Tnpsc Model Question Paper 26 – General Studies in Tamil & English
1. இலையில் காணப்படும் பச்சையம் ———க்குத் தேவைப்படுகின்றது.
Chlorophyll present in the leaf is required for
(a) ஒளிச்சேர்க்கை / Photosynthesis
(b) சார்பசைவு / Tropic movement
(c) நீராவிப்போக்கு / Transpiration
(d) திசை சாரா தூண்டல் அசைவு / Nastic movement
2. கூற்று (A): ஹீமோகுளோபினில் இரும்புச் சத்து உள்ளது.
காரணம் (R): இரும்புச்சத்து குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
Assertion (A) : Haemoglobin contains Iron.
Reason (R): Iron deficiency leads to Anaemia
(a) (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும் / Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)
(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true; but (R) is not the correct explanation of (A)
(c) (A) சரி; ஆனால் (R) தவறு / (A) is true, but (R) is false
(d) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு / (A) and (R) is false
3. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் எடை அசாதாரணமாக அதிகரிக்கும். இதனை ——— என்பார்கள்
The state in which there is an accumulation of excess body fat with an abnormal increase in body weight is called
(a) நீரிழிவு / Diabetes
(b) பாலியூரியா / Polyuria
(c) உடல் பருமன் / Obesity
(d) பாலிடிப்சியா / Polydipsia
4. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு தாவரங்களுக்குள் சென்று நிலைப்படுத்தப்படும் நிகழ்வு —— என அழைக்கப்படுகின்றது.
The atomospheric carbon di oxide enters into the plants and fixed through the process called
(a) ஒளிச்சேர்க்கை / Photosynthesis
(b) நீராவியாதல் / Transpiration
(c) சுவாசித்தல் / Respiration
(d) சிதைத்தல் / Decomposition
5. கீழ்கண்டவற்றுள் சரியான ஒப்பிடுதலை தேர்ந்தெடுக்கவும்:
அ. அமில ஊடகத்தின் பினாப்தலீன் – நிறமற்றது
ஆ. கார ஊடகத்தின் பினாப்பதலீன் – மஞ்சள்
இ. அமில ஊடகத்தின் மெத்தில் ஆரஞ்சு – இளஞ்சிவப்பு/சிவப்பு
ஈ. கார ஊடகத்தின் மெத்தில் ஆரஞ்சு – நிறமற்றது
Choose the right matches among the following:
a. Phenolphthalein in acidic medium – Colourless
b. Phenolphthalein in basic medium – Yellow
c. Methyl orange in acidic medium – Pink/Red
d. Methyl orange in basic medium – Colourless
(a) அ மற்றும் இ சரியானவை / a and c are correct
(b) அ மற்றும் ஆ சரியானவை / a and b are correct
(c) ஆ மற்றும் இ சரியானவை / b and c are correct
(d) இ மற்றும் ஈ சரியானவை / c and d are correct
6. டீசல் எஞ்சினில் உள்ள எரிபொருளின் பற்றவைப்பு தாமதக் கால அளவை அளப்பதற்கு உதவும் அளவு
The measurement which is used to measure the ignition delay of the fuel in diesel engine is
(a) சீட்டேன் எண் / Cetane number
(b) ஆக்டேன் எண் / Octane number
(c) கலோரி மதிப்பு / Calorific value
(d) தன் ஆற்றல் / Specific energy
7. மத்தியில் உள்ள தனிமத்தின் அணு நிறையானது ஏறக்குறைய மற்ற இரு தனிமங்களின் அணுநிறையின் சராசரிக்கு சமமாகும்
The atomic mass of the middle element is nearly the same as average of atomic masses of other two elements.
(a) நவீன ஆவர்த்தன விதி / Modern periodic law
(b) நியூலாந்தின் எண்ம விதி / Newland’s law of octaves
(c) டாபர்னீரின் மும்மை விதி / Dobereiner’s law of triads
(d) மெண்டலீவின் ஆவர்த்தன விதி / Mendeleev’s law of periodicity
8. இயற்பியல் அளவுகளை அதன் அலகுகளுடன் சரியாகப் பொருத்துக:
அ. அழுத்தம் 1 Nm-1
ஆ. பரப்பு 2. Nm-2
இ. பரப்பு இழுவிசை 3. N
ஈ. விசை 4. m2
Match the correctly the physical quantities with their SI units
a. Pressure 1. Nm-1
b. Area 2. Nm-2
c. Surface Tension 3. N
d. Force 4. m2
a b c d
a. 1 3 2 4
b. 3 1 4 2
c. 2 4 1 3
d. 4 2 3 1
9. விண்மீன்களின் குழுக்கள் —— என்று அழைக்கப்படுகின்றன.
Group of Stars is called
(a) சூரிய மண்டலம் / Solar system
(b) நட்சத்திரக் கூட்டங்கள் / Constellation
(c) கோள்கள் / Planets
(d) இவை அனைத்தும் / All the above
10. உயரமான இடங்களில், பொருளின் கொதிநிலை
At higher altitude, the boiling point of a substance will
(a) குறையும் / decrease
(b) அதிகரிக்கும் / increase
(c) குறைந்து, பின் அதிகரிக்கும் / decrease and then increase
(d) அதிகரித்து, பின் குறையும் / increase and then decrease
11. இமயமலை பற்றிக் கூறப்படும் பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
அ. பெரிய இமயமலை இமாத்ரி என்று அழைக்கப்படும்.
ஆ. சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும் போது இப்பகுதி அதிக மழையைப் பெறுகின்றது.
இ. புகழ் பெற்ற கோடை வாழிடங்கள் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளன.
Which of the following statements are true about Himalayas?
i. The greater Himalayas are also called Himadri.
ii. The Greater Himalayas receive more rainfall compared to the lesser Himalayas and the Siwalik
iii. Major hill stations are located in the Himachal Range.
(a) அ மட்டும் / i only
(b) அ மற்றும் இ மட்டும் / i and iii only
(c) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only
(d) ஆ மற்றும் இ மட்டும் / ii and iii only
12. உலகின் மிக நீளமான அணை எது?
is longest dam in the world?
(a) நாகார்ஜீன சாகர் அணை / Nagarjuna Sagar Dam
(b) ஹிராகுட் அணை / Hirakud Dam
(c) பக்ரா-நங்கல் அணை / Bhakra-Nangal Dam
(d) தாமோதர் பள்ளத்தாக்கு அணை / Damodar Valley Dam
13. ஓதக்காடுகள் ——- என்றும் அழைக்கப்படுகின்றன.
Tidal forests are also known as
(a) பருவகாலக்க காடுகள் / Monsoon forests
(b) அல்பைன் காடுகள் / Alpine forests
(c) அலையாத்திக் காடுகள் / Mangrove Forests
(d) மழைக்காடுகள் / Rainy Forests
14. கிழக்கு மத்திய இரயில்வேயின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
The headquarter of East-Central Railway is located in
(a) ஜபல்பூர் / Jabalpur
(b) ஹாசிப்பூர் / Hazipur
(c) ஜெய்ப்பூர் / Jaipur
(d) பிலாஸ்பூர் / Bilaspur
15. உலக மக்கள்தொகை தினம் ஜீலை 11ஆம் நாள் என்பது எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
The celebration of world population day July 11th is started from the year
(a) 1986
(b) 1987
(c) 1988
(d) 1989
16. பின்வருவனவற்றுள் எத்துறை பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் செயல்படுகின்ற மாவட்ட அமைப்பு அல்ல?
Which of the following force is not in service for the management of disasters in the district organization?
(a) அஞ்சல் துறை / Postal Department
(b) வருவாய்த்துறை / Revenue Department
(c) குடிமைப்பணி நிர்வாகம் / Civil Administration
(d) உள்ளுர் காவல்துறை / Local Police
17. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழி வகை செய்யும் அரசியல் அமைப்புப் பிரிவு எது?
Which Article of Indian Constitution provides for an Election Commission?
(a) அரசியல் அமைப்புப் பிரிவு 280 / Article 280
(b) அரசியல் அமைப்புப் பிரிவு 302 / Article 302
(c) அரசியல் அமைப்புப் பிரிவு 316 / Article 316
(d) அரசியல் அமைப்புப் பிரிவு 324 / Article 324
18. குடியுரிமைப் பற்றி தொடர்புள்ள சட்டப்பிரிவுகளாவன
The articles tha are related to citizenship are
(a) சட்டப்பிரிவு 5-11 / Article 5 to 11
(b) சட்டப்பிரிவு 14-18 / Article 14 to 18
(c) சட்டப்பிரிவு 19-22 / Article 19 to22
(d) சட்டப்பிரிவு 25-28 / Article 25 to 28
19. சரியான விடையைத் தேர்வு செய்க:
தொடக்கக்கல்வி கற்றலை அடிப்படை உரிமையாகச் சோக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு எது?
Choose the correct answer: Elementary education is a fundamental right under Article
(a) சட்டப்பிரிவு 51 / Article 51A
(b) சட்டப்பிரிவு 21 / Article 21
(c) சட்டப்பிரிவு 29 / Article 29
(d) சட்டப்பிரிவு 21 / Article 21A
20. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
“போக்சோ” சட்டம் என்பது ——— ஆகும்
Choose the correct answer: POCSO Act
(a) குழந்தைகள் மீதான பொருளாதாரச் சுரண்டல் / Children Economic Exploitation
(b) குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் / Children Sexual Exploitation
(c) குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் / Children Sexual Abuse
(d) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் / Protection of Children from sexual offences Act
21. தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
Elected members of the Parliament from Tamilnadu
(a) மாநிலங்களவை 18 உறுப்பினர்கள் மற்றும் மக்களவை 39 உறுப்பினர்கள் / Rajya Sabha – 18 members and Lok Sabha – 39 members
(b) மாநிலங்களவை 28 உறுப்பினர்கள் மற்றும் மக்களவை 39 உறுப்பினர்கள் / Rajya Sabha – 28 members and Lok Sabha – 39 members
(c) மாநிலங்களவை 81 உறுப்பினர்கள் மற்றும் மக்களவை 39 உறுப்பினர்கள் / Rajya Sabha – 81 members and Lok Sabha – 39 members
(d) மாநிலங்களவை 80 உறுப்பினர்கள் மற்றும் மக்களவை 39 உறுப்பினர்கள் / Rajya Sabha – 80 members and Lok Sabha – 39 members
22. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் ——– இடம் உள்ளது
The authority to alter the boundaries of State in India rests with
(a) குடியரசுத் தலைவர் / The President
(b) பிரதம அமைச்சர் / The Prime Minister
(c) மாநில அரசாங்கம் / State Government
(d) நாடாளுமன்றம் / Parliament
23. மத்திய அரசு இந்து வாரிசுரிமை சட்டம் எந்த ஆண்டு திருத்தங்களை மேற்கொண்டது?
The Central Government Hindu Succession Act was amended in the year
(a) 2002
(b) 2003
(c) 2004
(d) 2005
24. அழுத்தக் குழுக்கள் என்னும் சொல்லினை உருவாக்கிய நாடு
The term “Pressure Group” originated by
(a) அமெரிக்க ஐக்கிய நாடுகள் / U.S.A (United States of America)
(b) இந்தியா / India
(c) இங்கிலாந்து / England
(d) கனடா / Canada
25. லோக்ஆயுக்தா அமைப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
The institution of Lokayukta was created first in Maharastra in the year
(a) 1970
(b) 1971
(c) 1972
(d) 1973
26. “ரிவோல்ட்” என்னும் ஆங்கிலப் பத்திரிக்கையை ஈ.வே.ரா. பெரியார் தொடங்கிய ஆண்டு எது?
In which year Periyar E.V.R published a English magazine under the title “Revolt”?
(a) 1925
(b) 1928
(c) 1933
(d) 1934
27. ஆங்கிலேயர் அச்சுறுத்தல் காரணமாக பாரதி —– பகுதிக்கு இடம் பெயர்ந்தார்.
Bharathi was displaced to ——- area due to English intimidation
(a) மாஹே / Mahe
(b) பாண்டிச்சேரி / Pondicherry
(c) பம்பாய் / Bombay
(d) காசி / Kasi
28. இந்திய தேசிய இராணுவத்தின் மீது விசாரணை நடைபெற்ற இடம் ———ஆகும்
The Indian National Army trials were held at
(a) ஆக்ரா கோட்டை / Agra Fort
(b) செங்கோட்டை / Red Fort
(c) வில்லியம் கோட்டை / Fort William
(d) புனித ஜார்ஜ் கோட்டை / Fort St.George
29. “அமர் சோனார் பங்களா” என்ற வங்காள தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?
Who has written “Amar Sonar Bangla” the National Anthem of Bangaldesh?
(a) சையது அபு முகம்மது / Syed Abu Mohammad
(b) இரஜினி கந்தா சென் / Rajani Kanta Sen
(c) இரவீந்திரநாத் தாகூர் / Rabindranth Tagore
(d) முகுந்தா தாஷ் / Mukunda Das
30. காமராசரின் அரசியல் குரு யார்?
Political Gur of Kamaraj was
(a) இராஜாஜி / Rajaji
(b) சத்தியமூர்த்தி / Sathyamurthi
(c) நேரு / Nehru
(d) காந்தி / Gandhi
31. மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்?
Who was the Political Guru of Mahatma Gandhi?
(a) M.G.ராணடே / M.G.Ranade
(b) W.C.பானர்ஜி / W.C.Banerjee
(c) பாலகங்காதர திலகர் / Balagangatara Tilak
(d) கோபால கிருஷ்ண கோகலே / Gopalakrishna Gokhale
32. 1933-ஆம் ஆண்டு ஜனவரி 8-ம் நாள் எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
Which day was observed on 8th January 1933?
(a) கோவில் நுழைவு நாள் / Temple Entry Day
(b) மீட்பு நாள் (டெலிவரன்ஸ்டே) / Day of Delivarance
(c) நேரடி நடவடிக்கை நாள் / Direct Action Day
(d) சுதந்திரப் பெருநாள் / Independence Day
33. சிவசுப்பிரமணியனார் 1799 செப்டம்பர் 13ஆம் நாள் தூக்கிலிடப்பட்ட இடம்
Sivasubramanianar was executed on 13 September 1799 at
(a) கயத்தாறு / Kayathar
(b) நாகலாபுரம் / Nagalapuram
(c) விருப்பாட்சி / Virupachi
(d) பாஞ்சாலங்குறிச்சி / Panchalamkurichi
34. இந்திய தேசிய காங்கிரசால் பூரண சுதந்திர நாளாகக் கொண்டாடிய நாள்
——— day was declared as “Purna Swaraj Day” by the Indian National Congress
(a) ஜனவரி 26, 1930 / January 26, 1930
(b) ஜனவரி 29, 1929 / January 29, 1929
(c) ஆகஸ்ட் 16, 1930 / August 16, 1930
(d) ஆகஸ்ட் 18, 1930 / August 18, 1930
35. 2021ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட “ஆர்காம்-ரீட்” என்ற சாதனம் கீழ்வரும் எந்த வகையான குறைபாடுள்ள மனிதர்களுக்கு பயன்படுகிறது?
“ORCAM Read” is a device invented in 2021 to assist people with impairment in
(a) பார்வை / Sight
(b) கேட்டல் / Hearing
(c) உண்ணுதல் / Eating
(d) இயக்கம் / Mobility
36. BRICs என்ற அமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன?
How many countries are the members in BRICs?
(a) 5
(b) 4
(c) 3
(d) 2
37. பின்வருவனவற்றுள் அன்னை தெரசா நினைவுத் திருமண உதவித் திட்டம் எதனை அடிப்படையாகக் கொண்டது?
Annai Therasa Ninaivu Marriage Assistance scheme deals with
(a) ஏழை விதவைகள் / Poor Widows
(b) சிறுபான்மையோர் / Minority
(c) ஒற்றை தாய்மார்கள் / Single Mothers
(d) அனாதைப் பெண்களின் திருமணம் /Orphan Women’s Marriage
38. ‘Playing it my way’ என்ற புத்தகத்தை எழுதிய விளையாட்டு வீரர் யார்?
Which sports person is the author of the book “Playing it my way”?
(a) கபில்தேவ் / Kapil Dev
(b) யுவராஜ் சிங் / Yuvaraj Singh
(c) சச்சின் டெண்டுல்கர் / Sachin Tendulkar
(d) சானியா நேவால் / Sania Nehwal
39. பின்வருபவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளன?
ரயில் மண்டலம் தலைமையகம்
அ. மத்திய வடக்கு 1. அலாகபாத்
ஆ. மேற்கு 2. மங்களுர்
இ. மத்திய 3. ஜான்சி
ஈ. மத்திய கிழக்கு 4. ஹாஜிபூர்
Which of the following are incorrectly paired?
Zonal Railways – Head Quarters
1. North Central – Allahabad
2. Western – Mangalore
3. Central – Jansi
4. East Central – Hajipur
(a) அ மற்றும் ஆ / 1 and 2
(b) ஆ மற்றும் இ / 2 and 3
(c) அ மற்றும் ஈ / 1 and 4
(d) இ மற்றும் ஈ / 3 and 4
40. தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
The National Human Right Commission was established in the year
(a) 1948 டிசம்பர், 9 / 1948 December, 9
(b) 1948 டிசம்பர், 10 / 1948 December, 10
(c) 1949 டிசம்பர், 9 / 1949 December, 9
(d) 1949 டிசம்பர், 10 / 1949 December, 10
41. கே.காமராஜருக்கு பின் மதராஸ் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றவர் யார்?
Who succeeded K.Kamaraj as the Chief Minister of Madras Presidency?
(a) சி.என்.அண்ணாதுரை / C.N.Annadurai
(b) எம்.பக்தவத்சலம் / M.Bakthavatsalam
(c) மு.கருணாநிதி / M.Karunanidhi
(d) பி.எஸ்.குமாரசாமி ராஜா / P.S.Kumarasamy Raja
42. ECR (கிழக்கு கடற்கரைச் சாலை) என்ற பெயரை “முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை” என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நாள்
The Announcement that, ECR (East Coast Road) will be renamed “Muthamizh Arignar Kalaignar Karunanidhi Salai” was made by the Chief Minister of Tamil Nadu M.K.Stalin in
(a) பிப்ரவரி 02, 2022 / February 02, 2002
(b) மார்ச் 02, 2022 / March 02, 2002
(c) ஏப்ரல் 02, 2022 / April 02, 2002
(d) மே 02, 2022 / May 02, 2002
43. “சமயச்சார்பின்மை” என்னும் சொல் ——— மொழியில் இருந்து வந்தது.
The term “Secularism” is derived from —— language.
(a) கிரேக்கம் / Greek
(b) இலத்தீன் / Latin
(c) உருது / Urdu
(d) ஆங்கிலம் / English
44. இந்தியாவில் ——— ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்க பெரிதும் உதவுகின்றன
Indian ——– plays an important part in fostering unity and integration
(a) நடனம் மற்றும் இசை / Dance and Music
(b) இலக்கியம் மற்றும் இலக்கணம் / Literature and Grammar
(c) உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் / Food and Customs
(d) கலை மற்றும் கட்டிடக்கலை / Art and Architecture
45. பல்லவர்கள் காலத்தில் அயல்நாட்டு வணிகர்கள் —— என்று அறியப்பட்டனர்.
During the Pallava Period, the foreign merchants were known as
(a) பட்டணசாமி / Pattanaswamy
(b) நானாதேசி / Nanadesi
(c) விதேசி / Videshi
(d) தேசி / Desi
46. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் ——– உள்ளது.
The Archaeological survey of India headquarters is located in
(a) புது தில்லி / New Delhi
(b) மும்பை / Mumbai
(c) சென்னை / Chennai
(d) கொல்கத்தா / Kolkatta
47. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:
Choose the correct pair from the following:
(a) ஹோல்கர்-புனே / Holkar – Pune
(b) பான்ஸ்லே-நாக்பூர் / Bhonsle – Nagpur
(c) சிந்தியா-பரோடா / Scindhia – Baroda
(d) பேஷ்வா-இந்தூர் / Peshwa – Indore
48. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை தவறாகப் பொருந்தியுள்ளது:
Identify the wrongly matched pair from the following:
(a) ஜாகிருதின் பாபர்-உலகைக் கைப்பற்றியவர் / Zahir-ud-din Babur – The conqueror of the world
(b) ஷாஜகான்-உலகத்தின் அரசர் / Shah Jahan – King of the world
(c) ஷாஜி பான்ஸ்லே-சிவாஜியின் தந்தை / Shahji Bhonsle – Shivaji’s Father
(d) அக்பரின் பாதுகாவலர்-பைராம் கான் / Regent of Akbar – Bairam Khan
49. —– முகலாயக் கட்டிடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும்.
——– is the epitome of Mughal architecture.
(a) கோல் கும்பாஸ் / Gol Gumbaz
(b) ஷாலிமர் தோட்டங்கள் / The Shalimar Gardens
(c) ஹீமாயூனின் கல்லறை / Humanyun’s Tomb
(d) தாஜ்மஹால் / Tajmahal
50. “பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
Who is the author of the book “Why the Woman is Enslaved”?
(a) சிங்காரவேலர் / Singaravelar
(b) முத்துலட்சுமி அம்மையார் / Muthulakshmi Ammaiyar
(c) பெரியார் / Periyar
(d) நீலாம்பிகை அம்மையார் / Neelambikai Ammaiyar
51. 1709-ல் தரங்கமபாடியில் ——- ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
——— established a full fledged printing press in 1709, at transquebar
(a) கால்டுவெல் / Caldwell
(b) F.W.எல்லிஸ் / F.W.Ellis
(c) சீகன்பால்கு / Ziegenbalg
(d) மீனாட்சி சுந்தரம் / Meenakshi Sundaram
52. தவறான ஒன்றை தெரிவு செய்க:
இரட்டை மலை சீனவாசன்.
1. 1893ல் ஆதி திராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார்.
2. இலண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்டார்.
3. அவ்வப்போது “சித்திர புத்திரன்” எனும் புனைப்பெயரில் கட்டுரைகளும் எழுதினார்.
4. 1932ல் செய்து கொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் இவரும் ஒருவர்.
Pick the odd one out: Rettaimalai Srinivasan
1. Founded the Adi Dravida Mahajana Sabha in 1893.
2. Participated in the First and Second Round Table Conferences held in London.
3. Frequently wrote columns under the pseudonym of “Chitraputtiran”
4. Was a signatory to the Poona pact of 1932
(a) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
(b) 2 மற்றும் 4 / 2 and 4
(c) 3 மட்டும் / 3 only
(d) 4 மட்டும் / 4 only
53. வேலு நாச்சியாரின் தந்தையின் பெயர் ——— ஆகும்
Father of Velunachiyar was
(a) முத்து குமார ரகுநாத சேதுபதி / Muthu Kumara Raghunatha Sethupathy
(b) செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி / Chellamuthu Vijaya Raghunatha Sethupathy
(c) பெரிய உடையார் சேதுபதி / Periya Udaiyar Sethupathy
(d) சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி / Sundaresvara Raghunatha Sethupathy
54. “சிவகங்கையின் சிங்கம்” என அழைக்கப்படுபவர்——–
—— is called the “Lion of Sivaganga”
(a) பெரிய மருது / Periya Marudhu
(b) சின்ன மருது / Chinna Marudhu
(c) வேலு நாச்சியார் / Velu Nachiyar
(d) கட்டபொம்மன் / Kattapomman
55. கீழ்காணும் கூற்றுகளில் கீழடியைப் பற்றிய சரியான கூற்றுகள் எவை?
1. செங்கற் கட்டுமானங்கள்.
2. தமிழ்-பிராமி எழுத்துகள் கொண்ட மட்கல ஓடுகள்.
3. கண்ணுக்கு மை தீட்டும் செப்புக்கம்பி.
4. பதிற்றுப்பத்தில் கீழடியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
Which of the following statements are true about Keezhadi?
i. Evidence for brick builings
ii. Tamil-Brahmi inscriptions on pottery
iii. Copper rods used for decorating eyelashes
iv. Keezhadi has been mentioned in Pathitrupattu
(a) 1, 2 மற்றும் 4 சரி / i, ii and iv only
(b) 1, 2, 3 மற்றும் 4 அனைத்தும் சரி / i, ii, iii and iv are true
(c) 1, 2 மற்றும் 3 சரி / i, ii and iii only
(d) 2 மற்றும் 4 சரி / ii and iv only
56. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை யாது?
The name of the script used in the Sangam Age
(a) கரோஷ்தி / Kharoshthi
(b) தேவநாகிரி / Devanagiri
(c) தமிழ்-பிராமி / Tamil-Brahmi
(d) கிரந்தம் / Grantha
57. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
– இக்குறள் வழிப் பெறப்படும் கருத்து யாது?
Tho’ human beings in their birth are the same by diverse trade their worth isn’t the same
Trace the essence or meaning of this Kural
(a) சாதி ஒழிப்பு / Removal of Casteism
(b) மத ஒழிப்பு / Removal of Communalism
(c) வர்க்க ஒழிப்பு / Removal of Class system
(d) வருண ஒழிப்பு / Removal of Varunasiram
58. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
– என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
What according Valluvar is the great help rendered by the son to his father?
(a) முதுமையில் காத்தல் / Protection at his old age
(b) நற்சொல் கூறல் / Saying good words
(c) பொருள் கொடுத்து உதவுதல் / Give monetary help
(d) புகழும் படி வாழ்தல் / To bring honour
59. அருளை விரும்பி நடப்பவர், பிறர் பொருளை விரும்ப நேரிட்டால் அவர் என்ன ஆவார் என வள்ளுவர் வினவுகிறார்?
What will happen to a man who walks in grace deters and walks towards materialism according to valluvar?
(a) நன்கு வாழ்வார் / Live a good life
(b) செழிப்புடன் வாழ்வார் / Live in prosperity
(c) கெட்டொழிவார் / Get destroyed
(d) சுற்றமுடன் வாழ்வார் / Live with relatives
60. தானமும் தவமும் செய்பவர்களைவிட உயர்ந்தவர்கள் யார் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Who according to Valluvar is superior to the person who does charity and penance?
(a) புறங்கூறாதவர் / One who never slanders
(b) உண்மை பேசுபவர் / One who speaks truth
(c) கல்வி கேள்விகளில் சிறந்தவர் / One who is learned
(d) இனிதாகப் பேசுபவர் / One who talks sweetly
61. எப்படிப்பட்ட பொருள் ஒருவருக்கு இன்பத்தைத் தரும் என்று வள்ளுவர் குறிப்படுகின்றார்?
What kind of walth will give happiness according to Valluvar?
(a) கொடையால வந்த பொருள் / Donated Wealth
(b) உரிமையால் வந்த பொருள் / Walth by Rights
(c) தீதின்றி வந்த பொருள் / Wealth that is earned through fair means
(d) போரால் வந்த பொருள் / Wealth by Warfare
62. நிலையற்றவைகளை நிலையானவை என்று கருதுகிறவர்களை வள்ளுவர் எப்படிப் பார்க்கிறார்?
How does Valluvar see those who fix their attention on impermanent things?
(a) பெருமையாக / In excellence
(b) இழிவாக / Deplorable
(c) நம்பிக்கையாக / Hopeful
(d) வியப்பாக / Surprised
63. சரியாகப் பொருந்தியுள்ளதைக் காண்க:
அ. முதல் வாகனத் தொழிற்சாலை 1. செராம்பூர்
ஆ. தேசியச் செய்தித்தாள் மற்றும் காகித ஆலை 2. கொல்கத்தா
இ. மத்திய பட்டு வாரியம் 3. நேபா நகர்
ஈ. முதல் காகிதத் தொழிற்சாலை 4. பெங்களுரு
Match the following:
a. First Automobile industry 1. Serampore
b. National News print and Paper mill 2. Kolkata
c. Central Silk Board 3. Nepa Nagar
d. First Paper mill India 4. Bangalore
a b c d
a. 2 3 4 1
b. 4 3 2 1
c. 1 2 3 4
d, 4 1 2 3
64. பசுமைப் புரட்சியின் பலவீனங்கள் என்பதைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
1. விதைகள் மற்றும் உரங்களுக்குப் பேரளவு மூலதனம் தேவைப்படுகிறது.
2. முதன்மைப் பயிர்களான கோதுமை மற்றும் நெல் உற்பத்தி பன்மடங்காகப் பெருகியது.
3. ஆதிக உரங்களின் பயன்பாடு நிலத்தின் செழுமைத் தன்மையைப் பாதித்தது.
Which of the following statements are true about the weakness of Green Revolution?
i. This strategy needed heavy investment in seeds and fertilizers.
ii. Boosted the production of major cereals like wheat and rice.
iii. Larger chemical use reduced the soil fertility.
(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only
(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only
(c) 1 மட்டும் / i only
(d) 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only
65. 1940இல் பம்பாய் திட்டத்தை வழங்கியவர்கள்
In 1940 Bombay Plan was presented by
(a) 8 எட்டு முன்னணி அரசியல் அரசியல்வாதிகள் / 8 Leading Politicians
(b) எட்டு முன்னணி பொருளியல் அறிஞர்கள் / 8 Leading Economists
(c) எட்டு முன்னணி தத்துவவாதிகள் / 8 Leading Philosophers
(d) எட்டு முன்னணி தொழில் அதிபர்கள் / 8 Leading Industrialist
66. தனிநபர் வருமானம் கணக்கிடப்படுவது
Per capita Income can be calculated by
(a) தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையை வகுத்தல் / National Income/Population
(b) தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையைக் கழித்தல் / National Income – Population
(c) தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையை கூட்டுதல் / National Income + Population
(d) தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையை பெருக்குதல் / National Income x Population
67. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம்3
The Aim of the Second Five Year Plan
(a) வறுமை ஒழிப்பு / Removal of Poverty
(b) விரைவான தொழில் வளர்ச்சி / Rapid Industrialization
(c) வேலைவாய்ப்பு / Empolyment
(d) சமூக நீதி / Social Justice
68. கீழ்க்காண்பவற்றுள் எது/எவை “சமூக நீதி”யை வரையறுக்கும் பொழுது சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
1. சம உரிமை.
2. சம வாய்ப்பு.
3. சமமாக நடத்துதல்.
4. செல்வத்தினை அனைவருக்கும் சமமாக பகிர்தல்
Which of the following point(s) is/are being included while defining “Social Justice”
1. Equal rights.
2. Equal opportunity
3. Equal treatment
4. Equal distribution of wealth for all
(a) 1 மட்டும் / 1, 2 and 3 only
(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / 1, 2 and 3 only
(d) 1, 2 மற்றும் 4 மட்டும் / 1, 2 and 4 only
69. தமிழக அரசு முதல் மனித வளர்ச்சி அறிக்கை வெளியிட்ட ஆண்டு
First Human Development Report by Tamil Nadu Government was published in the year
(a) 2000
(b) 2003
(c) 2006
(d) 2004
70. இதில் சரியானவை எவை?
1. NHRC – தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
2. SHRC – சட்டப்படியான மனித உரிமைகள் ஆணையம்.
3. NCW – தேசியப் பெண்கள் மன்றம்.
4. RTI – தகவல் அறியும் உரிமைச்சட்டம்
Choose the correct matches type:
1. NHRC – National Human Rights Commission
2. SHRC – Statutory Human Rights Commission
3. NCW – National Council for women
4. RTI – Rights to Information Act
(a) 1 மற்றும் 2 சரியானவை / 1 and 2 are correct
(b) 1 மற்றும் 4 சரியானவை / 1 and 4 are correct
(c) 2 மற்றும் 3 சரியானவை / 2 and 3 are correct
(d) 2 மற்றும் 4 சரியானவை / 2 and 4 are correct
71. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது?
Which article of the constitution provides for an election commission of India?
(a) பிரிவு 280 / Article 280
(b) பிரிவு 315 / Article 315
(c) பிரிவு 324 / Article 324
(d) பிரிவு 365 / Article 365
72. இந்தியாவில் தோல் பொருட்களை அதிகளவில் தயாரித்து ஏற்றுமதி செய்யும் மாவட்டம் எது?
Which district is the top exporter of finished leather goods in the country?
(a) சேலம் / Salem
(b) வேலூர் / Vellor
(c) திண்டுக்கல் / Dindigul
(d) மதுரை / Madurai
73. தமிழ்நாடு சுகாதாரச் சீரமைப்பு திட்டத்திற்கு நிதி உதவி எதன் மூலம் கிடைக்கின்றது?
Tamil Nadu Health System Reform programme is implemented with the funding support of
(a) உலக வங்கி / World Bank
(b) உலக சுகாதார நிறுவனம் / World Health Organization
(c) யுனெஸ்கோ / UNESCO
(d) தேசிய சுகாதார மிஷன் / National Health Mission
74. தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம்
Literacy Rate in Tamil Nadu
(a) 79.9%
(b) 80.9%
(c) 81.9%
(d) 82.9%
75. பெருந்தொற்று நோயினால் முடக்கப்பட்ட காரணத்தால் உருவான கற்றல் குறைபாட்டை சரி செய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டமே ———- ஆகும்.
———– Scheme was designed to bridge the learning gaps that developed as a result of the pandemic imposed lock down.
(a) மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வகுப்பறை திட்டம் / Smart Classroom scheme
(b) கணினி ஆய்வகத் திட்டம் / Computer Labs scheme
(c) இல்லம் தேடிக் கல்வி திட்டம் / Illam Thedi Kalvi Scheme
(d) இல்லம் தேடி மருத்துவம் திட்டம் / Illam Thedi Maruthuvam Scheme