Tnpsc Model Question Paper 25 – General Studies in Tamil & English
1. சிப்கோ இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்
Chipko movement was held under the leadership of
(a) கைலாஷ் வித்யார்தி / Kailash Vidyarthi
(b) மேதா பட்கர் / Medha Patkar
(c) அண்ணா ஹசாரே / Anna Hazare
(d) சுந்தர்லால் பகுகுணா / Sunderlal Bahuguna
2. இயற்கை தேர்வு கோட்பாடு முன்மொழிந்தவர்
Natural selection theory was proposed by
(a) லெமார்க் / Lamarck
(b) C.D.டார்லிங்டன் / C.D.Darlinton
(c) சார்லஸ் டார்வின் / Charles Darwin
(d) ஹென்ஸ்லோ / Henslow
3. விடுபடு திசைவேகமானது
Escape velocity is
(a) அனைத்து கோள்களுக்கும் மாறாதது / Constant for all planets
(b) கோளுக்கு கோள் மாறுபடும் / Varies planet to planet
(c) உட்புற கோள்களில் வெளிப்புற கோள்களை விட குறைவு / Smaller in inner planets than outer planets
(d) புவிக்கு மட்டும் பொருந்தும் / It is applicable only in earth
4. பின்வருவனவற்றுள் எது ஆக்டேன் எண் பூஜ்ஜியம் ஆக உள்ளது?
Octane Number is zero for
(a) n-ஹெப்டேன் / n-Heptane
(b) ஐசோஆக்டேன் / Isooctane
(c) n-ஹெக்சேன் / n-Hexane
(d) ஐசோஹெப்டேன் / Isoheptane
5. பின்வருவனவற்றில் எந்த செவ்வாய் விண்கல திட்டங்கள்/திட்டம் தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
1. டியான்வென்-1 – கோள்களின் ஆய்வு – சீனா
2. ஐக்கிய அரபு எமீரகத்தின் விண்கலம் – நம்பிக்கை ஆர்பிட்டர்
3. NASA-விடாமுயற்சி ரோவர்
4. இந்தியா – தொழில் நுட்ப செயல்விளக்க செயற்கைக் கோள்
Which of the following Mars space craft program are/is incorrectly paired
1. Tianwen-1 – Planetary Exploration – China
2. United Arab Emirates – Hope Orbiter
3. NASA – Perseverance rover
4. India – Technology demonstrator satellite
(a) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
(c) 4 மட்டும் / 4 only
(d) 1, 2 மற்றும் 3 மட்டும் / 1,2 and 3 only
6. உலகில் எந்த நாடு முதன்முதலாக 100 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கை அடைந்தது?
Which country becomes the fastest country in the world to administer 100 million doses of Covid-19 vaccine?
(a) இந்தியா / India
(b) பூடான் / Bhutan
(c) ரஷ்யா / Russia
(d) அமெரிக்கா / U.S.A
7. திராவிட இயக்கம், திராவிடக் கழகத்தை ——– தலைமையில் உருவாக வழி வகுத்தது.
The Dravidian Movement led to the formation of Dravida Kazhagam under the leadership of
(a) சி.என்.அண்ணாதுரை / C.N.Annadurai
(b) மு.கருணாநிதி / M.Karunanidhi
(c) ஈ.வே.ராமசாமி / E.V.Ramasamy
(d) எம்.ஜி.ராமச்சந்திரன் / M.G.Ramachandran
8. திட பாறையை பல்வேறு வகைப் பொருட்கள் சூழ்ந்து காணப்படுகின்ற, இழக்கமான அடுக்கு எது?
A layer of lose, heterogeneous material covering solid rock, is
(a) பாத்தோலித் / Batholith
(b) ரேக்கோலித் / Regolith
(c) கிரானைட் / Granite
(d) மார்பிள் / Marble
9. காவேரி நதியானது தனக்குத்தானே ——- எனும் இடத்தில் கொலரூன் மற்றும் காவேரியாக இரண்டு கால்வாய் நதிகளாக பிரிகிறது
The river Cauvery divides itself into two channel at ——– as Coleroon and Cauvery.
(a) விழுப்புரம் / Viluppuram
(b) திருச்சிராப்பள்ளி / Tiruchirapalli
(c) ஸ்ரீரங்கம் / Srirangam
(d) மதுரை / Madurai
10. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றிற்கான சரியல்லாத விளக்கத்தினை கண்டறிக:
“இந்திய மக்கட்தொகையின் நிலை எவ்வாறுள்ளதென்றால் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது. இறப்பு விகிதமும் குறைந்து கொண்டிருக்கிறது மேலும் மக்கட்தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது”
Identify the incorrect justification for the statement given below:
India’s population is in a stage, where birth rate is falling, death rate also falling and population continues to grow:
(a) குடும்ப கட்டுப்பாடு / Family Planning
(b) சமுதாய பொறுப்பு அதிகரித்தல் / Increase in social responsibility
(c) வாழ்க்கைத் தரம் அதிகரித்தல் / Increase in standard of living
(d) மாற்றம் அடையும் பெண்கள் நிலை / Changing status of women
11. டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் “கராஜ்” என்பது எதன் மீது விதிக்கப்பட்ட வரி
During Delhi Sultanate period “Kharaj” was type of tax levied on
(a) வீடு / House
(b) விவசாய நிலம் / Agricultural land
(c) சமயம் / Religion
(d) வணிகம் / Trade
12. பாமினி அரசினைத் தோற்றுவித்தவர்
Who was the founder of Bahmani kingdom?
(a) மாலிக்கபூர் / Malik Kafur
(b) புக்கர் / Bukka
(c) ஹரிஹரா / Harihara
(d) அலாவுதீன் ஹசன் பாஹ்மன் ஷா / Alauddin Hasan Bahmani Shah
13. “தேசிய சமூக மாநாடு” கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்
“The National Social Conference” was organized by
(a) பண்டித ரமாபாய் / Pandita Ramabai
(b) எம்.ஜி.ரானடே / M.G.Ranade
(c) தோந்து கேசவ் / Dhondu Kheshave
(d) வீரசலிங்கம் பந்துலு / Virasalingam Pantulu
14. இந்தியாவில் முதன் முதலில் எந்த மாநிலம் மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்டது?
Which state was first formed on the basis of Linguistics in India?
(a) கேரளா / Kerala
(b) ஆந்திரா / Andhra
(c) கர்நாடகம் / Karnataka
(d) தமிழ்நாடு / Tamil Nadu
15. “இந்திய ஷேக்ஸ்பியர்” என அழைக்கப்படுபவர் யார்?
Who is called as the “Indian Shakespeare?”
(a) காளிதாசர் / Kalidasa
(b) விசாகதத்தர் / Vishakhadatta
(c) சுத்ரகர் / Shudraka
(d) ஹரிசேனர் / Harisena
16. பண மசோதா:
1. மாநிலங்களவையில் இதை அறிமுகப்படுத்த முடியாது.
2. சுபாநாயகரால் சான்றளிக்கப்பட வேண்டும்.
3. மாநிலங்களவையால் திருத்தப்படலாம்.
4. குடியரசுத் தலைவர் தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்
கீழே கொடுக்கப்ட்டுள்ளவை கொண்டு மேலுள்ள கூற்றுகளில் எவை சரியானவை எனத் தேர்ந்தெடுக்கவும்:
Money Bill:
1. Cannot be introduced in the Council of States
2. Needs to be certified as such by the Speaker
3. Can be amended by the Council of States
4. President has to assent it without delay
Select the correct answer using the Codes given below:
(a) 1, 2, 3 மற்றும் 4 / 1,2,3 and 4
(b) 1, 2 மற்றும் 4 மட்டும் / 1,2 and 4 only
(c) 2, 3 மற்றும் 4 மட்டும் / 2,3 and 4 only
(d) 1 மற்றும் 4 மட்டும் / 1 and 4 only
17. பெண்கள் மேம்பாடு குறித்துக் கீழ்வருவனவற்றுள் எது/எவை சரியானது/சரியானவை?
1. முடிவெடுத்தலில் பெண்களின் ஈடுபாட்டினை அதிகரித்தல்.
2. பெண்களைத் தொழில் முனைவோராக ஊக்குவித்தல்.
3. முறைசாரா அமைப்புகளில் பெண்களின் பணிநிலையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குதல்
Which of the following is true about Women Empowerment?
I. Increase involvement of women in Decision Making.
II. Encouragement of Women Entrepreneurship
III. Initiation of measures to improve working conditions of women in the informal sector
(a) 1 மட்டும் / I only
(b) 1 மற்றும் 3 ஆகியன மட்டும் / I and III only
(c) 1 மற்றும் 2 ஆகியன மட்டும் / I and II only
(d) 1, 2 மற்றும் 3 ஆகியவை / All I,II and III
18. பின்வருவனவற்றைப் பொருத்துக:
உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு
அ. அலகாபாத் 1. 1884
ஆ. கர்நாடகா 2. 1916
இ. பாட்னா 3. 1866
ஈ. மதராஸ் 4. 1862
Match the following:
High Court Year of Establishment
a. Allahabad 1. 1884
b. Karnataka 2. 1916
c. Patna 3. 1866
d. Madras 4. 1862
a b c d
a. 3 1 2 4
b. 1 3 4 2
c. 4 1 3 2
d. 1 4 2 3
19. சரக்கு மற்றும் சேவை வரி (GST)——– இலக்கை அடிப்படையாகக் கொண்டது
Goods & Service Tax (GST) ——— based on destination
(a) பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு / Consumption of Goods & Services
(b) விவசாயப் பண்டங்களின் நுகர்வு / Consumption of Agricultural Commodity
(c) சேமிப்பு முறை / Saving Pattern
(d) தொழில் பண்டங்களின் நுகர்வு / Consumption of Industrial Commodity
20. ——- இந்தியாவில் மத்திய-மாநில அரசுகளுக்கு வங்கியாக செயல்படும் வங்கியாகும்.
——— Bank acts as Banker to the Central and State Governments in India
(a) வளர்ச்சி வங்கிகள் / Developmental Banks
(b) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா / State Bank of India
(c) மத்திய-மாநில கூட்டுறவு வங்கிகள் / Centre-State Co-operative Banks
(d) இந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India
21. ——– மாதிரி நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையாக இருந்துள்ளது
———- model was the basis of Fourth Five Year Plan
(a) ஹரோடு-டோமர் மாதிரி / Harrod-Domar Model
(b) சி.ஈஎல்பி மாதிரி / CELP Model
(c) மகாலனோபிஸ் மாதிரி / Mhalanobis Model
(d) சக்ரவர்த்தியின் மாதிரி / Chakravarty’s Model
22. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, பிச்சைக்காரர் மறுவாழ்வு எந்தத் துறையின் கடமை
Rehabilitation of victims of alcoholism and Rehabilitation of beggars are the responsibility of
(a) மனிதவள மேம்பாட்டுத்துறை / Department of Human Resource
(b) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை / Department of Labour and Employment
(c) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice and Empowerment
(d) எதுவும் இல்லை / None
23. கிரிப்ஸ் தூதுக் குழுவின் தீர்மானத்தைப் “பின் தேதியிட்ட காசோலை” என்று கூறியவர்
Cripps Mission proposal was a “Post-dated cheque” was said by
(a) நேரு / Nehru
(b) M.A.ஜின்னா / M.A.Jinnah
(c) காந்திஜி / Gandhiji
(d) சர்தார் படேல் / Sardar Patel
24. 1914-ல் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக இருந்தவர் யார்?
Who was the President of Madras Session of Congress in 1914?
(a) பூபேந்திர நாத் போஸ் / Bhupendra Nath Bose
(b) மதன் மோகன் மாளவியா / Madan Mohanmalviya
(c) விஜயராகவாச்சாரியார் / Vijaya Ragavachariyar
(d) எம்.ஏ.அஞ்சரி / M.A.Anjari
25. கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
Which of the following is correctly matched?
(a) வி.டி.சவார்க்கர்-1857 சிப்பாய்க் கலகம் / V.D.Savarkar-1857 Sepoy Mutiny
(b) வல்லபாய் படேல்-முதல்பிரதம மந்திரி / Vallabhai Patel-First Prime Minister
(c) அன்னிபெசன்ட்-ஆரிய சமாஜம் / Annie Besant-Arya Samaj
(d) சி.ஆர்.தாஸ்-சைமன் குழு / C.R.Das-Simon Commission
26. எந்த இடத்தில் சங்ககால சோழர்களின் காசுகள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன?
The coins of Sangam Cholas were unearthed by the archaeologists at
(a) அரிக்கமேடு / Arikkamedu
(b) கரூர் / Karur
(c) தஞ்சாவூர் / Thanjavur
(d) உறையூர் / Uraiyur
27. எந்த பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் கூட்டு வைத்துக் கொள்ளவில்லை?
Which Poligar did not made alliance with Virapandya Kattabomman?
(a) சாப்டூர் பாளையக்காரர் / Poligar of Saptore
(b) ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர் / Poligar of Elayiram Pannai
(c) காடல் குடி பாளையக்காரர் / Poligar of Kadalgudi
(d) சிவகிரி பாளையக்காரர் / Poligar of Sivagiri
28. தமிழகத்தின் முதல் தனிநபர் சத்யாகிரகி என்று கருதப்படுபவர் யார்?
Who among the following was considered as the first individual Satyagrahi in Tamil Nadu?
(a) முனைவர் T.S.S.ராஜன் / Dr.T.S.S.Rajan
(b) வினோபாபாவே / Vinoba Bhave
(c) க.காமராசர் / K.Kamaraj
(d) எஸ்.சத்யமூர்த்தி / S.Satyamurthy
29. வேலூர் கலகத்தின் போது இந்திய ராணுவ வீரர்கள் யாருடைய கொடியை ஏற்றினார்கள்?
During Vellore Mutiny the Indian Soldiers hoisted the flag of
(a) திப்பு சுல்தான் / Tipusultan
(b) ஆற்காட்டு நவாப் / Arcot Nawab
(c) மராத்தியர்கள் / Marathas
(d) மருது பாண்டியர்கள் / Marudu Pandiyar
30. கலெக்டர் ஜாக்சன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ராமநாதபுரம் சந்திப்பு நிகழ்வை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் இடம் பெற்றவர்கள்
1. வில்லியம் பிரௌன்.
2. வில்லியம் ஓர்ம்.
3. ஜான் காஸ்மேயர்.
4. எஸ்.ஆர்.லஷ்ஷிங்டன்
The enquiry commission which enquired the Ramanathapuram incident (Collector Jackson and Kattabomman) consist of
I. William Brown
II. William Orm
III. John Casmayor
IV. S.R.Lushington
(a) 1, 2 மட்டும் / I, II only
(b) 2, 3 மட்டும் / II, III only
(c) 3, 4 மட்டும் / III, IV only
(d) 1, 2 மற்றும் 3 மட்டும் / I,II and III only
31. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
Who was the first Woman President of Indian National Congress?
(a) ஆனந்திபாய் ஜோஷி / Anandibhai Joshi
(b) அன்னிபெசன்ட் / Annie Besant
(c) பண்டித ராமாபாய் / Pandita Ramabai
(d) ஸ்வர்ணகுமாரி / Swarnakumari
32. அன்னிபெசன்ட், அருண்டேல் மற்றும் வாடியா ஆதரவுடன் மெட்ராஸில் தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல் லீக்) உருவாக்கப்பட்ட ஆண்டு
Annie Beasant with the support of Arundale and Wadia formed the Home Rule League at Madras in the year
(a) 1912 (b) 1914 (c) 1915 (d) 1916
33. தமிழ்நாட்டில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எந்த மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ளது?
Which district in Tamil Nadu has the lowest child sex ratio as per the census in 2011?
(a) மதுரை / Madurai
(b) தேனி / Theni
(c) வேலூர் / Vellore
(d) கடலூர் / Cuddalore
34. கரிகால் சோழன் காவிரியின் குறுக்கே கட்டிய அணையின் பெயர் என்ன?
King Karikalan of Chola dynasty constructed a dam on River Cauvery. It is known as
(a) வைகை அணை / Vaigai Dam
(b) பாபநாசம் அணை / Papanasam Dam
(c) கல்லணை / Kallanai
(d) சாத்தனூர் அணை / Sathanoor Dam
35. பின்வரும் மாநிலங்களில் தேசிய சராசரியைவிட கல்வி அறிவு விகிதம் (2011) அதிகமாக உள்ள மாநிலம் எது?
Among the following states, which State has the literacy rate (2011) higher than that of the National average.
(a) ஆந்திரப் பிரதேசம் / Andhra Pradesh
(b) உத்திரப்பிரதேசம் / Uttar Pradesh
(c) தமிழ்நாடு / Tamil Nadu
(d) கேரளா / Kerala
36. சிறார் நீதிசட்டம் 2015 செயல்பாட்டுக்கு வந்த நாள்
The Juvenile Justice Act 2015 came into force on
(a) ஜனவரி 14, 2016 / January 14, 2016
(b) ஜனவரி 15, 2016 / January 15, 2016
(c) ஜனவரி 16, 2016 / January 16, 2016
(d) ஜனவரி 17, 2016 / January 17, 2016
37. “மேக் இன் இந்தியா” பிரச்சாரச் சின்னத்தில் உள்ள விலங்கு எது?
What is the animal in the logo of “Make in India” campaign?
(a) யானை / Elephant
(b) பசு / Cow
(c) மயில் / Peacock
(d) சிங்கம் / Lion
38. இந்து மதச்சீர்திருத்தத்தின் லூதர் என்ப்படுபவர் யார்?
Who is the Reforming Luther of Hinduism?
(a) ராஜாராம் மோகன்ராய் / Raja Ram Mohan Roy
(b) தயானந்த சரஸ்வதி / Dayananda Saraswathi
(c) சுவாமி விவேகானந்தர் / Swami Vivekananda
(d) ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் / Sri Ramakrishna Paramahamsa
39. நம்முடைய பூமியில் பூக்கும் தாவரங்கள் எந்தப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ளது?
IN our planet, the flowering plants dominate in which region?
(a) துருவப்பகுதி / Polar region
(b) உயர் மலைப்பகுதி / High Mountain region
(c) சமவெளி மற்றும் குன்றுப் பகுதிகள் / Plain and Hill regions
(d) வறண்ட பாலைவனப் பகுதி / Dry desert region
40. கீழ்க்காணும் கருவிகளில் எது காற்றின் துகளுரு மாசுக்களை நீக்க மின்சக்தி நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், காகிதத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறதுது?
Which one of the following device is used for controlling particulate emission at power plants, cement and paper mills?
(a) நிலைமின் வீழ்படிவாக்கி (எலக்ட்ரோஸ்டேடிக் பிரிசிப்பிடேட்டார்) / Electrostatic precipitator
(b) வினையூக்க மாற்றி (கேட்டலடிக் கன்வர்டர்) / Catalytic converter
(c) சொட்டுமுறை வடிகட்டி / Trickling filter
(d) மணல் வடிகட்டி / Sand filter
41. பின்வருவனவற்றில் அமிலம் எது?
Which among the following is an acid?
(a) CaO
(b) BaO
(c) SiO2
(d) Na2O
42. கீழ்க்கண்டவற்றுள் எது மாறா விசை?
Which of the following is a conservative force?
(a) நிலை மின்னியல் விசை / Electrostatic force
(b) ஈர்ப்பியல் விசை / Gravitational force
(c) உராய்வு விசை / Frictional force
(d) அ மற்றும் ஆ இரண்டும் சரி / Both A and B are correct
43. பின்வரும் அறிவியலாளர்களின் பெயர்களோடு அவர்களின் கண்டுபிடிப்புகளைப் பொருத்துக:
அ. விஸ்வேஸ்வராயா – 1. மிக இலகுரக விமானத்தை வடிவமைத்தல்
ஆ, வெங்கட்ராமன் ராதாகிருஷணன் – 2. தானியங்கி மதகு கதவுகள்
இ. சந்திரசேகர் – 3. சூரியக் கதிர்களின் எடை மற்றும் அழுதத்தினை அளவிடுவதற்கான கருவி
ஈ. மேக்நாச்சாஹா – 4. நட்சத்திரங்களிலிருந்து ஆற்றல் கதிர்வீச்சு
Match correctly the finding with the corresponding scientist:
a. Visvesvaraya 1. Fabrication of ultralight aircraft
b. Venkatraman Radhakrishnan 2. Automatic sluice gates
c. Chandrasekhar 3. Instrument to measure the weight and pressure of solar rays
d. Megnadsaha 4. Radiation of energy from stars
a b c d
a. 2 4 1 3
b. 2 1 4 3
c. 2 3 1 4
d. 1 2 4 3
44. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் 16.11.2021 அன்று தொழில் வளர்ச்சி சார்பில் புதிய வகை வணிகப் பெயர் கொண்ட சிமெண்டை அறிமுகம் செய்தார்
Which of the following, our Honourable Chief Minister of Tamil Nadu Thiru.M.K.Stalin on behalf of the Indusries Department on 16.11.2021, introduced a new high grade cement.
(a) டால்மியா சிமெண்ட் / Dalmia cement
(b) மகா சிமெண்ட் / Maha cement
(c) வலிமை சிமெண்ட் / Valimai cement
(d) ராம்கோ சிமெண்ட் / Ramco cement
45. பின்வரும் அமைப்புகளில் எது இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறது?
Which of the following organisation calculates Gross Domestic Product (GDP) in India?
(a) தேசிய புள்ளியியல் அலுவலகம் / National Statistical Office
(b) மாநில புள்ளியியல் அலுவலகம் / State Statistical Office
(c) இந்திய புள்ளியியல் அலுவலகம் / Indian Statistical Office
(d) இந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India
46. கீழ்க்காண்பவைகளை பொருத்துக:
விழாக்கள் மாநிலங்கள்
அ. லோசார் 1. தெலங்கானா
ஆ. போனாலு 2. லடாக்
இ. பூரம் 3. அசோம்
ஈ. பிகு 4. கேரளா
Match the following:
Festival States
a. Losar 1. Telengana
b. Bonalu 2. Ladakh
c. Pooram 3. Asom
d. Bihu 4. Kerala
a b c d
a. 2 1 4 3
b. 2 1 3 4
c. 1 2 3 4
d. 3 2 1 4
47. மிதமான மழைப்பொழிவு பகுதியில், ஜனவரி மற்றும் ஜீலை மாதத்தின் சராசரி வெப்பநிலையின் வேறுபாடு
In the region of moderate rainfall, the average temperature in the month of January and July varies between
(a) 16OC – 30OC
(b) 18OC – 32OC
(c) 20OC – 34OC
(d) 22OC – 36OC
48. இந்தியாவின் பழமையான குடிமக்கள் என்று கருதப்படுகிறவர்கள்
The oldest inhabitants of India are considered to be
(a) மங்கோலியர்கள் / Mongoloids
(b) நீக்ரோக்கள் / Negritoes
(c) இந்தோ ஆரியர்கள் / Indo-Aryans
(d) மத்திய தரைகடல் வாழ் மக்கள் / Mediterranceans
49. கீழ்க்கண்ட வரிசைப்பட்டியல் I, II கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடைகளை பொருத்துக:
வரிசை I வரிசை II
அ. புலந்த் தர்வாசா, பதேப்பூர் சிகரி 1. அலாவுதின் கில்ஜி
ஆ. அலாய் தர்வாசா, டில்லி 2. அக்பர்
இ. மோதி மசூதி, டில்லி 3. ஷாஜஹான்
ஈ. மோதி மசூதி, ஆக்ரா 4. ஓளரங்கசீப்
Match the List I with List II and select the correct answer from the codes given below in the Lists:
List I List II
a. Buland Darwaza, Fatehpur Sikri 1. Alauddin Khilji
b. Alai Darwaza, Delhi 2. Akbar
c. Moti Masjid, Delhi 3. Shahjahan
d. Moti Masjid, Agra 4. Aurangazeb
a b c d
a. 1 2 3 4
b. 2 1 4 3
c. 1 2 4 3
d. 4 1 3 2
50. மாலிக் பக்கிருதீன் ஜீனா என்பது எந்த சுல்தானின் இயற்பெயர்
The Malik-Fakhr-Ud-Din-Juna was the original name of the Sultan
(a) மாலிக்கபூர் / Malik Kafur
(b) முகமது பின் துக்ளக் / Mohamed Bin Tughlaq
(c) முஜாகீத் / Mujahid
(d) நிசாம் ஷா / Nizam Shah
51. மதச் சார்பற்ற என்பதன் உண்மையான பொருள்
Secular in real sense means
(a) ஒரு மத அரசு / One religious state
(b) அரச மதம் என்ற ஒன்று இல்லை / Does not have a state religion
(c) இரு மத அரசு / Two religious state
(d) பல மத அரசு / Multi religious state
52. பின்வரும் மாநிலங்களில் ஈரவை உள்ள சட்டமன்றம் எவை?
1. பீகார்
2. குஜராத்
3. கர்நாடகா
4. உத்திரபிரதேசம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
Which of the following states has a Bicameral Legislature?
1. Bihar
2. Gujarat
3. Karnataka
4. Uttar Pradesh
Select the correct answer using the codes given below:
(a) 1, 2, 3 மற்றும் 4 / 1,2,3 and 4
(b) 1, 3 மற்றும் 4 மட்டும் / 1,3 and 4 only
(c) 2, 3 மற்றும் 4 மட்டும் / 2,3 and 4 only
(d) 1 மற்றும் 4 மட்டும் / 1 and 4 only
53. இந்திய அரசமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்தப் பகுதியில் எடுத்துரைக்கப்படுள்ளது?
Which part of the Indian Constitution deals with Fundamental Duties?
(a) பாகம் II / Part II
(b) பாகம் III / Part III
(c) பாகம் IV A / Part IV A
(d) பாகம் V / Part V
54. “ரிட் ஆப் மேண்டமுஸ்” என்பதன் பொருள் (Writ of Mandamus)
The writ of “Mandamus” means
(a) ஆட்கொணர்வு / To have the body of
(b) தடை செய்தல் / To forbid
(c) சான்றளித்தல் / To certify
(d) ஆணையிடுதல் / We command
55. இந்திய அரசமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
The Constitution of India was finally adopted on
(a) 26 டிசம்பர் 1949 / 26 December 1949
(b) 26 ஜனவரி 1950 / 26 January 1950
(c) 26 நவம்பர் 1949 / 26 November 1949
(d) 30 நவம்பர் 1949 / 30 November 1949
56. கீழ்க்காணும் எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலமாகக் “கல்வி” என்பது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது?
From which of the following Constitutional Amendments “Education” was transferred from State List to concurrent List?
(a) 24-வது திருத்தச்சட்டம் / 24th Amendment Act
(b) 25-வது திருத்தச்சட்டம் / 25th Amendment Act
(c) 42-வது திருத்தச்சட்டம் / 42nd Amendment Act
(d) 44-வது திருத்தச்சட்டம் / 44th Amendment Act
57. PURA என்பதன் விரிவாக்கம்
Expand PURA
(a) பொதுப் பயன்பாடுகள் ஒழுங்குமுறை ஆணையம் / Public Utilities Regulatory Authority
(b) பொதுப் பயன்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டம் / Public Utilities Regulatory Act
(c) கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் / Providing Urban Amenities in Rural Areas
(d) பிலிப்பைன்ஸ் யூராலஜி குடியிருப்பாளர்கள் சங்கம் / Philippine Urology Residents Association
58. LPG மாதிரி வளர்ச்சியை அறிமுகப்படுத்தியவர்
The LPG Model of development was introduced by
(a) ராஜீவ் காந்தி / Rajiv Gandhi
(b) Dr.மன்மோகன் சிங் / Dr.Manmohan Singh
(c) வி.பி.சிங் / V.P.Singh
(d) வாஜ்பாய் / Vajbhai
59. இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டம் ——- மாதிரியைப் பின்பற்றியது
India’s First Five Year Plan was based on
(a) ஹராட்-டோமர் / Harrod Domer Model
(b) ஆல்பிரட் மார்ஷல் / Alfred Marshal Model
(c) பால் சாமுவேல்சன் / Paul Samuelson
(d) ஏ.கே.சென் இன்டெக்ஸ் / A.K.Sen Index Model
60. பனகல் அமைச்சரவையின் போது தமிழ்நாட்டில் பணியாளர் தேர்வு வாரியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
In Tamil Nadu which year the Staff Selection Board was established by Panagal Ministry?
(a) 1916
(b) 1920
(c) 1924
(d) 1923
61. ஜின்னா, தனது 14 அம்ச திட்டத்தை அறிவித்த நாள்
Jinnah announced his 14 points on
(a) டிசம்பர் 13, 1928 / December 13, 1928
(b) டிசம்பர் 31, 1928 / December 31, 1928
(c) டிசம்பர் 13, 1929 / December 13, 1929
(d) டிசம்பர் 31, 1929 / December 31, 1929
62. எந்த வகை சமூக இயக்கம் காந்திய தேசியத்திற்கு பெரிதும் பங்களித்தது?
What mode of movement contributed much to the birth of Gandhian Nationalism?
(a) போரியல் இயக்கம் / Militant Movement
(b) இடதுசாரி இயக்கம் / Left-leaning Movement
(c) உழவர் இயக்கம் / Peasant Movement
(d) பழங்குடி இயக்கம் / Tribal Movement
63. லாலா லஜபதிராய் இறந்தது எப்போது?
Lala Lajpat Rai was died on
(a) 17 நவம்பர் 1926 / 17, November, 1926
(b) 17 நவம்பர் 1927 / 17, November, 1927
(c) 17 நவம்பர் 1928 / 17, November, 1928
(d) 17 நவம்பர் 1929 / 17, November, 1929
64. கல்நிறுத்தி வைக்கும் மரபினை தமிழகத்தில் காணப்படும் இடம்
In Tamil Nadu “Stone Alignment Burial” is found in
(a) கொடுமணல் / Kodumanal
(b) காஞ்சிபுரம் / Kanchipuram
(c) ஆதிச்சநல்லூர் / Adhichanallur
(d) கீழடி / Keezhadi
65. மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்
Marudu Pandiyars hanged at
(a) விருபாட்சி / Virupakshi
(b) காளையார் கோவில் / Kalaiyar Koil
(c) திருப்பத்தூர் / Tiruppathur
(d) கயத்தாறு / Kayatharu
66. ———- இயக்கமானது “காங்கிரஸின் கலகம்” என்று குறிப்பிடப்பட்டது
———— movement was termed as “Congress Rebellion”
(a) ஒத்துழையாமை இயக்கம் / Non-co-operation Movement
(b) சைமன் குழு/புறக்கணிப்பு இயக்கம் / Simon Commission/Boycott Movement
(c) சட்ட மறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement
(d) வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
67. பிரிட்டிஷ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் கடலாதிக்க வலிமைக்கு சவாலாக இருந்த தமிழனின் பெயரை குறிப்படுக:
Name the Tamilian who challenged the Maritime Might of the British Imperialism and the East India Company
(a) கிருஷ்ணமாச்சாரி / Krishnamachari
(b) வ.உ.சிதம்பரம்பிள்ளை / V.O.Chidambaram Pillai
(c) ஈ.வே.ராமசாமி / E.V.Ramasamy
(d) சி.ராஜாஜி / C.Rajaji
68. எந்த ஆங்கில படை அதிகாரி 1783-ல் பாஞ்சாலங் குறிச்சி கோட்டையை தாக்கினார்?
Which English Army Officer attacked the Panchalamkurichi Fort in 1783?
(a) வில்லியம் பிளின்ட் / Willaim Flint
(b) வில்லியம் புல்லர்டன் / William Fullerton
(c) பானர்மேன் / Bannerman
(d) காலின் மெக்காலே / Collin Maucaulay
69. மருதுபாண்டியன் மற்றும் வெள்ளை மருது தூக்கிலிடப்பட்ட கோட்டை
Marudu Pandyan and Vella Marudu were executed at the fort of
(a) திருப்பத்தூர் / Tiruppatur
(b) வெள்ளைக்கோட்டை / Vellakottai
(c) திருமயம் / Thirumayam
(d) திண்டுக்கல் / Dindigul
70. 1926ஆம் ஆண்டு நடைபெற்ற “அகில உலக பெண்கள் வாக்குரிமை ஒன்றிய மாநாட்டில்” இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் யார்?
Who participated in the “International Women’s Suffrage Alliance Congress” held on 1926?
(a) அன்னிபெசன்ட் / Annie Besant
(b) மணியம்மை / Maniyammai
(c) ருக்மணி லட்சுமபதி / Rukmani Lakshmipathy
(d) விஜய லட்சுமி பண்டிட் / Vijaya Lakshmi Pandit
71. சிவகங்கை வேலுநாச்சியாரின் “உடையாள் படை”க்கு தலைமையேற்றவரின் பெயரை குறிப்பிடுக:
Name the Captain of “Udayal Padai” of Queen Velu Nachiyar of Sivaganga:
(a) வெள்ளச்சி / Vellachi
(b) லஷ்மி / Lakshmi
(c) குயிலி / Kuyili
(d) முத்தாத்தாள் / Muthathal
72. 2020-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக —— இருந்தது
———- was the major sources of irrigation in Tamil Nadu during 2020-21
(a) கால்வாய்ப் பாசனம் / Canal Irrigation
(b) நீர்தேகக்கப் பாசனம் / Tank Irrigation
(c) குழாய்க் கிணற்றுப் பாசனம் / Tube Well Irrigation
(d) திறந்தவெளி கிணற்றுப் பாசனம் / Open Well Irrigation
73. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
1. மேட்டூர்-நீர்மின் திட்டம்
2. நெய்வேலி-அணுஉலை திட்டம்
3. கல்பாக்கம்-வீட்டு உபயோகப் பொருட்கள்
4. திருப்பூர்-தோல் பொருட்கள்
Which of the following pair is correctly matched?
I. Mettur – Hydro electric project
II. Neyveli – Thermal project
III. Kalpakkam – Ceramics
IV. Tirupur – Leather products
(a) 1 மட்டும் சரி / I only correct
(b) 1 மற்றும் 2 சரி / I and II are correct
(c) 1 மற்றும் 3 சரி / I and III are correct
(d) 3 மற்றும் 4 சரி / III and IV are correct
74. தமிழக அரசால், “தொட்டில் குழந்தைத் திட்டம்”, ———-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
The Cradle Baby Scheme was launched in ——- by the Government of Tamil Nadu
(a) 1991
(b) 1992
(c) 1993
(d) 1994
75. சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து தருவதற்குப் பின்வருவனவற்றுள் யார் பொறுப்பு?
Which of the following is responsible for checking genuiness of community certificates?
(a) கிராம நிர்வாக அலுவலர் மட்டும் / VAO alone
(b) வட்டாட்சியர் மட்டும் / Tahsildar alone
(c) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் / District Employment Officer
(d) மாவட்ட கண்காணிப்புக்குழு / District Level Vigilance Committee