Tnpsc Model Question Paper 3 – General Studies in Tamil & English
1. பின்வரும் நிகழ்வுகளை காலமுறைப்படி பட்டியலிடுக:
அ. சுதேசி இயக்கம்
ஆ. தன்னாட்சி இயக்கம்
இ. ஒத்துழையாமை இயக்கம்
ஈ. சட்ட மறுப்பு இயக்கம்
Arrange the following events in chronological order:
i. Swadeshi Movement
ii. Home rule Movement
iii. Non-Cooperation Movement
iv. Civil Disobedience Movement
(a) அ, ஆ, இ, ஈ / i, ii, iii, iv
(b) ஆ, இ, ஈ, அ / ii, iii, iv, i
(c) இ, ஈ, அ, ஆ / iii, iv, i, ii
(d) இ, ஆ, அ, ஈ / iii, ii, i, iv
2. அலன் ஆக்டேவியன் ஹியூம் பற்றிய கூற்றுகளில் எது உண்மை?
அ. இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை
ஆ. ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்
இ. 1893 இல் லாகூர் அமர்வின் தலைவர்
Which of the following statements are true about Alan Octvian Hume?
i. The father of Indian National Congress
ii. An eminent Economist
iii. President of the Lahore Session in 1893
(a) அ மட்டும் / i only
(b) அ மற்றும் இ மட்டும் / i and iii only
(c) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(d) ஆ மற்றும் இ மட்டும் / ii and iii only
3. தேவதாசி பற்றி நாவல் எழுதியது யார்?
Who wrote Novel about Devadashi?
(a) பால சரஸ்வதி / Bala Saraswathi
(b) ராமாமிர்தம் அம்மையார் / RamamirthamAmmayar
(c) நாகரத்தினம்மா / Nagarathinamma
(d) எம்.எஸ்.சுப்புலட்சுமி / M.S.Subbulakshmi
4. கூற்று : மூவலூர் இராமாமிருதம் அனாதை விடுதியான அவ்வை இல்லத்தை நிறுவினார்
காரணம் : அவர் பெரியாரின் தீவிர சீடர்
Assertion (A): MoovalurRamamirtham was the founder of an orphanage “AvvaiIllam”
Reason (R) : She was a strong follower of Periyar
(a) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை உறுதிபடுத்துகிறது / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(b) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றுக்கு பொருந்தவில்லை / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
(c) கூற்று சரி காரணம் தவறு / (A) is true but (R) is false
(d) கூற்று தவறு காரணம் சரி / (A) is false but (R) is true
5. “நாடென்ப நாடா வளத்தன”
என்ற குறளில் கூறப்படும் செய்தி
“That is a land that yields increase….” What is the message in this Thirukural?
(a) நல்ல நாட்டிற்கான இலக்கணம் / Policies of a best country
(b) நாட்டின் வளம் / A country’s Resources
(c) நாட்டில் ஏற்படும் தீங்கு / Problems in a country
(d) தீய நாட்டிற்கான இலக்கணம் / Policies of a bad country
6. “விழுமத் துடைத்தவர் நட்பு”
– என வள்ளுவர் எத்தகைய நட்பைக் குறிப்பிடுகிறார்?
“Those who’ve helped you in distress” – What kind of friendship Thiruvalluvar mention here?
(a) கற்றோர் நட்பு / Friendship of Learned Person
(b) துன்பம் கொடுத்தவர் நட்பு / Friendship of Cruel Person
(c) சான்றோர் நட்பு / Friendship of Wise Person
(d) துன்பம் நீக்கிய நல்லோர் நட்பு / Friendship of a person who helped you in your troubles
7. பொருத்துக:
a. மன்றம் 1. பொது இடம்
b. சப்தாங்கா 2. நிர்வாக குழு
c. எண்பேராயம் 3. கூடுகை நடத்தும் இடம்
d. பொதியில் 4. ஏழு பிரிவுகள்
Match the following:
a. Manram 1. Common place
b. Saptanga 2. Administrative unit
c. Enperayam 3. Meeting hall
d. Podiyil 4. Seven limbs
a b c d
a. 3 4 2 1
b. 3 2 1 4
c. 4 3 2 1
d 4 2 1 3
8. தமிழர்களின் வேதம் என்று அழைக்கப்படும் நூல்
The book called as “The Veda of the Tamils” is
(a) தேவாரம் / Devaram
(b) திருவாசகம் / Thiruvasagam
(c) திருக்குறள் / Thirukural
(d) நாலடியார் / Naladiar
9. “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி”
– எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலின் இரண்டாவது அடி எது?
O! honey bee with beautiful wings (KongutherVaazhkaianjirai-ththumbi) what is the second line of this poem Kurunthogai?
(a) மைப்பட்டன்ன மாமுக முசுக்கலை / MaipattanaMamugaMuskalai
(b) காமம் செப்பாது கண்டது மொழிமோ / KaamamSeppaadhuKandadhuMozhimo
(c) வரை இழி அருவியில் தோன்று நாடன் / VaraiizhiAruvielThondrumNadan
(d) புனக்கிளி கடியும் பூங்கண் பேதை / PunakiliKadiumPoonganPethai
10. ஒவ்வொரு ஆண்டும் “மனித உறுப்பு தானம்” தினமாக கொண்டாடப்படும் நாள்
Every year, “Human Organ Donation day” is observed on
(a) மே, 1 / May 1st
(b) ஆகஸ்டு, 13 / August 13th
(c) அக்டோபர், 20 / October 20th
(d) டிசம்பர், 26 / December 26th
11. தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் எதனால் ரப்பருக்கு புகழ் பெற்றுள்ளது
அ. வறட்சியான காலநிலை
ஆ. நில அமைப்பு
இ. தேவையான அளவு மழை
ஈ. அருகாமையில் சந்தை உள்ளது
Why the Kanyakumari district is famous for Rubber in Tamil Nadu?
i. Dry Climate. ii. Geographical locations iii. Adequate rainfall iv. Nearness to market
(a) அ மற்றும் ஆ / i and ii
(b) அ, ஆ மற்றும் இ / i, ii and iii
(c) ஆ மற்றும் இ / ii and iii
(d) மேற்கூறியன ஏதுமில்லை / None of the above
12. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் ———– அவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது
E.V.R Maniammaiyarninaivu marriage assistance scheme is meant for
(a) ஆதரவற்ற பெண்கள் / Orphan Girls
(b) கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகள் / Couples of Inter-caste marriage
(c) ஏழை விதவையர் மகள்கள் / Daughters of Poor Widows
(d) விதவை மறுமணம் / Widow Remarriage
13. ஸ்ரீ நாராயண குருசாமி துவங்கிய, நாராயண தர்ம பரிபாலன இயக்கம் எந்த விஷயங்களை முன்னெடுத்தது?
அ. கலப்புத் திருமணத்தை ஊக்குவித்தல்
ஆ. பொதுப் பள்ளிகளில் அனுமதி
இ. அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்படுதல்
ஈ. கோவில்கள் மற்றும் சாலைகளில் செல்ல அனுமதி
Sri Narayana Guru Swamy initiated a programme of action called Sri Narayana Guru Dharma Paripalana
Yogam which took up issues regarding:
i. Encouraging inter-caste marriages
ii. Right of admission to public schools
iii. Recruitment to Government schools
iv. Access to tmeples and roads
(a) அ, ஆ மற்றும் இ / i, ii and iii
(b) ஆ, இ மற்றும் ஈ / ii, iii and iv
(c) அ, இ மற்றும் ஈ / i, iii and iv
(d) அ, ஆ, இ மற்றும் ஈ / i, ii, iii and iv
14. புது வாழ்வுத் திட்டம் ஏன் தொடங்கப்பட்டது?
Why the PudhuVaazhvuProject is launched?
(a) வறுமையை ஒழித்தல் / To eradicate poverty
(b) வேலை வாய்ப்பை குறைத்தல் / To reduce employment opportunity
(c) பொருளாதார வளர்ச்சியை குறைத்தல் / To decrease economic growth
(d) பணக்காரர்களுக்கு உதவுதல் / To help the rich people
15. “தமிழ்நாடு நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்” தொடங்கப்பட்டதன் நோக்கம்
Tamil Nadu Water Resources conservation and augmentation mission is launched due to
(a) Construction fo New Dams / புதிய அணைகள் கட்டுவது
(b) Utilising the scarce water resources for the maximum benefit of the people / அருகிவரும் நீர் வளங்களை, மக்கள் பெருமளவில் நன்மையடையும் வகையில் பயன்படுத்திட வகை செய்வது
(c) To control the industries to use more water / தொழிற்சாலைகள் அதிகளவு நீர் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல்
(d) To monitor the water supply / தண்ணீர் விநியோகத்தை கண்காணித்தல்
16. எலெக்ட்ரானை கண்டுபிடித்தவர் ———— ஆவார்
Electron was discovered by
(a) நியூட்டன் / Newton
(b) ஜெ.ஜெ.தாம்சன் / J.J.Thomson
(c) ராண்ட்ஜன் / Roentgen
(d) சாட்விக் / Chadwick
17. ஃபிரானஃபர் வரிகள் ———- நிறமாலைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
Fraunhofer lines are the eample of ———— spectrum
(a) வரி வெளிவிடு / Line emission
(b) வரி உட்கவர் / Line absorption
(c) பட்டை வெளியிடு / Band emission
(d) பட்டை உட்கவர் / Band absorption
18. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க:
அ. CO2 பசுமை இல்ல வாயு, உலக வெப்பமாதலை அதிகரிக்கிறது
ஆ. CO2 அகச்சிவப்பு கதிர் வீச்சுகளை ஈர்த்து கொள்கிறது
மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?
Consider the following statements:
i. CO2 is green house gas, it increases global warming
ii. CO2 absorbs infrared radiation
Which of the statements given above is/are correct?
(a) அ மட்டும் / i only
(b) ஆ மட்டும் / ii only
(c) அ மற்றும் ஆ / i and ii
(d) இரண்டுமில்லை / Neither i nor ii
19. இந்திய பாராளுமன்றத்தில் அறிவியல் கொள்கை தீர்மானம் எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?
The Indian parliament adopted the scientific policy resolution in the year
(a) 1960
(b) 1959
(c) 1958
(d) 1957
20. கீழ்கண்டவற்றை பொருத்துக:
குறியீட்டின் பெயர் உருவாக்கப்பட்ட ஆண்டு
a. மனித மேம்பாட்டு குறியீடு (HDI) 1. 2000
b. பாலின-தொடர்பான மேம்பாட்டு குறியீடு (GDI) 2. 1997
c. முனித வறுமை குறியீடு (HPI) 3. 1995
d. ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு (MDG) 4. 1990
Match the following:
Name of the initiative Year of initiation
a. Human Development Index (HDI) 1. 2000
b. Gender Related Development Index (GDI) 2. 1997
c. Human Poverty Index (HPI) 3. 1995
d. Millennium Development Goals (MDG) 4. 1990
a b c d
(a) 1 2 3 4
(b) 4 3 2 1
(c) 3 2 1 4
(d) 2 1 4 3
21. சரியானவற்றை பொருத்துக:
a. குவின்டன் டி காக் 1. ஸ்டைரியன் கிராண்ட் பிரிக்ஸ், 2020
b. வால்டேரி போட்டஸ் 2. லா லிகா சேம்பியன், 2020
c. லீவீஸ் ஹமில்டன் 3. கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்க தேசிய விருது
d. ரியல் மேட்ரிட் 4. ஆஸ்டிரியன் கிராண்ட் பிரிக்ஸ், 2020
Match the following:
(a) Quinton de knok 1. Styrian Grand prix, 2020
(b) Valtteri Bottas 2. La Liga Champion, 2020
(c) Lewis Hamilton 3. Cricket-South Africa National Award
(d) Real Madrid 4. Austrian Grand Prix 2020
a b c d
(a) 3 4 1 2
(b) 2 3 4 1
(c) 1 4 2 3
(d) 4 1 3 2
22. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் எத்தனை கிலோ மீட்டர் கொண்டது?
Phase-I of the Chennai Metro Rail project covers a distance of
(a) 25 Km
(b) 35 Km
(c) 45 Km
(d) 55 Km
23. ஐ.எஸ்.ஆர்.ஓ பள்ளி குழந்தைகளுக்காக ஏற்படுத்திய சிறப்பு நிகழ்ச்சியின் தலைப்பு
ISRO launched a special programme for the school children titled
(a) இளம் விஞ்ஞானிக்கான நிகழ்ச்சி / Young scientist programme
(b) குழந்தைகளுக்கான அறிவியல் நிகழ்ச்சி / Childrens science programme
(c) இளைஞர்கள் நிகழ்ச்சி / Youth programme
(d) சிறப்பு குழந்தைகள் நிகழ்வு / Special Childrens programme
24. கொடுக்கப்பட்டுள்ள பழங்குடியினர் பட்டியிலிருந்து இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பழங்குடியினம் எதுவென கண்டறிக:
From the given list of tribes identify which is the largest tribal group found in India
(a) கோண்டர்கள் / Gonds
(b) சாந்தள்கள் / Santhals
(c) நாகர்கள் / Nagas
(d) தோடர்கள் / Todas
25. வற்றாத நதிகள் என்றழைக்கப்படக்கூடிய நதிகள்
The ———– rivers are called perennial rivers.
(a) தீபகற்ப நதிகள் / Peninsular rivers
(b) மேற்கு நோக்கி பாயும் நதிகள் / West flowing rivers
(c) கிழக்கு நோக்கி பாயும் நதிகள் / East flowing rivers
(d) இமாலய நதிகள் / Himalayan rivers
26. அரசூர் மலை அமைந்துள்ள பிரதேசமானது
Where Arasur Mountain is located?
(a) கிழக்கு கேரளா / Easter Kerala
(b) கிழக்கு குஜராத் / Eastern Gujarat
(c) மேற்கு ஆந்திரப்பிரதேசம் / Western Andra Pradesh
(d) மேற்கு தமிழ்நாடு / Western Tamil Nadu
27. “மக்கட் தொகையில் இனக்கூறுகள்” என்ற நூலினை எழுதியவர் யார்?
The book “Racial Elements in the population” written by
(a) பிரஜாசங்கர் குஹா / Biraja Sankar Guha
(b) ரொமிலா தாப்பர் / Romila Thapar
(c) சதிஷ் சந்திரா / Satish Chandra
(d) அஜய் மித்ரா சாஸ்திரி / Ajay Mitra Sastri
28. எந்த மாநிலத்தில் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான துவாரகா அமைந்துள்ளது?
In which State Dwaraka is the Holy place for Hindus situated
(a) உத்திர பிரதேசம் / Uttar Pradesh
(b) உத்ரகாண்ட் / Uttrakant
(c) குஜராத் / Gujarat
(d) மத்தியபிரதேசம் / Madhya Pradesh
29. கூற்று (A) : அபுல் பாசலின் அக்பர் நாமா 3 பாகத்தை கொண்டது
காரணம் (R) : முதல் பாகம் அக்பரின் முன்னோர்கள் பற்றிறது. இரண்டாம் பாகம் அக்பரின் ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுவது. மூன்றாம் பாகம் அயினி அக்பரின் தனி தலைப்பு
Assertion (A) : Abul Fazal’s Akbar Nama Contains three volumes.
Reasons (R) : First volume contains an account of Akbar’s ancestors, second volume is denoted to the reign exhaustive treatment of Akbar’s Third volume has been given a subtitle the Aini Akbari.
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும். / Both (A) and (R) are true. (R) is the correct explanation of (A)
(c) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false but (R) is true.
(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true. But (R) is not the correct explanation of (A)
30. இபான் பதூதா ———— காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்
Ibn Battuta visited in India during the time of
(a) முஹம்மத் பின் துக்ளக் / Muhammad bin Tughlaq
(b) பெரோஸ்ஷா துக்ளக் / Firuz Shah Tughlaq
(c) கியாஸீத்தீன் துக்ளக் / Ghiyasud-Din-Tughlaq
(d) ஷம்ஸீத்தின் முஹம்மத் / Shamsud-Din Muhammad
31. குறை தீர்க்கும் மையம் எங்கு முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட இடம்
The institution of ombudsman was first created in
(a) நார்வே / Norway
(b) சுவீடன் / Sweden
(c) டென்மார்க் / Denmark
(d) அமெரிக்கா / U.S.A
32. இந்திய அரசியலமைப்பின் 326-ம் விதி கீழ் காணப்படும் எவை/எதை குறிக்கின்றது. (பற்றியது)?
Article 326 of the Indian Constitution is related to which of the following?
(a) மக்களவைக்கான தேர்தல் வயது வந்ததோர் வாக்குரிமை-ன் அடிப்படையில் நடத்துவது / Election to the lower house to be based on universal adult suffrage
(b) குடியரசுத்தலைவர் / President
(c) பாராளுமன்றம் / Parliament
(d) உச்ச நீதிமன்றம் / Supreme Court
33. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 78-வது சரத்தின் கீழ் பாரதப் பிரதமரின் கடமையாகச் சொல்லப்படுவது
Under Art 78 of the Indian constitution it is the duty of the Prime Minister to
(a) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருக்குத் தெரிவித்தல் / Communicate to the President all decisions of the council of Ministers.
(b) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவித்தல் / Communicate to the parliament all decisions of the council of Ministers.
(c) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவித்தல் / Communicate to the Supreme Court all decisions of the council of Ministers.
(d) அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் இந்தியக் கணக்காயர் மற்றும் தலைமைத் தணிக்கையரிடம் தெரிவித்தல் / Communicate to the comptroller and Auditor general of India all decisions of the council of Ministers.
34. எந்த திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது?
Fundamental duties were added to the Indian constitution by which amendment?
(a) 12th
(b) 22nd
(c) 32nd
(d) 42nd
35. வரி சாரா வருவாயின் ஆதாரங்களாவன:
அ. பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள்
ஆ. மரண தீர்வை
இ. விற்பனை வரி
ஈ. செஸ்
மேலே கண்டவற்றுள் எவை சரியான விடைகள்?
The sources of Non-Tax Revenue are
I. Earnings from public enterprises
II. Escheats
III. Sales Tax
IV. Cess
From the above which are correct answers?
(a) ஆ மற்றும் இ / II and III
(b) அ மற்றும் ஈ / I and IV
(c) அ மற்றும் ஆ / I and II
(d) இ மற்றும் ஈ / III and IV
36. கீழ்கண்ட வரி நேரடி வரி அல்ல
அ. சரக்கு மற்றும் சேவை வரி
ஆ. சொத்து வரி
இ. கொடை வரி
Select the followings tax is not a direct tax?
I. GST II. Wealth Tax III. Gift Tax
(a) அ மட்டும் / I only
(b) அ மற்றும் ஆ மட்டும் / I and II only
(c) ஆ மற்றும் இ மட்டும் / II and III only
(d) இ மட்டும் / III only
37. NITI Ayog என்பதன் விரிவாக்கம் என்ன?
Choose the expansion of NITI Ayog?
(a) National Information and Taxes in India
(b) National Institution for Trade in India
(c) National Institution for Transforming India
(d) National Integrated Trade Institute
38. சரியான விடையை தேர்ந்தெடுக:
அ. இந்திய லீக் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1843
ஆ. ஆங்கில இந்திய சங்கம் வங்காளத்தில் 1875 ஆரம்பிக்கப்பட்டது
இ. இந்திய சங்கம் 1876 ஆரம்பிக்கப்பட்டது
ஈ. பூனா சார்வஜனச் சபா 1878 ல் அமைக்கப்பட்டது
Choose the right answer:
i. India League founded in 1843
ii. British India Association founded in Bengal in 1875
iii. India Association founded in 1876
iv. Poona Sarvajanak Sabha setup in 1878
(a) அ மட்டும் / i only
(b) ஆ மட்டும் / ii only
(c) இ மட்டும் / iii only
(d) ஈ மட்டும் / iv only
39. இந்துகளும் மற்றும் முஸ்லீம்களும் இந்திய மணப் பெண்ணின் அழகான இரண்டு கண்கள் என்று வருணித்தவர்
The hindus and muslims as “Two eyes of a beautiful bride of India” was described by
(a) சர் சய்யிது அகமது கான் / Sir Syed Ahmad Khan
(b) M.A.ஜின்னா / M.A.Jinnah
(c) அகா கான் / Aga Khan
(d) சய்யிது வசிர்ஹீசைன் / Syed Wazir Hussain
40. கீழ்க்காணும் சொற்பொழிவுகளில் காந்தியடிகளின் முதல் அரசியல் உரை என புகழ்பெற்றது எது?
In which among the following is considered as the First Speech Politcal Speech of Gandhiji?
(a) பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் சொற்பொழிவு / Banaras Hindu University Speech (BHU)
(b) தண்டி யாத்திரை சொற்பொழிவு / Dandi March Speech
(c) முதல் வட்ட மேஜை மாநாட்டு சொற்பொழிவு / Firs Round Table Conference Speech
(d) வெள்ளையனே வெளியேறு இயக்க சொற்பொழிவு / Quit India Speech
41. 1939-ம் ஆண்டு தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ் எந்த வேட்பாளரை தோற்கடித்து காங்கிரசின் தலைவரானார்?
Which candidate was defeated by Subhas Chandra Bose to become the President of the Congress in 1939 Election?
(a) பட்டாபி சீதாராமய்யா / Pattabhi Sitaramayya
(b) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
(c) ராஜேந்திர பிரசாத் / Rajendra Prasad
(d) சர்தார் வல்லபாய் படேல் / Sardar Vallabhai Patel
42. சத்யேந்திரநாதத் தாகூர், இந்திய குடிமைப் பணி தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் இந்தியர் ஆவர். இந்த தேர்வு எழுதிய ஆண்டு
Satyendranath Tagore was the First Indian who was successful in India Civil Service examnination in the year
(a) 1861
(b) 1862
(c) 1863
(d) 1864
43. சுய மரியாதை இயக்கத்தின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் இரண்டு கட்டம் உண்டு. இவற்றில் எது சரியானவை?
அ. பகுத்தறிவுவாதம்
ஆ. நாத்திகம்
In the rise and growth of the self-respect movement, there are two phases. Which is the correct statement?
i. Rationalism ii.Atheism
(a) அ / i
(b) ஆ / ii
(c) அ மற்றும் ஆ / i and ii
(d) எதுவுமில்லை / None of the above
44. கீழ்க்கண்டவற்றில் திருச்சி பிரகடனம் பற்றி தவறான கூற்று எது?
அ. இப்பிரகடனம் மருதுபாண்டியார்களால் வெளியிடப்பட்டது
ஆ இப்பிரகடனம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது
இ. பிரகடனம் தேசிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமையவில்லை
ஈ, ஆற்காடு நவாப் மற்றும் முகமது அலியின் அரசியல் நடவடிக்கைகளை இப்பிரகடனம் கண்டித்தது.
Which one of the statement is not correct regarding the Trichy Proclamation
i. The proclamation was published by Marudu Pandiya.
ii. It created a confidence among the people.
iii.It not revealed the National feelings.
iv.It condemned the political activities of Carnatic Nawabs and Muhammad Ali
(a) அ மட்டும் / i only
(b) ஆ மட்டும் / ii only
(c) இ மட்டும் / iii only
(d) ஈ மட்டும் / iv only
45. மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ————- தலைமையில் நடைபெற்றது
The third session of the Inidan National Congress was presided by
(a) A.O.ஹீயூம் / A.O.Hume
(b) அன்னிபெசன்ட் / Annie Besant
(c) பக்ரூதின் தியாப்ஜி / Fakruddin Dyabji
(d) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
46. திருநங்கைகளைப் பற்றி புதுக்கவிதையில் பாடியவர் யார்? குறிப்பிடுக:
Thirunangaigal (Transgenders) – Who has written about them in Puthukavitha (free verse)?
(a) மீ.ராஜேந்திரன் / M.Rajendran
(b) நா.காமராஜன் / N.Kamarajan
(c) மு.மேத்தா / M.Mehta
(d) அப்துல் ரஹ்மான் / Abdul Rahman
47. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் அளித்தவர்?
Who gave “Atchayapathra” Perenial Vessel) to Aaputhiran?
(a) சிந்தா தேவி / Sindha Devi
(b) மணிமேகலா தெய்வம் / Manimekala Deivam (God)
(c) கண்ணகி / Kannaki
(d) மாதவி / Madhavi
48. கீழ்க்காண்பனவற்றில் நம்மாழ்வார் பாடாத நூல்
Find below the text not written (Sang) by Namazhvaar?
(a) திருவிருத்தம் / Thiruvirutham
(b) நான்முகன் திருவந்தாதி / Naanmugan Thiruvanthathi
(c) பெரிய திருவந்தாதி / Periya Thiruvanthathi
(d) திருவாய்மொழி / Thiruvaimozhi
49. ரோமானிய தொழிற்சாலையை மார்டிமர் வீலர் கண்டுபிடித்த இடம்
Sir Martimer Wheeler discovered a Roman factory at
(a) ஆதிச்சநல்லூர் / Adichanallaur
(b) அரிக்காமேடு / Arikkamedu
(c) களியூர் / Kaliyur
(d) காஞ்சி / Kanchi
50. திராவிட மொழிகளுள் பழமையானது எது?
The oldest Dravidian language
(a) கன்னடம் / Kannad
(b) மலையாளம் / Malayalam
(c) தமிழ் / Tamil
(d) தெலுங்கு / Telugu
51. மனித மேம்பாட்டுக் குறியீடு இதை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது
Human Development Index is based on
(a) வாழ்நாடு / Life expectancy
(b) குழந்தை இறப்பு / Infant mortality
(c) இறப்பு வீதம் / Death rate
(d) பிறப்பு வீதம் / Birth rate
52. பின்வருவனவற்றுள் தமிழக அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் செயல்பாடு(கள்) எது?
அ. அழகு சாதனப் பொருட்கள் உற்பத்திக்கு உரிமம் அளித்தல்
ஆ. அலோபதி மருந்துகள் உற்பத்திக்கு உரிமம் அளித்தல்
இ. இரத்த சேமிப்பு மையத்திற்கு ஒப்புதல் அளித்தல்
ஈ. ஆய்வகங்களுக்கு ஒப்புதல் மற்றம் உரிமம் அளித்தல்
Which among the following is the function(s) of Food safety and drug administration department of Government of Tamil Nadu?
i. Licenses for Manufacture of cosmetics
ii. Licenses for Manufacture of Allopathic Drugs
iii. Approval of Blood Storage Centre
iv. Licenses for Approval of Laboratory
(a) அ, ஆ, இ மற்றும் ஈ / i, ii, iii and iv
(b) ஆ, இ மற்றும் ஈ மட்டும் / ii, iii and iv only
(c) ஆ மட்டும் / ii only
(d) ஆ மற்றும் இ மட்டும் / ii and iii only
53. பின்வரும் கூற்றை ஆராய்க:
அ. பேட்டி பச்சோ பேட்டி பதோ திட்டம் கடலூரில் துவங்கப்பட்டது
ஆ. மாநிலத்திலேயே குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ளதால் தர்மபுரியில் பேட்டி பச்சோ பேட்டி பதோ திட்டம் துவங்கப்பட்டது.
இ. 2011-ல் தமிழ்நாட்டில் குழந்தை பாலின விகிதம் 943/1000 மக்கள் தொகை கணக்கெடுப்பில் என்பதாகும்.
ஈ. 2011-ல் குழந்தை பாலின விகிதம் தர்மபுரியில் 647/1000 ஆக இருக்கிறது
Consider the following statement:
i. Beti Bachao Beti Padhao Scheme was launched in Cuddalore
ii. Beti Bachao Beti Padhao Scheme was launched in Dharmapuri because child sex ration is the lowest in the State.
iii. Child sexc ration for Tamil Nadu is 943/1000 in 2011 census
iv. Child sex ratio for Dharmapuri is 647/1000 in 2011
Among the following statements, which are correct?
(a) அ மற்றும் இ சரி / i and iii are correct
(b) ஆ மற்றும் ஈ சரி / ii and iv are correct
(c) அ, ஆ மற்றும் இ சரி / i, ii, iii are correct
(d) ஈ மட்டும் / iv alone are correct
54. பயிர் உற்பத்தியில் எந்த பயிரைத்தவிர தமிழகம் முன்னணியில் உள்ளது?
TN tops in the production of the following crops, except
(a) வாழைப்பழம் / Banana
(b) தேங்காய் / Coconut
(b) தோட்டப்பயிர்கள் / Plantation Crops
(d) ஏலக்காய் / Cardamom
55. வாட்டின் கணக்கீட்டில் 1 hp-யின் மதிப்பு ———— ஆகும்.
The value of 1 hp in terms of watts is
(a) 726 W
(b) 736 W
(c) 746 W
(d) 756 W
56. சூரிய புள்ளிகள் ———- ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும்.
Sun spots occur after every ———– years
(a) 15
(b) 11
(c) 21
(d) 10
57. அறிவியல் மனப்பான்மையின் பரிணாமங்கள் என்பவை
அ. கூர்ந்த உற்றுநோக்கல்
ஆ. அறிவார்ந்த நேர்மை
இ. பாகுபாடற்ற சிந்தனை
ஈ. பிரதிபலிக்கும் சிந்தனை
Aspects of scientific attitude are
i. Critical observation
ii. Intellectual honesty
iii. Impartial Thinking
iv. Reflective Thinking
(a) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(b) இ மற்றும் ஈ மட்டும் / iii and iv only
(c) ஆ, இ மற்றும் ஈ மட்டும் / ii, iii and iv only
(d) அ, ஆ, இ மற்றும் ஈ / i, ii, iii and iv
58. “சர்வதேச உயிரினப் பன்மை” நாள்
The “International day for Biological Diversity” is
(a) மே 22 / May 22
(b) மே 12 / May 12
(c) மே 2 / May 2
(d) ஜீன் 12 / June 12
59. பின்வரும் ஆசிரியர் அவர் புத்தங்களையும் பொருத்தமாக இணையிடுக:
ஆசிரியர் புத்தகம்
a. போப் பிரான்சிஸ் 1. மை லைப் இன் டிசைன்
b. கௌரி காண் 2. வாய்சஸ் ஆப் டிசன்ட்
c. விகாஸ் கண்ணா 3. லெட் அஸ் டிரீம்
d. ரோமிலா தபார் 4. கிச்சன்ஸ் ஆப் கிராட்டிடியூட்
Match the following Authors and books:
Author Book
a. Pope Francis 1. My life in Design
b. Gauri Khan 2. Voices of dissent
c. Vikas Khanna 3. Let us dream
d. Romila Thapar 4. Kitchens of Gratitude
a b c d
a. 3 1 4 2
b. 1 2 4 3
c. 4 1 2 3
d. 2 4 1 3
60. அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாந்தா அவர்களுக்கு எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது?
Dr.Shantha, Chairperson of Adyar Cancer Institute was honoured with Padma Shree Award in the year
(a) 1984
(b) 1986
(c) 1998
(d) 2002
61. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம்
The national aquatic animal of India is
(a) ஆற்று டால்பின் / River dolphin
(b) கடல் குதிரை / Sea horse
(c) கடல் பசு / Dudong
(d) கடல் சிங்கம் / Sea lion
62. நிலையான வகை வேளாண்மை ———- என்று அழைக்கப்படுகிறது.
Settled type of cultivation is also called as
(a) இடைவிடாத விவசாயம் / Sedentary farming
(b) மொட்டைமாடி விவசாயம் / Terrace farming
(c) செறிந்த முறை விவசாயம் / Intensive farming
(d) வணிக விவசாயம் / Commercial faming
63. ஹேமடைட் வகை இரும்பத்தாதுகளில் உள்ள சுத்தமான இருப்பின் சதவீதம் என்ன?
What is the percentage of pure iron content in Hematite?
(a) 60% முதல் 70% / 60% to 70%
(b) 20% முதல் 30% / 20% to 30%
(c) 50% முதல் 60% / 50% to 60%
(d) 40% முதல் 50% / 40% to 50%
64. யுவான் சுவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்
Hiuen-Tsang visited Kanchipuram during the period of
(a) முதலாம் மகேந்திரவர்மன் / Mahendra Varma I
(b) முதலாம் நரசிம்மவர்மன் / Narshimha Varma I
(c) இராஜ சிம்மன் I / Rajashimha I
(d) இரண்டாம் மகேந்திரவர்மன் / Mahendra Varma II
65. சிவாஜி சபையின் “அஷ்டப்பிரதானில்” வெளியுறவு அமைச்சராக செயல்பட்டவர் யார்?
The member of Shivaji’s Astha Pradhan who looked after foreign affairs was
(a) சுமந்த் / Sumant
(b) பீஷ்வா / Peshwa
(c) மந்திரி / Mantri
(d) பண்டிட் ராவ் / Pandit Rao
66. கீழ்கண்ட கூற்றுகளில் கிருஷ்ண தேவராயருக்கும் போர்த்துகீசியருக்கும் உள்ள உறவுகளை குறித்த கூற்றுகளில் சரியான கூற்று எது?
அ. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் சமகாலத்தவர் ஆவார்
ஆ. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு லுயிஸ் என்ற பாதிரியாரை தூதுவராக அனுப்பினர்
இ. போர்த்துகீசிய வணிகர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜயநகரத்தில் தங்கி இருந்தனர்
ஈ. போர்த்துகீசியர்கள் விஜயநகர அரசுக்கு படை உதவி செய்துள்ளார்
Which one of the statement is correct regarding Krishna Devarayar and Portuguese relationship
I. Albuquerque was the contemporary of Krishna Devarayar
II. Albuquerque sent Louis to the court of Krishna Devaraya
III. Many Portuguese traders settled in Vijayanagar city during the period of Krishna Devaraya
IV. Portuguese sometimes granted contributory assistance to the Vijaynagar empire.
(a) அ மட்டும் / I only
(b) ஆ மட்டும் / II only
(c) இ மட்டும் / III only
(d) அ, ஆ, இ, ஈ / I, II, III, IV
67. கீழே உள்ளவற்றை பொருத்துக:
a. ரிக் வேதம் 1. யாகம் செய்முறை
b. யஜீர் வேதம் 2. பாடல்கள்
c. சாம வேதம் 3. மாந்த்ரீகம்
d. அதர்வ வேதம் 4. கீர்த்தனைகள் மற்றும் மெல்லிசைகள்
Match the following:
a. Rig Veda 1. Sacrificial formulae
b. Yajur Veda 2. Hymns
c. Sama Veda 3. Spells and Chrms
d. Atharva Ved 4. Chants and Melodies
a b c d
a. 1 2 3 4
b. 2 1 4 3
c. 3 4 2 1
d. 4 3 1 2
68. எந்த விதியின் கீழ், பாராளுமன்ற மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது?
Under which Article, the parliament has power to give financial assistance to the states?
(a) விதி 235 / Article 235
(b) விதி 245 / Article 245
(c) விதி 275 / Article 275
(d) விதி 265 / Article 265
69. இந்திய அளவில் கீழ்கண்டவர்களில் மாநகராட்சியின் முதல் குடிமகன் என்பவர் யார்?
Who among the following is the first citizen of a city in India?
(a) மாநகராட்சி மன்ற தலைவர் / Mayor
(b) தலைவர் / Chairman
(c) ஊர்த்தலைவர் / Sheriff
(d) சட்டமன்ற உறுப்பினர் / MLA
70. இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் கீழ் ஒருவர் இந்தியக் குடிமகனாக வேண்டுமென்றால்
அ. இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்
ஆ. இந்திய வம்சாவளியாக இருக்க வேண்டும்
இ. இந்தியரை மணந்திருக்க வேண்டும்
ஈ. குடியுரிமைக்காகப் பதிவு செய்திருக்க வேண்டும்
Under the Indian Citizenship Act 1955, one can acquire Citizenship by
i. Birth
ii. Descent
iii. Marriage
iv. Registration
(a) அ மட்டும் / i only
(b) ஆ மட்டும் / ii only
(c) அ, ஆ மற்றும் இ / i, ii and iii
(d) அ, ஆ மற்றும் ஈ / i, ii and iv
71. எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பின் முகப்புரை திருத்தம் செய்யப்பட்டது?
In which year the preamble of the Indian constitution was amended?
(a) 1956
(b) 1966
(c) 1976
(d) 1980
72. பணத்தின் மதிப்பைக் குறைத்தல் விளக்கம்
Demonetization means
(a) பொருளாதாரத்தில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவது / It involves introducing a new currency in the economy
(b) மற்ற நாணயங்களுடன் தொடர்புடைய நாணயத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பை குறைப்பது / It involves reducing the official value of a currency in relation to other currencies.
(c) ஒரு நாணய சட்டமுறை பேறு, அதன் நிலையை அகற்றுவதை உள்ளடக்கியது. / It involves stripping a currency units of its status as legal tender
(d) மற்ற நாணயங்களுடன் தொடர்புடைய நாணயத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பை அதிகரிப்பதை உள்ளடக்கியது. / It involves increasing the official value of a currency in relation to other currencies
73. கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எது MGNREGS-யின் சாதனை அல்ல?
Which of the following is not the main achievement of MGNREGS?
(a) வேலை வாய்ப்பினை அதிகப்படுத்துதல் / Increasing employment opportunities
(b) உள்ளாக்க நிதியம் / Financial inclusion
(c) குறைந்தபட்ச கூலியை அதிகப்படுத்துதல் / Enhancing wage earning and impact on minium wages
(d) நடைமுறைபடுத்துதலில் உள்ள ஒழுங்கற்ற தன்மை / Irregularities in implementation
74. பின்வரும் சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றிய உண்மையான கூற்றை குறிப்பிடு
அ. உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு வரியல்லா இறக்குமதி
ஆ. முதல் 5 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி வருமானத்தில் 100 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
State the following true statement about Special Economic Zone (SEZ)
I. There is duty free import of raw materials for production.
II. 100% IT exemption on export income is given for first 5 years in SEZ units
(a) அ மட்டும் / I only
(b) ஆ மட்டும் / II only
(c) அ மற்றும் ஆ மட்டும் / I and II only
(d) இவற்றில் எதுவும் இல்லை / None of the above
75. ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
Repo rate means
(a) வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் / Rate at which the commercial Banks are willing to lend to RBI
(b) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் / Rate at which the RBI is willing to lend to commercial banks
(c) அந்நிய செலாவணி மாற்று விகிதம் / Exchange rate of the foreign bank
(d) பொருளாதார வளர்ச்சி விகிதம் / Growth rate of the economy