Tnpsc General Tamil Previous Question Paper 4
Tnpsc General Tamil Previous Question Paper 4
Tnpsc General Tamil Previous Question Paper 4: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.
1. கண்ணகி எனும் சொல்லின் பொருள்
(அ) கடும் சொற்களைப் பேசுபவள்
(ஆ) கண் தானம் செய்தவள்
(இ) கண்களால் நகுபவள்
(ஈ) கண் தானம் பெற்றவள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கண்களால் நகுபவள்
கண்களால் சிரிப்பவள் (நகுபவள்) என்னும் பொருள்படும் பெயரே கண்ணகியாகும். கண்+நகி
நிலைமொழியின் ஈற்றில் “ண” கர ஒற்று (ண்) வந்து வருமொழி முதலில் “ந”கரம் வந்தால் அது “ண”கரமாகத் திரியும். கண்+ணகி- கண்ணகி
Tnpsc General Tamil Previous Question Paper 4
2. பகுதி I உடன் பகுதி IIஐப் பொருத்துக:
பகுதி I – பகுதி II
(அ) குறிஞ்சி – 1. நெல்லரிதல்
(ஆ) முல்லை – 2. கிழங்கழ்தல்
(இ) மருதம் – 3. உப்பு விற்றல்
(ஈ) நெய்தல் – 4. வரகு விதைத்தல்
அ ஆ இ ஈ
(அ) 2 4 1 3
(ஆ) 1 3 2 4
(இ) 3 2 4 1
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) 2 4 1 3
குறிஞ்சி-கிழங்கு அகழ்தல் (மலை).
முல்லை-வரகு விதைத்தல்(காடு).
மருதம்-நெல்லரிதல் (வயல்).
நெய்தல்-உப்பு, விற்றல்(கடல்)
3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
(அ) பண்புத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) வேற்றுமைத்தொகை
(ஈ) உம்மைத்தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) பண்புத்தொகை
பண்புத்தொகை:
வண்ணம்-செம்மை,பசுமை, வெண்மை, கருமை.
வடிவம்-வட்டம், சதுரம், நாற்கரம்.
அளவு-பெருங்கடல், சிறுதுளி, நெடுங்கடல்.
சுவை-இனிமை,கசப்பு,துவர்ப்பு.
குணம்-நன்மை,தீமை
4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
(அ) பள்ளு
(ஆ) தூது
(இ) கலம்பகம்
(ஈ) அந்தாதி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) தூது
“பயிறங் கலிவெண் பாவி னாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே” – என்று இலக்கண விளக்க நூற்பா, தூதின் இலக்கணம் கூறுகிறது. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் தூது இலக்கியம் பாடப் பெற வேண்டும்
5. பொருத்துக:
(அ) வினைத்தொகை – 1. நாலிரண்டு
(ஆ) உவமைத்தொகை – 2. செய்தொழில்
(இ) உம்மைத்தொகை – 3. பவளவாய் பேசினாள்
(ஈ) அன்மொழித்தொகை – 4. மதிமுகம்
அ ஆ இ ஈ
(அ) 2 4 3 1
(ஆ) 4 2 3 1
(இ) 3 1 4 2
(ஈ) 2 4 1 3
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) 2 4 1 3
செய்தொழில்-வினைத்தொகை.
செய்த தொழில், செய்கின்ற தொழில், செய்யும் தொழில் என்று முக்காலத்தையும் உணர்த்தியது.
மதிமுகம்-உவமைத்தொகை
மதி போன்ற முகம் என்ற தொடரில் “போன்ற” என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது.
நாலிரண்டு-உம்மைத்தொகை
“நாலும் இரண்டும்” என்ற தொடரிலுள்ள “உம்” விகுதி மறைந்து வந்துள்ளது. பவளவாய் பேசினாள்-அன்மொழித்தொகை. பவளம் போன்ற வாயை உடைய பெண் பேசினாள். இங்கு உவமைத்தொகையை அடுத்து “பேசினாள்” என்ற சொல் தொடர்ந்து வந்து அன்மொழித் தொகை ஆயிற்று.
6. “அவன் உழவன்” – என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க:
(அ) தெரிநிலை வினைமுற்று
(ஆ) குறிப்பு வினைமுற்று
(இ) பெயர்ச்சொல்
(ஈ) தொழிற்பெயர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) குறிப்பு வினைமுற்று
திணை, பால் போன்றவற்றை வெளிப்படையாகக் காட்டி, காலத்தை மட்டும் குறிப்பால் உணர்த்தியதால் இது குறிப்பு வினைமுற்றாகும்.
7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக:
(அ) வயலில் மாடுகள் மேந்தது
(ஆ) வயலில் மாடுகள் மேஞ்சது
(இ) வயலில் மாடுகள் மேய்ந்தன
(ஈ) வயலில் மாடுகள் மேய்ந்தது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வயலில் மாடுகள் மேய்ந்தன
மேய்ந்தன-பன்மை
மேய்ந்தது-ஒருமை
8. பெயர்ச்சொல்லின் வகையறிதல்:
நடிகன்
(அ) பொருட்பெயர்
(ஆ) பண்புப்பெயர்
(இ) தொழிற்பெயர்
(ஈ) காலப்பெயர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) பொருட்பெயர்
பொருட்பெயர்-உயிருள்ள மனிதன், விலங்கு, பறவை, தாவரம் போன்றவை மற்றும் உயிரற்ற கட்டில், மேஜை, நாற்காலி, பெட்டி போன்ற பொருட்கள்.
9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினான் – எவ்வகைத் தொடர்?
(அ) நேர்க்கூற்று
(ஆ) அயற்கூற்று
(இ) எதிர்மறைக்கூற்று
(ஈ) கலவைத்தொடர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) அயற்கூற்று
நேர்கூற்று – அயற்கூற்று
நான் – தான்
நாளை – மறுநாள்
10. பொருந்தாத சொல்லைத் தேர்வு செய்:
(அ) பெறா அ
(ஆ) தழீஇ
(இ) அண்ணன்
(ஈ) கொடுப்பதூஉம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) அண்ணன்
அண்ணன்-பெயர்ச்சொல்.
ஏனைய மூன்றும் அளபெடைகளாகும்.
General Tamil Previous Questions Pdf
11. யாப்பு என்றால் ——- என்பது பொருள்
(அ) அடித்தல்
(ஆ) சிதைத்தல்
(இ) கட்டுதல்
(ஈ) துவைத்தல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கட்டுதல்
யாப்பு – கட்டுதல்
12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக்கொண்ட பெண்ணரசி யார்?
(அ) மங்கையர்க்கரசி
(ஆ) ஜான்ஸிராணி
(இ) இராணி மங்கம்மாள்
(ஈ) தடாதகைப் பிராட்டியர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) இராணி மங்கம்மாள்
இராணி மங்கம்மாள்-நாயக்கர் மரபு.
மங்கையர்க்கரசி-பாண்டிய மரபு.
தடாதகைப் பிராட்டியார்-தெய்வ மரபு (மீனாட்சியம்மன்).
ஜான்ஸி ராணி-வடமத்தியப் பகுதியான ஜான்ஸி நாட்டு ராணி (இலட்சுமிபாய்)
13. “உலகின் எட்டாவது அதிசயம்” எனப் பாராட்டப்படுபவர்
(அ) நைட்டிங்கேல்
(ஆ) அன்னி சல்லிவான்
(இ) கெலன் கெல்லர்
(ஈ) பாலி தாம்சன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கெலன் கெல்லர்
கெலன் கெல்லர் 19-ஆவது மாதக் குழந்தைப் பருவத்திலேயே கண், காது வாய் என்ற மூன்று புலன்களையும் இழந்து விட்டார். உலகிலேயே மாற்து திறனாளிகளில் முதல் பட்டம் பெற்றவர் இவரேயாவார். எனவே “உலகின் எட்டாவது அதிசயம் எனப் பாராட்டப் பெறுகிறார்.
14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
(அ) 9
(ஆ) 7
(இ) 10
(ஈ) 133
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) 7
திருக்குறள் “ஏழு” சீர்களால் அமைந்த குறள் வெண்பாக்களை உடையது. “ஏழு” என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது. அதிகாரங்கள் 133🡪1+3+3=7. குறட்பாக்கள் 1330🡪1+3+3+0=7.
15. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
(அ) குறிஞ்சிப்பாட்டு
(ஆ) முல்லைப்பாட்டு
(இ) கலிப்பாடல்
(ஈ) பரிபாடல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது. இந்நூலில் செங்காந்தள் தொடங்கி மலை எருக்கம்பூ வரை 99 பூக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
16. “மனித நாகரிகத்தின் தொட்டில்” என அழைக்கப்படுவது எது?
(அ) ஆப்பிரிக்கா
(ஆ) இலெமூரியா
(இ) சிந்து சமவெளி
(ஈ) ஹரப்பா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) இலெமூரியா
கடல் கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ் குமரிக்கண்டமே இலெமூரியா கண்டமாகும். இது “மனித நாகரிகத்தின் தொட்டில்” என அழைக்கப்படுகிறது.
17. குமரகுருபரர் எழுதாத நூல்
(அ) கந்தர் கலிவெண்பா
(ஆ) மதுரைக்கலம்பகம்
(இ) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
(ஈ) நீதிநெறிவிளக்கம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருச்செந்தூர் முருகுன் பிள்ளைத்தமிழ் – பகழிக் கூத்தரால் 15-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.
18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
(அ) தஞ்சாவூர்
(ஆ) நாகப்பட்டினம்
(இ) இராமநாதபுரம்
(ஈ) புதுக்கோட்டை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் “இலட்சுமிபுரம்” என்ற ஊரில் தாயுமானவர் நினைவு இல்லம் உள்ளது. அந்த இடத்தில்தான் அவர் இயற்கை எய்தினார்.
19. தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்” என்று புகழப்படுபவர்
(அ) வாணிதாசன்
(ஆ) வண்ணதாசன்
(இ) பாரதிதாசன்
(ஈ) சுப்புரத்தின் தாசன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) வாணிதாசன்
வாணிதாசனின் சிறப்புப் பெயர்கள்: கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்”
20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ——- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
(அ) குளோரோ ஃபுளுரோ கார்பன்
(ஆ) ஈத்தேன்
(இ) கதிரியக்கம்
(ஈ) மீத்தேன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) குளோரோ ஃபுளுரோ கார்பன்
21. “திராவிடம்” என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
(அ) பெரியார்
(ஆ) குமரிலபட்டர்
(இ) கால்டுவெல்
(ஈ) ஜி.யூ.போப்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) குமரிலபட்டர்
“திராவிடம்” என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் “குமரிலபட்டர்”. அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் “கால்டுவெல்”
22. “சீர்திருத்தக் காப்பியம்” என்று பாராட்டப்படுவது
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) மணிமேகலை
(இ) வளையாபதி
(ஈ) குண்டலகேசி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) மணிமேகலை
23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
(அ) நற்றிணை, கலித்தொகை
(ஆ) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி
(இ) குறுந்தொகை, ஐங்குநுறூறு
(ஈ) பரிபாடல், மலைபடுகடாம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி
பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள். பட்டினப்பாலையிலும், மதுரைக் காஞ்சியிலும் காணப்படுகின்றன. ஏற்றுமதியான பொருட்கள்: இரத்தினம், வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலானவை.இறக்குமதியான பொருட்கள்: சீனத்துப் பட்டு, சர்க்கரை முதலானவை. அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு பயிர் செய்யப்பட்டது.
24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
(அ) பெருங்கதை
(ஆ) குண்டலகேசி
(இ) நாககுமார காவியம்
(ஈ) மணிமேகலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) மணிமேகலை
மணிமேகலையில், கதமதியின் தந்தையின் சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரி செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.
25.பொருத்துக:
(அ) நான்மணிமாலை – 1. கவிதை
(ஆ) மலரும் மாலையும் – 2. சிற்றிலக்கியம்
(இ) நான்மணிக்கடிகை – 3. காப்பியம்
(ஈ) தேம்பாவணி – 4. நீதிநூல்
அ ஆ இ ஈ
(அ) 2 1 4 3
(ஆ) 3 2 1 4
(இ) 2 3 1 4
(ஈ) 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) 2 1 4 3
நான்மணிமாலை-96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. மலரும் மாலையும்-கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களின் கவிதை நூலாகும். நான்மணிக்கடிகை-பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள 11 நீதி நூல்களுள் ஒன்றாகும். தேம்பாவணி-காப்பிய வகை நூலாகும்.
26. “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” – யார் கூற்று?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) கண்ணதாசன்
(ஈ) எதுவுமில்லை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) பாரதிதாசன்
27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?
(அ) நல்ல பாம்பு
(ஆ) இராஜ நாகம்
(இ) பச்சைப்பாம்பு
(ஈ) எதுவுமில்லை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) இராஜ நாகம்
இராஜநாகம்: இந்தியாவில் உள்ள இராஜநாகம் உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பாகும். 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகைப்பாம்பு இது. இராஜநாகம், மற்றப் பாம்புகளையும் கூட உணவாக்கிக்கொள்ளும்.
28. மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
(அ) சுதமதி
(ஆ) மணிமேகலை
(இ) ஆதிரை
(ஈ) காயசண்டிகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) காயசண்டிகை
காயசண்டிகை பசிநோய் சாபம் பெற்றவள். அவள் சாபம் மணிமேகலையால் நீங்குகிறது. மணிமேகலையின் அட்சயப் பாத்திரத்தில் கற்புக்கரசியான ஆதிரை தான் முதன் முதலில் பிச்சையிட்டாள். ஆதிரையிடம் முதன்முதலில் பிச்சையேற்குமாறு மணிமேகலையிடம் காயசண்டிகைதான் கூறுகிறாள். மணிமேகலையின் தோழி கதமதி.
29. “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்னும் புகழ்மிக்க நகரம்?
(அ) மதுரை
(ஆ) ஊட்டி
(இ) கொடைக்கானல் (ஈ) ஏற்காடு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) மதுரை
பழம் பெரும் தமிழர்தம் நாகரிகத் தொட்டிலாகத் திகழ்ந்ததால் மதுரை “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” எனப்படுகிறது.
30. “சதகம்” என்பது ——— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
(அ) ஐம்பது
(ஆ) நூறு
(இ) ஆயிரம்
(ஈ) பத்தாயிரம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) நூறு
31. “கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்—” – இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
(அ) சொல்லின் நாயகன்
(ஆ) சொல்லின் தலைவன்
(இ) சொல்லின் புலவன்
(ஈ) சொல்லின் செல்வன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) சொல்லின் செல்வன்
32. “சிங்கங்களே! எழுந்து வாருங்கள், நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்” எனக் கூறியவர் – இவ்வடியைப் பாடியவர்.
(அ) பாரதிதாசன்
(ஆ) விவேகானந்தர்
(இ) சுபாஷ் சந்திரபோஸ்
(ஈ) திலகர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) விவேகானந்தர்
33. “சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்” – இவ்வடியைப் பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) கவிமணி
(ஈ) சுரதா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பாரதிதாசன்
வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்த வற்றுள்
பொல்லாத தில்லை புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
சொல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பானுக்கிந் நிலத்தே
34. பொருத்தமான விடையை எழுதுக: “துன்பதையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்”
(அ) அந்தகக் கவி
(ஆ) இராமச்சந்திர கவிராயர்
(இ) திருவள்ளுவர்
(ஈ) உடுமலை நாராயணக்கவி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) இராமச்சந்திர கவிராயர்
35. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – என்று கூறியவர்
(அ) ஒக்கூர் மாசாத்தியார்
(ஆ) பொன்முடியார்
(இ) காவற்பெண்டு
(ஈ) ஒளவையார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பொன்முடியார்
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே:
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே:
வேல் வடித்துக் கொடுத்தல்
கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. – புறநானூறு-312ஆவது பாடல். ஆசரியர்-பொன்முடியார்
36. அழுது அடியடைந்த அன்பர் ——
(அ) மாணிக்கவாசகர்
(ஆ) வாகீசர்
(இ) சரபேசர்
(ஈ) மதுரேசர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர், இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுதவர். அதனால் இவரை ‘அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.
37. மறைமறை அடிகள் தாம் நடத்தி வந்த “ஞானசாகரம்” இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
(அ) ஞானக்கடல்
(ஆ) அறிவுக்கடல்
(இ) அறிவு சாகரம்
(ஈ) நாணக்கடல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) அறிவுக்கடல்
ஞானம்-அறிவு; சாகரம்-கடல் ஞானசாகரம்-அறிவுக்கடல். மறைமலையடிகள் தாம் நடத்தி வந்த ஞானசாகரம் என்ற திங்களிதழை அறிவுக்கடல் எனப் பெயர் மாற்றம் செய்தார். இந்த இதழ் 1902-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
38. “ஜல்லிக்கட்டு” என்னும் எருதாட்டத்தை வைத்து “வாடிவாசல்” எனும் நாவலை எழுதியவர் ———
(அ) சி.சு.செல்லப்பா
(ஆ) பி.எஸ்.ராமையா
(இ) திரு.வி.க
(ஈ) வ.வே.சு.ஐயர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) சி.சு.செல்லப்பா
“வாடிவாசல்” என்பது “ஜல்லிக்கட்டு” என்ற வீர விளையாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவலாகும். இந்நூலின் ஆசிரியர் சி.சு.செல்லப்பா ஆவார். இவர் “எழுத்து” என்ற பத்திரிகையை நடத்தியவராவார்.
39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
(அ) செய்யுள்
(ஆ) உரைநடை
(இ) இலக்கணம்
(ஈ) நாடகம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) உரைநடை
திருமணம் செல்வக் கேசவராயர் தமிழ் உரைநடைக்குப் பெரும் பங்காற்றியவர். இவர் “தமிழ் உரைநடைச்சிற்பி” என அழைக்கப்பட்டார்.
40. “தமிழ் உரைநடையின் தந்தை” என மெச்சத் தகுந்தவர்
(அ) யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
(ஆ) சி.வை.தாமோதரம் பிள்ளை
(இ) விபுலானந்த அடிகள்
(ஈ) கனகசபைப் புலவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
தமிழ் உரைநடை வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை, பரிதிமாற் கலைஞர் “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் போற்றினார்
41. “முத்தொள்ளாயிரம்” இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
(அ) சேர, சோழ, பாண்டியர்
(ஆ) பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்
(இ) முகமதியார், ஆங்கிலேயர், மராட்டியர்
(ஈ) குப்தர், மௌரியர், டச்சுக்காரர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) சேர, சோழ, பாண்டியர்
முத்தொள்ளாயிரம்: இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டது. ஆயினும் 130 பாடல்களே கிடைத்துள்ளன.
42. பொருத்துக:
(அ) சிக்கனம் – 1. கவிஞர் தாரா பாரதி
(ஆ) மனிதநேயம் – 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்
(இ) காடு – 3. சுரதா
(ஈ) வேலைகளல்ல வேள்விகளே – 4. வாணிதாசன்
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 2 4 3 1
(இ) 3 2 4 1
(ஈ) 1 2 3 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 2 4 1
43. “மணிமேகலை வெண்பா”வின் ஆசிரியர் யார்?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) திரு.வி.க
(ஈ) கவிமணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பாரதிதாசன்
“மணிமேகலை வெண்பா” என்ற நூலின் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்.
44. 1942-இல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான “பர்மா வழி நடைப்பயணம்” நூலின் ஆசிரியர்
(அ) வைத்தியநாத சர்மா
(ஆ) வெ.சாமிநாத சர்மா
(இ) தேவன்
(ஈ) அநுத்தமா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) வெ.சாமிநாத சர்மா
வெ.சாமிநாத சர்மா.
காலம்: செப்டம்பர் 17, 1895 முதல் ஜீலை, 1, 1978 வரை.
சிறப்புகள்: பன்மொழி அறிஞர், மொழி பெயர்ப்பாளர், இதழாசிரியர், அறிவியல் தமிழின் முன்னோடி.
ஊர்: வெங்களத்தூர், (திருவண்ணாமலை மாவட்டம்)
கதைகள், நாடகங்கள், அரசியல் கட்டுரைகள், வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், பயணக் கட்டுரைகள் என 80-க்கும் மேற்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்றுதான் “பர்மா வழி நடைப்பயணம்” ஆகும்.
45. “ஆனந்தத்தேன்” நூலின் ஆசிரியர்
(அ) வைரமுத்து
(ஆ) தமிழன்பன்
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) க.சச்சிதானந்தன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) க.சச்சிதானந்தன்
ஆனந்தத்தேன், அன்னபூரணி, தமிழ்ப்பசி ஆகியவை க.சச்சிதானந்தன் அவர்களின் படைப்புகளாகும். இவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(அ) விடுதலைக்கவி – 1.அப்துல் ரகுமான்
(ஆ) திவ்வியகவி – 2. வாணிதாசன்
(இ) கவிஞரேறு – 3. பாரதியார்
(ஈ) கவிக்கோ – 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
அ ஆ இ ஈ
(அ) 2 4 1 3
(ஆ) 1 3 4 2
(இ) 3 4 2 1
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 4 2 1
47. பொருத்துக:
(அ) பூங்கொடி – 1. கண்ணதாசன்
(ஆ) கொடிமுல்லை – 2. சுரதா
(இ) ஆட்டனத்தி ஆதிமந்தி – 3. முடியரசன்
(ஈ) பட்டத்தரசி – 4. வாணிதாசன்
அ ஆ இ ஈ
(அ) 2 1 4 3
(ஆ) 1 2 3 4
(இ) 3 4 1 2
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 4 1 2
48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ———-
(அ) திருமங்கையாழ்வார்
(ஆ) திருமழிசையாழ்வார்
(இ) குலசேகராழ்வார்
(ஈ) நம்மாழ்வார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குலசேகராழ்வார்
குலசேகர ஆழ்வார்: இவர் சேர நாட்டில் திருவஞ்சைக்களத்தில் மன்னர் குலத்தில் தோன்றியவர். இவர் தமிழ். வடமொழி இரண்டிலும் வல்லவர். வடமொழியில் “முகுந்தமாலை” என்னும் நூலினைப் படைத்துள்ளார். தமிழில் இவர் எழுதிய பாசுரங்கள் “பெருமாள் திருமொழி” என அழைக்கப்படுகிறது. அவை மொத்தம் 105 பாடல்களாகும்.
49. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(அ) மணிமேகலை
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) சீவகசிந்தாமணி
(ஈ) பெரியபுரணம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சிலப்பதிகாரம்
“ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க!
அடியில் தன்அளவு அரசர்க்கு உணர்த்தி,
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்ககத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் – 15வது பாடல்
50. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(ஆ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
(இ) சிவப்பிரகாசம்
(ஈ) மணிவாசகர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
51. வெற்பு, சிலம்பு, பொருப்பு – ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்?
(அ) நிலம்
(ஆ) மலை
(இ) காடு
(ஈ) நாடு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மலை
மலையைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள், வெற்பு, பொருப்பு, சிலம்பு, குறிச்சி, வடசொல்-கிரி
52. “நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே”
-இவ்விதிக்குச் சான்றைத் தேர்க:
(அ) இரட்டுற மொழிதல்
(ஆ) வட்டப்பலகை
(இ) கட்டுச்சோறு
(ஈ) காட்டுக்கோழி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) காட்டுக்கோழி
குற்றியலுகரப்புணர்ச்சி
நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே – நன்னூல் 183
“ட”கரம் (ட்) ஊர்ந்து வரும் நெடில் தொடர்க் குற்றியலுகரம், “ற”கரம் (ற்) ஊர்ந்து வரும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் வருமொழியோடு இணையும் போது அவை ஊர்ந்து வரும் ஒன்று இரட்டித்துப் புணரும்.
காடு + கோழி – காட்(ட்+உ)+கோழி = காட்டுக்கோழி.
ஆறு + பாலம் ஆற்(ற்+உ) + பாலம் = ஆற்றுப்பாலம்
கிணறு + தவளை = கிணற் (ற்+உ) + தவளை = கிணற்றுத் தவளை
53. “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை” – இதில் மகடூஉ என்பது —–
(அ) மகள்
(ஆ) மகன்
(இ) பெண்
(ஈ) ஆண்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பெண்
மகடூஉ-பெண்
54. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
(அ) 40
(ஆ) 35
(இ) 25
(ஈ) 45
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) 35
1.மோனைத்தொடை. 2.எதுகைத்தொடை. 3.முரண்தொடை. 4.இயைபுத்தொடை. 5.அளபெடைத்தொடை.
மேற்கண்ட 5 வகைத் தொடைகள் ஒவ்வொன்றிலும் 7 உட்பிரிவுகள் உள்ளன. 5 x 7 = 35. மொத்தம் 35 தொடை விகற்பங்கள் உள்ளன.
7 உட்பிரிவுகள்: இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.
55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
(அ) தொகா, தொகை நிலைத் தொடர் 7
(ஆ) தொகை, தொகா நிலைத்தொடர் 9
(இ) தொகை நிலைத்தொடர் 6; தொகை நிலைத்தொடர் 9
(ஈ) தொகை நிலைத்தொடர் 9; தொகா நிலைத்தொடர் 6
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தொகை நிலைத்தொடர் 6; தொகை நிலைத்தொடர் 9
தொகாநிலைத் தொடர் – 9
1.எழுவாய்த்தொடர். 2.விளித்தொடர். 3.வினைமுற்றுத்தொடர். 4.பெயரெச்சத்தொடர். 5.வினையெச்சத்தொடர். 6.வேற்றுமைத்தொடர். 7.இடைச்சொற்றொடர். 8.உரிச்சொற்றொடர். 9.அடுக்குத்தொடர்.
தொகைநிலைத்தொடர் – 6
1.வேற்றுமைத்தொகை. 2.வினைத்தொகை. 3.பண்புத்தொகை. 4.உவமைத்தொகை. 5.உம்மைத்தொகை. 6.அன்மொழித்தொகை
56. ஐ, ஒள ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
(அ) அளபெடை
(ஆ) எழுத்துப்பேறு
(இ) இதழ்குவி எழுத்து
(ஈ) சந்தியக்கரம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) சந்தியக்கரம்
போலி எழுத்து என்பது நன்னூல் கையாளும் ஓர் இலக்கணக் குறியீடு. இதனை “எழுத்துப்போலி” எனவும் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திலும் போலி பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஐயா-அய்யா; ஐயர்-அய்யர்; ஓளவை-அவ்வை.
வடமொழியில் இதனை “சந்தியக்கரம்” என்பர். சந்தியக்கரம் என்றால் கூட்டெழுத்துகளால் உருவாகும் எழுத்து என்று பொருளாகும்.
57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக:
(அ) மாடு
(ஆ) மூக்கு
(இ) கதவு
(ஈ) மார்பு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கதவு
மாடு-நெடில் தொடர்க்குற்றியலுகரம், மார்பு-இடைத்தொடர்க்குற்றியலுகரம். மூக்கு-வன்தொடர்குற்றியலுகரம். கதவு-முற்றியலுகரம்.
58. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் “ஒரு பொருட் பன்மொழிச்” சொல்லைத் தேர்க:
(அ) மீமிசை ஞாயிறு
(ஆ) உயர்ந்த கட்டடம்
(இ) மேல்பகுதி
(ஈ) மையப்பகுதி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) மீமிசை ஞாயிறு
ஒரே பொருளைத் தரும் வெவ்வேறான சொற்கள் தொடர்ந்து வருவது ஒரு பொருட்பன்மொழி ஆகும்.
(எ.கா) ஒரு தனி, ஓங்கி உயர்ந்த, மீமிசை
59. “பெறு” என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
(அ) பெற்றான்
(ஆ) பெறுவான்
(இ) பெறுகிறான்
(ஈ) பெறுபவன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பெறுபவன்
பெறு-வேர்ச்சொல்.
பெற்றான்-இறந்தகால வினைமுற்று.
பெறுகிறான்-நிகழ்கால வினைமுற்று.
பெறுவான்-எதிர்கால வினைமுற்று.
பெறுபவன்-வினையாலணையும் பெயர்.
60. பொருத்துக:
(அ) இலக்கணமுடையது – 1. புறநகர்
(ஆ) மங்கலம் – 2. கால்கழுவி வந்தான்
(இ) இலக்கணப்போலி – 3. இறைவனடி சேர்ந்தார்
(ஈ) இடக்கரக்கல் – 4. நிலம்
அ ஆ இ ஈ
(அ) 2 3 1 4
(ஆ) 4 3 1 2
(இ) 1 2 3 4
(ஈ) 3 4 1 2
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) 4 3 1 2
இலக்கணமுடையது-நிலம்.
மங்கலம்-இறைவனடி சேர்ந்தார் (இறந்துவிட்டார் என்பது அமங்கலம்).
இலக்கணபோலி-புறநகர் (நகர்ப்புறம் என்பது இலக்கண-முடையது).
இடக்கரடக்கல்-கால் கழுவி வந்தான் (சபையில் கூற முடியாத தொடர்).
61. அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக்கொள்வது-எவ்வகைப் பொருள்கோள்?
(அ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
(ஆ) அளைமறியாப்புப் பொருள்கோள்
(இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்
மொழிமாற்றுப் பொருள்கோள்:
ஏற்ற பொருளுக்கு இயைபு மொழிகளை
மாற்றி ஓரடியுள் வழங்கல் மொழிமாற்றே
– நன்னூல்-413
கருதிய பொருளுக்குப் பொருந்திய மொழிகளை ஓரடியுள்ளே மாற்றிச் சொல்வதாகும்.
(எ.கா).”சுரையாழ அம்மி மிதப்ப” இதனை “சுரை மிதப்ப அம்மி ஆழ” எனப்பொருள் கொள்ள வேண்டும்
62. பொருள் தேர்க:
அங்காப்பு-என்பது
(அ) வாயைப் பிளத்தல்
(ஆ) அங்கம் காப்பு
(இ) அகம் காத்தல்
(ஈ) வாயைத் திறத்தல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) வாயைத் திறத்தல்
முதலெழுத்துகளின் முயற்சிப் பிறப்பு:
“முயற்சியுள் அ ஆ அங்காப்புடைய”
– நன்னூல் 76.
அங்காப்பு – வாயைத் திறத்தல்
63. வினைமுற்றைத் தேர்க:
(அ) படி
(ஆ) படித்த
(இ) படித்து
(ஈ) படித்தான்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) படித்தான்
படி-வேர்ச்சொல். படித்த-பெயரெச்சம். படித்து-வினையெச்சம். படித்தான்-வினைமுற்று
64. தவறான ஒன்றைத் தேர்க:
(அ) கிறு
(ஆ) கின்று
(இ) ஆ நின்று
(ஈ) இன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) இன்
கிறு, கின்று, ஆநின்று-நிகழ்கால இடைநிலைகள். இன்-இறந்தகால இடைநிலை
65. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப்பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) சுரதா
(இ) பாரதிதாசன்
(ஈ) வாணிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) பாரதிதாசன்
66. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
(அ) உத்திரமேரூர்க் கல்வெட்டு
(ஆ) ஆதிச்சநல்லூர் கல்வெட்டு
(இ) அரியாங்குப்பம் கல்வெட்டு
(ஈ) திருநாதர் குன்றம் கல்வெட்டு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) திருநாதர் குன்றம் கல்வெட்டு
இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது செஞ்சிக்கு அடுத்துள்ள திருநாதர் குன்றில் காணப்படுகிறது. “மேற்கண்ட தகவல் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய “கல்வெட்டுகள்” என்று கட்டுரையில் காணப்படுகிறது.
67. காந்தியடிகளை “அரை நிர்வாணப் பக்கிரி” என ஏளனம் செய்தவர்
(அ) சர்ச்சில்
(ஆ) முசோலினி
(இ) ஹிட்லர்
(ஈ) ஸ்மட்ஸ்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) சர்ச்சில்
68. “ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன” – இதனைப் பாடிய கவிஞர் யார்?
(அ) ந.பிச்சமூர்த்தி
(ஆ) வல்லிக்கண்ணன்
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) சி.சு.செல்லப்பா
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) வல்லிக்கண்ணன்
69. “கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்” யாவர்?
(அ) இரட்டையர்
(ஆ) சமணர்
(இ) பரணர்
(ஈ) பௌத்தர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) இரட்டையர்
திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம் போன்ற நூல்களை இயற்றியவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்களான இரட்டையர்கள் ஆவர். அவர்களின் பெயர் இளஞ்சூரியர்-முதுசூரியர் ஆவர். இவர்களது காலம் 14-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும் மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் சிலேடையாகப் பாடுவதிலும் வல்லவர்கள்.
70. “இந்திய அரசியலில் சாணக்கியர்” ———
(அ) ஜவஹர்லால் நேரு
(ஆ) வல்லபாய் படேல்
(இ) இராஜகோபாலச்சாரியார்
(ஈ) இராதா கிருட்டிணன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) இராஜகோபாலச்சாரியார்
71. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
(அ) இரட்சணிய யாத்திரிகம்
(ஆ) இரட்சணிய மனோகரம்
(இ) இரட்சணிய குறள்
(ஈ) இரட்சணிய சரிதம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) இரட்சணிய யாத்திரிகம்
இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள் உயிர், தன்னைக் காக்க வேண்டி, இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பதாகும்.
72. “எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
(அ) கல்யாண சுந்தரம்
(ஆ) பாரதிதாசன்
(இ) முடியரசன்
(ஈ) தமிழ்ஒளி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) பாரதிதாசன்
73. “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” – என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்.
(அ) பரிதிமாற் கலைஞர்
(ஆ) நாமக்கல் கவிஞர்
(இ) பாரதியார்
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) பரிதிமாற் கலைஞர்
74. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
(அ) சைவரால் இயற்றப்பட்டன
(ஆ) வைணவரால் இயற்றப்பட்டன
(இ) சமணரால் இயற்றப்பட்டன
(ஈ) கிறித்தவர்களால் இயற்றப்பட்டன
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) சமணரால் இயற்றப்பட்டன
ஐஞ்சிறு காப்பியங்கள்
சூளாமணி-தோலாமொழித்தேவர்.
நீலகேசி-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
உதயணகுமார காவியம்-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
நாககுமார காவியம்-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
யசோதர காவியம்- ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
ஐந்து காப்பியங்களும் சமண சமயச் சார்புடையவை.
75. பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்
(அ) வேதநாயகம் பிள்ளை
(ஆ) வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(இ) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
(ஈ) ஆறுமுக நாவலர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) ஆறுமுக நாவலர்
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் “மெதடிஸ்த” என்ற ஆங்கில பாடசாலையில் படித்தார். தனது 19-வது வயதில் அப்பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்பாடசாலையின் நிறுவனராகவும், முதல்வராகவும் இருந்த பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
76. இதழ், நா, பல், அண்ணம் – இவை
(அ) ஒலி பிறப்புகள்
(ஆ) ஒலிப்பு முறைகள்
(இ) ஒலிப்பான்கள்
(ஈ)ஒலிப்பு முனைகள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ)ஒலிப்பு முனைகள்
77. “ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்” எனப் போற்றப்படுபவர்
(அ) ஆண்டாள்
(ஆ) பேயாழ்வார்
(இ) பெரியாழ்வார்
(ஈ) இராமானுஜர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) இராமானுஜர்
78. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது ——- நூலின் புகழ்மிக்க தொடர்
(அ) திருமந்திரம்
(ஆ) திருவாசகம்
(இ) திருக்குறள்
(ஈ) தேம்பாவணி
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) திருமந்திரம்
79. மருத நிலத்திற்குரிய தெய்வம்
(அ) இந்திரன்
(ஆ) முருகன்
(இ) திருமால்
(ஈ) வருணன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) இந்திரன்
நிலம் தெய்வம்
மருதம் இந்திரன்
குறிஞ்சி முருகன்
முல்லை திருமால்
நெய்தல் வருணன்
80. “தாண்டக வேந்தர்” என அழைக்கப்படுபவர் யார்?
(அ) சுந்தரர்
(ஆ) திருநாவுக்கரசர்
(இ) மாணிக்க வாசகர்
(ஈ) திருஞான சம்பந்தர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருநாவுக்கரசர்
“தாண்டகம்” என்ற விருத்த வகையை பாடியமையால் திருநாவுக்கரசர் “தாண்டகவேந்தர்” எனும் பெயர் பெற்றார்.
81. “தேசியம் காத்த செம்மல்” – எனத் திரு.வி.க.வால் புகழப்பட்டவர்
(அ) பசும்பொன் முத்துராமலிங்கர்
(ஆ) காந்தியடிகள்
(இ) திருப்பூர் குமரன்
(ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) பசும்பொன் முத்துராமலிங்கர்
82. “சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர்
(அ) உமறுப் புலவர்
(ஆ) குணங்குடி மஸ்தான்
(இ) பனு அகமது மரைக்காயர்
(ஈ) அப்துல் ரகுமான்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பனு அகமது மரைக்காயர்
சீறாப்புரணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாக பாடி நிறைவு செய்யப்படவில்லை. பனு அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய வாழ்வு முழுமையும் பாடி முடித்தார். “அந்நூல் சின்னச்சீறா” என அழைக்கப்படுகிறது.
83. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
(அ) இராமலிங்கம் பிள்ளை
(ஆ) கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
(இ) பாரதியார்
(ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
84. “ஆ” முதன் முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
(அ) குறிஞ்சி
(ஆ) முல்லை
(இ) நெய்தல்
(ஈ) மருதம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) குறிஞ்சி
85. “கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்”
– இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன.
(அ) தாவீது
(ஆ) கோலியாத்து
(இ) சவுல் மன்னன்
(ஈ) சூசை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) தாவீது
தேம்பாவணி-வளன் செனித்த படலம்-தாவீதின் வீரமொழி
வெல்வை வேல்செயு மிடலதுன் மிடலடா நானோ
எல்வையா தரவியற் றெதிரி லாத்திறக் கடவுள்
வல்கை யோடுனை மாய்த்துடல் புட்கிரையாக
ஓல்செய் வேனெனா வுடைகவண் சுழற்றின னினையோன்
– வீரமாமுனிவர்.
86. இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முறிந்த எலும்பு விரைவில் கூடும்.
(அ) முருங்கைப்பட்டை
(ஆ) வேப்பம் பட்டை
(இ) புளியம்பட்டை
(ஈ) நாவற்பட்டை
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) முருங்கைப்பட்டை
87. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” – என எடுத்துரைத்தவர்
(அ) சுபாஷ் சந்திரபோஸ்
(ஆ) பசும்பொன் முத்துராமலிங்கர்
(இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
(ஈ) வேலுத்தம்பி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) பசும்பொன் முத்துராமலிங்கர்
88. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
(அ) First Deserve, then desire – 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(ஆ) Tit for tat – 2. செய்யும் தொழிலே தெய்வம்
(இ) Work is worship – 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(ஈ) Little strokes fell great oaks – 4. பழிக்குப் பழி
அ ஆ இ ஈ
(அ) 2 4 3 1
(ஆ) 3 4 2 1
(இ) 1 3 4 2
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) 3 4 2 1
89. பொருத்துக:
சொல் பொருள்
(அ) விசும்பு – 1.தந்தம்
(ஆ) மருப்பு – 2.வானம்
(இ) கனல் – 3.யானை
(ஈ) களிறு – 4.நெருப்பு
அ ஆ இ ஈ
(அ) 2 1 4 3
(ஆ) 3 2 1 4
(இ) 1 3 4 2
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 2 1 4 3
90. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
(அ) வீரமாமுனிவர்
(ஆ) தைரியநாத சாமி
(இ) கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
(ஈ) ஜி.யூ.போப்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) ஜி.யூ.போப்
வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றினார். அவரது இயற்பெயர் கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி. முதலில் அவர் தைரியநாத சுவாமி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அது வடமொழிப் பெயர் என அறிந்த பின் தூய தமிழில் வீரமாமுனிவர் எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.
ஜி.யூ.போப் தொகுத்த நூலின் பெயர் “தமிழ்செய்யுட் கலம்பகம்” ஆகும்.
91. “கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்” – இப்படிக் கூறியவர்
(அ) சி.வை.தாமோதரம் பிள்ளை
(ஆ) எஸ்.வையாபுரி பிள்ளை
(இ) ஆளுடைய பிள்ளை
(ஈ) “கம்பன் அடிப்பொடி” சா.கணேசனார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) எஸ்.வையாபுரி பிள்ளை
92. பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்
(அ) மனோகரா
(ஆ) சபாபதி
(இ) பவளக்கொடி
(ஈ) பொன்விலங்கு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பவளக்கொடி
பவளக்கொடி – சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம்
93. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
(அ) கால்டுவெல்
(ஆ) ஜி.யூ.போப்
(இ) ஜோசப் பெஸ்கி
(ஈ) தெ.நொபிலி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) ஜி.யூ.போப்
94. பொருத்துக:
நூல் ஆசிரியர்
(அ) ஆசாரக்கோவை – 1. கூடலூர்க்கிழார்
(ஆ) கார் நாற்பது – 2. விளம்பிநாகனார்
(இ) முதுமொழிகாஞ்சி – 3. கண்ணங்கூத்தனார்
(ஈ) நான்மணிக்கடிகை – 4. பெருவாயின் முள்ளியார்
அ ஆ இ ஈ
(அ) 3 1 2 4
(ஆ) 4 3 1 2
(இ) 3 2 4 1
(ஈ) 1 3 2 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) 4 3 1 2
95. பொருத்துக:
(அ) திருநாவுக்கரசர் – 1.எட்டாம் திருமுறை
(ஆ) சம்பந்தர் – 2. ஏழாம் திருமுறை
(இ) சுந்தரர் – 3. முதல் மூன்று திருமுறை
(ஈ) மாணிக்கவாசகர் – டி4. 4,5,6-ஆம் திருமுறைகள்
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 1 2 3 4
(இ) 3 4 2 1
(ஈ) 2 1 4 3
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 4 3 2 1
96. பொருந்தாத இணையைக் கண்டறி:
(அ) சிறுபஞ்சமூலம்-காரியாசன்
(ஆ) ஞானரதம்-கல்கி
(இ) எழுத்து-சி.சு.செல்லப்பா
(ஈ) குயில்பாட்டு-பாரதியார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஞானரதம்-கல்கி
ஞானரதம்-பாரதியார் எழுதிய உரைநடை நூலாகும்
97. “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” என்ற நூலைத் தொகுத்தவர்
(அ) வீரமாமுனிவர்
(ஆ) எல்லீஸ்
(இ) ஜி.யூ.போப்
(ஈ) கால்டுவெல்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) ஜி.யூ.போப்
98. தமிழ்ப் பேரகராதி – “லெக்சிகன்”(Lexicon) உருவாக்கியவர்
(அ) எஸ்.வையாபுரிப்பிள்ளை
(ஆ) வ.உ.சி
(இ) அ.சிதம்பரநாத செட்டியார்
(ஈ) வேங்கட ராஜீலு ரெட்டியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) எஸ்.வையாபுரிப்பிள்ளை
99. தமிழிசைக்கருவி “யாழ்” பற்றி பலகாலம் ஆராய்ந்து “யாழ் நூல்” இயற்றியவர்
(அ) சண்முகானந்தர்
(ஆ) விபுலானந்தர்
(இ) தேஜானந்தர்
(ஈ) கஜானந்தர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) விபுலானந்தர்
சுவாமி விபுலானந்த சுவாமிகள் “யாழ்” என்ற இசைக்கருவி குறித்து 14 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து “யாழ்நூல்” என்ற நூலினை 1947-ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்க ஆதரவுடன் திருக்கொள்ளக்புதூர் வில்வாரண்யேசுவரர் திருக்கோயிலில் அரங்கேற்றினார்.
100. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
(அ) சேமசுந்தர பாரதியார்
(ஆ) சுத்தானந்த பாரதியார்
(இ) மகாகவி பாரதியார்
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சுத்தானந்த பாரதியார்
பாரத சக்தி மகாகாவியத்தை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் ஆவார். இதன் முதற்பதிப்பு 1948-இல் வெளி வந்தது. இக்காவியம் 50,000 அடிகளால் ஆனது.