Tnpsc General Tamil Previous Question Paper 6
51. பொருட்டன்று – பிரித்து எழுதுக:
(அ) பொருட்+அன்று
(ஆ) பொரு+அன்று
(இ) பொருட்டு+அன்று
(ஈ) பொருட்+டன்று
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) பொருட்டு+அன்று
விளக்கம்:
பொருட்டு+அன்று-பொருட்டன்று. இது குற்றியலுகரப் புணர்ச்சியாகும். “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி, பொருட்ட்+அன்று என்றானது. “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி பொருட்டன்று என்று புணர்ந்தது.
52. பொருத்துக:
அ. ஆய்தக்குறுக்கம் – 1. வெளவால்
ஆ. ஐகாரக்குறுக்கம் – 2. மருண்ம்
இ. ஓளகாரக்குறுக்கம் – 3. கஃறீது
ஈ. மகரக்குறுக்கம் – 4. கடலை
அ ஆ இ ஈ
(அ) 1 4 3 2
(ஆ) 2 1 4 3
(இ) 4 3 2 1
(ஈ) 3 4 1 2
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 3 4 1 2
53. அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக:
(அ) மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர்
(ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு
(இ) முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்
(ஈ) மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு
54. பின்வருவனவற்றைப் பொருத்துக:
அ. விரிநகர் – 1. பண்புத்தொகை
ஆ. மலரடி – 2. வினைத்தொகை
இ. மா பலா வாழை – 3. உவமைத்தொகை
ஈ. முதுமரம் – 4. உம்மைத்தொகை
அ ஆ இ ஈ
(அ) 4 1 2 3
(ஆ) 2 3 4 1
(இ) 3 2 1 4
(ஈ) 2 4 3 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) 2 3 4 1
விளக்கம்:
விரிநகர், விரிந்தநகர், விரியும்நகர் – என மூன்று காலங்களும் பொருந்தி வருவதால், இது வினைத்தொகை.
மலர் போன்ற அடி-மலரடி. “போல” என்ற உவம உருபு வந்துள்ளதால் இது உவமைத்தொகை.
மாவும் பலாவும் வாழையும் என்று “உம்” விகுதி வெளிப்பட வந்திருந்தால் எண்ணும்மையாகும். “உம்” விகுதி மறைந்து வந்ததால் இஃது உம்மைத் தொகையாகும். முதுமை+மரம்-முதுமரம். “மை” விகுதி வந்ததால், இது பண்புத்தொகை ஆகும்.
55. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. மூன்று காலங்களில் ஒன்றனை உணர்ததுவது – 1.பெயரெச்சம்
ஆ. முக்காலத்தையும் உணர்த்துவது – 2.வினைமுற்று
இ. படித்தல், கற்பித்தல், எழுதுதல் – 3.வினையெச்சம்
ஈ. முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது – 4.தொழிற்பெயர்
அ ஆ இ ஈ
(அ) 1 4 2 3
(ஆ) 4 2 1 3
(இ) 2 3 4 1
(ஈ) 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 2 3 4 1
விளக்கம்:
மூன்று காலங்களில் இறந்தகாலத்தை மட்டும் வினைமுற்று காட்டுகிறது.
வினையெச்சம் முக்காலத்தையும் உணர்த்தும்.
படித்து முடித்தான்-இறந்தகாலம்.
படிக்க விழைக்கின்றான்-எதிர்காலம்.
படித்தால் பயனுண்டு-எதிர்காலம்.
“அல்” விகுதி பெற்று வருவது தொழிற்பெயர்.
பெயரெச்சம்-படித்த பையன், ஓடிய குதிரை எனப்பெயர்ச் சொல்லில் முடியும்.
56. பொருந்தாத இணையினைக் கண்டறிக:
திணை தொழில்
(அ) முல்லை 1.வரகு விதைத்தல், களைப்பறித்தல்
(ஆ) பாலை 2. நிரை கவர்தல், சூறையாடல்
(இ) குறிஞ்சி 3. தேனெடுத்தல், கிழங்கழ்தல்
(ஈ) மருதம் 4. மீன் பிடித்தல், உப்பு விற்றல்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) மற்றும் (ஈ) தவறானவை.
விளக்கம்:
முல்லைத் திணைக்குரிய தொழில் ஆநிரை மேய்த்தல்.
மருதத் திணைக்குரிய தொழில் நெல்லரிதல், களைப்பறித்தல்.
நெய்தல் திணைக்குரிய தொழில், மீன்பிடித்தல் உப்பு விற்றல்.
(அ) மற்றும் (ஈ) தவறானவை.
57. அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையை குறிப்பிடுக:
(அ) அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
(ஆ) ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
(இ) கண், கண்டம், கண்டு, கண்ணி
(ஈ) தகடு, தகழி, தகவு, தகர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) கண், கண்டம், கண்டு, கண்ணி
58. “அப்பிசி மாசம் அடமள இம்பாங்க” – இத்தொடரின் பிழை நீங்கிய வடிவம்
(அ) ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
(ஆ) ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
(இ) ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
(ஈ) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
59. கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
அ. நான், யான் என்பவை தன்மை ஒருமைப்பெயர்கள்
ஆ. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
இ. வேற்றுமை உருபேற்கும் போது, “யான்” என்பது “என்” என்றும் “யாம்” என்பது “எம்” என்றும், “நாம் என்பது “நம்” என்றும் திரியும்.
ஈ. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னில ஒருமை பெயர்கள் ஆகும்.
(அ) ஆ, இ, ஈ சரியானவை
(ஆ) அ,ஆ, இ சரியானவை
(இ) ஆ, ஈ, அ சரியானவை
(ஈ) ஈ, இ, அ சரியானவை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) அ,ஆ, இ சரியானவை
60. “கூவா முன்னம் இளையோன் குறுகிநீ” கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமானது இலக்கணக்குறிப்பைக் கண்டறிக
(அ) பெயரெச்சம், வினையெச்சம்,
(ஆ) பண்புத்தொகை, பெயரெச்சம்
(இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்
(ஈ) வினைமுற்று, வினையெச்சம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்