Tnpsc Model Question Paper 13 – General Studies in Tamil & English
1. ஆம்பிஆக்சஸின் கழிவு நீக்க மண்டலத்திலுள்ள நெப்ரிடியாக்களின் எண்ணிக்கை ———– ஆகும்.
The number of Nephridia present in the excretory system of amphioxus is
(a) 70 ஜோடிகள் / 70 pairs
(b) 85 ஜோடிகள் / 85 pairs
(c) 90 ஜோடிகள் / 90 pairs
(d) 75 ஜோடிகள் / 75 pairs
2. எந்த உயிரினத்தில் முதன் முதலில் பாலிடீன் குரோமோசோம்கள் கண்டறியப்பட்டது?
In which animal the polytene chromosomes were discovered for the first time?
(a) பழபூச்சி / Fruit fly
(b) டிரோசோபைல / Drosophila
(c) கைரோனாமஸ் / Chironomous
(d) வீட்டு ஈ / Housefly
3. ஒரு பாக்ட்டீரியம் அதன் உணவு திரவத்தை நோக்கி ஈர்க்கப்படும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? When a bacterium is placed in nutrient solution if it moves positively towards the nutrient solution and the phenomenon in said to be what?
(a) உறக்கநிலை / Hibernation
(b) செல்இறப்பு / Cytolysis
(c) வேதித் தூண்டல் / Chemotaxis
(d) கலங்கல் தன்மை / Turbidity
4. சூரிய ஒளிச் சக்தியை ஏன் விரும்பப்படும் பசுமை சக்தியாக தேர்வு செய்கிறோம்?
Why does solar energy considered as a preferred option of green energy?
(a) புதுப்பிக்க இயலாதது / Non renewable
(b) எளிதில் கிடைக்காதது / Non Availability
(c) புதுப்பிக்ககூடியது / Renewable
(d) மாசு உண்டாக்குவது / Causes pollution
5. ஆந்த்ரசைட் என்பது ஒரு ——— நிலக்கரியாகும்.
Anthracite is a ———- coal
(a) உயர் தர / High quality
(b) நடுத்தர / Medium quality
(c) குறைந்த தர / Low quality
(d) மிகக் குறைந்த தர / Poor quality
6. கீழ்க்கண்டவற்றுள் எது வீரியம் குறைந்த அமிலம் மற்றும் வீரியம் குறைந்த கார உப்பு?
Which one of the following is a salt of weak acid and weak base?
(a) சோடியம் குளோரைடு / Sodium chloride
(b) அம்மோனியம் குளோரைடு / Ammonium chloride
(c) சோடியம் அசிட்டேட் / Sodium acetate
(d) அம்மோனியம் அசிட்டேட் / Ammonium acetate
7. SI அலகு முறைமையின் படி ஆற்றலின் அலகு என்ன?
The SI unit for energy is
(a) Nm-1
(b) Nsm-1
(c) Nm
(d) Ns-1m-1
8. இயந்திர அலைகள் கேட்கக்கூடிய வரம்பிற்குக் கீழே அதிர்வெண் கொண்டிருக்கும் போது இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
When mechanical waves have a frequency below the audible range, these are called?
(a) ஒலியியல் (சோனிக்) / Sonics
(b) தாழொலியல் (இன்பரா சோனிக்) / Infrasonics
(c) மீயொலி (அல்ட்ரா சோனிக்) / Ultrasonics
(d) சூப்பர்சோனிக் (மீவேக ஒலி) / Supersonics
9. ஜனவரி 2022-ல் அறுவை சிகிச்சையாளர்களால் வெற்றிகரமாக, மரபு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்திய நாடு
During January 2002 – In which country the surgeons successfully implanted a heart from genetically modified pig. to man.
(a) ஜெர்மனி / Germany
(b) இத்தாலி / Italy
(c) ஐக்கிய அரபு நாடு / UAE
(d) அமெரிக்க ஐக்கிய நாடு / USA
10. தமிழக முதலமைச்சர் ——– நாளை “புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக”க் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
The Chief Minister of Tamil nadu has announced the “Non-Resident World Tamils Day” would be celebrated on
(a) ஜனவரி 12 / January 12
(b) ஜனவரி 7 / January 7
(c) மார்ச் 7 / March 7
(d) மார்ச் 12 / March 12
11. தேசியத் தண்ணீர் ஆணையத்தின் “கேட்ச் தி ரெயின்” (மழையை பிடி) தொடங்கப்பட்ட நாள்
National water mission campaign “Catch the Rain” launched in
(a) 22 பிப்ரவரி, 2021 / 22nd February, 2021
(b) 22 மார்ச், 2021 / 22nd March, 2021
(c) 22 ஏப்ரல், 2021 / 22nd April, 2021
(d) 22 மே, 2021 / 22nd May, 2021
12. UPSC நடத்தும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுபான்மை மாணவர்களை முதன்மைத் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கு பின்வருவனற்றுள் எது உள்ளன?
Which of the following scheme to support minority students for preparation of main examination who clear prelims conducted by UPSC?
(a) நய் உதான் / Nai udaan
(b) நய சவேரா / Naya Savera
(c) நய் ரோசினி / Nai Roshini
(d) உஸ்தாத் / USTTAD
13. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம்
The Indian Institute of space sicence and technology located at
(a) அகமதாபாத் / Ahmedabad
(b) புனே / Pune
(c) பெங்களுரு / Bangalore (Bengaluru)
(d) திருவனந்தபுரம் / Thiruvananthapuram
14. தேசியக் கொடியின் வடிவமைப்பை இந்திய அரசியல் நிர்ணயச் சபையால் ——— அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
The design of the National flag was adopted by the constituent Assembly of India on
(a) 20 ஜீன் 1947 / 20 June 1947
(b) 22 ஜீலை 1947 / 22 July 1947
(c) 21 ஆகஸ்டு 1947 / 20 June 1947
(d) 23 நவம்பர் 1947 / 22 July 1947
15. 2021ம் ஆண்டின் 12வது தேதிய வாக்காளர் தினத்தையொட்டி ———- மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குச் சிறந்த மாநில விருதினைத் தேர்தல் கமிஷன் வழங்கியது.
On the occasion of 12th National voters Day 2021 the Election Commission gave the best state Award to —— State chief electoral officer.
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) அசாம் / Assam
(c) வங்காளம் / Bengal
(d) புது தில்லி / New Delhi
16. கீழ்கண்ட முக்கிய இந்திய பழங்குடியினரை அவர்களின் அமைவிடத்துடன் பொருத்துக
a. பில்கள் 1. ஓடிஷா
b. போடோ 2. குஜராத்
c. கோண்டா 3. ஜார்கண்ட்
d. முண்டா 4. அஸ்ஸாம்
Match the following major tribes in India with their locations.
(a) Bhils 1.Odisha
(b) Bodos 2. Gujarat
(c) Gonds 3. Jharkand
(d) Mundas 4. Assam
a b c d
a. 3 2 4 1
b. 3 1 4 2
c. 2 4 1 3
d. 2 3 4 1
17. பின்வருவனவற்றில் உலகினிலே மிக அதிக பயணிகள் அடர்த்தி சேவை வழங்கிடும் இந்திய இரயில் பாதை எது?
Highest passenger density service in the world is provided by which of the following Indian Railway
(a) மும்பாய் புறநகர் இரயில்வே / Mumbai Suburban Railway
(b) கொல்கத்தா புறநகர் இரயில்வே / Kolkata Suburban Railway
(c) தில்லி புறநகர் இரயில்வே / Delhi Suburban Railway
(d) சென்னை புறநகர் இரயில்வே / Chennai Suburban Railway
18. மனிதனால் தூண்டப்படாத ஆபத்துக்கள் எது?
Which one is not a man-induced hazards?
(a) பௌதீக ஆபத்துக்கள் / Physical Hazards
(b) இரசாயண ஆபத்துக்கள் / Chemical Hazards
(c) உயிரியல் ஆபத்துக்கள் / Biological Hazards
(d) கிரக ஆபத்துக்கள் / Planetary Hazards
19. மொத்த காவிரி ஆற்றின் நீளத்தில், எவ்வளவு சதவிகித நீளம் தமிழ்நாட்டில் உள்ளது?
In the total length of the Cauvery, how much percentage of length flow into Tamil Nadu?
(a) 41.0%
(b) 46.0%
(c) 56.0%
(d) 51.0%
20. இந்தியாவில் எந்த ஆண்டில் இமாலய சுனாமி ஏற்பட்டது?
In which year Himalayan Tsunami occurred in India?
(a) 16 ஜீன் 2013 / 16th June 2013
(b) 6 ஆகஸ்டு 2013 / 6th August 2013
(c) 26 ஜீலை 2010 / 26 July 2010
(d) 16 ஜீலை 2013 / 16th July 2013
21. நமது இந்திய அரசியலமைப்பின்படி மொழிகள் ———- கீழ் வருகின்றது.
As per our Indian Constitution language comes under
(a) எட்டாவது அட்டவணை / Eighth schedule
(b) ஏழாவது அட்டவணை / Seventh schedule
(c) ஆறாவது அட்டவணை / Sixth schedule
(d) ஐந்தாவது அட்டவணை / Fifth schedule
22. சாம்பாவதி கல்யாணம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?
Sambavati Kalyanam has written in the language of
(a) தெலுங்கு / Telugu
(b) தமிழ் / Tamil
(c) மராத்தி / Marathi
(d) சமஸ்கிருதம் / Sanskrit
23. இந்தியத் துணைக்கண்டம் தவிர எந்த நாட்டில் சமஸ்கிருத கல்வெட்டுகள் உள்ளன?
Which country other than Indian Sub-continent has numerous Sanskrit inscriptions?
(a) ஆப்கானிஸ்தான் / Afghanistan
(b) பங்களாதேஷ் / Bangladesh
(c) பாகிஸ்தான் / Pakistan
(d) தென்கிழக்காசிய நாடுகள் / South-East Asian countries
24. பாமினி அரசில் குல்பார்க்காவில் இருந்து பீடாரருக்கு தலைநகரை மாற்றியவர் யார்?
Who shifted his capital from Gulbarga to Bidar in the Bahmini Kingdom?
(a) முதலம் அகமது ஷா / Ahamad Shah I
(b) பாமன் ஷா / Bahman Shah
(c) முதலாம் முகமது ஷா / Muhammad Shah I
(d) அலாவுதீன் மஜீகித் ஷா / Alauddin Mujahid Shah
25. தவறான இணை எது?
Which pair is not correct?
(a) ஷாஜகான் நாமா-ஷாஜகான் / Shahjahan Nama-Shahjahan
(b) துசுக்-ஐ-ஜஹாங்கிரி / Tuzuk-i-Jahangiri-Jahangir
(c) துசுக்-ஐ-பபூரி-பாபர் / Tuzuki-i-Baburi-Babur
(d) ஹீமாயூன் நாமா-குல்பதன் பேகம் / Humayun nama-Gulbadan Begum
26. 1664ஆம் ஆண்டு, சிவாஜியால் தாக்கப்பட்டதும் மற்றும் குறையாடப்பட்டதுமான மேற்கு கடற்கரை கோட்டை எது?
Which port on the Western coast was attacked and plundered by Shivaji in 1664?
(a) கோவா / Goa
(b) பேஸின் / Bassein
(c) சௌல் / Chaul
(d) சூரத் / Surat
27. கலிஃபாக்களிடமிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட டெல்லி அரசர் யார்?
Which Delhi Ruler got himself free from “Khalifas?”
(a) குத்புதின்-ஐபக் / Qutb-ud-Din-Aibak
(b) இல்டுட்மிஷ் / Iltutmish
(c) பால்பன் / Balban
(d) இரஷ்யா பேகம் / Razia Begum
28. சிந்துவெளி நாகரிகத்தின் முடிவிற்கு எது காரணமாக அமைந்தது?
Which factor caused the end of Indus Valley Civilization?
(a) வானியல் மாற்றம் / Climatic change
(b) நில நடுக்கம் / Earthquake
(c) வெள்ளம் / Flood
(d) படையெடுப்பு / Invasion
29. பாராளுமன்றம் மற்றும் சட்ட சபையில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டிற்கான மசோதா முதல் முதலில் எந்த பிரதம மந்திரியின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
33% reservation for women in Parliament and State Legislature Bill was first introduced during the tenure of which of the following Prime Ministers?
(a) தேவ கௌடா / Deve Gowda
(b) ராஜீவ் காந்தி / Rajiv Gandhi
(c) மன்மோகன் சிங் / ManMohan Singh
(d) பி.வி.நரசிம்ம ராவ் / P.V.Narasimma Rao
30. இந்தியாவில் முதல் முதலில் லோக் அயுக்தா அமைப்பினை உருவாக்கிய மாநிலம்
Name the state which has established Lokayukta for the first time in India
(a) தமிழ்நாடு / Tamil Nadu
(b) பீகார் / Bihar
(c) ஒரிஸா / Orissa
(d) ராஜஸ்தான் / Rajasthan
31. உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வுபெறும் வயது
The retirement age of High Court Judge is
(a) 65
(b) 67
(c) 62
(d) 61
32. புன்சி கமிஷன் அமைக்கப்பட்டது?
Punchhi Commission was appointed on
(a) ஏப்ரல் 28, 2007 / April 28, 2007
(b) ஏப்ரல் 29, 2007 / April 29, 2007
(c) ஏப்ரல் 30, 2007 / April 30, 2007
(d) ஏப்ரல் 29, 2008 / April 29, 2008
33. மாவட்ட கிராம மேம்பாட்டு முகமையின் தலைவர் யார்?
Who is the Chairman of the District Rural Development agency?
(a) கடன் திட்ட அலுவலர் / Credit planning officer
(b) ஊரக தொழில் சாலைகள் அலுவலர் / Rural Industries officer
(c) மாவட்ட ஆட்சியர் / District collector
(d) கூடுதல் ஆட்சியர் / Additional collector
34. குடியரசு தலைவர், ராஜ்ய சபாவில் ———- உறுப்பினர்களை நியமிக்கிறார்.
The president nominates ————- members to the Rajya Sabha
(a) 10 உறுப்பினர்கள் / 10 members
(b) 12 உறுப்பினர்கள் / 12 members
(c) 11 உறுப்பினர்கள் / 11 members
(d) 9 உறுப்பினர்கள் / 9 members
35. அடிப்படை கடமைகள் பற்றி பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவினை குறிப்பிடுக:
Name the committee that was appointed to make recommendations about fundamental duties
(a) ஷர்மா குழு / V.K.Sharma Committee
(b) சந்தானம் குழு / Santhanam committee
(c) சுவரன் சிங் குழு / Swaran Singh committee
(d) பல்வந்த்ராய் மேத்தா குழு / Balwantrai Mehta committe
36. 1976ல. இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்க்கப்பட்ட கூற்று யாது?
Which term was included in the Preamble of Indian Constitution in 1976?
(a) மதச்சார்பின்மை / Secularism
(b) சமதர்மம் / Socialism
(c) கம்யூனிஸம் / Communism
(d) மேற்கூறிய அனைத்தும் / All of the above
37. தேசிய கிராமப்புற சுகாதார பணி தொடங்கப்பட்ட ஆண்டு
Identify the year in which National Rural Health Mission was launched
(a) 2000
(b) 2005
(c) 2010
(d) 2015
38. பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அரசு மார்ச் 31, 2019-ல் 1 கோடி பேருக்கு வீட்டு வசதி கொடுக்க திட்டமிட்டிருந்தது ஆனால் அதே காலத்திற்குள் ———– வீடுகள் வழங்கப்பட்டடிருந்தது.
Under Pradhan Mantri Awas Yojana, Government has targeted 1 crore Pucca houses with basic amenities by 31st March, 2019 but ——— houses completed within the same period.
(a) 1.05 கோடி வீடுகள் / 1.05 crore houses
(b) 1.54 கோடி வீடுகள் / 1.54 crore houses
(c) 0.95 கோடி வீடுகள் / 0.95 crore houses
(d) மேற்கூறிய எதுவுமில்லை / None of the above
39. குத்தகைச் சட்டத்தின் முக்கிய அம்சம்/அம்சங்கள்:
1. ஓப்பந்த காலத்தை நிர்ணயித்தல்.
2. நியாயமான வாடகை.
3. நிலத்தை வாங்கும் உரிமை.
Major features of Tenancy Act is/are:
1. Fixity of tenure.
2. Fair rent.
3. Right to purchase land.
(a) 1 மட்டும் / 1 only
(b) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only
(c) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only
(d) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
40. பட்டியல் I மற்றும் I ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:
பட்டியல் I பட்டியல் I
a. நான்காவது நிதிக்குழு 1. ஏ.எம்.குஸ்ரூ
b. எட்டாவது நிதிக்குழு 2. பி.வி.ராஜமன்னார்
c. பதினோராவது நிதிக்குழு 3. ஓய்.பி.சவான்
Match the List I with List II and select the correct answer using the codes given below:
List I List II
a. Fourth Finance Commission 1. A.M.Khusro
b. Eighth Finance Commission 2. P.V.Rajmannar
c. Eleventh Finance Comission 3. Y.B.Chavan
a b c
a. 2 3 1
b. 3 2 1
c. 1 3 2
d. 2 1 3
41. இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட 200 ரூபாய் காகிதப் பணத்தை ஆர்பிஐ கவர்னர் டாக்டர்.உர்ஜித் படேலின் கையொப்பத்துடன் ———— அன்று வெளியிட்டது.
The Reserve Bank of India on ———– issued new Rs.200 denomination banknotes with the Mahatma Gandhi series, bearing signature of RBI governor Dr.Urijit Patel
(a) 25.08.2016
(b) 25.08.2017
(c) 25.08.2018
(d) 25.08.2019
42. பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க:
பட்டியல் I பட்டியல் II
a. முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தொழில்மயமாதல்
b. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2. தன்னிறைவு
c. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை
d. ஆறாவது ஐந்தாண்டு திட்டம் 4. வறுமை ஒழிப்பு
Match List I with List II and select the answer using the codes given below:
List I List II
a. First five year plan 1. Industrialization
b. Second five year plan 2. Self-sufficiency
c. Fifth five year plan 3. Agriculture
d. Sixth five year plan 4. Removal of poverty
a b c d
a. 1 3 2 4
b. 4 3 2 1
c. 3 1 4 2
d. 4 2 1 3
43. 2016-17ல் உலக பொருளாதாரத்தில் (GDP) இந்தியா பெற்றுள்ள இடம் ———— ஆகும்.
India ranks ———– in terms of nominal GDP among the world economy (2016-17)
(a) நான்கு / Fourth
(b) ஏழாவது / Seventh
(c) ஐந்தாவது / Fifth
(d) பத்தாவது / Tenth
44. இந்திய மக்களுக்கு அதிகாரத்தை ஒப்படைக்க போகிறோம் என்ற தகவலை பொதுமக்கள் சபையில் அறிவித்தவர் யார்?
Who announced in the House of commons to hand over power to the people of India?
(a) விக்டோரியா மகாராணி / Queen Victoria
(b) இரண்டாம் எலிஸபெத் மகாராணி / Queen Elizabet-II
(c) வைசிராய் லூயிஸ் மௌண்ட்பேட்டன் பிரபு / Viceroy Lord Louis Mountbatten
(d) பிரதமர் அட்லி / Prime Minister Attlee
45. சட்ட மறுப்பு இயக்கம் காந்தியினால் ஒத்திவைப்பதற்கு காரணமாயிருந்தது ———- ஆகும்.
The civil disobedience movement was suspended by Gandhi due to
(a) காந்தி-அம்பேத்கர் ஒப்பந்தம் / Gandhi-Ambedkar pact
(b) காந்தி-இர்வின் ஒப்பந்தம் / Gandhi-Irwin pact
(c) காந்தி-வேவல் ஒப்பந்தம் / Gandhi-Wavell pact
(d) காந்தி-மௌண்ட்பேட்டன் ஒப்பந்தம் / Gandhi-Mountbatten pact
46. டிரியோ என சிறப்பாக அழைக்கப்பட்டவர்கள் யாவர்?
Who were popularly called as Trio?
(a) காந்தி, நேரு மற்றும் படேல் / Gandhi, Nehru and Patel
(b) லால், பால் மற்றும் ப்பால் / Lal, Bal and Pal
(c) காந்தி, நேரு மற்றும் தாகூர் / Gandhi, Nehru and Tagore
(d) நேரு, தாகூர் மற்றும் நேதாஜி / Nehru, Tagore and Nethaji
47. மாநில தன்னாட்சி என்பது ———-வின் பிரதான பரிந்துரையாக இருந்தது.
The provincial autonomy was the main recommendation of
(a) காந்திஜி / Gandhiji
(b) இராஜாஜி / Rajaji
(c) கோகலே / Gokhale
(d) பி.ஜி.திலக் / B.G.Tilak
48. ஒடுக்கப்பட்ட மக்கள் தெளிவான பிரதிநிதித்துவத்தை உள்ளாட்சி தேர்தலில் பெற்றிடவும் மற்றும் பொது பணியில் தேர்வாகிட உதவிடுவதும் ———- ஒப்பந்தமாகும்.
The depressed classes were to be given fair representation in the local bodies election and services only by ———— pact.
(a) பூனா / Poona
(b) பம்பாய் / Bombay
(c) கல்கத்தா / Calcutta
(d) அலகாபாத் / Allahabad
49. 1893ஆம் ஆண்டு சிகாகோ உலக சமய பாராளுமன்றத்தில் தியாசபியின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார்?
Who represented theosophy at the parliament of religion in 1893 in Chicago?
(a) அன்னிபெசண்ட் / Annie Besant
(b) விவேகானந்தர் / Vivekananda
(c) போதகர் பிராங் பெசன்ட் / Rev.Frank Besant
(d) பால்வாட்ஸ்கி / Blavatsky
50. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பொருத்தி, கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு:
a. பிரிஜிஸ் காதர் 1. பைசாபாத்
b. நானா சாகிப் 2. பீகார்
c. குன்வார் சிங் 3. அவுத் நவாப்
d. மேளலவி அகமத்துல்லா 4. கான்பூர்
Match the following and choose the correct answer from the codes given below:
(a) Brijis Kadr 1. Faizabad
(b) Nana Sahib 2. Bihar
(c) Kunwar Singh 3. Nawab of Avadh
(d) Maulavi Ahamadullah 4. Kanpur
a b c d
a. 1 2 3 4
b. 3 4 2 1
c. 4 3 2 1
d. 3 2 1 4
ஈ. 3 2 1 4
51. அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல்
The lives of the Sixty Three saiva Nayanmars were narrated in
(a) நாலாயிர பிரபந்தம் / Nalayira Prabhandham
(b) தேவாரம் / Devaram
(c) பெரிய புராணம் / Periyapuranam
(d) திருவிளையாடல் புராணம் / Thiruvilaiyadal puranam
52. கரிகாலனுக்கு திருப்பு முனையாக இருந்த போர்
———- war marks a turning point in the career of Karikala
(a) வென்னி / Venni
(b) மகதம் / Magadha
(c) அவந்தி / Avanti
(d) வஜ்ரா / Vajra
53. இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது பெண் தலைவர்
The second women president of the Indian National Cngress was
(a) சரோஜினி நாயுடு / Sarojini Naidu
(b) அன்னிபெசன்ட் / Annie Besant
(c) பார்வதி தேவி / Parvathi Devi
(d) பத்மாசினி அம்மாள் / Padmasini Ammal
54. பல்லவர்களின் ஆந்திரர் தோற்றம் பற்றி ———-ஆல் கூறப்பட்டது.
The Andhra Origin of the Pallavas was mentioned by
(a) கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி / K.A.Nilakanta Sastri
(b) கே.பி.ஜெயஸ்வால் / K.P.Jayaswal
(c) கிருஷ்ணசாமி ஜயங்கார் / S.Krishnaswamy Iyengar
(d) சத்தியாநதய்யர் / R.Sathianathier
55. ஈ.வே.ராமசாமி சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம்
E.V.Ramaswamy passed resolutions for the welfare of the women in the self-Respect conference at
(a) மெட்ராஸ் / Madras
(b) கோயமுத்தூர் / Coimbatore
(c) சேலம் / Salem
(d) செங்கல்பட்டு / Chengalpet
56. “பட்டியரிசித்திட்டம்” யார் காலத்தில் கொண்டு வரப்பட்டது?
The scheme of “Padiyarisi” was in introduced
(a) இராஜாஜி / Rajaji
(b) பகத்வத்சலம் / Bakthavatsalam
(c) காமராஜ் / Kamaraj
(d) சி.என்.அண்ணாதுரை / C.N.Annadurai
57. நீதிக்கட்சியை உருவாக்கியர்
Justice party was formed by
(a) டி.எம்.நாயர் / T.M.Nair
(b) பி.சுப்பராயன் / P.Subbarayan
(c) பி.எஸ்.குமாரசாமி ராஜா / P.S.Kumaraswami Raja
(d) சி.சத்தியமூர்த்தி / C.Satyamoorthy
58. மருது சகோதரர்களின் பிரகடனம் ———- சுவரில் ஒட்டப்பட்டது?
The proclamation of Marudu Brothers pasted on the ———- wall
(a) திருச்சிக் கோட்டை / Fort of Tiruchi
(b) சிவகங்கை கோட்டை / Fort of Sivagangai
(c) காளையார் கோவில் கோட்டை / Fort of Kaliyar Koil
(d) நெற்கட்டும் செவல் கோட்டை/ Fort of Nerkkattum Seval
59. காங்கிரஸின் மூன்றாவது மாநாடு நடைபெற்ற இடம் ————- ஆகும்.
The third congress session held at
(a) பாம்பே / Bombay
(b) மெட்ராஸ் / Madras
(c) கல்கத்தா / Calcutta
(d) டெல்லி / Delhi
60. திருப்புறம்பியம் போரில் நேரடியாக பங்கு கொண்ட சோழ மன்னர்
The Chola ruler directly participated in the battle of Thirupurambiam was
(a) விஜயாலய சோழன் / Vijayalaya Chola
(b) ஆதித்ய சோழன் / Aditya Chola
(c) பறாந்தக சோழன் / Parantaga Chola
(d) ராஜேந்திர சோழன் / Rajendra Chola
61. சீன பயணி யுவான் சுவாங் யாருடைய காலத்தில் காஞ்சிக்கு வருகை புரிந்தார்?
The Chinese Pilgrim Hiuen T.Sang who visited Kanchi during the reign of
(a) மகேந்திரவர்மன் / Mahendra Varman
(b) நரசிம்மவர்மன் / Narasimha varman
(c) ராஜசிம்மன் / Raja simha
(d) அப்பராஜித்தன் / Apparajithan
62. தனி ஆந்திர மாநிலம் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் ——— ஆவார்.
The leader undertook a fast unto death for demanding separate Andhara State was
(a) பொட்டி ஸ்ரீராமுலு / Potti Sriramulu
(b) பொட்டி சுபராயலு / Potti Subharayalu
(c) டி-பிரகாசம் / T-Prakasm
(d) ஸ்ரீநிவாசலு / Srinivasalu
63. சங்க காலத்தில் ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் இறந்த உடன் அவனுடைய மனைவி கோப்பெருந்தேவி உடனடியாக இறந்த சம்பவத்தை ——— என அழைத்தனர்.
During the Sangam period Kopperundevi, wife of Ariyappadai Kadandha Nedunjelian, died the moment of her husband died it was called as
(a) மற கற்பு / The marakkarpu
(b) கற்பு / Karpu
(c) சதி / Sati
(d) அறகற்பு / The Arakarpu
64. இந்தியர்களுக்கும் ரோமானியர்களுக்கும் வியாபார தொடர்பு இருந்தது என்று உறுதி கூறிய அரிக்கமேட்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட நாணயங்கள் ———– காலத்தில் வெளியிடப்பட்டன.
The discovery of Roman coins at Arikkamedu help to confirm Indias trade contacts with Rome issued during ———- period.
(a) கோபர்நிகஸ் / Copernicus
(b) ஜீலியஸ் / Julius
(c) அகஸ்டஸ் / Augustus
(d) ஜஸ்டினியன் / Justinian
65. மாநில சமூக நல ஆலோசனை குழுவின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டவர்
———- was appointed as the First Woman Chair person of the state Social Welfare Advisory Board.
(a) அன்னி பெசன்ட் / Annei Besant
(b) முத்துலெட்சுமி / Muthulakshmi
(c) கோவிந்தம்மாள் / Govindammal
(d) சுந்தராம்பாள் / Sundarambal
66. “நடந்தாய் வாழி காவிரி” என்ற புதிய திட்டத்தின் நோக்கமானது
The main aims of “Nadanthai Vaazhi Cauvery” scheme is
(a) காவிரி ஆற்றின் வடிகாலில் தடுப்பணைகள் கட்டுதல் / Construct check Dams on Cauvery basins
(b) காவிரி ஆற்றை தூய்மைபடுத்தல் / Clean the River Cauvery
(c) காவிரி ஆற்றை மாசுபடுத்துதல் / Pollute the river Cauvery
(d) காவிரி ஆற்றை மற்ற நதிகளுடன் இணைத்தல் / Link the river Cauvery with other rivers
67. (2009-10) தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 66-வது சுழற்ச்சியின்படி இந்தியாவில் மொத்த தொழிலாளர் சக்தியில் தமிழ்நாட்டின் பங்கு
According to the 66th round of NSS (2009-10), India among the total labour force Tamil Nadu contributes
(a) 6.74 சதவீதம் / 6.74 percent
(b) 7.74 சதவீதம் / 7.74 percent
(c) 9.74 சதவீதம் / 9.74 percent
(d) 8.74 சதவீதம் / 8.74 percent
68. தமிழ்நாடு மனித மேம்பாட்டு அட்டவணை 2013-14ம் ஆண்டின்படி, முதல் வரிசை-ல் மனித மேம்பாட்டில் உள்ள மாவட்டம்
2013-14, the first rank in HDI attained by ——– district, according to Tamil Nadu human development Report
(a) கன்னியாகுமரி / Kanyakumari
(b) தர்மபுரி / Dharmapuri
(c) சென்னை / Chennai
(d) ராமநாதபுரம் / Ramanathapuram
69. தமிழ்நாடு மனித மேம்பாட்டு அட்டவணை அறிக்கை 2014-15ஆம் ஆண்டின்படி, தமிழக மாநிலத்தில் பாலின சமத்துவமின்மை குறியீட்டில் முதன்மையாக விளங்கும் மாவட்டம்
In 2014-15, the Gender Inequality Index of the Tamil Nadu state, is the best in ———– District, according to Tamil Nadu Human Development report.
(a) ஈரோடு / Erode
(b) கரூர் / Karur
(c) நீலகிரி / Nilgiris
(d) வேலூர் / Vellore
70. 2018ம் ஆண்டில், தமிழ்நாட்டில் “ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம்” நடைபெற்ற இடம்
In 2018, in Tamil Nadu, “Anti-Sterlite Struggle” of TN took place in
(a) தஞ்சாவூர் / Thanjavore
(b) தூத்துக்குடி / Thoothukudi
(c) கன்னியாகுமாரி / Kanya Kumari
(d) சேலம் / Salem
71. தமிழ்நாட்டில் மனிதனுக்கும், மிருகங்களுக்குமிடையே சச்சரவு இருக்க காரணமாவது
In Tamil Nadu, the man-Animal conflict are mainly due to
(a) மிருகங்களை வேட்டையாடுதல் / Hunting the Animals
(b) பயிர் விளைச்சலை மிருகங்கள் சேதபடுத்தல் / Crop damages by Wild Animals
(c) மிருகங்கள் சப்தம் எழுப்புதல் / Sound made by Animals
(d) மிருகங்களிடையே சண்டை இருப்பதால் / Conflict between the Animals
72. “Kaavalan SOS” என்ற செயலியின் நோக்கம் ———— ஆகும்.
The purpose of App-Kaavalan SOS is
(a) ஆபத்து காலங்களில் மக்களின் இருப்பிடத்தை கண்டறிதல் / To find information of people location in Emergency
(b) வனத்தில் புலிகளின் நடமாடும் எண்ணிக்கையை அறிதல் / To count the mobility of Tigers in Forest
(c) விபத்துகளை மதிப்பிடுதல் / To Assess the Accidents
(d) சாலை விபத்துகளை மேலாண்மை செய்தல் / To manage the Road Accident
73. 2019-ல் தமிழ்நாட்டின் நல்ல ஆளுமை திறன் குறியீட்டின் அளவு என்ன?
In 2019, the index of Good Governance of Tamil Nadu is
(a) 4.31
(b) 5.62
(c) 7.50
(d) 6.72
74. தமிழ்நாட்டில் அதிகமான மழை பொழிவு பெரும் காலம்
Tamil Nadu receives Maximum rain fall from ——– period
(a) அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை / From October to December
(b) ஜனவரியிலிருந்து மே வரை / From January to May
(c) ஜீன்-ல் இருந்து செப்டம்பர் வரை / From June to September
(d) ஆகஸ்டு மாதம் மட்டும் / August only
75. தமிழக அரசு வழங்கும் விலையில்லா கறவை மாடு பெற தகுதியானவர்கள் யார்?
The eligible person for Tamil Nadu state Government distributed cow at free of cost is
(a) வறுமையிலும் வறுமையான குடும்பத் தலைவியாக உள்ள பெண்கள் / The poorest of the poor women headed households
(b) நிலமற்ற விவசாயிகள் / The landless Agricultural farmers
(c) நிலமற்ற விவசாய கூலிகள் / The landless Agricutural wage workers
(d) வறுமையிலும் வறுமையான குடும்பத்தலைவராக உள்ள ஆண்கள் / The poorest of the poor men headed ouseholds