Answer Key

Tnpsc Hindu Religious Executive Officer Exam Previous Questions and Answer key – General Tamil and General Studies

Tnpsc Hindu Religious Executive Officer Exam Previous Questions and Answer key – General Tamil and General Studies

1. தவறான நிறுத்தற்குறி பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தினைச் சுட்டுக:

(அ) தமிழின் இனிமைதான் என்னே! (ஆ) அந்தோ! இயற்கை அழிகிறதே!

(இ) புலி! புலி! (ஈ) நேற்று மழை பெய்ததா!

2. சரியான நிறுதத்தற்குறி அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) பிரபஞ்சனின் படைப்புகளும் “வானம் வசப்படும்” என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.

(ஆ) “கண்வனப்பு கண்னோட்டம்” என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது

(இ) காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை

(ஈ) மா பலா வாழை ஆகியவற்றை “முக்கனி” என்பர்

3. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு: “சாப்டு” எனும் பேச்சு வழக்கின் எழுத்து வழக்கைக் கண்டறிக

(அ) சாப்பிட்டு (ஆ) சாப்பிடு (இ) சாப்பாடு (ஈ) சாதம்

4. பேச்சு வழக்கு,எழுத்து வழக்கு:

பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கில் அமைந்த தொடரைக் கண்டறிக.

(அ) அம்மா பசிக்கிறது (ஆ) அம்மா பசிக்கின்றது

(இ) அம்மா பசிக்கிது (ஈ) அம்மா பசிப்பது

5. பொருத்தமான காலம் அமைத்தல்:

தவறான தொடரைத் தேர்ந்தெடு

(அ) கண்மணி நாளை பாடம் படிப்பாள்

(ஆ) நாங்கள் நேற்றுக் கடற்கரைச் சென்றோம்

(இ) ஆசிரியர் நாளை சிறு தேர்வு நடத்துவார்

(ஈ) அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்

6. பொருத்தமான காலம் அமைத்தல்

நட – என்ற சொல்லின் இறந்த காலத்தைக் குறிப்பிடு

(அ) நடக்கிறாள் (ஆ) நடந்தாள் (இ) நடப்பாள் (ஈ) நடக்கவில்லை

7. ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரிடம் வினவுதல் – இது எவ்வகை வினா?

(அ) கொடைவினா (ஆ) கொளல் வினா (இ) ஏவல் வினா (ஈ) அறிவினா

8. இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல் என்ன வகை வினா?

(அ) அறிவினா (ஆ) ஏவல் வினா (இ) கொடைவினா (ஈ) ஐயவினா

9. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (தமது)

(அ) மாடுகள்-தலையை ஆட்டின (ஆ) மாடு-தலையை ஆட்டியது

(இ) பசு-தலையை ஆட்டியது (ஈ) கன்று-தலையை ஆட்டியது

10. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (விடை)

(அ) மனிதனுக்கு-கொடு (ஆ) கவிதைக்கு-கொடு

(இ) கவலைக்கு-கொடு (ஈ) மானத்துக்கு-கொடு

11.மா ஓடியது – இத்தொடரில் “மா” என்ற சொல் உணர்த்தும் பொருளைத் தருக:

(அ) மரம் (ஆ) நிலம் (இ) குதிரை (ஈ) வண்டு

12. இரு பொருள் தருக:

திங்கள்

(அ) நிலவு,துன்பம் (ஆ) நிலவு,மாதம்

(இ) கிழமை,ஆகாயம் (ஈ) மாதம்,வாரம்

13.கலைச் சொற்களை அறிதல்

சரியான இணையைத் தேர்ந்தெடு.

(அ) Creator-கையெழுத்துப்படி (ஆ) Inscriptions- கல்வெட்டு

(இ) Sculpture-படைப்பாளர் (ஈ) Manuscripts – சிற்பம்

14. சரியான பொருளறிந்து பொருத்துக:

(அ) நீயே செய் 1. உறுவது கூறல் விடை

(ஆ) வராமல் இருப்பேனா? 2. சுட்டு விடை

(இ) கால் வலிக்கும் 3. வினா எதிர் வினாதல் விடை

(ஈ) வலப்பக்கத்தில் உள்ளது 4. ஏவல் விடை

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ 3 4 2 1

இ. 4 3 1 2

ஈ. 2 4 3 1

15. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

(அ) சூரன் 1. பெரும்பரப்பு

(ஆ) பொக்கிஷம் 2. மிகுதி

(இ) சாஸ்தி 3. செல்வம்

(ஈ) விஸ்தாரம் 4. வீரன்

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 1 2 3 4

இ. 4 2 3 1

ஈ. 4 3 2 1

16. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:

அ. களித்திட 1. காடு

ஆ. நச்சரவம் 2. தங்கும் இடம்

இ. விடுதி 3. விடமுள்ள பாம்பு

ஈ. கானகம் 4. மகிழ்ந்திட

ஆ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 3 4 1 2

இ. 2 3 4 1

ஈ. 1 4 3 2

17. பிழையை திருத்தி சரியாக எழுதுக:

குழலி நடனம் ஆடியது

(அ) ஆடினாள் (ஆ) ஆடுவாள் (இ) ஆடுகின்றாள் (ஈ) ஆடிக்கொண்டு இருக்கிறாள்

18. பிழையை நீக்கி எழுது.

(அ) ஒரு அறிவு (ஆ) ஒரு அறிவின் (இ) ஒரு அறிவுக்கு (ஈ) ஓரறிவு

19. சொல் பொருள் பொருத்துக:

அ. முத்துச்சுடர் போல 1. மாடங்கள்

ஆ. தூய நிறத்தில் 2. தென்றல்

இ. சித்தம் மகிழ்ந்திட 3. நிலா ஒளி

ஈ. கத்தும் குயிலோசை 4. காதில் கேட்டல்

அ ஆ இ ஈ

(அ) 3 1 2 4

(ஆ) 4 3 1 2

(இ) 1 2 3 4

(ஈ) 1 4 3 2

20. ஒருமை பன்மை பிழையை நீக்குக.

(அ) பறவைகள் வந்து தங்கின (ஆ) பறவை வந்து தங்கின

(இ) பறவைகள் வந்து தங்கியது (ஈ) பறவைகள் வந்து தங்கினார்கள்

21. ஒருமை பன்மை பிழையை நீக்குக.

(அ) யானைக் கூட்டம் வந்தது (ஆ) யானைக் கூட்டம் வந்தன

(இ) யானைக் கூட்டம் வந்தார்கள் (ஈ) யானைக் கூட்டம் வந்ததுகள்

22. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக

(அ) மணிமேகலை மணிப்பல்லவத் தீவிற்கு சென்றது

(ஆ) மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்

(இ) மணிமேகலை மணிப்பல்லவத் தீவிற்கு சென்றார்கள்

(ஈ) மணிமேகலை மணிப்பல்லவத் தீவிற்கு சென்றார்

23. பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

(அ) பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க

(ஆ) பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க

(இ) பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்

(ஈ) பெற்றோரிடம் பர்மிசன் கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்

24. “கண்ணுறங்கு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(அ) கண் + உறங்கு (ஆ) கண்ணு + உறங்கு

(இ) கண் + றங்கு (ஈ) கண்ண் + உறங்கு

25.பிரித்து எழுதுக:

“கண்டறி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(அ) கண் + அறி (ஆ) கண்டு + அறி (இ) கண்ட + அறி (ஈ) கண் + டறி

26. பிரித்து எழுதுக.

“அவ்வுருவம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(அ) அவ்வு + ருவம் (ஆ) அ + உருவம்

(இ) அவ் + வுருவம் (ஈ) அ + வுருவம்

27. தவறான இணையைக் கண்டறிக.

(அ) சிலை-சீலை (ஆ) மலை-மாலை (இ) விடு-வீடு (ஈ) கெடு-கோடு

28. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:

1. நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்

2. நேரத்தை சரியாகக் கடைபிடிப்பேன்

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது

4. வாழ்க்கைப் பயணமே வேறுப்பட்ட பாடங்களை கற்றுத் தருகிறது

(அ) 1 மற்றும் 3 (ஆ) 2 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 1 மற்றும் 4

29. வழுவற்ற தொடர் எது?

(அ) கொடியிலுள்ள மலரைக் கொண்டு வா (ஆ) கொடியிலுள்ள மலரைக் கொய்து வா

(இ) கொடியிலுள்ள மலரை எடுத்து வா (ஈ) கொடியிலுள்ள மலரைக் கிள்ளி வா

30. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

(அ) ஆதி, அகில், விசும்பு, கனல் (ஆ) அங்கத்தினர், கனல், சாவி, ஆதி

(இ) சபதம், சாவி, அந்தம், அகில் (ஈ) அலங்காரம், ஆரம்பம், அங்கத்தினர், தீபம்

31. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்.

நடக்கிறான்

(அ) நடப்பான் (ஆ) நட (இ) நடக்கிறது (ஈ) நடந்து கொண்டு இருப்பான்

32. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்:

பின்வருவனவற்றுள் தவறான இணையைக் கண்டறிக:

(அ) அழை-கூப்பிடு (ஆ) களை-எடு (இ) அளை-துழாவு (ஈ) கலை-கல்வி

33. அகர வரிசைபடுத்துக.

(அ) உழை, யாழி,இளி,கைக்கிளை,விளரி (ஆ) யாழி,கைக்கிளை,விளரி,உழை,இளி

(இ) இளி,உழை,யாழி,விளரி,கைக்கிளை (ஈ) இளி,உழை,கைக்கிளை,யாழி,விளரி

34. சொல்லுதல்.

தவறான கூற்றினை கண்டறிக.

(அ) பேசுதல்,விளம்புதல் (ஆ) செப்புதல்,உரைத்தல்

(இ) எழுதுதல்,கேட்டல் (ஈ) கூறல்,இயம்பல்

35. வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க.

– “படி”

(அ) படித்தல் (ஆ) படித்த (இ) படித்து (ஈ) படித்தான்

36. அகர வரிசையில் எழுதுக:

(அ) ஆற்றல்,அன்பு,எறும்பு,ஏணி (ஆ) எறும்பு,ஏணி,அன்பு,ஆற்றல்

(இ) அன்பு,ஆற்றல்,எறும்பு,ஏணி (ஈ) ஏணி,அன்பு,எறும்பு,ஆற்றல்

37. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) தெலுங்கு,திராவிடம்,தையல்,தூறு (ஆ) தையல், தூறு,திராவிடம்,தெலுங்கு

(இ) தூறு,தெலுங்கு,தையல்,திராவிடம் (ஈ) திராவிடம்,தூறு,தெலுங்கு,தையல்

38. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்

(அ) ரீங்காரம், ரொட்டி, ரௌத்திரம், ரூபாய் (ஆ) ரொட்டி, ரௌத்திரம், ரூபாய், ரீங்காரம்

(இ) ரீங்காரம், ரூபாய், ரொட்டி, ரௌத்திரம் (ஈ) ரௌத்திரம், ரொட்டி, ரீங்காரம், ரூபாய்

39. சொற்களை ஒழுங்குபடுத்துக:

பழந்தமிழர் வள்ளல் எழுவர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது கொடையின் சிறப்பால் போற்றப்படுவது

(அ) கொடையிள் வள்ளல் எழுவர் சிறப்பால் போற்றப்படுவது பழந்தமிழர் மாட்சியைக் கொடை புலப்படுத்துகிறது

(ஆ) பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது

(இ) கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது

(ஈ) கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது பழந்தமிழர்

40. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது என்ன விடை கண்டறிக.

(அ) ஏவல் விடை (ஆ) மறை விடை

(இ) வினா எதிர் வினாதல் விடை (ஈ) உறுவது கூறல் விடை

41. விடைக்கேற்ற வினாத் தேர்ந்தெடுத்தல்.

அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார்.

(அ) எவ்வாறு அகத்தியர் வாழ்ந்தார்? (ஆ) எத்தனை மலையில் வாழ்ந்தார்?

(இ) எந்த மலையில் அகத்தியர் வாழ்ந்தார்? (ஈ) எப்படி அகத்தியர் வாழ்ந்தார்?

42. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

நெல்லைப்பர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.

(அ) நெல்லையப்பர் கோவில் எத்தனை உள்ளது?

(ஆ) நெல்லையப்பர் கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது?

(இ) நெல்லையப்பர் கோவில் எதனால் உள்ளது?

(ஈ) நெல்லையப்பர் கோவில் எதில் உள்ளது?

43. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

நல்ல சொற்களைப் பேச வேண்டும்.

(அ) யார் சொற்களைப் பேச வேண்டும்? (ஆ) என்ன சொற்களைப் பேச வேண்டும்?

(இ) எவர் சொற்களைப் பேச வேண்டும்? (ஈ) எப்பொழுது சொற்களைப் பேச வேண்டும்?

44. சரியான கலைச்சொல்லை கண்டறிக:

(அ) Conversation–உயர் தொழில் நுட்பம் (ஆ) Bio-Technology–கலந்துரையாடல்

(இ) Discussion– உரையாடல் (ஈ) Consonant–மெய்யெழுத்து

45. சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய்:

Rational

(அ) சீர்திருத்தம் (ஆ) ரேசன் அட்டை (இ) பகுத்தறிவு (ஈ) தொண்டு

46. விடை வகைகள்:

“எனக்குக் கற்றுத் தருகிறாயா” என்ற வினாவுக்கு எனக்கு யார் கற்றுத் தருவார்கள் என உரைப்பது

(அ) வெளிப்படை விடை (ஆ) ஏவல் விடை

(இ) வினா எதிர் வினாதல் விடை (ஈ) குறிப்பு விடை

47. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுது.

Uniform

(அ) யூனிபார்ம் (ஆ) சீருடை (இ) ஆயத்த ஆடை (ஈ) வண்ண ஆடை

48. இதில் தவறான இணை எது?

(அ) ஹோட்டல்-உணவகம் (ஆ) நாஷ்டா-பலகாரம்

(இ) மார்னிங்-காலை (ஈ) டின்னர்-இரவு உணவு

49. புதுகை எனும் மரூஉச் சொல் குறிப்பிடும் ஊர்

(அ) புதுச்சேரி (ஆ) புதுக்கோட்டை (இ) புத்தூர் (ஈ) புதுப்பாளையம்

50. மரூஉப் பெயர் அல்லாத ஊர்ப்பெயரைக் கண்டறிக

(அ) கோவை (ஆ) நாகை (இ) வேலூர் (ஈ) உதகை

51. தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.

(அ) நாகப்பட்டினம்-நாகை (ஆ) கும்பகோணம்-கும்பை

(இ) மயிலாப்பூர்-மயிலை (ஈ) சைதாப்பேட்டை-சைதை

52. கீழ்கண்ட வாக்கியங்களில் சரியான நிறுத்தற்குறியுடைய வாக்கியத்தை கண்டறிக.

(அ) முக்கனி : மா,பலா,வாழை (ஆ) முத்தமிழ் – இயல்,இசை,நாடகம்

(இ) “முச்சங்கம்” : – முதல், இடை, கடை (ஈ) மூவேந்தர் : சேர! சோழ! பாண்டியர்

53. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு:

பின்வருவனவற்றுள் பேச்சுவழக்கில் அமைந்த சொல்லைக் கண்டறிக:

(அ) படித்தான் (ஆ) செஞ்சான் (இ) உண்டான் (ஈ) வந்தான்

54. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு.

யானை – சரியான சொல்

(அ) குட்டி (ஆ) குஞ்சு (இ) குழவி (ஈ) கன்று

55. “அத்தி பூத்தாற்போல”

– உவமை கூறும் பொருள் தெளிக:

(அ) வேகமாக (ஆ) அரிதாக (இ) மெதுவாக (ஈ) நிதானமாக

56. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக:

சோறு – சரியான சொல்.

(அ) சாப்பிட்டான் (ஆ) விழுங்கினான் (இ) தின்றான் (ஈ) உண்டான்

57. பொருத்தமான காலம் அமைத்தல்.

“நாங்கள் நேற்று கடற்கரைக்குச் சென்றோம்” என்ற தொடர் குறிக்கும் காலம்

(அ) எதிர்காலம் (ஆ) குளிர்காலம் (இ) நிகழ்காலம் (ஈ) இறந்த காலம்

58. வினாவின் வகையைக் கண்டறிக:

“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.

(அ) அறியா வினா (ஆ) கொளல் வினா (இ) ஏவல் வினா (ஈ) ஐய வினா

59. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:

அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ———- மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.

(அ) எனவே (ஆ) ஆகையால் (இ) மேலும் (ஈ) ஏனெனில்

60. சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

நல்ல நூல்கள் படிக்க படிக்க இன்பம் தருகிறது. நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

(அ) எனவே (ஆ) ஆகையால் (இ) அதுபோல (ஈ) ஏனெனில்

61. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக.

(அ) E.Mail–மின்இதழ்கள் (ஆ) E.Book–மின்நூல்

(இ) E.Magazine–மின்நூலகம் (ஈ) E.Library–மின்அஞ்சல்

62. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்கவும்

———— எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

(அ) (செறிவு) (ஆ) (நிறை) (இ) (முறை) (ஈ) (அறிவு)

63. இருபொருள் தருக:

ஆறு

(அ) எண்,நதி (ஆ) வரிசை,எண்ணிக்கை (இ) ஆறுதல்,எண் (ஈ) நீர்,நதி

64. குறில் நெடில் மாற்றம் பொருள் வேறுபாடறிந்து சரியானதைத் தெரிக.

மடு – மாடு.

(அ) செல்வம்-பக்கம் (ஆ) நீர்நிலை-எருது

(இ) கிராமம்-செல்வம் (ஈ) மடித்துவை-பசு

65. கீழ்க்கண்ட தொடர்களைக் கவனி:

கூற்று (A) : இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்ததில்லான் “இந்திய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்” என்றார்.

காரணம் (R) : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

(அ) (A) கூற்று சரி (R) காரணம் சரி (ஆ) (A) கூற்று சரி (R) காரணம் தவறு

(இ) (A) கூற்று தவறு (R) காரணம் சரி (ஈ) (A) கூற்று தவறு (R) காரணம் தவறு

66. கலைச்சொல் அறிக.

Biotechnology

(அ) உயிரித் தொழில் நுட்பம் (ஆ) மீநுண்தொழில் நுட்பம்

(இ) உயிரியல் ஆய்வு (ஈ) தாவர உயிரியல்

67. கலைச்சொல் அறிக.

Courtesy

(அ) வறுமை (ஆ) நற்பண்பு (இ) உடற்பயிற்சி (ஈ) தாழ்மை

68. தகுந்த சொல்லைத் தேர்ந்து எழுதுக.

பிறரிடம் நான் ———- பேசுவேன்

(அ) கடுஞ்சொல் (ஆ) இன்சொல் (இ) வன்சொல் (ஈ) கொடுஞ்சொல்

69. பொருத்தமான சொற்களைக் கொண்டு பின்வரும் தொடர்களை நிரப்புக:

(1.தோப்பு, 2.தோட்டம், 3.கூட்டம், 4.படை)

(அ) கள்வர்கள் ———– சென்றனர். (ஆ) மாந் ———— குயில்கள் கூவின

(இ) காலாட் ——— விரைந்து சென்றது (ஈ) மல்லிகை ———- மலர்ந்து மணம் வீசியது

(அ) அ-3,ஆ-1,இ-4,ஈ-2 (ஆ) அ-3,ஆ-4,இ-2,ஈ-1

(இ) அ-4,ஆ-1, இ_2,ஈ-3 (ஈ) அ-4,ஆ-3,இ-1,ஈ-2

70. கீழ்க்கண்டவற்றுள் எச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

(அ) பெயர்ச்சொற்கள் (ஆ) வினைச்சொற்கள் (இ) இடைச்சொற்கள் (ஈ) உரிச்சொற்கள்

71. “காலக் கணிதம்”

– பாடலில் இடம் பெற்றுள்ள சரியான வரியை தேர்வு செய்க.

(அ) பொருளென் செல்வம் பொன்னினும் விலை மிகு!

(ஆ) விலைமிகு செல்வம் பொன்னினும் பொருள் என்!

(இ) பொன்னினும் விலைமிகு பொருள் என் பொருள்!

(ஈ) பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

72. சரியான தொடரைத் தேர்ந்தெடு.

“கரிசல் இலக்கியம்” என்பது

(அ) காய்ந்தும், பெய்தும் கெடுக்கும் (ஆ) தயக்கம் கொடுக்கும்

(இ) பிரகாசம் தரும் (ஈ) மண்சாரல் வரும்

73. பொருத்துக:

சொல் பொருள்

அ. நெடி 1. மகிழ்ச்சி

ஆ. மழலை 2. அழகு

இ. வனப்பு 3. குழந்தை

ஈ. பூரிப்பு 4. நாற்றம்

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 1 2 3 4

இ. 2 1 4 3

ஈ. 4 3 2 1

73. பொருத்துக:

சொல் பொருள்

(அ) உரு 1.கப்பல்

(ஆ) போழ 2. பகல்

(இ) வங்கம் 3. அழகு

(ஈ) எல் 4. பிளக்க

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 1 4 3 2

இ. 3 4 1 2

ஈ. 2 1 4 3

75. கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு. (75-79).

நம்மில் எத்தனை உணர்ச்சிகள் உள்ளன எனச் சிந்தித்துப் பாருங்கள்! கோபம், பாசம், அன்பு, வியப்பு, வெறுப்பு என எத்தனை உணர்ச்சிகளை நம் முகம் காட்டுகின்றது. மனிதனுக்குத்தான் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டும் திறமை அதிகம். கோபம், பயம் போன்ற ஒன்றிரண்டைத்தான் மிருகங்களால் காட்ட முடியும். மற்றபடி மனிதன் போல் நவரசங்களையும் காட்ட முடியாது. உணர்ச்சிகளின் பிறப்பிடம் மூளைதான். மூளை-உடல் இரண்டும் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுபவை தான் உணர்ச்சிகள்.

75. முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டும் திறமை அதிகம் யாருடையது?

(அ) யானை (ஆ) மனிதன் (இ) சிங்கம் (ஈ) புலி

76. மிருகங்களால் எதை காட்ட முடியும்?

(அ) கோபம், பயம் (ஆ) கோபம் (இ) பயம் (ஈ) எதுவுமில்லை

77. யாரைப் போல் நவரசங்களை காட்ட முடியாது?

(அ) சிங்கம் (ஆ) மனிதன் (இ) யானை (ஈ) புலி

78. உணர்ச்சிகளின் பிறப்பிடம் எது?

(அ) இருதயம் (ஆ) மார்பு (இ) மூளை (ஈ) கண்

79. எவை இரண்டும் இணைந்து செயல்படுவதால் தான் உணர்ச்சிகள்?

(அ) கண்-தலை (ஆ) மூளை-உடல் (இ) கை-கால் (ஈ) கண்-மூளை

80. பேதையார் – எதிர்ச்சொல் தருக.

(அ) அறிவற்றவர் (ஆ) அறிவுடையவர் (இ) உற்றார் (ஈ) உறவினர்

81. அந்நியர் – எதிர்ச்சொல் தருக.

(அ) நன்மை (ஆ) பெரியது (இ) உறவினர் (ஈ) ஒற்றுமை

82. முப்பால் ஆசிரியருக்கு வழங்கப்படாத பெயரைக் கண்டறிக.

(அ) தெய்வப் புலவர் (ஆ) பொய்யில் புலவர் (இ) பாவலரேறு (ஈ) மாதானுபங்கி

83. எட்டுத் தொகையில் இடம்பெறாத இலக்கிய நூல் கண்டறிக.

(அ) அகநானூறு (ஆ) புறநானூறு (இ) நற்றிணை (ஈ) முல்லைப்பாட்டு

84. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல். மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின்களை கண்டுபிடித்தனர்.

(அ) இயற்கை (ஆ) இயந்திரம் (இ) ஆபரணம் (ஈ) குறிக்கோள்

85. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழச்சொல்லை எழுதுக: ‘Land Breeze’

(அ) பெருங்காற்று (ஆ) நிலக்காற்று (இ) கடற்காற்று (ஈ) சுழல் காற்று

86. ‘Terminology’ – என்ற சொல்லின் தமிழ்ச்சொல் யாது?

(அ) உயிரித் தொழில்நுட்பம் (ஆ) மீநுண்தொழில்நுட்பம்

(இ) கலைச்சொல் (ஈ) விண்வெளித் தொழில்நுட்பம்

87. இலை, இளை, இழை – ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக.

(அ) மெலிதல், நூலிழை, தாவர உறுப்பு (ஆ) தாவர உறுப்பு, மெலிதல், நூலிழை

(இ) நூலிழை, தாவர உறுப்பு, மெலிதல் (ஈ) தாவர உறுப்பு, நூலிழை, மெலிதல்

88. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: அரசன்

(அ) மன்னன், கவிஞன் (ஆ) கோ, தலைவன்

(இ) முதல்வன், குடிலன் (ஈ) வேந்தன், உறுப்பினன்

89. “வென்றார்” என்பதன் வேர்ச்சொல்

(அ) வேல் (ஆ) வெல் (இ) வென்று (ஈ) வென்றி

90. வேர்ச் சொல்லின் விளையாலணையும் பெயர் காண்க: “பாடு”

(அ) பாடினான் (ஆ) பாடுதல் (இ) பாடினேன் (ஈ) பாடியவன்

91. வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்று: பாடு

(அ) பாடினான் (ஆ) பாடி (இ) பாடிய (ஈ) பாடப்பட்ட

92. சொற்களை ஒழுங்குபடுத்துக: வீரத்தைச் சொல்லும் தமிழ் மக்களின் புலியாட்டமாகும் கலையாகத் திகழ்வது

(அ) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலியாட்டமாகும்

(ஆ) தமிழ் வீரத்தைச் சொல்லும் மக்களின் கலையாகத் திகழ்வது புலியாட்டமாகும்

(இ) வீரத்தைச் சொல்லும் மக்களின் தமிழ் கலையாகத் திகழ்வது புலியாட்டமாகும்.

(ஈ) வீரத்தைச் சொல்லும் மக்களின் கலையாகத் திகழ்வது தமிழ் புலியாட்டமாகும்.

93. சொற்களை ஒழுங்குபடுத்துக: “நாட்டில் தென்றல் அசைந்துவரும் அமைந்த திருக்குற்றாலம் மலைவளம் படைத்த பழம்பதியாகும் மலைவளம்”

(அ) தென்றல் அசைந்துவரும் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம் தென்தமிழ் படைத்த மலைவளம் பழம்பதியாகும்.

(ஆ) அசைந்துவரும் தென்றல் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம் படைத்த மலைவளம் பழம்பதியாகும்.

(இ) தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம் மலைவளம் படைத்த பழம்பதியாகும்.

(ஈ) நாட்டில் அசைந்துவரும் தென்றல் அமைந்த திருக்குற்றாலம் மலைவளம் படைத்த பழம்பதியாகும் மலைவளம்

94. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. திருக்குறள் மூன்று பிரிவுகளை உடையது.

(அ) திருக்குறள் என்றால் என்ன? (ஆ) திருக்குறள் எத்தனை பிரிவுகளை உடையது?

(இ) திருக்குறள் என்பவர் யார்? (இ) திருக்குறள் என்பது யாது?

95. “நீ விளையாடவில்லையா?” என்ற வினாவிற்கு “கால் வலிக்கும்” என்று கூறுவது

(அ) இனமொழி விடை (ஆ) உற்றது உரைத்தல் விடை

(இ) உறுவது கூறல் விடை (ஈ) ஏவல் விடை

96. தன்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க.

(அ) சிறுவன் பாடம் படிப்பித்தான் (ஆ) சிறுவன் பாடம் படித்தான்

(இ) சிறுவன் பாடம் படிக்க வைத்தான் (ஈ) சிறுவன் பாடம் படித்தானா?

97. செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்: பானை குயவனால் வனையப்பட்டது.

(அ) செய்வினை வாக்கியம் (ஆ) செயப்பாட்டு வினைவாக்கியம்

(இ) வினா வாக்கியம் (ஈ) எதிர்மறை வாக்கியம்

98. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் – தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக. அப்பா சொன்னார்

(அ) தன்வினை வாக்கியம் (ஆ) செய்வினை வாக்கியம்

(இ) பிறவினை வாக்கியம் (ஈ) செயப்பாட்டுவினை வாக்கியம்

99. “கடலில் கரைத்த பெருங்காயம்” – இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம்

(அ) மணமின்மை (ஆ) வெற்றிடம் (இ) கரைதல் (ஈ) பயனின்மை

100. டெம்பெஸ்ட் (Tempest) என்பது

(அ) சூறாவளி (ஆ) கடற்காற்று (இ) சுழல்காற்று (ஈ) பெருங்காற்று

101. குறிப்பிட்ட மறைகுறியீட்டின் படி TRUST = 103 ஆகவும் LOVE= 58 ஆகவும் இருந்தால் CARING ஆனது

(அ) 46 (ஆ) 48 (இ) 57 (ஈ) 58

102. MINJUR என்பது 423658 எனவும் DATE என்பது 1970 எனவும் குறியிடப்பட்டுள்ளது எனில் NADURAI என்பது எவ்வாறு குறியிடப்படும்?

(அ) 3915892 (ஆ) 4915982 (இ) 4951982 (ஈ) 4989215

103. A ஆனவர் B ஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

(அ) 12 நாட்கள் (ஆ) 36 நாட்கள் (இ) 9 நாட்கள் (ஈ) 15 நாட்கள்

104. A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அவ்வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில் B தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

(அ) 12 நாட்கள் (ஆ) 24 நாட்கள் (ஈ) 30 நாட்கள் (ஈ) 32 நாட்கள்

105. ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?

(அ) 6 மடங்கு (ஆ) 18 மடங்கு (இ) 12 மடங்கு (ஈ) மாற்றமில்லை

106. கூட்டு வட்டி முறையில் ஒரு தொகையானது 2 ஆண்டுகளில் ₹ 4,500 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹ 6,750 ஆகவும் கிடைக்கிறது எனில் அந்த தொகை என்ன?

(அ) ₹ 4,000 (ஆ) ₹ 2,500 (இ) ₹ 3,000 (ஈ) ₹ 3,050

107. Rs. 5x2y2 க்கு 4xy ஆண்டிற்கு 7y% வீதம் தனிவட்டி காண்க

(a) 7/5 x3y4 (b) 7/4 x2y3 (c) 4/5 x3y2 (d) 4/7 x2y4

108. அனிதா என்பவர் 15% வட்டி வீதத்தில் Rs. 5,000 கடனாக பெறுகிறார். 2 வருட முடிவில் அவர் செலுத்தும் வட்டி தொகை எவ்வளவு?

(அ) 1,000 (ஆ) 1,300 (இ) 1,800 (ஈ) 1,500

109. ஒரு குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்புகளின் விகிதம் 5 : 3. செலவு ₹ 3,500 எனில் சேமிப்பு எவ்வளவு?

(அ) ₹ 1,400 (ஆ) 2,100 (இ) ₹ 2,800 (ஈ) ₹ 3,000

110. இரு எண்களின் பெருக்கற்பலன் 3672 மற்றும் அவைகளின் மீ.சி.ம. மற்றும் மீ.பொ.வ முறையே 612 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க:

(அ) 96 (ஆ) 102 (இ) 112 (ஈ) 124

111. 62, 78 மற்றும் 109-ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4-ஐ மீதிகளாக கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி

(அ) 12 (ஆ) 14 (இ) 15 (ஈ) 16

112. 48 இன் 48% = z இன் 64% எனில், z ன் மதிப்பு ————- ஆகும்

(அ) 64 (ஆ) 56 (இ) 42 (ஈ) 36

113. ஒரு தேர்வர் ஒவ்வொரு சரியான விடைக்கும் 3 மதிப்பெண் பெறுகிறார். தவறான விடையளித்தால் 1 மதிப்பெண் இழக்கிறார். 80 வினாக்களுக்கு விடையளித்த தேர்வர் 160 மதிப்பெண் பெறுகிறார் எனில் அவர் தவறாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை என்ன?

(அ) 20 (ஆ) 40 (இ) 60 (ஈ) 10

114. NITI ஆயோக்-ன் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின்படி (2019) தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்.

(அ) முதலாவது (ஆ) இரண்டாவது (இ) மூன்றாவது (ஈ) நான்காவது

115. தமிழ்நாடு ————– இடங்களில் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களை கொண்டு முதலிடத்தில் திகழ்கிறது.

1. அரியலூர், விருதுநகர். 2.தஞ்சாவூர், சென்னை.

3. கோயம்பத்தூர், திருநெல்வேலி. 4. புதுக்கோட்டை, மதுரை

(அ) ஒன்றும் நான்கும் சரி (ஆ) ஒன்றும் மூன்றும் சரி

(இ) இரண்டும் நானக்கும் சரி (ஈ) மூன்றும் நான்கும் சரி

116. பின்வருவனவற்றில் எது “தாய்” திட்டத்துடன் தொடர்பு உடையது?

(அ) தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம்

(ஆ) முதலமைச்சரின் சூரிய சக்தி கொண்ட பசுமை இல்லத் திட்டம்

(இ) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்

(ஈ) தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுத் திட்டம்

117. இந்திய அரசியல் சாசனத்தின் 164ஆவது பிரிவு, ———– நலத்திற்காக, தனியாக ஒரு அமைச்சரை, மாநில அரசு நியமிக்க அதிகாரமளிக்கிறது.

(அ) பெண்கள் (ஆ) குழந்தைகள் (இ) பழங்குடியினர் (ஈ) விவசாயிகள்

118. மறுமலர்ச்சி இயக்கம் எதனை முன் நடத்துகிறது?

(அ) சமூக மறுசீரமைப்பு (ஆ) நவீன சீரமைப்பு

(இ) சமூக வளர்ச்சி (ஈ) முந்திய சமூகம்

119. கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக மாவட்டங்களை கருத்தில் கொள்ளவும்

1. கன்னியாகுமரி. 2. விருதுநகர். 3. ஈரோடு. 4. திருப்பூர். 5. தூத்துக்குடி.

அதிக மனிதவள குறியீடு உள்ள மாவட்டங்களை தெரிவு செய்க.

(அ) 1, 2 மற்றும் 3 மட்டும் (ஆ) 2, 3 மற்றும் 4 மட்டும்

(இ) 1, 2 மற்றும் 5 மட்டும் (ஈ) 1, 2 மற்றும் 4 மட்டும்

120. சென்னை மாநில ஆலைகளுக்கு பொருளுதவிச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

(அ) 1924 (ஆ) 1922 (இ) 1929 (ஈ) 1920

121. 1930 ஏப்ரல் 13ல் மெட்ராஸில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக தலைவர்

(அ) ஆந்திர கேசரி பிரகாசம் (ஆ) டாக்டர். நடராஜன்

(இ) ஸ்ரீபாத சங்கர் (ஈ) ஆக்கூர் அனந்தசாரி

122. சரியான விடையை பொருத்துக.

அ. சின்னச்சாமி 1. என் கதை

ஆ. கோபாலகிருஷ்ண பாரதி 2. தேசியம் வளர்த்த தமிழ்

இ. ராமலிங்கம் 3. நந்தனார் சரித்திர கீர்த்தனைகள்

ஈ. கா. திரவியம் 4. சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 4 2 3 1

(இ) 2 3 1 4

(ஈ) 2 1 3 4

123. “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” – இந்த திருக்குறளில், “இருபுனல்” என்பது யாது?

(அ) ஆற்று நீர், கிணற்று நீர் (ஆ) ஆற்று நீர், குளத்து நீர்

(இ) மழை நீர், கிணற்று நீர் (ஈ) கடல் நீர், மழை நீர்

124. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்கார்டு என்று கல்கி போற்றப்படக்காரணம்?

(அ) சமூக நாவல்கள் படைத்தால் (ஆ) துப்பறியும் நாவல்கள் படைத்ததால்

(இ) வரலாற்று நாவல்கள் படைத்ததால் (ஈ) சிறுகதைகள் படைத்ததால்

125. பிரபந்த மாலை என்றழைக்கப்படும் திருமுறை

(அ) பதினோறாந் திருமுறை (ஆ) பத்தாம் திருமுறை

(இ) எட்டாம் திருமுறை (ஈ) பன்னிரெண்டாம் திருமறை

126. செம்புலப் பெயல் நீர்போல ———— நெஞ்சம் தாம் கலந்தனவே

(அ) பண்புடை (ஆ) சிறப்புற (இ) அன்புடை (ஈ) மதிப்புறு

127. கீழ்காணும் கல்வெட்டுகளில் தமிழக அரசர்களின் கூட்டணி பற்றி குறிப்பிடுவது எது?

(அ) உத்திரமேரூர் கல்வெட்டு (ஆ) ஹதிகும்பா கல்வெட்டு

(இ) அசோகரின் கல்வெட்டு (ஈ) திருமுக்கூடல் கல்வெட்டு

128. “14 ஆகஸ்ட் 1947 துயரம் மற்றும் இந்தியாவிற்கான அழிவின் தினம்” என்ற கூற்றை கூறியவர்

(அ) மௌண்ட் பேட்டன் பிரபு (ஆ) ஆச்சார்ய கிருப்லானி

(இ) மௌலான அபுல்கலாம் ஆசுhத் (ஈ) மோகன்தாஸ் கரம்சந்த காந்தி

129. பிரிட்டிஷ் அலுவலர்கள் யாரை “கம்யூனிசத்தின் தலைமை குரு” என்று அழைத்தனர்?

(அ) E.M.S. நம்பூதிரி பாட் (ஆ) M.N. ராய்

(இ) ஜவஹர்லால் நேரு (ஈ) சுபாஷ் சந்திரபோஸ்

130. ஜவஹர்லால் நேரு தொடங்கிய செய்திதாளின் பெயர் என்ன?

(அ) தத்துவ இயல் (ஆ) நேஷனல் ஹெரால்ட் (இ) பூர்ண சுவராஜ் (ஈ) வந்தே மாதரம்

131. இந்திய தேசியத்தை பண்பாடு, சமய நடவடிக்கைகளோடு இணைத்தவர் யார்?

(அ) ஈஷ்வர் சந்திர வித்யா சாகர் (ஆ) இரவீந்திரநாத் தாகூர்

(இ) இராதாகுமுத் முகர்ஜி (ஈ) இராஜாராம் மோகன்ராய்

132. சாம்படா திட்டம் எதனுடன் தொடர்புடையது

(அ) வேளாண்மை நிதி (ஆ) சிறு விவசாயிகளுக்கான கடன்

(இ) வேளாண் உணவு சார்ந்த தொழிற்சாலை (ஈ) தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்குதல்

133. கீழ்க்கண்டவற்றுள் எது மூலதன – உற்பத்தி விகிதம் ஆகும்?

(அ) மூலதனம்

(ஆ) ஓர் அலகுப் பொருளை உற்பத்தி செய்ய தேவைப்படுகின்ற மூலதனத்தின் அளவு

(இ) சேமிப்பு

(ஈ) கடன்

134. எந்த ஐந்தாண்டுத் திட்டம் “சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் வளர்ச்சியை” கவனமாக நோக்கமாக கொண்டுள்ளது?

அ. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்

ஆ. எட்டாவது ஐந்தாண்டு திட்டம்.

இ.ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்.

ஈ.பத்தாவது ஐந்தாண்டு திட்டம்.

குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு.

(அ) அ மற்றும் ஆ (ஆ) ஆ மட்டும் (இ) இ மட்டும் (ஈ) அ மற்றம் ஈ

135. “அடிப்படை கடமைகள்” பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

1. அடிப்படை கடமைகள் சட்டத்தால் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தப்பட தக்கவை

2. அடிப்படை கடமைகள் மக்களாட்சியை சமநிலைப்படுத்த உதவுகின்றன

3. அடிப்படை கடமைகள் சில அறமுறையானவை மற்றும் பல குடியியல் சார்ந்த கடமைகளாகும். மேலே குறிப்பிட்ட கூற்று/கள் எது/எவை சரியானது?

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும்

(இ) 1 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 3 சரியானவை

136. ஓர் மாநில முதல் அமைச்சரும் அவரது அமைச்சர் அவையும் எவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட முடியும்?

1. ஆளுநரின் கருத்தின்படி அம்மாநிலத்தில் அரசியல் அமைப்பு இயந்திரம் உடைவதால்.

2. மாநில சட்ட சபையில், அறுதி பெரும்பான்மையுடன் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்.

3. மாநிலத்தில் உள்ள சட்ட சபையில் உள்ள ஈர் அவையும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால்

4. நாடாளுமன்றம் அவசரக் கால நெருக்கடி சட்டத்தை நிறைவேற்றி மாநிலத்தின் முதல் அமைச்சரையும் அவரது அமைச்சர் அவையையும் நீக்க முடியும்.

கீழ்கண்ட சரியான எண்களை தேர்ந்தெடுக்க.

(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3 (இ) 3 மற்றும் 4 (ஈ) 4 மற்றும் 1

137. வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குரிமை குறித்த கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்

அ. வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்கலாம்

ஆ. வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இ. வாக்குச் சாவடியில் அசல் கடவுச்சீட்டு காண்பிக்கப்பட வேண்டும்

ஈ. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

(அ) அ மற்றும் ஆ தவறு (ஆ) ஆ மற்றும் இ தவறு

(இ) ஆ மற்றும் ஈ தவறு (ஈ) ஈ மட்டும் தவறு

138. “மத சார்பற்ற நாடு” என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ———— திருத்தம் ஆகும்.

(அ) 40வது (ஆ) 41வது (இ) 42வது (ஈ) 43வது

139. எந்த கருத்தியல் இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்கும்?

(அ) முதலாளித்துவம் (ஆ) வகுப்புவாதம் (இ) அடிப்படைவாதம் (ஈ) சமயச்சார்பின்மை

140.மூல சங்கரர் பிற்காலத்தில் ———– என்று அழைக்கப்பட்டார்.

(அ) கேசப் சந்திர சென் (ஆ) தயானந்த சரஸ்வதி

(இ) ராஜா ராம் மோகன் ராய் (ஈ) ஈஸ்வர சந்திர வித்யா சாகர்

141. சயத் பேரரசில் முபராக் ஷா திறமையான அரசர்

அ. வெளிநாட்டு அதிகாரத்திலிருந்து டெல்லி சுல்தானியத்தை விடுதலை செய்தவர்

ஆ. உயர்குடியில் பிறந்தவர்கள் மற்றும் ஜாகிர்தார்கள் ஏற்படுத்திய கிளர்ச்சியை அடக்கியவர்

(அ) அ (ஆ) ஆ (இ) அ மற்றும் ஆ (ஈ) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

142. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல்I பட்டியல் II

அ. மொகஞ்சதாரோ 1. அளவை முறை

ஆ. ஹரப்பா 2. சிவன்

இ. திரிமுகம் 3. பெருங்குளியல்

ஈ. வெண்கலக் கோல் 4. டி.ஆர்.சஹானி

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 2 3 1 4

இ. 4 3 2 1

ஈ. 1 2 3 4

143. குட்டையான உயரம், கரும் சாக்லேட் நிற பழுப்புத்தோல், கம்பளி முடி, பல்பு நெற்றி, பரந்த தட்டையான மூக்கு மற்றும் சற்று நீடித்த தாடைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மக்கள்

(அ) புரோட்டோ-ஆஸ்டரலாய்ட்ஸ் (ஆ) நீக்ரிடோஸ்

(இ) மங்களாய்ட்ஸ் (ஈ) நார்டிக்ஸ்

144. ஒளி ஊடுருவக்கூடியதும் மற்றும் கடினத்தன்மையும் கொண்ட கனிமம்

(அ) தங்கம் (ஆ) வெள்ளி (இ) செம்பு (ஈ) வைரம்

145. உலகில் அதிக மழை பெரும் இடமான “மௌசின்ராம்” அமைந்துள்ள இந்திய மாநிலம்

(அ) மிசோரம் (ஆ) நாகலாந்து (இ) திரிபுரா (ஈ) மேகாலயா

146. முதல் மாநகராட்சி சென்னை மாகாணத்தில் எப்போது தொடங்கப்பட்டது?

(அ) 1688 (ஆ) 1788 (இ) 1888 (ஈ) 1988

147. கீழ்காணப்படுபவைகளில் அரசியல் கட்சி தீர்மானிகள் யாவை?

1. மனிதர்களின் தன்மை.

2.சூழல்.

3.பற்று.

4.போராட்டம்

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 1 மற்றும் 4 மட்டும்

(இ) 1,2,3 மட்டும் (ஈ) 2 மற்றும் 4 மட்டும்

148. பின்வரும் கூற்றை கவனிக்க.

1. குறு தொழிற்சாலையில், இயந்திரங்களில் முதலீடு ஒரு கோடி ரூபாயை தாண்டக்கூடாது.

2. சிறு தொழிற்சாலையில் இயந்திரங்களில் முதலீடு பத்து கோடி ரூபாயை தாண்டக்கூடாது.

3. நடுத்தர தொழிற்சாலையில், இயந்திரங்களில் முதலீடு ஐம்பது கோடி ரூபாயை தாண்டக்கூடாது.

4. குறு தொழிற்சாலையில் இயந்திரங்களில் முதலீடு இரண்டு கோடி ரூபாயை தாண்டக்கூடாது.

மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?

(அ) 1 மற்றும் 4 (ஆ) 1 மற்றும் 3 (இ) 1,2 மற்றும் 3 (ஈ) 3 மற்றும் 4

149. ஒரு வலுவற்ற காரம் ——— இணை அமிலத்தையும் ஒரு வலுவற்ற அமிலம் ———- இணை காரத்தையும் பெற்றிருக்கும்.

(அ) வலுவான, வலுவான (ஆ) வலுவற்ற, வலுவான

(இ) வலுவுள்ள,வலுவற்ற (ஈ) வலுவற்ற,வலுவற்ற

150. தொலைக்காட்சி ஒளி பரப்பில் ஒலி சைகை ———– பண்பேற்றம் செய்யப்பட்டது.

(அ) மின் (ஆ) கட்டம் (ஈ) வீச்சு (ஈ) அதிர்வெண்

151. குளிர் சாதனப்பெட்டி மற்றும் பனிக்கட்டி தொழிலகத்தில் செயல்படும் தத்துவமானது.

(அ) வெப்ப இயக்கவியலின் முதல் விதி (ஆ) வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி

(இ) வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி (ஈ) வெப்ப இயக்கவியலின் பூஜ்ய விதி

152. 9ஆல் வகுபடும் மூன்றிலக்க இயல் எண்கள் மொத்தம் எத்தனை?

(அ) 99 (ஆ) 101 (இ) 90 (ஈ) 100

153. 1/2, 2/3, 3/4, …. என்ற தொடர் வரிசையின் 6வது உறுப்பைக் காண்க.

(அ) 9/17 (ஆ) 7/13 (இ) 4/9 (ஈ) 6/7

154. ஒரு வகுப்பில் S,T,U,D,E,N என்ற ஆறு மாணவர்கள் நன்கு கற்கும் மாணவர்களாக உள்ளனர். அவர்களிலிருந்து எத்தனை வித்தியாசமான வழிகளில் ஒரு மாணவர் தலைவனும் ஒரு உதவி தலைவனும் தேர்ந்தெடுக்க இயலும்?

(அ) 6 (ஆ) 36 (இ) 30 (ஈ) 12

155. x,y,z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x+5, 3y+ 5, 3z+5 ஆகியவற்றின் திட்ட விலக்கமானது

(அ) 3p+5 (ஆ) 3p (இ) p+5 (ஈ) 9p+15

156. பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாட்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தலையை மேய ——- நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.

(அ) 18 (ஆ) 15 (இ) 8 (ஈ) 6

157. ஒரு கன சதுரத்தின் மொத்தப் பரப்பு 384 சதுர சென்டிமீட்டர் எனில் அதன் கனஅளவு காண்க.

(அ) 512 க.செ.மீ (ஆ) 521 க.செ.மீ (இ) 510 க.செ.மீ (ஈ) 500 க.செ.மீ

158. இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹.70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.

(அ) ₹.69,904 (ஆ) ₹.64,512 (இ) ₹.67,200 (ஈ) ₹.64,400

159. ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 10% வீதம் அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 26,620 எனில், 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை ————— ஆகும்.

(அ) 20,000 (ஆ) 19,680 (இ) 21,320 (ஈ) 13,320

160. ஒரு முகாமில் 65 நாட்களுக்கு 490 வீரர்களுக்குப் போதுமான மளிகைப் பொருட்கள் இருந்தன. 15 நாட்களுக்குப் பிறகு, மேலும் பல வீரர்கள் முகாமிற்கு வந்ததால், மீதமிருந்த மளிகைப் பொருட்களானது 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது எனில், எத்தனை வீரர்கள் முகாமில் சேர்ந்தனர்?

(அ) 120 (ஆ) 490 (இ) 700 (ஈ) 210

161. P,Q மற்றும் R ஆகிய மூவரிடமும் மொத்தமாக 210 கோலிக் குண்டுகள் உள்ளன. அவற்றில் Q மற்றும் R ஆகியோரிடம் உள்ள மொத்த குண்டுகளில் நான்கில் ஒரு பங்கு Pயிடமும், P மற்றும் R ஆகியோரிடம் உள்ள மொத்தக் குண்டுகளில் நான்கில் மூன்று பங்கு Qவிடமும் உள்ளன எனில் R யிடம் உள்ள குண்டுகளின் எண்ணிக்கை.

(அ) 64 (ஆ) 68 (இ) 72 (ஈ) 78

162. முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய சிறிய எண் எது?

(அ) 2520 (ஆ) 360 (இ) 210 (ஈ) 1250

163. இரு எண்களின் மீ.பொ.வ. 8 எனில் கீழ்கண்ட எண்களில் எந்த எண் அவற்றின் மீ.சி.ம ஆக இருக்க முடியாது?

(அ) 24 (ஆ) 48 (இ) 56 (ஈ) 60

164. வலியுறுத்தல் (A) : தமிழக அரசின் பார்வை அல்லது நோக்கம் என்பது “சாதாரண மனிதன் அரசின் சேவைகளை அவன் குடியிருப்பு வட்டாரத்திலேயே அணுகுமாறு ஏற்பாடு செய்வது”

காரணம் (R) : பொதுச்சேவை மையங்கள் மூலமாக, திறம்படவும், வெளிப்படையாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், கட்டுபடியாகும் விலையிலும் வழங்குதல்.

(அ) (A) உண்மை ஆனால் (R) தவறு

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) க்கான சரியான விளக்கம்

(இ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) க்கான சரியான விளக்கமல்ல.

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

165. ———–, வளர்இளம் பருவத்தினருக்கான நலத்திட்டம்.

(அ) வலிமை திட்டம் (ஆ) வாழ்வொளி திட்டம்

(இ) அறிவொளி திட்டம் (ஈ) நலமான தமிழகம்

166. இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவரின் பெயர்

(அ) மீனாட்சி அரோரா (ஆ) மேனகா குருசாமி

(இ) சத்தியஸ்ரீ சர்மிளா (ஈ) சந்தியா இராதாகிருஷ்ணன்

167. பின்வருவனவற்றை பொருத்துங்கள்.

திட்டம் பெயர்

அ. ஏழை விதவை மகளின் திருமண உதவி 1. சத்யா அம்மையார்

ஆ. விதவை மறுமணம் 2. ஈ.வெ.ரா.மணியம்மையார்

இ. அரசு அனாதை இல்லங்கள் 3. சத்தியவானி முத்து அம்மையார்

ஈ. தையல் இயந்திரம் இலவச வழங்கல் 4. டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார்

அ ஆ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 2 4 1 3

இ. 3 1 4 2

ஈ. 1 3 2 4

168. கீழ்வருவனவற்றுள் ஈ.வெ.ரா. பெரியாரை பற்றி எவை உண்மையான கூற்று?

அ. காதிவஸ்திராலயத்தை தோற்றுவிக்க காரணமானவர் ஈ.வெ.ரா.பெரியார்

ஆ. நூற்பாலை சங்கத்தலைவராக பணியாற்றியவர் ஈ.வெ.ரா.பெரியார்

இ. மாவட்ட குழுவில் உறுப்பினராக இருந்தார்

ஈ. ஈரோடு முனிசிபல் கவுன்சில் தலைவராக இருந்தார்

(அ) அ மற்றும் ஆ மட்டும் (ஆ) அ,ஆ மற்றும் இ மட்டும்

(இ) ஆ மற்றும் இ மட்டும் (ஈ) மேற்கூறிய அனைத்தும்

169. “கொடுமுடி கோகிலம்” என்ற பட்டத்தை கே.பி.சுந்தராம்பாளுக்கு வழங்கியவர்.

(அ) அறிஞர் அண்ணா (ஆ) பெரியார் (இ) கருணாநிதி (ஈ) எம்.ஜி.ஆர்

170. “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது ———–“

– சிறப்பென்னும் செம்பொருளைக் காண உறுதுணையாவது?

(அ) அன்பு (ஆ) அறிவு (இ) துறவு (ஈ) தவம்

171. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்

-இக்குறள் வழி திருவள்ளுவர் கூறும் அறிவுரை யாது?

(அ) அதிக வரி வசூலித்தல் கூடாது (ஆ) கடுமையான தண்டனை வழங்குதல் கூடாது

(இ) தன் சக்தியின் அளவை கடத்தல் கூடாது (ஈ) அதிகம் வேலை வழங்குதல் கூடாது.

172. மன உடன்பாடு இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை எதனோடு தங்கியிருந்து வருந்துவதற்கு ஒப்பாகும்?

(அ) பாம்பு (ஆ) புலி (இ) சிங்கம் (ஈ) யானை

173. “யாழுளே பிறப்பினும், யாழ்க்கு, அவைதாம் என் செய்யும்

சூழுங்கால், நும்மகள், நுமக்கும் ஆங்கு அனையனே!

– என்ற கலித்தொகைப் பாடல் உணர்த்தும் கருத்து என்ன?

(அ) இல்வாழ்க்கையில், இசையெனும் இன்பம் சேரும்

(ஆ) இல்வாழ்க்கை தொடங்கும் போது பிறந்த இடத்துப் பாசம் விலகும்.

(இ) இல்வாழ்க்கையில் மக்கட்பேறு மகிழ்ச்சி கொடுக்கும்

(ஈ) திருமண நிகழ்வில் இசைக்கருவிகள் பயன்பாடு இருக்கும்

174. தெர்ரகோடா மற்றும் சைப்ரஸ் தீவில் எந்த பேரரசின் தூதுக்குழுவை பேரரசர் அகஸ்டஸ் சீசர் வரவேற்றார்.

(அ) சேர (ஆ) சோழ (இ) பல்லவ (ஈ) பாண்டிய

175. ரேபரேலி விவசாயி இயக்கத்தின் படி பின்வரும் எந்த வாக்கியங்கள் உண்மையானவை?

1. ரேபரேலி விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

2. புரட்சியாளர்களுக்கு ஒத்துழையாமை இயக்கம் ஒரு உத்வேகத்தை அளித்தது.

3. இப்புரட்சி மத்திய பிரதேச மாவட்டங்களில் நடந்தது.

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மற்றும் 2 (ஈ) 1,2 மற்றும் 3

176. 1907 காங்கிரசின் பிளவிற்கு பிறகு உருவான புதிய தேசிய கட்சிக்கான சென்னை மாகாணத்தின் செயலர் யார்?

(அ) C.இராஜகோபாலாச்சாரி (ஆ) C.சுப்பிரமணிய பாரதி

(இ) C.சுப்பிரமணிய சிவா (ஈ) V.O.சிதம்பரனார்

177. தாழ்த்தப்பட்ட மற்றும் சாதிய இந்துக்கள் மத்தியிலே சமூக சமத்துவத்தை போதிக்க யாரால் “சமாஜ் சமதா சங்கம்” தொடங்கப்பட்டது?

(அ) Cஇராஜகோபாலாச்சாரியார் (ஆ) ஆச்சார்ய வினோபாவே

(இ) ஈ.வெ.ரா.பெரியார் (ஈ) Dr.B.R.அம்பேத்கர்

178. வறுமை ஒழிப்பு திட்டங்கள் ஏன் குறுகிய அளவில் மட்டும் வெற்றி பெற்றன?

(அ) வேலை வாய்ப்பு திட்டங்களின் குறைபாடு

(ஆ) உள்ளார்ந்த அடிப்படை குறைபாடுகள்

(இ) திட்ட பணிகளின் நிர்வாகத்தில் ஏற்பட்ட தொய்வு

(ஈ) மேலே குறிப்பிட்ட அனைத்தும்

179. 2005ல் தொடங்கப்பட்ட அணுகக்கூடிய, மலிவு, பொறுப்பு, பயனுள்ள மற்றும் நம்பகமான ஆரம்ப சுகாதார வசதிகளை குறிப்பாக மக்கள் தொகையில் ஏழை மற்றும் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளுக்கு வழங்குவதற்கான திட்டம்

(அ) தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி

(ஆ) தாய் பாதுகாப்புத் திட்டம்

(இ) தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்

(ஈ) தேசிய குருட்டுத் தன்மையை கட்டுப்படுத்தும் திட்டம்

180. பின்வருவனவற்றுள் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் எது/எவை?

(அ) தேசிய வளர்ச்சி கொள்கைகளை பரிந்துரைகள் செய்வது

(ஆ) வேலை வாய்ப்பை உருவாக்குதல்

(இ) விவசாயத்தை மேம்படுத்துதல்

(ஈ) ஏற்றுமதியை அதிகம் உருவாக்குதல்

181. கீழ்கண்டவற்றினை கவனத்தில் கொள்க.

அ. நடவடிக்கைகளின் கணக்கு

ஆ. வாராந்திர அறிக்கை

இ. பெறுதல்-செலுத்தல் அறிக்கை

ஈ. வருட இருப்பு நிலைக் குறிப்பு

இவற்றுள் ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிக்கைகளை குறியீடுகளை மூலம் தெரிவு செய்க:

(அ) ஆ,இ மற்றும் ஈ (ஆ) அ,இ மற்றும் ஈ (இ) அ,ஆ மற்றும் ஈ (ஈ) அ,ஆ மற்றும் இ

182. “ஒரு நாட்டின் மத்திய மாநில அரசுகள் அதன் எல்லைக்குட்பட்டு ஒன்றுக்கொன்று சுதந்திரமானவைகளாகும்” என கூறியவர்.

(அ) Dr.வியர் (ஆ) Dr.அம்பேத்கர் (இ) Dr.ராஜேந்திர பிரசாத் (ஈ) Dr.ஐவோர் ஜென்னிங்க்ஸ்

183. “வழிகாட்டு நெறிமுறைகளும் மற்றும் அடிப்படை உரிமைகளும்”, “அரசியலமைப்பின் மனசாட்சியாக இருக்கிறது” – என விவரித்தவர் யார்?

(அ) கிராவின் ஆஸ்டின் (ஆ) Dr.B.R.அம்பேத்கர்

(இ) K.Cவியர் (ஈ) Dr.ஐவோர் ஜென்னிங்ஸ்

184. “நீதித்துறை செயல்பாட்டு முறை” என்ற கூற்று அறிமுகப்படுத்தப்பட்டது ————-ல்.

(அ) பிரிட்டன் (ஆ) ரஷ்யா (இ) அமெரிக்கா (ஈ) சீனா

185. ஆண்டு நிதி அறிக்கையை, பாராளுமன்றத்தில் யார் அறிமுகப்படுத்துகிறார்?

(அ) பிரதம மந்திரி (ஆ) ஜனாதிபதி (இ) நிதி மந்திரி (ஈ) தலைமை செயலாளர்

186. கீழ்கண்டவற்றைப் பொருத்துக.

அ. அமெரிக்க அரசியல் சாசனம் 1. உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்கும்

முறை

ஆ. ஜெர்மனியின் வெய்மர் அரசியல் சாசனம் 2. நெருக்கடி காலத்தில் அடிப்படை உரிமைகளை

நிறுத்திவைத்தல்

இ. பிரிட்டீஷ் அரசியல் சாசனம் 3. ஒற்றை குடியுரிமை

ஈ. ஐரிஷ் அரசியல் சாசனம் 4. பாராளுமன்றத்தின் மேலவைக்கு பிரதிநிதிகள்

நியமனம்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 4 3 1

இ. 3 1 4 2

ஈ. 4 3 2 1

187. முதலாம் ஹரிஹரா தன் நாட்டை, ஸ்தலங்களாகவும் நாடுகளாகவும் எந்த மாதிரியின் அடிப்படையில் ஒழுங்கமைத்தார்

(அ) முகலாயர் (ஆ) துருக்கியர் (இ) காசுதீயர் (ஈ) கொய்சாளர்

188. 1764 பக்சர் போரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட முகலாய மன்னரின் பெயரை குறிப்பிடுக.

(அ) அக்பர் (ஆ) ஷாஜஹான் (இ) இரண்டாம் ஷா ஆலம் (ஈ) ஒளரங்கசீப்

189. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி சரியான கூற்று எது?

1. ஹரப்பா மொகஞ்சதாரோவில் வீடுகள் கட்ட கட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. காலிபங்கன் மற்றும் லோதலில் சுடாத செங்கற்கள் கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்டு உள்ளது.

3. சுட்ட செங்கற்கள், சாக்கடைகள், கிணறுகள், குளியலறைகள், நடைபாதைகள், சுட்ட பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

4. சிந்து சமவெளி நாகரீகத்தில் வீடுகளில் ஒரு முற்றமும் அதை சுற்றி நான்கு மற்றும் ஆறு தங்கும் அறைகள் அமைந்திருந்தன.

(அ) 1 மட்டும் (ஆ) 1,2 மட்டும் (இ) 1,2,3 மட்டும் (ஈ) 1,2,3,4

190. வெப்ப மாசுபாட்டின் காரணமாக நீர் நிலைகளில் எவற்றின் செறிவு அதிக அளவில் குறையும்?

(அ) pH (ஆ) DO (கரைந்த ஆக்ஸிஜன்) (இ) அமிலதன்மை (ஈ) காரத்தன்மை

191. மின்னலை பொருத்தவற்றில் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?

1. சூடான காற்று வளிமண்டலம் வழியாக அதிர்வலைகளை அனுப்புகிறது

2. சுழற்சியைத் தொடங்க ஒரு வழிமுறை இருக்க வேண்டும்

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மற்றும் 2 இரண்டும் (ஈ) இவற்றில் எதுவுமில்லை

192. பின்வரும் கூற்றில் எவை சரியான கூற்று?

1. தேசிய உற்பத்தியாளர் கொள்கை 2011-இல் அரசால் வெளியிடப்பட்டது

2. நடுத்தர பருவத்தில் உற்பத்தியாளரின் வளர்ச்சி 12-14 சதவீதமாக கொள்கை ஏற்படுத்தப்பட்டது.

3. 2022-க்குள் உற்பத்தி தொழிற்சாலையில் 75 மில்லியன் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

4. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தியாளரின் பங்கு 2022க்குள் 25 சதவீதமாக அதிகரிக்கப்படும்

(அ) 2.3 மற்றும் 4 (ஆ) 1,2 மற்றும் 3 (இ) 1,2 மற்றும் 4 (ஈ) 1,3 மற்றும் 4

193. 1931ம் ஆண்டு லார்டு விஸ்கௌன்ட் பீல் கமிட்டி தொடர்புடையது.

(அ) சைமன் கமிஷன் (ஆ) மத்திய-மாநில நிதி உறவுகள்

(இ) மத்திய-மாநில உறவுகள் (ஈ) இந்திய அரசு சட்டம் 1919ஐ ஆய்வு செய்ய

194. 27 மார்ச் 2019 அன்று இந்தியா பரிசோதித்த துணைக்கோள் அழிப்பு ஏவுகணை திட்டம்

(அ) மிஷன் நாக் (ஆ) மிஷன் அந்தரிக்ஷ் (இ) மிஷன் ககன் (ஈ) மிஷன் சக்தி

195. “சர் கிரீக்” ———- மற்றும் ——— இடையிலான எல்லையாக அமைகிறது.

(அ) குஜராத் மற்றும் பாகிஸ்தான் (ஆ) அருணாசல பிரதேசம் மற்றும் சீனா

(இ) சிக்கிம் மற்றும் நேபாளம் (ஈ) சிக்கிம் மற்றும் பூடான்

196. ஐஸ் கட்டியின் மீது நடப்பது சிரமமாக இருக்கும் ஏனெனில்

(அ) அழுத்தம் அதிகமாக இருக்கும் (ஆ) உராய்வு அதிகமாக இருக்கும்

(இ) அழுத்தம் குறைவாக இருக்கும் (ஈ) உராய்வு குறைவாக இருக்கும்

197. கீழ்கண்டவற்றுள் எது மூடநம்பிக்கையின் பொருளைக் குறிப்பிடுகிறது?

(அ) புராணம் சார்ந்த (ஆ) அறிவியல் பூர்வமான (இ) உண்மையான (ஈ) பகுப்பாய்வு

198. செயற்கை மழை பெய்ய மேகத்தின் மீது தூவப்படுவது எது?

(அ) திரவ ஆக்ஸிஜன் (ஆ) திரவ ஹைட்ரஜன்

(இ) திரவ கார்பன் மோனாக்ஸைடு (ஈ) திட கார்பன் டை ஆக்ஸைடு

199. பின்வருவனவற்றுள் எது விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு வரும் நோய்?

(அ) தொழுநோய் (ஆ) தொண்டை அடைப்பான் (இ) ரேபிஸ் (ஈ) அமீபியாசிஸ்

200. “பூமியில் உயிரிகளின் வாழ்க்கையானது சூரிய சக்தியால் இயங்குகின்றது” இந்தக் கூற்று பின்வரும் எந்த காரணத்தால் உண்மையாகிறது?

(அ) உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் சூரிய ஒளியினை மின்சார தயாரிப்பிற்காக பயன்படுத்துகின்றன.

(ஆ) சூரிய மின்சாரம் மற்றைய எரிபொருள்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.

(இ) தாவரங்கள் சூரிய ஒளியின் மூலம் ஒளிச்சேர்க்கை செய்கின்றன.

(ஈ) சூரிய கதிர்கள் பூமியில் உள்ள நோய் பரப்பும் கிருமிகளை நீக்குகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!