Tnpsc Model Question Paper 2 – General Studies in Tamil & English
1. முற்று திசைவேகம் என்பது கீழ்கண்ட எதோடு தொடர்புடையது?
Terminal velocity is related to
(a) பாகியல் விசை / Viscosity
(b) பரப்பு இழு விசை / Surface tension
(c) வட்டப்பாதை இயக்கம் / Circular motion
(d) நேர்கோட்டு இயக்கம் Linear motion
2. சூரியனுக்கு அடுத்தாற்போல் புவிக்கு அருகிலுள்ள விண்மீன் எது?
Which star is nearest to the earth next to the sun?
(a) ஆன்ட்ரோமோடா / Andromoda
(b) ஆல்பாசெஞ்சூரி / Alpha century
(c) சிரியஸ் / Sirius
(d) சைனி / Cygni
3. மனப்பாட நினைவாற்றல் என்பது சொற்சார் பொருள்களை நினைவூட்டும் திறன் ஆகும். இதை அளவிட பயன்படும் பொதுவான முறை(கள்) என்பது (வை).
Rote memory is the ability to memories verbal materials as measured by the usual methods of
(a) நினைவு கூர்தல் / Recall
(b) அங்கீகரித்தல் / Recognition
(c) திரும்ப ஓப்புவித்தல் / Recite
(d) இவைகள் அனைத்தும் / All of these
4. அறிவார்ந்த நடத்தை கீழ்கண்டவற்றுள் எதனை நேரடியாக சார்ந்துள்ளது?
Intelligent behaviour directly depends on
(a) நினைவாற்றல் / Memory
(b) உள்ளுணர்வு / Instincts
(c) உள்ளார்ந்த நடத்தை / Innate Behaviour
(d) பிரதிபலிப்பு / Relex
5. இந்திய – அமெரிக்க விண்வெளிப் பொறியாளர், நாசாவின் செவ்வாய் 2020 திட்ட செயல்பாடுகளை வழி நடத்தியவர்.
Name the Indian-American aerospace engineer who led the “NASA’S MARS 2020 MISSION”
(a) ந.வளர்மதி / N.Valarmathi
(b) ஸ்வாதிமோகன் / Swati Mohan
(c) கல்பனாசவ்லா / Kalpana
(d) தேவகி / Devaki
6. எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் பொருளாதார ரீதியில் பலவீனமானவர்களுக்கு, 10% இட ஒதுக்கீட்டைஉறுதிப்படுத்துகிறது.
10% reservation for EWS (Economically Weaker Sections) guarantees by which constitutional Amendment.
(a) 100th
(b) 103rd
(c) 27th
(d) 75th
7. இந்திய அணுக்கரு ஆற்றல் திட்டம் – படி3ல் ———ஐ எதிர்கால எரிபொருளாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
Indian Nuclear Power Programme state-3 aims using ———- as ‘fuel of the future’.
(a) ரேடியம் / Radium
(b) போலோனியம் / Polonium
(c) தோரியம் / Thorium
(d) ஆக்டினியம் / Actinium
8. பின்வரும் மொழிகளில் இந்தோ-ஆரிய மொழி குடும்பத்தில் சேராதது எது?
Which one of the following language is not a Indo-Aryan linguistic family?
(a) பால்டி / Balti
(b) பிகாரி / Bihari
(c) பெங்காளி / Bengali
(d) பகேலி / Bagheli
9. திபெத்தில் சாங்போ என்றழைக்கப்படும் நதி எது?
Which river is known as Tsangpo in Tibet?
(a) தாமோதர் / Damodar
(b) மானஸ் / Manas
(c) பிரமபுத்ரா / Brahmaputra
(d) மஹாநந்தா / Mahananda
10. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இந்தியாவின் பெரிய சமவெளி தொடர்பான சரியான கூற்று/கூற்றுகள் கருத்தில் கொள்ளவும்.
அ. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 4.42 சதவீதத்தை கொண்டிருக்கின்றது
ஆ. இந்தியாவின் பரப்பளவு 3.2 மில்லியன் சதுர கி.மீட்டர்கள், ஆகவே இது உலகின் ஏழாவது பெரிய நாடாக உள்ளது.
Consider the following statement/s is/are true in respect of size of India:
i. India has 4.42% of the Worlds total land area.
ii. India has an area of 3.2 million sq.km., making it the seventh largest country in the world.
(a) அ மட்டும் / i only
(b) ஆ மட்டும் / ii only
(c) அ,ஆ ஆகிய இரண்டும் / both i and ii
(d) மேற்கூறிய ஏதுமில்லை / None of the above
11. எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் (Secular) “சமய சார்பற்ற”என்ற வார்த்தை அரசியல் சாசனத்தின் முப்புரையில் சேர்க்கப்பட்டது?
By which amendment the word “secular” was added to the Preamble of the constitution?
(a) 22nd
(b) 32nd
(c) 42nd
(d) 52nd
12. விஜயநகரத்து ரோஜா வியாபாரிகளைப் பற்றி குறிப்பிட்டவர் யார்?
Who mentioned about the Rose Merchants of Vijayanagar?
(a) பார்பரோசா / Barbarossa
(b) அப்துர் ரசாக் / Abdur Razak
(c) நியூனிஸ் / Nuniz
(d) பயஸ் / Paes
13. அமத்யா அல்லது மஜீம்தார் என்பவரை மராத்திய ஆட்சியில் நியமனம் செய்தனர்
I. அவர் மாநிலத்தின் வரவு செலவு கணக்கை பார்ப்பதில் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
II. மன்னரின் பாதுகாப்பு மற்றும் தனி உதவியாளராகவும் அவரின் தினசரி வேலைகளை மேற்பார்வையிடுவதில்
III. வெளியுறவுத் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்
IV. அரண்மனைக்கு வரும் தபால்களை பார்ப்பது அவரின் கடமையாகும்.
மேற்கூறியவற்றில் எதுசரியான கூற்றாகும்?
Under Maratha administration, the Amatya or Majumder was appointed
I. He was responsible for the account of Income and Expenditure of the state.
II. He was responsible for the personal safety of the king and supervise his daily routine work.
III. He was the foreign minister
IV. His duty was to see that all royal letters.
Which of the above statements is correct?
(a) I
(b) II
(c) III
(d) IV
14. மத்திய புலனாய்வு ஆணையம் பற்றிய தவறான சொற்றொடரை கண்டறிக:
Identify the false statement about the Central Bureau of Investigation
(a) ஒரு சட்ட ரீதியான அமைப்பு / Is a statutory body
(b) ஒரு சட்டரீதியான அமைப்பு அல்ல / Is not a statutory body
(c) டெல்லி தனிப்பட்ட போலிஸ் படை அமைப்பு சட்டம் 1946லிருந்து தன் அதிகாரங்களை பெறுகின்றது / Derives its powers from Delhi special Police Establishment Act, 1946
(d) மத்திய அரசின் முக்கிய விசாரணை முகமை ஆகும். / Is the main investigating agency of the Central Government
15. இந்தோ-திபெத் எல்லை காவல் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
When was the Indo-Tibetan Border Police (ITBP) raised?
(a) 2 அக்டோபர், 1969 / 02 October, 1969
(b) 12 அக்டோபர், 1972 / 12 October, 1972
(c) 24 அக்டோபர், 1962 / 24 October, 1962
(d) 30 அக்டோபர், 1975 / 30 October, 1975
16. கூற்று (கூ): ஆளுநர் மற்றும் அமைச்சரவைக்கு இடையே தகவல் தொடர்பு பாலமாக செயல்படுபவர் முதல்வர் ஆகும்.
காரணம் (கா): மாநிலஅமைச்சரவை குழுவுக்கு தலைவராக செயல்படுபவர் முதல்வராவார்
Assertion (A): The Chief Minister is the channel of communication between Governor and the Council of Ministers.
Reason (R): The Chief Minister is the head of State council of Ministers.
(a) (கூ) தவறானதுமற்றும் (கா) சரியானது / (A) is false, but (R) is true
(b) (கூ) சரியானது மற்றும் (கா) தவறானது / (A) is true, but (R) is false
(c) (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, ஆனால் (கா), (கூ) க்கு சரியான விளக்கம் இல்லை / Both (A) and (R) are true, but (R) is not a correct explanation of (A)
(d) (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, மற்றும் (கா), (கூ)க்கு சரியான விளக்கம் / Both (A) and (R) are true, and (R) is not a correct explanation of (A)
17. 86-வது சட்டத்திருத்தம் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 51-Aல் சேர்க்கப்பட்ட சரியான சரத்தைக் கீழ்கண்டவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
Select from the given provisions the correct one that was inserted under Article 51-A of the Indian Constitution under the 86th Amendment Act 2002?
(a) தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடியை மதித்தல் / Respect the National flag and the National Anthem
(b) நாட்டின் இயற்கைச் சூழலைப் பாதுகாத்தல் / Protect and improve the Nations’ Natural environment
(c) நாட்டின் பொதுச் சொத்தைப் பாதுகாத்தல் / Safeguard public property
(d) பெற்றோர் தங்கள் ஆறிலிருந்து பதிநான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கல்வி வழங்குதல் / Parents to provide opportunities for education to their children between the age of six and fourteen years.
18. எதனால் சில செலவுகளை“திட்டம் சாரா வருவாய் செலவுகள்”என அழைக்கிறோம்?
Why certain expenditures are called Non-plan expenditure?
(a) திட்டம் போடப்படாத செலவுகள் / Expenditures not planned
(b) ஐந்தாண்டு திட்டத்தில் வராத செலவுகள் / Expenditures not included in the five year plan
(c) திட்டம் போட்ட பின் சேர்க்கப்படும் செலவுகள் / Expenditures included after preparation of plan
(d) மிகச் சொற்பமானசெலவுகள் / Expenditures of miniscale amount
19. அரசியலமைப்பு முகப்புரை என்பது“அரசியலமைப்பின் அரசியல் ஜாதகம்”எனக் கூறியவர் யார்?
Who said that the preamble of the constitution is “the political horoscope of the constitution?
(a) கே.எம்.முன்ஷி / K.M.Munshi
(b) Dr.B.R.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar
(c) மகாத்மாகாந்தி / Mahatma Gandhi
(d) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
20. இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடு/செயல்பாடுகளாவன:
1. நாணய வெளியீடு
2. அரசாங்கத்தின் வங்கியாளர்
3. வங்கிகளின் வங்கியாளர்
4. பரிமாற்ற மேலாண்மை மற்றும் கட்டுபாடு
The function/s of Reserve Bank of India are:
1. Issue of currency.
2. Banker to Government
3. Banker’s Bank
4. Exchange Management and Control
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 2 மற்றும் 4 மட்டும் / 2 and 4 only
(d) 1,2,3 மற்றும் 4 / 1,2,3 and 4
21. அபிநவ பாரத சங்கம் தோற்றுவித்தவர் யார்?
The founder of the Abhinav Bharat Society
(a) ஜதின் தாஸ் / Jutin Das
(b) சூர்யாசென் / Surya Sen
(c) மதன் லால் திங்க்ரா / Madan Lal Dhingra
(d) கணேஷ் தாமோதர் சவர்கர் / Ganesh Damodhar Savarkar
22. வங்காளத்தில் முதல் முஸ்லீம் இயக்கமான, முகமதிய இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
The Mohammedan Association, the first Muslim organization in Bengal was established in the year
(a) 1823
(b) 1835
(c) 1843
(d) 1855
23. “நான் ஏன் நாத்திகவாதி”என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
The article “why I am an Atheist” written by
(a) லாலா லஜபத் ராய் / Lala Lajpat Rai
(b) பகத் சிங் / Bhagat Singh
(c) பகவதி சரண் வோஹரா / BhagawatiCharan Vohra
(d) சந்திரசேகர் ஆசாத் / Chandrashkhar Azad
24. “பதினெட்டு ஐம்பத்தி ஏழு”என்ற புத்தகத்தை எழுதியவர்
A book “Eighteen Fifty Seven” was written by
(a) டாக்டர்.அலெக்சாண்டர் டஃப் / Dr.Alexander Duff
(b) டாக்டர்.எஸ்.என்.சென் / Dr.S.N.Sen
(c) வி.டி.சாவர்க்கர் / V.D.Savarkar
(d) ஜே.டபிள்யூ.கேய் / J.W.Kaye
25. தமிழக சமூக நலவாரியம்
அ. 1954-ல் உருவாக்கப்பட்டது
ஆ. பெண்கள், குழந்தைகள் நலனை ஏற்படுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இ. SCs & STs மற்றும் ஆதரவு இல்லாதோர்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேல்கூறிய கூற்றுகளில் எது/எவைஉண்மை?
The Tamil Nadu State Social Welfare Board
i. It was established in 1954
ii. It has undertaken many programmes for women and children
iii. It has welfare programme for scheduled caste, scheduled tribe and orphans
Which of the above statement is/are true with regard to TN social welfare board?
(a) அ மட்டும் / i only
(b) அ மற்றும் ஆ / i and ii
(c) அ மற்றும் இ / i and iii
(d) அ, ஆ மற்றும் இ / i, ii and iii
26. “மறைந்து போன தமிழ் நூல்கள்”ஆசிரியர் யார்?
Who is the author of the book “Marainthupona Tamil Noolgal?”
(a) மயிலை சீனி வேங்கடசாமி / MayilaiSeeniVengatasamy
(b) திருமேனி ரத்தின கவிராயர் / Thirumeni Rathina Kavirayar
(c) மு.ராகவ ஐயங்கார் / M.Ragava Iyengar
(d) மு.வை.அரவிந்தன் / M.V.Aravindhan
27. தமிழக வரலாற்றில் “வர்ணா சிரம தர்மங்கள் அனுபாலித”என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள்?
Identify the group, those who were called themselves as “Varnashrma dharmangal anupalitha” in the history of Tamil Nadu?
(a) பல்லவர்கள் / Pallavas
(b) பாண்டியர்கள் / Pandyas
(c) நாயக்கர்கள் / Nayaks
(d) புதுக்கோட்டை தொண்டைமான்கள் / Tondaimans of Pudukkottai
28. “எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே”
–எனும் புறநானூற்று பாடல் உணர்த்தும் பொருள்.
“A carpenter who makes eight Chariot’s a day. How strong a Chariot’s wheel if he takes one month the make that one”. What is the implied meaning of the this “PurananutruPadal?”
(a) வலிமை உடையவன் / A strong person
(b) வெற்றி பெறுபவன் / A Victorious person
(c) கொடை கொடுப்பவன் / A Charitable person
(d) புலவரை ஆதரிப்பவன் / One who supports poets
29. “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்”
–எனும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் துறை எது?
“Last full moon we has our father, we had our hill”. In which division the poem Purananooru Express?
(“AtraiThingal av venilavinenthaiyumudaiyemyemkundrumpererkolar)
(a) கையறுநிலை / Helpless state in distress (Kayaru Nilai)
(b) மழபுல வஞ்சி / MazhapulaVanji
(c) பொருண்மொழிக்காஞ்சி / Porunmozhi Kanji
(d) பெருங்காஞ்சி / Perumkanji
30. பொருளாதார சூழலியலின் தந்தை எனப்படுபவர்
The father of economic Ecology is
(a) காந்திஜி / Gandhiji
(b) எம்.எஸ்.சுவாமிநாதன் / M.S.Swaminathan
(c) சிவன் / Sivan
(d) நம்மாழ்வார் / Nammazhvar
31. கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க:
பார்சன் வேலி எதனை சார்ந்தது?
1. புனல் மின்சாரம் (நீர் ஆற்றல்).
2. சூர்ய சக்தி மின்சாரம்.
3. அணுமின் ஆற்றல்.
4. காற்றாலை மின்சாரம்.
மேலே உள்ளவையில் எது சரியான விடை?
Consider the following statement: Parson valley is associated with
1. Hydel energy. 2.Solar energy. 3.Nuclear energy. 4.Wind energy. Above which one is correct?
(a) 2,3
(b) 1
(c) 1,4
(d) 4
32. ஒவ்வொரு மாவட்டத்திலும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் தமிழக இந்து ஆதிதிராவிட மாணவர்களுக்கு (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) வழங்கப்படும் ரொக்க விருது ———– ஆகும்.
———– is cash award given the Hindu Adi Dravidar Students of Tamil Nadu (one boy and one girl) who secure first rank in each district in plus 2 public examinations.
(a) திருவள்ளுவர் விருது / Thiruvalluvar Award
(b) அம்பேத்கார் விருது / Ambedkar Award
(c) அண்ணல் காந்தி நினைவு விருது / Annal Gandhi Memorial Award
(d) பெரியார் விருது / Periyar Award
33. தமிழக அரசின் முதல் மனிதவள மேம்பாட்டு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டானது
Government of Tamil Nadu was published first Human Development report in the year.
(a) 2000
(b) 2001
(c) 2002
(d) 2003
34. TICEL பூங்கா என்பது
The TICEL park is
(a) இரப்பர் பூங்கா / Rubber park
(b) ஜவுளி பூங்கா / Textile Park
(c) உணவுபூங்கா / Food Park
(d) உயிரிபூங்கா / Bio park
35. செங்கல்பட்டு மாவட்டத்தை“சென்னையின் நுழைவாயில்”என்று ஏன் அழைக்கலாம்?
Why Chengalpattu district can be called as “the Gateway of Chennai?”
(a) தென் மாவட்டங்களிலிருந்துதலைநகருக்குசெல்லும் நுழைவாயிலாக இருப்பதால் / It is the threshold to the State’s capital from Southern Districts
(b) வடமாவட்டங்களிலிருந்துதலைநகருக்கு செல்லும் நுழைவாயிலாக இருப்பதால் / It is the threshold to the State’s capital from Northern Districts
(c) கிழக்கு மாவட்டங்களிலிருந்து தலைநகருக்கு செல்லும் நுழைவாயிலாக இருப்பதால் / It is the threshold to the State’s capital from Eastern Districts
(d) மேற்கு மாவட்டங்களிலிருந்து தலைநகருக்கு செல்லும் நுழைவாயிலாக இருப்பதால் / It is the threshold to the State’s capital from Western Districts
36. அதிக ஆற்றலுடன் விளங்கும் கதிர்வீச்சு ———- ஆகும்.
The radiation with highest energy is
(a) எக்ஸ் கதிர் / X-ray
(b) புற ஊதாக் கதிர் / UV-ray
(c) அகச்சிவப்பு கதிர் / IR-ray
(d) கண்ணுறுஒளி / Visible light
37. டெசிபல் என்பது ————ஐ அளக்கும் ஒரு அலகு ஆகும்.
Decibel is a unit to measure the
(a) கதிர்வீச்சின் செறிவு / Intensity of Radiation
(b) ஒலிச்செறிவு / Intensity of Sound
(c) ஒளிச்செறிவு / Intensity of light
(d) வெப்பச்செறிவு / Intensity of heat
38. திறந்த மனப்பான்மை என்ற பண்பு —————- ஆகும்.
Open mindedness is a trait of
(a) கண்டுபிடிப்பு / Discovery
(b) கருத்து கற்றல் / Concept learning
(c) அறிவியல் புலன்காட்சி / Scientific perception
(d) அறிவியல் மனப்பான்மை / Scientific attitude
39. ஏன் இரண்டு சக்கர வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்படுவதில்லை?
Why two wheeler are not normally fitted with diesel engine?
(a) குறைந்ததிறன் / Less efficiency
(b) அதிக புகை / More smoke
(c) அதிகதிறன் / High power
(d) குறைந்த அடர்த்தி / Less density
40.”SANKALP” என்பது இதனோடு தொடர்புடைய தொடுதாக்கத்தின் முதற்படியாகும்.
“SANKALP” is an Initiative associated with
(a) கற்றல் திட்டம் / Learning programme
(b) திறன் மேம்பாட்டுதிட்டம் / Skill development programme
(c) அதிகாரபரவலாக்க திட்டம் / Decentralization Programme
(d) திறமை-உருவாக்கதிட்டம் / Capacity-Building Programme
41. கேரளாமாநிலம் உருவாக்கப்பட்டவருடம்
The formation of Kerala state in the year
(a) 1943
(b) 1946
(c) 1953
(d) 1956
42. கேலோ இந்தியா எந்த வருடம் கொண்டு வரப்பட்டது?
Khelo India was launched during the year
(a) 2015-2016
(b) 2016-2017
(c) 2017-2018
(d) 2018-2019
43. UN உலக பாரம்பரிய தளம் உருவாக்கயிருக்கும் “புத்தமதத்தின் மெக்கா” –சிறப்பு மேம்பாட்டு மண்டலம் எங்கு உள்ளது?
The UN heritage site which is aimed to be a special development zone called “Mecca for Buddhist” recently is
(a) புத்தகயா / Bodhgaya
(b) சாரநாத் / Sarnath
(c) லும்பினி / Lumbini
(d) முக்திநாத் / Mukthinath
44. பின்வருவனவற்றுள் எது கோடைகாலப் பருவ வேளாண்மையுடன் தொடர்புடையது?
Which of the following is related to summer season of cropping?
(a) சைட் / Zaid
(b) ராபி / Rabi
(c) காரிப் / Kharif
(d) வறண்ட வேளாண்மை / Dry Farming
45. பின்வருவனவற்றுள் எந்த மண்ணில் உயிர்சத்து மிக அதிகமுள்ளது?
Which of the following soil is very rich in Humus?
(a) லேட்டரைட் மண் / Laterite soil
(b) காட்டுமற்றும் மலைமண் / Forest and mountains soil
(c) சதுப்புநிலமண் / Marshy soil
(d) வண்டல் மண் / Alluvial soil
46. புகழ்பெற்ற “விருபாக்க்ஷா” கோவில் அமைந்துள்ள இடம் எது?
The famous Virupaksha temple located at the place
(a) ஸ்ரீ காளஹஸ்தி / Sri Kalahasti
(b) ஸ்ரீ பத்ராசலம் / Sri Bhadrachalam
(c) ஹம்பி / Hampi
(d) சிதம்பரம் / Chidambaram
47. மராத்திய நிர்வாக முறையில் “சுமந்த்” என்பவர் யார்?
In the Maratha administatrion “Sumant” is named as
(a) பிரதம அமைச்சர் / Prime Minister
(b) சேனாபதி / Commander-in-Chief
(c) நீதிபதி / Judge
(d) வெளியுறவுஅமைச்சர் / Foreign Minister
48. கீழ்கண்டவைகளில் தௌலதபாத் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
1. தௌலதபாத் என்றால் செல்வம் கொழித்த நகரம் என்றுபெயர்.
2. தௌலதபாத்தின் மற்றொரு பெயர் தேவகிரி.
3. முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினார்.
4. தௌலதபாத், பாமினி அரசின் ஒரு பகுதியாகும்.
Which one of the Statement is correct regarding Dauladabad?
1. Dauladabad mean city of wealth
2. Another name of Dauladabad is devagiri
3. Muhammad bin tughlaq changed his capital from delhi to devagiri.
4. Dauladabad was one part of the Bhamini kingdom.
(a) 1 மட்டும் / 1 only
(b) 2 மட்டும் / 2 only
(c) 3 மட்டும் / 3 only
(d) 1,2,3,4
49. டெல்லியில் முதல் ஆப்கான் ஆட்சியை நிறுவியவர்
The First Afgan rule in Delhi was founded by
(a) மாலிக் பர்ஹாம் / Malik Bahram
(b) மாலிக் மர்தான் தௌலத் / Malik Mardan Dawla
(c) பஹலுல் லோடி / Bahlul Lodi
(d) இஸ்லாம் கான் / Islamkhan
50. சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக குறைந்த அளவு எடை
The smallest weight found at the Indus Valley sites
(a) .675g
(b) .850g
(c) .875g
(d) .785g
51. பின்வருவனவற்றை பொருத்துக:
அ. R,V.S.பெரி சாஸ்த்திரி 1. முன்னால் தலைமை தேர்தல் ஆணையர்
ஆ. A.N.ராய் 2. முன்னால் இந்திய தலைமை நீதிபதி
இ. சரன் சிங் 3. முன்னால் இந்திய பிரதமர்
ஈ. B.N.ஜா 4. முன்னால் UPSC தலைவர்
Match the following:
(a) R.V.S.Perisastri 1. Former Chief Election Commissioner
(b) A.N.Roy 2. Former Chief Justice of India
(c) Charan Singh 3. Former Prime Minister of India
(d) B.N.Jha 4. Former Chairman of UPSC
a b c d
(a) 1 2 3 4
(b) 2 4 1 3
(c) 3 2 4 1
(d) 4 3 1 2
52. இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்புப் படைகளின் மீதான உயர்தனி ஆணையதிகாரம் யாரிடம் உற்றமைந்திருக்கிறது?
The supreme command of the Defence forces of the Union of India is vested in whom?
(a) குடியரசுத் தலைவரிடம் / The President
(b) பாராளுமன்றத்திடம் / The Parliament
(c) குடியரசுத் தலைவரிடம்; ஆனால் பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு உட்பட்டு / The President but regulated by Parliament
(d) முப்படைத் தலைமைத் தளபதியிடம் / Chief of Defence staff
53. கீழ் சொல்லப்பட்டவற்றுள் “நாங்கள் ஆணையிடுகிறோம்” என்ற பொருள் உணர்த்துவது ————– மனு
Which of the following “writs”, literally menas “we Command?”
(a) ஆட்கொணர்வுமனு / Habeas Corpus
(b) மாண்டமுஸ் / Mandamus
(c) கோவாரண்டோ / Quo warranto
(d) செர்டியோராரி / Certiorari
54. புதிய அகில இந்தியப் பணியினை —————-ஆல் உருவாக்க இயலும்.
A new All-India Service can be created by
(a) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் / An act of Parliament
(b) குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம் / An order of the President of India
(c) மாநிலங்களின் அவை தீர்மானத்தின் மூலம் / A resolution of the Rajya Sabha
(d) மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தீர்மானம் மூலம் / A resolution of the UPSC
55. இந்தியாவில் குறு விவசாயிகள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு
The Marginal farmers in India, who holds land upto
(a) 1 ஹெக்டேர் / 1 hectare
(b) 2 ஹெக்டேர் / 2 hectares
(c) 4 ஹெக்டேர் / 4 hectares
(d) 10 ஹெக்டேர் / 10 hectares
56. 13வது நிதிக் குழுவின் தலைவர் யார்?
The Chairman of the 13th Finance Commission is
(a) என்.கே.பி.சால்வே / N.K.P Salve
(b) கே.சி.பந்த் / K.C.Panth
(c) விஜய் கேல்கர் / Vijay Kelkar
(d) ரங்கராஜன் / Rangarajan
57. இந்திய எழுச்சியின் தந்தை எனக் கருதப்பட்டவர் யார்?
Who among the following was considered as the “Father of Indian Uprising?”
(a) பாலகங்காதரதிலகர் / Bal Gangadhar Tilak
(b) பிபின் சந்திரபால் / Bipin Chandra Pal
(c) சி.ஆர்.தாஸ் / C.R.Das
(d) கோபாலகிருஷ்ண கோகலே / Gopala Krishna Gokhale
58. இந்திய பொருளாதாரத்தில் பிரதான இடம் வகிப்பது
What is the mainstay of Indian Economy?
(a) வணிகம் / Business
(b) விவசாயம் / Agriculture
(c) பொதுத்துறை தொழிற்சாலைகள் / Public Sector Industries
(d) உற்பத்தி துறை / Manufacturing Sector
59. 1895ஆம் ஆண்டு சிவாஜி இயக்கத்தை தொடங்கியவர்
In 1895, Shivaji Movement was started by
(a) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
(b) மகாத்மாகாந்தி / Mahatma Gandhi
(c) பாலகங்காதர திலகர் / Bal Gangadhar Tilak
(d) சுபாஷ் சந்திரபோஸ் / Subash Chandra Bose
60. “பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்”
– என்றவர்
Who said that, “All lives are alike at birth?”
(a) கம்பர் / Kambar
(b) இளங்கோவடிகள்/ Ilangovadigal
(c) திருமூலர் / Thirumoolar
(d) திருவள்ளுவர் / Thiruvalluvar
61. ஹேம் சந்திரகாரின் பிரகடனம் ————– கிளர்ச்சிச்கு வழி வகுத்தது.
Hem Chandra Kar’s proclamation led to the outbreak of ——– revolt.
(a) இண்டிகோகிளர்ச்சி / Indigo Revolt
(b) பாப்னா கிளர்ச்சி / Pabna Revolt
(c) தக்காணக் கலகம் / Deccan Riots
(d) குக்காகிளர்ச்சி / Kuka Revolt
62. சி.என்.அண்ணாதுரை முதல் மந்திரியாகஅதிகாரத்தில் பொறுப்பேற்றஆண்டு
C.N.Annaduari assumed the power as Chief Minister in the year
(a) 1967
(b) 1969
(c) 1968
(d) 1966
63. எந்த ஆண்டு இந்திய மக்கள் தொகைகணக்கெடுப்பில் தமிழ்நாட்டின் சில சாதியினர் சத்திரிய அந்தஸ்தினை கோரினர்?
In the census of India which ywar some caste groups in Tamil Nadu claimed Kshatriya status?
(a) 1865
(b) 1882
(c) 1901
(d) 2001
64. கரூர் பிரிவினை வழக்கு எந்த இயக்கத்தோடு தொடர்புடையது?
Karur Sedition case was related to which movement?
(a) சுதேசி இயக்கம் / Swdeshi Movement
(b) இண்டிகோ இயக்கம் / Indigo Movement
(c) வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movment
(d) தன்னாட்சி இயக்கம் / Home Rule movement
65. “பசுவய்யா” என்னும் புனைப்பெயரில் புதுக்கவிதை எழுதியவர் யார்?
Who wrote puthukavithai (free verse) under the pen name Pasuvayya?
(a) நகுலன் / Nagulan
(b) சுந்தரராமசாமி / Sundara Ramasamy
(c) கலாப்பிரியா / Kala Piriya
(d) விக்கிரமாதித்தன் / Vikramathithan
66. திருமாலின் வெற்றியைப் புகழ்வது ———– என்னும் துறையாகும்.
The text which praises the victories of Lord Vishnu belongs ———— genre
(a) புறநிலைவாழ்த்து / Puranilai Valthu
(b) வாள் மங்கலம் / Vaal Mangalam
(c) கந்தழி / Kandazhi
(d) வாயுறைவாழ்த்து / Vaayurai Vailthu
67. தன் மனத்திலே சிவபெருமானுக்குக் கோயில் கட்டிய நாயனார்
Mention the name of the Nayanar who built s siva temple in his mind?
(a) நேசநாயனார் / Nesa Nayanar
(b) சடையநாயனார் / Sadaya Nayanar
(c) இசைநாயனார் / Isai Nayanar
(d) பூசலார் நாயனார் / Poosalar Nayanar
68. வரலாற்றுக்கு முந்தைய எந்த காலக் கட்டத்தில் சுடுமண் உருவக் கலை வழக்கத்திற்கு வந்தது?
To which pre-historic tiem antiquity of terracotta art was traced back?
(a) செம்புகாலம் / Chalcolithic Age
(b) பெருங்கற்காலம் / Megalithic Age
(c) புதியகற்காலம் / Neolithic Age
(d) இரும்புக்காலம் / Iron Age
69. கபாடபுரம் கடலால் மூழ்கடிக்கப்பட்டபோதுஆட்சிசெய்தபாண்டியமன்னன்
Kapadapuram was engulfed by a sea during the reign of the Pandian king.
(a) கடுங்கோன் / Kadungon
(b) காய்சினவழுதி / Kaichinavazhuthi
(c) முடத்திருமாறன் / Mudathirumaran
(d) நெடுஞ்செழியன் / Nedunchezhian
70. பின்வருவனவற்றை பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. TNeGA 1. ஸ்டேட் நோடல் ஏஜென்சி
ஆ. இ-சேவை 2. நிகழ்நிலைச் சேவைகள்
இ. TN-GIS 3. தொலையுணர்வு தொழில் நுட்பம்
ஈ. Block chain back bone 4. நம்பிக்கை இணையம்
Match the following:
List I List II
a. TNeGa 1. State Nodal Agency
b. E-Sevai 2. Online Service
c. TN-GIS 3. Remote Sensing Technology
d. Block Chain Back Bone 4. Nambikkai Inaiyam
a b c d
a. 1 2 3 4
b. 2 1 3 4
c. 1 2 4 3
d. 4 3 2 1
71. வரிசை I வரிசை II உடன் பொருத்திசரியான விடையை தேர்ந்தெடுக்க:
வரிசை I வரிசை II
அ. மாநிலமகளிர் ஆணையம் 1. அவசர நேரத்தில் பெண்களுக்குஉதவுவது
ஆ. மாநில பெண்கள் வளமையம் 2. பாதிக்கப்பட்டபெண்களுக்குபாதுகாப்பளிப்பது
இ. ஒரு நிறுத்த நெருக்கடி மையம் 3. பெண்களுக்கான முழுமையான அதிகாரமளித்தல்
ஈ. பெண்கள் உதவித் தொலைபேசி
தொடர்பு எண் திட்டம் 4. பாலினபிரச்சனைகளை கையாள்வது
Match List I with List II and choose the correct answer:
List I List II
a. State commission for women 1. Emergency response to women
b. State Resource centre for women 2. Shelter to affected women
c. One stop crisis centre 3. Holistic empowerment of women
d. Women Helpline Scheme 4. To address gender issues
a b c d
a. 4 2 1 3
b. 4 3 2 1
c. 1 4 2 3
d. 2 4 1 3
72. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் பயனாளிகள்:
1. வயது வரம்பு இல்லை.
2. வருமான வரம்பு இல்லை.
3. ஆதரவற்ற விதவை.
4. பயனாளிகள் பெண் குழந்தை வைத்திருக்க வேண்டும்.
பின்வருபவற்றில் எது சரியான விடை?
To avail benefit under Sathyavani Muthu Ammaiyar Ninaivu free supply of sewing machine are
1. No age limit
2. No income limit
3. Destitute widow
4. Beneficiary should have female child
Among these, which are correct?
(a) 1 மற்றும் 2 / 1 and 2
(b) 3 மட்டும் / 3
(c) 3 மற்றும் 4 / 3 and 4
(d) 4 மட்டும் / 4