Tnpsc Model Question Paper 14 – General Studies in Tamil & English
1. திராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்?
Who was the founder of “Dravida Mahajan Sabha”?
(a) சர்.P.Tதியாகராயர் / Sir.P.T.Thiygaraya
(b) அயோத்தியதாசர் பண்டிதர் / Iyotheedaasar Pandithar
(c) ஜோதிபா பூலே / Jyothiba Phule
(d) அய்யா வைகுந்தர் / Ayya Vaikundhar
2. “வள்ளலார்” எனப் பலராலும் அறியப்பட்டவர்?
Who is popularly known as “Vallalar”?
(a) இராம கிருஷ்ணர் / Rama Krishna
(b) அயோத்திதாசர் / Iyothee Thassar
(c) இராமலிங்க அடிகள் / Ramalinga Adigal
(d) அய்யன்காளி / Ayyan Kali
3. கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது?
1. பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங் கண்ணனார்
2. பதிற்றுப்பத்து – எட்டு சேர மன்னர்கள் குறித்து பேசுகிறது
3. மதுரைக்காஞ்சி – முதுகுடுமி பெருவழுதி பற்றி குறிப்பிடுகிறது.
4. திருவஞ்சைக்களம் – கரிகால சோழனை பற்றி கூறுகிறது
Which of the following pairs is not correct?
(i) Pattinappalai – Katiyalur Urithiran Kannannar
(ii) Patitruppattu – Speaks of Eight Chera Kings.
(iii). Madurai Kanchi – Refers to Mudukudumi Peruvazhuthi.
(iv) Thiruvanchikalam – Refer to Karikala Chola.
(a) 1 மற்றும் 2 / i and ii
(b) 2 மற்றும் 3 / ii and iii
(c) 3 மட்டும் / iii only
(d) 4 மட்டும் / iv only
4. கீழ்க்காண்பவற்றைச் சரியாகப் பொருத்துக:
a. உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 1. 1972
b. தேசிய பசுமை தீர்ப்பாயங்கள் 2. 2010
c. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 3. 2002
d. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 4. 1986
Match the following:
(a) Biological Diversity Act 1. 1972
(b) National Green Tribunals 2. 2010
(c) The Environment Protection Act 3. 2002
(d) Wildlife Protection Act 4. 1986
a b c d
(a) 3 2 4 1
(b) 2 3 1 4
(c) 3 4 1 2
(d) 4 3 1 2
5. ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறி
An important indicator of nutrition deficiency is
(a) இரத்தச் சோகை / Anaemia
(b) உடல் பருமன் / Obesity
(c) சிறுநீரக செயலிழப்பு / Kidney failure
(d) இரவு குருட்டுத்தன்மை / Night blindness
6. தமிழ்நாடு அரசால் சிறப்பாகச் செயல்படும் நூலகர்களை பெருமைப்படுத்துவதற்காக ——– விருது வழங்கப்படுகிறது.
“———” Award is conferred to honour librarians for the outstanding performance by Tamil Nadu Government
(a) டாக்டர்.எஸ்.ஆர்.ரெங்கநாதன் / Dr.S.R.Ranganathan
(b) திரு.கவிமணி / Thiru.Kavimani
(c) காமராஜர் / Kamaraj
(d) கலைஞர் / Kalaignar
7. பொருத்துக:
ஐந்தாண்டு திட்டங்கள் மந்திரிகள் அல்லது நோக்கங்கள்
a. இரண்டாம் திட்டம் 1. ஹாரேட் டாமர்
b. முதல் திட்டம் 2. மகலா நோபிசு
c. ஓன்பதாவது திட்டம் 3. சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி
d. மூன்றாவது திட்டம் 4. காட்கில் திட்டம்
Match the following:
Five year plans Name (or) Objectives
a. 2nd Plan 1. Harrod Domar
b. 1st Plant 2. Mahalanobis
c. 9th Plan 3. Growth with justice and equity
d. 3rd Plan 4. Gadil Yojana
a b c d
a. 2 1 3 4
b. 2 1 4 3
c. 2 4 3 1
d. 2 3 1 4
8. உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Who is known as the father of local self government in India?
(a) டல்ஹெளசி பிரபு / Lord Dalhousie
(b) ஜார்ஜ் ராபின்சன் பிரபு / Lord George Robinson
(c) ரிப்பன் பிரபு / Lord Rippon
(d) மவுண்ட் பேட்டன் பிரபு / Lord Mountbatten
9. இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
In which year, Inland water ways authority was setup in India?
(a) 1985
(b) 1986
(c) 1987
(d) 1988
10. இந்தியாவில் எந்தப் பகுதியில் அல்பைன் காடுகள் பெருமளவில் இருக்கின்றன?
In India, large extent of Alpine forests are found in
(a) தக்காண பீடபூமி / Deccan plateau
(b) கங்கை டெல்டா / Ganges delta
(c) கிழக்கு இமயமலை / Eastern Himalayas
(d) கிழக்குத் தொடர்ச்சி மலைகள் / Eastern Ghats
11. இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்தக் கூறுகள் தன் கல்லறையில் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியவர்
——— instructed for his mausoleum was that is should incorporate elements from different religions including Islam and HInsuism.
(a) அசோகர் / Ashok
(b) அக்பர் / Akbar
(c) ஷாஜஹான் / Shahjahan
(c) ஒளரசங்கசீப் / Aurangazeb
12. இந்தியாவில் அமைந்துள்ள, சீக்கியர்களின் புகழ்பெற்ற யாத்திரைத் தலம்
Where is the famous pilgrim spot of Sikhs located in India?
(a) மணாலி / Manali
(b) பாட்னா / Patna
(c) அமிர்தசரஸ் / Amritsar
(d) ஜலந்தர் / Jalandhor
13. சோழ அரசின் மூத்த மகன் ——– என அழைக்கப்பட்டார்
The eldest son of the Chola king was called to be
(a) யுவராஜன் / Yuvarajan
(b) இளவரசர் / Prince
(c) அரசர் / King
(d) ஆளுநர் / Governor
14. டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரச மரபு
The last dynasty of Delhi sultanate was
(a) கில்ஜி மரபு / Khaliji Dynasty
(b) லோடி மரபு / Lodi Dynasty
(c) சையது மரபு / Sayyid Dynasty
(d) துக்ளக் மரபு / Tughluq Dynasty
15. எந்த அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கின்றது?
Which article of Indian constitution promotes international peace and security?
(a) அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 48 / Article 48
(b) அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 49 / Article 49
(c) அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 50 / Article 50
(d) அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 51 / Article 51
16. ஒன்றிய அரசாங்கம் எந்த ஆண்டு நீதியரசர் ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஆணையம் அமைத்தது?
Which year the union Government constituted a commission under the chairmanship of Justice R.S.Sarkaria?
(a) 1990
(b) 1985
(c) 1983
(c) 1981
17. 2005 தகவல் அறியும் உரிமச் சட்டப்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு என்ன?
What is the time limit to get the information from RTI Act 2005?
(a) 15 நாட்கள் / 15 days
(b) 20 நாட்கள் / 20 days
(c) 25 நாட்கள் / 25 days
(c) 30 நாட்கள் / 30 days
18. மாநிலத்தின் முதுலமைச்சரை நியமனம் செய்பவர் யார்?
Who appoints the Chief Minister of a state?
(a) ஆளுநர் / The Governor
(b) பிரதமர் / The Prime Minister
(c) குடியரசு தலைவர் / The President
(d) தலைமை நீதிபதி / The Chief Justice
19. GST-யின் உள்ளடக்கங்கள் எத்தனை?
How many components of GST?
(a) 2 (b) 3 (c) 4 (d) 5
20. பின்வருவனவற்றுள் எது இந்தியாவில் அதிகமானோர் செய்யும் தொழில்?
Which among the following is the maximum pursued occupation in India?
(a) வாணிகம் / Trade
(b) கலைப்பொருட்கள் / Craft Occupation
(c) வேளாண்மை / Agriculture
(d) சுரங்கம் / Mining
21. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1954ஆம் ஆண்டு முதன்முதலில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) நடைமுறைப்படுத்திய நாடு
Choose the right answer ——— was the first country to implement GST in 1954
(a) இந்தியா / India
(b) பிரான்ஸ் / France
(c) ஜப்பான் / Japan
(d) அமெரிக்கா / America
22. 2015-16ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி (NER) துவக்கநிலை நிகர மாணவர் சேர்க்கை வீதத்தின் அடிப்படையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
According to NITI Aayio 2015-16 which state place first in (NER) Net Enrolment Ratio at primary level.
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) கேரளா / Kerala
(c) மேற்கு வங்களம் / West Bengal
(d) கர்நாடகம் / Karnataka
23. தமிழ் நாட்டில் உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ———- ஆவார்.
————- was the first woman to pay penalty for violation of salt laws in Tamil Nadu
(a) ருக்மணி லட்சுமிபதி / Rakmani Lakshmipathi
(b) அம்புஜம்மாள் / Ambujammal
(c) லட்சுமி செகல் / Lakshmi Sahgal
(d) மூவலூர் இராமாமிர்தம் / Muvalur Ramamirtham
24. வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கழகத்தை எப்போது தொடங்கினார்?
Swadesi Steam Navigation company of V.O Chidambaram Pillai started in the year
(a) 1905
(b) 1906
(c) 1907
(d) 1908
25. தீங்கு செய்பவரைத் தண்டிப்பதற்கு உரிய வழியாக வள்ளுவர் எதனைச் சுட்டுகிறார்?
How should we punish those who harm us according to Valluvar?
(a) அவருக்குத் தீமை செய்தல் / Do harm to them
(b) அவருக்கு அறிவுரை கூறல் / Give advice to them
(c) அவருக்கு நன்மை செய்தல் / Do good to them
(d) அவருக்கு பணிந்து போதல் / Go subservient to them
26. சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பை வள்ளுவர் எவ்வாறு சுட்டுகிறார்?
How does Valluvar interpret the friendship of a person whose words have no relation to his deeds?
(a) நனவிலும் துன்பம் தரும் / It will paining even in reality
(b) கனவிலும் துன்பம் தரும் / It will be painful even in dreams
(c) மறுமையிலும் துன்பம் தரும் / It will be painful in next birth
(d) இன்பத்திலும் துன்பம் தரும் / It will be painful in happiness
27. புண் என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
What is called as sore by Valluvar?
(a) ஊழ் / Fate
(b) புலால் / Meat
(c) கண் / Eye
(d) நோய் / Sickness
28. “அறம் பெருகும் வழி” எனத் திருவள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?
What does Valluvar suggest to increase virtue?
(a) கோபச் சொற்களைக் கூறுதல் / To speak angrily
(b) புகழ்ச் சொற்களைக் கூறுதல் / To speak proudly
(c) இனிய சொற்களைக் கூறுதல் / To speak gracious words
(d) பழியுடை சொற்களைக் கூறுதல் / To speak with ill will
29. உடலில் கலந்துள்ள பஞ்ச பூதங்களும் யாரைப் பார்த்துச் சிரிக்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
At whom will all the five elements of the body laugh at, according to Valluvar?
(a) வஞ்சமனத்தான் / Impostor/Cheat/Pretender
(b) ஒழுக்கமில்லாதான் / Indisciplined
(c) பொய்யுரைப்பவன் / Liar
(d) கல்லாதான் / Uneducated
30. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு யாது?
The primary organ infected during tuberculosis is
(a) எலும்பு மஜ்ஜை / Bone narrow
(b) குடல் / Intestine
(c) மண்ணீரல் / Spleen
(d) நுரையீரல் / Lungs
31. கீழ்க்கண்டவற்றுள் அமிலத்தைக் குறித்த சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
1. அமிலங்கள் H+அயனிகளை தருகிறது.
2. அமிலங்கள், நீர்க்கரைசலில், H+ அயனிகளை தருகிறது.
3. அனைத்து அமிலங்களும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிலீடு செய்யப்படக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களை கொண்டவை.
Which of the following statement/statements is/are true about acids?
i. Acid furnishes H+ Ions.
ii. Acid furnishes H+ Ions in aqueous solution.
iii. All acids contain one or more replaceable hydrogen atoms.
(a) 1 மட்டுமே / i only
(b) 2 மற்றும் 3 மட்டுமே / ii and iii only
(c) 1 மற்றும் 2 மட்டுமே / i and ii only
(d) 1 மற்றும் 3 மட்டுமே / i and iii only
32. ——- குறைக்கவும், சாலையுடனான தொடு பரப்பை அதிகரிக்கவும், கனரக சரக்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களைக் கொண்டுள்ளன.
More number of wheels are provided for a heavy goods carrier in order to decrease the ———-, thereby increasing the area of contact on the road.
(a) அழுத்தத்தை / Pressure
(b) திசைவேகத்தை / Velocity
(c) அடர்த்தியை / Density
(d) மேற்கண்ட அனைத்தும் / All the above
33. நீயூட்டன் மீட்டர் (Nm) என்ற S.I. அலகு கீழ்க்கண்டவற்றுள் எவற்றிற்குப் பொருந்தும்?
Newton metre (Nm) is the S.I. unit of
(a) இரட்டையின் திருப்புத்திறன் / Moment of couple
(b) முடுக்கம் / Acceleration
(c) திசைவேகம் / Velocity
(d) விசை / Force
34. “செல்லாத பணம்” என்ற நாவலுக்காக 2020ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
The Sahitya Akademi Award 2020 for the Novel “Sellatha Panam” was won by
(a) ராமு / Ramu
(b) இமையம் / Imayam
(c) செல்லப்பன் / Selapan
(d) குமார் / Kumar
35. 1985ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் உள்ளாட்ச்சி அரசாங்கம் தொடர்பாக நிறுவப்பட்ட குழு எது?
Which committee was appointed by the planning commission in 1985 with respect to local self governments?
(a) பல்வந்த்ராய் மேத்தா குழு / Balwantrai Mehta Committee
(b) G.V.K.ராவ் குழு / G.V.K.Rao Committee
(c) L.M.சிங்வி குழு / L.M.Singhvi Committee
(d) அசோக் மேத்தா குழு / Ashok Mehta Committee
36. இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக கொண்டு 2017-ல் வரப்பட்ட புதிய வரி எது?
Which tax has replaced multiple indirect taxes during 2017?
(a) விற்பனை வரி / Sales tax
(b) சுங்க வரி / Customs duty
(c) சரக்கு மற்றும் சேவை வரி / Goods and Service Tax
(d) வருமான வரி / Income tax
37. 2021இல் அதிக மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட நாடு
The country which has Highest Human Development Index in 2021
(a) நார்வே / Norway
(b) சுவிட்சர்லாந்து / Switzerland
(c) டென்மார்க் / Denmark
(d) சிங்கப்பூர் / Singapore
38. சங்க காலம் என்பது ———- உலோக காலத்தோடு தொடர்புடையது
The Sanga Age was associated with ——– Metal Age
(a) செம்பு / Copper
(b) இரும்பு / Iron
(c) தங்கம் / Gold
(d) வெள்ளி / Silver
39. வள்ளலாரின் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” எப்போது நிறவப்பட்டது?
When was the “Samarasa Suddha Sanmarga Satya Sanga” of Vallalar started?
(a) 1865
(b) 1867
(c) 1866
(d) 1868
40. 1891ல் சுதேசமித்ரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசிய பருவ இதழைத் தொடங்கியவர் ——–
———— started a Tamil nationalist periodical “Swadesamitran” in 1891
(a) கோகலே / Gokhale
(b) G.சுப்ரமணியம் / G.Subramaniam
(c) T.முத்துசாமி / T.Muthu Swamy
(d) P.ரங்கையா / P.Rangaiah
41. தமிழக மக்கள் 6ஆம் நூற்றாண்டியிலிருந்தே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை கூறும் தமிழ்-பிரமி எழுத்துப் பொறிப்புகள் ——– இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
High literacy level of Tamil people by 6th century BCE has been indicated in the Tamil-Brahmi script excavated at
(a) கீழடி / Keezhadi
(b) கொடுமணல் / Kodumanal
(c) ஆலங்குளம் / Alangulam
(d) உறையூர் / Uraiyur
42. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்
The father of Green revolution in India was
(a) மகாத்மா காந்தி / Mahatma Gandhi (b) எம்.எஸ்.சுவாமிநாதன் / M.S.Swaminathan
(c) என்.ஆர்.விஸ்வநாதன் / N.R.Viswanathan (d) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
43. முக்கிய நகர்ப்புற ஒருங்கிணைப்பு உள்ள மாவட்டங்கள்
Important urban agglomerations includes
(a) கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி / Coimbatore, Madurai and Tiruchirappalli
(b) சென்னை, திண்டுக்கல் மற்றும் பெரியகுளம் / Chennai, Dingigal and Periyakulam
(c) திருநெல்வேலி, சேலம் மற்றும் செங்கல்பட்டு / Tirunelveli, Salem and Chengalpattu
(d) காஞ்சிபுரம், காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை / Kanchipuram, Karaikkudi and Pattukottai
44. பின்வருவனவற்றில் லுகோடெர்மா அல்லது வெண்நோய் பற்றி உண்மை கருத்து எவை?
1. இது ஒரு தொற்றாத நோய்.
2. இது தோல் நிறமி இழப்பை ஏற்படுத்தும் ஒரு தோல் நோய்.
3. இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது.
Which of the following statements are true of Leucoderma.
1. It is a non-communicable disease.
2. It is a skin disease that causes loss of skin pigmentation.
3. There is no cure.
(a) 1 மற்றும் 2 / 1 and 2
(b) 2 மற்றும் 3 / 2 and 3
(c) 1 மற்றும் 3 / 1 and 3
(d) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
45. பின்வருவனவற்றுள் எது நீர் வள பாதுகாப்பு முறை அல்ல?
Which of the following is not a water conservation method?
(a) சிக்கனமாக நிலத்தடி நீர் பயன்பாடு / Rational use of groundwater
(b) நவீன நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்துதல் / Use of modern irrigation methods
(c) காடுகளின் பரப்பளவைக் குறைத்தல் / Decreasing forest cover
(d) மரபு வழி நீர்வளங்களைப் புதுப்பித்தல் / Renovation of traditional water sources
46. தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம் எது?
Which district of Tamil Nadu has reported highest literacy rate
(a) திருநெல்வேலி / Tirunelveli
(b) சென்னை / Chennai
(c) கன்னியாகுமரி / Kanyakumari
(d) வேலூர் / Vellore
47. இந்தியாவில் தாமிரப்படிவு அதிகமுள்ள மாநிலம் எது?
Which state has the largest reserves of copper ore in India?
(a) இராஜஸ்தான் / Rajasthan
(b) அருணாசல பிரதேசம் / Arunachal Pradesh
(c) உத்திரப்பிரதேசம் / Uttra Pradesh
(d) சட்டீஸ்கர் / Chhattisgarh
48. “மான்சூன்” என்ற சொல் ———— மொழிச் சொல்லிலிருந்துப் பெறப்பட்டது.
The word “Monsoon” has been derived from —— word.
(a) உருது / Urdu
(b) இந்தி / Hindi
(c) அரபிக் / Arabic
(d) கிரேக்க / Greek
49. பாண்டிய அரசு “செல்வ செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என புகழ்ந்து கூறிய அறிஞர் ———- ஆவார்.
——- hailed the Pandyan Kingdom as “The richest and the most splendid province in the world”
(a) பாஹியான் / Fahien
(b) மார்க்கோ போலோ / Marco Polo
(c) மெஸ்தனிஸ் / Megasthanese
(d) ஹீவான் சாங் / Hieun Tsang
50. பழமையான திராவிட மொழி ———- ஆகும்.
The oldest Dravidan language is
(a) மலையாளம் / Malayala
(b) தெலுங்கு / Telugu
(c) தமிழ் / Tamil
(d) இந்தி / Hindi
51. சிந்து சமவெளி நாகரிக மக்களின் முதன்மையான தொழில் எது?
The main occupation of the people of the Indus valley civilization was
(a) விவசாயம் / Agriculture
(b) போர்த்தொழில் / Warfare
(c) வேட்டையாடுதல் / Hunting
(d) மீன்பிடி தொழில் / Fishing
52. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய குடியுரிமையைப் பெறும் வழி அல்ல?
Which of the following is not a condition for becoming the citizen of India?
(a) சொத்துரிமை பெறுவதன் மூலம் / By Acquiring Property
(b) வம்சாவழியின் மூலம் / By Descent
(c) பிறப்பின் மூலம் / By Birth
(d) இயல்பு குடியுரிமை மூலம் / By Naturalization
53. எந்த சட்டத்திருத்தச் சட்டம் இந்திய குறு அரசியலமைப்பு என அழைக்கப்படுகிறது?
Which Amendment Act is known as mini constitution of India?
(a) 41வது சட்டத்திருத்தச் சட்டம் / 41st Amendment Act
(b) 42வது சட்டத்திருத்தச் சட்டம் / 42nd Amendment Act
(c) 43வது சட்டத்திருத்தச் சட்டம் / 43rd Amendment Act
(d) 44வது சட்டத்திருத்தச் சட்டம் / 44th Amendment Act
54. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்?
Lokayuktas members are appointed by
(a) மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி / The Chief Justice of State High Court
(b) மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் / The State Public Service Comission
(c) மாநில ஆளுநர் / The Governor of State
(d) மாநில முதலமைச்சர் / The Chief Minister of State
55. மின் ஆளுகை நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Which year the e-courts project was established?
(a) 2009
(b) 2010
(c) 2007
(d) 2005
56. 1960-61இல் ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட “முன்னோடிதிட்டம்” என்ற புதிய தொழிலநுட்பம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A new technology was tried in 1960-61 as a pilot project in even districts was called.
(a) அதிக விளைச்சல் தரும் பழங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம் / High yielding fruits programme
(b) வெண்மைப்புரட்சி / White Revolution
(c) அதிக விளைச்சல் தரும் ரகங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம் / High yielding varities programme
(d) நிலப்புரட்சி / Blue Revolution
57. இந்திய அரசியலமைப்பில் அதிகாரங்களில் பிரிவில் ஏழாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட மத்தியப் பட்டியலில் எத்தனை இனங்கள் உள்ளன?
No of subjects consists in the Union list enumerated in the 7th schedule of Indian constitution for division of powers
(a) 61
(b) 52
(c) 96
(d) 100
58. கீழ்க்கண்டவற்றில் மாறுபட்ட வரி எது?
Which tax is the different one?
(a) செல்வ வரி / Wealth Tax
(b) வருமான வரி / Income Tax
(c) நிறுவன வரி / Corporate Tax
(d) முத்திரைத் தாள் வரி / Stamp duty
59. 1940ஆம் ஆண்டு காமராசர் “வார்தா” சென்று சந்தித்தது
In 1940, Kamaraj went to Wardha to meet
(a) நேரு / Nehru
(b) காந்திஜி / Gandhiji
(c) திலகர் / Tilak
(d) ஜின்னா / Jinnah
60. சரியான விடையைத் தேர்வு செய்க:
சென்னை மாகாணத்தின் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ———- ஆவார்.
Choose the right answer:
The first congress Minister of Madras was formed by
(a) T.பிரகாசம் / T.Prakasma
(b) ராஜாஜி / Rajaji
(c) காமராசர் / Kamarajar
(d) சுப்பிரமணிய சிவா / Subramania Siva
61. Dr.B.R.அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
Dr.B.R.Ambedkar was awarded with the Bharat Ratna in the year
(a) 1987
(b) 1989
(c) 1990
(d) 1991
62. எந்த காங்கிரஸ் அமர்வில் முழு சுதந்திரத்தை (பூர்ண ஸ்வராஜ்) தனது குறிக்கோளாக அறிவித்தது?
In what session did congress declare complete independence (Purna Swaraj) as their goal
(a) 1929 லாகூர் அமர்வு / Lahore session 1929
(b) 1929 கல்கத்தா அமர்வு / Calcutta Session 1929
(c) 1932 லக்னோ அமர்வு / Lucknow Session 1932
(d) 1932 டெல்லி அமர்வு / Delhi session 1932
63. நீதிநெறியுடன் மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?
How does Valluvar call the king who administers justice and protection?
(a) மக்கட்கு உயிர் / Life to people
(b) மக்கட்கு அமிழ்து / Heaven’s Nectar to people
(c) மக்கட்கு இறை / King as God
(d) மக்கட்கு உடல் / The Body mass of the people
64. ஒருவரின் நகைக்கும் உவகைக்கும் பகையாக இருப்பது எது என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
What according to Valluvar is the enemy that destroys laughter and happiness of mankind?
(a) அச்சம் / Fear
(b) அழுக்காறு / Envy
(c) அழுகை / Sorrow
(d) சினம் / Wrath
65. பிறனில் விழைவானிடத்து எவை நான்கு நீங்காது இருக்கும்?
What four blames will stay with an adulterer?
(a) இன்பம், துன்பம், மகிழ்ச்சி, பொருள் / Delight, Distress, Happiness and Material Wealth
(b) பகை, பாவம், அச்சம், பழி / Enmity, Pretence, Fear and Guilt
(c) பொருள், பெருமை, சிறப்பு, மேன்மை / Wealth, Pride, Spelendour and Greatness
(d) வறுமை, துன்பம், பாவம், நோய் / Poverty, Distress, Blame and Disease
66. பிறரால் விரும்பப்படாதவன் செல்வத்தைத் திருவள்ளுவர் எதற்கு ஒப்பாகக் கூறுகின்றார்?
How does Valluvar compare the wealth of a stingy person?
(a) ஊர் நடுவில் இனிய மரம் பழுத்தது போன்றது / Similar to a fruit tree at the center of home town
(b) யாருக்கும் பயன்படாது புதைத்து வைக்கும் செல்வத்துக்கு ஒப்பாகும் / Similar to the hidden wealth that goes in vain
(c) களைகளைப் போன்று பயனற்றதாம் / Similar to weeds not having values
(d) ஊர் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது / Like a poisonous tree bearing fruit in the middle of town
67. கிளைக்காலிஸில் நடைபெறும் இடம் ———- ஆகும்.
Glycolysis takes place in
(a) சைட்டோபிளாசம் / Cytoplasm
(b) மைட்டோகாண்டரியம் / Mitochondria
(c) பசுங்கணிகம் / Chloroplast
(d) நியூக்ளியஸ் / Nucleus
68. பாலூட்டிகளின் தனித்தன்மை ———– ஆகும்.
——— is the unique characteristic feature of mammals.
(a) குளிர் இரத்த விலங்குகள் / Cold-blooded animals
(b) காற்றறைகள் கொண்ட எலும்புகள் / Pneumatic bones
(c) செவுள்கள் இருப்பது / Presence of gills
(d) தாய்-சேய் இணைப்புத்திசு / Placenta
69. 3 : 1 என்ற விகிதாச்சாரத்தில் உள்ள அடர் அமிலங்கள் ———– தங்கத்தை சுத்தம் செய்யவும், சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
3 : 1 ratio of concentrated acids of ——— is used for cleaning and refining gold.
(a) HCl and HNO3
(b) HCl and H2SO4
(c) HNO3 and H2SO4
(d) HNO3 and HCl
70. கரித்தாரிலிருந்து கிடைக்கும் எந்தப் பொருள் அந்துப்பூச்சி மற்றும் பிற பூச்சிகளை ஒழிப்பதற்குப் பயன்படுகிறது?
The product obtained from coal tar which is used to repel moth and other insects?
(a) பென்சீன் / Benzene
(b) அனிலீன் / Aniline
(c) நாப்தலீன் / Naphthalene
(d) டொலுயீன் / Toluene
71. கீழ்க்காணும் அலகுகளில் வெப்பநிலையின் S.I.அலகு எது?
Which one of the following is the S.I unit of temperature?
(a) செல்சியஸ் / Celsius
(b) கெல்வின் / Kelvin
(c) ஃபாரன்ஹீட் / Fahrenheit
(d) மேற்கூறிய அனைத்தும் / All the above
72. பின்வரும் நதிகளில் எது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று?
Which one of the following river is not found in Tamil Nadu?
(a) வைகை / Vaigai
(b) தாமிரபரணி / Tamiraparani
(c) கோதாவரி / Godavari
(d) பாலாறு / Palar
73. கீழ்க்கண்டவற்றுள் இஸ்ரோவின் எந்தத் திட்டம் மனிதர்களை விண்வெளிக்குக் குறைந்த சுற்றுப்பாதையில் அழைத்துச் செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது?
——– is the Human space flight mission by ISRO which will demonstrate taking humans to space in low orbit.
(a) நாஸா / NASA
(b) ஸ்பேஸ்-எக்ஸ் / Space-X
(c) ககன்யான் / Gangayaan
(d) அப்போலோ II / Apollo-II
74. பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?
In which year did the Disaster Management Act came into force?
(a) 2004
(b) 2005
(c) 2006
(d) 2007
75. தமிழ்நாடு அரசின் சமுதாய நலனுக்காக ஆற்றிய சேவைக்கு சிறந்த மூன்றாம் பாலினத்தவர் விருது பெற்றவர்
———- received the first ever “Best third gender award” by the Tamil Nadu Government for her services rendered towards the welfare of the society.
(a) பானி / Bani
(b) கிரேஷ் பானு / Grace Banu
(c) தஷா / Daksh
(d) ஃபஹிமா / Fahima