Tnpsc Model Question Paper 17 – General Studies in Tamil & English
1. முசிறியை “இந்தியாவின் முதல் பேரங்காடி” என்று கூறும் வெளிநாட்டு நூல் ——— ஆகும்.
——- foreign accounts called Muziri as the “First Emporium of India”
(a) இயற்கை வரலாறு / Natural History
(b) புவியியல் / Geography
(c) எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் / The Periplus of the Erythrean sea
(d) புத்த பதிப்புகள் (நாட்குறி புத்தகம்)/ Buddhist chronicles
2. தவறான இணையைத் தெரிவு செய்க:
Pick out the wrong pair:
(a) வ.உ.சிதம்பரம் – செப்டம்பர் 5, 1872 / V.O.Chidambaram – September 5, 1872
(b) சுப்பிரமணிய பாரதியார் – டிசம்பர் 11, 1881 / Subramaniya Bharathiyar – December 11, 1881
(c) சி.இராஜாஜி – டிசம்பர் 10, 1878 / C.Rajaji – December 10, 1878
(d) காமராஜர் – ஜீலை 15, 1903 / K.Kamarajar – July 15, 1903
3. கூற்று (A): வேலு நாச்சியார் ஹைதர் அலியிடம் 5000 காலாட்படைகளும், 5000 குதிரைப் படைகளும் அனுப்பும்படி கடிதம் எழுதினார்.
காரணம் (R): வேலு நாச்சியார் ஆங்கிலேயரோடு மோதுவதில் தீவிரமாக இருப்பதைத் தெளிவுபடுத்தினார்.
Assertion (A) : Through the letter correspondence Velunachiyar asked 5000 infantry and 5000 cavalry strength to Hyder Ali.
Reason (R): Velunachiyar conveyed her strong determination to fight the English.
(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி எனினும் காரணம் (R) கூற்றை (A) சரியாக விளக்கவில்லை / Both (A) and (R) are correct, but (R) is not the correct explanation of (a)
(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டுமே தவறானவை / Both (A) and (R) are wrong
(c) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி காரணம் (R) கூற்றை (A) சரியாகவே விளக்குகிறது / Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)
(d) கூற்று (A) தவறானது, காரணம் (R) சரியானது / (A) is wrong and (R) is correct
4. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த குழுவின் பெயர்
Name the committee appointed by the British Government to enquire about the Jallianwala Bagh Massacre.
(a) தார் குழு / Dar Committee
(b) ஹன்டர் குழு / Hunter Committee
(c) ராய் குழு / Rai Committee
(d) சைமன் குழு / Simon Committee
5. தமிழ் நாட்டின் எந்த இரண்டு மாவட்டங்கள் அடிக்கடி புயலினால் பாதிக்கப்படுகின்றன?
Which two districts of TamilNadu are frequently affected by cyclonic storms?
(a) தேனி மற்றும் மதுரை / Theni and Madurai
(b) நாகப்பட்டினம் மற்றும் கடலூர் / Nagapattinam and Cuddalore
(c) விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் / Villupuram and Perambalur
(d) காஞ்சிபுரம் மற்றும் இராமநாதபுரம் / Kancheepuram and Ramanathapuram
6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கால வரிசைப்படுத்துக:
1. நவஜவான் பாரத் சபா.
2. இந்துஸ்தான் சோஷலிச குடியரசு அமைப்பில் பகத்சிங் சேர்ந்தார்.
3. பகத்சிங் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
4. பகத்சிங்கும் பி.கெ.தத்தும் மத்திய சட்டமன்றத்தின் மீது குண்டு வீசினார்கள்
Arrange the following Events in Chronological order.
1. Navajawan Bharat Sabha.
2. Bhagat Singh Joined Hindustan socialist Republican Association
3. Bhagat Singh hanged in Lahore Jail
4. Bhagt singh and B.K.Dutt thrown bomb in the Legislative Assembly Hall
(a) 1, 3, 4, 2
(b) 2, 1, 4, 3
(c) 3, 1, 4, 2
(d) 4, 3, 2, 1
7. “அல் ஹிலால்” என்ற வார செய்தித்தாளை ஆரம்பித்தவர் ——— ஆவார்.
“Al-Holal”, a weekly newspaper was started by
(a) முகமது அலி ஜின்னா / Mohammad Ali Jinnah
(b) ரகமது அலி / Rahmat Ali
(c) முகமது இக்பால் / Muhammad Iqbal
(d) அபுல் கலாம் ஆசாத் / Abul Kalam Azad
8. பின்வருவனவற்றைப் பொருத்துக:
திட்ட காலத்தில் ஊரக நலக் கொள்கைகள்:
(a) பாரத நிர்மாண் 1. X திட்டம்
(b) ஊரக ஏழைகளின் அடிப்படை தேவைகளை உறுதி செய்தல் 2. XI திட்டம்.
(c) ஊரக ஏழைகளுக்குப் புதிய ஊதியம் பெறும் வழிகளை ஆக்குதல் 3. IX திட்டம்
(d) ஊரகப் பகுதிகளில் புதிய உள்கட்டமைப்பு வகைகளை உருவாக்குதல் 4. VIII திட்டம்
Match the following:
Rural welfare policy during plan periods
(a) Bharat NIrman 1. X Plan
(b) Ensuring basic needs for rural poor 2. XI plan
(c) Providing new wage earning revenues to rural poor 3. IX plan
(d) Creating new infrastructure in rural areas 4. VIII plan
a b c d
a. 1 2 3 4
b. 2 4 1 3
c. 4 1 2 3
d. 3 1 2 4
9. சொத்துக்களுக்கான வரி இந்தியாவில் யாரால் வசூலிக்கப்படுகிறது?
The taxes on properties are collected by
(a) மைய அரசு / Central Government
(b) மாநில அரசு / State Government
(c) மைய மற்றும் மாநில அரசு / Central and State Government
(d) உள்ளாட்சி அரசு / Local Government
10. மத்திய அரசால் அல்லது மாநில அரசால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் யாருக்குச் செல்லும்?
The tax revenue from lotteries organised by the Union Government or the state government goes to
(a) ஒன்றிய அரசுக்கு / Central Government
(b) மாநில அரசுக்கு / State Government
(c) மத்திய மற்றும் மாநில அரசுக்கு / Both State and Central Government
(d) மேற்கண்ட எதுவும் இல்லை / None of the above
11. பின்வருபவை வறுமையின் பொருளாதார பிரச்சனையாகும்.
1.அதிகரிக்கும் வேலையின்மை.
2. தொழில்நுட்ப வளர்ச்சி.
3. மூலதனப் பற்றாக்குறை.
4. போதிய பொருளாதார வளர்ச்சியின்மை
. Which of the followings are the economic problems of poverty?
I. Increasing unemployment
II. Technological development
III. Capital deficiency
IV. Inadequate economic development
(a) 1, 2 மற்றும் 3 / I, II and III
(b) 2, 3 மற்றும் 4 / II, III and IV
(c) 1, 3 மற்றும் 4 / I, III and IV
(d) 1, 2 மற்றும் 4 / I, II and IV
12. 2022ஆம் ஆண்டிற்கான BRICS மாநாட்டை நடத்தும் நாடு ———- ஆகும்.
The country which hosts the BRICS meet for the year 2022 is
(a) பிரேசில் / Brazil
(b) இரஷ்யா / Russia
(c) இந்தியா / India
(d) சீனா / China
13. ஆளுமையை (நபரை) அடையாளம் காண்க:
இவர் தமிழக அரசியல் இயக்கத்தில் பகுத்தறிவு கருத்துக்கள் மற்றும் அறிவியல் பார்வைகளை ஏற்படுத்தியவர்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டபவர்; இந்திய அரசியலில் சமதர்ம கருத்துக்களைப் பரப்பியவர்; இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.
Identify the personality: He played a pivotal role in spreading rational ideas and scientific perception into politics of Srimurthy. He worked for the welfare of farmers, workers and spread socialist thinking into politics. He was appointed as a member of the Indian National Congress.
(a) ஜெ.சி.குமரப்பா / J.C.Kumarappa
(b) ஈ.வே.ரா.பெரியார் / E.V.R.Periyar
(c) சிங்காரவேலர் / Singaravelar
(d) மறைமலை அடிகளார் / Maraimalai Adigal
14. கூற்று (A): இந்திய அரசமைப்பு விதி 312 அகில இந்தியப் பணிகள் தொடர்பானதாகும்.
காரணம் (R): ஒரே சீரான தன்மையுடைய அதிகாரவர்க்கம் இருக்க வேண்டும் என மாநிலங்கள் விரும்பின.
Assertion (A) : Article 312 of the Indian Constitution provides for all india services.
Reason (R): The states wanted to have uniformity in Bureaucracy
(a) கூற்று (A) உண்மையாகும். காரணம் (R) தவறாகும். / (A) is true but (R) is false
(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாகும். மேலும் காரணம் (R) என்பது கூற்று (A)விற்கான சரியான விளக்கமாகும். / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(c) கூற்று (A) தவறு. காரணம் (R) சரியாகும் / (A) is false (R) is true
(d) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாகும். இருப்பினும் காரணம் (R) என்பது கூற்று (A)விற்கான சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
15. தாடையற்ற முதுகெலும்பிகள் என்பவை யாவை?
Jawless vertebrates are
(a) தலை முதுகு பிராணிகள் / Cephalochordates
(b) வால் முதுகு பிராணிகள் / Urochordates
(c) வட்டவாயுடைய உயிரிகள் / Cyclostomes
(d) இருவாழ் உயிரினங்கள் / Amphibians
16. மனித இரத்தத்தில் உட்கரு இல்லாத இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
Choose the following pair which lack nucleus in the human blood.
(a) நியூட்ரோஃபில்கள் மற்றும் ஈசினோஃபில்கள் / Neutrophils and Eosinophils
(b) பேசோஃபில்கள் மற்றும் லிம்போசைட்கள் / Basophils and Lymphocytes
(c) மோனோசைட்கள் மற்றும் ஈசினோஃபில்கள் / Monocytes and Eosinophils
(d) முதிர்ச்சி அடைந்த எரித்ரோசைட்டுகள் மற்றும் திராம்போசைட்டுகள் / Matured erythrocytes and Thrombocytes
17. உயிரி வாயு உற்பத்தியில் படியும் கழிவுகளில் ——- அளவு மிகுந்திருப்பதால் சிறந்த உரமாகும்.
The left over slurry in biogas production is a good manure rich in
(a) கார்பன் மற்றும் ஹைட்ரஜன் / Carbon and hydrogen
(b) நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் / Nitrogen and phosphorus
(c) அயோடின் மற்றும் ஆன்டிமனி / Iodine and Antimony
(d) சோடியம் மற்றும் கால்சியம் / Sodium and Calcium
18. 298 K வெப்பநிலையில், 0.08M CH3COOH மற்றும் 0.06M CH3COONa கொண்ட கலவையில் உள்ள H3O+ அயனியின் செறிவினைக் கணக்கிடுக.
(அசிடிக் அமிலத்தின் Ka = 1.84 x 10-5)
Calculate the concentration of H3O+ ion in a mixture of 0.08M CH3COOH and 0.06M CH3COONa at 298 K (Ka for acetic acid = 1.84 x 10-5)
(a) 2.4533 x 10-5 mol l-1
(b) 2.7613 x 10-5 mol l-1
(c) 3.4533 x 10-5 mol2 l-2
(d) 2.7713 x 10-5 mol l-1
19. கூற்று (A): இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட சமதர்ம, மதசார்பற்ற, ஜனநாயக, குடியரசாக அமைவதற்கு, உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்.
காரணம் (R): முகவுரை இந்திய அரசியல் சாசனத்தின் அதிகார மூலதனம் மற்றும் இந்திய நாட்டின் தன்மையை வெளிப்படுத்துகிறது.
Reason and assertion type:
Assertion (A): We the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist secular, Democratic, Republic.
Reason (R): The preamble reveals the source of authority of the constitution and nature of Indian state.
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A)யின் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false, (R) is true
(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரியானது ஆனால் (R)க்கு சரியான விளக்கம் (A) இல்லை/ Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
20. கூற்று (A): அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் இந்திய “அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம்” என B.R.அம்பேத்கரால் விவரிக்கப்படுகிறது.
காரணம் (R): அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் நாட்டிற்கான வழிகாட்டியாக செயல்படுகிறது.
Assertion (A): Directive Principles of State Policy (DPSP) are described as “Novel Feature” of Indian Constitution, according to B.R.Ambedkar.
Reason(R): DPSP acts as a guideline for the state.
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A)யின் சரியான விளக்கம் / Both (A) and (R) are true; and (R) is the correct explanation of (A)
(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is false, (R) is true
(d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரியானது ஆனால் (R)க்கு சரியான விளக்கம் (A) இல்லை / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
21. இந்தியாவின் மிகப்பெரிய உயர் நீதிமன்றம் எது?
Which High court is the biggest High court in India?
(a) கல்கத்தா உயர் நீதிமன்றம் / Calcutta
(b) சென்னை உயர் நீதிமன்றம் / Chennai
(c) அலகாபாத் உயர் நீதிமன்றம் / Allahabad
(d) டெல்லி உயர் நீதிமன்றம் / Delhi
22. பொருத்துக:
நாடுகள் நாடாளுமன்றத்தின் பெயர்
a. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1. டயட்
b. ஜப்பான் 2. பாராளுமன்றம்
c. பிரிட்டன் 3. போல்கட்டிங்
d. டென்மார்க் 4. காங்கிரஸ்
Match the following:
Country Name of the Parliament
a. USA 1. Diet
b. Japan 2. Parliament
c. Britain 3. Folketing
d. Denmark 4. Congress
a b c d
a. 2 1 3 4
b. 4 1 2 3
c. 2 3 4 1
d. 4 3 2 1
23. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்களைத் தொடர்புடைய இடங்களுடன் சரியாகப் பொருத்தவும்:
a. தாமிரம் 1. கெத்ரி.
b. தங்கம் 2. கோலார்.
c. மணிக்கல் 3. பாதகூன்.
d. துணி 4. உம்மா
Match correctly the excavated things with the corresponding places:
a. Copper 1. Khetri
b. Gold 2. Kolar
c. Lapis Lazuli 3. Badakshan
d. Cloth 4. Umma
a b c d
a. 3 4 1 2
b. 1 2 3 4
c. 4 2 1 3
d. 1 4 3 2
24. முகலாயர் காலத்தில் வங்கிப் பணிகள் பெரும்பாலும் ஷ்ராஃப்கள், சாஹீகர்கள் மற்றும் மகாஜன்களால் செய்யப்பட்டன என்று எந்தக் குறிப்புக் கூறுகிறது?
Which reference says that the bankers work was done mostly by the Sarrofs, Sahukars and Mahajan’s during the Mughal period?
(a) தஸ்கிராய்-உல்-வாகியாத் ஜௌஹரின் / Tazkirai-ul-waqiat of Jauhar
(b) கேசவ் தாஸின் ரசிக் பிரியா / Razik Priya of kesh Das
(c) அபுல் ஃபஸ்லின் ஐன்-ஐ-அக்பரி ? Ain-i-Akbari of Abul fazl
(d) சுஜான் ராயின் குலாசத்-உல்-த்வரிக் / Khulasat-ul-Twarikh of Sujan Rai
25. ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்தவர்
The greatest king of the Rashtrakuta dynasty was
(a) முதலாம் அமோகவர்ஷர் / Amogavarsha I
(b) இரண்டாம் கிருஷ்ணர் / Krishna II
(c) மூன்றாம் இந்திரர் / Indra III
(d) இரண்டாம் கோவிந்தர் / Govinda II
26. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் மட்டும் —— சதவீதம் உள்ளனர்.
According to census 2011, the percentage of tribals in total population of India is
(a) 6.3%
(b) 7.4%
(c) 8.2%
(d) 8.6%
27. சரியான கூற்றைத் தேர்வு செய்க:
1. சமயக் சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும்.
2. ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு குழுவின் மீது ஆதிக்கம் செலுத்துதல்.
3. எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதியளித்தல்.
4. சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்
Consider the following statement and tick the correct answer:
i. “Secularism” is the part of India constitution
ii. One religious group dominate another
iii. The state permits the practice of any religion
iv. The state remains neutral in religious matters.
(a) 1, 2 மட்டும் / i and ii only
(b) 2, 3 மட்டும் / ii and iii only
(c) 4 மட்டும் / iv only
(d) 1, 3 மற்றும் 4 மட்டும் / i, iii and iv only
28. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் – I கணவாய் பட்டியல் – II இரண்டு இடங்களை இணைக்கிறது
a. நிட்டி கணவாய் 1. கார்கிலுடன் காஷ்மீர்
b. பென்சிலா கணவாய் 2. திபெத்துடன் உத்தரகண்ட்
c. புர்சைல் கணவாய் 3. லடாக்குடன் சீனா
d. ரோஹ்தாங் கணவாய் 4. ஸ்பிட்டியுடன் லாஹீல்
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I – Pass List II – Connecting Two Places
a. Niti Pass 1. Kashmir with Kargil
b. Pensila Pass 2. Uttarkhand with Tibet
c. Burzail Pass 3. Ladakh with China
d. Rohtang Pass 4. Lahul with Spiti
a b c d
a. 2 1 3 4
b. 2 3 4 1
c. 2 3 1 4
d. 2 1 4 3
29. இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
In which year, Quick mail service is introduced in India?
(a) 1955
(b) 1965
(c) 1975
(d) 1985
30. இந்தியாவில் அதிக மற்றும் குறைந்த மக்களடர்த்தி கொண்ட யூனியன் பிரதேசங்கள் யாவை?
Among the Union territories, which is the highest and lowest density of population in India?
(a) புதுடெல்லி, புதுச்சேரி / New Delhi, Puducherry,
(b) புதுடெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் / New Delhi, Andaman and Nicobar Islands
(c) புதுடெல்லி, கோவா / New Delhi, Goa
(d) புதுடெல்லி, ஏனாம் / New Delhi, Yanam
31. பின்வருவனவற்றில் எது தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது?
1. SBSE – மாநில பள்ளிக் கல்வி வாரியம்.
2. BHSE – உயர் மதிப்பெண் தேர்வு வாரியம்.
3. TNBSE – தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியம்.
4. TNBHSE – தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியம்
Which of the following is incorrectly paired?
1. SBSE – State Board of School Examinations
2. BHSE – Board of Highly Secured Examnination
3. TNBSE – Tamil Nadu Board of Schooling Education
4. TNBHSE – Tamil Nadu Board of Higher Secondary Education
(a) 1 மற்றும் 2 சரியானது அல்ல / 1 and 2 are incorrect
(b) 2 மற்றும் 3 சரியானது அல்ல / 2 and 3 are incorrect
(c) 3 மற்றும் 4 சரியானது அல்ல / 3 and 4 are incorrect
(d) 1 மற்றும் 3 சரியானது அல்ல / 1 and 3 are incorrect
32. வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Wildlife Protection Act was enacted in the year
(a) 1974
(b) 1980
(c) 1972
(d) 2002
33. மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விருது
The government of Tamil Nadu has instituted an award by Name ——– to a person outstanding services to promote communal Harmony.
(a) திருவள்ளுவர் விருது / Thiruvalluvar Award
(b) கோட்டை அமீர் மத நல்லிண விருது / “Kottai Ameer Communal Harmony Award”
(c) பேரறிஞர் அண்ணா விருது / Perarignar Anna Award
(d) பாவேந்தர் பாரதிதாசன் விருது / Pavendar Bharathidasan Award
34. பின்வரும் கூற்றுள் குடிமக்கள் யார் என்பதில் தவறான கூற்றைக் காட்டுக:
1. குடிமக்கள் முழு சிவில் உரிமைகளை அனுபவிக்கிறார்கள். 2. அரசியல் சமூகத்தின் உறுப்பினர்கள். 3. குடிமக்கள் அரசியல் உரிமைகளை அனுபவிப்பதில்லை.
Who are citizens, choose the wrong statement.
i. Citizens enjoy full civil rights
ii. Citizens are members of the political community
iii. Citizens do not enjoy political rights
(a) 1 மற்றும் 2 / i and ii
(b) 1 மட்டும் / i alone
(c) 2 மட்டும் / ii alone
(d) 3 மட்டும் / iii alone
35. அமிழ்தத்தை விட இனிமையானது என்று வள்ளுவர் எதனைச் சுட்டுகின்றார்?
What is much tastier than the nectar from heaven in a family?
(a) மக்கள் மெய் தீண்டல் / Touch of Children
(b) தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் / Food messed up by the hand’s one’s children
(c) புல்லாங்குழலின் இனிமை / Music of the flute
(d) காதலி இன் “சொல்” / Loving words of the beloved
36. “நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் தொடர்பு” யாருடைய தொடர்பு இன்பம் தரும்?”
“Navil thorum noolnayam; polum payilthorum Thotarbu” whose association gives great pleasure?
(a) பேதையார் தொடர்பு / Association with innocence (Pethayar thodarbu)
(b) அரிவையர் தொடர்பு / Association with women (Arivaiyar Thodarbu)
(c) பண்புடையாளர் தொடர்பு / Association with the genteel (Panbudaiyaalar Thodarbu)
(d) அறிவுடையவர் தொடர்பு / Association with the learned (Arivudaiyaar Thodarbu)
37. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
The National Human Right Commission was established in the year
(a) 1990
(b) 1978
(c) 1979
(d) 1993
38. சரியான இணையைத் தேர்வு செய்க:
Choose the correct pair:
a. கண்ணாடி மணிகள் – பொருந்தல் / Glass beads – Porunthal
b. உடைந்த சங்கு வளையல் – கீழடி / Shell wastes of bangle – Keezhadi
c. உருக்கு உலை – கொடுமணல் / Furnace – Kodumanal
d. ஒரே மரத்தாலான படகின் பகுதி – புதுச்சேரியின் ஆரோவில் / Canoe – Auroville, Puducherry
39. சரியான விடையைத் தெரிவு செய்க:
1. சிவகங்கையின் “இராணி” வேலு நாச்சியார் ஆவார்.
2. காளையர் கோவில் போரில் கொல்லப்பட்ட முத்து வடுகநாதர் இராணி வேலு நாச்சியாரின் கணவராவார்.
3. வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதி குயிலி இவர் முதல் தற்கொலைப் படைவீரர் ஆவார்.
4. மருது சகோதரர்களின் உதவியுடன் வேலு நாச்சியார் மீண்டும் இராணியாக முடி சூட்டிக் கொண்டார்.
Choose the correct Answer:
i. Velu Nachiyar was a Queen of Sivagangai
ii. Muthu vaduganathar was killed in Kalaiyar Koil Battle, was the husband of Velu Nachiyar.
iii. Kuyili a commander of Velu Nachiyar was the first suicide attacker.
iv. With the help of Marudhu Brothers again Velu Nachiyar was crowned as Queen
(a) 1, 2 மற்றும் 4 சரி / i, ii and iv are correct
(b) 1, 3 மற்றும் 4 சரி / i, iii and iv are correct
(c) 2 மற்றும் 3 சரி / ii and iii are correct
(d) அனைத்தும் சரி / All are correct
40. —- தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடி கொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடத்திலும் காட்டியவர்.
——– showed his compassion and mercy on all living beings including plants
(a) இராமலிங்க அடிகள் / Ramalinga Adigal
(b) அயோத்திதாசர் / Iyothee Thasar
(c) பாபா ராம்சிங் / Baba Ram Singh
(d) குருநானக் / Guru Nanak
41. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. பேரியார் ஈ.வெ.இராமசாமி சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
2. மக்கள் அவரை “பெரியார் அவரை “வைக்கம் வீரர்” என பாராட்டினர்.
3. பெரியார் “சித்திர புத்திரன்” எனும் புனை பெயரில் கட்டுரைகளை எழுதினார்.
4. B.R.அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்
Choose the correct statement:
I. Periyar EV Ramasamy was the founder of the Self-Respect Movement.
II. People hailed him as “Vaikom Veerar” (Hero of Vaikom)
III. He frequently wrote columns in the magazine under the “pen name: “Chitra Puttiran”
IV. He also supported B.R.Ambedkar’s demand for separate electorates to scheduled castes.
(a) 1 மற்றும் 4 சரி / I and IV are correct
(b) 2 மற்றும் 3 சரி / II and III are correct
(c) 1, 2 மற்றும் 4 சரி / I, II and IV are correct
(d) 2 சரி / II is correct
42. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்ணரசி
——– was the first Queen to fight against the British colonial power in India.
(a) குயிலி / Kyuili
(b) வேலு நாச்சியார் / Velu Nachiar
(c) ராணி மங்கம்மாள் / Rani Mangammal
(d) இராணி இலட்சுமி பாய் / Rani Lakshmi Bai
43. கூற்று (A) : சாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கர் எழுதியுள்ளார்.
காரணம் (R): இந்து சமய நூல்களில் இருந்த சாதி முறையை விமர்சனம் செய்தார்.
Assertion (A): Ambedkar wrote, Annihilation of Caste.
Reason (R): He criticised caste system and Hindu religious texts.
(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மற்றும் காரணம் (R) கூற்றின் (A) சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(b) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) கூற்றின் (A) சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
(c) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு / (A) is true, (R) is false.
(d) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி / (A) is false. (R) is true
44. 1952இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி ——— ஆகும்.
During the Loksabha constituency Election in 1952 Kamarajar got elected from
(a) நாகர்கோவில் / Nagarcoil
(b) விருதுநகர் / Virudhu Nagar
(c) ஸ்ரீவில்லிப்புத்தூர் / Srivilliputtur
(d) அருப்புக்கோட்டை / Aruppukkottai
45. பின்வருவனவற்றுள் எது நேருவின் குடும்பப் பெயர் ஆகும்?
Which one of the following is the family name of Nehru?
(a) ராய் / Rai
(b) குல் / Kul
(c) சர்கார் / Sarkar
(d) கௌல் / Kaul
46. ‘இலக்க முறை பொருளாதாரத்தில் இந்தியா ஓர் உலகளாவிய போட்டியாளராகும்” எனக் கூறியவர்
“India will be a global player in the digital economy” who said this?
(a) அமர்த்தியாசென் / Amarthiyasen
(b) மன்மோகன் சிங் / Manmohan Singh
(c) சுந்தர் பிச்சை / Sunder Pitchai
(d) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
47. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. முதல் ஐந்தாண்டு திட்டம் – 1950-1955
2. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் – 1966-1969
3. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் – 1997-2002
4. பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2012-2017
Choose the right matches among type:
I. First five year plan – 1950-1955
II. Third five year plan – 1966-1969
III. Ninth five year plan – 1997-2002
IV. Twelft five year plan – 2012-2017
(a) 1 மற்றும் 2 சரி / I and II Correct
(b) 3 மற்றும் 4 சரி / III and IV correct
(c) 1 மற்றும் 3 சரி / I and III only correct
(d) 1 மற்றும் 4 சரி / II and IV correct
48. கூற்று (A): சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை வைத்து வங்கி இணைப்புத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.
காரணம் (R): இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பயனாளிகளை வறுமைக் கோட்டிற்கு மேல் முன்னேற்றமடையச் செய்வதாகும்.
Assertion (A): Self help groups are linked with bank based on their performance.
Reason (R): The main objective of this programme is to bring the beneficiaries above the poverty line.
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும் / Both (A) and (R) are true. (R) is the correct explanation of (A)
(c) (A) தவறு, மற்றும் (R) சரி / (A) is false, and (R) is true
(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
49. 2022இல் ASEAN கூட்டத்தை எந்த நாடு நடத்துகிறது?
The country which will host ASEAN 2022 is
(a) கம்போடியா / Cambodia
(b) இத்தாலி / Italy
(c) உரோம் / Rome
(d) இலங்கை / Sri Lanka
50. உலக் அழகி பட்டத்தினை 2021இல் வென்றவர் யார்?
Who won the Miss Universe 2021?
(a) ஹர்னாஸ் சந்து / Harnaaz Sandhu
(b) நாடியா ஃபெரேரியா / Nadia Ferreir
(c) லாரா தத்தா / Lara Dutta
(d) நந்திதா பன்னா / Nandita Banna
51. பொருத்துக:
அரசியல் கட்சி 16வது சட்டமன்றத்தில் அதன் பலம்
அ. பாட்டாளி மக்கள் கட்சி 1. 18
ஆ. விடுதலை சிறுத்தைகள் கட்சி 2. 2
இ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3. 4
ஈ. இந்திய தேசிய காங்கிரஸ் 4. 5
Match the following:
Name of the political party Strength in the 16th Assembly
(a) PMK 1. 18
(b) VCK 2. 2
(c) CPI (M) 3. 4
(d) INC 4. 5
a b c d
a. 3 2 4 1
b. 4 2 3 1
c. 4 3 2 1
d. 2 3 4 1
52. தூய்மை சக்தி ஆராய்ச்சி முயற்சி (CERI)யின் குறிக்கோள்
The objective of Clean Energy Research Initiative (CERI) is to
(a) புதுமைகளை வளர்ப்பது / Develop innovations
(b) மலிவாகவும் அணுகக்கூடியதாகவும் பெறப்படுவது / Make it affordable and accessible
(c) ஆராய்ச்சியின் மூலம் வளர்ப்பது / Develop research
(d) மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் / All of the above
53. நவம்பர் 28, 2021 அன்று, 7.5 ரிக்டர் அளவு கொண்ட ஒரு மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடம்
On November 28, 2021, a major earthquake with a magnitude of 7.5 struct at
(a) இந்தோனேஷியா / Indonesia
(b) பெரு / Peru
(c) பாகிஸ்தான் / Pakisthan
(d) நியூசிலாந்து / New Zealand
54. கீழ்க்கண்டவற்றில் எந்த தாவரம் வேர் ஒட்டுண்ணி தாவரமாகும்?
Which one of the following is root parasite plant?
(a) விஸ்கம் / Viscum
(b) கஸ்கூட்டா / Cuscuta
(c) லோரான்தஸ் / Loranthus
(d) ராப்ளசியா / Rafflesia
55. பின்வரும் வினாக்களை கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்கவும்:
கூற்று (A): அசிட்டிக் அமிலம் வலிமை குறைந்த அமிலம்.
காரணம்(R): அசிட்டிக் அமிலத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும், ஒரே ஒரு ஹைட்ரஜனை மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும்.
Answer the following questions using the data given below:
Assertion (A): Acetic acid is a weak acid.
Reason (R): Acetic acid has four hydrogen atoms but only one can be replaced
(a) கூற்று (A) சரி காரணம் (R) தவறு / (A) is correct (R) is wrong
(b) கூற்றும் (A) காரணமும் (R) சரி, ஆனால் காரணம் (R) கூற்று (A) விவரிக்கவில்லை / (A) and (R) are correct. (R) does not explain (A)
(c) கூற்று (A) தவறு காரணம் (R) சரி / (A) and (R) are correct. (R) does not explain (A)
(d) கூற்றும் (A) காரணமும் (R) சரி. காரணம் (R) கூற்றை (A) நன்கு விளக்குகிறது / (A) is wrong (R) is correct
56. F என்ற விசை t என்ற சால அளவில் ஒரு பொருளின் மீது செயல்பட்டால் ஏற்படும் மதிப்பு, விசை மற்றும் கால அளவின் பெருக்கற்பலனுக்கு சமமாக இருக்கும். இதனை —— என்பர்.
When a force F acts on a body for a period of time t, then the product of force and time is known as
(a) நிலைமம் / Inertia
(b) உந்து விசை / Moment of a force
(c) கணத்தாக்கு / Impulse
(d) நேரியல் உந்தம் / Linear momentum
57. இவற்றுள் எது பாகுமை விசையின் அலகு கிடையாது?
Which of this is not an unit for viscous force?
(a) நியூட்டன் / Newton
(b) பாய்ஸ் / Poise (c) Kgm-1s-1 (d) Nsm-2
58. கீழ்காண்பவற்றுள் எந்தப் பொருளின் அடர்த்தி மிகுதியானது?
Which one of the following has the highest density?
(a) காற்று / Air
(b) நீர் / Water
(c) மண்ணெண்ணெய் / Kerosene
(d) மரம் / Wood
59. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்கள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவை எந்த புரட்சியின் முழக்கங்கள்?
“Liberty, Equality and Fraternity” are the slogans given importance in the preamble of our constitution. These were slogans of which revolution?
(a) அமெரிக்கப் புரட்சி / American Revolution
(b) பிரெஞ்சுப் புரட்சி / French Revolution
(c) ரஷ்யப் புரட்சி / Russian Revolution
(d) சீனப் புரட்சி / Chinese Revolution
60. கூற்று (A): அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக மக்களவைக்கு பொறுப்புடையவர்கள்.
காரணம் (R): அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
Assertion (A): The council of Ministers is collectively responsible to the Lok Sabha.
Reason (R): Ministers are appointed by the president on the advice of the Prime Minister
(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
(b) (A) மற்றும் (R) சரி (A) க்கான சரியான விளக்கம் (R) ஆகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(c) (A) தவறு, (R) சரி / (A) is false, (R) is true
(d) (A) மற்றும் (R) சரி (A)க்கான சரியான விளக்கம் (R) ஆகாது / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
61. பின்வருவனவற்றுள் எது அரசியல் அமைப்பின் பாதுகாவலனாகக் கருதப்படுகின்றது?
Which of the following is considered as the Guardian of the constitution?
(a) சட்டமன்றம் / Legislature (b) ஆட்சித்துறை / Executive (c) அமைச்சரவை / Cabinet (d) உச்ச நீதிமன்றம் / Supreme Court
62. கீழ்காண்பவற்றை அதன் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் சரியாக கால வரிசைப்படுத்தவும்:
1. மத்திய கண்காணிப்பு ஆணையம்.
2. மத்திய புலனாய்வு குழு.
3. மத்திய தகவல் ஆணையம்.
4. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்
Arrange the following in chronological order with respect to their establishment:
1. Central Vigilance Commission
2. Central Bureau of Investigation
3. Central information commission
4. Lokpal and Lokayuktha Act
(a) 1, 3, 2, 4
(b) 2, 4, 3, 1
(c) 2, 1, 3, 4
(d) 3, 2, 1, 4
63. சிந்து சமவெளி நாகரீகத்தின் வடக்கோர குடியிருப்பு எது?
Which is the northern most settlement of Indus Valley civilization?
(a) சுட்காஜென்டோர் / Sutkagendor
(b) ஷோர்டுகை / Shortugai
(c) ஆலம்கிர்பூர் / Alamgirpur
(d) டைமாபாத் / Daimabad
64. சமுத்திரகுப்தர் காலத்தைச் சாராதவர்
Who was not the contemporary of samudragupta?
(a) புஷ்யவர்மன் / Pushyavarman
(b) பாஸ்கர்வர்மன் / Bhaskarvarman
(c) விஷ்ணுகோபா / Vishnugopa
(d) ஸ்ரீ மேகவர்மன் / Sri Meghavarman
65. சரியானக் கூற்றை தேர்வு செய்க:
1. இந்தியப் பாரம்பரியம் விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, ஒழுக்கம், உண்மை, ஆகியவற்றைக் கொண்டது.
2. அஜந்தா மற்றும் எல்லோரா ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
3. சமணர்கள் புத்த பூர்ணிமாவை கொண்டாடுகின்றனர்.
4. புரத நாட்டியம், குச்சுப்புடி, கதக்களி, மணிப்புரி மற்றும் ஒடிசி போன்றவை இந்தியாவின் புகழ் பெற்ற நடனக்கலைகளாகும்.
Choose the correct statement:
i. The Indian heritage advocates hospitality, charity, friendship, love, humility, truth
ii. The paintings at Ajanta and Ellora are world famous
iii. The jain’s celebrate Buddha Poornima
iv. Bharathanatiyam, Kuchipudi, Kathak, Manipuri and Oddissi are some of the famous dances in India.
(a) 1 மற்றும் 2 சரி / i and ii are correct
(b) 4 மட்டும் சரி / Only iv is correct
(c) 3 மட்டும் சரி / Only iii is correct
(d) 1, 2 மற்றும் 4 ஆகியவை சரி / i, ii and iv are correct
66. கூற்று (A): இமயமலை ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
காரணம்(R): இமயமலை சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக உருவாகியது.
Assertion (A): Himalayas are called young fold mountains.
Reason(R): It was formed only few million years ago by the folding of the earth crust due to tectonic activity
(a) (A)சரி (R) தவறு / (A) is true (R) is false
(b) (A) தவறு (R) சரி / (A) is false (R) is true
(c) (A), (R) ஆகிய இரண்டும் சரி / Both (A) and (R) are true
(d) (A), (R) ஆகிய இரண்டும் தவறு / Both (A) and (R) are false
67. கங்கை நதியின் வலது கரையின் துணை நதி
Ganga River’s right bank tributary is
(a) ராம் கங்கா / Ramganga
(b) மனாஸ் / Manas
(c) கோசி / Kosi
(d) யமுனா / Yamuna
68. கீழ்க்கண்ட ஆறுகளை அவற்றின் துணையாறுகளுடன் பொருத்தவும்:
a. சிந்து நதி 1. கோமதி.
b. கங்கை நதி 2. இந்திராவதி.
c. பிரம்மபுத்திரா நதி 3. சீனாப்.
d. கோதாவரி நதி 4. சுபன்ஸ்ரீ
Match the following rivers with their tributaries:
a. Indus river 1. Gomti
b. Ganga river 2. Indravati
c. Brahmaputra River 3. Chenab
d. Godavari River 4. Subansiri
a b c d
a 3 1 2 4
b. 2 4 3 1
c. 2 4 1 3
d. 4 2 3 1
69. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
அமைப்புகளின் பெயர்கள் அமைவிடம்
a. அரசு மருத்துவக் கல்லூரி 1. தென் சென்னை
b. புற்றுநோய்க்கான சிறப்பு மையம், அறிஞர்
அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 2. கே.கே.நகர், சென்னை.
c. மறுவாழ்வு சிறப்பு மருத்துவ நிறுவன மையம் 3. காஞ்சிபுரம்.
d. பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 4. திருவள்ளுர்
Match the following:
Name of the rganisation Place
a. Government Medical College 1. South Chennai
b. Centre of excellence for cancer. Arignar Anna Memorial Cancer Hospital 2. K.K.Nagar, Chennai
c. Centre of excellence at the Institute of Rehabilitataion Medicin 3. Kanchipuram
d. Multispeciality hospital 4.Thiruvallur
a b c d
a. 1 3 4 2
b. 3 4 2 1
c. 4 3 2 1
d. 3 4 1 2
70. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் (TNAU) கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) எங்கு உள்ளது?
The Tamil Nadu rice research institute (TRRI) working under Tamil Nadu Agricultural University is situated in ——— District.
(a) தஞ்சாவூர் / Thanjavur
(b) திண்டுக்கல் / Dindugal
(c) சேலம் / Salem
(d) திருநெல்வேலி / Thirunelveli
71. தாமிரபரணி என்பது ——– உச்சியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு வற்றாத நதியாகும்.
Tamraparni is a perennial river that originates from the ——– of the western Ghats.
(a) அகஸ்தியர் கூடத்தில் பொதிகை மலை / Agastyar Koodam peak of Pothigai hills
(b) சிவஞான தீர்த்தம் / Siva Gnaan Teertha
(c) வருசநாடு மலைகள் / Varusanadu Hills
(d) தென்பெண்ணை / Thenpennai
72. மனித வாழ்க்கைக்குரிய பழியென்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
Which is considered as the greatest blame on human living by Valluvar?
(a) நிலையற்ற வாழ்வு / Transient life (b) மக்கட்பேறு இல்லாத வாழ்வு / Life without progeny
(c) புகழற்ற வாழ்வு / Infamous life (d) அன்பற்ற வாழ்வு / Life without love
73. ஆள்வோரின் செல்வத்தைத் தேய்க்கும் படை எது?
What will wipe away the wealth of the ruler?
(a) கொடியோரை ஒறுத்தல் / Anger of the wicked
(b) ஒல்லாது வானம் பெயல் / Incessant Rain
(c) புகழ்ந்தாருக்குக் கொடுக்கப்படும் பரிசு / Gifts given to flatterers
(d) ஆற்றாது அழுத கண்ணீர் / Unbearable tears of the oppressed
74. திருநங்கை நலவாரியம் பின்வருவனவற்றுள் எந்தத் துறையின் கீழ் செயல்படுகிறது?
Tamil Nadu Transgender welfare board comes under which Department?
(a) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை / Health and Family Welfare Department
(b) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை / Adidravidar and Tribal Welfare Department
(c) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை / Welfare of Differently abled person Department
(d) சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை / Social Welfare and women Empowerment Department
75. “இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு”
இக்குறளில் குறிப்பிடும் “இறை” என்பதன் பொருள்
A niggard hand, O’erweening self-regard and mirth unseemly bring disgrace to men of Kingly birth. What is the meaning of the word “Kingly birth” mentioned in the above verse?
(a) இறைவன் / God
(b) அரசன் / King
(c) உயர்ந்தவன் / Superior
(d) மேன்மக்கள் / Nobles