Tnpsc General Tamil Previous Question Paper 5
91. கீழ்வருவனவற்றுள் பண்புத்தொகை அல்லாதன
அ.நெடுநீர். ஆ.உகுநீர். இ.செந்நீர் ஈ.கண்ணீர்
(அ) அ மற்றும் ஆ சரி
(ஆ) ஆ மற்றும் ஈ சரி
(இ) அ,ஆ மற்றும் இ சரி
(ஈ) அ மற்றும் இ சரி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஆ மற்றும் ஈ சரி
பண்புத்தொகைகள்:
நெடுநீர்-நெடுமை+நீர்; செந்நீர்-செம்மை+நீர்;.
உகுநீர்-வினைத்தொகை
92. “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”
– மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் “ஆகுல” என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க:
(அ) OVER LOOK
(ஆ) OVER POWER
(இ) OVATION
(ஈ) OVIPARUS
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) OVATION
ஆகுல-ஆரவாரத்தன்மை, Ovation-ஆரவாரம்.
93. பொருத்துக:
சொல் – தளை
(அ) பாரி பாரி – 1. இயற்சீர் வெண்டளை
(ஆ) பலர்புகழ் கபிலர் – 2. நெரொன்றியத்தளை
(இ) தாமரைப்பூ குளத்தினிலே – 3. நிரையொன்றா சிரியத்தளை
(ஈ) அகர முதல – 4. கலித்தளை
அ ஆ இ ஈ
(அ) 3 4 1 2
(ஆ) 3 2 1 4
(இ) 2 3 4 1
(ஈ) 1 4 3 2
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 2 3 4 1
(அ) பா / ரி / பா / ரி
நேர் நேர் நேர் நேர்
(தேமா)
மா முன் நேர் – நேரொன்றாசிரியத் தளை
(ஆ) பலர் / புகழ் / கபி / லர்
நிரை நிரை நிரை நேர்
(கருவிளம்)
விளமுன் நிரை-நிரையொன்றாசிரியத்தளை
(இ) தா / மரைப் / பூ குளத் / தினி / லே
நேர் நிரை நேர் நிரை நிரை நேர்
(கூவிளங்காய்)
காய்முன் நிரை – கலித்தளை
(ஈ) அக / ர / முத / ல
நிரை நேர் நிரை நேர்
(புளிமா)
மாமுன் நிரை – இயற்சீர் வெண்டளை
94. “ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் “தாய்”, “தாய்”, “தாய்” என்று போற்றுகிறான்” என்னும் கூற்று யாருடையது?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) திரு.வி.க.
(ஈ) கம்பன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) திரு.வி.க.
95. விடைத்தேர்க:
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
(அ) தந்தை பெரியார்
(ஆ) டாக்டர்.அம்பேத்கர்
(இ) பேரறிஞர் அண்ணா
(ஈ) காமராசர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) டாக்டர்.அம்பேத்கர்
96. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?
(அ) கூடங்குளம்
(ஆ) கூரங்குளம்
(இ) கூந்தன்குளம்
(ஈ) வேடந்தாங்கல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கூந்தன்குளம்
கூந்தன்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு சரணாலயத்தில் வாழும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்வூரில் பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் அவ்வூரில் எந்த விழாக்களிலும் கொட்டு மேளம், பறை அடிப்பதில்லை.
97. இந்தியா மிகப்பெரிய நாடு – எவ்வகை வாக்கியம்?
(அ) தொடர்நிலை வாக்கியம்
(ஆ) தனிநிலை வாக்கியம்
(இ) கலவை வாக்கியம்
(ஈ) கட்டளை வாக்கியம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) தனிநிலை வாக்கியம்
98. பொருத்துக:
(அ) நடந்தான் – 1. தொழிற்பெயர்
(ஆ) நடந்த – 2. வினையெச்சம்
(இ) நடந்து – 3. பெயரெச்சம்
(ஈ) நடத்தல் – 4. வினைமுற்று
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 2 3 1 4
(இ) 3 4 1 2
(ஈ) 4 2 3 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 4 3 2 1
99. “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே” என்று கூறியவர் யார்?
(அ) நற்கவிராச நம்பி
(ஆ) பவணந்தி முனிவர்
(இ) ஐயனாரிதனார்
(ஈ) தொல்காப்பியர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தொல்காப்பியர்
தொல்காப்பியர் குறிப்பிடும் “புலன்” என்னும் இலக்கியவகை “பள்ளு” என்ற இலக்கியவகைக்குப் பொருந்தும் என்பர்.
100. பிரித்தெழுதுக:
பரித்தியாகம்
(அ) பரிந்து + யாகம்
(ஆ) பரித்தி+யாகம்
(இ) பரி+தியாகம்
(ஈ) பரிதி+யாகம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) பரி+தியாகம்