சம் மெட்ரிக் டன்) / 110 (Lakh metric tonnes)
69. வேளாண்மைக்கான பிரத்தியேக வரவு செலவு திட்டத்தின் குறிக்கோள்/குறிக்கோள்கள் என்ன/எவை?
அ. வேளாண்மையை இலாபகரமான தொழிலாக ஊக்குவிப்பது
ஆ. தமழ்நாட்டில் விவசாயிகளின் நலனை உயர்த்துவது
இ. வேளாண்மையில் இயந்திர மயமாக்கலைக் கட்டுப்படுத்துவது
What is the objective/objectives of “Exclusive Budget for Agriuculture”
i. To encourage farming as an enterprising and remunerative activity
ii. To increase the welfare of farmers in Tamil Nadu
iii. To curb the mechanization in Agriculture
(a) அ மட்டும் / i only
(b) ஆ மற்றும் இ மட்டும் / ii and iii only
(c) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(d) அ மற்றும் இ மட்டும் / i and iii only
70. NFHS-5, 2019-21 இந்திய அறிக்கையின்படி, கர்ப்பகால வயதைப் பொருட்படுத்தாமல், 2.5 கிலோவிற்கும் குறைவாகப் பிறக்கும் குழந்தை ———– என அழைக்கப்படுகிறது.
NFHS-5, 2019-21 Indian Report says, the Birth weight of a child less than 2.5 kg regardless of gestational age is called
(a) அதிக பிறப்பு எடை / High Birth Weight
(b) மிதமான பிறப்பு எடை / Moderate Birth Weight
(c) நிலையான பிறப்பு எடை / Standard Birth Weight
(d) குறைந்த பிறப்பு எடை/ Low Birth Weight
71. தமிழகத்தின் சமூக நீதி நாள் கொண்டாடப்படுவது
Social Justice day celebration in Tamil Nadu on
(a) 20 பிப்ரவரி / 20 February
(b) 21 பிப்ரவரி / 21 February
(c) 22 பிப்ரவரி / 22 February
(d) 25 பிப்ரவரி / 25 February
72. ——– பாதுகாப்புத் திட்டம், அரசின் நேரடி முதலீட்டின் மூலம், பெண் குழந்தைகளின் உhமைகைளைப் பாதுகாத்து, அவர்களுக்கு அதிகாரமளிப்பதன் வழியாகப் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
—— protection scheme is aimed at preventing gender discrimination by empowering and protecting right of girl children through direct investment from government.
(a) தொட்டில் குழந்தை / Cradle baby
(b) பெண் குழந்தைகளின் கல்வியறிவு / Girl Child Literary
(c) பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ / Beti Bachao Beti Padhao
(d) பெண் குழந்தை / Girl Child
73. இவற்றுள் எந்த மாவட்டம் தமிழ்நாட்டில் மிக அதிகமான கல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது?
According to 2011 census the following district possess highest literacy rate in Tamil Nadu
(a) நாமக்கல் / Namakkal
(b) கோயமுத்தூர் / Coimbatore
(c) கன்னியாகுமரி / Kanniyakumari
(d) திருப்பூர் / Tirupur
74.ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டம், ———-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது
Jawahar Rozgar Yojna programme was announced in the year
(a) 1966
(b) 1989
(c) 1991
(d) 1996
75. மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது?
Which district lags behind according to the Human Welfare and Development Index?
(a) அரியலூர் / Ariyalur
(b) பெரம்பலூர் / Perambalur
(c) விழுப்புரம் / Villupuram
(d) தேனி / Theni