Tnpsc

Tnpsc Group 4 Result 2018 Will be released in Last Week Of July

Tnpsc Group 4 Result 2018 Will be released in Last Week Of July

குரூப் 4 தேர்வு ஜூலை கடைசி வாரத்தில் ரிசல்ட் வெளியீடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: நிலுவையிலுள்ள போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிடும் தோராய கால அட்டவணையினை தேர்வாணையம் அதன் இணையதளமான www.tnpsc.gov.inல் விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளது. 2018ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

Tnpsc Group 4 Result 2018

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 13, 14, 15ம் தேதி குரூப் 1 பதவியில் 85 காலி பணியிடங்களை  நிரப்புவதற்கான மெயின் தேர்வு நடத்தப்பட்டது. இந்த மெயின் தேர்வு ரிசல்ட் செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும். கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி 9351 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Tnpsc Group 4 Result 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!