Tnpsc Model Question Paper 29 – General Studies in Tamil & English
1. ——– மாவட்டம், அதிக மனித வள மேம்பாட்டு குறியீட்டில் இடம் பெறவில்லை
———- district is not with high human development Index
(a) கன்னியாகுமரி / Kanyakumari
(b) திருநெல்வேலி / Tirunelveli
(c) தூத்துக்குடி / Thoothukudi
(d) மதுரை / Madurai
2. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
1. GSDP – அரசு சிறப்பு மாவட்டத்திட்டம்
2. GSVA – மொத்த மாநில மதிப்புக் கூட்டப்படுதல்
3. RKVY – ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா
4. PMKSY – பிரதம மந்திரி கிரிஷி சுரக்ஷா யோஜனா
Which of the following are correctly paired?
1. GSDP – Government Special District Programme
2. GSVA – Gross State Value Added
3. RKVY – Rashtriya Krishi Vikas Yojana
4. PMKSY – Prime Minister Kirshi Suraksha Yojana
(a) 1 மற்றும் 3 சரியானவை / 1 and 3 are correct
(b) 1 மற்றும் 2 சரியானவை / 1 and 2 are correct
(c) 2 மற்றும் 3 சரியானவை / 2 and 3 are correct
(d) 3 மற்றும் 4 சரியானவை / 3 and 4 correct
3. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அடிப்படை ——— மாதிரி
The second five year plan was based on ——— model
(a) ஹெராட்-டோமர் மாதிரி / Harrod-Domar model
(b) மஹலநோபிஸ் மாதிரி / Mahalanobis model
(c) சும்பீட்டர் மாதிரி / Schumpeter model
(d) நர்க்ஸ் மாதிரி / Nurkse model
4. 2011 மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மிகக்குறைந்த கல்வியறிவு விகிதம் ——— மாநிலத்தில் இருந்தது
According to 2011 census, in India the lowest literacy rate was in the state of
(a) ஜார்கண்ட் / Jharkhand
(b) பீகார் / Bihar
(c) அருணாசலப்பிரதேசம் / Arunachal Pradesh
(d) தமிழ்நாடு / Tamil Nadu
5. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தின் தலைவர்
The president of the council of scientific and industrial research is
(a) உள்துறை அமைச்சர் / Home minister
(b) தொழில்துறை அமைச்சர் / Minister of Industry
(c) பிரதம மந்திரி / Prime Minister
(d) நிதி அமைச்சர் / Finance Minister
6. சரியான விடையினைத் தேர்ந்தெடுக்கவும், அரசாங்கத்தின் வருவாயின் ஆதாரங்கள்
1. வரி வருவாய்
2. வரியில்லா வருவாய்
3. பொதுத்துறை நிறுவனங்களின் உபரி
Select the correct answer, the sources of revenue of the government are:
i. Tax revenue
ii. Non Tax revenue
iii. Surplus from public undertaking
(a) 1 மட்டும் / i only
(b) 2 மட்டும் / ii only
(c) 1 மற்றும் 2 / i and ii
(d) 1, 2 மற்றும் 3 / i, ii and iii
7. நிதி ஆயோக்கின் (NITI Aayog) தலைவர்
The chairman of NITI aayog is
(a) இந்தியக் குடியரசுத் தலைவர் / President of India
(b) இந்திய பிரதமர் / Prime Minister of India
(c) இந்திய நிதி அமைச்சர் / Finance Minister of India
(d) இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் / Vice President of India
8. “தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம்” என்னும் நூலை மகாத்மா காந்தி எப்பொழுது வெளியிட்டார்?
‘Sathyagraha in South Africa’ was published by Mahatma Gandhi in the year
(a) 1928
(b) 1927
(c) 1926
(d) 1930
9. ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்திஜி எந்த பட்டத்தை திருப்பி அளித்தார்?
Which award did Gandhi return during the Non-Co-Operation Movement?
(a) நைட்குட் / Knighthood
(b) ராய் பகதூர் / Raj Bahadur
(c) கெய்சர்-இ-ஹிந்த் / Kaiser-e-Hind
(d) ஹிந்த் கெய்சர் / Hind Kesari
10. தமிழ்நாட்டில் விற்பனை வரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Sales Tax was introduced in Tamil Nadu by
(a) இராஜாஜி / Rajaji
(b) சி.என்.அண்ணாதுரை / C.N.Annadurai
(c) காமராசர் / Kamarajar
(d) பக்தவச்சலம் / Bhaktavachalam
11. அம்பேத்காரால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி
The Political party started by Ambedkar was
(a) இந்தியக் குடியரசுக் கட்சி / Republican Party of India
(b) கம்யூனிஸ்ட் கட்சி / Communist Party
(c) கதார் கட்சி / Ghadar Party
(d) அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் / All India Forward Bloc
12. இந்திய தேசிய காங்கிரஸின் எந்த அமர்வில் தேசியப் பாடலான “வந்தே மாதரம்” முதன் முதலில் பாடப்பட்டது?
In which session of the Indian National congress was the National song “Vante Mataram” sung for the first time?
(a) மும்பை-1896 / Mumbai-1896
(b) வாரணாசி-1896 / Varanasi-1896
(c) லாகூர்-1896 / Lahore-1896
(d) கல்கத்தா-1896 / Kolkatta-1896
13. தன்னாட்சித் தத்துவமான “இந்தியா இந்தியர்களுக்கே” என்னும் கூற்றை முதலில் வெளியிட்டவர்———
Who was the first to give the call for “Swaraj” as “India for Indians”?
(a) சுவாமி விவேகானந்தர் / Swami Vivekanand
(b) சுவாமி தயானந்த சரஸ்வதி / Swami Dayanand Saraswathi
(c) மகாத்மா காந்தி / Mahatma Gandhi
(d) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Nauroji
14. காமராசரின் அரசியல் குரு —-
The Policical Guru of Kamarajar was
(a) நேரு / Nehru
(b) காந்திஜி / Gandhiji
(c) சத்தியமூர்த்தி / Sathyamoorthy
(d) அண்ணாதுரை / Annadurai
15. கோடிட்ட இடத்தை நிரப்புக:
சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த ——-
Fill in the blanks
Seena misiram yavanaragam – innum
Desam Palavum pugazhveesi – Kalai
Gnanam padaithozhil vanibamum – miga
Nandru Valartha ———
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) தேசியத் திருநாடு / Desiya Thirunadu
(c) நாவலம் நன்நாடு / Navalam Nannadu
(d) தாய்நாடு / Thainadu
16. “செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவியரசு”
– இந்தப் பாடலோடு தொடர்புடைய இருவர் யார்?
‘Sethamizh Thenee, Sindhukku Thandhai
Kuvikkum Kavidhai Kuyil! Innattinai
Kavizhkkum Pagaiyai Kavizhkkum Kaviyarsu’
Who are the two poets associated with the lines above?
(a) பாரதியார், அப்துல் ரகுமான் / Bharathiyaar, Abdul Raguman
(b) கலைஞர் கருணாநிதி, வைரமுத்து / Kalaignar Karunanidhi, Vairamuthu
(c) கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் / Kannadasan, Pattukkottai Kalyana Sundaram
(d) பாரதியார், பாரதிதாசன் / Bharathiyaar, Baradhidasan
17. இராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
Who is called as “Sundharan” in Ramayanam?
(a) இராமன் / Raman
(b) இலக்குவன் / Lakshman
(c) விபீடணன் / Vibhishnan
(d) அனுமன் / Hanuman
18.”தமிழ் நாட்டின் ரூசோ” என்று அழைக்கப்படுபவர்
Who is called as Rousseau of Tamil Nadu?
(a) ராஜாஜி / Rajaji
(b) சத்தியமூர்த்தி / Sathyamorthy
(c) சி.என்.அண்ணாதுரை / C.N.Annaduari
(d) தந்தை பெரியார் / Thanthai Periyar
19. சி.என்.அண்ணாதுரை அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்தவர் யார்?
Who was the Minister of Agriculture under the Ministry of C.N.Annadurai?
(a) நெடுஞ்செழியன் / Nedunchezhian
(b) மாதவன் / Madavan
(c) சாதிக் பாட்ஷா / Sadiq Patsha
(d) கோவிந்தசாமி / Govindasamy
20. 1929 பிப்ரவரி 17ல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
Who presided over the first self respect movement conference at Chengalpat by February 17, 1929?
(a) டாக்டர்.பி.சுப்பராயன் / Dr.B.Subbarayan
(b) ஈ.வே.ராமசாமி / E.V.Ramasamy
(c) பி.டி.ராஜன் / P.T.Rajan
(d) பனகல் ராஜா / Pangal Raja
21. நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காலம்
In Madras Presidency, justice party was in the rule for ——– year
(a) 10 ஆண்டுகள் / 10 years
(b) 13 ஆண்டுகள் / 13 years
(c) 15 ஆண்டுகள் / 15 years
(d) 16 ஆண்டுகள் / 16 years
22. கோடிட்ட இடத்தை நிரப்புக:
நெருதல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் ——– உடைத்துஇவ் வுலகு
Fill in the blanks: Nerunal Ulanoruvan Indrillai Ennum ———— Utaiththuiv Vulaku
(a) பெருமை / Perumai-(Pride)
(b) பொருநர் / Porunar-(Might)
(c) கடுமை / Kadumai-(Relentless)
(d) சிறுமை / Sirumai-(Pettiness)
23. “செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”
இக்குறள் கூறும் இடைவிடாத கடமை எது?
“The Guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is he!”
What is the “Relentless duty” related in this Thirukkural?
(a) பொருளீட்டுதல் / Making money
(b) தொண்டு செய்தல் / Doing charity
(c) விருந்தோம்பல் / Hospitality
(d) குடும்பத்தைக் காத்தல் / Protecting the family
24. அறிவுடையவரின் நட்பு பிறைமதி போல நிறைந்து வருவது எனக்கூறும் வள்ளுவர், யாருடைய நட்பு முழுமதி தேய்வதைப் போன்றது எனக் கூறுகிறார்?
Friendship with learned people is compared to the waxing moon by Valluvar, then friendship with whom is like a waning moon to him?
(a) அறிவுரையார் / Learned People (Arivudaiyaar)
(b) அறிவில்லாதவர் / Ignorant people (Arivillathoor)
(c) அன்புடையவர் / Loved ones (Anbudaiyor)
(d) அன்பிலாதவர் / Unloving (Anbilathor)
25.”எல்லாப் பொருளும் இதன்பாலுல; இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்”
என்று திருக்குறளைச் சிறப்பிப்பவர் யார்?
Who eulogises Thirukkural as follows:
“Ellaa porulum ithanpallula ithanpal
Illatha epporulum illaiyaal”?
(a) ஒளவையார் / Avvaiyar
(b) எறிச்சலூர் மலாடனார் / Erichaloor Maladanaar
(c) மதுரைத் தமிழ்நாகனார் / Madurai Tamil Naganaar
(d) மாங்குடி மருதனார் / Mangudi Marudhanaar
26. கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை வாய்மொழி இலக்கியத்தின் பெயர்
Didactic old mocking proverbs in Tamil are called ——— in oral literature
(a) விடுகதை / Vidukadhai
(b) சொலவடை / Salavadai
(c) பிசி / Pisi (Sublime)
(d) பழமொழி / Proverbs (Pazhamozhi)
27. “திருப்பனந்தாள் காசி மடத்தை நிறுவியவர் யார்?
Who is the founder of Thirupanandhal Kasi Mutt?
(a) காளமேகப் புலவர் / Kalamega Pulavar
(b) ஞான சம்பந்தர் / Gnana Sambandhar
(c) அருணகிரிநாதர் / Arunagirinadhar
(d) குமரகுருபரர் / Kumarakurubarar
28. பத்துப்பாட்டில் செம்பாதி எவ்வகை நூல்கள்?
Among “Pathupattu” what are the “Sempaathi” texts called as?
(a) அக நூல்கள் / Aga Noolgal
(b) புற நூல்கள் / Pura Noolgal
(c) ஆற்றுப்படை நூல்கள் / Aatrupadai Noolgal
(d) அகப்புற நூல்கள் / Agapura Noolgal
29. “இந்திய மருந்து” எனக் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் கூறிய பொருள்
What is meant by the Greek Physician Hippocrates as “Indian Medicine”?
(a) மிளகு / Pepper
(b) மஞ்சள் / Turmeric
(c) வேம்பு / Neem
(d) பட்டை / Cinnamon
30. 2020-21 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது
As per 2020-21 Statistics, the largest contribution to GSDP in Tamil Nadu comes from
(a) வேளாண்மை / Agriculture
(b) தொழில்துறை / Industry
(c) சுரங்கம் / Mining
(d) பணிகள் / Services
31. ASHA என்பது
“ASHA” stands for
(a) அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயல்பாட்டாளர் /Accredited Social Health Activist
(b) அங்கீகரிக்கப்பட்ட சுய உதவி நடவடிக்கைகள் / Accredited Self Help Activities
(c) ஆயுஷ் சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் / Ayush Sanitation and Hygiene Activities
(d) சமூக சுகாதார நடவடிக்கைகளுக்கான அமைப்பு / Association for Social Health Activities
32. கீழ்க்கண்டவற்றில் பெண்களின் சமூக நீதிக்காக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அதன் அரசியலமைப்புப் பிரிவகளோடுப் பொருத்துக:
அரசிலமைப்பு உட்பிரிவு உரிமைகள்
அ. உட்பிரிவு 14 1. வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு
ஆ. உட்பிரிவு 15 2. பேச்சுரிமை
இ. உட்பிரிவு 16 3. பாகுபாடின்மை
ஈ. உட்பிரிவு 19 4. சம உரிமை
Match the constitutional article with the respective rights of women for their social justice:
Article Rights
a. Article 14 1. Equal opportunity of employment
b. Article 15 2. Freedom of speech
c. Article 16 3. Non-discrimination
d. Article 19 4. Equality
a b c d
a. 3 2 1 4
b. 4 3 1 2
c. 2 3 4 1
d. 4 3 2 1
33. மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஐந்து முட்டைகள்/வாழைப்பழங்கள் என அறிமுகப்படுத்திய முதலமைசரைக் கண்டறிக:
Find the Chief Minister who introduced five eggs/bannanas per week with nutritious noon meal scheme
(a) காமராஜ் / Kamaraj
(b) ராஜாஜி / Rajaji
(c) அண்ணா / Anna
(d) கருணாநிதி / Karunanithi
34. தமிழ்நாடு எதில் வளமானது?
Tamil Nadu is rich in
(a) வன வளம் / Forest resources
(b) மனித வளம் / Human Resources
(c) கனிம வளம் / Mineral resources
(d) தண்ணீர் வளம் / Water Resources
35. கூற்று: இந்தியாவிலேயே அதிக காற்றாலை ஆற்றல் திறன் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
காரணம்: இம்மாநிலம் மிக உயர்ந்த தரமான கடலோரக் காற்றாலை ஆற்றலைக் கொண்டுள்ளது.
Assertion (A): Tamil Nadu has the highest installed wind energy capacity in India.
Reason (R) : The state has very high quality of off-shore wind energy
(a) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) மேலும் (A)ன் விளக்கம் / Both (A) and (R) are true and (R) explains (A)
(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A)ஐ விளக்கவில்லை / Both (A) and (R) are true but (R) does not explain (A)
(c) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(d) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false but (R) is true
36. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
நிகழ்வுகள் வருடம்
அ. தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் 1. 1992
ஆ. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் 2. 2019
இ. தேசிய மருத்துவக் குழுச்சட்டம் 3. 1939
ஈ. தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 4. 2005
Match the following:
Programmes Year
a. National Rural Health Mission 1. 1992
b. National AIDS control programme 2. 2019
c. The National Medical Commission Act 3. 1939
d. Tamilnadu Public Health Act 4. 2005
a b c d
a. 1 3 4 2
b. 1 2 3 4
c. 2 1 3 4
d. 4 1 2 3
37. சத்ய ஷோடக் சமாஜ் – அமைப்பின் நிறுவனர் யார்?
Who is the founder of Satya Shodak Samaj?
(a) காந்தி / Gandhi
(b) அம்பேத்கர் / Ambedkar
(c) ஜோதிராவ் பூலே / Jyotirao Phule
(d) ராஜா ராம் மோகன் / Raja Ram Mohan
38. ஆதி திராவிட மகாஜன சபை என்று பின்நாட்களில் அழைக்கப்பட்ட பறையர் மஹாஜன சபையை தோற்றுவித்து வழிநடத்தியவர் யார்?
Who established and led the Paraiyar Mahajan Sabha which later became Adi-Dravida Mahajana Sabha
(a) அயோத்தி தாஸர் / Ayothidasar
(b) ரெட்டமலை சீனிவாசன் / Rettamalai Srinivasan
(c) ராஜா / M.C.Rajah
(d) மேற்கணடவற்றுள் எதுவுமில்லை / None of the above
39. மனித வள மேம்பாட்டுப் புள்ளியியல், அமர்த்யாசென் குறிப்பிட்ட “திறன்கள் அணுகுமுறை” யானது ———-ஐ புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
Human Development Index, embodies Amartyasen’s “Capabilities Approach” to understand
(a) கல்வி / Education
(b) மனித நல வாழ்வு / Human well being
(c) மகிழ்ச்சி / Happiness
(d) தேசிய வருமானம் / GDP
40. அறிவியல் முறையைப் படிக்கும் சரியான வரிசையை தேர்வு செய்யவும்
1. அனுபவ சோதனை
2. கருதுகோள்
3. கவனிப்பு
4. முடிவுரை
Choose the correct order of studying scientific method
1. Empirical Test
2. Hypothesis
3. Observatin
4. Conclusion
(a) 3,2,1,4
(b) 2,3,1,4
(c) 1,2,3,4
(d) 3,1,2,4
41. “அறிவியல் தாக்கம்” என்ற சொல்லினைப் பயன்படுத்தியவர்
The term “Scientific temper” was used by
(a) மகாத்மா காந்தி “சுயசரிதை” / Mahatma Gandhi is “autobiography”
(b) நேரு “கண்டறிந்த இந்தியா” / Nehru is “Discovery of Indi”
(c) கௌடில்யர் “அர்த்தசாஸ்திரம்” / Kautilya in “Arthashastra”
(d) பிபின் சந்திரர் “நவீன இந்திய வரலாறு” / Bipan Chandra in “History of Modern India”
42. அறிவியலைக் கற்றுக் கொள்வதன் மூலம் தேர்ச்சிப் பெறக்கூடிய திறன்கள்
Skills that are developed by learning science
(a) தொடர்புத் திறன் மற்றும் படைப்பாற்றல் / communication skill and creativeness
(b) படைப்பாற்றல் மற்றும் ஆர்வம் / Creativeness and curiosity
(c) எழுதும் திறன் மற்றும் திறந்த மனப்பான்மை / Writing skill and open mindedness
(d) திறந்த மனப்பான்மை மற்றும் தொடர்புத் திறன் / Open mindedness and communication skill
43. புரோகேரியோட்டுகள் ——- இராஜ்ஜியத்தில் உள்ளடக்கியுள்ளது.
The prokaryotes are included in the kingdom
(a) பூஞ்சைகள் / Fungi
(b) மோனிரா / Monera
(c) அனிமேலியா / Animalia
(d) பிளாண்டே / Plantae
44. பின்வருவனவற்றில் எந்த ஒன்று கடல் சூழல் அமைப்பில் இல்லாதது?
Which one of the following is not marine ecosystem?
(a) கழிமுகம் / Estuary
(b) பவள பாறைகள் / Coral Reefs
(c) கடல் / Sea
(d) ஏரி / Lake
45 கீழ்க்காணும் நோய்களில் எது பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படும் நோய் அல்ல?
Which one of the following is not a bacterial disease?
(a) மேகவெட்டை நோய் / Gonorrhoea
(b) டியூபர்கலோஸிஸ் (காசநோய்) / Tuberculosis
(c) வயிற்றுப்போக்கு / Dysentery
(d) பொன்னுக்கு வீங்கி / Mumps
46. பகுத்தறிவுடன் சிந்தித்தல் என்பது
Thinking with reasoning is
(a) புதிய உத்திகளை உருவாக்குதல் / Creating new ideas
(b) கடந்த அனுபவத்தைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல் / Linking past experience with cause
(c) திறந்த மனப்பான்மை உருவாக்குதல் / Developing open-mindedness
(d) எதிர்காலத்தை அனுமானம் செய்தல் / Predicting future
47. தொடர்பற்ற எண் இணையைக் கண்டறியவும்
Find the odd number pair
(a) 23:29
(b) 19: 25
(c) 13:17
(d) 3:5
48. பின்வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக:
1. சுனில் அரோரா
2. ராஜீவ் குமார்
3. நவீன் சாவ்லா
4. சுஷில் சந்திரா
Arrange the following Chief Election Commissioners of India in Chronological order
1. Sunil Arora
2. Rajiv Kumar
3. Navin Chawla
4. Sushil Chandra
(a) 3,1,4,2
(b) 1,2,3,4
(c) 4,3,2,1
(d) 1,2,4,3
49. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்குள் மக்களவையில் அதிகமான இடங்களைப் பெற்ற மாநிலம்
Among the states listed below, the one that has the largest number of Lok Sabha seats is
(a) மேற்கு வங்காளம் / West Bengal
(b) குஜராத் / Gujarat
(c) அஸ்ஸாம் / Assam
(d) இராஜஸ்தான் / Rajasthan
50. 2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ———-க்காக வழங்கப்பட்டது.
The Nobel prize in chemistry for the year 2009 was awarded for
(a) நோதிகளின் இயக்கப்பட்ட பரிணாமத்திற்கு / “The directed evolutions of enzymes”
(b) ரைபோசோமின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு பற்றிய ஆய்வுகள் / “The studies of the structure and function of ribosome”
(c) டிஎன்ஏ வை பழுதுபார்க்கும் இயந்திரவியல் ஆய்வுகள் / “Mechanistic studies of DNA repair”
(d) ஜி-புரதம்-இணைந்த ஏற்பிகளின் ஆய்வுகள் / “Studies of G-protein-coupled receptors”
51. இந்தியாவின் எந்த மாநிலத்தில், பூமியைச் சுற்றி வரும் 10 செ.மீ அளவுள்ள பொருட்களைக் கண்காணிக்க முதல் வணிக விண்வெளி சூழ்நிலை விழப்புணர்வு கண்காணிப்பகம் அமைக்கப்பட உள்ளது?
In which state, India’s first commercial space situational awareness observatory, to track objects as small as 10 cm in size orbiting the earth, will be set up in
(a) அசாம் / Assam
(b) உத்தரகாண்ட் / Uttarkhand
(c) மும்பை / Mumbai
(d) சென்னை / Chennai
52. மேகாலயா தனிமாநிலமாக உருவான ஆண்டு
Meghalaya state came into existence in the year
(a) 1968
(b) 1970
(c) 1972
(d) 1973
53. ———– மூலம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் ஊதியம உறுதி செய்யப்படுகிறது.
—– Guarantees work and income for the rural work force
(a) MGNREGA
(b) SBM
(c) CSC
(d) SSA
54. UNFCCC-க்கான கட்சிகளின் மாநாட்டின் (cop 27) 27வது அமர்வு எகிப்தில் உள்ள ஷாம் எல் சேக் இல் 6-18 நவம்பர் 2022 வரை எதன் காரணமாக நடத்தப்படுகிறது?
The 27th session of the conference of the parties (cop 27) to the UNFCCC will take place in Sharm el-sheikh, Egypt from 6-18 November 2022, in connection with
(a) காலநிலைமாற்றம் / Climate change
(b) கார்பன் வரி / Carbon Tax
(c) கார்பன் கால் அச்சு / Carbon foot print
(d) அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க / Conservation of Threatened species
55. தென்மேற்கு ரயிலவேயின் தலைமையகம் எங்குள்ளது?
The head quarters of the south western railway is located in
(a) ஹீப்ளி / Hubli
(b) அலகாபாத் / Allahabad
(c) புவனேஸ்வர் / Bhubaneshwar
(d) ஜபல்பூர் / Jabalpur
56. கீழே கொடுக்கப்பட்டுள்ளவனவற்றுள் தரமிக்க நிலக்கரி என அறியப்படுவது எது?
Which among the following is known for the high quality of lignite?
(a) புகைமிகு நிலக்கரி / Bituminous
(b) பழுப்பு நிலக்கரி / Lignite
(c) அனல் மிகு நிலக்கரி / Anthracite
(d) பீட் / Beat
57. எந்த வகை இரும்பு தாது, இரும்பு ஆக்சைடு என அழைக்கப்படுகிறது?
Which type of Iron ore is called oxide of iron?
(a) ஹேமடைட் / Haematite
(b) மேக்னடைட் / Magnetite
(c) லிமனைட் / Limonite
(d) சிடரைட் / Siderite
58.இந்தியாவின் முதல் வானிலை இயக்குநர் ஜெனரல்
The first Meterological Director General of India was
(a) வி.பி. சுப்ரமணியம் / V.P.Subramanyam
(b) ஆர்.எல்.சிங் / R.L.Singh
(c) கே.எல்.ராவ் / K.L.Rao
(d) ஹச்.ஈ.பிளாண்டு ஃபோர்டு / H.E.Bland Ford
59. ஜெட் காற்றோட்டம் இந்திய பருவ காற்றில் எந்த பருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
In which season Jet Stream Influences in the Indian Monsoon
(a) தென்-மேற்கு பருவகாற்று / South-West Monsoon
(b) கோடை மற்றும் குளிர்காலம் / Summer and Winter Season
(c) பின்னடைவு பருவகாலம் / Retreating Monsoon
(d) மழைக்காலம் / Rainy Season
60. குப்த ஆட்சியாளர்களை காலவரிசைப்படி அடுக்குக:
1. சமுத்திர குப்தர்
2. ஸ்ரீ குப்தர்
3. இரண்டாம் குமார குப்தர்
4. ராமா குப்தர்
Arrange the Gupta rulers in chronological order:
1. Samudra Gupta
2. Sri Gupta
3. Kumara Gupta-II
4. Rama Gupta
(a) 2,1,4,3
(b) 2,3,4,1
(c) 4,2,3,1
(d) 4,3,1,2
61. அரசியலமைப்பின் மற்றொரு துணிச்சலான கூறு என்னவென்றால் இது மதச்சார்பற்ற அரசை நிறுவ முயல்கிறது. கீழ்க்காணும் கூற்றுகளில் மதச்சார்பற்ற அரசு பற்றிய கருத்துகளில் பொருத்தமற்றது எது?
Another bold feature of the constitution is that it seeks to establish a secular state which of the following statements does not relate to the idea of a secular state?
(a) மதச்சமத்துவம் வழங்கப்பட்டுள்ளது / Religious equality has been provided
(b) சிறுபான்மையினரின் பண்பாட்டுப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது / Cultural heritage of the minorities has been protected
(c) தீண்டாமை ஒழிக்கப்பட்டது / Untouchablitity has been done away
(d) அதன் சில கருத்துக்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது / Some of its ideas are against the idea sovereignty
62. கீழ்க்குறிப்பிடப்படுபவற்றில் பழைய கற்காலத்தில் வராத இடம் எது?
Which one of the following is not a palaeolithic site?
(a) சேலம் / Salem
(b) மதுரை / Madurai
(c) வல்லம் / Vallam
(d) பல்லாவரம் / Pallavaram
63. கீழே கொடுக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளை அதனுடன் தொடர்புடைய காலத்தோடு பொருத்துக:
1. இரும்பின் கண்டுபிடிப்பு அ. இடைக்கற்காலம்
2. வெண்கலத்தின் கண்டுபிடிப்பு ஆ. புதிய கற்காலம்
3. விவசாயத்தின் துவக்கம் இ. சிந்து சமவெளிப்பண்பாடு
4. தீயின் கண்டுபிடிப்பு ஈ. ஆரியர்கள்
Match the discovery with their corresponding period
a. Discovery of Iron 1. Mesolithic
b. Discovery of Bronze 2. Neolithic
c. Beginning of agriculture 3. Indus civilization
4. Discovery of fire 4. Aryans
a b c d
a. 4 3 2 1
b. 3 2 1 4
c. 2 3 4 1
d. 1 2 3 4
64. இந்திய அரசியலமைப்பின் முகவுரையிலுள்ள “சோசியலிஸ்ட்” என்ற வார்த்தையுடன் தொடர்புடைய அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்
The amendment act related to the word “Socialist” in the preamble of the constitution of India is
(a) 24வது அரசியல் சாசனத் திருத்தச்சட்டம் / 24th Amendment Act
(b) 28வது அரசியல் சாசனத் திருத்தச்சட்டம் / 28th Amendment Act
(c) 42 வது அரசியல் சாசனத் திருத்தச்சட்டம் /42nd Amendment Act
(d) 44 வது அரசியல் சாசனத் திருத்தச்சட்டம் / 44th Amendment Act
65. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள போர்கi ளஅவை நடந்த வருடத்தோடு பொருத்துக:
அ. முதல் பானிபட் போர் 1. 1527
ஆ. காக்ரா போர் 2. 1529
இ. இரண்டாவது பானிபட் போர் 3. 1526
ஈ. கான்வா போர் 4. 1556
Match correctly the Battles with their corresponding year
(a) First Battle of Panipet 1. 1527
(b) Battle of Ghaghra 2. 1529
(c) Second battle of Panipat 3. 1526
(d) Battle of Khanwa 4. 1556
a b c d
a. 1 2 3 4
b. 4 2 1 3
c. 4 1 2 3
d. 3 1 2 4
66. பின்வரும் ஆட்சியாளர்களின் யார் “கவிராஜா” என்றழைக்கப்பட்டார்?
Who among the following grulers was called Kaviraja?
(a) முதலாம் குமாரகுப்தர் / KUmaragupta-I
(b) முதலாம் சந்திரகுப்தர் / Chandragupta-I
(c) சந்திரகுப்த விக்ரமாதித்தியா / Chandragupta Vikramadhitya
(d) சமுத்திரகுப்தர் / Samudragupta
67. சிந்து நாகரிகத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் சரியான காலவரிசை எது?
(1) மொஹஞ்ச தாரோ
(2) சன்ஹீதாரோ
(3) ஹரப்பா
(4) லோத்தால்
Which is the correct chronology of the excavation sites in the Indus civilization?
1. Mohenjo-Daro
2. Chandhudaro
3. Harappa
4. Lothal
(a) 3,1,2,4
(b) 1,3,2,4
(c) 2,1,3,4
(d) 3,4,2,1
68. ஆம்புட்ஸ்மேன் என்னும் அமைப்பை முதலில் உருவாக்கிய நாடு
The institution of ombudsman was first created in
(a) இந்தியா / India
(b) பின்லாந்து / Finland
(c) சுவீடன் / Sweden
(d) நார்வே / Norway
69. கீழ்வருவனவற்றுள் எதுஎவை உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேவையற்றது/தேவையற்றவை?
1. இந்தியக் குடிமகனாக இருத்தல்
2. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல்
3. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக இருத்தல்
Which of the following is not the requirement to be appointed as a judge of the Supreme Court?
1. Should be a citizen of india
2. Should have worked as a judge for 5 years in one or more high courts in succession
3. Should have worked as an advocate for 15 years in one or more high courts in succession
(a) 1 மட்டும் / i only
(b) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / i and ii only
(c) 2 மட்டும் / ii only
(d) 3 மட்டும் / iii only
70. இந்திய அரசமைப்பு விதி 264 முதல் 300 வரை பகுதி ——–ல் அடங்கும்
Articles from 264 to 300A are in part ——– of the Indian Constitution
(a) IX
(b) X
(c) XI
(d) XII
71. கீழே உயர்நீதிமன்றங்கள் மற்றும் அவை நிறுவப்பட்ட ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தவறான இணையை தேர்ந்தெடு:
Given below are the HIgh Courts and their year of establishment. Identify the wrongly matched pair
உயர்நீதிமன்றம் – நிறுவப்பட்ட ஆண்டு / High Court – Year of Establishment
a. மதராஸ் – 1862 / Madras – 1862
b. கர்நாடகா – 1884 / Karnataka – 1884
c. அலஹாபாத் – 1954/ Allahabad – 1954
d. கேரளா – 1958 / Kerala – 1958
72. மாநிலங்களவை பற்றிய பின்வரும் சொற்றொடர்களில் எவை சரியானவை?
1. இது ஒரு நிரந்தரமான அவை
2. ஒவ்வொரு இரண்டாம் ஆண்டின் முடிவிலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர்
3. இவை இந்த அவையின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது
Which of the following statement are correct about the Rajya Sabha?
i. It is a permanent body
ii. At the end of every second year one-third members retired
iii. This shows the unstable nature of the house.
(a) 1 மட்டும் / i only
(b) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / i and ii only
(c) 2 மற்றும் 3 ஆகியன மட்டும் / ii and iii only
(d) 3 மட்டும் / iii only
73. பின்வரும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் சமூகச் சிந்தனையைப் பிரதிபலிப்பது எது?
Which of the following reclects the social ideology of the directive principles of state policy?
(a) கிராமப் பஞ்சாயத்துகளை நிறுவுதல் / Organising village panchayats
(b) குடிசைத் தொழிற்சாலைகளை ஊக்குவித்தல் / Encouraging cottage industries
(c) வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை போதுமான அளவு வழங்குதல் / Providing adequate means of livelihood
(d) நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் / Protection of monuments
74. ஒருவரது உயிரோ, உடல்சார் உரிமையோ சட்டம் விதித்தமைத்துள்ள நெறிமுறைப்படி அன்றி, வேறு எவ்வகையிலும் பறிக்கப்படுதல் ஆகாது”. இங்ஙனம் கூறும் இந்திய அரசமைப்பு விதி எது?
“No person shall be deprived of his life and personal liberty except according to procedure established by law”. Which article of the Indian constitution says like this?
(a) விதி 20 / Article 20
(b) விதி 21 / Article 21
(c) விதி 22 / Article 22
(d) விதி 23 / Article 23
75. கீழ்க்கண்ட எந்த நாட்டு அரசியலமைப்புடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை பெரும் பகுதி ஒத்துள்ளது?
The text of the preamble of Indian constitution resembles which of the following constitutions?
(a) பிரெஞ்சு அரசமைப்பு / Constitution of France
(b) அமெரிக்க அரசமைப்பு / Constitution of USA
(c) ஜெர்மனி அரசமைப்பு / Constitution of Germany
(d) அயர்லாந்து அரசமைப்பு / Constitution of Ireland