Tnpsc Model Question Paper 21 – General Studies in Tamil & English
1. கூற்று A : பி.ஆர்.அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்
காரணம் (R): இவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்
Assertion (A): B.R.Ambedkar launched Mahad Satyagraha
Reason (R): He wanted to Unite Hindus and Muslims
(a) (A) கூற்று சரி (R) காரணம் கூற்றை விளக்குகிறது / (A) is correct (R) explains (A)
(b) (A) கூற்று சரி (R) காரணம் கூற்றை விளக்கவில்லை / (A) is correct (R) does not explain
(c) (A) கூற்று சரி (R) காரணம் தவறு / (A) is correct (R) is wrong
(d) (A) கூற்று தவறு (R) காரணம் சரி / (A) is wrong (R) is correct
2. அலிபூர் குண்டு வெடிப்பு வழக்கில் அரவிந்த கோஷ்க்காக வழக்கை வாதாடியவர்
Aurobindo Ghosh was defended in the Alipore Bomb case by
(a) C.R.தாஸ் / C.R.Das
(b) மோதிலால் நேரு / Motilal Nehru
(c) புலாபாய் தேசாய் / Bhula Bhai Desai
(d) பிபின் சந்திர பால் / Bipin Chandra Pal
3. புகழ் பெற்ற மேற்கோளான “நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் விதியுடன் முயற்சி செய்தோம்” யாரால் வழங்கப்பட்டது?
The famous quote “Long years ago we made a tryst with destiny” was given by
(a) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் / Dr.B.R.Ambedkar
(b) ஜவஹர்லால் நேரு / PK.Jawaharlal Nehru
(c) மகாத்மா காந்தி / Mahatma Gandhi
(d) அபுல்கலாம் ஆசாத் / Abul Kalam Azad
4. கி.பி. 1961-ம் ஆண்டு மெட்ராஸ் நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் நில உச்சவரம்பு என்ன?
What is the land ceiling limit under the Madras Land reforms Act of 1961?
(a) 30 நிலையான ஏக்கர் / 30 Standard Acres
(b) 50 நிலையான ஏக்கர் / 50 Standard Acres
(c) 40 நிலையான ஏக்கர் / 40 Standard Acres
(d) 55 நிலையான ஏக்கர் / 55 Standard Acres
5. 1. வங்காளம் மற்றும் பீகாரில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்டதால் உள்நாட்டுக் கிளர்ச்சிகள் தொடங்கின. மேலும் அவை காலனித்துவ ஆட்சியில் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்பட்டதால் அவை நிகழ்ந்தன.
2. நூற்றுக்கணக்கான சிறிய கிளர்ச்சிகளைத் தவிர நாற்பதுக்கும் மேற்பட்ட பெரிய கிளர்ச்சிகள் நடந்தன.
மேலே காணப்படும கூற்றுகளில் சரியானது/வை எது/எவை?
1. The Civil rebellions began as British rule was established in Bengal and Bihar and they occurred in area after as it was incorporated into colonial rule.
2. There were more than forty major rebellions apart from hundreds of minor one.
Which of the above statement/s is/are true?
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 1 மற்றும் 2 ஆகியன / Both 1 and 2
(d) மேற்கண்ட எவையுமில்லை / None of the above
6. 1932ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17ஆம் நாள் வகுப்புவாத கொடையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதம மந்திரி யார் என்பதைக் குறிப்பிடவும்.
Name the British Prime Minister who announced the Communal Award on 17th Aug. 1932?
(a) ராம்சே மெக்டொனால்ட் / Ramsay Mcdonald
(b) லாய்ட் ஜார்ஜ் / Lloyd George
(c) ஸ்டான்லி பால்டுவின் / Stanley Baldwin
(d) A.V.அலெக்ஸாண்டர் / A.V.Alexander
7. பின்வரும் பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க:
பட்டியல் I பட்டியல் II
அ. வினோபா பாவே 1. போலிஸ் நடவடிக்கை
ஆ. நேதாஜி 2. நாவகாளி
இ. ஐதராபாத் நிஸாம் 3. சத்தியாகிரகி
ஈ. காந்திஜி 4. ஆசாத் இந்து பாஜ்
Match List I with List II and select the correct answer using the codes given below:
List I List II
(a) Vinoba Bhave 1. Police Action
(b) Nethaji 2. Noakhali
(c) Nizam of Hyderabad 3. Satyagrahi
(d) Gandhiji 4. Azad Hind Fauj
a b c d
a. 3 4 1 2
b. 1 4 3 2
c. 4 3 2 1
d. 2 1 4 3
8. நவீன தமிழகத்தில் தோன்றிய முதல் சமூக சீர்திருத்தவாதியாகக் கருதப்படுபவர் யார்?
Who was considered to be the first – social reformer to appear in Modern Tamil Nadu?
(a) வள்ளலார் / Vallalar
(b) வைகுண்ட சுவாமிகள் / Vaigunda Swamigal
(c) பெரியார்/ Periyar
(d) அயோத்தி தாசர் / Ayothi Dasar
9. பின்வருவனவற்றுள் எவை, 1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய் கலகத்திற்கான காரணங்கள் ஆகும்?
Which among the following were the causes for the out break of Vellore Mutiny in 1806?
(a) மிருகங்களின் கொழுப்பு பூசப்பட்ட தோட்டாக்கள், குறைவான சம்பளம், புதிய வகை தலைப்பாகை, சாதிக்குறியீடுகள் மற்றும் காதணிகள், சுத்தமாக தாடையை மழித்தல் / Use of animal fat greezed bullet, poor salary, New turban, caste marks and earrings, clean shaving
(b) பதவி உயர்வின்மை, கடினமாக தண்டனை, குறைவான சம்பளம், புதியவகை தலைப்பாகை, சுத்தமாக தாடையை மழித்தல் / NO promotion, Heavy punishments, Poor salary, New turban, Clean Shaving.
(c) மிருகங்களின் கொழுப்பு பூசப்பட்ட தோட்டாக்கள், பதவி உயர்வின்மை, புதிய வகை தலைப்பாகை, குறைவான சம்பளம், சுத்தமாக தாடையை மழித்தல் / Use of animal fat greezed buillet, NO promotion, New Turban, Poor Salary, Clean shaving
(d) பதவி உயர்வின்மை, குறைவான சம்பளம், புதிய வகை தலைப்பாகை, சாதிக்குறியீடுகளை மற்றும் காதணிகள், சுத்தமாக தாடையை மழித்தல் / No Promotion, Poor Salary, New Turban, Castemarks and Earrings, Clean Shaving
10. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவத்தின் பெயர் யாது?
The name of the script used in the Sangam Age was
(a) கரோஷ்தி / Kharusthi
(b) தேவநாகரி / Devanagiri
(c) தமிழ்ப்-பிராமி / Tamil-Brahmi
(d) கிரந்தம் / Grantha
11. திருக்குறள் நம் இலக்கியங்களில் தலைசிறந்த ஒன்று, வாழ்க்கை நெறிமுறைகள், சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி போன்ற அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கிறது. மிகவும் பிரபலமான திருக்குறள் பல மொழிகளில் உலகளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thirukural is one of the great poetry of our literature. It answers all questions relating to life ethics, social, political, economics and education etc. if we give a proper interpretation, it is so popular that it has been translated into many languages in and around world.
Which of the following is best implied in the passage?
(a) அனைத்து வினாக்களுக்குமான பதில்களின் தொகுப்பாகத் திருக்குறள் உள்ளது. / Thirukural is a collection of answers to all questions
(b) திருக்குறள் ஒரு சமயநூல் / Thirukural is a religious book
(c) திருக்குறள் ஓர் உரைநடை / Thirukural is a prose
(d) திருக்குறள் ஓர் அறிவுசார்ந்த தொகுப்பு / Thirukural is a compendium of knowledge
12. பின்வருவனவற்றுள் எந்த அரசியல் கட்சி தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் இருபாலர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது?
Which among the following political party introduced co-education system at primary level in Tamil Nadu?
(a) திராவிட முன்னேற்ற கழகம் / Dravida Munneta Kazhagam
(b) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் / All India Anna Dravida Munnetta Kazhagam
(c) திராவிட கழகம் / Dravida Kazhagam
(d) நீதிக்கட்சி / Justice Party
13. ஈ.வே.ராமசாமியின் ஈரோட்டு திட்டம் கீழ்கண்டவைகளில் எதை கொண்டிருந்தது?
1. அனைவருக்கும் ஆயள் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்துதல்.
2. அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வி அளித்தல்.
3. தீண்டாமை ஒழிப்பு.
4. அத்தியாவசிய தொழிலகளை நாட்டுடமை ஆக்குதல்
The Erode plan of E.V.Ramasamy consist of the following:
1. Extension of Life Insurance for all
2. Free Education for all
3. Abolision of untouchability
4. Nationalisation of essential industrial factor
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 1, 2 மட்டும் / 1, 2 only
(d) 1, 2, 3, 4
14. “குடியரசு” நாளிதழை வெளியிட்டவர் யார்?
Who published “Kudi Arasu”?
(a) பெரியார் / Periyar
(b) அண்ணா / Anna
(c) சிங்கார வேலர் / Singaravelar
(d) E.V.K.சம்பத் / E.V.K.Sambath
15. “இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ் தம் என்றாலும் வேண்டேன்”
என்ற பாடல் வரிகள் இடம்பெறும் தூது நூல் எது
“Irunthamizhile unnal irunthen imayor
Virunthamizhtham Yendralum Venden!”
O! Everything Tamil!
I am living by you. If the Heavely
Elixir comes to me, I will not like if”
Which Dhoothu book contains these verbes?
(a) காக்கை விடு தூது / Kaakkai Vidu Thoothu
(b) தமிழ் விடு தூது / Tamil Vidu Thoothu
(c) நெஞ்சு விடு தூது / Nenju Vidu Thoothu
(d) மேக விடு தூது / Megavidu Thoothu
16. மணிமேகலைக்கு அமுதசுரபி என்ற அட்சய பாத்திரம் எங்கே கிடைத்தது?
From where did Manimegalai get the Amudhasurabhi?
(a) உவவனம் / Vuvavanam
(b) மணி பல்லவத்தீவு / Manipallavatheevu
(c) காவிரிப்பூம்பட்டினம் / Kaviripoompattinam
(d) வஞ்சி மாநகர் / Vanji Maanagar
17. “பூ மடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல் வாக்கும் நாள்”
என்று வாணிதாசன் யார் இறந்ததை எண்ணிப் பாடியுள்ளார்?
“Poomadanthai Vazhap Puvimadanthai Veetriruka
Namadanthai Nool Vaakkum Nal”
For whom does Vaanidasan mourn in these lines?
(a) கம்பர் / Kambar
(b) கண்ணதாசன் / Kannadasan
(c) அண்ணாதுரை / Annaduari
(d) கலைஞர்.மு.கருணாநிதி / Kalaignar M.Karunanithi
18. “புதிய தரிசனங்கள்” என்ற நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது பெற்றவர் யார்?
Who was awarded the Shakithya Academy award for the Book “Puthiya Dharisanangal”?
(a) பிரபஞ்சன் / Prapanjan
(b) அசோகமித்திரன் / Ashoka Mithran
(c) இராஜம்கிருஷ்ணன் / Rajam Krishnan
(d) பொன்னீலன் / Ponneelan
19. “நீரின்றி அமையாது உலகு”
என்று திருக்குறளுக்கு முன்பே கூறிய நூல் எது?
Which great work preceding Thirukkural praises the needs of water as “Neerindri Amaiyadhu Ulagu?”
(a) பரிபாடல் / Paripaadal
(b) நற்றிணை / Nattrinai
(c) குறுந்தொகை / Kuruntogai
(d) தொல்காப்பியம் / Tolkaapiyam
20. மதுரைக்காஞ்சி எந்த நில மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது?
Madurai Kaanji Talks about people of which ecosystem?
(a) குறிஞ்சி / Krinji
(b) முல்லை / Mullai
(c) மருதம் / Marutham
(d) நெய்தல் / Neithal
21. சங்கப்புலவர்கள் தங்கள் கவிதைகளை எங்கே வகைப்படுத்தினர்?
In which place the poetries of Sangam Literature have been categorized by Sangam poets?
(a) மதுரை / Madurai
(b) திருச்சி / Trichy
(c) கரூர் / Karur
(d) பூம்புகார் பட்டினம் / Poompuharpattinam
22. “புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்”
என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
From which text are these lines taken
“Pulam mikkavarai pulamai therithal
Pulam mikkavarkke pulanam”?
(a) நாலடியார் / Naladiyar
(b) நான்மணிக்கடிகை / Naanmanikadigai
(c) திருக்குறள் / Thirukkural
(d) பழமொழி / Palamozhi
23. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் (MGNREGA) முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு
The MGNREGA was first launched in the year
(a) 2005
(b) 2006
(c) 2008
(d) 2009
24. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டமானது ———– அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது
Tamil Nadu Integrated Nutrition Programme was introduced by
(a) Dr.மு.கருணாநிதி / Dr.M.Karunanidhi
(b) Dr.M.G.ராமச்சந்திரன் / Dr.M.G.Ramachandran
(c) Dr.ஜெ.ஜெயலலிதா / Dr.J.Jayalalitha
(d) திரு.C.N.அண்ணாதுரை / Mr.C.N.Annadurai
25. தமிழ்நாட்டில் “பின்னலாடை நகரம்” என்று அழைக்கப்படுவது எது?
Which city is known as Knitting city in Tamil Nadu?
(a) கோயம்புத்தூர் / Coimbatore
(b) ஈரோடு / Erode
(c) திருப்பூர் / Tiruppur
(d) சிவகாசி / Sivakasi
26. கோயம்புத்தூர், தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
Why coimbatore is called as Manchester of South India?
(a) அதிக எண்ணிக்கையிலான மின் மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுவதால் / Due to more number of Electric Motors are produced
(b) அதிக எண்ணிக்கையிலான துணி ஆலைகள் செயல்படுவதால் / Due to the functioning of More Textile Mills
(c) அதிக கல்வி நிறுவனங்கள் உள்ளதால் / Due to the functioning of more number of Educational Institutions
(d) அதிக அளவிலான நகை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதால் / Due to the functioning of more jewellery manufacturing units
27. “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது?
Why Chennai is called as “Detroit of Asia”?
(a) ஜவுளித் தொழிலால் / Due to the presence of Textile Industry
(b) மோட்டார் வாகனத் தொழிலால் / Due to the presence of Automobile Industry
(c) தோல் தொழிலால் / Due to the presence of Leather Industry
(d) திரைப்படத் தொழிலால் / Due to the presence of Film Industry
28. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடர்த்தி
As per 2011 census the density of population in Tamil Nadu was
(a) 384 per Sq.Kilo meter
(b) 425 per Sq.Kilo meter
(c) 555 per Sq.Kilo meter
(d) 561 per Sq.Kilo meter
29. பன்முக ஏழ்மை குறியீட்டை அளவிடும் முறை ——— ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது
The measurement of multi-dimensional poverty index is based on
(a) சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் / Health, Education and Living Standard
(b) கல்வி மற்றும் சுகாதாரம் / Education and Health
(c) சத்துணவு மற்றும் நீள்வாழ்வு / Nutrition and Longevity
(d) தேசிய வருமானம், பணக்காரர் / National Income and rich men
30. தமிழ்நாடு மாநில மனித மேம்பாட்டு அறிக்கை 2017இன் படி ——— மாவட்டம் முதல் இடத்தில் இருக்கின்றது.
According to Tamil Nadu Human Development Report (2017 ——–District is ranked first position
(a) கன்னியாகுமரி / Kanyakumari
(b) அரியலூர் / Ariyalur (c) காஞ்சிபுரம் / Kancheepuram
(d) சென்னை / Chennai
31. தமிழ்நாட்டில் —— நாள் பொது மக்களின் குறைகளை நீக்கும் நாள்
The public Grievance Day is conducted in Tamil Nadu
(a) ஒவ்வொரு புதன்கிழமை / Every Wednesday
(b) ஒவ்வொரு வெள்ளிக்கிழமை / Every Friday
(c) ஒவ்வொரு சனிக்கிழமை / Every Saturday
(d) ஒவ்வொரு திங்கள்கிழமை / Every Monday
32. தற்பொழுது உள்ள நிலவரப்படி தமிழ்நாட்டில் —– பாசனம் அதிக அளவில் உள்ளது.
In present situation ——– are the longest sources of irrigation in Tamil Nadu
(a) அணைக்கட்டுகள் பாசனம் / Tanks irrigation
(b) கிணறுகள் பாசனம் / Wells irrigation
(c) குழாய் கிணறுகள் பாசனம் / Tube wells irrigation
(d) கால்வாய்கள் பாசனம் / Canals irrigation
33. மன நிலைமம், தன்முனைப்பு இவையிரண்டும் ———ன் தீங்கு விளைவிக்கும் குறைபாடுகள்
Mental inertia and dogmatism are the harmful disadvantages of
(a) பொதுமைப்படுத்துதல் / Generalization
(b) அறிவியல் முறை / Scientific method
(c) தூண்டல் சிந்தனை / Inductive thinking
(d) அனுபவ சிந்தனை / Empirical thinking
34. அழுத்தச் சமைப்பானின் நீரின் கொதிநிலை வெப்பநிலை T என்க. அப்போது,
Let the boiling temperature of water in a pressure cooker be T. Then
(a) T = 80OC
(b) T=90OC
(c) T=100OC
(d) T > 100OC
35. சைட்டோபிளாசத்தின் கூழ்நிலைப்பொருள் வளைந்து வளைந்து செல்லும் நகர்வின் பெயர்
The Zig-Zag movement of colloidal particles of cytoplasmic matrix is called
(a) ஸ்டீரிமிங் நகர்வு / Streaming movement
(b) அமீபாய்டு நகர்வு / Amoeboid movement
(c) ப்ரௌணியன் நகர்வு / Brownian movement
(d) இவை எதுவும் இல்லை / None of the above
36. கூற்று: ஒரு குளிர்சாதன பெட்டி, குறைவான வெப்பநிலையிலிருந்து அதிகப்படியான வெப்ப நிலைக்கு வெப்பத்தை கடத்துகிறது.
காரணம்: எந்த ஒரு புற வேலையும் செய்யாமல் சாதாரணமாக வெப்பம் குறைந்த வெப்பநிலையிலிருந்து அதிக வெப்பநிலைக்கு கடத்த முடியாது.
Assertion: A refrigerator transfers heat from lower temperature to higher temperature
Reason: Normally heat connot be transferred from lower temperature to higher temperature without doing any external work.
(a) கூற்று சரி காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் / Both assertion and reason are true and reason is the correct explanation of assertion
(b) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல / Both assertion and reason are true but the reason is not the correct explanation of the assertion
(c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு / Assertion is true but the reason is false
(d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி / Assertion is false but the reason is true
37. உயிர் ஒரு இயற்பியல் வேதியியல் தொகுப்பு. இவ்வுயிரி கொடுக்கப்பட்டகைளில் எதை வெளிப்படுத்துகிறது?
Life is a physico chemical entity which exhibits
(a) இனப்பெருக்கம் / Reproduction
(b) உறுத்துணர்ச்சி / Irritability
(c) இடப்பெயர்ச்சி / Locomotion
(d) இவை அனைத்தும் / All the above
38. தளர்வான மூடியுடைய சாதாரணப் பானையில் உணவு சமைப்பதை விட அழுத்தச் சமையற்கலனில் விரைவாக சமைக்கப்படுகிறது ஏனெனில் அதிக அழுத்தம்
Food cooks faster in a pressure cooker than in an ordinary pot with a loose lid because the higher pressure
(a) உணவின் மீது வெப்பத்தை விரைவாகச் செலுத்தும் / forces heat into the food more rapidly.
(b) நீரின் கொதிநிலையைக் குறைக்கும் / Lowers the boiling point of water
(c) நீரின் கொதிநிலையை அதிகரிக்கும் / Raises the boiling point of water
(d) நீரின் தன் வெப்ப ஏற்புத்திறனை அதிகரிக்கும் / Increases the specific heat capacity of water
39. நம் உடலின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கும், கட்டுப்பாட்டிற்கும் காரணமான மண்டலம்
The control and co-ordination of our body is under the control of ——— system.
(a) இரத்த ஓட்ட மண்டலம் / Circulatory system
(b) இனப்பெருக்க மண்டலம் / Reproductive system
(c) சீரண மண்டலம் / Digestive system
(d) நரம்பு மண்டலம் / Nervous system
40. ஒரு முழுமையான கரும்பொருள் என்பது
A perfectly black body is that which
(a) முழுவதும் கருப்பு நிறத்திலானது / is totally black in colour
(b) அதன் அனைத்து ஆற்றலையும் கதிர்வீச்சு முறையில் வெளியிடும் / can radiate all its energy
(c) லட்சிய வாயுவால் ஆனது / is made of ideal gas
(d) அதன் மேல்படும் அனைத்து கதிர்வீச்சுக்களையும் கிரகித்துக் கொள்ளும் / absorbs all the radiations incident on it
41. ———- பரப்பளவில் இரண்டாவது பெரிய இந்திய மாநிலமாகும்
——– is the second largest state in India on account of its size
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) உத்திரப்பிரதேசம் / Uttar Pradesh
(c) மேற்கு வங்காளம் / West Bengal
(d) மத்தியப்பிரதேசம் / Madhya Pradesh
42. மனிதனை ஏற்றிச் செல்லும் முதல் ராக்கெட் விகாஸ் இன்ஜினை இஸ்ரோ வெற்றிகரமாகச் சோதித்த இடம் (ககன்யான் மனித விண்வெளிப்பயணதிட்டம்) ——– ஆகும்
The place where ISRO successfully tested the first human carrying rocket engine Vikas (Gaganyan-human space mission) is
(a) மகேந்திரகிரி-தமிழ்நாடு / Mahendragiri-TN
(b) கல்பாக்கம்-தமிழ்நாடு / Kalpakkam-TN
(c) கூடங்குளம்-தமிழ்நாடு / Koodangulam-TN
(d) நரிமணம்-தமிழ்நாடு / Narimanam-TN
43. சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைக்கான “மீண்டும் மஞ்சப்பை” திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்
The Ecological conservation strategy “Meendum Manjappai” scheme was introduced by the Chief Minister M.K.Stalin on
(a) 15 டிசம்பர் 2021 / 15th December 2021
(b) 20 டிசம்பர் 2021 / 20th December 2021
(c) 25 டிசம்பர் 2021 / 25th December 2021
(d) 23 டிசம்பர் 2021 / 23rd December 2021
44. சிறார் நீதிச் சட்டத்தில் அதிகபட்ச தண்டனை யாவை?
Maximum punishment in Juvenile Justice Act.
(a) ஆயள்தண்டனை அல்லது 11 ஆண்டுகள் மற்றும் அபராதம் / Imprisonment for life or upto 11 years and fine
(b) 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் / Imprisonment upto 10 years or fine
(b) ஆயள்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் மற்றும் அபராதம் / Imprisonment for life or upto 10 years and fine
(d) ஆயள்தண்டனை அல்லது 8 ஆண்டுகள் மற்றும் அபராதம் / Imprisonment for life or upto 8 years and fine
45. கல்கத்தாவிலிருந்து டெல்லியை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக மாற்றப்பட்ட ஆண்டு
The capital of British India was shifted from Calcutta to Delhi in the year
(a) 1907
(b) 1911
(c) 1912
(d) 1913
46. பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
1. CACP – விவசாய செலவு மற்றும் விலை குழு
2. ICDS – ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்
3. NFSA – தேசிய உணவு பாதுகாப்பு சங்கம்
4. MDM – மதிய நாள் பணி
Which of the following is incorrectly paired?
(a) CACP – Commission for Agricultural Cost and Prices
(b) ICDS – Itegrated Child Development Services
(c) NFSA – National Food Security Association
(d) MDM – Mid Day Mission
(a) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(b) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only
(c) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
(d) 3 மற்றும் 4 மட்டும் / 3 and 4 only
47. Covid 19 பரவலுக்குப் பிறகு “பெரிய தனியார்மயமாக்கல் உந்துதல்” உருவாகிய தொழிற்சாலைகளின் பெயர்
The start-ups under the “Big Privatisation Push” after the waves if Covid 19 Pandemic are called
(a) சிறுதொழில் நிறுவனம் / Small units
(b) யூனிகார்ன் / Unicorns
(c) தனியார் தொழிலாளர் / Private Players
(d) குழந்தை நிறுவனம் / Infant Firms
48. இந்தியாவில் நகரமயமாக்கல் துரிதமாக காணப்பட்ட காலம்
The period which witnessed rapid urbanisation in India is
(a) 1901-1931
(b) 1931-1961
(c) 1961-க்கு பிறகு / After 1961
(d) 1901-க்கு முன்பு / Before 1901
49. வேளாண் நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படும் ஒரு பயிர்
Which crop requires maximum water for cultivation?
(a) பார்லி / Barley
(b) மக்காச்சோளம் / Maize
(c) கரும்பு / Sugarcane
(d) கோதுமை / Wheat
50. பரந்த இலைக்காடுகளின் இனங்களில் வருவது
It is a species of the broad leaved forests
(a) டியோடர் / Deodar
(b) ஃபிர் / Fir
(c) ஸ்புரூஸ் / Spruce
(d) ரோஸ்வுட் / Rosewood
51. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆறுகளில் “தென் இந்தியாவின் கங்கை” என்று அழைக்கப்படுவது எது?
Which of the following rivers is known as the “Ganges of South India?”
(a) காவேரி / Kauvery
(b) கிருஷ்ணா / Krishna
(c) கோதாவரி / Godavari
(d) நர்மதை / Narmada
52. தமிழ்நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு அதிக அளவிலான மழைப்பொழிவினை கொடுக்கும் காற்றுகள் எவை?
Which winds provide heavy rainfall to the east part of Tamil Nadu?
(a) மேற்கத்திய காற்றுகள் / Westerlies winds
(b) தென்மேற்கு காற்றுகள் / South-West winds
(c) வடகிழக்கு வறண்டகாற்றுகள் / North-East dry winds
(d) வடகிழக்கு குளிர்ந்த காற்றுகள் / North-East cold winds
53. சிவாஜி எங்கு கடற்படை தளத்தை நிறுவுp இருந்தார்?
Shivaji Maintained a Naval fleet at
(a) சால்ஷெட்லே / Salsettle
(b) கோலாபா / Kolaba
(c) பேஸீன் / Bassein
(d) கல்யாண் / Kalyan
54. சீக்கியர்களின் புனித தலமான அமிர்தரஸை நிறுவிய சீக்கிய குருவின் பெயரைக் குறிப்பிடுக:
Name the Sikh Guru who founded the holy city of Amritsar?
(a) குரு கோவிந்த் / Guru Govind
(b) குரு நானக் / Guru Nanak
(c) குரு ராம் தாஸ் / Guru Ram Das
(d) குரு தேக் பகதூர் / Guru Tegh Bahadur
55. மராத்தியர் ஆட்சியில் நாட்டின் முக்கிய வருவாய் எதிலிருந்து பெறப்பட்டது?
During the Maratha rule, the revenue of the state came mainly from
(a) நிலம் / Land
(b) வணிகம் / Trade
(c) அபராதம் / Fine
(d) போக்குவரத்து / Transport
56. அக்பரின் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட பாரசீக அறிஞரின் பெயர்
Name the persian scholar who was chosen as Akbar’s tutor
(a) அப்துல் லத்தீப் / Abdul Latif
(b) அப்துல் சலாம் / Abdul Salam
(c) அப்துல் சமது / Abdul Samad
(d) அப்துல் ரஹீம் / Abdul Rahim
57. “பிரிகத் சம்ஹிதா” என்னும் நூலின் ஆசிரியர்
Name the author of Brihat Samhita:
(a) வராகமிஹிரர் / Varahamihira
(b) தண்டின் / Dandin
(c) புத்த குப்தர் / Buddha Gupta
(d) அமர்சிங் / Amar Singh
58. கூற்று (A): அலாவுதீனின் வலது சாரி தலைவர் சாபர்கான் மங்கோலியர்களால் கொல்லப்பட்டார்
காரணம் (R): இடது சாரி தலைவரான உலுக்கான் அவரை கைவிட்டு விட்டார்
Assertion (A): Zafar Khan the reight wing commander of Ala-Ud-din was killed by mangols
Reason (R): Ulugh Khan, the left wing commander deserted him
(a) (A) சரி (R) தவறு / (A) is right (R) is wrong
(b) (A) (R) இரண்டும் சரி / Both (A) and (R) are right
(c) (A) தவறு (R) சரி / (A) is wrong (R) is right
(d) (A) (R) இரண்டும் சரி (R), (A) யின் சரியான விளக்கம் / Both (A) and (R) are right, (R) is the correct explanation of (A)
59. பின்வருவனவற்றுள் சிந்து சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?
Which of the following was the Port City of Indus Valled Civilisation?
(a) லோத்தல் / Lothal
(b) ஹரப்பா / Harappa
(c) களிபங்கன் / Kalibangan
(d) லர்கானா / Larkana
60. கீழ்கண்டவற்றை பொருத்துக:
(அ) ஆரியபட்டா 1. கணித மேதை
(ஆ) நாகர்ஜீனா 2. ஜைன புலவர்
(இ) சித்த சேனர் 3. புத்த புலவர்
(ஈ) வீர சேன சேவா 4. இலக்கண புலவர்
Match the following:
a. Aryabatta 1. Mathematician
b. Nagarjuna 2. Jain Scholar
c. Siddhar Sena 3. Buddhist Scholar
d. Vira Sena Seva 4. Grammar Scholar
a b c d
a. 4 1 3 2
b. 1 3 2 4
c. 1 2 3 4
d. 4 3 2 1
61. தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
Right to Information Act came into force on
(a) 22 ஜீன் 2005 / 22 June 2005
(b) 12 அக்டோபர் 2005 / 12 October 2005
(c) 15 ஜீன் 2005 / 15 June 2005
(d) 15 ஆகஸ்ட் 2005 / 15 August 2005
62. மத்திய அரசாங்கத்தின் கீழ் வரக்கூடிய துறைகள் எது?
Which of the following subject comes under the Central Government?
(a) வங்கித்துறை / Banking
(b) விவசாயம் / Agriculture
(c) சிறைத்துறை / Prison
(d) பொது உடல்நலன் / Public Health
63. கீழ்கண்டவற்றுள் லோக்சபா சபாநாயகர் தனது ராஜினாமாவை எவரிடம் அளிப்பார்?
A Lok Sabha speaker addresses his/her resignation to whom among the following
(a) துணை சபாநாயகர் / Deputy Speacker
(b) குடியரசுத்தலைவர் / President
(c) பிரதமர் / Prime Minister
(d) சட்ட அமைச்சர் / Law Minister
64. 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம் ————– அட்டவணைகள் கொண்டதாகும்.
The RTI Act of 2005 has ———– schedules
(a) 5 பகுதிகள் / 5 Schedules
(b) 10 பகுதிகள் / 10 Schedules
(c) 2 பகுதிகள் / 2 Schedules
(d) 8 பகுதிகள் / 8 Schedules
65. கீழ்க்காணப்படும் சொற்களை அதன் அர்த்தத்துடன் பொருத்தவும்:
(அ) ஒத்திவைப்பு – அவையை நடத்த தேவையான உறுப்பினர் எண்ணிக்கை
(ஆ) குவாரம் – புது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடைசியான பழைய மக்களவை அமர்வு
(இ) கங்காரு மூடல் – பாராளுமன்றத்தை காலவரையற்று ஒத்தி வைத்தல்
(ஈ) லேம்டக் அமர்வு – முக்கியமான உட்கூறுகளை மட்டும் விவாதிப்பது
Match the following terms with their meanings:
(a) Adjournment Sine die – 1. Minimum number of members required to be present in the house to Transact business
(b) Quorum – 2. Last sitting of existing Lok Sabha, after a new Lok Sabha has been elected
(c) Kangaroo closure – 3. Terminating a sitting of Parliament for an indefinite period
(d) Lame-Duck Session – 4. Only important clauses are taken up for debate
a b c d
a. 3 1 2 4
b. 1 3 2 4
c. 3 1 4 2
d. 2 3 4 1
66. தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, இந்திய அரசியலமைப்பின் ———- விதிக்கு ஒரு சிறந்த கட்டமைப்பை வழங்குகிறது.
Right to Information Act, 2005 provided an effective framework to ——— article of the Indian Constitution
(a) விதி 9 / Article 9
(b) விதி19 / Article 19
(c) விதி 29 / Article 29
(d) விதி 30 / Article 30
67. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் வருடத்திற்கு எத்தனை முறை நடத்தப்பட வேண்டும்?
How often in a year, the Central Consumer Protection Council should meet?
(a) ஒரு முறை / Once in a year
(b) இரண்டு முறை / Twice in a year
(c) தேவை ஏற்படும்போதெல்லாம் / As and when necessary
(d) ஒவ்வொரு மாதமும் / Every month
68. இந்திய அரசியலமைப்பு முகவுரை பற்றிய வாக்கியங்களை கவனிக்கவும்
1. ஜவஹர்லால் நேரு அவர்கள் இதனை “அரசியல் சாசனத்தின் அடையாள அட்டை” என்று கூறினார்.
2. இது அரசியல் சாசனத்தின் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.
3. இந்திய நாட்டின் தன்மையை வெளிப்படுத்துகிறது.
4. இந்திய அரசியல் சாசனத்தின் கொள்கைகளை வெளிப்படுத்துகிறது.
மேலே காணப்படும் வாக்கியங்களில் எது/எவை தவறானவை?
Consider the following statements about the preamble.
1. Jwaharlal Nehru called it as the “Identity Card of the Constitution”
2. It reveals the source of authority of the Constitution
3. It reveals the nature of Indian state
4. It reveals the objectives of the Indian Constitution
Which of the given statements is/are wrong?
(a) 1 மற்றும் 2 / 1 and 2
(b) 1 மட்டும் / 1 only
(c) 2 மட்டும் / 2 only
(d) 3 மற்றும் 4 / 3 and 4
69. நிதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவர் யார்?
Who is the first Vice-Chairman of NITI Aayog?
(a) அரவிந்த் பணகாரியா / Arvind Panagariya
(b) V.K.சரஸ்வத் / V.K.Saraswat
(c) ராஜ்நாத் சிங் / Rajnath Singh
(d) அருண் ஜெட்லி / Arun Jaitley
70. இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய பணிகள்
1. பணம் வெளியிடுதல்.
2. பாதுகாப்புப் பெட்டகம்.
3. கடன் கடிதம்.
4. வங்கிகளின் வங்கி.
குறியீடுகள் மூலம் சரியான விடையை தெரிவு செய்க:
Main functions of Reserve Bank of India is/are
1. Bank of issue of notes
2. Safety locker
3. Letter of Credit
4. Banker’s Bank
Select the correct answer by using the codes given below
(a) 1 மற்றும் 4 சரியானவை / 1 and 4 are correct
(b) 1 மற்றும் 2 சரியானவை / 1 and 2 are correct
(c) 2 மற்றும் 3 சரியானவை / 2 and 3 are correct
(d) 3 மற்றும் 4 சரியானவை / 3 and 4 are correct
71. “மாநிலங்களுக்கு உடனடியாக கடன் நிவாரணம் வழங்குவதன் மூலம், மாநிலங்களின் எதிர்கால கடன் சுமை மிதமானதாக இருக்கும்” இது யாருடைய கூற்று?
“By giving relief to states immediately, the debt burden of states will become moderate in future” is quoted by
(a) Dr.மன்மோகன் சிங் / Dr.Manmohan Singh
(b) Dr.C.ரெங்கராஜன் / Dr.C.Rangarajan
(c) Dr.ஸ்ரீவஸ்தவா / Dr.Srivastava
(d) T.R.பிரசாத் / T.R.Prasad
72. பின்வருவனவற்றுள் எது வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் இல்லை?
Which one of the following is not an employment generation programme?
(a) ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் / Rural Employment Generation programme (REGP)
(b) பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டம் / Prime Minister’s Rozgar Yojana (PMRY)
(c) தேசிய வேலைக்கு உணவுத் திட்டம் / National Food for Work Programme (NFWP)
(d) ஜந்தன் திட்டம் / Jandhan Yojana
73. இந்தியாவில் வறுமை பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்டும் நிறுவனம் எது?
Which organization collects data on Poverty in India?
(a) திட்டக்குழு / Planning Commission
(b) NSSO- தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் / National Sample Survey Organization
(c) CSO- மத்திய புள்ளியியல் அலுவலகம் / Central Statistics Office
(d) தேர்தல் ஆணையம் / Election Commission
74. கோவிட் தொற்றுக் காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் மிகுதியாக பாதிக்கப்பட்ட துறைகளை அடையாளம் காண்க:
1. MSME துறை.
2. விமானத்துறை.
3. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை.
4. தொலைத்தொடர்புத் துறை
Identify the sectors of the Indian Economy which are the most affected the Covid Pandemic
1. MSME Sector
2. Aviation Sector
3. Tourism and Hospitality Sector
4. Telecommunication Sector
(a) 3 மற்றும் 4 மட்டும் / 3 and 4 only
(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only
(c) 1 மற்றும் 4 மட்டும் / 1 and 4 only
(d) 1, 2 மற்றும் 3 மட்டும் / 1, 2 and 3 only
75. கீழ் குறிப்பிட்டதில், எது வேளாண் விலைக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் குறிப்பிடாதது?
1. அதிக உற்பத்திக்கு தொழில் நுட்பத்தை உயர்த்துவது.
2. நிலப்பகிர்வுக்கு உதவுவது.
3. கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தல்.
4. பொதுப்பகிர்வு முறையை மேலாண்மை செய்தல்.
குறியீடுகள் மூலம் சரியான விடை காண்க:
Which of the following is/are not part of the agricultural price policy?
1. To improve technology for higher production
2. To help the distribution of land
3. To fix the procurement prices
4. To manage public distribution system
Select the correct answers by using the codes given below:
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
(d) 1, 3 மற்றும் 4 / 1, 3 and 4