General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 9

Tnpsc General Tamil Previous Question Paper 9

Tnpsc General Tamil Previous Question Paper 9: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்” – எவ்வகைத் தொடர்?

(அ) எதிர்மறைத் தொடர்

(ஆ) பிறவினைத் தொடர்

(இ) செய்வினைத் தொடர்

(ஈ) தன்வினைத்தொடர்

விடை மற்றும் விளக்கம்

(இ) செய்வினைத் தொடர்மை

2. “சிறுகுடி” – எத்திணைக்குரிய ஊர்?

(அ) குறிஞ்சி

(ஆ) மருதம்

(இ)நெய்தல்

(ஈ) முல்லை

விடை மற்றும் விளக்கம்

(அ) குறிஞ்சி

விளக்கம்:

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஓங்கியுயர்ந்த பகுதி மலை, மலையை விட சற்று உயரம் குறைந்த பகுதி கரடு அல்லது பாதை மலையின் அருகேயுள்ள ஊர்கள் நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை எனப்பட்டன. குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி, சிறுகுடி எனப்பட்டன. குன்றைவிட குறைந்த நிலப்பகுதியில் உள்ள ஊர்கள் சஞ்சீவிராயன் கரடு, பூம்பாறை, சிப்பிப்பாறை, மட்டப்பாறை, வால்பாறை, குட்டப்பாறை எனப்பட்டன. மலையைக் குறிக்கும் வடமொழிச் சொல் கிரி, சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்றும் மலையை ஓட்டிய நிலப்பகுதிகள் அழைக்கப்படுகின்றன.

3. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றில் மரந்தளிர்த் தற்று – இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?

(அ) இல்பொருள் உவமை அணி

(ஆ) உருவக அணி

(இ) வேற்றுமை அணி

(ஈ) பிறிதுமொழிதல் அணி

விடை மற்றும் விளக்கம்

(அ) இல்பொருள் உவமை அணி

விளக்கம்:

இல்பொருள் உவமையணி: இல்லாத பொருளை இருப்பது போல உவமையாக்கிக் கூறுவது “இல்பொருள் உவமையணி” ஆகும். அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த்தற்று – திருக்குறள் 78. மனதில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை வளமற்ற பாலைவனத்தில், பட்டமரம் தளிர்த்தல் போன்றதாகும். இல்லாத பொருள்: பட்டமரம் தளிப்பது.

4. கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:

(அ) பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை

(ஆ) ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.

(இ) மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்

(ஈ) திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது

விடை மற்றும் விளக்கம்

(இ) மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்

5. கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதது

(அ) வெண்தயிர்

(ஆ) சேவடி

(இ) செந்நெல்

(ஈ) சுடரொளி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சுடரொளி

விளக்கம்:

“சுடரொளி”- வினைத்தொகை

6. “இன்னாச்சொல்” என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி:

(அ) இனியசொல்

(ஆ) இனிமையற்ற சொல்

(இ) இழிவான சொல்

(ஈ) விரிவான சொல்

விடை மற்றும் விளக்கம்

(அ) இனியசொல்

7. வழுஉச் சொல்லற்ற தொடர் எது?

(அ) கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை

(ஆ) கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை

(இ) கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை

(ஈ) கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை

விடை மற்றும் விளக்கம்

(இ) கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை

8. செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது

(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

(ஆ) அளைமறி பாப்புப் பொருள்கோள்

(இ) மொழி மாற்றுப் பொருள்கோள்

(ஈ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்

விளக்கம்:

செய்யுளின் அனைத்து அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோளாகும். எ.கா: “ஆலத்து மேல குவளை குளத்துள வாலி னெடிய குரங்கு” “ஆலத்து மேல வாலினெடிய குரங்கு” எனவும் “குவளை குளத்து உள” எனவும் பொருள் கொள்ள வேண்டும்!

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

9. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

(அ) கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்.

(ஆ) நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது

(இ) கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்

(ஈ) மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்

விடை மற்றும் விளக்கம்

(இ) கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்

விளக்கம்:

பிறமொழிச் சொல் – தமிழ்ச்சொல்

உத்தரவு ஆணை

விஞ்ஞானம் அறிவியல்

அலங்காரம் ஒப்பனை

10. வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது

(அ) உள்ளுறை

(ஆ) உருவகம்

(இ) உவமை

(ஈ) வெளிப்படை

விடை மற்றும் விளக்கம்

(அ) உள்ளுறை

விளக்கம்:

வெளிப்படையாக சொல்லப்பட்ட உவமையைக் கொண்டு மறைந்திருக்கும் பொருளை உய்த்துணர்ந்து கொள்வது “உள்ளுறை உவமம்” ஆகும். எ.கா: “அம்பணத்து அன்ன யாமை ஏறிச் செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் யாணர் ஊர! நின்னினும் பாணன் பொய்யன் பல சூளினனே” – ஐங்குறுநூறு-43-வது பாடல். “ஆமை முதுகின் மேல் அதன் குஞ்சுகள் ஏறிப்பரண் மேல் தூங்குவது போல் தூங்கும் ஊரை உடையவன் என்று இப்பாடலில் தலைவன் விளிக்கப்படுகிறான். “தலைவன் பரத்தையன் மேல் கொண்ட நாட்டம்” என்ற செய்தி இதனால் உய்த்துணரப்படுகிறது”

11. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க:

(அ) தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

(ஆ) சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார்

(இ) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.

(ஈ) இயங்குரப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றனர்

விடை மற்றும் விளக்கம்

(அ) தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

விளக்கம்:

(ஆ) சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தனர்

(ஆ) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது

(ஈ) இயங்குரப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றனர்

12. “தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்

(அ) குமரகுருபரர்

(ஆ) சீத்தலைச் சாத்தனார்

(இ) சேக்கிழார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சீத்தலைச் சாத்தனார்

விளக்கம்:

“தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப்பெற்றவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். மேலும் இவர் “சாத்தன் நன்னூற்புலவன்” என்றும் அழைக்கப்பெற்றார்.

13. சேக்கிழாரின் இயற்பெயர்

(அ) மீனாட்சி சுந்தரனார்

(ஆ) ஆனந்தரங்கம் பிள்ளை

(இ) அருண்மொழித் தேவர்

(ஈ) வாகீசர்

விடை மற்றும் விளக்கம்

(இ) அருண்மொழித் தேவர்

விளக்கம்:

சேக்கிழாரின் இயற்பெயர் “அருண்மொழ்த்தேவர்” என்பதாகும். சிவனடியார்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் பெரியபுராணத்தை இயற்றியமையால் “தொண்டர் சீர்பரவுவார்” என்றும் அழைக்கப்பட்டார்.

14. குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை

(அ) மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை

(ஆ) ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை

(இ) நான்கடிச் சிறுமை எட்டடிப்பெருமை

(ஈ) இரண்டடிச் சிறுமை பாடுபவன் மனக்கருத்து

விடை மற்றும் விளக்கம்

(இ) நான்கடிச் சிறுமை எட்டடிப்பெருமை

விளக்கம்:

குறுந்தொகை: இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஓன்பதடியில் உள்ள 307, 391 ஆகிய இரு பாடல்களும் இத்தொகையில் இடம் பெற்றுள்ளன.

15. “சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது: சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்

(அ) மு.மேத்தா

(ஆ) சாலை.இளந்திரையன்

(இ) அப்துல் ரகுமான்

(ஈ) ந.பிச்சமூர்த்தி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சாலை.இளந்திரையன்

16. கீழ்க்காணும் சொற்களுள் “சூரியன்” எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக:

(அ) ஞாயிறு

(ஆ) பகலவன்

(இ) பிரமன்

(ஈ) ஆதவன்

விடை மற்றும் விளக்கம்

(இ) பிரமன்

17. திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப் பெயரைக் கண்டறிக:

(அ) ஆதி காவியம்

(ஆ) பொய்யாமொழி

(இ) உத்தரவேதம்

(ஈ) தமிழ்மறை

விடை மற்றும் விளக்கம்

(அ) ஆதி காவியம்

விளக்கம்:

திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள்: பொய்யாமொழி, உத்தரவேதம், தமிழ்மறை, வாயுறை வாழ்த்து, முப்பால், வள்ளுவப்பயன், தெய்வநூல், உலகப் பொதுமறை

18. பொருத்துக:

அ. அடவி – 1. மான்

ஆ. நவ்வி – 2. சிலுவை

இ. விசும்ப – 3. காடு

ஈ. குருசு – 4. வானம்

அ ஆ இ ஈ

(அ) 4 2 1 3

(ஆ) 3 1 4 2

(இ) 3 4 2 1

(ஈ) 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 3 1 4 2

19. “தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து” என்பது உன் நெறியாக இருக்கட்டும். – இக்கடித வரிகள் யாருடையது?

(அ) நேரு

(ஆ) காந்தி

(இ) மு.வ.

(ஈ) அண்ணா

விடை மற்றும் விளக்கம்

(இ) மு.வ.

20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

(அ) காலதர்

(ஆ) சாளரம்

(இ) சன்னல்

(ஈ) கொட்டில்கள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கொட்டில்கள்

விளக்கம்:

காலதர், சாளரம், சன்னல் ஆகிய மூன்றும் ஒரே பொருளைக் குறிக்கின்றன.

21. உரிய சொல்லால் நிரப்புக: செய்க பொருளைச் —— செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்

(அ) செய்யார்

(ஆ) செய்வார்

(இ) சென்று

(ஈ) செறுநர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) செறுநர்

விளக்கம்:

“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல்.” நூல்-திருக்குறள். பிரிவு-பொருட்பால். அதிகாரம்-பொருள் செயல்வகை. இயல்-கூழியல். குறள் எண்-759. பொருள்: ஒருவன் எப்போதும் பொருளைத் தேடி ஈட்ட வேண்டும். அவனுடைய பகைவரின் செருக்கை அழிக்கவல்ல, அதைவிடக் கூர்மையான வாள் வேறெதுவும் இல்லை.

22. இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்

(அ) நற்றிணை

(ஆ) புறநானூறு

(இ) ஐங்குறுநூறு

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பரிபாடல்

விளக்கம்:

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலில் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசையமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு, வண்ணம் முதலியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும் எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்ற விவரங்களும் பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப் பெறுகின்றன.

23. “நெடியோன் குன்றம்”- எனப்பெறுவது

(அ) இமயமலை

(ஆ) திருவேங்கடமலை

(இ) கொல்லிமலை

(ஈ) அழகர்மலை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) திருவேங்கடமலை

விளக்கம்:

“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நலநாட்டு” – சிலப்பதிகாரம், வேனிற்காதை (1-2) நெடியோன் குன்றம்-திருவேங்கடம் (திருப்பதிமலை). தொடியோள்-குமரி (கன்னியாகுமரி). பௌவம்-கடல். தமிழக எல்லைகளாக வடக்கில் திருவேங்கட மலையையும் தெற்கில் கன்னியாகுமரி கடலையும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

24. “உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” – இப்பாடல் இடம்பெறும் நூல்

(அ) அகநானூறு

(ஆ) புறநானூறு

(இ) நற்றிணை

(ஈ) திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) புறநானூறு

விளக்கம்:

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும் சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும், ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும், “மூத்தோன் வருக” என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” புறநானூறு-பாடல் எண் 183. பாடியவர்-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் திணை-பொதுவியல். துறை-பொருண்மொழிக் காஞ்சி. பொருள்-பல உதவிகள் செய்தும், பொருள்கள் பல கொடுத்தும் கல்வி கற்பது நன்றே. ஒரு வயிற்றில் உதித்த உடன் பிறப்புகளுள்ளும் கற்றவனையே தாயின் மனமும் மிக விரும்பும். ஒரு குடியில் பிறந்த சகோதரர்கள் பலர் இருப்பினும் அவர்களுள் மூத்தோனை வருக என்று என்னாது. அவர்களுள் கற்றவரையே அரசும் மதிக்கும். நான்கு வகை சாதிகளிலும் கீழ்ப்பால் ஒருவன் கல்வி கற்றால், மேற்பால் ஒருவனும் அவனை மதித்து நடப்பான்.

25. “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” – இதனைக் கூறியவர்.

(அ) சீத்தலைச் சாத்தனார்

(ஆ) புகழேந்திப் புலவர்

(இ) இளங்கோவடிகள்

(ஈ) இராமலிங்க அடிகள்

விடை மற்றும் விளக்கம்

(இ) இளங்கோவடிகள்

விளக்கம்:

கோவலன் கண்ணகியின் வரலாற்றை சீத்தலைச் சாத்தனார் மூலம் அறிந்து கொண்ட இளங்கோவடிகள் “சிலப்பதிகாரம்” என்ற பெயரில் அந்த வரலாற்றை இயற்றப் போவதாகக் கூறிய கூற்று,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்

கூற்றாவதும்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டு மென்பதும்

சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”

26. “சிங்கவல்லி” என்ற சொல் எச்செடியைக் குறிக்கும்?

(அ) குப்பமேனி

(ஆ) துளசி

(இ) கரிசலாங்கண்ணி

(ஈ) தூதுவளை

விடை மற்றும் விளக்கம்

(ஈ) தூதுவளை

27. “தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும்”

இவ்வடிகளில் “தாது” என்பதன் பொருள்

(அ) மலர்

(ஆ) மகரந்தம்

(இ) குளம்

(ஈ) சோலை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) மகரந்தம்

விளக்கம்:

“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்

போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்

மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்

ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே!

– கம்பர்.

நூல்-கம்பராமாயணம்.

பெரும்பிரிவு-பாலகாண்டம்.

உட்பிரிவு-ஆற்றுப்படலம்.

பொருள்: சரயு ஆறு மகரந்தப் பொடிகளைச் சிந்தும் சோலைகளை வளப்படுத்தியும், சண்பக வனங்களைக் கடந்தும், அரும்புகள் விரிந்திருகின்ற குளங்களை நிரப்பியும், புது மணல் மிக்க நீர்நிலைகள் வழியாகவும் குருக்கத்தி வேலியிட்ட கமுகுத் தோட்டங்களில் பாய்ந்தும், வயல்களைச் சொழிக்கச் செய்தும் பாய்ந்து செல்வது, உடலினுள் உயிர்புகுந்து பரவுவதனைப் போன்று விளங்குகிறது.

தாது-மகரந்தம்.

போது-மலர்,

பூகம்-கமுகு மரம்(பாக்குமரம்).

28. “அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே”

இவ்வடியிலுள்ள “அல்” என்பதன் எதிர்ச்சொல்லைக்கண்டறிக

(அ) காலை

(ஆ) மாலை

(இ) இரவு

(ஈ) பகல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பகல்

விளக்கம்:

“அல்” என்பதன் பொருள் இரவு. “அல்” என்பதன் எதிர்ச்சொல் பகல்

29. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி:

அதுவே நம்மொழி” என்று கூறியவர்.

(அ) பாரதியார்

(ஆ) தேவநேயப் பாவாணர்

(இ) பரணர்

(ஈ) மறைமலையடிகள்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) தேவநேயப் பாவாணர்

30. கீழ்க்கண்டவற்றுள் கரிசிலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?

(அ) கீழ்வாய் நெல்லி

(ஆ) குமரி

(இ) பிருங்கராசம்

(ஈ) ஞானப்பச்சிலை

விடை மற்றும் விளக்கம்

(இ) பிருங்கராசம்

விளக்கம்:

கீழ்வாய்நெல்லி-கீழாநெல்லி.

குமரி-சோற்றுக்கற்றாழை.

சிங்கவல்லி, ஞானப்பச்சிலை-தூதுவளை.

கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்- கரிசலாங்கண்ணி

31. “தென்தமிழ் தெய்வப்பரணி” என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) பரணர்

(இ) குமரகுருபரர்

(ஈ) பிசிராந்தையார்

விடை மற்றும் விளக்கம்

(அ) ஒட்டக்கூத்தர்

32. 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?

(அ) கீழார்வெளி

(ஆ) ஆதிச்சநல்லூர்

(இ) மதுரை

(ஈ) திருவண்ணாமலை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஆதிச்சநல்லூர்

விளக்கம்:

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளிலிருந்து கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்த மக்கள் இறந்தோரின் உடலுடன் தங்கத்தினால் ஆன ஆபரணங்கள், செம்பினாலான ஆண், பெண் தெய்வ உருவங்கள், இரும்பினாலான கத்திகள், விளக்குத் தாங்கிகள் போன்றவற்றையும் சேர்ந்து புதைத்தது தெரிய வருகிறது.

33. “எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்”

சிறுபாணாற்றுப்படை வரி கடையெழுவள்ளல்களுக்குப் பிறகு வள்ளன்மையைக் கொண்டவனாக யாரைக் கூறுகிறது?

(அ) நச்சினார்க்கினியர்

(ஆ) நல்லியக்கோடன்

(இ) கரிகாலன்

(ஈ) நக்கீரர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) நல்லியக்கோடன்

விளக்கம்:

எழுசமங் கடந்த எழு உறழ் திணிதோள்

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்

விரிகடல் வேலிவியலகம் விளங்க

ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்

பொருள்:

கடையெழு வள்ளல்களும் ஏற்று நடத்திய கொடையாகிய பாரத்தை உலகம் விளங்கும்படி தான் ஒருவனே மேற்கொண்டு தாங்கிய வலிமைமிக்க முயற்சியை உடையவன் நல்லியக்கோடன்.

34. நீலமணி மிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும நீயே

– இவ்வாறு ஒளவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?

(அ) குமணன்

(ஆ) கோப்பெருஞ் சோழன்

(இ) சோழன் கரிகாற் பெருவளத்தான்

(ஈ) அதியமான் நெடுமான் அஞ்சி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அதியமான் நெடுமான் அஞ்சி

விளக்கம்:

“வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்

களம் படக் கடந்த கழல் தொடித் தடக்கை,

ஆர் கலி நறவின், அதியர் கோமான்!

போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி!

பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும்! நீயே, தொல் நிலைப்

பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,

ஆதல் நின் அகத்து அடக்கு,

சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே!

– ஒளவையார்.

நூல்-புறநானூறு.

பாடல் எண்-91.

திணை-பாடாண் திணை.

துறை-வாழ்த்தியல்.

ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியை வாழ்த்தியது:

பொருள்:

“வெற்றியைப் பொருந்திய தப்பாத வாளை ஏந்திப் பகைவர் போர்க்களத்தில் அழியுமாறு வென்றவனும் கழலுமாறு அமைத்த வீரவளை பொருந்திய பெரிய கைகளையுடையவனும் மிக்க ஆரவாரம் செய்யும் மதுவினையுடையவனுமான அதியர் கோமானே!

நீ தொன்மையான பெரிய மலையின் பிளவிடத்தில் அரிதான உச்சியில் சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியைக் கொண்டாய்; அதனைப் பெறுவதற்கு அரியது என்று கருதாமல் அக்கனியின் அரும்பயனாக அமைந்த தன்மையை எனக்குக் கூறாமல் நின் மனத்து அடக்கினாய்; அவ்வரிய கனியை, இறப்பு என்னை விட்டு அகலுமாறு எனக்கு அளித்தாய். பகைவரைப் போரில் வெல்லும் வீரமாகிய செல்வமும் பொன்னாற் செய்த மாலையும் உடைய அஞ்சியே! பெரும! நீ பால் போன்று பிறையணிந்த நெற்றியுடன் பொலிவுற்ற திருமுடியையும் நீலமணி போலும் கரிய கழுத்தினையும் உடைய ஒருவனாகிய சிவபெருமான் போல நிலை பொருவாயாக!”

35. பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு

(அ) 14-19

(ஆ) 12-13

(இ) 20-25

(ஈ) 13-14

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 12-13

விளக்கம்:

ஏழு பருவங்களைச் சார்ந்த பெண்கள்:

பருவங்கள் வயது

பேதை 5-7

பெதும்பை 8-11

மங்கை 12-13

மடந்தை 14-19

அரிவை 20-25

தெரிவை 26-32

பேரிளம் பெண் 33-40

36.கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலி சபதத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க:

(அ) 92 படலங்கள், 5027 பாடல்கள்

(ஆ) 2 சருக்கங்கள், 2330 பாடல்கள்

(இ) 5 சருக்கங்கள், 412 பாடல்கள்

(ஈ) 10 சருக்கங்கள், 894 பாடல்கள்

விடை மற்றும் விளக்கம்

(இ) 5 சருக்கங்கள், 412 பாடல்கள்

விளக்கம்:

பாரதியாரின் முப்பெரும் படைப்புகளில் “பாஞ்சாலி சபதம்” ஒன்றாகும்.

இது சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச சருக்கம் என்று ஐந்து சருக்கங்களையும் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியமாகும்.

37. கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக:

அ.விளைந்து முதிர்ந்த விழுமுத்து – 1.பட்டினப்பாலை

ஆ. பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி – 2. புறநானூறு

இ. காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர் – 3. மதுரைக்காஞ்சி

ஈ. கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது போல்

நாவாய் அசைந்தது – 4. அகநானூறு

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 3 4 2 1

இ. 1 2 4 3

ஈ. 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 4 2 1

38. “திவ்விய கவி” என்றழைக்கப்படுபவர் யார்?

(அ) குலசேகர ஆழ்வார்

(ஆ) ஆண்டாள்

(இ) பிள்ளளைப்பெருமாள் ஐயங்கார்

(ஈ) பெரியாழ்வார்

விடை மற்றும் விளக்கம்

(இ) பிள்ளளைப்பெருமாள் ஐயங்கார்

விளக்கம்:

“திவ்விய கவி” என்றழைக்கப்படுபவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இவரின் மற்றொரு பெயர் அழகிய மணவாளதாசர். இவரது காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டாகும். மன்னர் திருமலை நாயக்கரிடம் அரசு அலுவலராய்ப் பணியாற்றி வந்தவர். இவர் எழுதிய அஷ்டப்பிரபந்தம் என்று அழைக்கப்பட்ட நூல்களாவன. திருவேங்கடத்து அந்தாதி, திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவரங்கக் கலம்பகம், திருவேங்கடமாலை, அழகர் அந்தாதி, அரங்கநாயகர் ஊசல், நூற்றியெட்டு திருப்பதி அந்தாதி.

39. “சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” என்று கேட்டார் காந்தியடிகள். அப்பெண் “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார். அப்பெண் யார்?

(அ) வேலு நாச்சியார்

(ஆ) அஞ்சலையம்மாள்

(இ) தில்லையாடி வள்ளியம்மை

(ஈ) அம்புஜத்தம்மாள்

விடை மற்றும் விளக்கம்

(இ) தில்லையாடி வள்ளியம்மை

விளக்கம்:

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின வாழ்வுரிமையை மீட்க காந்தியடிகள் போரடினார். அப்பொழுது நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, வள்ளியம்மையை இளமையிலேயே (16ஆம்அகவை) அறப்போரில் ஈடுபடக் காரணமாய் அமைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வள்ளியம்மை சிறை சென்று சொல்லவொண்ணா இன்னல்களை அடைந்தார். உயிருக்குப் போராடிய நிலையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வள்ளியம்மையைச் சந்திக்க காந்தியடிகள் சென்றார். அப்பொழுது, “சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” எனக் கேட்டார். அதற்கு வள்ளியம்மை, “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார். இந்தியர்களுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன். என் இன்னுயிரையும் தருவேன்” என்று கூறினார். அதைக் கேட்ட காந்தியடிகள் உள்ளம் நெகிழ்ந்தார்.

40. “உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

(அ) பாம்பாட்டிச் சித்தர்

(ஆ) குதம்பைச் சித்தர்

(இ) அழுகுணிச் சித்தர்

(ஈ) கடுவெளிச் சித்தர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கடுவெளிச் சித்தர்

41. “பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) வெ.இராமலிங்கனார்

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

(இ) வெ.இராமலிங்கனார்

விளக்கம்:

பெண்மை

அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்

உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்

தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்

இயல்பாய் அமைந்தும் இன்ப சொரரூபமாய்த்

தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;

தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;

உடன்பிறப்பாகி உறுதுணை புரியும்;

மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;

அயலார் தமக்கும் அன்பே செய்யும்;

நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்;

– வெ. இராமலிங்கனார்.

பொருள்:

பெண்மையின் பன்முகங்கள்: 1. அன்பு, ஆர்வம், அடக்கம் முதலியன பெண்மையின் பண்புகளாகும். 2.உண்மைத் தன்மையும் உள்ள உறுதியும், தன்னலமில்லாது குடும்பநலம் பேணுதல் யார் எது செய்யினும் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் தாயின் இனிய பண்புகளாகும். 3. கணவன் மனம் தளரும் போதெல்லாம் அவனது கவலைக்கு மருந்தாக இருப்பவள் மனைவி. 4. தமக்கையோ. தங்கையோ உடன்பிறந்தானுக்கு உறுதுணையாகத் திகழ்கிறாள். 5. மகளாகப் பிறந்து தந்தைக்குப் பணிவிடை செய்து மகிழ்பவளும் பெண்ணே. 6. அயலாரிடத்து அன்பு காட்டியும், தனக்கே உரிய நாணம் கெடாது நட்பு கொள்வதும் பெண்மையின் சிறந்த பண்புகளாகும்.

42. “பாவலரேறு” பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?

(அ) அப்துல் ரகுமான்

(ஆ) வாணிதாசன்

(இ) முடியரசன்

(ஈ) துரை, மாணிக்கம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) துரை, மாணிக்கம்

விளக்கம்:

இயற்பெயர் புனைப்பெயர்

எத்திராசலு வாணிதாசன்

துரைராசு முடியரசன்

துரை.மாணிக்கம் பெருஞ்சித்திரனார்

43. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்;

புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்

– என்று பாராட்டப்படுபவர்

(அ) உமறுப்புலவர்

(ஆ) அப்துல் ரகுமான்

(இ) ந.பிச்சமூர்த்தி

(ஈ) ஞானக் கூத்தன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) அப்துல் ரகுமான்

44. தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?

(அ) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்

(ஆ) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு

(இ) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை

(ஈ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை

விடை மற்றும் விளக்கம்

(அ) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்

விளக்கம்:

தாயுமானவர்.

இவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (வேதாரண்யம்). இவரது காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டாகும். இவர், விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடமும் அவரது மறைவுக்குப் பின் அவரின் மனைவு இராணி மீனாட்சி ஆட்சியிலும் கண்கராகப் பணியாற்றினார்.

இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுரு ஆவார். இவர், இராமநாதபுரத்தின் அருகிலுள்ள இலட்சுமிபுரத்தில் முக்தி (இயற்கை எய்தினார்) பெற்றார்.அவ்விடத்தில் இவருக்கு நினைவு இல்லம் உள்ளது

45. “ஞான சாகரம்” – இதழினை ”அறிவுக்கடல்” என மாற்றியவர்

(அ) பாதிரிமாற்கலைஞர்

(ஆ) மறைமலையடிகள்

(இ) இரா.பி.சேதுப்பிள்ளை

(ஈ) திரு.விக.

விடை மற்றும் விளக்கம்

(ஆ) மறைமலையடிகள்

விளக்கம்:

மறைமலையடிகள்.

சிறந்த சைவ சமய சொற்பொழிவாளராகிய இவர், வடமொழி கலப்பற்ற தூய தனித்தமிழ் இயக்கத்தினைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர் ஆவார். சங்க இலக்கியங்களை முதன்முதலில் மக்களிடையே பரப்பிய பெருமைக்குரியவர்.

“வேதாச்சலம்” என்ற தனது பெயரை மறைமலையடிகள் எனத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டார். வேதம் 🡪 மறை; சலம் 🡪 மலை. “ஞானசாகரம் என்ற இதழினை “அறிவுக்கடல்” என மாற்றினார். ஞானம் 🡪 அறிவு; சாகரம் 🡪 கடல்.

46. “நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழு(து)) எழுக ஓர்ந்து” – இவ்வாறு திருக்குறனின் பெருமையைப் பாடியவர் யார்?

(அ) கபிலர்

(ஆ) ஒளவையார்

(இ) கவிமணி

(ஈ) பரணர்

விடை மற்றும் விளக்கம்

(இ) கவிமணி

47. தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் – இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?

(அ) பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது

(ஆ) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது

(இ) கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது

(ஈ) நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது

விளக்கம்: ஈ.வெ.ரா பெரியாரைப் பற்றி பாரதிதாசன் எழுதிய கவிதை தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும்

48. “காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” என்று பாடியவர்.

(அ) திருமூலர்

(ஆ) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

49. “நாளை என் தாய்மொழி சாகுமானால் – இன்றே நான் இறந்து விடுவேன் – என்று கூறியவர்

(அ) காந்தியக் கவிஞர் இராமலிங்கர்

(ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

(இ) ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்

(ஈ) ருசிய அறிஞர் தால்கதாய்

விடை மற்றும் விளக்கம்

(இ) ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்

50. “தாயுமேது தந்தையேது தனையர் சுற்றத் தாருமேது ஆயும்போது யாவும் பொம்ம லாட்டமே பூலோகசூது” – என்று பாடியவர்

(அ) மீரா

(ஆ) சாலை.இளந்திரையன்

(இ) பாஸ்கரதாஸ்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

(இ) பாஸ்கரதாஸ்

விளக்கம்: மேற்கண்ட பாடலடிகள் மதுரகவி பாஸ்கரதாஸ் கீர்த்தனைகளின் இரண்டாம் பாகத்தில் “வஞ்சகமாய் நெஞ்சோடு மொழிதல்” என்ற தலைப்பில் அமைந்துள்ளன.

பொருள்: இப்பிறவியில் உன் தாய், தந்தை, உடன்பிறந்தோர் மற்றும் உறவினராக இருப்போர் அனைத்துப் பிறவியிலும் அவ்வாறே இருப்பரோ? இதனை எண்ணிப் பார்த்தால் உறவுகளெல்லம் பொம்மலாட்டம் பேல மாறிமாறி வரும் உறவுகளாகவே உள்ளன.

51. “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதைனை விளையாட்டு” – எனப் பெரியார் குறிப்பிடுவது

(அ) மணக்கொடை

(ஆ) கைம்மை ஒழிப்பு

(இ) மூடநம்பிக்கை

(ஈ) குழந்தைத் திருமணம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) குழந்தைத் திருமணம்

52. நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்

(அ) நாற்சீர்

(ஆ) முச்சீர்

(இ) ஐஞ்சீர்

(ஈ) அறுசீர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்: நேரிசை ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் இலக்கணங்கள் யாவும் அமைய, ஈற்றலடி முச்சீராயும் ஏனைய அடிகள் நாற்சீராய் அமைய “ஏ” என்னும் ஓசையில் முடியும். (எ.கா): “நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!” – ஒளவையார்

53. இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துகள்

(அ) உ, ஒ

(ஆ) இ, ஈ

(இ) அ, ஆ

(ஈ) ப, ம

விடை மற்றும் விளக்கம்

(அ) உ, ஒ

விளக்கம்: உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே – நன்னூல். உ ஊ ஒ ஓ ஒள ஆகிய எழுத்துகள் உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் உண்டாகின்றன.

54. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: ஐயோ, முள் குத்திவிட்டதே!

(அ) வினா வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) உணர்ச்சி வாக்கியம்

(ஈ) செய்தி வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

(இ) உணர்ச்சி வாக்கியம்

55. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “சித்தன்னவாசல் ஓவியங்கள் அழகுமிக்கவை”

(அ) வினா வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) உணர்ச்சி வாக்கியம்

(ஈ) செய்தி வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) செய்தி வாக்கியம்

56. கீழ்க்காணும் சொற்களுள் “நிலவு” என்னும் பொருள் குறிக்காத சொல்

(அ) திங்கள்

(ஆ) ஞாயிறு

(இ) இந்து

(ஈ) மதி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஞாயிறு

விளக்கம்: ஞாயிறு-சூரியன்

57. நெய்தல் திணைக்குரிய தெய்வம்

(அ) இந்திரன்

(ஆ) வருணன்

(இ) துர்க்கை

(ஈ) திருமால்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வருணன்

விளக்கம்:

திணை தெய்வம்

குறிஞ்சி முருகன்

முல்லை திருமால்

மருதம் இந்திரன்

நெய்தல் வருணன்

பாலை துர்க்கை

58. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(அ) அவன் கவிஞன் அல்ல

(ஆ) அவன் கவிஞன் அன்று

(இ) அவன் கவிஞன் அல்லன்

(ஈ) அவன் கவிஞன் இல்லை

விடை மற்றும் விளக்கம்

(இ) அவன் கவிஞன் அல்லன்

விளக்கம்: அஃறிணை ஒருமை-அன்று. அஃறிணை பன்மை-அல்ல. உயர்திணை ஒருமை-அல்லன், அல்லள். உயர்திணை பன்மை-அல்லர்

59. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: என்னால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறப்பட்டது.

(அ) செய்வினை வாக்கியம்

(ஆ) செயப்பாட்டுவினை வாக்கியம்

(இ) தொடர் வாக்கியம்

(ஈ) கலவை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) செயப்பாட்டுவினை வாக்கியம்

60. கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – இப்பாடலில் அடிக்கோடிட்டவைகளில் எவ்வகைத் தொடை நயம் இடம்பெற்றுள்ளது?

(அ) எதுகை

(ஆ) இயைபு

(இ) மோனை

(ஈ) தொடை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) இயைபு

விளக்கம்: இறுதிச் சீர்; ஒன்றி வருவது இயைபுத் தொடையாகும்.

61. அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் – இக்குறட்பாவில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு தருக:

(அ) உரிச்சொற்றொடர்

(ஆ) வினையெச்சம்

(இ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

(ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

62. கீழ்க்காணும் தொடரில் வழுஉத் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி.

(அ) இடப்பக்கச் சுவறில் எழுதாதே

(ஆ) இடது பக்கச் சுவரில் எழுதாதே

(இ) இடப்பக்கச் சுவற்றில் எழுதாதே

(ஈ) இடப்பக்கச் சுவரில் எழுதாதே

விடை மற்றும் விளக்கம்

(ஈ) இடப்பக்கச் சுவரில் எழுதாதே

63. கீழ்க்காணும் அடிக்கோடிட்ட சொற்களுள் முதனிமை திரிந்த தொழிற்பெயரைக் காண்க:

(அ) அறிவறிந்த மக்கட்பேறு

(ஆ) இராமனுக்கு அடி விழுந்தது

(இ) முருகன் பரிசு பெற்றான்

(ஈ) மாதவி ஆடற்கலையில் சிறந்தவள்

விடை மற்றும் விளக்கம்

(அ) அறிவறிந்த மக்கட்பேறு

விளக்கம்: “பெறு” என்ற சொல் முதனிலை திரிந்து “பேறு” என்றானது

64. “வந்தான்”, நடந்தான்” – வேர்ச்சொல்லைச் சுட்டுக:

(அ) வந்து, நடந்து

(ஆ) வந்த, நடந்த

(இ) வா, நட

(ஈ) வந்தான், நடந்தான்

விடை மற்றும் விளக்கம்

(இ) வா, நட

விளக்கம்: வா, நட – வேர்ச்சொற்கள். வந்து, நடந்து-வினையெச்ச சொற்கள். வந்த, நடந்த-பெயரெச்சச் சொற்கள். வந்தான், நடந்தான்-வினைமுற்றுப்பெயர்கள்.

65. பின்வரும் சொற்களில் ஈறுபோதல் விதிப்படியும் இனமிகல் விதிப்படியும் புணரும் பண்புச் சொல் எது?

(அ) நிலங்கடந்தான்

(ஆ) வாழைப்பழம்

(இ) கருங்குயில்

(ஈ) பெரியன்

விடை மற்றும் விளக்கம்

(இ) கருங்குயில்

விளக்கம்: கருங்குயில்- கருமை + குயில் (பண்புப்பெயர் புணர்ச்சி) ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு “கரு+குயில்” என்றானது. இனம் மிகல் விதிப்படி (கு🡪க்+உ)

66. “விரல்கள் பத்தும் மூலதனம்” என்று கூறியவர்

(அ) திருமூலர்

(ஆ) தொல்காப்பியர்

(இ) தாராபாரதி

(ஈ) மருதகாசி

விடை மற்றும் விளக்கம்

(இ) தாராபாரதி

விளக்கம்: “வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் – உன் கைகளில் பூமி சுழன்று வரும்!” மேற்கண்ட பாடலடிகள் கவிஞர் தாராபாரதியின் “இது எங்கள் கிழக்கு” என்னும் கவிதைத் தொகுதியில் அமைந்துள்ளது.

67. தென்னிந்தியாவின் ஏதென்சு நகர் என்றழைக்கப் பெறுவது எது?

(அ) மதுரை

(ஆ) நாகர்கோவில்

(இ) இராமநாதபுரம்

(ஈ) திருச்சி

விடை மற்றும் விளக்கம்

(அ) மதுரை

விளக்கம்: பழம்பெரும் தமிழர் தம் நாகரிகத் தொட்டிலாக மதுரை திகழந்ததால் தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப்படுகிறது.

68. கீழ்க்காணும் நூல்களில் எட்டுத்தொகையில் அடங்காத நூல் எது?

(அ) அகநானூறு

(ஆ) கலித்தொகை

(இ) ஐங்குநுறூறு

(ஈ) நெடுநல்வாடை

விடை மற்றும் விளக்கம்

(ஈ) நெடுநல்வாடை

விளக்கம்: நெடுநல்வாடை-பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை இயற்றியவர் நக்கீரர் ஆவார்.

69. தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?

(அ) தேசியக்கொடி

(ஆ) கதரின் வெற்றி

(இ) தேச பக்தி

(ஈ) கதரின் இரகசியம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கதரின் வெற்றி

விளக்கம்: தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் “கதரின் வெற்றி” ஆகும். இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலான நாடகங்கள் அரங்கேறின.

70. நானிலத்திற்குரிய ஊரின் பெயர்களைப் பொருத்துக:

அ. குறிஞ்சி – 1. ஆலங்காடு

ஆ. முல்லை – 2. கோடியக்கரை

இ. மருதம் – 3. ஆனைமலை

ஈ. நெய்தல் – 4. புளியஞ்சோலை

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 1 3 4

(இ) 3 2 1 4

(ஈ) 1 3 4 2

விடை மற்றும் விளக்கம்

(அ) 3 1 4 2

71. “ஆற்றுணா வேண்டுவ(து) இல்” – இப்பழமொழியில் உள்ள “ஆற்றுணா” என்பதன் பொருள்:

(அ) அரையன்

(ஆ) வழிநடை உணவு

(இ) அரண்மனை

(ஈ) திருவிழா

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வழிநடை உணவு

விளக்கம்: பழமொழி நானூறு: ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு வேற்றுநாடு ஆகா; தமவேயாம், ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல். – முன்றுறை அரையனார்.

பொருள்: கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. ஆறு-வழி; உணா-உணவு; ஆற்றுணா-வழிநடை உணவு

72. சங்க கால இலக்கியங்கள்:

(அ) எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்

(ஆ) நன்னூலும், நம்பியகப்பொருளும்

(இ) கம்பராமாயணமும், பெரியபுராணமும்

(ஈ) வளையாபதியும், குண்டலகேசியும்

விடை மற்றும் விளக்கம்

(அ) எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்

விளக்கம்:

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு சங்க இலக்கியங்கள்

நன்னூல், நம்பியகப் பொருள் இலக்கண நூல்கள்

கம்பராமாயணம், பெரியபுராணம் காப்பியங்கள்

வளையாபதி, குண்டலகேசி ஐம்பெருங்காப்பியம்

73. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமில்லாததைக் கூறுக

அ. பெருமுத்தரையர் பற்றிய குறிப்பு நாலடியாரில் உள்ளது. பழமொழியிலும் இடம்பெற்றுள்ளது.

ஆ. கபிலர் பாடிய அறநூல் “இன்னா நாற்பது”

இ. நான்மணிக்கடிகையில் உள்ள நூறு பாடல்களும் நான்கு நான்கு கருத்துகளைக் கொண்டு இயங்குவது.

ஈ. அம்மை என்னும் வனப்பின்பாற்படும் காரியாசான் இயற்றிய நூல் சிறுபஞ்சமூலம் என்பதாகும்.

(அ) ஆ மட்டும் பொருத்தமற்றது

(ஆ) இ மட்டும் பொருத்தமற்றது

(இ) ஈ மட்டும் பொருத்தமற்றது

(ஈ) அ மட்டும் பொருத்தமற்றது

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அ மட்டும் பொருத்தமற்றது

74. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் கலிங்கத்துப்பரணியே” – இப்படிக் கூறியவர்

(அ) திரு.வி.கல்யாண சுந்தரம்

(ஆ) பெரியார்

(இ) அண்ணாதுரை

(ஈ) மு.வரதராசன்

விடை மற்றும் விளக்கம்

(இ) அண்ணாதுரை

விளக்கம்: “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே”

75. குரவைக் கூத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி

(அ) தொண்டகப்பறை

(ஆ) செங்கோட்டுயாழ்

(இ) புல்லாங்குழல்

(ஈ) உடுக்கை

விடை மற்றும் விளக்கம்

(அ) தொண்டகப்பறை

76. “கண்ணுள் வினைஞர்” என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப்பெறுபவர்கள்

(அ) ஓவியக் கலைஞர்கள்

(ஆ) சிற்பக் கலைஞர்கள்

(இ) கட்டடக் கலைஞர்கள்

(ஈ) இசைக் கலைஞர்கள்

விடை மற்றும் விளக்கம்

(அ) ஓவியக் கலைஞர்கள்

77. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களுள் மிகவும் பழைமையான கோயில் உள்ள ஊர்

(அ) சுவாமிமலை

(ஆ) பிள்ளையார்பட்டி

(இ) திருப்பரங்குன்றம்

(ஈ) பழனி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பிள்ளையார்பட்டி

78. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

(அ) ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி

(ஆ) எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்.

(இ) கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே

(ஈ) சேற்று நண்டு சேற்றைக் குழைத்து ஏற்றடைக்குதே

விடை மற்றும் விளக்கம்

(ஆ) எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்.

விளக்கம்: முக்கூடற்பள்ளு: ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே

79. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர்

(அ) தருமர்

(ஆ) ஜி.யூ.போப்

(இ) மல்லர்

(ஈ) பரிமேலழகர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஜி.யூ.போப்

விளக்கம்: திருக்குறளுக்கு உரை செய்த பத்து உரையாசிரியர்கள்: தருமர், மணக்குடவர், தாமதத்தர், நக்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்.

80. கபிலரைப் பிற கவிஞர்கள் புகழ்ந்ததைச் சரியாகப் பொருத்துக

அ. நக்கீரர் – 1. “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்”

ஆ. பெருங்குன்றூர் கிழார் – 2. “வாய்மொழிக் கபிலன்”

இ. இளங்கீரனார் – 3. “பொய்யா நாவிற் கபிலன்”

ஈ. மாறோக்கத்து நப்பசலையார் – 4. “நல்லிசைக்கபிலன்”

அ ஆ இ ஈ

(அ) 2 1 4 3

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 4 2

(ஈ) 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 2 4 1 3

81. சித்தர் பாடலில் “கடம்” என்பதன் பொருள் யாது?

(அ) பாம்பு

(ஆ) இறுமாப்பு

(இ) உடம்பு

(ஈ) வேம்பு

விடை மற்றும் விளக்கம்

(இ) உடம்பு

விளக்கம்: “கள்ள வேடம் புனையாதே – பல கங்கையிலே உன்கடம் நனையாதே! கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக் கொண்டு பிரிந்து நீ கோள் முனையாதே! – கடுவெளிச் சித்தர். கடம் 🡪 உடம்பு. பொருள்: போலி வேடங்களைப் போடாதே! புண்ணிய ஆறுகளைத் தேடித்தேடிப் போய் முழுகாதே! யாருடைய பொருளையும் திருட நினைக்காதே! ஒருவனோடு நட்புகொண்டு பிறகு அவனைப் பிரிந்து, அவனைப் பற்றிப் பிறரிடம் கோள்மூட்டிப் பேசாதே!

82. பொருட்பாவில் பகுக்கப் பெறாத இயல்

(அ) பாயிரவியல்

(ஆ) அரசியல்

(இ) அங்கவியல்

(ஈ) ஒழிபியல்

விடை மற்றும் விளக்கம்

(அ) பாயிரவியல்

விளக்கம்: பாயிரவியல்-அறத்துப்பால்

83. கம்பராமாயணத்தில் அமைந்திராத காண்டம்

(அ) அயோத்தியா காண்டம்

(ஆ) மதுரைக்காண்டம்

(இ) ஆரணிய காண்டம்

(ஈ) யுத்த காண்டம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) மதுரைக்காண்டம்

விளக்கம்: மதுரைக்காண்டம்-சிலப்பதிகாரத்தின் பிரிவாகும்.

84. தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்படுவது

(அ) நாயக்கர் காலம்

(ஆ) களப்பிரர் காலம்

(இ) கற்காலம்

(ஈ) உலோகக் காலம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) களப்பிரர் காலம்

85. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” – எனும் குறளில் “கூகை” என்பதன் பொருள் யாது?

(அ) ஆட்டுக்கடா

(ஆ) கோட்டான்

(இ) முதலை

(ஈ) யானை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கோட்டான்

86. “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்” – என்னும் பழமொழியில் “அஷ்டபிரபந்தம்” என்பது எத்தனை நூல்களைக் குறிக்கிறது?

(அ) பத்து நூல்கள்

(ஆ) பதினெட்டு நூல்கள்

(இ) எட்டு நூல்கள்

(ஈ) நான்கு நூல்கள்

விடை மற்றும் விளக்கம்

(இ) எட்டு நூல்கள்

87. பொருத்துக:

அ. சிறுபஞ்சமூலம் – 1. கணிமேதாவியார்

ஆ. திருவிளையாடல் புராணம் – 2. முன்றுறை அரையனார்

இ. பழமொழி நானூறு – 3. பரஞ்சோதி முனிவர்

ஈ. ஏலாதி – 4. காரியாசன்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 1 3 2 4

இ. 4 2 3 1

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

ஈ. 4 3 2 1

88. பொருத்துக

ஊர் சிறப்புப்பெயர்

அ. சிதம்பரம் – 1. திருமறைக்காடு

ஆ. வேதாரண்யம் – 2. திருச்சிற்றம்பலம்

இ. விருத்தாசலம் – 3. திருப்பாதிரிப்புலியூர்

ஈ. கடலூர் – 4. திருமுதுகுன்றம்

அ ஆ இ ஈ

அ. 4 2 1 3

ஆ. 3 1 2 4

இ. 2 3 1 4

ஈ. 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

ஈ. 2 1 4 3

89. தன் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று பொறிக்க வேண்டுமென்று விரும்பியவர் யார்?

(அ) கால்டுவெல்

(ஆ) வீரமாமுனிவர்

(இ) ஜி.யூ.போப்

(ஈ) சீகன் பால்கு

விடை மற்றும் விளக்கம்

(இ) ஜி.யூ.போப்

90. ‘திருவேங்கடத்தந்தாதி” என்ற நூலின் ஆசிரியர் யார்?

(அ) குமரகுருபரர்

(ஆ) ஒட்டக்கூத்தர்

(இ) கம்பர்

(ஈ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

91. கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?

அ. முத்துராமலிங்கர் விருப்பத்துக்கு இணங்க மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்தார்.

ஆ. நடுவண் அரசு முத்துராமலிங்கரது அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது.

இ. ஆங்கில அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் “தேசியம் காத்த செம்மல்” எனும் விருதளித்தது.

ஈ. முத்துராமலிங்கர் தம் சொத்துகள் முழுவதையும் பதினேழு பாகங்களாகப்பிரித்து, திருக்கோவில்களுக்கு எழுதி வைத்தார்.

(அ) அ, இ சரியானவை

(ஆ) இ, ஈ சரியானவை

(இ) ஆ, ஈ சரியானவை

(ஈ) அ, ஆ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அ, ஆ சரியானவை

விளக்கம்: ஆங்கில அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கத் தேவருக்கும் “வாய்ப்பூட்டும் சட்டம்” போட்டது. முத்துராமலிங்கத்தேவர், 32 சிற்றூர்களில் தனக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

/

92. “தமிழுக்குக் கதி” என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள்

(அ) சங்க இலக்கியம், மகாபாரதம்

(ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை

(இ) கம்பராமாயணம், திருக்குறள்

(ஈ) தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம்

விடை மற்றும் விளக்கம்

(இ) கம்பராமாயணம், திருக்குறள்

விளக்கம்: தமிழுக்குக் கதி எனப்படுபவை கம்பராமாயணமும் திருக்குறளும் என்று கூறியவர் செல்வ கேசவராய முதலியார்.

/

93. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – கூறியவர்

(அ) மகாகவி பாரதியார்

(ஆ) பேரறிஞர் அண்ணாதுரை

(இ) தமிழ்த்தென்றல் திரு.கி.க

(ஈ) செயங்கொண்டார்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பேரறிஞர் அண்ணாதுரை

/

94. பொருத்துக:

(அ) மணிமேகலை – 1. உமறுப்புலவர்

(ஆ) தேவாரம் – 2. கிருஷ்ணப்பிள்ளை

(இ) சீறாப்புராணம் – 3. சீத்தலைச்சாத்தனார்

(ஈ) இரட்சணிய யாத்திரிகம் – 4. சுந்தரர்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 2 4 3

இ. 3 4 1 2

ஈ. 1 4 2 3

விடை மற்றும் விளக்கம்

இ. 3 4 1 2

/

95. “திராவிட சாஸ்திரி” என அழைக்கப்பட்டவர்

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) மறைமலை அடிகள்

(இ) சி.வை.தாமோதரனார்

(ஈ) உ.வே.சாமிநாதர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பரிதிமாற் கலைஞர்

விளக்கம்: பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்புலமையையும் கவிபாடும் திறமையையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை வழங்கினார்.

/

96. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. சாதியும், நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மிகத்துக்கும் இல்லை என்றவர் – 1. கடுவெளிச் சித்தர்

ஆ. அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே புதியனவற்றை ஏற்றல் வேண்டும் என்றவர் – 2. ஜவஹர்லால் நேரு

இ. பிறர் தாழும்படிக்கு நீ தாழ்வைப் பண்ணாதே என்றவர் – 3. பசும்பொன் முத்துராமலிங்கர்

ஈ. ஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் – 4. தந்தை பெரியார்

அ ஆ இ ஈ

அ. 1 2 4 3

ஆ. 3 4 1 2

இ. 2 3 1 4

ஈ. 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 4 1 2

/

97. “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” என்று பாடியவர் யார்?

(அ) ஒளவையார்

(ஆ) கம்பர்

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கம்பர்

/

98. பொருத்துக:

அ. வினையே ஆடவர்க்குயிர் – 1. தாராபாரதி

ஆ. உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே – 2. தொல்காப்பியர்

இ. முந்நீர் வழக்கம் மகடூஉ உவோடில்லை – 3. குறுந்தொகை

ஈ. விரல்கள் பத்தும் மூலதனம் – 4. திருமூலர்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 1 2 3 4

இ. 3 4 2 1

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

இ. 3 4 2 1

/

99. பொருத்துக:

நூலாசிரியர் நூல்

அ. சி.சு.செல்லப்பா – 1. “அப்பாவின் சிநேகிதர்

ஆ. பி.எஸ்.இராமையா – 2. ‘வலம்புரிச் சங்கு’

இ. அசோகமித்திரன் – 3. “எழுத்து”

ஈ. நா.பார்த்தசாரதி – 4. “நட்சத்திரக் குழந்தைகள்”

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 3 4 2 1

இ. 4 3 1 2

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

அ. 3 4 1 2

/

100. “அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த “ இவ்வடிகளுக்குச் சொந்தக்காரர் யார்?

(அ) தாயுமானவர்

(ஆ) இராமலிங்கர்

(இ) திருமூலர்

(ஈ) மறைமலையடிகள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மறைமலையடிகள்

/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!