Tnpsc Model Question Paper 31 – General Studies in Tamil & English
1. கரேலாலஸ் லின்னேயஸ் முன்மொழிந்த வகைப்பாட்டு முறை எது?
The system of classification proposed by carolus Linnaeus is
(a) இயற்கை முறை / Natural System
(b) இனப்பரிணாம வழி முறை / Phylogenetic System
(c) அண்மைக்கால முறை / Modern System
(d) செயற்கை முறை / Artificial System
2. ப்ரோகேரியாட்டிக் செல் குறித்து தவறான கூற்றினை கண்டுபிடிக்கவும்
Identify the incorrect statement with reference to Prokaryotic cell
(a) சவ்வினால் சூழப்பட்ட மரபணுப் பொருள் கிடையாது / Lack of membrane bound genetic material
(b) 70S வகை தைபோசோம்கள் காணப்படுகிறது / Presence of 70S Ribosomes
(c) மீசோசோம்கள் காணப்படுகிறது / Presence of mesosomes
(d) சவ்வினால் சூழப்பட்ட செல் உறுப்புகளான பசுங்கணிகம், மற்றும் மைட்டோகாண்டிரிய காணப்படுகிறது / Presence of membrane bound organelles like chloroplast and mitochondria
3. கீழ்க்காண்பனவற்றில் எது ஹெப்டா ஹைடிரேட் அல்ல?
1. பச்சை விட்டிரியால்
2. வெள்ளை விட்டிரியால்
3. நீல விட்டிரியால்
4. சிவப்பு விட்டிரியால்
Choose the one which is not a Heptahydrate
i. Green vitriol
ii. White vitriol
iii. Blue vitriol
iv. Red vitriol
(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(b) 3 மட்டும் / iii only
(c) 4 மட்டும் / iv only
(d) 3 மற்றும் 4 மட்டும் / iii and iv only
4. நரம்பு நஞ்சாகச் செயல்படும் பூச்சி கொல்லி ——— ஆகும்.
The insecticides that act as a nerve poison is
(a) எண்ட்ரின் / Endrin
(b) எத்திலீன் டை குளோரைடு / Ethylene Dichloride
(c) மாலதியான் / Malathion
(d) ஈய ஆர்சினைட் / Lead Arsenite
5. உருளைப்புழு உடல் சுவரில், வெளியில் இருந்து உள் பக்கமாக உள்ள அடுக்குகளின் சரியான வரிசை
In the body wall of ascaris, the correct sequence of layers from outside towards inner side is
(a) க்யூட்டிகல், மேல்தோல், நீளமான தசைகள் / Cuticle, Edpidermis Longitudinal muscles
(b) க்யூட்டிகல், மேல்தோல், நீளமான தசைகள் மற்றும் வட்ட தசைகள் / Cuticle, epidermis, longitudinal and circular muscles
(c) மேல்தோல், நீளமான மற்றும் வட்ட தசைகள், க்யூட்டிகல் / Epidermis, longitudinal and circular muscles, cuticle
(d) மேல்தோல், க்யூட்டிகல், நீளமான தசைகள் / Epidermis, longitudinal and circular muscles, cuticle
6. கீழ்க்கண்டவற்றுள் எந்தக் கூற்று லாம்ப்ரேக்கு பொருத்தமாக அமையும்?
1. கடலில் வாழ்கிறது மற்றும் முட்டையிடுவதற்காக நதிக்கு வலசை செல்கிறது
2. அக ஒட்டுண்ணிகள்
3. தாடையற்ற விலங்கு
Which of the following statement will fit for lamprey?
i. Lives in sea and migrates to the rivers for spawning
ii. Endoparasites
iii. Jawless animal
(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(b) 2 மட்டும் / ii only
(c) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only
(d) 3 மட்டும் / iii only
7. பின்வரும் பத்தியை படித்து, அதற்கான கேள்விக்கு பதிலளிக்கவும்.
உயிரினங்கள் தனித்தனி புவியியல் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. அவற்றின் புவியியல் பிரிவின் காரணமாக அவை இனக்கலப்பு செய்ய முடியாது. ஆனால் அவற்றுக்கிடையேயான புவியியல் தடை நீக்கப்பட்டால் அவ்வாறு நடக்குமென்று எதிர்பார்க்கப்படும். பிரிக்கப்பட்ட உயிரினங்கள் சுயாதீனமாக உருவாகிறது மற்றும் அந்தந்த சூழலுக்கு ஏற்றது, தனித்தனியான பரிணாமப் பாதைகளின் விளைவாக அவற்றுக்கிடையே இனப்பொருக்கத் தடைகளை உருவாக்குகிறது.
இந்த பத்தி எதை வலியுறுத்துகிறது
Read the following passage and answer the item that follows.
Populations that occupy separate geographical areas. Because of their geographical separation, they can not interbreed, but would be expected to do so if the geographic barrier between them were removed. The separated populations evolove independently and adapt to their respective environments, generating reproductive barriers between them as a result of their separate evolutionary paths.
This passage is insisting.
(a) வேற்றிட உயிரினத் தோற்றம் / Allopatric speciation
(b) குற்றினத் தோற்றம் / Peripatric speciation
(c) ஓரிட உயிரினத் தோற்றம் / Sympatric speciation
(d) இணை வாழிடச் சிறப்பினைத் தோற்றம் / Parapatric speciation
8. பெண் இனப்பெருக்க சுழற்சியின் வரிசையில் ஹார்மோன்களை வரிசைப்படுத்தவும்.
1. லுடினைசிங் ஹார்மோன்
2. புரோஜெஸ்ட்டிரோன்
3. ப்ரோலாக்டின்
4. கருமுட்டை தூண்டும் ஹார்மோன்
Arrange the hormones in order during the female reproductive cycle.
1. Luteinizing hormone
2. Progesterone
3. Prolactin
4. Follicle stimulating hormone
(a) 2, 4, 1, 3
(b) 4, 1, 2, 3
(c) 3, 4, 1, 2
(d) 1, 4, 2, 3
9. தமிழக விவேகானந்தா கேந்திராவின் புதிய முறை உயிரி வாயுவினை உற்பத்தி செய்யும் மாதிரி சாதனமானது ——– என்று அழைக்கப்படுகிறது.
Name the plant developed for an innovative low-volume fixed model for biogas production by the Vivekananda Kendra of TamilNadu
(a) சக்தி சுரபி / Shakthi Surabhi
(b) சக்தி தமிழ்நாடு / Shakthi Tamil Nadu
(c) சக்தி இந்தியா / Shakthi India
(d) கழிவில் இருந்து ஆற்றல் / Waste to energy
10. வளநாடு வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
Vallanadu wildlife sancturary is located at
(a) கோயம்புத்தூர் / Coimbatore
(b) தூத்துக்குடி / Thoothukudi
(c) ஈரோடு / Erode
(d) ஊட்டி / Ooty
11. கீழ்க்காண்பவற்றுள் எவை தவறாக இணைந்துள்ளன?
1. ககன்யான் திட்டம் – DFRS
2. சந்திராயான்2 – CES
3. தகவல் தொடர்பு செயற்கைகோள் – GSAT-24
4. சிறிய செயற்கைகோள் ஏவு வாகனம் – SSLV-D1/EOS-02
Which of the following are incorrectly paired?
1. Ganganyaan Project – DFRS
2. Chandrayaan 2 – CES
3. Communication satellite – GSAT-24
4. Small satellite launch vehicle – SSLV-D1/EOS-02
(a) 1 மற்றும் 2 / 1 and 2
(b) 2 மற்றும் 4 / 2 and 4
(c) 3 மற்றும் 4 / 3 and 4
(d) 2 மற்றும் 3 / 2 and 3
12. பின்வருவனவற்றுள் எவை 2001-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு கொள்கையில் இடம்பெற்ற கூற்றுகள்?
1. உள்கட்டமைப்பை முன்னேற்றுதல் மற்றும் மேம்படுத்துதல்
2. ஊக்கத்தொகைள் மூலம் விளையாட்டுகளை முன்னேற்றுவது
3. பெண்கள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற இளைஞர்களின் பங்கேற்பினை மேம்படுத்துதல்
4. அதிக அளவில் விளையாட்டுப் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல்
Which of the following statements are mentioned in National sports policy of 2001?
i. Upgradation and development tof infrastructure
ii. Incentives to promote sports
iii. Enhance participation of women, scheduled Tribes and rural youths.
iv. creating more sports universities
(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(b) 1, 2 மற்றும் 4 மட்டும் / i, ii and iv only
(c) 1 மற்றும் 4 மட்டும் / i and iv only
(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / i, ii and iii only
13. இன்சுலினை முதன் முதலாக கண்டறிந்தவர்கள்
Insulin was discovered by
(a) அலெக்ஸ் மற்றும் நிகோலஸ் / Alex and Nicholas
(b) மேயர் மற்றும் வில்சன் / Mayer and Wilson
(c) பேண்டிங் மற்றும் பெஸ்ட் / Banting and Best
(d) ராபர்ட் மற்றும் ஜேக்கப் / Robert and Jacob
14. தவறாக பொருந்தப்பட்ட இணையை அடையாளம் காண்க:
1. போடோலாந்த் மக்கள் இயக்கம்-ஜார்கண்ட்
2. மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி-அஸ்ஸாம்
3. லோக் ஜனசக்தி கட்சி-பீகார்
4. ராஷ்ரிய லோக்தந்த்ரிக் கட்சி-ராஜஸ்தான்
Identify the wrongly matched pair
1. Bodoland people’s front-Jharkhand
2. Hill state people’s democratic party-Assam
3. Lok Jansakthi party-Bihar
4. Rashtriya Loktantrik party – rajasthan
(a) 1 மற்றும் 3 / 1 and 3
(b) 2 மற்றும் 4 / 2 and 4
(c) 1 மற்றும் 2 / 1 and 2
(d) 3 மற்றும் 4 / 3 and 4
15. அரசியல் கட்சிகளை அவைகள் உருவாக்கப்பட்ட வருடங்களுடன் பொருத்தவும்
அ. இந்திய தேசிய காங்கிரஸ் 1. 2013
ஆ. அகில இந்தியா திரிணமூல் காங்கிரஸ் 2. 1925
இ. தேசிய மக்கள் கட்சி 3. 1885
ஈ. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 4. 1998
Match the political parties with their founding years.
a. Indian National congress – 2013
b. All India Trinamool congress – 1925
c. National People’s party – 1885
d. Communist party of India (CPI) – 1998
a b c d
a. 2 3 4 1
b. 3 4 1 2
c. 3 2 1 4
d. 1 4 3 2
16. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்க:
நதிகள் நீளம் (கிமீ)
அ. கோதாவரி 1. 1565
ஆ. கிருஷ்ணா 2. 1400
இ. நர்மதை 3. 1310
ஈ. மகாநதி 4. 1205
Choose the rightly matched Pair
River Length in Km
a. Godaveri 1. 1565
b. Krishna 2. 1400
c. Narmada 3. 1310
d. Mahanadi 4. 1205
(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct
(b) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct
(c) 2 மற்றும் 3 சரி / 1 and 3 are correct
(d) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct
17. பின்வருபவைகளில் எது இமயமலையின் அதிக உயரமுள்ள பகுதிகளையும் குறைந்த உயரமுள்ள பகுதிகளையும் பிரிக்கிறது?
Which among the following separates greater and lesser Himalaya?
(a) கரோல் நீர்வடிகால் / Karol Basin
(b) மத்தியப்பெரும் உந்தம் / Main central thrust
(c) டூன் பள்ளத்தாக்கு / Dun Valley
(d) காட்மாண்டு பள்ளத்தாக்கு / Kathmandu Valley
18. கீழ்கண்ட இந்திய மாநிலங்களில் வெள்ளி உற்பத்தியில் முதல் இடம் பிடிக்கும் மாநிலம் எது?
Which one of the following Indian states is the leading producer of silver?
(a) ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh
(b) தமிழ்நாடு / Tamil Nadu
(c) கேரளா / Kerala
(d) பீஹார் / Bihar
19. இந்தியாவின் அறிமுக செயற்கை கோள் எது?
Which one is the Poineer satellite of India?
(a) பாஸ்கரா / Bhaskara
(b) ஆர்யபட்டா / Aryabhata
(c) பி.எஸ்.எல்.வி / PSLV
(d) இன்சாட் / INSAT
20. பின்வரும் வாக்கிங்களை கவனமாகக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் “குறைந்த மக்கள் தொகை” குறித்து சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
வாக்கியம் 1: ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் வளங்களும் மக்கள் தொகையும் சரியான விகிதத்தில் காணப்படுவது.
வாக்கியம் 2: ஒரு குறிப்பிட்ட இடத்தில், காணப்படும் வளங்களைவிட மக்கட்தொகை மிகுதியாக காணப்படுவது.
வாக்கியம் 3: ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் வளங்களைவிட மக்கட்தொகை குறைந்து காணப்படுதல்
Consider the following statements and choose the right option for what under-population means.
Statement 1: A situation where the number of people that can be supported is the same as the available resources
Statement 2: A situation where by the population is considered too large for the available resources.
Statement 3: A situation where the population is less than the available resources of a country
(a) வாக்கியங்கள் 1, 2 மற்றும் 3 சரி / Statement 1, 2 and 3 are right
(b) வாக்கியம் 1 சரி 2 மற்றும் 3 தவறு / Statement 1 is correct and 2 and 3 are incorrect
(c) வாக்கியம் 2 சரி 1 மற்றும் 3 தவறு / Statement 2 is correct and 1 and 3 are incorrect
(d) வாக்கியம் 3 சரி 1 மற்றும் 2 தவறு / Statement 3 is correct and 1 and 2 are incorrect
21. எந்த சுல்தானியர் ஆட்சியில் மிக அதிகமான நிலப்பரப்பு அரசாட்சியின் எல்லையாக இருந்தது?
IN whose reign did the Sultanate reach its maximum geographical limit?
(a) அலாவுதின் கில்ஜி / All-Ud-Din Khilji
(b) முபாரக் ஷா கில்ஜி / Mubarak Shah Khilji
(c) முகம்மது-பின்-துக்ளக் / Muhammed-Bin-Tuglak
(d) கியாசுதீன் துக்ளக் / Ghiyasuddin Tugalak
22. ஹரப்பன் மக்களைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
1. ஹரப்பன்கள் ஃபாலஸ்-ஐ வழிபடுபவர்கள்
2. அவர்கள் மனித உருவில் தெய்வங்களை வழிபட்டனர்.
3. அவர்கள் தங்கள் தெய்வங்களைக் கோவில்களில் வைத்தார்கள்.
Which of the following statements are true about the Harappan People?
i. The Harappans were the Phallus Worshippers.
ii. They worshipped gods in the form of human beings.
iii. Thye placed their gods in temples.
(a) 1 மட்டும் / i only
(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only
(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
23. கடல் செல்கலன் கட்டும் திட்டத்தை முன்னெடுத்த முகலாய மன்னர் பெயர்
Name the Mughal ruler who initiated a programme of building sea-going vessels.
(a) பாபர் / Babur
(b) அக்பர் / Akbar
(c) ஷாஜஹான் / Shahjahan
(d) ஒளரங்கசீப் / Aurangazeb
24. “கண்டசாரா” என்றழைக்கப்படும் ஒழுங்கான ராணுவத்துறையினை கொண்டிருந்த அரசர்கள்
Name the rulers who had organized a military department called Kandachara
(a) விஜயநகர ஆட்சியாளர்கள் / Vijayanagar Rulers
(b) பாமினி சுல்தான்கள் / Bahmini Sultans
(c) மராத்தியர்கள் / Marathas
(d) மொகலாயர்கள் / Mughals
25. ஷாஜஹான் டெல்லியில் ஜீம்மா மசூதியினை கட்டப் பயன்படுத்திய அடிப்படை கட்டுமானப் பொருள் எது?
The principle construction material used by Shahjahan to built Jumma Masjit at Delhi
(a) மஞ்சள் மணற்கல் / Yellow sand stone
(b) சிவப்பு மணற்கல் / Red sand stone
(c) கருப்பு மணற்கல் / Black sand stone
(d) உலோகம் / Metal
26. பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று/கூற்றுகள் என்பதை எடுத்து எழுதுக?
1. அமீர் குஸ்ரு, அபுல் பாஸல், ஜியாவுதீன் பரணி ஆகியோர், இடைக்கால பாரசீக வரலாற்று ஆசிரியர்கள்
2. துக்ளக் நாமா, அக்பர் நாமா, தாரிக் ஃபிரோஷாகி ஆகிய நூல்கள் இவர்களால் முறையே எழுதப்பட்டவை ஆகும்.
Which of the given statements is/are correct?
i. Amir Khusroe, Abdul Fazal, Ziauddin Barani were famous persian Historians in medieval period.
ii. Tughlaq Nama, Akbar Nama, Tarik Firoz Shahi are the books written by them respectively.
(a) 1 மற்றும் 2 தவறு / i and ii are wrong
(b) 1 சரி 2 தவறு / i correct ii wrong
(c) 1 மற்றும் 2 சரி / Both i, ii are correct
(d) 1 தவறு 2 சரி / i wrong ii correct
27. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:
பட்டியல் I பட்டியல் II
அ. விஸாகதத்தர் 1. நீதி சாஸ்திரம்
ஆ. காமாந்தகர் 2. நியாய பாஷ்யம்
இ. அஸங்கர் 3. முத்ர ராக்ஷஷம்
ஈ. வாஸ்த்யாயனர் 4. பூமி சாஸ்திரம்
Match List I with List II and select the correct answer:
List I List II
a. Vishakhadatta 1. Nitisastra
b. Kamandaka 2. Niyaya Bhashya
c. Asanga 3. Mudraraksha
d. Vatsyayana 4. Bhumi Sastra
a b c d
a. 4 2 1 3
b. 3 1 4 2
c. 3 2 1 4
d. 1 3 2 4
28. தேவி சந்திர குப்தம் யாருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி கூறுகிறது?
Devi Chandra Guptam deals with the life history of
(a) முதலாம் சந்திர குப்தர் I / Chandra Gupta I
(b) இரண்டாம் சந்திர குப்தர் II / Chandra Gupta II
(c) சமுத்திர குப்தர் / Samudra Gupta
(d) ஸ்கந்த குப்தர் / Skanda Gupta
29. கீழ்க்காண்பவற்றில் எது குடியரசுத் தலைவர் ஆவதற்கான தகுதி கிடையாது?
Which one of the following is NOT a qualification to become a President?
(a) 35 வயது நிறைவு செய்தவராக இருக்க வேண்டும் / He must have completed 35 years of age
(b) மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் / He must be qualified to become a member of Rajya Sabha
(c) இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் / He must be a citizen of India
(d) ஆதாயம் தரும் பதவி ஏதும் வகிக்கக் கூடாது / He should not hold any office of profit
30. எவ்வகையான மக்களாட்சி முறையைத் தகவல் அறியும் உரிமை வளர்த்தெடுக்கக் கூடும்?
What sort of democracy would the right to information promote?
(a) நேரடியான மக்களாட்சி / Director democracy
(b) பிரதிநிதித்துவ மக்களாட்சி / Representative democracy
(c) நடைமுறைசார்ந்த மக்களாட்சி / Procedural democracy
(d) பங்கேற்பு மக்களாட்சி / Participatory democracy
31. மாநிலங்களின் மறு சீர் அமைப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
The states Reorganisation commission was appointed in the year
(a) 1953
(b) 1860
(d) 1950
(d) 1952
32. பின்வருவனவற்றுள் எது அம்பேத்காரால் அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விவரிக்கப்பட்டது?
Which one of the following rights was described by Dr.B.R.Ambedkar as the heart and soul of the constitution?
(a) மதச்சுதந்திரத்திற்கான உரிமை / Right to freedom of Religion
(b) சொத்துரிமை / Right of property
(c) சமத்துவத்திற்கான உரிமை / Right to Equality
(d) அரசியலமைப்புத் தீர்வுகளுக்கான உரிமை / Right to constitutional remedies
33. குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் தொடர்பான வர்மா குழுவின் அறிக்கை ஒப்படைக்கப்பட்ட ஆண்டு
The Verma committee on Fundamental Duties of citizens submitted its report in the year
(a) 1997
(b) 1998
(c) 1999
(d) 2000
34. தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பற்றி பின்வருவனவற்றுள் எது சரியானது?
Which of the following statements about right to information is correct?
(a) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும், பொது தகவல் அலுவலரை நியமிக்க வேண்டும் / All public authorities covered under RTI must appoint their public information officer
(b) தகவல் அறியும் உரிமை சட்டம் இந்திய பாராளு மன்றத்தில் 2004இல் இயற்றப்பட்டது / The RTI was adopted by the Indian Parliament in 2004
(c) பொது தகவல் அலுவலர் கோரிக்கைகளுக்கான பதிலை 35 நாட்களுக்குள் தரவேண்டும் / The PIO has to reply the request within 35 days
(d) கோரிக்கைகளை தாக்கல் செய்ய குறைந்த பட்சக் கட்டணம் ரூ.25 ஆகும் / The nominal fees for filing a request is Rs.25
35. இந்திய குடியரசுத்தலைவரால் ராஜ்யசபையில் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ——- ஆகும்.
The number of members of the Rajya Sabha, nominated by president of India are
(a) 2
(b) 10
(c) 12
(d) 15
36. கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க:
1. மாநில மனித உரிமை கழகத்தின் செயல்பாடுகள் அடிப்படையில் ஆலோசனை அமைப்பாக செயல்படுகிறது.
2. மாநில மனித உரிமை கழகத்தின் ஆலோசனையானது மாநில அரசாங்கத்துடன் பிணைந்திருக்கக் கூடியது.
மேற்கண்ட கூற்றுகளில் எதுஎவை சரியானவை?
Consider the following statements:
i. Functions of State Human Rights commission are mainly recommendatory in Nature
ii. The recommendation of State Human Rights commission are binding on the State Government
Which of the statement given above is/are correct?
(a) 1 சரி / i only
(b) 2 சரி / ii only
(c) 1 மற்றும் 2 சரி / Both i and ii
(d) எதுவுமில்லை / None
37. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலையின்மைக்கு இடையே உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுவது
The relationship between gross domestic product and unemployment is represented by
(a) கினி கெழு / Gini coefficient
(b) ஒகுன்ஸ் விதி / Okun’s Law
(c) லாரன்ஸ் வளைகோடு / Lorenz curve
(d) பிலிப்ஸ் வளைகோடு / Phillips Curve
38. இநதிய அரசின் வருமான வரி கொள்கையானது இதன் அடிப்படையில் அமைந்துள்ளது.
1. செலுத்தும் திறன்
2. வரி தாங்கும் திறன்
3. சமத்துவ விதி
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தெரிவு செய்க:
The principles of income tax of the Govt. of India based on
i. Ability to pay
ii. Taxable capacity
iii. Canon of eqality
Select the correct answer by using the codes given below:
(a) 1 மற்றும் 2 சரியானவை / i and ii are correct
(b) 2 மற்றும் 3 சரியானவை / ii and iii are correct
(c) 1 மற்றும் சரியானது / i only is correct
(d) 3 மற்றும் சரியானது / iii alone is correct
39. இந்தியாவில் ஜிஎஸ்டி ——– முதல் நடைமுறைக்கு வந்தது
In India GST came into effect from
(a) 1 ஜீலை 2014 / 1 July 2014
(b) 1 ஜீலை 2016 / 1 July 2016
(c) 1 ஜீலை 2017 / 1 July 2017
(d) 1 ஜீலை 2015 / 1 July 2015
40. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தேசிய சராசரி எழுத்தறிவு விகிதம்
According to the 2011 census National Average Literacy Rate in India was
(a) 74.04%
(b) 74.02%
(c) 74.08%
(d) 74.10%
41. கிராமப்புறக் கடனுக்கான உச்ச வங்கி
The apex bank of rural credit is
(a) நபார்டு / NABARD
(b) ஆர்பிஐ / RBI
(c) ஐடிபிஐ / IDBI
(d) ஆர்ஆர்பி / RRB
42. இந்தியாவில் நில சீர்திருத்தங்களுக்கான அவசியம் என்ன?
1. விவசாய நிலம் பிரிக்கப்பட்டது
2. ஒரு நபருக்கான விதைக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு அதிகரித்து வருகிறது
3. உற்பத்தி திறன் குறைந்து வருகிறது
What was the need for land reforms in India?
i. Agricultural holding was get divided
ii. The sown area of land per person are increasing
iii. Productivity decreased
(a) 1 மற்றும் சரி; ஆனால் 2 மற்றும் 3 தவறானவை / i is true but ii and iii are false
(b) 1 மற்றும் 3 சரி; ஆனால் 2 மட்டும் தவறானது / i and iii are true but ii is false
(c) 1 மட்டும் தவறானது; ஆனால் 2 மற்றும் 3 சரி / i is false but ii and iii are true
(d) அனைத்தும் சரி / All are true
43. 10, 000 ஹெக்டேருக்கு அதிகமான விளை நிலங்களுக்கு (CCA) பாசன வசதி வழங்கும் திட்டத்தினை —— எனலாம்
A scheme having Cultivable Command Area (CCA) of more than 10, 000 hectares of irrigated area is known as
(a) பெரிய நீர்ப்பாசனத் திட்டம் / Major Irrigation Schemes
(b) நடுத்தர நீர்ப்பாசனத் திட்டம் / Medium Irrigation Schemes
(c) சிறிய நீர்ப்பாசனத் திட்டம் / Minor Irrigation Schemes
(d) குறு நீர்ப்பாசனத் திட்டம் / Tiny Irrigation Schemes
44. காமராஜரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
1. காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி ஆவார்
2. 1937 இல் சேலத்திலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
3. குந்தா ஆறு திட்டம் இவர் முயற்சியால் உருவாக்கப்பட்டது
Which of the following statement are true about Kamaraj?
i. The political guru of Kamaraj was Satyamurti
ii. In 1937, he was elected to the legislature from Salem
iii. Kundah river project came into existence due to his effort
(a) 1 மட்டும் / i only
(b) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(c) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only
(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
45. கூற்று (A) : “வந்தே மாதரம்” என்பது போராட்டத்திற்கான முழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விளக்கம் (R): வங்காளப் பிரிவினருக்கு எதிரான சுதேசி இயக்கத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டது
Assertion (A) : “Vande Mataram” was adopted as the slogan for an agitation
Reason (R) : It was adopted during the Swadeshi Movement in protest against partition of Begal
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) வின் சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)
(c) (A) தவறானது, (R) சரியானது / (A) is fale, but (R) is true
(d) (A) மற்றும் (R) சரியானது ஆனால் (R), (A)வின் சரியான விளக்கமல்ல / Both (A) (R) are true, but (R) is not the correct explanation of (A)
46. பின்வரும் வாக்கியம் (வாக்கியங்களில்) எவை சரியானவை?
1. மகாகவி பாரதியார் நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
2. பாரம்பரிய மற்றும் சமகால கூறுகளை இணைத்த ஒரு வலிமையான நாடகத்தின் முன்னோடி பாரதியார் ஆவார்.
Which of the following statement(s) is/are true?
i. Mahakavi Bharathiar was a pioneer of modern Tamil poetry and is considered one of the greatest tamil literary figures of all time
ii. Bharathiar was the forerunner of a forceful kind of drama that combined classical and contemporary elements
(a) 1 மட்டும் / i only
(b) 2 மட்டும் / ii only
(c) 1 மற்றும் 2 ஆகியன / Both I and ii
(d) மேற்கண்ட எவையுமில்லை / None of the above
47. இராஜபாளையத்தில் காதி இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் இவர்
Who laid the foundation of Khadhi movement in Rajapalayam?
(a) ஐ.பி.அரங்கசாமி ராஜா / I.P.Arangasamy Raja
(b) இரட்டைமலை சீனிவாசன் / Rettaimalai Srinivasan
(c) டி.எம்.நாயர் / T.M.Nair
(d) பி.வரதராஜிலு / P.Varadarajulu
48. தவறான பொருத்தங்களைத் தேர்வு செய்ய:
1. அஷ்ட்டபிரதான் – எட்டு அமைச்சர் குழு
2. சர்தேஷ்முகி – பிரதேச வரி
3. சவுத் – சுங்கவரி
4. அமத்தியா – வெளிநாட்டுத்துறை அமைச்சர்
Choose the wrongly matched pairs:
1. Ashtapradhan – Council of Eight ministers
2. Sardeshmukhi – Tax on territories
3. Chauth – Custom duty
4. Amatya – Foreign Minister
(a) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct
(b) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct
(c) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct
(d) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct
49. தென்னாப்பிரிக்காவில் எந்த இரயில் நிலையத்தில் காந்தி இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
At which Railway station in South Africa Gandhiji was evicted from a train?
(a) பீட்டர்மரிட்ஸ்பர்க் / Pietermaritzburg
(b) ஜோகன்னஸ்பர்க் / Johannesburg
(c) குரூன்ஸ்டாட் / Kroonstad
(d) ஹாட்ஃபீல்ட் / Hatfield
50. 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு முந்தைய மற்றும் மிகவும் பிரபலமான கலகங்களில் இதுவும் ஒன்று?
Name the earliest and the best known mutinies before the “Revolt of 1857”
(a) பூர்வீக காலாட்படை கலகம் (1824) / The Native Infantry Mutiny (1824)
(b) வேலூர் இந்திய சிப்பாய்கள் கலகம் (1806) / Indian Soldiers Mutiny at Vellore (1806)
(c) ஷோலாப்பூர் கலகம் (1838) / Sholapur Mutiny (1838)
(d) அசாம் சிப்பாய் கலகம் (1824) / Assam Soldiers Mutiny (1824)
51. கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப்பட்டுள்ள “யோகா” என்ற சொல்லின் பொருள் விளக்கம்
As per the context mentioned in Kalingathupparani, the word “yoga” means
(a) உடற்பயிற்சி செய்தல் / Doing exercise
(b) மந்திரங்கள் ஓதுதல் / Reciting mantras
(c) வழிபடுதல் / Worshipping
(d) மனதை ஒருமுகப்படுத்துதல் / Concentratin
52. தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்களின் ஆரம்பகால செப்புத்தகடு கல்வெட்டுகள்
(அ) திருவாலங்காடு செப்புப் பட்டயம்
(ஆ) வேள்விக்கடீ செப்புப் பட்டயம்
(இ) வேலூர்பாளையம் பட்டயம்
(ஈ) சின்னமனூர் செப்புப் பட்டயம்
The earliest copper plate inscriptions of Cholas discovered in Tamil Nadu are
(a) Thiruvalangadu Copper Plates
(b) Velvikkudi Copper Plates
(c) Velur Palayam Plates
(d) Chinnamanur Copper Plates
(a) அ மட்டும் / a only
(b) ஆ மற்றும் இ மட்டும் / b and c only
(c) அ மற்றும் இ மட்டும் / a and c only
(d) இ மற்றும் ஈ மட்டும் / c and d only
53. கீழே கொடுக்கப்பட்டவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்க:
1. இந்து விதவை மறுதிருமணச் சட்டம் – 1856
2. வங்க சதி ஒழுங்குமுறை – 1829
3. மெட்ராஸ் பிராமணர் அல்லாதோர் சங்கம் – 1919
4. இந்து சமய அறநிலையச் சட்டம் – 1821
Choose the right matches among the following:
1. Hindu Widow’s Remarraige act – 1856
2. Bengal Sati regulation – 1829
3. Madras Non-Brahmin Association – 1919
4. Hindu Religious Endowment Act – 1821
(a) 1 மற்றும் 3 மட்டும் சரி / 1 and 3 are correct
(b) 1 மற்றும் 2 மட்டும் சரி / 1 and 2 are correct
(c) 2 மற்றும் 3 மட்டும் சரி / 2 and 3 are correct
(d) 3 மற்றும் 4 மட்டும் சரி / 3 and 4 are correct
54. காங்கிரஸ் கட்சியின் வானொலியில் பணியாற்றிய திடுக்கிடும் செய்தியை வாசிப்பதில் தேர்ச்சிப்பெற்ற மற்றும் நேர்த்தியான வார்த்தை உச்சரிப்பை கொண்ட பெண்மணி
Name the female speaker at the Congress Radio who possessed a startlingly rich voice and sharp expression
(a) கோகிலா பென் / Kokila Ben
(b) கமலா பென் / Kamala Ben
(c) உஷா மேத்தா / Usha Mehta
(d) அனிதா பென் / Anita Ben
55. நாட்டுப்பாடல் சாயலில் பக்திப் பாடல்கள் பாடிய ஆழ்வார் யார்?
Which Azhwaar sang devotional songs in the guise of folk songs?
(a) ஆண்டாள் / Aandaal
(b) திருப்பாணாழ்வார் / Thiruppan azhwaar
(c) திருமழிசையாழ்வார் / Thirumahisai azhwaar
(d) திருமங்கையாழ்வார் / Thirumangai Azhwaar
56. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான இணையைத் தேர்வு செய்க:
Pickout the correct pair from the pairs given:
(a) சிட்டி லைட்ஸ் – காவியப்படம் / City Lights – Epic movie
(b) தி கிரேட் டிக்டேட்டர் – கேலிச் சித்திர நடிகர் / The Great Dictator – Comedy Actor
(c) சார்லி சாப்ளின் – சாதனைப் படம் / Charlie Chaplin – Award Winning Movie
(d) மாடர்ன் டைம்ஸ் – ஆராய்ச்சி படம் / Modern Times – Research movie
57. ‘மனுமுறை கண்ட வாசகம்” என்ற நூலை எழுதியவர் யார்?
Who wrote the book “Manumurai Kanda Vasakam?”
(a) உ.வே.சாமிநாதர் / U.Ve.Saminathar
(b) இராமலிங்க அடிகள் / Ramalinga Adigal
(c) தாமோதரர் / Dhamodar
(d) வைகுண்ட சாமிகள் / Vaikunda Swamigal
58. ஆதிக்க இந்தியாவின் முதல் மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரே கவர்னர் ஜெனரல் யார்?
Who was the first and the only Governor-General from Madras Presidency in the Dominion of India?
(a) சி.இராசகோபாலாச்சாரியார் / C.Rajagopalachariar
(b) ஆர்.கே.சண்முகம் செட்டி / R.K.Shanmugam Chetti
(c) எம்.பக்தவத்சலம் / M.Bhakthavatchalam
(d) லார்ட் மவுண்ட் பேட்டன் / Lord Moutbatten
59. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் ஒரு
Illangovadigal, Who wrote silappathikaram was a
(a) புத்த துறவி / Buddhist Monk
(b) சமணத்துறவி / Jain monk
(c) இந்து துறவி / Hindu saint
(d) கிருஸ்துவர் / Christian
60. வரிசை I ல் உள்ளதை II ம் வரிசையுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
வரிசை I வரிசை II
அ. குறிஞ்சி 1. இந்திரன்
ஆ. முல்லை 2. முருகன்
இ. மருதம் 3. திருமால்
ஈ. நெய்தல் 4. வருணன்
Match the following from List I with List II and choose the correct option.
List I List II
a. Kurinji 1. Indra
b. Mullai 2. Murugan
c. Marudam 3. Thirumal
d. Neydal 4. Varua
a b c d
a. 2 3 1 4
b. 3 2 1 4
c. 2 1 3 4
d. 3 1 2 4
61. நீதிக்கட்சியைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது என்பதை தேர்ந்nடுக்கவும்.
1. பிராமணர் அல்லாதவர்களின் நலன்களைக் காக்க ஆகஸ்ட் 1917இல் தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு என்றகட்சியை ஏற்பாடு செய்தார்.
2. தென்னிந்திய தாராளவாத கூட்டமைப்பு நீதிக்கட்சி என்று அறியப்படுகிறது.
3. நீதிக்கட்சி திராவிட இயக்கத்திற்கு ஒரு முன்னோடியாக கருதப்படுகிறது
Choose the right answer among type which of the following statements are true about Justice party?
i. In order to safeguard the interest of non-Brahimins, in August 1917 to organise a party called the south Indian Liberal Federation.
ii. South Indian Liberal Federation popularly known as Justice Party
iii. Justice Party is considered as the start of Dravidian Movement
(a) 1 மட்டும் / i only
(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only
(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(d) 1, 2 மற்றும் 3 சரி / i, ii and iii only
62. “காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்” எனப் புகழப்படுபவர் யார்?
Which Tamil writer is adulated as : “Kaadu Kamazhum, Karpoora Sorko karpanai Ootraam Kadhayin Puthiyal?
(a) பாரதியார் / Bharathiya
(b) பாரதிதாசன் / Bharathidasan
(c) சுரதா / Suradha
(d) வாணிதாசன் / Vanithasan
63. தமிழில் வெளிவந்த முதல் புதுக்கவிதைத் தொகுப்பு எது?
Which was the first collection of modern poetry released in Tamil?
(a) காகிதப் பூக்கள் / Kakitha Pookal
(b) புதுக்குரல்கள் / Puthukkuralgal
(c) காற்றிலே மிதந்த கவிதை / Kaatrile Mithantha Kavithai
(d) மெர்க்குரிப்பூக்கள் / Merkuri Pookal
64. “எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே”
என்று பாடிய புலவர் யார்?
Who wrote: “Evvazhi Nallavar Adavar
Avvazhi Nallai; Vaazhiya Nilanae!”?
(a) பரணர் / Baranar
(b) கபிலர் / Kabilar
(c) ஒளவையார் / Avvaiyar
(d) வெள்ளிவீதியார் / Velliveedhiyaar
65. கடையேழு வள்ளல்களில் நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவர் யார்?
Among the Kadaiyelu Vallal who offered Neelamani and Nagam Thantha Kalingam to the Sivan?
(a) காரி / Kaari
(b) ஓரி / Oori
(c) ஆய் அண்டிரன் / Aai Andiran
(d) நல்லி / Nalli
66. பின்வருவனவற்றுள் எது அரசின் சமூக நலத் திட்டங்களின் முன்னுரிமையில் இல்லாதது?
Which of the following is NOT a priority for Social Welfare Schemes of the Government?
(a) பெண்கள் பாதுகாப்பு / Protection of Women
(b) வயது வந்தோர் பாதுகாப்பு / Protection of the Aged
(c) குழந்தைகள் பாதுகாப்பு / Protection of Children
(d) சுற்றுச் சூழல் பாதுகாப்பு / Protection of Environment
67. மெட்ராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது மற்றும் அந்த முதலமைச்சர் யார்?
When was the Madras state renamed as Tamil Nadu and who was appointed as the Chief Minister of Tamil Nadu?
(a) 1965 சுப்பராயலூ ரெட்டியார் / 1965 Subbarayalu Reddiyar
(b) 1967 காமராஜர் / 1967 Kamaraj
(c) 1969 அண்ணாதுரை / 1969 Annadurai
(d) 1972 அண்ணாதுரை / 1972 Annadurai
68. 2011-ஆம் ஆண்டின் மக்களதொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிகக் குறைவான குழந்தைப் பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது?
According to census 2011, —— district of Tamil Nadu has the lowest Child sex ration
(a) அரியலூர் / Ariyalur
(b) கடலூர் / Cuddalore
(c) மதுரை / Madurai
(d) தேனி / Theni
69. எந்த இந்திய நகரம் “ஆசியாவின் டெட்ராய்டு” என அழைக்கப்படுகிறது?
Which Indian city is called as “Detroit of Asia?”
(a) டெல்லி / Delhi
(b) மும்பை / Mumbai
(c) பெங்களுர் / Bangalore
(d) சென்னை / Chennai
70. கிராமங்கள் மற்றும் நகரங்ளின் வணிகம் சாராத ஆற்றல் வளம் ——– இல்லை
Which is not the non-commercial energy resource of village and towns?
(a) மர எரிபொருளில் / Fuel wood
(b) விவசாய கழிவுகளில் / Agricultural Wastes
(c) நீர் ஆற்றலில் / Hydro Energy
(d) விலங்கு சாணத்தில் / Animal Dung
71. 2011 மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் அதிக சதவிகித நகர்புற மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம் எது?
Which state has the highest percentage of Urban Population in India as per 2011 census?
(a) கேரளா / Kerala
(b) தமிழ்நாடு / TamilNadu
(c) குஜராத் / Gujarat
(d) மகாராஷ்ட்ரா / Maharastra
72. காய கல்ப் விருது எந்தத் துறையுடன் தொடர்புடையது?
Kaya Kalp award is relation to which field?
(a) கல்வி / Education
(b) பொதுசுகாதாரம் / Public health care
(c) விளையாட்டு / Sports
(d) யோகா / Yoga
73. —— என்ற கருத்து நீண்ட வாழும் காலம், அறிவு மற்றும் மனித வாழ்க்கையின் கௌரவமான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உள்ள இழப்பில் கவனம் செலுத்துகிறது
The concept of ———– concentrates on deprivation in longlively knowledge and a decent living standard of human life
(a) பாலின சமத்துவமின்மை குறியீடு / Gender Inequality Index (GII)
(b) மனித வறுமை குறியீடு / Human Poverty Index (HPI)
(c பாலின வளர்ச்சி குறியீடு / Gender Development Index
(d) மனதவள குறியீடு / Human Resource Index
74. கூற்று (A): தமிழ்நாட்டில் நீர் நிலைகள் நிரம்ப முழுமையாக மழையை சார்ந்துள்ளது.
காரணம் (R): தமிழ்நாட்டில் பருவ கால மழை பெய்யாமையால் தண்ணீர் பஞ்சம் மற்றும் கடுமையான வறட்சி நிலவுகின்றது.
Assertion (A) : Tamil Nadu is entirely dependen on rain for recharging its water resources.
Reason (R) : The failure of monsoon lead to acute water scarcity and severe drought in Tamil Nadu
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true, (R) is false
(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A) க்குசரியான விளக்கம் / Both (A) and (R) are True and (R) is the correct explanation of (A)
(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is False, (R) is true
(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) மற்றும் என்பது (A)க்குசரியான விளக்கமல்ல / Both (A) and (R) are True but (R) is not the correct explanation of (A)
75. தமிழ்நாட்டில், எண்ணிலக்க முடுக்கி திட்டத்தின் நோக்கம்
In Tamil Nadu, The Digital Accelerator Scheme is aimed ————–
(a) புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குவது / To start Education Institutions
(b) புதிய தொழில்சாலைகளை தொடங்குவது /To start New Industries
(c) அதிக வங்கி கிளையை திறப்பது / To open number of Banks
(d) குற்றங்களை போக்குதல் / To eradicate crimes