Tnpsc General Tamil Previous Question Paper 8
41. அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை எழுதுக.
(அ) பாட்டு, பட்டு, பையன், பௌவம்
(ஆ) பட்டு, பாட்டு, பௌவம், பையன்
(இ) பையன், பௌவம், பட்டு, பாட்டு
(ஈ) பட்டு, பாட்டு, பையன், பௌவம்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) பட்டு, பாட்டு, பையன், பௌவம்
42. பின்வருவனற்றைப் பொருத்துக.
(அ) வினைப்பயன் விளiயுங்காலை – 1.பத்துவகைக்குற்றங்களின் பயன்
உயிர்கட்கு
(ஆ) மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் – 2.பத்தின் நீங்கித் தானம், சீலம், என்று
தாங்குவது
(இ) தீவினை என்பது – 3.மனப்பேரின்பமும், கவலையும் காட்டும்
(ஈ) நல்வினை என்பது – 4. அலகில பல்லுயிர் அறுவகைத்தாகும்
அ ஆ இ ஈ
(அ) 1 3 2 4
(ஆ) 3 4 1 2
(இ) 2 1 3 4
(ஈ) 3 2 1 4
விடை மற்றும் விளக்கம்
(ஆ) 3 4 1 2
விளக்கம்:
மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை. 18-ஆம் பாடல் (பிறப்பும் வினையும்).
“உலகம் மூன்றிலும் உயிராம் உலகம்
அலகில; பல்லுயிர் அறுவகைத் தாகும்;
மக்களும், தேவரும், பிரமரும், நரகரும்,
தொக்க விலங்கும், பேயும் என்றே,
நல்வினை தீவினை என்றிரு வகையாற்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி
வினைப்பயன் வினையுங் காலை, உயிர்கட்கு
மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும்”
பொருள்: மூவுலகில் வாழும் எண்ணற்ற உயிர்கள் மக்கள், தேவர், பிரம்மர், நரகர், விலங்குத் தொகுதி பேய் என அறுவகைப்படும். அவை தாம் செய்த நல்வினை, தீவினையால் அறுவகைப்பட்ட உயிர்களுள் ஒன்றாகப் பிறக்கின்றன. அவ்வினைப் பயன்கள் உண்டாகும்போது பேரின்பங்களையும் துன்பங்களையும் அடைகின்றன.
43. “வருவையாகிய சின்னாள் வாழர வாதல்”
– இந்நற்றிணைப் பாடலில் “சின்னாள்” என்பது
(அ) சில நாள்
(ஆ) சிறுநாள்
(இ) சிறிய ஆள்
(ஈ) சின்ன ஆள்
விடை மற்றும் விளக்கம்
(அ) சில நாள்
விளக்கம்:
சின்னாள்-சில+நாள்
அ. “பல சில எனும் இவை தம்முன் பிறவரின் அகரம் விகற்பமாகலும்” என்ற விதிப்படி நிலைமொழி ஈற்றின் அகரம் கெட்டு சில்+நாள் என்றானது.
ஆ. “லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும்” என்ற விதிப்படி வருமொழி முதலில் மெல்லினம் (நா) வந்ததால் நிலைமொழி ஈற்றெழுத்தான லகரம், னகரமாகி னகரமாகி “சின்+நாள்” என்றானது.
இ. “னல முன் றனவு; ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “ன”கர மெய் முன்வந்த “ந”கரம் “ன”கரமாகி “சின்னாள்” எனப் புணர்ந்தது.
44. திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக:
(அ) குறிஞ்சி – 1. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
(ஆ) முல்லை – 2. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
(இ) மருதம் – 3. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
(ஈ) நெய்தல் – 4. ஊடலும் ஊடல் நிமித்தமும்
அ ஆ இ ஈ
(அ) 1 3 2 4
(ஆ) 3 1 4 2
(இ) 4 2 1 3
(ஈ) 2 4 3 1
விடை மற்றும் விளக்கம்
(ஆ) 3 1 4 2
45. “ஐ” என்னும் சொல்லின் பொருள்
(அ) அரண்
(ஆ) சோலை
(இ) காவல்
(ஈ) தலைவன்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) தலைவன்
46. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(அ) சீப்பு, சங்கு, சைதை, சொல்
(ஆ) சங்கு, சீப்பு, சைதை, சொல்
(இ) சைதை, சொல், சீப்பு, சங்கு
(ஈ) சொல், சைதை, சங்கு, சீப்பு
விடை மற்றும் விளக்கம்
(ஆ) சங்கு, சீப்பு, சைதை, சொல்
47. காய்கனி – இதில் அமைந்துள்ள தொகைநிலைத் தொடரைக் கண்டறிக:
(அ) வினைத்தொகை
(ஆ) உம்மைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஈ) பண்புத்தொகை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) உம்மைத்தொகை
விளக்கம்:
காய்கனி-உம்மைத்தொகை.
“உம்” என்ற விகுதி மறைந்து வந்தால் அஃது உம்மைத் தொகையாகும். “காயும் கனியும்” என்பதில் “உம்” விகுதி மறைந்து காய் கனி என அமைந்துள்ளது.
“காயும் கனியும்” என்று அமைந்திருந்தால் அஃது எண்ணும்மையாகும்.
48. நாற்கரணம் – சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
(அ) நான்கு+அரணம்
(ஆ) நான்+கரணம்
(இ) நாண்+கரணம்
(ஈ) நான்கு+கரணம்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) நான்கு+கரணம்
விளக்கம்:
தமிழ் விடு தூது-96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும்.
“நல் ஏரினால் செய்யுள் நாற்கரணத் தேர்பூட்டி” மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு கரணங்களையும் நல்ல ஏர்களாகக் கொண்டு என்பது பொருளாகும்.
நாற்கரணம்-நான்கு+கரணம்.
49. “அளவில் சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்” தொடரில் அடிக்கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை
(அ) மோனை
(ஆ) முரண்
(இ) இயைபு
(ஈ) எதுகை
விடை மற்றும் விளக்கம்
(ஈ) எதுகை
விளக்கம்:
அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றவருவது எதுகைத் தொகையாகும்.
50. திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் கேட்பது
(அ) அறிவினா
(ஆ) ஐய வினா
(இ) அறியா வினா
(ஈ) கொளல் வினா
விடை மற்றும் விளக்கம்
(அ) அறிவினா
விளக்கம்:
தனக்குத் தெரிந்தது பிறருக்குத் தெரியுமா? என்பதை அறிந்து கொள்ள கேட்பது “அறிவினா” ஆகும்.
எ.கா:ஆசிரியர் மாணவனிடம் கேட்பது அறிவினாவாகும்.
தனக்குத் தெரியாததை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக வினவுவது “அறியா வினா” ஆகும்.
எ.கா. மாணவன் ஆசிரியரிடம் கேட்பது