Answer KeyTnpsc Answer Key

Tnpsc Group 1 Exam Previous Questions Answer Key 2022 – General Studies in Tamil

Tnpsc Group 1 Exam Previous Questions Answer Key 2022 – General Studies in Tamil

1. சிகரெட் புகையில் உள்ள முதல்நிலை மாசு

(அ) கார்பன் மோனாக்சைடு மற்றும் டைஆக்சைடு

(ஆ) கார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின்

(இ) கார்பன் மோனாக்சைடு மற்றும் பென்சின்

(ஈ) டைஆக்சிசைன் மற்றும் பென்சின்

2. பந்தை மேலே எறியும்போது அது மேலே செல்கிறது. அப்பொழுது பந்தில் கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கிறது?

1. நிலையாற்றல் (அ) சாத்தியமான ஆற்றல்.

2. உந்தம்.

3. இயக்க ஆற்றல்

(அ) 1 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 மட்டும் (இ) 2 மட்டும் (ஈ) 2 மற்றும் 3 மட்டும்

3. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், மக்கள்/ஜன தொகையைச் சரி செய்ய வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தங்களைக் குறிக்கின்றன என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது

(அ) மாறிவரும் சூழலில் உயிரினங்கள் தொகை அதிகரிக்கும்.

(ஆ) மாறிய சூழலுக்கு ஏற்ப மாறாத உயிரினங்கள் அழிந்து போக நேரிடும்

(இ) சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்கள் உருவ அமைப்பை மாற்றிக் கொள்ளும்

(ஈ) தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தத்தின் கீழ் உயிரினங்கள் சூழலை மாற்றும்

4. DNA-வை இரண்டு இழைகளாக பிரிப்பதில் ஈடுபடும் நொதி யாது?

(அ) டெலோமரேஸ் (ஆ) ஹெலிகேஸ் (இ) பாலிமெரேஸ் (ஈ) லிகேஸ்

5. விதை முளைத்தலின் முதல் நிலையாக நீர் உறிஞ்சப்படும் போது, இது எதை தூண்டுகிறது?

(அ) முளை குருத்து தூண்டப்படுகிறது (ஆ) விதை உறக்கம் தடைபடுகிறது

(இ) விதைவேர் வளர்கிறது (ஈ) செல் இயக்கம் துவங்குகிறது

6. பீனாலை விட வலிமை மிகு மற்றும் மூன்று அதே எலக்ட்ரான் கவர் திறன் கொண்ட தொகுதிகள் பெற்றுள்ள அமிலம் எது?

1. O-டொலியிக் அமிலம்

2. பென்சாயிக் அமிலம்

3. சாலிசிலிக் அமிலம்

4. பிக்ரிக் அமிலம்

(அ) 3 மட்டும் (ஆ) 1 மட்டும் (இ) 2 மற்றும் 4 மட்டும் (ஈ) 4 மட்டும்

7. அறிவியல் வரலாற்றினைக் கற்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒன்று

(அ) பழம்பொருள் மீது ஆர்வம் (ஆ) தர்க்க ரீதியாகக் காரணங்காணல்

(இ) அறிவியல் அறிவு (ஈ) தத்துவத்துடன் இணைப்பு

8. கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?

(அ) கரியமில வாயு (ஆ) எல்-நினோ (இ) வெப்பமண்டல சூறாவளி (ஈ) இட்டாய்-இட்டாய்

9. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:

அ. பாலி எதிலின் கிளைகால் 1. களைக்கொல்லி

ஆ. Bt நச்சுகள் 2. அழுத்த சகிப்புத்தன்மை

இ. கிளைபோசேட் 3. பூச்சிக்கொல்லி

ஈ. புரோலின் 4. உயிரணு இணைவு

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 2 1 4 3

இ. 4 1 3 2

ஈ. 4 3 1 2

10. கீழ்க்காண்பவற்றுள் எது/எவை சரியான கூற்று ‘NANOBOT’ நானோபாட் எனப்படுவது

1. ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய உதவும் நானோமீட்டர் அளவிலான ரோபோ ஆகும்.

2. இவற்றை இரத்த நாளங்களில் உட்புகுத்தலாம்.

3. இவற்றை சுற்றுச்சூழலில் உள்ள நச்சுப் பொருட்களை அளவிட பயன்படுத்தலாம்.

4. இவற்றை உற்பத்தி செய்வது மிக மலிவானது.

(அ) 1,2 மற்றும் 4 (ஆ) 1,3 மற்றும் 4 (இ) 1,2 மற்றும் 3 (ஈ) 1,2,3 மற்றும் 4

11. கால நிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி —— ஆகும்

(அ) சூரிய ஒளி நகரங்கள் திட்டம் (ஆ) தேசிய சூரிய ஒளி பணி

(இ) சூரிய ஒளி பச்சை கட்டிடம் (ஈ) சூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி

12. இந்தியாவில் உள்ள எந்த பல்லுயிர்ப் பூங்கா, முதலாவது பயனுள்ள பகுதி சார்ந்த பாதுகாப்பு தளமாக (OECMs) அறிவிக்கப்பட்டுள்ளது.

(அ) தில்பத் பள்ளத்தாக்கு பல்லுயிர்ப்பூங்கா (ஆ) ஆரவல்லி பல்லுயிர்ப்பூங்கா

(இ) யமுனா பல்லுயிர்ப்பூங்கா (ஈ) அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா

13. பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?

1. KVK – கிசான் விஞ்ஞான் கேந்ரா

2. SAME – வேளாண் விரிவாக்கத் துணை நடவடிக்கை.

3. NSDA – தேசிய திறன் மேம்பாட்டு முகமை.

4. ATMA – விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை.

(அ) 1,2 மற்றும் 3 (ஆ) 2,3 மற்றும் 4 (இ) 1,3 மற்றும் 4 (ஈ) 1,2,3 மற்றும் 4

14. இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?

(அ) 82 (ஆ) 78 (இ) 75 (ஈ) 70

15. PM கதிசக்தி என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மாற்று அணுகு முறையாகும் இது ———-இல் கவனம் செலுத்துகிறது

(அ) கல்வி வளர்ச்சி (ஆ) பன்முக இணைவு (இ) ன் அதிகாரம் (ஈ) சுற்றுப்புற சூழ்நிலை வளர்ச்சி

16. கீழ்க்காண்பவற்றுள் எது “பேட்டி பச்சோ, பேட்டி பத்தோ” எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் நோக்கம் கிடையாது?

1. பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்.

2. பெண் குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்.

3. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்.

4. சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்

(அ) 1 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 (இ) 3 மட்டும் (ஈ) 4 மட்டும்

17. கீழே கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவி அலுவலர்களின் பட்டியலைக் கவனித்து அவர்கள் பதவியின் அடிப்படையிலான முன்உரிமைப் படிநிலைப் பட்டியலைக் கண்டறிக:

1. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.

2. மத்திய அமைச்சரவைச் செயலர்.

3. தலைமை இராணுவ அதிகாரி.

4. மக்களவை துணைத் தலைவர்

(அ) 4,3,1 மற்றும் 2 (ஆ) 4,3,2 மற்றும் 1 (இ) 1,4,2 மற்றும் 3 (ஈ) 1,3,4 மற்றும் 2

18. சூரிய ஆற்றல் பயன்பாடுகளில் பொதுவாக உள்ள சவால்களை தீர்ப்பது குறித்து கூட்டாக விவாதிக்க உருவான – சூரிய வளம் மிகுந்த நாடுகளின் கூட்டமைப்பு எது?

(அ) சர்வதேச சூரிய ஆற்றல் சமூகம் (ISES)

(ஆ) சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA)

(இ) சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமை (IRENA)

(ஈ) சர்வதேச ஆற்றல் முகமை (IEA)

19. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின்வரும் இந்திய மகளிரை காலவரிசைப்படி முறைப்படுத்தவும்:

1. சைனா நெவால்.

2. லவ்லீனா பொர்கோகைன்.

3. சாஷீ மாலிக்

4. கர்ணம் மல்லேஸ்வரி

(அ) 2,4,1,3 (ஆ) 1,4,2,3 (இ) 4,1,3,2 (ஈ) 4,1,2,3

20. பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது

(அ) நிலநடுக்கம் (ஆ) எரிமலை (இ) வறட்ச்சி (ஈ) வெள்ளம்

21. ISRO தொடர்பான கீழ்காண்பவற்றை பொருத்தி மற்றும் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

அ. URSC 1. ISRO வின் விர்ச்சுவல் ஸ்பேஸ் மியூசியம்

ஆ. ITTP 2. ISRO துணைக்கோள் நிலையம்

இ. SPARK 3. பள்ளி மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல்.

ஈ. YUVIKA 4. ISROவின் பணியாளர்களுக்கான தொழில் நுட்பப் பயிற்சி

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 3 1 4 2

இ. 2 4 1 3

ஈ. 4 3 2 1

22. இந்திய முக்கோணவியல் ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 10,1802ஆம் ஆண்டு —— நகரில் தனது ஆய்வினைத் தொடங்கியது

(அ) டில்லி (ஆ) கல்கத்தா (இ) பம்பாய் (ஈ) மதராஸ்

23. கரோலின் பெர்டோஸி மோர்டன் மெல்டல் மற்றும் பேரி ஷார்க்லர்ஸ் ஆகியோர் 2022ஆம் ஆண்டுக்கான வேதியியலின் எதற்காக நோபல் பரிசை வென்றார்?

(அ) கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்கா

(ஆ) அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக

(இ) சமச்சீரற்ற ஆர்கனோகாடலிசிஸின் வளர்ச்சிக்காக

(ஈ) மரபணு எடிட்டிங் முறையின் வளர்ச்சிக்காக

24. காமன் வெல்த் 2022 விளையாட்டில் பதக்கம் வென்றவர்களை அவர்களது விளையாட்டுடன் பொருத்துக:

விளையாட்டு வீரர் விளையாட்டு

அ. ஷேரட் கமல் 1. குத்துசண்டை

ஆ. லக்ஸியா சென் 2. பளு தூக்குதல்

இ. மீராபாய் சானு 3. மேஜை பந்து

ஈ. நிக்கட் ஷரின் 4. பூ பந்து

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 3 4 2 1

இ. 4 2 1 3

ஈ. 2 3 4 1

25. பின்வருவனவற்றில் எந்த ஒரு குறிகாட்டி மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிட பயன்படுத்தப்படுவதில்லை?

(அ) வாழ்நாள் கால அளவு (ஆ) நுகர்வோர் விலை குறியீடு

(இ) கல்வி குறியீடு (ஈ) தனிநபர் வருமானம்

26. “Nambikkai Inaiyam (NI)” தமிழ்நாடு அரசு திட்டம் பற்றியது

(அ) மாநில முழுவதும் Block chain உள்கட்டமைப்பு

(ஆ) தமிழ்நாட்டிற்கான குடியுரிமை தரவுகளின் ஆதாரம்

(இ) பல்வேறு அரசாங்கத் துறைகளின் e-சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகல்

(ஈ) முடிவெடுப்பவர்களுக்கு தொழில்துறை வளங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்

27. எது சரியானது?

1. HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்.

2. MSP – அதிகபட்ச ஆதரவு விலை.

3. PDS – பொது விநியோக முறை.

4. IPM – ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை

(அ) 1,2 மற்றும் 4 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 மட்டும்

(இ) 1,2 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,3 மற்றும் 4 மட்டும்

28. கலைஞரின் அனைத் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கம்:

1. சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்தல்.

2. தோடர்ந்து நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல்.

3. புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் முறையை மாற்றுதல்.

4. நீர் ஆதாரங்களை பெருக்குதல்

(அ) 1,2 மற்றும் 3 ஆகியவை சரி (ஆ) 2,3 மற்றும் 4 ஆகியவை சரி

(இ) 1,2 மற்றும் 4 ஆகியவை சரி (ஈ) 1,2,3 மற்றும் 4 ஆகியவை சரி

29. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

அ. 1997 1. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

ஆ. 1998 2. வரும்முன் காப்போம் திட்டம்

இ. 2006 3. சமத்துவபுரம்

ஈ. 2009 4. நமக்கு நாமே திட்டம்

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 4 3 2 1

இ. 4 1 2 3

ஈ. 3 1 4 2

30. இந்திய அரசின் பின்வரும் திட்டங்களுள் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வது எது?

(அ) ஸ்மைல் (ஆ) நமஸ்தே (இ) அம்பர் (ஈ) வெஸ்ட்

31. எந்த காலகட்டத்தில் நான்கு கைகளுடன் கூடிய நடராஜரின் வெண்கலச் சின்னங்கள் வார்க்கப்பட்டன?

(அ) சேரர் காலம் (ஆ) சோழர் காலம் (இ) பாண்டியர் காலம் (ஈ) சுங்க காலம்

32. பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக:

அ. மத்ராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம் 1. 1882

ஆ. தமிழ்நாடு வனச்சட்டம் 2. 1980

இ. வன பாதுகாப்புச் சட்டம் 3. 1972

ஈ. வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 4. 1873

அ ஆ இ ஈ

அ. 1 4 3 2

ஆ. 4 1 2 3

இ. 2 3 1 4

ஈ. 3 2 4 1

33. டாக்டர்.முத்துலெக்டமி ரெட்டியைப் பொறுத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?

1. இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.

2. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.

3. மகாராஜ கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.

4. சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.

(அ) 1,2 மற்றும் 3 (ஆ) 2,3 மற்றும் 4 (இ) 1,3 மற்றும் 4 (ஈ) 1,2,3 மற்றும் 4

34. தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் (சட்டதிருத்த மசோதா) சட்டம் 2016ன் சிறப்பம்சம்

(அ) மூன்றடுக்கு முறையில் மாற்றப்பட்டது

(ஆ) மாவட்ட திட்டக் குழுக்களை அமைத்தது

(இ) குறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு மாற்ப்பட்டது

(ஈ) 50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது

35. ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது “திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை” வெளியிட்டவர்

(அ) வீரபாண்டிய கட்டபொம்மன் (ஆ) வேலு நாச்சியார்

(இ) மருது சகோதரர்கள் (ஈ) புலித்தேவர்

36. பொருத்துக:

பெயர் தொடர்புடையது

அ. சுவாமி சகஜாநந்தா 1. அப்ரஸ்டு ஹின்டுஸ்

ஆ. M.C.ராஜா 2. தமிழன்

இ. பண்டிட் அயோத்திதாசர் 3. நந்தனார் கல்விக் கழகம்

ஈ. வீரேசலிங்கம் 4. வுpதவை இல்லம்

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 1 3 2 4

இ. 1 2 3 4

ஈ. 4 1 2 3

37. கூற்று(A): எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது

காரணம் (R): கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக நாட்டின் எதிர் காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R) (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்மல

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது

38. பின்வரும் நிறுவனங்களில் எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின்படி ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது?

(அ) IIT, சென்னை (ஆ) IISC, பெங்களுர் (இ) AIIMS, டெல்லி (ஈ) IIT, மும்பை

39. பொருத்துக:

திணை கடவுள்

அ. குறிஞ்சி 1. காளி

ஆ. முல்லை 2. முருகன்

இ. மருதம் 3. இந்திரன்

ஈ. பாலை 4. திருமால்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 1 3 4 2

இ. 1 4 3 1

ஈ. 4 2 3 1

40. காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?

(அ) மதுரை (ஆ) வேதாரண்யம் (இ) சேலம் (ஈ) திருச்செங்கோடு

41. பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகள் பற்றிய உண்மையான கூற்று எது?

1. இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை 1865-ல் ஆரம்பித்தார்.

2. இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்.

3. இராமலிங்க அடிகள் 1867-ல் சத்ய தர்ம சாலையை நிறுவினார்

(அ) 1 மட்டும் உண்மையானது (ஆ) 1 மற்றும் 3 மட்டும் உண்மையானது

(இ) 1,2 மற்றும் 3 உண்மையானது (ஈ) 1 மற்றும் 2 மட்டும் உண்மையானது

42. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) பிரதாப முதலியார் சரித்திரம்-வேதநாயகம் பிள்ளை (ஆ) சுகுண சுந்தரி-நடேச சாஸ்திரி

(இ) கமலாம்பாள் சரித்திரம்-ராஜம் அய்யர் (ஈ) பதமாவதி சரித்திரம்-மாதவையா

43. ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன்முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள் யார்?

(அ) நாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்

(ஆ) நாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

(இ) கண்ணம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி (ஈ) மணியம்மையார் மற்றும் நாகம்மையார்

44. சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நிழல் தாங்கல்கள் -வைகுண்ட சுவாமிகள்.

2. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் -ராஜாராம் மோகன் ராய்.

3. சுமரச சன்மார்க்க சங்கம் -வள்ளலார்.

4. சுயமரியாதை அறம் -வேதநாயகம் பிள்ளை

(அ) 1 மற்றும் 3 (ஆ) 1 மற்றும் 2 (இ) 1 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 4

45. கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க:

சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு

(அ) கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது

(ஆ) ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை

(இ) கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்

(ஈ) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

46. பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

பட்டியல்-I பட்டியல்-II

அ. உலகம் சுற்றும் தமிழன் 1. தேசியக் கவி

ஆ. ஞானரதம் 2. சுவாமிநாதன்

இ. தண்ணீர் தண்ணீர் 3. வெ.இராமலிங்கம்

ஈ. என்கதை 4. ஏ.கருப்பன்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 1 3 4

இ. 3 4 2 1

ஈ. 4 1 2 3

47. “மாரிவறம் கூறின் மன்னுயிர் இல்லை

மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்”

– என யார்? யாருக்கு உரைத்தது?

(அ) மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு (ஆ) சுதமதி உதயகுமரனுக்கு

(இ) தீவதிலகை மணிமேகலைக்கு (ஈ) மணிமேகலை உதயகுமரனுக்கு

48. “ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு”

-எனச் சாவு உணர்த்தும் நிலையாமையை எடுத்துக் கூறியவர் யார்?

(அ) அப்பர் (ஆ) திருமூலர் (இ) சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர்

49. கீழ்க்காணும் கூற்றுக்களுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:.

1.பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்.

2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்.

(அ) இவ்விரண்டு வரிகளும் அரசரின் பெருமையைப் பேசுகின்றன.

(ஆ) இவ்விரண்டு வரிகளும் வள்ளலின் பெருமையைப் போற்றுகின்றன

(இ) இவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன.

(ஈ) இவ்விரண்டு வரிகளும் பணிவுள்ளவனின் பண்பைப் போற்றுகின்றன

50. “நாடாகொன்றோ காடாகொன்றோ

அவ்வழி நல்லை வாழிய நிலனே”

மேற்காணும் புறநானூற்றுப் பாடல் உலக மேம்பாட்டிற்கு யாரின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கூறுகின்றது?

(அ) பெண்டிர் (ஆ) ஆடவர் (இ) அரசர் (ஈ) அந்தணர்

51. சங்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?

(அ) ஆடிப்பூரம் (ஆ) ஓணம் (இ) நவராத்திரி (ஈ) திருவாதிரை

52. “கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்”

– இக்குறள் யாருக்கு அறிவுரை கூறுகிறது?

(அ) காவலர்கள் (ஆ) தூதுவர்கள் (இ) அமைச்சர்கள் (ஈ) வேந்தர்கள்

53. பின்வருவனவற்றைப் பட்டியல் I-றோடு பட்டியல் II-னைப் பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. திருமுருகாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார்

ஆ. பொருநராற்றுப்படை 2. நக்கீரர்

இ. சிறுபாணாற்றுப்படை 3. கபிலர்

ஈ. குறிஞ்சிப்பாட்டு 4. நல்லூர் நத்தத்தனார்

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 1 2 4 3

இ. 2 1 4 3

ஈ. 3 2 1 4

54. கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணின் மதிப்பை காண்க:

A picture containing engineering drawing

Description automatically generated

(அ) 8 (ஆ) 64 (இ) 216 (ஈ) 25

55. 0.15, 0.015, 0.0015, —- என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொதுவிகிதம் காண்க:

(அ) 0.1 (ஆ) 0.01 (இ) 0.001 (ஈ) 1

56. கூடுதல் காண்க: 12+ 22 +—— +192

(அ) 2500 (ஆ) 2400 (இ) 2470 (ஈ) 2570

57. A ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். B அதே வேலையை முடிக்க A எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?

(அ) 19 (ஆ) 16 (இ) 27 (ஈ) 25

58. உலோகத்தால் ஆன ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ அதனை உருக்கி 18 செ.மீ நீளம் மற்றும் 16 செ.மீ. அகலமும் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனச் செவ்வகத்தின் உயரத்தைக் காண்க:

(அ) 6 செ.மீ (ஆ) 7 செ.மீ (இ) 8 செ.மீ (ஈ) 10 செ.மீ

59. 20% ஆண்டு வட்டியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் ரூ.16,000க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது

(அ) ரூ.2,599 (ஆ) ரூ.2,572 (இ) ரூ.2,522 (ஈ) ரூ.2,502

60. அசல் ரூ.10,000 ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் ரூ.2,000 வட்டியைப் பெற்றுத் தரும்?

(அ) 2 ஆண்டுகள் (ஆ) 5 ஆண்டுகள் (இ) 6 ஆண்டுகள் (ஈ) 3 ஆண்டுகள்

61. ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தை 2 மணி 30 நிமிடங்களில் கடக்கும், அதே வேகத்தில் 210 கி.மீட்டரைக் கடக்க ஆகும் நேரம்

(அ) 5 மணி 50 நிமிடங்கள் (ஆ) 5 மணி 30 நிமிடங்கள்

(இ) 5 மணி 20 நிமிடங்கள் (ஈ) 6 மணி 50 நிமிடங்கள்

62. இரண்டு நேர் வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3:2 என்க: மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5:3 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்

(அ) 5:2 (ஆ) 5:3 (இ) 3:2 (ஈ) 2:5

63. x4+3x3+5×2+26x+56 மற்றும் x4+2x3-4x2-x+28 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ x4+5x+7 எனில் அவற்றின் மீ.பொ.ம-ன் மதிப்பு ——– ஆகும்

(அ) (x2+2x+8) (x4+2x3-4x2-x+28) (ஆ) (x2+2x+8) (x4+2x3-4x2-x+28)

(இ) (x2-2x+8) (x4+2x3-4x2-x+28) (ஈ) (x2-2x+8) (x4+2x3-4x2-x+28)

64. பின்வருவனவற்றுள் எந்த ஒரு சோடி எண்கள் சார்பகா எண்கள்?

(அ) (16,62) (ஆ) (18,25) (இ) (21,35) (ஈ) (23,92)

65. தேயிலையின் விலை 20% அதிகரிக்கும்போது தேயிலை பயன்பாட்டின் செலவு மாறாமல் இருக்க தேயிலை பயன்பாட்டினை எத்தனை சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்?

(அ) 15 2/3% (ஆ) 16 2/3% (இ) 17 2/3% (ஈ) 18 2/3%

66. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். ஆவள் பெற்றது 576 மதிப்பெண்கள், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க:

(அ) 640 (ஆ) 680 (இ) 720 (ஈ) 700

67. கூற்று (A): கற்பித்தல் – கற்றல் செயல்முறையின் முழுமையான மறுசீரமைப்பிற்காக, புதிய கல்விக்கொள்கை, பாரம்பரிய ஆசிரியர் மையமாக இருந்த கற்றல், கற்பவரின் மைய அணுகுமுறையாக உருவாகின்றது.

காரணம்: புதிய கல்வி கொள்கையில் மாணவர்களின் ஆக்கபூர்வதிறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.

(அ) என்பது சரி ஆனால் என்பது தவறு

(ஆ) என்பது தவறு, ஆனால் என்பது சரி

(இ) மற்றும் இவை இரண்டும் சரி மற்றும் என்பது யின் சரியான விளக்கம்

(ஈ) மற்றும் இவை இரண்டும் சரி ஆனால் என்பது யின் சரியான விளக்கமல்ல

68. “மண்வளத்தை மேம்படுத்துதல்” மற்றும் “மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்துதல்” – இக்கூற்றுடன் தொடர்புடைது

(அ) பசுமைப்புரட்சி (ஆ) நீலப்புரட்சி (இ) பசுமையான புரட்சி (ஈ) மஞ்சள் புரட்சி

69. எந்தச் சட்டங்கள் சூழ்நிலைக் கருதி மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் கூறுகின்றன.

(அ) சரத்து 368 மற்றும் 313 (ஆ) சரத்து 356 மற்றும் 363

(இ) சரத்து 365, 256 மற்றும் 257 (ஈ) சரத்து 349 மற்றும் 350

70. இந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது.

1. குறைந்த தலா வருமானம்.

2. உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை.

3. மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்.

4. வேலை வாய்ப்பில் சிக்கல்கள்.

(அ) 1 மற்றும் 2 சரியானவை (ஆ) 1 மற்றும் 3 சரியானவை

(இ) 2 மற்றும் 3 சரியானவை (ஈ) 2 மற்றும் 4 சரியானவை

71. இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளாவன:

1. நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டு வெளியிடுதல்.

2. அரசாங்கத்திற்கு வங்கியாளராக செயல்படுதல்.

3. நாட்டில் கடன் முறைகளை ஒழுங்குபடுத்துதல்

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 மட்டும்

(இ) 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 3 மட்டும்

72. எத்தனை ஜோடிகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளன?

தடுப்பூசி செயல்

1. Pfizer – mRNA தடுப்பூசி

2. Covishield – DNA அடிப்படையிலான தடுப்பூசி

3. Covaxin – செயலிழந்த தடுப்பூசி

4. Sputnik.V – வைரல் வெக்டர் தடுப்பூசி

(அ) 1 ஜோடி (ஆ) 2 ஜோடிகள் (இ) 3 ஜோடிகள் (ஈ) 4 ஜோடிகள்

73. இந்தியா ஒரு மதச்சாப்பற்ற நாடு, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது மற்றும் அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குகிறது என 1961ல் நேரு எழுதினார். அதை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் “மக்களாகிய நாம் கண்ணுக்கு தெரியாத ஆவியின் யதார்த்ததையோ அல்லது வாழ்க்கைக்கு மதங்களின் பொருத்தத்தையோ நிராகரிக்கிறோம், அல்லது மதத்தை உயர்த்துகிறோம், என்று அர்த்தமல்ல மதச்சார்பின்மையே ஒரு நேர்மறையான மதமாக மாறுகிறது அல்லது அரசு தெய்வீக உரிமைகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் இல்லை” என்று வெளிப்படுத்தினார்.

பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது?

(அ) இந்திய மதச்சார்பின்மை என்பது ஒரு மத,மதச்சார்பற்ற அல்லது மதத்திற்கு எதிரானது.

(ஆ) இந்திய மதச்சார்பின்மை மதவாதத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது

(இ) இந்திய மதச்சார்பின்மை பொது வெளியில் மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவில்லை

(ஈ) இந்திய மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் சமமாகக் கருத வேண்டிய அவசியமில்லை

74. தமிழ்நாடு மாநிலம் பின்வரும் கொள்கை/கொள்கைகளில் எதை பெற்றுள்ளது?

1. தமிழ்நாடு R மற்றும் D பாலிசி.

2. தமிழ்நாடு Life Science Pormotion பாலிசி.

3. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் பாலிசி.

4. தமிழ்நாடு ஃபின்டெக் பாலிசி

(அ) 1,3 மற்றும் 4 (ஆ) 1 மற்றும் 3 (இ) 1,2 மற்றும் 3 (ஈ) 1,2 மற்றும் 4

75. பின்வருவனவற்றில் எசை சரியாகப் பொருந்தியுள்ளன?

1. நியூ இந்தியா மற்றும் காமன்வீல் – திருமதி.அன்னிபெசன்ட் அம்மையார்.

2. கேசரி மற்றும் மராத்தா – பாலகங்காதர திலகர்.

3. இந்தியர் கருத்து – கோபால் ஹரி தேஷ்முக்.

4. இந்து பிரகாஸ் – மகாத்மா காந்தி

(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 மற்றும் 4 (இ) 1 மற்றும் 3 (ஈ) 3 மற்றும் 4

76. கீழ்க்கண்ட வாக்கியங்களில் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

1. இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு.

2. இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது.

3. மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி.லஷ்மிநரசு ஷெட்டி.

4. மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச் சார்லு

(அ) 3 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 மட்டும் (இ) 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 2 மற்றும் 4 மட்டும்

77. வடக்கு அரைக்கோளத்தில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி எந்த திசையில் காற்று சுழலும்

(அ) கடிகாரச்சுற்று (ஆ) நேராக (இ) எதிர்கடிகாரச் சுற்று (ஈ) வட்டமாக

78. ப்ளாக் செயின் டெக்னாலஜியின் தூண்கள் எவை?

1. வெளிப்படைத் தன்மை

2. மாறுதல் இல்லாதது.

3. பரவலாக்குதல்

(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 மற்றும் 3 (இ) 2 மற்றும் 3 (ஈ) 1,2 மற்றும் 3

79. கீழ்க்காணும் சட்டங்களில் எது அடிமைகளின் பட்டயம் என ஜவஹர்லால் நேருவினால் விவரிக்கப்பட்டது?

(அ) இந்திய அரசாங்கச் சட்டம் 1909 (ஆ) இந்திய அரசாங்கச் சட்டம் 1919

(இ) இந்திய அரசாங்கச் சட்டம் 1935 (ஈ) இந்திய அரசாங்கச் சட்டம் 1947

80. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க “பூர்ண சுயராஜ்” அறிக்கையை வெளியிட்டது.

(அ) 1907 சூரத் (ஆ) 1920 நாக்பூர் (இ) 1929 லாகூர் (ஈ) 1940 கராச்சி

81. 1930ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமறுப்பு இயக்கத்தினை நடத்த செயற்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

(அ) C.இராஜகோபாலாச்சாரியார் (ஆ) S.சத்தியமூர்த்தி

(இ) T.S.S.இராஜன் (ஈ) T.பிரகாசம்

82. வன விலங்குகளைப் பாதுகாக்கும் நீண்ட கால வழிமுறைகளின் தொடர் அம்சங்கள் என்பவை:

1. தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், உயிர்க்கோள காப்பகங்கள் ஆகியவற்றில் வேட்டையாடுவது தடை செய்யப்பட வேண்டும்.

2. மேலும் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நிறுவப்பட வேண்டும்.

3. வனவிலங்குகளின் சிறைப்பட்ட இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது

(அ) 1 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும் (இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 1 மற்றும் 3 மட்டும்

83. உயிரியல் நிகழ்தகவுக்கு மாறாக, முதன்மையாக புள்ளிவிவர முக்கியத்துவத்தின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாசுபாட்டின் விளைவின் சுற்றுச்சூழல் அல்லது உயிரியல் முக்கியத்துவத்தை ஒதுக்குதல்.

(அ) மால்தூசியன் கோட்பாடு (ஆ) சராசரி பயனுள்ள செறிவு

(இ) மால்ஸ்டிக் பொருத்தமின்மை (ஈ) அதிகபட்ச சாத்தியக்கூறு மதிப்பீடு

84. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019 பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?.

1. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அனைத்து வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.

2. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த 31 டிசம்பர் 2014க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் அல்லது கிறிஸ்துவ சமூகங்களின் உறுப்பினர்களுக்கு குடியுரிமை.

3. குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பதிலாக 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்.

4. குடிமக்களின் தேசிய பதிவேட்டை தயாரிப்பதில் CAA உதவும்.

(அ) 1 மற்றும் 2 சரி (ஆ) 2 மற்றும் 4 சரி (இ) 3 மற்றும் 4 சரி (ஈ) 2 மற்றும் 3 சரி

85. பின்வருவனவற்றுள் இந்திய இரயில்வே மண்டலம் குறித்து தவறாகப் பொருத்தப்பட்டுள்ள விடையைக் காண்க:

(அ) தெற்கு-சென்னை (ஆ) மத்தியபகுதி-ஜெய்பூர்

(இ) வடக்கு-புதுதில்லி (ஈ) கிழக்கு-கொல்கத்தா

86. பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்?

1. இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.

2. மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

3. தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன.

(அ) 1 மற்றும் 3 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 மட்டும் (இ) 1 மட்டும் (ஈ) 2 மற்றும் 3 மட்டும்

87. அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்

(அ) மன்னன் ஜான் (ஆ) முதலாம் இராணி எலிஸபெத்

(இ) இராணி விக்டோரியா (ஈ) அரசர் இரண்டாம் சார்லஸ்

88. மெடோஸ் டெய்லர் ——-ன் மரணம் பாஹ்மனி ஆட்சியின் “முடிவின் ஆரம்பம்” என்று கருதினார்.

(அ) மஹ்மத் கவான் (ஆ) அஹ்மத் ஷா (இ) மஹ்மத் ஷா (ஈ) ஹீமாயூன்

89. கால வரிசைப்படி அடுக்குக:

1.நேரு அறிக்கை

2. பூனா ஒப்பந்தம்

3. சைமன் குழு

4. கிரிப்ஸ் குழு

(அ) 1,2,3,4 (ஆ) 3,2,4,1 (இ) 3,1,2,4 (ஈ) 2,1,4,3

90. கீழ்வருவனவற்றில் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளன?

(அ) ஆரிப் குந்தாரி – தாரிக்-இ-அக்பரி

(ஆ) நிசாமுதீன் அகமது – தபகத்-இ-அக்பரி

(இ) அப்துல் காதர் பதௌனி – முந்தகப்-உட்-தவாரிக்

(ஈ) முகமது கான் – குலாசத் தவாரிக்

91. பின்வருவனவற்றைப் பொருத்துக:

(அ) காரோ 1. அஸ்ஸாம்

(ஆ) கூகி 2. மிசோரம்

(இ) தோடர் 3. தமிழ்நாடு

(ஈ) மிரி 4. அருணாச்சலப்பிரதேசம்

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 1 2 4 3

இ. 1 2 3 4

ஈ. 2 4 3 1

92. அமராவதியிலுள்ள ஸ்தூபி எதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு?

(அ) நகரப்பாணிக் கட்டிடக்கலை (ஆ) வேசரப்பாணிக் கட்டிடக்கலை

(இ) முகலாயக் கட்டிடக்கலை (ஈ) திராவிடக்கட்டிடக்கலை

93. கொடுக்கபட்டனவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வேதாந்திகள் – பிரம்மா

2. நையாயிகள் – அர்ஹத்

3. ஜைனர் – படைப்பாளர்

4. மீமாம்சகர் – கர்மா

(அ) 1 மற்றும் 4 சரியானவை (ஆ) 1 மற்றும் 2 சரியானவை

(இ) 2 மற்றும் 3 சரியானவை (ஈ) 3 மற்றும் 4 சரியானவை

94. சரியாகப்பொருந்தியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்

1. அரிஷ்-ஐ-முமாலிக் – பாதுகாப்பு அமைச்சர்

2. முஷ்ரிப்-ஐ-முமாலிக் – தலைமைக் கணக்காளர்

3. தாபிர்-ஐ-முமாலிக் – பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சர்

4. முஷ்தவ்பி-ஐ-முமாலிக் – தலைமைத் தணிக்கையாளர்

(அ) 1,2 மற்றும் 3 மட்டும் (ஆ) 2,3 மற்றும் 4 மட்டும்

(இ) 1,2 மற்றும் 4 மட்டும் (ஈ) 1,3 மற்றும் 4 மட்டும்

95. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கருதவும். தவறான கூற்றுகளைக் கண்டறியவும்.

1. சட்டமன்றம் இயற்றிய மசோதாவுக்கும் குடியரசு தலைவர் தன்னுடைய இசைவைத் தர அரசிலயமைப்புச் சட்டம் ஓர் எல்லையை வலியுறுத்தியுள்ளது.

2. சட்ட உறுப்பு 143-ன் கீழ் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா பற்றி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசிக்கலாம்.

3. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இயற்றிய மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் ஒரே மாதிரியாக அதிகாரத்தை கொண்டிருக்கிறார்.

4. பாராளுமன்றம் இயற்றிய மசோதா மீது குடியரசு தலைவர், கால வரையறையின்றி ஒப்புதல் தராமல் வைத்திருக்க முடியாது

(அ) 1 மற்றும் 4 மட்டும் தவறு (ஆ) 1 மற்றும் 3 மட்டும் தவறு

(இ) 2 மற்றும் 3 மட்டும் தவறு (ஈ) 3 மற்றும் 4 மட்டும் தவறு

96. எந்த அரசமைப்புத் திருத்தம் புதுச்சேரியை இந்திய ஒன்றியத்தில் சேர்த்தது?

(அ) பத்தாவது (ஆ) பன்னிரண்டாவது (இ) பதினான்காவது (ஈ) இருபத்தியிரண்டாவது

97. கீழ் உள்ளவற்றைக் காலவரிசைப்படுத்துக:

1. சர்க்காரியா ஆணையம்.

2. பல்வந்த்ராய் மேத்தா குழு.

3. ராஜமன்னார் குழு.

4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்

(அ) 2,3,1,4 (ஆ) 2,4,3,1 (இ) 2,4,1,3 (ஈ) 4,2,3,1

98. கீழே கொடுக்கப்பட்டுள்ள எது/எவை சரியானது?

1. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு 1948.

2. விதி 10இன் படி மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள்.

3. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் மொத்தம் 32 விதிகளைக் கொண்டது.

4. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது

(அ) 1,2,3 மற்றும் 4 (ஆ) 1,2 மற்றும் 3 (இ) 1 மற்றும் 4 (ஈ) 1,2 மற்றும் 4

99. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?

1. 26 ஜனவரி 2020 முதல் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை ஒரே பிரதேசமாக இணைக்கப்பட்டுள்ளன.

2. அரசியலமைப்பின் VII பகுதியில் உள்ள 239 முதல் 241 வரையிலான பிரிவுகள் யூனியன் பிரதேசங்கள் தொடர்பானவை.

3.முந்தைய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரண்டு யூனியன் பிரதேசங்கள், லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும்.

4. இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.

(அ) 1,2 மற்றும் 4 சரி (ஆ) 1 மற்றும் 3 சரி (இ) 2 மற்றும் 4 சரி (ஈ) 2,3 மற்றும் 4 சரி

100. கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

1. ஷரத்து 361 – நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றவியல்

நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்

2. ஷரத்து 352 – தேசிய நெருக்கடிகால பிரகடனம்

3. ஷரத்து 356 – மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி

4. ஷரத்து 360 – நிதி ஆணையம்

(அ) 1 மட்டும் (ஆ) 3 மட்டும் (இ) 1,2 மற்றும் 3 மட்டும் (ஈ) 4 மட்டும்

101. கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

அடிப்படை உரிமைகள் இவ்வாறாக விவரிக்கப்படுகிறது.

1. இந்திய மக்களின் உரிமைகளின் சாசனம்.

2. ஆரசியலமைப்பின் மனசாட்சி.

3. அரசியலமைப்பின் ஆன்மா.

4. ஆமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள் மசோதாவின் உத்வேகம்.

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும்

(இ) 1 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2,3 மற்றும் 4

102. மாநில மதலமைச்சர் தொடர்பான கீழ்க்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக:

பொருள் அரசமைப்பு விதி எண்

அ. ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு 1. 164

ஆ. அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள் 2. 166

இ. மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல் 3. 167

ஈ. மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட

முதலமைச்சரின் பணிகள் 4. 163

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 2 4 1 3

இ. 3 2 1 4

ஈ. 4 1 2 3

103. கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக:

குழு ஆண்டு

அ. தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கோஸ்வாமி குழு 1. 1993

ஆ. வோரா குழு அறிக்கை 2. 1998

இ. அரசின் நிதியளிப்பு மூலமாகத் தேர்தல்கள் பற்றிய இந்திரஜித் குப்தா குழு 3. 2008

ஈ. இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 4. 1990

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 3 2 1 4

இ. 2 4 3 1

ஈ. 4 1 2 3

104. மாநில ஆளுநரின் “நீதிமன்ற அதிகாரம்” குறித்துக் கீழ்க்கண்ட கூற்றைக் கருத்துக:

விருப்பத் தெரிவில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

துணிபு (A) : மன்னிப்பு அளிக்கும் அதிகாரம், 161-வது சட்ட உறுப்பின் கீழ், மிகவும் விரிவானது, அது எந்த எல்லையையும் கொண்டிருக்கவில்லை.

காரணம் (R): அவளோ/அவரோ, அறிவை நன்கு செலுத்தி ஆராயாத பொழுதும், உhயி நம்பகமான ஆவணங்களைப் பரிசீலிக்காத பொழுதும் அத்துமீறும் உணர்வுக்கு ஆட்பட்டிருக்கும் போது நீதிப்புனராய்வு என்பது சாத்தியமானதாகும்.

(அ) (A) சரி (R) தவறு

(ஆ) (R) சரி (A) தவறு

(இ) (A) வும் (R)வும் சரி ஆனால் (R) என்பது (A)வுக்குச் சரியான விளக்கமாகாது

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)க்குச் சரியான விளக்கமாகும்.

105. ஓர் உயிரி தனது புதிய வாழிடத்தில் தன்னை விரிவுபடுத்தும் செயல் என்பது

(அ) நிலைப்படுத்துதல் (ஆ) புலப்பெயர்ச்சி (இ) குடியிறக்கம் (ஈ) சகவினை

106. அறிவியலின் பின்வரும் பண்புகளில் எது உண்மையல்ல?

1. இது இயற்கை சட்டத்தால் வழி நடத்தப்படுகிறது.

2. இது காணக்கூடிய உலகத்திற்கு எதிராக சோதிக்கக்கூடியது.

3.இதன் முடிவுகள் நிரந்தரமானவை.

4. இது பொய்யாக்கக் கூடியது.

(அ) 2,3 மற்றும் 4 மட்டும் (ஆ) 3 மற்றும் 4 மட்டும் (இ) 3 மட்டும் (ஈ) 4 மட்டும்

107. ஒளியின் குவாண்டம் கொள்கை கீழ்க்காண்பவற்றுள் எத்தனைய விளைவை விளக்காது?

(அ) காம்டன் விளைவு (ஆ) ஒளிமின் விளைவு

(இ) உமிழ்வு நிறமாலை மற்றும் உட்கவர் நிறமாலை (ஈ) ஒளி அலைகளின் குறுக்கீட்டு விளைவு

108. LPG (சமையல் எரிவாயு) என்பது ——– கலவையாகும்.

(அ) C6H12 + C6H6 (ஆ) C4H10+C3H8 (இ) C2H4 + C2H2 (ஈ) C2H4 + CH4

109. கூற்று (A): உய்ய சிந்தனை, ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் முக்கிய காரணமாக அமைகிறது.

காரணம் (R): உய்ய சிந்தனை என்பது மதிப்பீடு மற்றும் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது மற்றும் அது பகுத்தறிவு தர நிலைகளின்படி செயல்படுகிறது. அந்த நம்பிக்கைகள் காரணங்களால் எவ்வளவு சிறப்பாக ஆதரிக்கப்படுகின்றன என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

(அ) (A) சரி ஆனால் (R) தவறு

(ஆ) (A) தவறு ஆனால் (R) சரி

(இ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும்

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல

110. பட்டியல் Iயை பட்டியல் IIஉடன் பொருத்துக:

பட்டியல் I – (நீரேறிய உப்பு) பட்டியல் II – (பயன்கள்)

அ. FeSO4 . 7H2O 1. ஜவுளித் தொழில்

ஆ. Na2CO3 . 10H2O 2. ஆய்வகக்காரணி

இ. CuSO4 . 5H2O 3. மோர்ஸ் உப்புத் தயாரித்தல்

ஈ. ZnSO4 . 7H2O 4. பூஞ்சைக் கொல்லி

உ. BaCl2 . 2H2O 5. கண்ணாடி தயாரித்தல்

அ ஆ இ ஈ உ

அ. 5 3 4 1 2

ஆ. 4 5 3 1 2

இ. 3 5 4 1 2

ஈ. 5 4 1 3 2

111. ZEBRA வை 2652181 என எழுதலாம் என்றால் COBRA எப்படி எழுதப்படும்?

(அ) 3102181 (ஆ) 3152181 (இ) 3182215 (ஈ) 3182181

112. வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடர்த்தியை அளவிட உபயோகிக்கும் கருவி

(அ) டோப்சோன் மீட்டர் (ஆ) பரோ மீட்டர் (இ) ஹைக்ரோ மீட்டர் (ஈ) அனிமோ மீட்டர்

113. உயிரினத்தை அவற்றின் தொடர்புடைய வரிசையுடன் சரியாகப் பொருத்தவும்

(அ) தேனீ 1. ஹாப்லோடாக்சைடியா

(ஆ) அட்டை 2. சைக்ளோஃபில்லிடியா

(இ) மண்புழு 3. ஹிருடினியா

(ஈ) நாடாபுழு 4. ஹைமனோப்டெரா

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 4 3 1

இ. 3 2 4 1

ஈ. 4 3 1 2

114. கீழ்காணும் கூற்றுகளில் உரங்கள் குறித்த தவறான கூற்று எது?

1. உரங்கள் நீரில் கரையாது இருத்தல் வேண்டும்.

2. உரங்கள் 10 முதல் 13 pHஐ பராமரித்ல் வேண்டும்.

3. உரங்கள் தாவரங்களுக்கு நச்சுக்களாக இருத்தல் கூடாது.

(அ) 3 மட்டும் (ஆ) 1 மற்றும் 2 (இ) 1,2 மற்றும் 3 (ஈ) 2 மட்டும்

115. லண்டன் பாலம் நடவடிக்கை என்பது

(அ) மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்

(ஆ) UK பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை

(இ) NATO நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சி

(ஈ) ரஷ்ய-உக்ரைன் போரின் போது வெளியேற்றல்

116. டாப்ளர் விளைவைப் பொருத்து கீழ்க்காணும் கூற்றுகளுள் எவை சரியானவை?

1. ஓளியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது.

2. ஓலியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது.

3. ஓளியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது.

4. ஓலியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது.

(அ) 1 மற்றும் 2 சரியானவை (ஆ) 1 மற்றும் 4 சரியானவை

(இ) 3 மற்றும் 4 சரியானவை (ஈ) 2 மற்றும் 3 சரியானவை

117. பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (PMUY)இன் முக்கிய நோக்கத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எந்த ஒன்று சரியானது?

(அ) சுகாதாரச் சேவை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலை கிராமப்புற மகளிருக்கு வழங்க வேண்டும்.

(ஆ) அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல்

(இ) சுத்தமான தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலை வழங்க வேண்டும்

(ஈ) சுத்தமான உணவு மற்றும் சுகாதாரத்தை வழங்க வேண்டும்

118. இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள மைய வங்கியின் மெய்நிகர் மின்னணு பணத்தின் அமைப்புகள் எவ்வாறானவை?

1. வங்கிக்கணக்கு அடிப்படையிலானது.

2. அடையாள வில்லை

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மற்றும் 2 (ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

119. MSMEஇன் துறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் பின்வரும் முக்கிய அம்சங்களைத் தொடங்கியுள்ளது.

1. கடன் அணுகல்.

2. சந்தை அணுகல்.

3. தொழில் நுட்ப மேம்படுத்துதல்.

4. MSMEஇன் துறை ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு.

குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையினைக் காண்க:

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 1,2 மற்றும் 3 மட்டும் (இ) 2 மற்றும் 4 மட்டும் (ஈ) 1,2,3 மற்றும் 4

120. பின்வருவனவற்றுள் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது? 1. இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது. 2. இந்த இயக்கமானது, தடுப்பணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது. 3. கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. 4. மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

(அ) 1 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும் (இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 4 மட்டும்

121. VVPAT எனும் சுருக்கப்பட்டச் சொல் குறிப்பது

(அ) வாக்காளர் வருகை வாக்கெடுப்பு நடைமுறை

(ஆ) வாக்காளர் தெளிவான பத்திரிக்கை தணிக்கை நடைமுறை

(இ) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை நடைமுறை

(ஈ) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதக் கணக்கு நடைமுறை

122. கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க:

(அ) நாயக் குழு 1. அமைப்பு சாரா துறை

(ஆ) தாராபூர் குழு 2. மத்திய-மாநில தொடர்பு

(இ) இராஜமன்னார் குழு 3. சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு கடன் கிடைப்பது

(ஈ) அர்ஜீன் சென் குப்தா குழு 4. மூலதன கணக்கு மாற்றுத் திறன்

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 1 2 4 3

இ. 3 4 2 1

ஈ. 3 2 1 4

123. கூற்று (A): இந்தியாவின் பாலைவனப் பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் “பெரிய பாலைவனம்” மற்றும் “சிறிய பாலைவனம்”

காரணம் (R): இந்த இரு பாலைவனங்களுக்கிடையே பாறை நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் முகடுகளால் வெட்டப்பட்ட ஒரு மண்டலம் உள்ளது

(அ) (A) கூற்று சரி ஆனால் (R) காரணம் தவறு

(ஆ) (A) கூற்று மற்றும் (R) காரணம் இரண்டும் சரி, மற்றும் (A) கூற்றுக்கான (R) காரணம் சரி

(இ) (A) கூற்று தவறு, (R) காரணம் சரி

(ஈ) (A) கூற்று மற்றும் (R) காரணம் இரண்டும் சரி, ஆனால் (A) கூற்றுக்கான காரணம் (R) தவறு

124. அயனி பேட்டரிகளுக்கு/மின்கலன்களுக்கு பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

(அ) பேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது.

(ஆ) பேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் கேத்தோடிலிருந்து ஆனோடிற்கு வெளியிடப்படுகிறது.

(இ) பேட்டரி மின்னேற்றம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது.

(ஈ) பேட்டரி மின்னேற்றம் அடையும்போது, Li-அயனிகள் கேத்தோடிலிருந்து ஆனோடிற்கு வெளியிடப்படுவதில்லை

125. மூவலூர் இராமாமிருதம் அம்மையார் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான பயனாளிகள்

(அ) அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்கள்

(ஆ) 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்

(இ) 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளியில் பயின்ற இளம்பட்ட வகுப்பு வரை பயிலும் மாணவியர்

(ஈ) பள்ளிக்கல்வி பயிலும் முதல் தலைமுறை மாணவியர் மட்டும்

126. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது பின்வருவனவற்றில் எது?

(அ) UV-A (ஆ) UV-C (இ) ஓசோன் படலம் (ஈ) மேல் உள்ளவை அல்ல

127. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் இந்தியாவின் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் எந்த சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்?

(அ) ஹைதராபாத் (ஆ) ஜோத்பூர் (இ) மைசூர் (ஈ) குவாலியர்

128. “எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் நோக்கங்களை பின்வரும் கூற்றுக்களில் எது சிறப்பாக விளக்குகிறது?

1. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

2. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

3. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

4. 2025ஆம் ஆண்டிற்க்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத, படிக்க மற்றும் எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

(அ) 1 மட்டும் (ஆ) 1,2 மற்றும் 3 மட்டும் (இ) 2 மற்றும் 4 மட்டும் (ஈ) 1 மற்றும் 4 மட்டும்

129. பின்வரும் பத்தியைப் படித்து அதை தொடர்ந்து வரும் வினாவிற்கு விடையளி:

மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மையே தொடர்ந்து உள்ளது. இது வாழ்க்கைத் தொழில் பாதுகாப்பையும் மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அளிக்கிறது. மாநிலப் பயிர் விளைச்சல் பிரகாசமாக இருக்கிறது. தென்மேற்குப் பருவமழைப் பொழிவு இயல்பாகவும் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இருந்ததால் நிலத்தடி நீர் குறிப்பிடத்தக்க அளவு மீள நிரம்பியது. மேலும் மாநிலத்தில் போதிய அளவு நீர் இருப்பு இருந்தது. இவையனைத்துக் காரணிகளும் சேர்ந்து நீர்பாசன சூழலை ஊக்கப்படுத்தியது. இதன் விளைவாக அதிக நிலங்கள் பயிரிடப்பட்டன. அரசும் போதிய வேளாண் உள்ளீடுகளைச் சரியான நேரத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கின. போதியளவு பயிர்க்கடன் சரியான நேரத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டது.

பின்வரும் எந்தச் சொற்றொடர் மேலே உள்ள பத்தியின் உட்கருத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது?

(அ) மாநில வேளாண்மையே மக்களுக்கு இன்றும் உயிர்ப்பாதையாக உள்ளது.

(ஆ) சரியான மழைப்பொழிவாலும், வேளாண் உள்ளீடுகள் மற்றும் கடன் வழங்கிய அரசின் முயற்சியாலும் வேளாண்மை செழிப்படைந்துள்ளது.

(இ) வேளாண் அபிவிருத்தியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன

(ஈ) வேளாண்மைக்கு நிலத்தடி நீரை மிகையாகப் பயன்படுத்துவது பிற துறைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

130.கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக:

சுகாதாரத் திட்டங்கள் குறிக்கோள்கள்

அ. தமிழ்நாடு சுகாதார அமைப்பு மறுகட்டமைப்புத் திட்டம் 1. நவீன மற்றும் உயர்தர சுகாதார

வசதிகளை

ஆ. தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் 2. நகர ஏழைகளின் ஆரோக்கியத்தை

உயர்த்த

இ. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் 3. சமூக-பொருளாதார அடுக்கில் கீழே

உள்ளவர்களின் ஆரோக்கியத்தை

உயர்த்த

ஈ. தமிழ்நாடு நகர சுகாதாரத் திட்டம் 4. SDG-3ஐ அடைய

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 2 4 1 3

இ. 4 1 2 3

ஈ. 3 2 4 1

131. மத்தியப் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2022ல் சேர்க்கப்பட்ட சரத்துகக்கள் எது?

1. கதி சக்தி விஷ்வவித்யலா நிறுவப்படல்.

2. இயற்பியல் அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குதல்.

3. மாநிலப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்துதல்.

4. போக்குவரத்து தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குதல்.

(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 மற்றும் 3 (இ) 1 மற்றும் 3 (ஈ) 1 மற்றும் 4

132. கூற்று (A): இந்திய அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இன மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துகிறது.

காரணம் (R): பொம்மை செய்தல், கூடை முடைதல், அகர்பத்தி மற்றும் பீடி சுற்றுதல், துணித் தையலகம், காலணி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் ஏழை மக்கள் துணை வருமானம் பெற அரசு உதவி செய்கிறது.

(அ) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு

(ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, காரணம் (R) கூற்று (A)க்கான சரியான விளக்கமாகும்

(இ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி

(ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, காரணம் (R) கூற்று (A) க்கான சரியான விளக்கமல்ல.

133. கூற்று (A): விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.

காரணம் (R): பொருளின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது

(அ) (A) கூற்று சரியானது. (R) காரணம் தவறானது

(ஆ) (A) கூற்று மற்றும் (R) காரணம் இரண்டும் தவறானது

(இ) (A) கூற்று சரியானது, ஆனால் (R) காரணம் சரியான விளக்கம் அல்ல

(ஈ) (A) கூற்று சரியானது, (R) காரணம் கூற்று (A)ன் சரியான விளக்கம்

134. சட்டம் தொடர்பான சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்:

1. விதி 371 – மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தொடர்பானது

2. விதி 371A – நாகாலாந்து மாநிலம் தொடர்பானது

3. விதி 371 D – ஆந்திரபிரதேச மாநிலம் தொடர்பானது

4. விதி 371 H – தமிழ்நாடு மாநிலம் தொடர்பானது

(அ) 2 மற்றும் 4 சரியானவை (ஆ) 2,3 மற்றும் 4 சரியானவை

(இ) 1 மற்றும் 4 சரியானவை (ஈ) 1,2 மற்றும் 3 சரியானவை

135. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

தலைவர் குழு

அ. காகா கலேகர் 1. பழங்குடியினர் முன்னேற்றம்

ஆ. சாக்சா 2. 7வது ஊதியக் குழு

இ. மண்டல் 3. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு

ஈ, ஜஸ்டிஸ் A.K.மாத்தூர் 4. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு

அ ஆ இ ஈ

அ. 1 3 4 2

ஆ. 4 1 3 2

இ. 1 4 3 2

ஈ. 3 2 4 1

136. மாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன:

1. மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப், பதவி உயர்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்.

2. மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவன திறனை அதிகரித்தல்.

3. வீடுதோறும் மனநல சேவைகளை எளிதாக்குதல்.

4. சமூக விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் பங்கேற்றல்

(அ) 1,2,3 மட்டும் (ஆ) 2,3,4 மட்டும் (இ) 1,2,4 மட்டும் (ஈ) 1,3,4 மட்டும்

137. பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கால வரிசைப்படி வரிசை படுத்தவும்:.

1. வைக்கம் சத்தியாகிரகம்.

2. ஓத்துழையாமை இயக்கம்.

3. கள்ளுக்கடை மறியல்.

4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்

(அ) 2,3,4,1 (ஆ) 2,4,3,1 (இ) 2,1,3,4 (ஈ) 4,2,3,1

138. கால வரிசைப்படி சரியானவற்றை தேர்ந்தெடுக/முறைப்படுத்துக:

(அ) இராஜாதிராஜன் I, பராந்தகன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I

(ஆ) குலோத்துங்கன் I, பராந்தகன் I, இராஜாதிராஜன் I, இராஜாதித்தியா I

(இ) பராந்தகன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I

(ஈ) பராந்தகன் I, இராஜராஜன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I

139. வடநூலாரின் “தத்துவ ஞானம்” என்னும் கருத்தை முன்னிறுத்தும் திருக்குறளின் அதிகாரத்தைக் கண்டறிக:

(அ) கொல்லாமை (ஆ) நிலையாமை (இ) துறவு (ஈ) மெய் உணர்தல்

140. பின்வரும் பட்டங்களில் பாண்டிய மன்னர்களுடன் தொடர்புடையது எது?

1. மீனவர்,

2.வில்லவர்,

3.குடவர்.

4. பஞ்சவர்

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மற்றும் 4 மட்டும் (ஈ) 2 மற்றும் 3 மட்டும்

141. “தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” எனப் பாடியவர் யார்?

(அ) திருஞான சம்பந்தர் (ஆ) திருநாவுக்கரசர் (இ) சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர்

142. எந்த தமிழ் கவிஞர் தேசியம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் உணர்வுகளை தூண்டினார்?

(அ) பாரதிதாசன் (ஆ) பாரதியார் (இ) சுதானந்த பாரதி (ஈ) கவிமணி

143. ராஷ்டிரகூடர்களின் தேசிய சின்னம் என்ன?

(அ) சிங்கம் (ஆ) தங்க கழுகு (இ) புலி (ஈ) யானை

144. கீழ்க்காண்பவற்றுள் எது மெய்யுணர்தலுக்கான செயல்பாடு இல்லை?

(அ) பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்

(ஆ) சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுதல்

(இ) ஐயத்தின் நீங்கித் தெளிதல்

(ஈ) சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது

145. “வேந்தர்க்கு ஒளியாவது” என்று திருக்குறள் எதனைக் கூறுகின்றது?

1. கொடை

2. அளி

3. செங்கோல் குடியோம்பல்

(அ) 1 மட்டும் (ஆ) 1,3 மட்டும் (இ) 1,2 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 3

146. பொருத்துக:

அ. தாருகன் 1. தேர்ச்சக்கரம்

ஆ. ஆழி 2. அரக்கன்

இ. நற்றிறம் 3. தேவர்

ஈ. இமையவர் 4. அறநெறி

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ, 2 1 4 3

இ. 3 1 2 4

ஈ. 4 3 2 1

147. அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும்தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக:

அ. தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி 1. ரோமானிய மட்பாண்டங்கள்

ஆ. கீழையூர் அகழ்வாராய்ச்சி 2. புத்த மத மையம்

இ. திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி 3. ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள

வணிக தொடர்வு

ஈ. உறையூர் அகழ்வாராய்ச்சி 4. காவேரியின் கலாச்சாரம்

அ ஆ இ ஈ

அ. 1 2 4 3

ஆ. 3 4 2 1

இ. 4 3 1 2

ஈ. 2 3 1 4

148. பின்வரும் கல்வெட்டுகளில் எந்தக் கல்வெட்டில் “மதுரா” என்னும் பழமையான சொல் குறிப்பிடப்பட்டுள்ளது?

(அ) சித்தர்மலை கல்வெட்டு

(ஆ) அழகர்மலை கல்வெட்டு

(இ) மாமண்டூர் கல்வெட்டு

(ஈ) பாத்திபுரலு கல்வெட்டு

(அ) அ மற்றும் ஆ மட்டும் (ஆ) அ மற்றும் இ மட்டும்

(இ) ஆ மற்றும் ஈ மட்டும் (ஈ) இ மற்றும் ஈ மட்டும்

149. “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்;

தருமம் மறுபடி வெல்லும்”

– பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் இதனைச் சொல்பவர் யார்?

(அ) பாஞ்சாலி (ஆ) கண்ணன் (இ) அர்ச்சுனன் (ஈ) தருமன்

150. பின்வரும் தொடரைப் படித்துச் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்:.

1. நாயக்க மன்னர்கள் ஆட்சியில் உருவான வியத்தகு அமைப்பு இசைத்தூண்கள் ஆகும்.

2. கல்லால் இசையை எழுப்பும் கலைஞர்களின் கைவண்ணம் கண்டு, பன்னாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.

3. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பல சிறு தூண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு சிறு தூணும் இசை ஒலி எழுப்புவதைக் காணலாம்.

4. இராமேஸ்வரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தூண்களில் ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம்.

(அ) 1,2 ஆகியவை மட்டும் சரி (ஆ) 1,2,3 ஆகியவை மட்டும் சரி

(இ) 1,2,3,4 அனைத்தும் சரி (ஈ) 1,2 மற்றும் 4 ஆகியவை மட்டும் சரி

151. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் சோழர்கள் பற்றிய சரியான வாக்கியத்தைக் கூறுக:

1. அசோக கல்வெட்டில் சோழர்கள் பற்றி முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2. தமிழகத்தில் சுதந்திர அரசாக அவர்கள் விளங்கினர்.

3. கன்னியாகுமரி கல்வெட்டுகள் மற்றும் அன்பில் சாசனமும் சோழர்கள் பற்றிய தகவல்களைக் கூறுகிறது

(அ) 1 மட்டும் சரியானது (ஆ) 1 மற்றும் 2 மட்டும் சரியானது

(இ) 1,2 மற்றும் 3 சரியானது (ஈ) 1 மற்றும் 3 சரியானது

152. விடுபட்ட எண்ணை காண்க:

(அ) 49 (ஆ) 50 (இ) 51 (ஈ) 52

153. கனசதுரத்தின் நான்கு வரைபடங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன. எந்த எண் 3 இன் எதிர்பக்கமாக இருக்க முடியும்.

A picture containing clock

Description automatically generated

(அ) 1 (ஆ) 2 (இ) 4 (ஈ) 5

154. C4X, F9U, I16R என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு

(அ) K25P (ஆ) L25P (இ) L25O (ஈ) L27P

155. 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

(அ) 8 நாட்கள் (ஆ) 12 நாட்கள் (இ) 16 நாட்கள் (ஈ) 20 நாட்கள்

156. 180 செ.மீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க:

(அ) 1558.8 செ.மீ2 (ஆ) 1885.5 செ.மீ2 (இ) 1585.8 செ.மீ2 (ஈ) 1888.5 செ.மீ2

157. 1, 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில ரூ.15,000க்கு 3 ஆண்டுக்கு கிடைக்கும் வட்டி காண்க:

(அ) ரூ.10,875 (ஆ) ரூ.10,785 (இ) ரூ.10,885 (ஈ) ரூ.10,775

158. ஒரு ஆப்பிள் (Apple) விலை ரூ.60. ஒரு கொய்யா (Guava) விலை ரூ.90 மற்றும் ஒரு மாம்பழம் (Mango) விலை ரூ.60. ஒரு மாதுளை (Pomegranate) விலை எவ்வளவு?

(அ) ரூ.60 (ஆ) ரூ.90 (இ) ரூ.120 (இ) ரூ.150

159. அசல் ரூ.6,000க்கு, 5 ஆண்டுகளில் 4% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ரூ.8,000க்கு 3% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?

(அ) 5 ஆண்டுகள் (ஆ) 5 1/2 ஆண்டுகள் (இ) 3 ஆண்டுகள் (ஈ) 3 1/2 ஆண்டுகள்

160. A:B = 2:3, B:C = 2:4, C:D = 2:5 எனில் A:D க்கு சமமான விகிதம்

(அ) 1:5 (ஆ) 2:5 (இ) 3:5 (ஈ) 2:15

161.கொடுக்கப்பட்ட இரு எண்களின் மீச்சிறு பொது மடங்கின் மதிப்பானது, அவ்விரு எண்களின் மீப்பெரு பொதுக் காரணியின் மதிப்பை விட, 6 மடங்கு அதிகமாகும். மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு பொது காரணியின் மதிப்பு 12 மற்றும் அவ்விரு எண்களில், ஒரு எண்ணானது 36 எனில், மற்றொரு எண்ணின் மதிப்பு

(அ) 48 (ஆ) 72 (இ) 24 (ஈ) 12

162. 6x3-30x2+60x-48 மற்றும் 3x3-12x2+21x-18 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. காண்க:

(அ) (x3-3x+2)(x-1).3 (ஆ) (x3-3x+2)(x-2).3 (இ) 3(x-2) (ஈ) (x-2)(x-1)3

163. சுருக்குக: 100+8/2+{(3×2)-6/2}

(அ) 123 (ஆ) 107 (இ) 113 (ஈ) 103

164. ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையல்ல?

1. ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை கவுன்சிலின் துணைத் தலைவராக தேர்வு செய்கிறார்கள்.

2. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒவ்வொரு முடிவும் கலந்து கொள்ளும் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத கூட்டத்தால் எடுக்கப்படும்.

3. ஜிஎஸ்டி கவுன்சிலின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி போர் அதன் கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபரே பங்கு பெறுவர்

(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3 (இ) 1 மற்றும் 3 (ஈ) 1,2 மற்றும் 3

165. ‘PURA’ என்னும் சொல்லின் சரியான விரிவாக்கத்தைத் தேர்ந்தெடுக்க:

(அ) சரியான பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்

(ஆ) கிராமப் பகுதிகளில் வழக்கமான வசதிகள் வழங்குதல்

(இ) மண்டலப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்

(ஈ) கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துதல்

166. கீழ்க்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?

1. தொழில் உரிமம்.

2. அயல்நாட்டு முதலீடு.

3. அயல்நாட்டு வாணிபக் கொள்கை.

4. பொது துறை நிர்வாகம்

(அ) 1 மற்றும் 4 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும்

(இ) 1,2 மற்றும் 4 மட்டும் (ஈ) 1,2,3 மற்றும் 4

167. இந்திய அரசின் பணவாக்கக் கொள்கையானது பொருளாதாரக் கொள்கையின் பின்வரும் இரண்டு நோக்கங்களை வலியுறுத்துகின்றது.

1. பொருளாதாரத்தில் பணவீக்க அழுதத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைப்பதற்கும்.

2. தேசிய வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த.

3. தலா வருமானத்தை அதிகரிக்க.

4. மலிவுப் பணக்கொள்கைக்காக.

குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடை காண்க:

(அ) 1 மற்றும் 3 சரியானவை (ஆ) 1 மற்றும் 2 சரியானவை

(இ) 2 மற்றும் 3 சரியானவை (ஈ) 3 மற்றும் 4 சரியானவை

168. இந்திய சுற்றுலா புள்ளி விவரம் 2022ன் படி அந்நியநாட்டு சுற்றுலா பயணிகளால் அதிக அளவில் சுற்றி பார்க்கப்படும் சுற்றுலா தளம்.

(அ) தாஜ் மஹால் (ஆ) ஸ்டேட்சு ஆப் யுனைட்டி (இ) மஹாபலிபுரம் (ஈ) வாரனாசி

169. கீழ்க்காண்பனவற்றுள் எது போஷன் 2.0 திட்டத்தில் கூறப்படாதது?

(அ) குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு

(ஆ) பதின்ம வயது பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு

(இ) கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்

(ஈ) வயது முதிர்ந்தவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு

170. பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது? 1. IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.

2. IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO)வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.

3. IIPக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 மட்டும்

(இ) 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 3

171. நேரு-மகலநோபிஸ் திட்ட மாதிரி பின்வரும் உத்திகளை வலியுறுத்துகிறது.

1. அதிக சேமிப்பு வீதம்.

2. குனரக தொழிலுக்கு முன்னுரிமை.

3. இறக்குமதி பதிலீட்டு ஊக்கமின்மை.

4. புதிய தொழிலுக்கு பாதுகாப்பு

(அ) 1 மற்றும் 2 சரி (ஆ) 1,2 மற்றும் 3 சரி (இ) 1,2 மற்றும் 4 சரி (ஈ) 1,2,3 மற்றும் 4 சரி

172. “இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது. இந்த ஒத்துழைப்பினால் தான் இந்த ஆட்சி பிழைத்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்” என்று கூறியவர் யார்?

(அ) சர்தார் வல்லபாய் பட்டேல் (ஆ) மோதிலால் நேரு

(இ) மகாத்மா காந்திஜி (ஈ) பால கங்காதர திலகர்

173. 1944-ல் இந்திய அரசாங்கம் ——- தலைமையின் கீழ் ஒரு திட்டத் துறையை ஏற்படுத்தியது.

(அ) எஸ்.என்.அகர்வால் (ஆ) எம்.என்.ராய் (இ) Dr.ஜான் மாதாய் (ஈ) சர் அர்தேசிர் தலால்

174. வரிசை I-உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலுள்ள சரியான விடையினைத் தெரிவு செய்க:

வரிசை I வரிசை II

அ. காங்கிரசு அமைச்சரவை பதிவ விலகல் 1. 1943

ஆ. நீல் சிலை சத்யாகிரகம் 2. 1942

இ. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 3. 1927

ஈ. சுதந்திர இந்தியாவின் மாகாண அரசாங்கம் 4. 1939

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 2 1 4 3

இ. 4 3 2 1

ஈ. 4 1 2 3

175. 1933ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டவர் யார்?

(அ) சத்தியமூர்த்தி (ஆ) பார்த்தசாரதி (இ) காமராஜ் (ஈ) அனந்தகிருஷ்ணன்

176. 1923ஆம் ஆண்டில் மேற்கொண்ட டாக்டர் B.R.அம்பேத்காரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு என்ன?

(அ) ரூபாயின் பிரச்சினை (ஆ) சாதி அமைப்பு

(இ) இந்தியாவில் தீண்டாமை (ஈ) இந்தியாவில் ஆங்கிலேயர் இல்லாத ஆட்சி

177. பின்வருவனவற்றில் தவறானவை எவை?

(அ) முதல் வட்டமேசை மாநாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் புறக்கணித்தது

(ஆ) காந்திஜி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்.

(இ) இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு பின்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது

(ஈ) கம்யூனல் அவார்டு மூன்றாம் வட்ட மேசை மாநாடோடு தொடர்புடையது

178. “டாமின்-இ-கோஹ்” என்னும் நிலம் ஆங்கிலேயர்களால் ———-க்கு வழங்கப்பட்டது

(அ) சந்தால் பழங்குடியினர் (ஆ) கோல் பழங்குடியினர்

(இ) கரோ பழங்குடியினர் (ஈ) முண்டா பழங்குடியினர்

179. அமில மழை எதனால் உருவாகிறது

(அ) படிம எரிபொருளை எரிப்பதால் வெளிவரும் அதிகப்படியான NO2 மற்றும் SO2 மூலம்

(ஆ) அதிகபடியான (NH3)உற்பத்தி மற்றும் படிம நிலக்கரி வாயு மூலம்

(இ) அதிகபடியான கார்பன் மோனாக்சைடு முழுமையாக எரிக்கபடாமல் இருப்பது

(ஈ) அதிகபடியான பயன்பாடற்ற கரியமிலவாயு மற்றும் விலங்கின சுவாச முறைகள் மூலம்

180. இமயமலைப் பகுதிகளில் கனிம வளங்கள் ஏன் குறைவாக உள்ளன?

(அ) பாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியுள்ளது

(ஆ) இது படிகப் பாறையால் ஆனது

(இ) நிலப்பரப்பு கனிமங்கள் எடுப்பதை கடினமாக்குகிறது

(ஈ) தட்பவெப்ப நிலை கனிமங்கள் எடுப்பதற்கு ஏற்றதல்ல

181. கீழ்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

கூற்று (A): கலாச்சாரப் பரவல் என்பது கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்குப் பரவுவதாகும்.

காரணம் (R): கலாச்சார நிலத்தோற்றம் என்பது “இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளைக் குறிக்கும் கலாச்சார பண்புகள்” என உலகப் பாரம்பரியக் குழுவால் வரையறுக்கப்பட்டுள்ளது

(அ) கூற்று (A) மற்றும் (R) காரணம் இரண்டும் சரி: கூற்று (A) காரணம் (R)க்கான சரியான விளக்கம்

(ஆ) கூற்று (A) மற்றும் (R) காரணம் இரண்டும் சரி: கூற்று (A) காரணம் (R)க்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு

(ஈ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி

182. அஸ்தாமுடி என்ற முக்கிய காயல் —- கடற்கரையில் காணப்படுகின்றது

(அ) மலபார் கடற்கரை (ஆ) கொங்காண் கடற்கரை

(இ) சோழமண்டல கடற்கரை (ஈ) வடசர்கார் கடற்கரை

183. இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?

1. பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 1996ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 44 சதவீதம் ஆகும்.

2. பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 2016ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 48 சதவீதம் ஆகும்.

3. 1996-2016ஆம் கால கட்டத்தில் நாட்டின் மொத்த மக்கட் தொகை அதிகரிப்பில் மேற்கண்ட மாநிலங்கள் 70 சதவீதம் பங்களித்தன.

(அ) 1 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 மட்டும் (இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 2 மற்றும் 3 மட்டும்

184. சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.

1. கிசார் கான் – ஒரிசா

2. துர்காவதி – கோண்ட்வானா

3. ராணா உதய்சிங் – மேவார்

4. கன்வர் மான் சிங் – அஜ்மீர்

(அ) 1 மற்றும் 2 சரியானவை (ஆ) 2 மற்றும் 3 சரியானவை

(இ) 1 மற்றும் 4 சரியானவை (ஈ) 3 மற்றும் 4 சரியானவை

185. கி.பி.1894இல் காசி நகரி பிரச்சாரினி சபா ———-ல் நிறுவப்பட்டது.

(அ) டெல்லி (ஆ) பம்பாய் (இ) மெட்ராஸ் (ஈ) கல்கத்தா

186. பிரிட்டிஷ் இந்தியாவில், முதன் முதலில், முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்தவர் யார்?

(அ) முகம்மது இக்பால் (ஆ) முகம்மது அலி ஜின்னா (இ) ரஹ்மத் அலி (ஈ) மவுண்ட் பேட்டன்

187. கூற்று (R): கூட்டாட்சி என்பது பகிரப்பட்ட ஆட்சி மற்றும் சுய ஆட்சி எனும் கொள்கையின் அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களின் பல நிலைகளில் அதிகாரப் பரவலைக் கொண்டுள்ளது.

காரணம் (R): கூட்டாட்சிகள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கேற்ப தம்மை தொடர்ச்சியாக சரி செய்து தகவமைத்துக் கொள்கின்றன.

(அ) (A) சரி ஆனால் (R) தவறு

(ஆ) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A)ன் சரியான விளக்கம்

(இ) (A) தவறு ஆனால் (R) சரி

(ஈ) (A) மற்றும் (R) சரி ஆனால் (R) என்பது (A)ன் சரியான விளக்கம் அல்ல

188. கீழ்க் குறிப்பிடப்படுபவற்றில் பௌத்த மதம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்க:

1. பௌத்தம் வேதங்களின் ஆதிக்கத்தை மறுக்கிறது.

2. பௌத்தம் போதனைகள் மறுபிறப்பு, மோட்சம், கர்மா ஆகிய பிராமணக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டது.

3. பௌத்தம் நடைமுறை மற்றும் நெறிமுறையற்றது.

4. பௌத்தம் கடவுளைப் படைப்பவராக ஏற்றுக்கொள்கிறது.

(அ) 1,2 மற்றும் சரி (ஆ) 1 மற்றும் 2 சரி (இ) 2 மட்டும் சரி (ஈ) 3 மற்றும் 4 சரி

189. கீழ்க்குறிப்பிடபவற்றில் குப்தர்கள் காலச் சமுதாயம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?

1.குப்த அரசர்கள் தங்களைப் பரமபாகவதர் என்று அழைத்துக் கொண்டனர்.

2. சீனாவுடனும், ரோமுடனும் வியாபாரம் செழித்தது.

3. பொது நிகழ்ச்சிகளில் பங்குபெற பெண்களுக்குத் தடை இருந்தது.

4. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.

(அ) 1 மற்றும் 3 சரி (ஆ) 3 மற்றும் 4 சரி (இ) 4 மட்டும் சரி (ஈ) 1,2 மற்றும் 4 சரி

190.முஸ்லீம் சமூகம், அரசியல், நிர்வாகம் மற்றும் மதம் ஆகியவற்றில் உலமாக்கள் ஏன் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்கள்?

(அ) அவர்கள் டெல்லி சுல்தானகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்

(ஆ) அவர்களின் புனித வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை காரணமாக

(இ) அவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.

(ஈ) அவர்கள் வர்த்தகம் மற்றும் தொழில் துறையைக் கட்டுப்படுத்தினர்

191. பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டவை எவை?

1. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு மற்றும் தனிநபரின் கடமை – விதி 48A

2. அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது முடியும் வரை குழந்தை

பருவ பராமரிப்பு மற்றும் கல்வி – விதி 45

3. மாநிலத்தின் பொதுச் சேவைகளின் நிர்வாகத்திலிருந்து தனி நிதித்துறை – விதி 39

4. தன்னார்வ உருவாக்கம், கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி செயல்பாடு – விதி 44

(அ) 1,3 மற்றும் 4 மட்டும் (ஆ) 2,3 மற்றும் 4 மட்டும்

(இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 3 மற்றும் 4 மட்டும்

192. கூற்று (A): சட்டத்தின் ஆட்சி என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள அனைவரும் மற்றும் அரசு மற்றும் பிற நிறுவனங்களும் மக்களால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பொறுப்பானவர்கள். காரணம் (R): சட்டத்தின் ஆட்சி என்பது பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உருவானது. மேலும் அது மக்களின் உரிமைகளையும் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தையும் காப்பது முக்கியம் என்கிறது.

(அ) (A) என்பது சரி ஆனால் (R) என்பது தவறு

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)ன் சரியான விளக்கமாகும்

(இ) (A) தவறு ஆனால் (R) என்பது சரி

(ஈ) (A) மற்றும் (R) என்பது சரி ஆனால் (R) என்பது (A)ன்ன சரியான விளக்கமல்ல

193. “லோக் அதாலத்” பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்

(அ) லோக் அதாலத் என்பது ஒரு வழக்குகளை விரைந்து முடிக்கவல்ல செயலமைப்பு

(ஆ) இது சட்ட அமைப்பின் கருவி அல்ல

(இ) வழக்குகளை சமாதான முறையில் முடிவுக்கு கொண்டுவர ஒரு வகையான மன்றம்

(ஈ) லோக் அதாலத் மக்கள் வாசற்படிக்கே சென்று நீதி வழங்குகிறது

194. “மாநில ஆளுநர்” பற்றி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது/எவை தவறானது?

(அ) மாநில தலைமை வழக்கறிஞர் நியமிக்கிறார்

(ஆ) மாநிலப் பல்கலை கழகங்களின் வேந்தரை நியமிக்கிறார்

(இ) முதலமைச்சரை நியமிக்கிறார்

(ஈ) மாநில தேர்தல் அதிகாரியை நியமிக்கிறார்

195. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

பாதுகாத்தல் இயற்றப்பட்ட ஆண்டு

அ. பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் 1. 1979

ஆ. ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2. 1976

இ. சம ஊதியம் 3. 1970

ஈ. புலம்பெயர் தொழிலாளர் வேலைவாய்ப்பு

ஒழுங்காற்றுதல் 4. 1966

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 3 2 1

இ. 3 2 4 1

ஈ. 2 3 4 1

196. சுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் வேண்டும் என முதலில் பரிந்துரைத்தவர்

(அ) மோதிலால் நேரு (ஆ) M.N.ராய் (இ) சுபாஷ் சந்திர போஷ் (ஈ) மகாத்மா காந்தி

197. ஒரு நவீன மக்காளட்சி நாட்டில், குடியுரிமை என்பது

(அ) இயற்கை உரிமை (ஆ) சட்ட உரிமை

(இ) நாடாளுமன்றச் சட்ட உரிமை (ஈ) அடிப்படை உரிமை

198. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

அ. பிட் இந்தியச் சட்டம், 1784 1. கவர்னர்-ஜெனரலின் சட்டமியற்றும் அதிகாரங்களை

அதிகாரப் பரவலாக்கம் செய்தல்

ஆ. சாசனச் சட்டம், 1813 2. முதன்முறையாக கவர்னர்-ஜெனரலின் அரசாங்கம்

“இந்திய அரசாங்கம்” என அழைக்கப்பட்டது

இ. சாசனச்சட்டம், 1833 3. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம்

நியமிக்கப்படுதல்

ஈ. இந்தியக் கவுன்சில் சட்டம், 1861 4. இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக

முற்றுரிமையைக் குறைத்தல்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 3 4 2 1

இ. 4 3 2 1

ஈ. 1 3 2 4

199. கீழ்க்கண்டவற்றுள் சிந்து மக்களைப் பற்றிய தவறான கூற்று(கள்) எது/எவை?

1. சிந்துவெளி மக்கள் மரம் மற்றும் விலங்குகளைக் கடவுளாக வழிபட்டனர்.

2. சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் கிருஷ்ணர்.

3. சிந்துவெளி மக்கள் நெருப்பு மற்றும் நீரைக் கடவுளாக வழிபட்டனர்.

4. சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் பெண் தெய்வங்கள்

(அ) 1 மற்றும் 3 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 2 மற்றும் 3 மட்டும்

200. சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பும், நிர்வாகத் தீர்ப்பாயங்களும், “புதிய சர்வாதிகாரத்தின்” வெளிப்பாடு எனக் கூறியவர் யார்?

(அ) ஜான் E.கெர்செல் (ஆ) சர்.சிசில் கார் (இ) லார்ட் ஹிவார்டு (ஈ) D.L.ஹிவிட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!