Tnpsc Model Question Paper 22 – General Studies in Tamil & English
1. பின்வருவனவற்றுள் எது/எவை கார்பனின் மாற்றுரு அல்ல?
(அ) வைரம்
(ஆ) கார்பொரண்டம்
(இ) கிராபைட்
(ஈ) புல்லரீன்
Which of the following is/are not an allotrope of Carbon?
1. Diamond.
2. Carborundum
3. Graphite
4. Fullerene
(a) அ மற்றும் இ / 1 and 3
(b) ஆ மற்றும் ஈ / 2 and 4
(c) ஆ மட்டும் / 2 alone
(d) அ, இ மற்றும் ஈ / 1, 3 and 4
2. உணவு வலை என்பது
A food web consists of
(a) உணவுச்சங்கிலியின் ஒரு பகுதி / A portion of a food chain
(b) உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் சிதைப்பன / Producer, consumer and decomposers
(c) உணவுச் சங்கிலியின் பிணைப்பு / Interlocking food chains
(d) ஒத்த நுகர்வோரின் தொகுப்பு / A set of similar consumers
3. பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள இடம்
Bandipur wildlife sanctuary situated at
(a) முதுமலை / Mudumalai
(b) மைசூர் / Mysore
(c) கேரளா / Kerala
(d) ராஜஸ்தான் / Rajasthan
4. பரிணாமவியலில் “பயன் மற்றும் பயனற்ற” கோட்பாட்டினை முன்மொழிந்தவர்
In evoloution, “use and disuse theory” was proposed by
(a) சார்லஸ் டார்வின் / Charles Darwin
(b) ஆல்பரட் வாலஸ் / Alfred Wallace
(c) லாமார்க் / Lamarck
(d) ஹாட்டன் / Hutten
5. கீழ்க்கண்ட எந்தச் சேர்மம் உரமாகப் பயன்படுகின்றன?
Which of the following compound is used as a fertilizer?
(a) அம்மோனியம் குளோரைடு / Ammonium Chloride
(b) அம்மோனியம் புரோமைடு / Ammonium Bromide
(c) அம்மோனியம் ஃபுளுரைடு / Ammonium Fluoride
(d) அம்மோனியம் ஆக்சைடு / Ammonium Oxide
6. ஒரு நீர்மக் கரைசலின் pH, 25OC வெப்பநிலையில் 8 என்றால், அதன் pOH எதற்கு சமம்?
If pH of any Aqueous Solution at 25O C is 8, then its pOH is equal to
(a) 1
(b) 7
(c) 0
(d) 6
7. தேனை அதன் மெழுகிலிருந்து பிரிக்க பயன்படுவது
Honey is separated from bees wax with help of
(a) மையவிலக்கி / Centrifuge
(b) மையநோக்கி / Centripetal
(c) தளவிளைவாக்கி / Polarizer
(d) பகுப்பான் / Analyzer
8. அண்டத்தில் புவிஈர்ப்பு முடுக்கம் இல்லையெனில் கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
If “g” is absent in the Universe, which of the following statement is True?
(a) எடையின்மை என்ற உணர்வை ஏற்படுத்தும் / It leads to the sensation of weightlessness
(b) முற்றிலும் உருக்குலைவை ஏற்படுத்தும் / It leads to complete destruction
(c) இரவு பகல் என்பன நாம் பார்க்கலாம் / We have day and night
(d) (அ) மற்றும் (ஆ) இரண்டும் சரி / Both (A) and (B) are correct
9. நமது உணவின் முக்கிய பகுதியாகவும் மேலும் நோய் தொற்றினை எதிர்த்து போராட உதவி செய்வதும் ——— ஆகும்.
The main component of the food which helps our body to fight against infections is
(a) கார்போஹைட்ரேட் / Carbohydrate
(b) புரதம் / Protein
(c) கொழுப்பு / Fat
(d) ஸ்டார்ச்சு / Starch
10. SVAMITVA திட்டம் தொடர்பான அறிக்கையை கவனியுங்கள்:
1. கிராமப்புற நிலப்பதிவேடுகளைப் புதுப்பித்தல், கிராமப்புறக் குடும்பங்களுக்கு உரிமைப் பதிவேடு வழங்குதல் மற்றும் சொத்து அட்டைகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2. SVAMITVA என்பது பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மத்திய திட்டமாகும்.
3. இத்திட்டம் நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்குள் ஒரு கட்டமாக செயல்படுத்தப்படும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
Consider the statement in regard to the SVAMITVA Scheme:
1. The aim of this scheme is to update rural land records, providing a record of rights to village households and issue property cards.
2. SVAMITVA is a central scheme of the ministry of Panchayat Raj and Rural Development.
3. This scheme to be implemented across the country in a phased manner over a period of ten years.
Select the correct answer by using the code mentioned below:
(a) 1 மற்றும் 2 மட்டுமே / only 1 and 2
(b) 1 மற்றும் 3 மட்டுமே / only 1 and 3
(c) 2 மற்றும் 3 மட்டுமே / only 2 and 3
(d) 3 மட்டுமே / only 3
11. பொருளாதார சரிவின் அறிகுறி எது?
1. உயரும் கூலி.
2. உயரும் வேலையின்மை.
3. விரைவான தொழில்வளர்ச்சி.
4. நிலையான அரசியல் சூழல்
Which is a sign of Economic recession?
1. Rising wages.
2. Rise in unemployment
3. Rapid Industrialization
4. Stable Political Conditions
(a) 2, 3, 1, 4 (b) 1, 3, 4, 2 (c) 4, 3, 2, 1 (d) 3, 1, 4, 2
12. பின்வரும் திட்டங்களில் திருநங்கைகளின் நலன் மற்றும் ஒட்டுமொத்த மறுவாழ்விற்கான மத்திய அரசின் திட்டம் எது?
Which among the following schemes is a central sector scheme for comprehensive rehabilitation for welfare of transgender persons?
(a) ஸ்மைல் / SMILE
(b) நமஸ்தே / NAMASTE
(c) அம்பர் / AMBER
(d) வெஸ்ட் / WEST
13. “டிஜிட்டல் இந்தியா” எனும் முன்முயற்சி செயல்படுத்தப்பட்ட ஆண்டு
“Digital India” initiative was launched in the year
(a) 2012
(b) 2013
(c) 2014
(d) 2015
14. “பொதுவுடைமை அறிக்கை” எனும் நூலை எழுதியவர்கள் யார்?
Who wrote the book “Communist Manifesto”?
(a) லெனின் / Lenin
(b) ஸ்டாலின் / Stalin
(c) கார்ல் மாக்ஸ் மற்றும் பிரெடிரிக் ஏங்கல்ஸ் / Karl Marx and Friedrich Engels
(d) ஆடம் ஸ்மித் / Adam Smith
15. கோட்டை அமீர் விருது 2022 ஆண்டில் திரு.ஜே.முகமது ரஃபி பெற்றார். இவர் ——– மாவட்டத்தைச் சார்ந்தவர்.
Kottai Ameer Award for the year 2022 is presented to Thiru.J.Mohammed Rafi of ———- District of Tamil Nadu.
(a) மதுரை / Madurai
(b) கோயம்புத்தூர் / Coimbatore
(c) திருப்பூர் / Tiruppur
(d) சிவகங்கை / Sivagangai
16. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, எந்த யூனியன் பிரதேசத்தில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ளது?
According to census of 2011, the union territory has the lowest density of population is
(a) டாமன் மற்றும் டையூ / Daman and Diu
(b) லட்சத்தீவு / Lakshadweep
(c) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் / Andaman and Nicobar Islands
(d) தாதர் மற்றும் நகர் ஹவேலி / Dadar and Nagar Haveli
17. சர்வதேச அளவில் வெப்ப மண்டல செர்னோசெம் என்று அழைக்கப்படக் கூடிய மண் ——–. இவை இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய மண் குழுவைச் சார்ந்தது.
The ——- soil is internationally known as tropical chernozems; are the third longest soil group in India.
(a) பாலைவன மண் / Desert soil
(b) வண்டல் மண் / Alluvial soil
(c) சிவப்பு மண் / Red soil
(d) கருப்பு மண் / Black soil
18. ——– ஆறு இந்தியாவில் உருவானது இல்லை.
The ——– River that does not originate in India.
(a) பியாஸ் / Beas
(b) சட்லஜ் / Sutlej
(c) செனாப் / Chenab
(d) ரவி / Ravi
19. எந்தவகை காலநிலை பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது?
அ. ஆண்டு சராசரி வெப்பநிலை 18OC க்கு மேல்.
2. பருவகால மழை (கோடை காலத்தில்)
3. மழைமறைவு பகுதியில் அமைந்துள்ளது.
Which type of climate is having the following characteristics?
1. Mean annual temperature is above 18OC
2. Seasonal rainfall (in summer)
3. Stretches over the rain shadow region.
(a) மிதவறண்ட புல்வெளி காலநிலை / Semi Arid Steppe Climate
(b) அயனமண்டல பாலைவனக் காலநிலை / Hot desert climate
(c) மிதவெப்ப ஈரக் காலநிலைகள் / Mesothermal climate
(d) வெப்பமண்டல ஈரமான காலநிலை / Tropical Moist Climate
20. ஓசோன் அடுக்கு முக்கியமாகப் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 முதல் 15 கி.மீ.க்கு மேல் குவிந்துள்ளது. அதன் பெயர் என்ன?
Ozone layer concentrates mainly above 10 to 15 km from the earth’s surface. This layer is known as
(a) ட்ரோபோஸ்பியர் / Troposhere
(b) ஸ்ரேட்டோஸ்பியர் / Stratosphere
(c) மீசோஸ்பியர் / Mesosphere
(d) அயனோஸ்பியர் / Ionosphere
21. பின்வருவனவற்றுள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர்?
அ. குறும்பர்.
ஆ. பணியர்.
இ. தோடர்.
ஈ. பைன்னர்
Choose the correct options among the following major tribes in Tamil Nadu
1. Kurumbas
2. Paniyan
3. Toda
4. Bhaina
(a) அ, ஆ மற்றும் ஈ / 1, 2 and 4
(b) ஆ, இ மற்றும் ஈ / 1, 3 and 4
(c) அ, ஆ மற்றும் இ / 1, 2 and 3
(d) இ மற்றும் ஈ / 3 and 4
22. குப்தர் காலத்தில் இருந்த அரசாங்கத்தின் வகையைக் குறிப்பிடவும்
Name the type of government existed during the Gupta period
(a) குழு ஆட்சி / Polyarchy
(b) முடியாட்சி / Monarchy
(c) அராஜக ஆட்சி / Anarchy
(d) எதேச்சதிகார ஆட்சி / Autarchy
23. குவாஜா ஜஹான் என்பவர் கீழ்க்கண்ட சுல்தானின் வசீர் ஆக இருந்தவர்
Khwaja Jahan was the Wazir of the following Sultan
(a) முகமது பின் துக்ளக் / Mohamed Bin Tuglaq
(b) பெரோஸ் துக்ளக் / Firoz Tughlaq
(c) முதலாம் முகமது / Mohamed I
(d) இரண்டாம் துக்ளக் ஷா / Tuglaq Shah II
24. பின்வரும் அரசுகளில், எந்த அரசு “சௌத்” எனப்படும் வரியை விதித்தது?
Which among the following dynasties levied the tax known as “Chauth”?
(a) மராட்டியர் / Marathas
(b) சோழர்கள் / Cholas
(c) சண்டிளாஸ் / Chandellas
(d) மௌரியர்கள் / Mauryas
25. சங்கம வம்சத்தின் கடைசி மன்னர்————
The last ruler of Sangama Dynasty —
(a) முதலாம் தேவராயர் / DevaRaya-I
(b) மல்லிகார்ஜீனராயர் / MallikarjunaRaya
(c) இரண்டாம் விருபாக்ஷர் / Virupaksha-II
(d) இரண்டாம் தேவராயர் / DevaRaya-II
26. கோனார்க் சூரியக்கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Konark Sun Temple is also called as
(a) நீல பகோடோ / Blue Pagoda
(b) தங்க பகோடா / Golden Pagoda
(c) கருப்பு பகோடா / Black Pagoda
(d) வெள்ளை பகோடா / White Pagoda
27. தௌலதாபாத்திற்கு அருகில் வானியல் ஆய்வுக்கூடம் கட்டியவர் யார்?
An astronomical observatory near Dauladabad was built by
(a) அலாவுதீன் ஹசன் கங்கு / Alauddin Hasan Gangu
(b) முகமது கவாண் / Mohamed Gawan
(c) ஹீமாயூன் ஷா / Humayun Shah
(d) பெரோஷா பாமினி / Firoz Shah Bahmini
28. ஒவ்வொரு நபரும் தனது நம்பிக்கையைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்க உரிமை உண்டு. மத மற்றும் தொண்டு நிறுவனங்களை நிறுவவும் பராமரிக்கவும் ———- உரிமை தேவைப்படுகிறது.
Every person has the right to freely practice his or her faith established and maintain Religious and Charitable Institutions.
(a) சுதந்திர உரிமை / Rights to Freedom
(b) சம உரிமை / Rights to Equality
(c) கலாச்சார மற்றும் கல்வி உரிமை / Cultural and Educational rights
(d) மத சுதந்திரத்திற்கான உரிமை / Rights Freedom of Religion
29. “நிர்வாகச் சட்டம், சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது” என விவரித்தவர் யார்?
Who described “Administrative Law as contrary to the Rule of Law?”
(a) P.C.ஜெயின் / P.C.Jain
(b) A.V.டெய்ஸி / A.V.Dicey
(c) ஐவர் ஜென்னிங்ஸ் / Ivor Jennings
(d) C.F.ஸ்ட்ராங் / C.F.Strong
30. சர்காரியா ஆணையம் எதைக் குறித்துப் பரிந்துரைக்க அமைக்கப்பட்டது?
The aim of appointing the Sarkaria commission was to make recommendations on
(a) ஊழல் ஒழிப்பு / Eradicate corruption
(b) ஒன்றிய-மாநில உறவுகள் / Centre-State relation
(c) உள்ளாட்சி நிர்வாக மேம்பாடு / Develop Local Administration
(d) நிர்வாக நிலைகள் குறித்து ஆராய / Study the levels of Administration
31. ஒரு மாநிலத்தின் செயலாற்றும் அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும் எனக்கூறும் அரசமைப்பு விதி எது?
Which article of the Indian constitution states that the Executive Power of the state shall be vested with the Governor?
(a) விதி 153 / Article 153
(b) விதி 154 / Article 154
(c) விதி 155 / Article 155
(d) விதி 156 / Article 156
32. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை?
Which of the following is not matched correctly?
(a) சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் – 1955 / The protection of Civil Rights Act – 1955
(b) வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் – 1972 / The Wildlife Protection Act – 1972
(c) வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980 / The Forest Conservation Act – 1980
(d) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் – 1957 / The Representation of People’s Act – 1957
33. அடிப்படைக் கடமைகளைப் பற்றிய பின்வரும் சொற்றொடர்களில் எவை சரியானவை?
1. 6-14 வயது உள்ள குழந்தைகளுக்குக் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கொடுத்தல்.
2. பொதுச் சொத்தைப் பாதுகாத்தல்.
3. அறிவியல் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ளல்.
Which of the following statements are true about fundamental duties?
1. To provide free and compulsory education to children between the age 6-14 years.
2. To safeguard public property
3. To develop Scientific Temper
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மற்றும் 1 ஆகியன மட்டும் / 2 and 1 only
(c) 2 மற்றும் 3 ஆகியன மட்டும் / 2 and 3 only
(d) 1, 2 மற்றும் 3 ஆகியவை / 1, 2 and 3
34. 1. அடிப்படை உரிமைகள் பகுதி III-இல் சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
2. இந்தியாவின் மகா சாசனம் என்று விவரிக்கப்படுகிறது பகுதி III.
மேற்கண்ட கூற்றில் எது/எவை சரியானது/சரியானவை.?
1. The fundamental Rights are enshrined in Part III of the constitution from Article 12 to 35
2. Part III of the constitution is rightly described as the Magna Carta of India.
Which of the above statement is/are true?
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 1 மற்றும் 2 / 1 and 2
(d) இவற்றில் எவையும் இல்லை / None of the above
35. தகவல் அறியும் உரிமைச்சட்டம் இயற்றப்பட்டதின் அடிப்படை நோக்கமாவது ——
The foundational objective of enacting the Right to Information Act is to ensure —–
(a) சமூக நீதி / Social Justice
(b) பொருளாதார வளர்ச்சி / Economic development
(c) செயல்திறனும், செயல்வலிமையுமான ஆட்சி முறை / Efficiency and effectiveness of governance
(d) பொறுப்பான, ஒளிவு மறைவற்ற ஆட்சி முறை / Accountability and transparency in governance
36. டெல்லி சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையுடன் கூடிய தேசியத் தலைநகரப் பகுதியாக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தம்
Delhi has emerged as the National Capital territory with a legislature and a council of ministers by
(a) 65வது அரசமைப்பு சட்டத்திருத்தம் / 65th Constitional Amendment
(b) 67வது அரசமைப்பு சட்டத்திருத்தம் / 67th Constitional Amendment
(c) 69வது அரசமைப்பு சட்டத்திருத்தம் / 69th Constitional Amendment
(d) 71வது அரசமைப்பு சட்டத்திருத்தம் / 71st Constitional Amendment
37. மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி (2020) இந்தியா ———- தரப்பட்டியல் இடத்தில் உள்ளது.
According to the Human Development Report (2020) India ranked at ———- Place.
(a) 159
(b) 131
(c) 100
(d) 50
38. “வறுமைக் கடலில் தீவுகளாக நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழமுடியாது” என்ற சொற்களை முன்மொழிந்தவர் ——
The lines “We can’t live a happily as islands in a sea of poverty” were propounded by
(a) திரு.நீலகாந்த் ராத் / Mr.Nilkantha Rath (b) எம்.எஸ்.சுவாமிநாதன் / M.S.Swaminatha
(c) டாக்டர்.வி.எம்.தண்டேகர் / Dr.V.M.Dandekar (d) திரு.பி.டி.ஓஜா / Mr.P.D.Ojha
39. கீழ்க்காணும் நிகழ்வுகளை காலவாரியாக வரிசைப்படுத்துக.
1. வட்டார கிராம வங்கிகள்.
2. விதை மசோதா.
3. ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம்.
4. கிசான் கடன் அட்டை
Arrange the following events in Chronological Order
1. Regional Rural Banks
2. Seeds Bill
3. Comprehensive Crop Insurance Scheme
4. Kisan Credit Card
(a) 3, 1, 2, 4
(b) 2, 3, 4, 1
(c) 1, 3, 4, 2
(d) 4, 2, 3, 1
40. எந்த ஒரு வரி நேரடி வரிக்கு தொடர்பில்லாதது?
Which one tax is not related to direct tax?
(a) நன்கொடை வரி / Gift Tax
(b) சொத்து வரி / Wealth Tax
(c) வருமான வரி / Income Tax
(d) சுங்க வரி / Customs Duty
41. கீழ்க்கண்ட பணிகளில் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் பணிகள் எது/எவை?
1. பணத்தை வெளியிடுதல்.
2. வங்கி கடன்களைக் கட்டுப்படுத்துதல்.
3. அரசில் வங்கி.
4. மாற்று வீதத்தைக் கட்டுப்படுத்துதல்
Which of the following function/s is/are performed by the Reserve Bank of India?
1. Issue of currency
2. Control of Bank Credit
3. Bankers to the Government
4. Control of Exchange rate
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 1, 2 மற்றும் 4 மட்டும் / 1, 2 and 4 only
(d) 1, 2, 3 மற்றும் 4 / 1, 2, 3 and 4
42. அட்டல் இன்னோவேஷன் மிஷன் ———-ஆல் மேம்படுத்தப்பட்டது.
Ata Innovation Mission was developed by ————-
(a) நாஸ்காம் / NASSCOM
(b) நிதி ஆயோக் / Niti Aayog
(c) பாரத் இண்டர்ஃபேஸ் ஃபார் மணி செயலி / Bharat Interface for Money App
(d) பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா / Pradhan Mantri Gram Sadak Yojana
43. கீழ்க்கண்ட கூற்றகள் சரியா தவறா என்பதைக் குறிப்பிடவும்.
1. கலப்புப் பொருளாதாரத்தில், பொது மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்து இருத்தல்.
2. இந்தியாவில் கலப்புப் பொருளாதார முறை பின்பற்றப்படுகிறது.
State whether the statements are true or false
1. In mixed economy, both public and private sector Co-existence
2. Mixed economy followed by India
(a) 1 மற்றும் 2 இரண்டும் சரி / Both 1 and 2 are true
(b) 1 மற்றும் 2 இரண்டும் தவறானவை / Both 1 and 2 are false
(c) 1 சரி; ஆனால் 2 தவறானது / 1 is true but 2 is false
(d) 1 தவறானது; ஆனால் 2 சரி / 1 is false but 2 is true
44. “————– அவர்களின் இரத்தத் தியாகம் மூலம், இந்த மாவீரர்கள் சுதந்திர இந்தியாவின் வருங்கால வீரர்கள் நிலைநிறுத்த வேண்டிய பாரம்பரியங்களை நிறுவியுள்ளனர்”
18 மார்ச் 1944 அன்று இராணுவ வீரர்களுக்கு இந்த அறிக்கையை வழங்கியவர் யார்?
“————- with their blood sacrificed, these heroes have established traditions, which the future soldiers of free shall have to uphold”. Who delivered this statement to the soldiers on 18th March 1944?
(a) சுபாஷ் சந்திர போஸ் / Subhash Chandra Bose
(b) பட்டாபி சித்தராமையா / Pattabhi Sittaramayya
(c) கேப்டன் லட்சுமி சேகல் / Captain Lakshmi Sahgal
(d) ராஷ் பிஹாரி போஸ் / Rash Behari Bose
45. “சாரே ஜஹாங்சே அச்சா” என்ற புகழ் பெற்ற தேசப்பற்று பாடலை தொகுத்தவர்
The famous Patriotic song “Sare Jahanse Ache” was composed by ———
(a) முகமது இக்பால் / Mohammed Iqbal
(b) நேரு / Nehru
(c) தாகூர் / Tagore
(d) சையது அலி / Syed Ali
46. எந்த இயக்கத்தின் மூலமாக “செய் அல்லது செத்துமடி” என்னும் பிரச்சாரம் அறியப்பட்டது?
The “Do or Die” campaign became popular through ——–
(a) கிலாபத் இயக்கம் / Khilafat Movement
(b) ஒத்துழையாமை இயக்கம் / Non Co-operation Movement
(c) சட்ட மறுப்பு இயக்கம் / Civil Disobedience movement
(d) வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
47. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகி எனக் கருதப்படுபவர் யார்?
Who was known as the Heroine of Quit India Movement?
(a) அருணா ஆசப் அலி / Aruna Asaf Ali
(b) மேடம் காமா / Madam Cama
(c) அன்னிபெசன்ட் / Annie Besant
(d) அம்பிகா சரண் / Ambika Charan
48. இராஜாஜி சட்ட மறுப்புப் போராட்டத்தைத் தொடங்கிய நாள் ——-
Rajaji started the civil disobedience movement on —–
(a) மார்ச் 12, 1930 / March 12, 1930
(b) ஏப்ரல் 13, 1930 / April 13, 1930
(c) ஏப்ரல் 29, 1930 / April 29, 1930
(d) ஏப்ரல் 30, 1930 / April 30, 1930
49. சர்தார் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட இடம் ——-
Sardar Bhagat Singh was hanged at ———
(a) டெல்லி / Delhi
(b) லாகூர் / Lahore
(c) கல்கத்தா / Calcutta
(d) சிட்டகாங் / Chittagong
50. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
கி.பி.1858-ல் கானிங் பிரபு எந்த இடத்தில் மகாராணியார் பிரகடனத்தை வெளிட்டார்?
Choose the right anser: In which place Lord Canning published the Queen’s Proclamation on 1858?
(a) அலகாபாத் / Allahabad
(b) டெல்லி / Delhi
(c) வங்காளம் / Bengal
(d) கான்பூர் / Kanpur
51. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வை முதன்முதலில் மேற்கொண்டவர்
Adichchanallur site was first excavated by
(a) ஜான் மார்ஷல் / John Marshall
(b) ஆன்ட்ரூ ஜாகோர் / Andew Jagor
(c) புரூஸ் பூட் / Bruce Foote
(d) கன்னிங் ஹாம் / Cunning Ham
52.”சங்கம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது?
What does the word “Sangam” denotes?
(a) பெரியர்களின் அவை / Assembly of Elders
(b) கலைஞர்களின் அவை / Assembly of Artists
(c) தமிழ்க்கவிஞர்கள் அவை / Assembly of Tamil Poets
(d) தமிழ் அரசர்கள் அவை / Assembly of Tamil Kings.
53. விஜயநகரப் பேரரசுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்ததும், தலைநகர் விஜயநகரத்தில் இருந்து ரேணுகொண்டாவிற்கு மாற்று வழிவகுத்ததுமான போர் ——
The battle that gave a severe blow to the Vijayanagar Empire and there by paved the way for the transfer of cpital from Vijayanagar to Renukonda was ——–
(a) தலைக்கோட்டை போர் / Battle of Talaikotta
(b) தோப்பூர் போர் / Battle of Toppur
(c) திருப்புறம்பியம் போர் / Thiru Purambiam War
(d) முதல் கர்நாடகப்போர் / First Carnatic War
54. யாருடைய தலைமையின் கீழ் நவம்பர் 2-ம் தேதி 1927, மணிமேகலை சங்கம் என்கிற தேவதாசி பெண்களின் சங்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது?
On 2nd November 1927, the Manimegalai Sangam, a Devadasi Women’s Association organised a meeting at Coimbatore under the presidentship of ——–
(a) சௌத்திரி.வி.கோனாம்பாள் / Choudri.V.Konambal
(b) டாக்டர் முத்துலெட்சுமி / Dr.Muthulakshmi
(c) திருமதி அன்னம்மா ராஜா / Mrs.Annamma Raja
(d) திருமதி.அன்னிபெசன்ட் / Mrs.Annie Besant
55. கீழே கொடுக்கப்பட்டவர்களில் யார் 1968ம் ஆண்டு சுயமரியாதை திருமண பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
Who among the following personalities introduced the “Self Respect Marriage Protection Act” in 1968?
(a) பேரறிஞர் அண்ணா / Perarignar Anna
(b) இராஜாஜி / Rajaji
(c) பக்தவச்சலம் / Bhaktavatchalam
(d) காமராஜர் / Kamarajar
56. நீதி கட்சியில் சி.என்.அண்ணாதுரை ———– சேர்ந்தார்.
C.N.Annadurai join the Justice Party in ——
(a) கி.பி.1925 / 1925 A.D.
(b) கி.பி.1935 / 1935 A.D.
(c) கி.பி.1940 / 1940 A.D.
(d) கி.பி.1947 / 1947 A.D.
57. ஈ.வெ.ரா.பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஏன் தொடங்கினார்?
Why EVR Periyar started Self-respect movment?
(a) சாதி ஒழிப்பிற்காக / To abolish caste system
(b) சமயங்களை ஒழிப்பதற்காக / To abolish religious
(c) பிராமணியத்தினை ஒழிப்பதற்காக / To abolish Brahmanism
(d) காங்கிரசினை ஒழிப்பதற்காக / To abolish congress
58. “கொக்கொக்க கூம்பும் பருவத்து”—- என்ற குறளில் எதைப் போன்று காரிபத்தை முடிக்க வேண்டுமென்று வள்ளுவர் கூறுகிறார்?
As what animal should we become while doing a work; from the Kural “Kokoka Koombum Paruvathu”?
(a) கொக்கு / Crane
(b) ஆமை / Turtle
(c) முயல் / Rabbit
(d) எறும்பு / Ant
59. மன்னனின் குற்றமான இயல்பு எதுவென்று திருக்குறள் கூறுகிறது?
What are the vices of the King according to Thirukkural that makes the King not liked or offensive?
(a) வேண்டாத மகிழ்ச்சி / Unwanted pleasure
(b) பொய்யான மானம் / False honor
(c) கஞ்சத்தன்மை / Stinginess
(d) இம்மூன்றும் / All three
60. கீழ்க்காணும் பொருளை உடைய திருக்குறளை தேர்க:
“உண்மையான துறவிகள் வேடம் போட வேண்டிய தேவையில்லை. உலகம் பழிக்கின்ற தவறான செயல்களை ஒழித்துவிடுவது ஒன்றே துறவிகளுக்கு வேண்டுவது”
True saints need not show so by their outward appearance, if they abstain from things that are universely considered wrong would automatically lead them to sainthood-State the kural with this meaning.
(a) வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின் /
Vaanuyar Thotram Evanseyyum Thannenjam
Thaanari Kutrap Patin
(b) புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து. /
Purangundri Kantanaiya Renum Akagundri
Mukkir Kariyaar Utaiththu
(c) மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர் /
Manaththadhu Maasaaka Maantaar Neeraati
Maraindhozhukku Manthar Palar
(d) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் /
Mazhiththalum Neettalum Ventaa Ulakam
Pazhiththathu Ozhiththu Vidin.
61. ஞாலத்தின் மாணப் பெரிது எது?
What action is greater than the world itself?
(a) தக்க காலத்தில் செய்யப்படும் உதவி / Timely Help
(b) பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி / Help in anticipation of benefit
(c) பொறுமையாகச் செய்யப்படும் உதவி / Assistance in a timely manner
(d) பயனோடு கூடிய உதவி / Useful help
62. “யாருக்கும் வெட்கமில்லை” என்னும் நாடகத்தினை எழுதியவர் யார்?
Who wrote the drama titled “Yaarukkum Vetkamilla?”
(a) மௌலி / Mouli
(b) கிரேசி மோகன் / Crazy Mohan
(c) சோ / Cho
(d) எஸ்.வி.சேகர் / S.V.Sekar
63. இராம அவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆழ்வார் யார்?
Which of the Azhwar is very much involved in Ramavataar?
(a) குலசேகரர் / Kulasekarar
(b) பெரியாழ்வார் / Periyalwaar
(c) ஆண்டாள் / Aandaal
(d) திருமழிசையாழ்வார் / Thirumazhisaiyalwaar
64. “முல்லைப்பாட்டு” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Who is the author of “Mullai Paattu”?
(a) நல்லந்துவனார் / Nallanthuvanaar
(b) நத்தத்தனார் / Nathathathanaar
(c) நக்கீரர் / Nakeerar
(d) நப்பூதனார் / Napboothanaar
65. சரியானவற்றை பொருத்துக:
அ. நாழிகை வட்டில் 1. சிறிய அளவை
ஆ. நாழி 2. பெரிய அறுங்கோண அளவை
இ. அம்பாரம் 3. குதிரை கிராம் அளவு
ஈ. பதக்கு 4. நேர அளவு
Match the following:
a. Nazhigai Vattil 1. Smaller measure
b. Nazhi 2. Larger cubic content
c. Ambaram 3. Measuring horse gram
d. Padhakku 4. Hour gram
a b c d
a. 3 4 1 2
b. 2 3 4 1
c. 4 1 2 3
d. 1 2 4 3
66. தமிழ்நாட்டில் தேசிய விவசாய மின்னணு அங்காடிக்கான இணைய முகப்பு ———இல தொடங்கப்பட்டது.
In Tamilnadu the Electronic National Agricultural Market Portal was launched in ———-
(a) ஏப்ரல், 2015 / April, 2015
(b) ஏப்ரல், 2016 / April, 2016
(c) ஏப்ரல், 2017 / April, 2017
(d) ஜீன், 2016 / June, 2016
67. இந்தியாவில் ——- மாநிலம் மகளிர் உயிர்த் தொழில் நுட்பப் பூங்காவை தொடங்கியது
———- is the first state to establish Bio-technology part for women in India.
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) கேரளா / Kerala
(c) குஜராத் / Gujarat
(d) பஞ்சாப் / Punjab
68. தமிழக அரசின் கொள்கைக் குறிப்பு 2021-22ன் படி தமிழ் நாட்டுத் தொழில் வளர்ச்சியை அதனோடு தொடர்புடைய இந்திய அளவிலான தரவரிசையோடு பொருத்துக:
அ. துணி 1. முதலிடம்
ஆ. உணவுப் பதப்படுத்தல் 2. இரண்டாமிடம்
இ. ரப்பர் மற்றும் நெகிழ் 3. மூன்றாமிடம்
ஈ. வுhகன உற்பத்தி மற்றும் வாகன உதிரி பாகங்கள் 4. நான்காமிடம்
Match the Industrial Development of Tamil Nadu as per the policy noote of Govt. of Tamil Nadu 2021-22 with their corresponding ranks given in Indian level
(a) Textiles 1. First
(b) Food processing 2. Second
(c) Rubber and Plastic 3. Third
(d) Automobiles and Auto Components 4. Fourth
a b c d
a. 1 3 2 4
b. 3 2 4 1
c. 2 4 3 1
d. 4 1 3 2
69. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்திய முதல் மாநிலம் எது?
Which is the first state to employ differently abled, in the Mahatma Gandhi National Rural Employment Guarantee scheme?
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) கேரளா / Kerala
(c) கர்நாடகா / Karnataka
(d) குஜராத் / Gujarat
70. TNHSRP திட்டம் குறிப்பாகக் கவனம் செலுத்துவன:
1. தமிழகத்தில் பொருள் மற்றும் பிறந்த குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைத்தல்.
2. பழங்குடியினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
3. பின்தங்கிய குழுக்கள் மருத்துவமனைகளைப் பயன்படுத்துவதை வரவேற்றல்.
4. விபத்து பராமரிப்பு
TNHSRP focuses in particular the projects:
1. Reducing material and neo-natal mortality rates in Tamil Nadu
2. Improving tribal health
3. Facilitating use of hospitals by underprivileged groups
4. Accidential care
(a) 1 உண்மை ஆனால் 4 பொய் / 1 is true but 4 is false
(b) 1 மற்றும் 3 இரண்டும் உண்மை. ஆனால் 4 என்பது சரியான பதில்அல்ல / Both 1 and 3 are true; and 4 is not correct answer
(c) 4 உண்மை ஆனால் 3 பொய் / 4 is true 3 is false
(d) 1 மற்றும் 4 இரண்டும் உண்மை. 2 பொய் / Both 1 and 4 are true, 2 is false
71. தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
Tamil Nadu Police Museum is located at
(a) சைதாப்பேட்டை / Saidapet
(b) திருவல்லிக்கேணி / Triplicane
(c) எழும்பூர் / Egmore
(d) தாம்பரம் / Tambaram
72. தமிழ்நாடு சமூகநல வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு —
Tamil Nadu social Welfare Board (T.N.S.W.B) was formed in the year
(a) 1953
(b) 1954
(c) 1955
(d) 1965
73. தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளில் சேர ———-% இட ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
Tamil Nadu government has decided to introduce ——–% of horizontal reservation for govenement schools in admission to medicine engineering and other courses.
(a) 6.5%
(b) 7.3%
(c) 7.5%
(d) 7.7%
74. பொருத்துக:
கட்சி/இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ. மெட்ராஸ் திராவிட இயக்கம் 1. 1916
ஆ. சுயமரியாதை இயக்கம் 2. 1925
இ. தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு 3. 1944
ஈ. திராவிடர் கழகம் 4. 1912
Match the following:
Association/Party Year of the formation/Estabishment
a. Madras Dravidian Association 1.1916
b. Self Respect Movement 2. 1925
c. South Indian Liberal Federation 3. 1944
d. Dravida Kazhagam 4. 1912
a b c d
a. 4 2 1 3
b. 1 2 4 3
c. 4 1 2 3
d. 2 4 1 3
75. வ.உ.சிதம்பரனாரால் தூத்துக்குடியில் சுதேசிக் கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்டது. அவர்———–, ———— என்ற பெயர்களையுடைய இரண்டு கப்பல்களை வாங்கினார். அவை ————க்கும் ———-க்கும் இடையே செலுத்தப்பட்டது.
Swadeshi Steam Navigation Company was launched by V.O.Chidambaranar at Thoothukudi. He purchased two ships —— and ——- and plied them between ——- and ——–
(a) காலியா, லாவோ ; தூத்துக்குடி, கொலும்பு / Galia and Lavo; Thoothukudi and Colombo
(b) டாண்டயா, காலியா ; தூத்துக்குடி, பர்மா / Tania and Galia; Thoothukudi and Burma
(c) டான்யா, லாவோ பூம்புகார், பர்மா / Tania and Lavo; Poombhukar and Burma
(d) காலியா, டான்யா ; தூத்துக்குடி, இந்தோனேசியா / Galia and Tania; Thoothukudi and Indonesia