Tnpsc General Tamil Previous Question Paper 7
Tnpsc General Tamil Previous Question Paper 7
Tnpsc General Tamil Previous Question Paper 7: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.
1. எதிர்ச்சொல் எடுத்தெழுதுக:
பட்டியல் I பட்டியல் II
1. ஓரம் – 1.வறுமை
2. வேற்றுமை – 2. தீது
3. நன்று – 3. மையம்
4. செழுமை – 4. ஒற்றுமை
அ ஆ இ ஈ
அ 4 3 1 2
ஆ 2 3 1 4
இ 3 2 1 4
ஈ 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: ஈ 3 4 2 1
2. பிரித்தெழுதுக – நாத்தொலைவில்லை
(அ) நா+தொலைவில்லை
(ஆ) நாத்தொலைவு+இல்லை
(இ) நா+தொலை+இல்லை
(ஈ) நா+தொலைவு+இல்லை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) நா+தொலைவு+இல்லை
விளக்கம்:
நா+தொலைவு+இல்லை
முற்றியலுகரப் புணர்ச்சி.
“முற்றும் அற்று ஒரோவழி” என்ற விதிப்படி வருமொழி முதலில் உயிரெழுத்து (இ) வந்ததால், நிலைமொழியிலுள்ள முற்றுகரம் (உ) மெய்யை (வ்) விட்டு நீங்கி, தெலைவ்+இல்லை என்றானது. பின்னர் “உடல் மோல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தொலைவில்லை”என்றானது.
தோன்றல் விகாரப் புணர்ச்சி விதிப்படி.
நா+தொலைவில்லை என்பது “நாத்தொலைவில்லை” என்று புணர்ந்தது.
3. நோக்கினான் – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:
(அ) நோக்குதல்
(ஆ) நோக்கி
(இ) நோக்கியவன்
(ஈ) நோக்கு
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) நோக்கு
விளக்கம்:
நோக்கு-வேர்ச்சொல்
நோக்குதல்-தொழிற்பெயர்.
நோக்கி-வினையெச்சம்.
நோக்கியவன்-வினையாலணையும் பெயர்.
4. பொருந்தா இணையைக் கண்டறிக:
(அ) வெண்தயிர்-பண்புத்தொகை
(ஆ) இரைதேர்தல்-வினைத்தொகை
(இ) நாழிகைவாரம்-உம்மைத்தொகை
(ஈ) கயிலாய வெற்பு-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) இரைதேர்தல்-வினைத்தொகை
விளக்கம்:
வெண்தயிர்-பண்புத்தொகை. வெண்மை+தயிர் என்பதில் “மை” விகுதி மறைந்து வந்துள்ளது.
இரைதேர்தல்-இரண்டாம் வேற்றுமைத்தொகை. “இரையைத்தேர்தல்” என்பதில் உள்ள இரண்டாம் வேற்றுமை உருபான “ஐ” மறைந்து வந்துள்ளது. “நாழிகையும் வாரமும்” என்பதில் உள்ள “உம்”விகுதி மறைந்து நாழிகைவாரம் என்று அமைந்துள்ளதால் இஃது உம்மைத் தொகையாகும். “கயிலாயவெற்பு” இரு பெயரொட்டுப் பண்புத்தொகை இரண்டு பெயர்ச்சொற்கள் ஒட்டிய சொற்றொடரில் நிலைமொழி சிறப்புப் பெயராகவும் வருமொழி பொதுப் பெயராகவும், “ஆகிய” என்ற பண்புருபு மறைந்தும் வருமாயின் அஃது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும். கயிலாய-சிறப்புப்பெயர். வெற்பு-பொதுப்பெயர். வெற்பு என்றால் மலை என்பது பொருளாகும்.
5. பெறு-இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு:
(அ) பெற்றான்
(ஆ) பெற்றவன்
(இ) பெற்று
(ஈ) பெற்றவர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) பெற்றான்
விளக்கம்:
பெறு-வேர்ச்சொல்.
பெற்றான்-வினைமுற்று.
பெற்றவன்-வினையாலணையும் பெயர்.
பெற்று-வினையெச்சம்.
பெற்ற-பெயரெச்சம்.
பெறுதல்-தொழிற்பெயர்.
6. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
(அ) கோணி, குளம், குட்டை, ஏரி, ஊருணி, பொய்கை, தடாகம்.
(ஆ) செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அமுதத் தமிழ்
(இ) ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி
(ஈ) கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்
விளக்கம்:
அ-யில், அமைந்துள்ள சொற்கள் அனைத்தும் “நீர்நிலை” என்ற ஒரே பொருளைக் குறிக்கின்றன.
ஆ-யில் அமைந்துள்ள சொற்கள் அனைத்தும் தமிழ் மொழியின் “சிறப்புப் பெயர்” அல்லது “அடைமொழி” என்ற ஒரே பொருளைக் குறிக்கின்றன.
இ-யில், அமைந்துள்ள சொற்கள் அனைத்தும் “உலகம்” என்ற ஒரே பொருளைக் குறிக்கின்றன.
ஆனால் ஈ-யில் உள்ள சொற்கள் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றன.
7. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. என்னே, மயிலின் அழகு! – 1.எதிர்மறைத் தொடர்
ஆ. கண்ணன் பாடம் படித்திலன் – 2. உணர்ச்சித் தொடர்
இ. மணிமொழி பரிசு பெற்றாள் – 3. கட்டளைத்தொடர்
ஈ. உழைத்துப்பிழை – 4. உட ன் பாட்டுத் தொடர்
அ ஆ இ ஈ
(அ) 3 4 2 1
(ஆ) 3 4 1 2
(இ) 2 1 4 3
(ஈ) 2 3 1 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 2 1 4 3
8. பொருத்துக:
சொல் பொருள்
அ. தேநீர் 1. மூன்று நாள்
ஆ. முந்நாள் 2. தேன்போலும் இனிய நீர்
இ. தேனீர் 3. முந்தைய நாள்
ஈ. முன்னாள் 4. தேயிலை நீர்
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 4 1 2 3
(இ) 2 3 4 1
(ஈ) 3 4 1 2
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) 4 1 2 3
9. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக:
(அ) படைமடம் பேகன் படான் கொடைமடம் படுதல் அல்லது
(ஆ) பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்
(இ) பேகன் படைமடம் படுதல் அல்லது கொடைமடம் படான்
(ஈ) கொடைமடம் பேகன் படுதல் அல்லது படைமடம் படான்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்
10. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
– இக்குறட்பாலில் பயின்றுவரும் அணி
(அ) சொற்பொருள் பின்வருநிலையணி
(ஆ) பொருள் பின்வருநிலையணி
(இ) உவமையணி
(ஈ) சொல் பின்வருநிலையாணி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) சொல் பின்வருநிலையாணி
விளக்கம்:
சொல் பின்வரு நிலையணி
ஒரு செய்யுளில் முன்னர் வந்நத ஒரு சொல் பின்னர் பல இடங்களிலும் வந்து வெவ்வேறு பொருளைத் தருமாயின், அது சொல் பின்வரு நிலையணியாகும்.
“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்”
பொருளல்லவரை-தகுதியற்றவரை.
பொருளாக-ஒரு பொருட்டாக.
பொருளல்லது-இணையான பொருள்.
பொருள்-செல்வம்.
தகுதியற்றவரையும் ஒரு பொருட்டாக மதிக்கச் செய்யும் செல்வத்திற்கு இணையான பொருள் வேறில்லை.
General Tamil Previous Questions Pdf
11. தவறான மரபுச் சொல்லைத் தேர்க:
(அ) மாம் பிஞ்சு-மாவடு
(ஆ) இளந் தேங்காய்-வழுக்கை
(இ) வாழைப்பிஞ்சு-வாழைக்கச்சல்
(ஈ) முருங்கைப் பிஞ்சு-முருங்கை மொட்டு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) முருங்கைப் பிஞ்சு-முருங்கை மொட்டு
விளக்கம்:
காய்களின் இளமைப் பெயரில் முருங்கைக்காயின் இளமைப் பெயர் முருங்கைப் பிஞ்சாகும். முருங்கைமொட்டு தவறானது.
12. “கொள்” என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று
(அ) கொண்டான்
(ஆ) கொள்க
(இ) கொண்ட
(ஈ) கொண்டு
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) கொண்டான்
விளக்கம்:
கொள்-வேர்ச்சொல்.
கொண்டான்-வினைமுற்று.
கொள்க-வியங்கோள் வினைமுற்று.
கொண்ட-பெயரெச்சம்.
கொண்டு-வினையெச்சம்
13. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:
(அ) கப்பல்
(ஆ) அம்பி
(இ) ஆழி
(ஈ) திமில்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) ஆழி
விளக்கம்:
கலத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்
கப்பல், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.
கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்
ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி,
14. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. கனகம் – 1. மோதிரம்
ஆ. மேழி – 2. ஆடை
இ. கலிங்கம் – 3. பொன்
ஈ. ஆழி – 4. கலப்பை
அ ஆ இ ஈ
(அ) 2 4 3 1
(ஆ) 1 3 2 4
(இ) 3 2 4 1
(ஈ) 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 3 4 2 1
விளக்கம்:
“கனகம்” என்பது பொன்னைக் குறிக்கும் சொற்களில் ஒன்றாகும்.
“கலிங்கம்” என்பது ஆடையைக் குறிக்கும் சொற்களில் ஒன்றாகும்.
(எ.கா) “அரைக்கலிங்கம் உரிப்புகண்ட கலிங்கர்” – கலிங்கத்துப் பரணி.
பொருள்: அரையின் கண் உள்ள ஆடை களையப்பட்ட கலிங்க வீரர்கள்.
மேழி-கலப்பை; ஆழி-மோதிரம்.
(எ.கா): “மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை
ஆழி தரித்தே அருளும் கை”
– கம்பர்.
உழவர்களின் சிறப்பு பற்றி கம்பர் இயற்றிய பாடலடிகளாகும்.
பொருள்: கலப்பை பிடித்த உழவனின் கைகளை, வேற்படையைக் கையில் பிடித்துள்ள மன்னர்களும் ஆர்வத்துடன் நோக்குவர். மோதிரம் அணிந்துள்ள உழவரின் கைகள் வருபவர்க்கெல்லாம் வரையாது வழங்கும் கைகளாகும்.
15. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
(அ) சிலப்பதிகாரம், மணிமேகலை
(ஆ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது
(இ) இராமாயணம், மகாபாரதம்
(ஈ) பாண்டியன் நெடுஞ்சொழியன், கபிலர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) பாண்டியன் நெடுஞ்சொழியன், கபிலர்
விளக்கம்:
சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெருங்காப்பியங்கள்,
இன்னாநாற்பது, இனியவைநாற்பது-பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
இராமாயணம், மகாபாரதம்-இதிகாசங்கள்.
முதல் காரணம்: கபிலர்-புலவர்,
பாண்டியன் நெடுஞ்செழியன்-மன்னன்.
இரண்டாம் காரணம்: கபிலருடன் தொடர்புடைய மன்னன் பாரி ஆவார்.
16. பின்வருவனவற்றுள் தவறான இணையைச் சுட்டுக:
(அ) சிறிது x பெரிது
(ஆ) திண்ணிது x வலிது
(இ) உயர்வு x தாழ்வு
(ஈ) நன்று x தீது
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) திண்ணிது x வலிது
விளக்கம்:
திண்ணிது x மெலிது
17. திருக்குறள்-பொருட்பாலின் இயல்கள்
(அ) பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல்
(ஆ) அரசியல், அங்கவியல், ஒழிபியல்
(இ) அரசியல், இல்லறவியல், களவியல்
(ஈ) பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) அரசியல், அங்கவியல், ஒழிபியல்
விளக்கம்:
நிலைகள் | கூறுகள் | |||||||
பால் | அறம் | பொருள் | இன்பம் | |||||
இயல் | பாயிரம் | இல்லறம் | துறவறம் | அரசு | அங்கம் | ஒழிபு | களவு | கற்பு |
அதிகாரம் | 4 | 20 | 14 | 25 | 32 | 13 | 7 | 18 |
குறள் | 40 | 200 | 140 | 250 | 320 | 130 | 70 | 180 |
18. நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
(அ) 1968
(ஆ) 1988
(இ) 1958
(ஈ) 1978
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) 1978
விளக்கம்:
நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1978-ஆம் ஆண்டு வெளியிட்டு சிறப்பித்தது.
19. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
(அ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
(ஆ) பெருங்குன்றூர்க் கிழார்
(இ) பொருந்தில் இளங்கீரனார்
(ஈ) காக்கைப்பாடினியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
விளக்கம்:
குறுந்தொகை என்ற நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன.
20. “நாரதர் வருகிறார்” என்ற தொடர் என்ன ஆகுபெயர்?
(அ) காரியவாகு பெயர்
(ஆ) கருத்தாவாகு பெயர்
(இ) கருவியாகு பெயர்
(ஈ) உவமையாகு பெயர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) உவமையாகு பெயர்
விளக்கம்:
“நாரதர் வருகிறார்” என்பது உவமையாகு பெயர். இங்கு நாரதர் என்பது அவரைப் போன்ற குணமுடைய மனிதனைக் குறிக்கின்றது.