Tnpsc General Tamil Previous Question Paper 3
Tnpsc General Tamil Previous Question Paper 3
Tnpsc General Tamil Previous Question Paper 3: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.
1. சரியாகப் பொருத்துக:
நூலாசிரியர் நூல்
அ. சுரதா – 1. கொடிமுல்லை
ஆ. முடியரசன் – 2. பள்ளிப்பறவைகள்
இ. வாணிதாசன் – 3. எச்சில் இரவு
ஈ. ஆலந்தூர் மேகனரங்கன் – 4. பூங்கொடி
அ ஆ இ ஈ
(அ) 4 2 1 3
(ஆ) 3 4 1 2
(இ) 3 1 2 4
(ஈ) 2 3 4 1
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 3 1 2 4
முடியரசன்-பூங்கொடி, சுரதா-எச்சில் இரவு, வாணிதாசன்-கொடிமுல்லை, பாவலரேறு பெருஞ்சித்திரனார்-பள்ளிப்பறவைகள். ஆனால் வினாவில் ஆலந்தூர் மேகானரங்கன் எனத் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது
Tnpsc General Tamil Previous Question Paper 3
2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்.
மடக்கொடி-அவ்வூர்.
(அ) அன்மொழித்தொகை, சேய்மைச்சுட்டு
(ஆ) பண்புத்தொகை, சேய்மைச்சுட்டு
(இ) உரிச்சொற்றொடர், அன்மொழித்தொகை
(ஈ) வினைத்தொகை, பண்புத்தொகை
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) அன்மொழித்தொகை, சேய்மைச்சுட்டு
3. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் – இதில் பயின்று வரும் மோனைச்சொற்கள்
(அ) ஒழுக்கம்-ஒழுக்கம்
(ஆ) ஒழுக்கம்-விழுப்பம்
(இ) விழுப்பம்-தரலான்
(ஈ) உயிரினும்-ஓம்பப்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) ஒழுக்கம்-ஒழுக்கம்
கொடுக்கபட்டுள்ள சீர்களில் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனைச் சொற்களாகும். ஒழுக்கம்-ஒழுக்கம்
4. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்-இச்செய்யுளில் பயின்று வரும் மோனை
(அ) கூழை மோனை
(ஆ) இணை மோனை
(இ) முற்று மோனை
(ஈ) பொழிப்பு மோனை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பொழிப்பு மோனை
முதல் மற்றும் மூன்றா0ம் சீர்களில் உள்ள முதலாம் எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனையாகும்
(உ)டம்பார் அழியின் (உ)யிரார் அழிவர்
5. மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவது
(அ) வஞ்சித் தளை
(ஆ) இயற்சீர் வெண்டளை
(இ) வெண்சீர் வெண்டளை
(ஈ) கலித்தளை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) இயற்சீர் வெண்டளை
மாமுன் நிரையும், விளம் முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளையாகும்.
வெண்சீர் வெண்டளை-காய் முன் நேர் வருவது.
கலித்தளை-காய் முன் நிரை வருவது.
ஓன்றிய வஞ்சித்தளை-கனிமுன் நிரை வருவது.
ஓன்றா வஞ்சித்தளை-கனிமுன் நேர் வருவது.
6. பூவோடு சேர்ந்த நார் போல-உவமை உணர்த்தும் பொருள்
(அ) நன்மை
(ஆ) களிப்பு
(இ) உயர்வு
(ஈ) வீணாதல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) உயர்வு
நாருக்கு தனியாக மணம் கிடையாது. பூவோடு சேர்த்துக் கட்டும்போது நாரும் மணம் பெறுகிறது. எனவே இவ்வுவமை “உயர்வு” என்ற பொருளை உணர்த்துகிறது.
7. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக:
(அ) தி.ஜானகிராமன் – 1.சாயாவனம்
(ஆ) க.நா.சுப்பிரமணியன் – 2. செம்பருத்தி
(இ) சா.கந்தசாமி – 3. கரைந்த நிழல்கள்
(ஈ) அசோகமித்திரன் – 4. பெரியமனிதன்
அ ஆ இ ஈ
(அ) 2 4 1 3
(ஆ) 2 3 4 1
(இ) 3 1 2 4
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 2 4 1 3
8. “கற்பனைக் களஞ்சியம்” – என்று போற்றப்படுபவர்
(அ) தண்டபாணி தேசிகர்
(ஆ) அமிர்தகவிராயர்
(இ) சவ்வாதுப்புலவர்
(ஈ) சிவப்பிரகாச சுவாமிகள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) சிவப்பிரகாச சுவாமிகள்
கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுபவர் சிவப்பிரகாச சுவாமிகள். இவருடைய பிற சிறப்புப் பெயர்கள் சிற்றிலக்கியப் புலவர், நன்னெறி சிவப்பிரகாசர், துறைமங்கலம் சிவப்பிரகாசர்.
இவர் இயற்றிய நூல்களுள் சில:
நால்வர் நான்மணி மாலை, சோணாசலமாலை, திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒருவகை பா), திருவெங்கை உலா, சதமணி மாலை, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, கொச்சகக் கலிப்பா, நெஞ்சுவிடு தூது நன்னெறி.
9. சேரமான் பெருமாள் நாயனார் பாடாத நூல் எது?
(அ) பொன் வண்ணத்தந்தாதி
(ஆ) திருhவாரூர் மும்மணிக்கோவை
(இ) போற்றிக் கலிவெண்பா
(ஈ) ஞான உலா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) போற்றிக் கலிவெண்பா
போற்றிக் கலிவெண்பாவின் ஆசிரியர் நக்கீரர், வினாவில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு நூல்களும் 11-ஆம் திருமுறையில் அமைந்துள்ளன.
General Tamil Model Questions Pdf
10. பின்வருவனவற்றுள் எது சமண இலக்கியம் இல்லை?
(அ) சீவசிந்தாமணி
(ஆ) சூளாமணி
(இ) குண்டலகேசி
(ஈ) நீலகேசி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குண்டலகேசி
குண்டலகேசி-பௌத்த காப்பியம், ஏனைய மூன்றும் சமணக் காப்பியங்களாகும்.
11. பின்வரும் பட்டியலில் வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் எழுதிய நூல் எது?
(அ) தமிழ் நாவலர் சரிதை
(ஆ) புலவர் புராணம்
(இ) தமிழ்ப் புலவர் சரித்திரம்
(ஈ) பாவலர் சரித்திரத் தீபகம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தமிழ்ப் புலவர் சரித்திரம்
சூரியநாராயண சாஸ்திரிகள் எழுதிய நூல்கள் தமிழ்ப்புலவர் சரித்திரம், ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சித்திரக்கவி போன்றவையாகும்.
12. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று A : 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம்.
காரணம் R : பலவகைப் பாக்களையும் கலந்து பாடுவது, கலம்பகம், அகமும் புறமும் கலந்து பாடப்படுவது கலம்பகம்.
(அ) A சரி ஆனால் R தவறு
(ஆ) A தவறு ஆனால் R சரி
(இ) A மற்றும் R இரண்டும் சரி
(ஈ) A மற்றும் R இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) A மற்றும் R இரண்டும் சரி
கலம்பகம் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். பல்வகைப் பொருள்களைப் பற்றி பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும். 18 உறுப்புகளைக் கொண்டது. தமிழில் முதன் முதலில் தோன்றிய கலம்பக வகை நூல் கலம்பகம் ஆகும்.
13. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – இக்குறட்பாலில் “நுணங்கிய” என்னும் பொருளுணர்த்தும் ஆங்கிலச்சொல்
(அ) SILENCER
(ஆ) INTELLIGENT
(இ) SIGNOR
(ஈ) SILVER-TONGUED
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) INTELLIGENT
நுணங்கிய-நுட்பமான அறிவு. நுட்பமான அறிவு-Intelligent.
14. “மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்” – இப்பாடல் ஆசிரியரைக் கண்டறிந்து எழுதுக:
(அ) விளம்பி நாகனார்
(ஆ) சமண முனிவர்
(இ) முன்றுறை அரையனார்
(ஈ) நல்லாதனார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) விளம்பி நாகனார்
விளம்பிநாகனார் எழுதிய “நான்மணிக்கடிகை” என்ற நூலில் வினாவில் கொடுக்கப்பட்டுள்ள பாடலடிகள் அமைந்துள்ளன.
15. பின்வருவனவற்றுள் “ஈறுபோதல்” “முன் நின்ற மெய் திரிதல்” என்னும் விதிகளின் படி புணர்ந்தது
(அ) கருங்கல்
(ஆ) பெருங்குன்று
(இ) சிற்றூர்
(ஈ) செங்கதிரோன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) செங்கதிரோன்
செங்கதிரோன்-பண்புப்பெயர் புணர்ச்சி
செம்மை + கதிரோன்
“ஈறுபோதல்” விதிப்படி மை விகுதி கெட்டு செம் + கதிரோன் என்றானது. முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி வருமொழி முதலில் வந்த வல்லினத்திற்கு (க) இனமான ஙகரம் தோன்றி நிலைமொழி ஈற்று மெய் கெட்டு “செங்கதிரோன்” என்று புணர்ந்தது.
16. பின்வருவனவற்றுள் பொருந்தாத பொருள் எது?
(அ) புரம்-சிறந்த ஊர்
(ஆ) பாக்கம்-கடற்கரைச் சிற்றூர்
(இ) குப்பம்-குறிஞ்சி நில வாழ்விடம்
(ஈ) பட்டினம்-கடற்கரை நகரம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குப்பம்-குறிஞ்சி நில வாழ்விடம்
குப்பம்-நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடம் ஆகும்.
(எ.கா) நொச்சிக்குப்பம், மஞ்சக்குப்பம், மந்தாரக்குப்பம்
17. அற நூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்துத் “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” – என்னும் நூலாகத் தொகுத்து விளக்கம் அளித்தவர்
(அ) H.A.கிருஷ்ணப்பிள்ளை
(ஆ) வீரமாமுனிவர்
(இ) ஜி.யூ.போப்
(ஈ) கால்டுவெல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) ஜி.யூ.போப்
ஜி.யூ.போப் அவர்கள் உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களை நீதிநூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்ததுடன் அதன் பாக்களுக்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
18. “சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” எனக் கூறியவர்.
(அ) அம்பேத்கர்
(ஆ) காந்தியடிகள்
(இ) ஈ.வெ.இராமசாமி
(ஈ) அண்ணாதுரை
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) அம்பேத்கர்
19. பின்வருபவருள் யார் சைவ அடியாரில்லை?
(அ) வாகீசர்
(ஆ) ஆளுடைய பிள்ளை
(இ) தம்பிரான் தோழர்
(ஈ) பெரியவாச்சான் பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பெரியவாச்சான் பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை-வைணவர்
20. நூலாசிரியரோடு நூலைப் பொருத்துக:
(அ) சுத்தானந்த பாரதி – 1. ஞானரதம்
(ஆ) வ.வே.சு.ஐயர் – 2. ஏழைபடும் பாடு
(இ) சுப்பிரமணிய பாரதி – 3. விநோதரஸ மஞ்சரி
(ஈ) வீராசாமி செட்டியார் – 4. கமலவிஜயம்
அ ஆ இ ஈ
(அ) 2 4 3 1
(ஆ) 1 2 3 4
(இ) 1 3 2 4
(ஈ) 2 4 1 3
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 2 4 1 3
21. பொருளறிந்து பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
(அ) பிடர்தலை ஏறியவர் – 1. துர்க்கை
(ஆ) எழுவருள் இளையவர் – 2. பத்ரகாளி
(இ) இறைவனை நடனமாடச் செய்தவர் – 3. பிடாரி
(ஈ) தாருகன் மார்பைப் பிளந்தவர் – 4. கொற்றவை
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 3 4 1 2
(இ) 4 3 1 2
(ஈ) 2 1 4 3
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) 4 3 2 1
சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம்-வழக்குரை காதை)
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
வாயிற்காப்போன் கூற்று
இடம்: பாண்டிய மன்னன் அவை
பீறிட்டு எழும் குருதி ஒழுகும் பிடர்த்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடியாகிய கொற்றவையும் அல்லள்; கன்னியர் எழுவருள் இளையவளாகிய பிடாரியும் அல்லள்; இறைவனை நடனமாடச் செய்த பத்ரகாளியும் அல்லள்; தாருகன் என்ற அசுரனின் பரந்த மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள.
22. “மதியிலி அரசர் நின் மலரடி பணிகலர்
வானகம் ஆள்வாரே” – இப்பாடலுக்குரிய அரசன் ————-
(அ) இராஜராஜ சோழன்
(ஆ) நந்திவர்மன்
(இ) நரசிம்வர்மன்
(ஈ) சுந்தர பாண்டியன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) நந்திவர்மன்
நந்தி மன்னனின் வீரம் குறித்து நந்திக் கலம்பத்தில்,
“மதியிலி அரசர்நின் மரலடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே” – என்ற அடிகள் அமைந்துள்ளன.
பொருள்: அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர் போன் திருவடிகளை வணங்காதவராகித் தேவர் உலகத்தை ஆள்பவராவர்.
23. தாமரையிலைத் தண்ணீர் போல் – உவமை உணர்த்தும் பொருள்
(அ) மகிழ்ச்சி
(ஆ) நட்பு
(இ) பற்றின்மை
(ஈ) தவிப்பு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பற்றின்மை
தாமரையிலையில் தண்ணீர் ஒட்டாது. எனவே இவ்வுவமைக்கு “பற்றின்மை” என்பது சரியான பொருளாகும்.
24. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:
வேடன் சிங்கத்தை வீழ்த்தினான்
(அ) தனிவாக்கியம்
(ஆ) தொடர் வாக்கியம்
(இ) எதிர்மறை வாக்கியம்
(ஈ) கலவை வாக்கியம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) தனிவாக்கியம்
25. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
கபிலர் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்
(அ) இலக்கணமாகத் திகழ்ந்தார் யார்?
(ஆ) நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?
(இ) நட்புக்குச் சிறந்த புலவர் யார்?
(ஈ) நட்பு என்பது யாது?
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?
26. பின்வருவனவற்றுள் “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்னும் விதியின்படி புணராதது
(அ) தன்னுயிர்
(ஆ) பெண்ணரசு
(இ) பைந்தமிழ்
(ஈ) என்னருமை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பைந்தமிழ்
பைந்தமிழ் – பண்புப்பெயர் புணர்ச்சியாகும்
27. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற
குறிப்பு – இடம் பெற்ற நூல் எது?
(அ) சீவகசிந்தாமணி
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) குண்டலகேசி
(ஈ) மணிமேகலை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) மணிமேகலை
28.பொருத்துக:
இயற்பெயர் சிறப்புப் பெயர்
(அ) திரு.வி.கல்யாண சுந்தரம் – 1. தமிழ்த் தாத்தா
(ஆ) மறைமலையடிகள் – 2. தமிழ்த் தென்றல்
(இ) இரா.பி.சேதுப்பிள்ளை – 3. தனித்தமிழ் வித்தகர்
(ஈ) உ. வே.சாமிநாத ஐயர் – 4. சொல்லின் செல்வர்
அ ஆ இ ஈ
(அ) 4 3 1 2
(ஆ) 1 2 3 4
(இ) 2 4 3 1
(ஈ) 2 3 4 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 2 3 4 1
29. நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் – என்னும் குறள் கூறும் கருத்தின் அடிப்படையில் பின்வருவனவற்றில் எதைக் குறிக்கும்?
(அ) மருத்துவ அறிவு
(ஆ) அணுவியல் அறிவு
(இ) மண்ணியல் அறிவு
(ஈ) நீரியல் அறிவு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) நீரியல் அறிவு
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தொழிலி
தான் நல்கா தாகி விடின். – திருக்குறள்: 17
பொருள்: மேகம் கடலிலிருந்து நீரை முகந்து சென்று மீண்டும் அதனிடத்திலே பெய்யாதொழியுமானால், அப்பெரிய கடலும் தன் வளம் குன்றிப்போகும்.
நீரியல் அறிவு: நீர் மழையாக மண்ணிற்கு வருவதும் ஆவியாகி விண்ணிற்கு செல்வதுமான சுழற்சி கூறப்பட்டுள்ளது. மழையில்லையேல் புவியின் தட்பவெப்பநிலை மாறும்.
30. பொருந்தாததைச் சுட்டுக:
(அ) வாதம்
(ஆ) ஏமம்
(இ) பித்தம்
(ஈ) சிலேத்துமம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஏமம்
வாதம், பித்தம், சிலேத்துமம் – உடல் நோய்கள். ஏமம்-பாதுகாப்பு.
31. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்கடனே” என்ற அடி இடம் பெற்ற நூல்
(அ) பதிற்றுப்பத்து
(ஆ) பரிபாடல்
(இ) பட்டினப்பாலை
(ஈ) புறநானூறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) புறநானூறு
புறநானூற்றில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை இயற்றியவர் பொன்முடியார்.
32. “குறுந்தொகை” என்ற நூலைத் தொகுத்தவர்
(அ) கூடலூர்க் கிழார்
(ஆ)உருத்திரசன்மர்
(இ) பூரிக்கோ
(ஈ) பெருந்தேவனார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பூரிக்கோ
குறுந்தொகை என்ற தொகை நூலைத் தொகுத்தவர் பெயர் பூரிக்கோ. இத்தொகை நூலைப் பாடியோர் இரு நூற்றவைர். கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
33. “செல்வத்துப் பயனே ஈதல்” எனப் பாடியவர்
(அ) திருவள்ளுவர்
(ஆ) நக்கீரனார்
(இ) கபிலர்
(ஈ) ஒளவையார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) நக்கீரனார்
புறநானூறு
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உLப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர்ஓக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே – நக்கீரனார்
பொருள்: இவ்வுலகம், தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டது. இவ்வுலகம் முழுவதனையும் பொதுவின்றித் தனதாக்கி ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்பவன் மன்னன். அவனுக்கும், நள்ளிரவிலும் பகலிலும் உறங்காது விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடிவீழ்த்த எண்ணுகின்ற கல்வியறிவற்ற ஒருவனுக்கும். உண்ணத் தேவைப்படும் பொருள் நாழியளவே; உடுத்தும் உடை மேலாடையும் இடுப்பாடையும் இரண்டே. மற்றவை எல்லாமும் இவ்வாறாகவே அமையும். ஆகவே, ஒருவன் தனது செல்வத்தினால் பெறும் பயன், அதனை மற்றவர்க்கும் கொடுத்தலாகும். அவ்வாறன்றித் தாமே நுகர்வோம் என எண்ணினால், பலவற்றை அவன் இழக்க நேரிடும்
34. பொருந்தா இணையைத் தேர்க:
சொல் பொருள்
(அ) கா – சோலை
(ஆ) க – சாலை
(இ) மா – விலங்கு
(ஈ) மீ – உயர்ச்சி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) க – சாலை
35. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: இளமையில் கல்
(அ) பிறவினை வாக்கியம்
(ஆ) கலவை வாக்கியம்
(இ) கட்டளை வாக்கியம்
(ஈ) வினா வாக்கியம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) கட்டளை வாக்கியம்
36. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க:
உவமைத்தொகை
(அ) தமிழன்னை
(ஆ) மதிமுகம்
(இ) மலர்ப்பாதம்
(ஈ) கல்திரள்தோள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) தமிழன்னை
37. பின்வருவனவற்றுள் எது அண்ணாவின் படைப்பு அன்று?
(அ) வேலைக்காரி
(ஆ) ஓர் இரவு
(அ) தமிழன்னை
(ஈ) செவ்வாழை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) தமிழன்னை
குறட்டை ஒலி-மு.வரதராசன்
38. “கற்கின்றனர்” என்னும் நிகழ்கால வினைமுற்றின் வேர்ச்சொல்
(அ) கற்க
(ஆ) கற்ற
(இ) கற்று
(ஈ) கல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) கல்
கல்-வேர்ச்சொல்; கற்க-வியங்கோள் வினைமுற்று.
கற்று-வினையெச்சம்; கற்ற-பெயரெச்சம்
39. பின்வருவனவற்றுள் எவை இணையில்லை?
(அ) முதல் கலம்பகம்-நந்திக் கலம்பகம்
(ஆ) முதல் பரணி-தக்கயாகப்பரணி
(இ) முதல் நாவல்-பிரதாப முதலியார் சரித்திரம்
(ஈ) முதல் உலா-திருக்கையிலாய ஞான உலா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) முதல் பரணி-தக்கயாகப்பரணி
முதல் பரணி ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி ஆகும்.
40. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள்-எனக் கூறியவர்
(அ) இராமலிங்க அடிகள்
(ஆ) இரா.பி.சேதுபிள்ளை
(இ) நாமக்கல்-இராமலிங்கம் பிள்ளை
(ஈ) முத்துராமலிங்கத் தேவர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) முத்துராமலிங்கத் தேவர்
41. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி” – எனத் தமிழினத்தின் தென்மையைப் பற்றிக் கூறும் நூலின் பெயர்
(அ) புறநானூறு
(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை
(இ) பதிற்றுப்பத்து
(ஈ) தொல்காப்பியம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) புறப்பொருள் வெண்பாமாலை
42. பொருந்தாத பெயரைச் சுட்டுக:
(அ) பிங்கலம்
(ஆ) திவாகரம்
(இ) சூளாமணி
(ஈ) சூடாமணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) சூளாமணி
சூளாமணி – ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. ஏனைய மூன்றும் நிகண்டு வகை நூல்களாகும். “நிகண்டு” என்பது சொற்பொருள் விளக்கம் தரும் அகராதியாகும்
43. பொருந்தாத இணையைக் கட்டுக:
(அ) கூறை-அறுவை
(ஆ) துகில்-அகில்
(இ) கலிங்கம்-காழகம்
(ஈ) சீலை-புடவை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) துகில்-அகில்
கூறை-ஆடை; அறுவை-ஆடை; கலிங்கம்-ஆடை; காழகம்-ஆடை; சீலை-ஆடை; புடவை-ஆடை; துகில்-ஆடை; அகில்-வாசனைக் கட்டையைத் தரும் ஒருவகையான மரம்.
44. “குளம் நிறைந்த நீர்த்தடம்போல் குளிர் தூங்கும் பரப்பின தாய்
வளம் மருவும் நிழல்தருதண் ணீர்ப் பந்தர் வந்தணைந்தார்” – “இப்பாடலுக்குரிய கதாநாயகன்”
(அ) திருநாவுக்கரசர்
(ஆ) ஞானசம்பந்தர்
(இ) சுந்தரர்
(ஈ) மணிவாசகர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) திருநாவுக்கரசர்
பெரியபுராணம்-அப்பூதியடிகள் புராணம்
“அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உ ளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றிக்
குளம்நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்த்தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல்தருதண் ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்
– சேக்கிழார்
பொருள்: அளவற்ற மக்கள் நடந்து செல்லும் வழியில், கோடையின் மிகுந்த வெப்பத்தினைப் போக்கியருளும் கருணைமிக்க பெரியோர் உள்ளம் போன்றும் நீர்த்தடாகம் போன்றும் அமைக்கப்ப பெற்ற குளிர்ச்சி நிறைந்த தண்ணீர்ப்பந்தல் அருகே திருநாவுக்கரசர் வந்து சேர்ந்தார்.
45. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
மணம்-மனம் என்ற சொல்லின் பொருள் யாது?
(அ) உள்ளம்-வாசனை
(ஆ) எண்ணம்-இதயம்
(இ) வாசனை-உள்ளம்
(ஈ) மணத்தல்-மானம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) வாசனை-உள்ளம்
46. கீழ்க்காணும் ஒற்றளபெடைச் சொற்களுள் மாறுபட்டு நிற்பதை கண்டறிந்து எழுதுக:
(அ) வாழ்ழ்க்கை
(ஆ) சங்ங்கு
(இ) நெஞ்ஞ்சு
(ஈ) கண்ண்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) வாழ்ழ்க்கை
செய்யுளில் ஓசை குறையுமிடத்தில் ஒற்றொழுத்துகள் மிக்கு ஒலிப்பதே ஒற்றளபெடையாகும். ஓற்றளபெடையில் மிக்கு ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம் 11. அவையாவன:ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் மற்றும் ஃ எனவே “ழ்” அளபெடுக்காது.
47. பயணம் என்ற சொல்லிற்கு செலவு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
(அ) மறைமலை அடிகள்
(ஆ) பரிதிமாற்கலைஞர்
(இ) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(ஈ) பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) திரு.வி.கல்யாணசுந்தரனார்
48. “அரியவற்றுள் எல்லாம் அரிதே – பெரியாரைப்” – இவ்வடியில் பயின்றுவரும் எதுகை.
(அ) இணை எதுகை
(ஆ) பொழிப்பு எதுகை
(இ) கீழ்க்கதுவாய் எதுகை
(ஈ) மேற்கதுவாய் எதுகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) மேற்கதுவாய் எதுகை
அரியவற்றுள் எல்லாம் அரிதே – பெரியாரைப்
முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் இரண்டாமெழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் எதுகையாகும்.
49. அப்பாதான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
இதில் பயின்று வரும் இயைபுச் சொற்கள்
(அ) அப்பா-ஆருயிர்
(ஆ) அப்பா-அன்புசொல்
(இ) வேண்டுதல்-வேண்டும்
(ஈ) வேண்டும்-வேண்டும்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) வேண்டும்-வேண்டும்
இறுதிச்சீர் ஒன்றி வருவது இயைபுத் தொடை ஆகும்.
50. ஈற்றடியின் ஈற்றுச் சீரானது ஓரசை வாய்பாடுகளுள் ஒன்று கொண்டு முடியும் பா வகை.
(அ)வஞ்சிப்பா
(ஆ) கலிப்பா
(இ) வெண்பா
(ஈ) ஆசிரியப்பா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வெண்பா
வெண்பா-ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் ஓரசை வாய்பாடுகளுள் ஏதேனும் ஒன்றால் முடிவு பெறும்.
51.”உண்மைநெறி விளக்கம்” என்ற நூலை எழுதியவர்
(அ) அருணந்தி சிவாசாரியார்
(ஆ) மறைஞான சம்பந்தர்
(இ) உமாபதி சிவாசாரியார்
(ஈ) மெய்கண்ட தேவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) உமாபதி சிவாசாரியார்
உண்மைநெறி விளக்கம் என்பது தமிழில் எழுதப்பட்ட சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.
52. முதன்முதலில் தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டவர்
(அ) எல்லீஸ் துரை
(ஆ) சீகன்பால்க் ஐயர்
(இ) இரேனியுஸ் ஐயர்
(ஈ) ஜி.யூ.போப்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சீகன்பால்க் ஐயர்
தமிழகத்திலுள்ள தரங்கமபாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரங்களை பயன்படுத்தி தமிழ்ப்புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டவர் சீகன்பால்க் ஐயர் ஆவர். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். தமிழில்
இவர் அச்சிட்ட முதல் நூல் பைபிள் ஆகும்.
53. ஆறுமுக நாவலருக்கு “நாவலர்” பட்டம் வழங்கியவர்.
(அ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை
(ஆ) திருவாவடுதுறை ஆதீனம்
(இ) இராமலிங்க அடிகள்
(ஈ) கோபால கிருஷ்ண பாரதியார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருவாவடுதுறை ஆதீனம்
ஆறுமுகநாவலர் சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக அயராது உழைத்தார். அவரின் கல்விப் புலமையும், நாவன்மையையும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு “நாவலர்” பட்டத்தை வழங்கியது.
54. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று A: குற்றியலுகரம் சார்பெழுத்துகளுள் ஒன்று, ஈற்றயலெழுத்தை நோக்க ஆறு வகைப்படும்.
காரணம் R: ஒரு சொல்லின் ஈற்றில் “உகர” உயிர்மெய் எழுத்து வரின் குற்றியலுகரம் எனப்படும்
(அ) A மற்றும் R இரண்டும் சரி. A மேலும் R க்கு சரியான விளக்கமாகும்.
(ஆ) A சரி R தவறு. மேலும் A க்கு R சரியான விளக்கமன்று
(இ) A தவறு R சரி. மேலும் R விளக்கத்திற்கு A சரியான தொடர் அன்று
(ஈ) A மற்றும் R இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) A சரி R தவறு. மேலும் A க்கு R சரியான விளக்கமன்று
55. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று A : உயிரளபெடை வகைகளுள் ஒன்று இன்னிசையளபெடை. மூன்று மாத்திரையாக ஒலிக்கும்.
காரணம் R : செய்யுளில் ஓசை குறையாத போதும் இனிய இசைக்காக அளபெடுப்பது இன்னிசையளபெடை.
(அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் A க்கு R சரியான விளக்கமாகும்.
(ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
(இ) A சரி R தவறு. மேலும் A க்கு R சரியான விளக்கமன்று
(ஈ) A தவறு R சரி. R விளக்கத்திற்கு பொருத்தமான தொடராக A அமையவில்லை.
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் A க்கு R சரியான விளக்கமாகும்.
56. கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று A : கருப்பொருள்களுள் ஒன்று “பறை” ஆகும்.
காரணம் R : குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள்களுள் ஒன்றாக “தொண்டகப்பறையையும்” முல்லை நிலத்தின் கருப்பொருள்களுள் ஒன்றாக “மணமுழாபறையையும்” குறிப்பிடுகிறது அகப்பொருள்.
(அ) கூற்று A தவறு. விளக்கம் R சரி
(ஆ) கூற்று சரி. விளக்கம் R தவறு
(இ) விளக்கம் R தவறு. கூற்று A தவறு
(ஈ) விளக்கம் R சரி. கூற்று A சரி.
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கூற்று சரி. விளக்கம் R தவறு
குறிஞ்சி நிலத்தின் பறை-தொண்டகப்பறை.
முல்லை நிலத்தின் பறை-ஏறுங்கோட்டுப்பறை.
மருதநிலத்தன் பறை-நெல்லரிக்கிணை, மணமுழவு.
நெய்தல் நிலத்தின் பறை-மீன்கோட்பறை.
பாலை நிலத்தின் பறை-துடி
57. பொருத்துக:
ஆசிரியர் சிறுகதை
(அ) மு.வரதராசனார் – 1. மேல்ல மெல்ல மற
(ஆ) ஸ்ரீமதி எஸ்.இலட்சுமி – 2. நன்றிப்பரிசு
(இ) நீலவன் – 3. மணம் நுகர்ந்ததற்குப் பணம்
(ஈ) இலட்சுமி – 4. குறட்டை ஒலி
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 4 3 1 2
(இ) 4 2 3 1
(ஈ) 2 1 3 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 4 3 2 1
58. “மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே” – இச்செய்யுளடிகள் இடம் பெற்ற நூல்
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) குண்டலகேசி
(இ) மணிமேகலை
(ஈ) வளையாபதி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) மணிமேகலை
மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை அறவண அடிகளின்
கூற்று:
உலகம் மூன்றினும் உயிராம் உலகம்
அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே.
பொருள்: மூவுலகிலும் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. அவ்வுயிர்கள் மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குத் தொகுதி, பேய் என்னும் அறுவகைத்தாகும்.
59. பொருந்தும் இலக்கணம் யாது?
(அ) கூவா-விளி
(ஆ) தேவா-தானியாகு பெயர்
(இ) இருந்தவள்ளல்-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
(ஈ) நீர்முகில்-2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) நீர்முகில்-2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
கூவா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெரெச்சம்.
தேவா-விளி.
இருந்த வள்ளல்-பெயரெச்சம்
60. பின்வரும் இலக்கணங்களுள் தவறானது எது?
(அ) இகழ்வார்-விளையாலணையும் பெயர்
(ஆ) செந்நீர்-வினைத்தொகை
(இ) இன்னாச்சொல்-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
(ஈ) உண்ணாது-வினையெச்சம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) செந்நீர்-வினைத்தொகை
செந்நீர்-பண்புத்தொகை
61. “கூவா முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்”
– இச்செய்யுளடிகளில் “இறைஞ்சினான்” – யார்?
(அ) சுக்ரீவன்
(ஆ) குகன்
(இ) இலக்குவன்
(ஈ) அனுமன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) குகன்
கம்பராமாயணம்-அயோத்தியாக் காண்டம்.
குகப்படலம்
“கூவா முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்”
பொருள்: இராமன் குகனை அழைக்கும் முன்னர், இளையனாகிய இலக்குவன் அவனை நெருங்கி “யார் நீ” என வினவினான். “இறைஞ்சினான்” என்பது குகனைக் குறிக்கிறது.
62. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக:
(அ) அம்பி – 1. குஞ்சி
(ஆ) அல் – 2. பறை
(இ) துடி – 3. இருள்
(ஈ) தலைமுடி – 4. படகு
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 1 2 3 4
(இ) 2 3 4 1
(ஈ) 3 4 1 2
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) 4 3 2 1
அம்பி-படகு (ஆயிரம் அம்பிக்கு குகன் சொந்தக்காரன்).
அல்-இருள்.
துடி-பறை (பாலை நிலத்தின் பறை “துடி”.
தலைமுடி-குஞ்சி (இருண்ட குஞ்சி மண்ணுறப் பணிந்து – இருள் போன்ற நீண்ட முடியுடைய தலை மண்ணில் பட விழுந்து வணங்கினான்)
63. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக:
(அ) விந்தன் – 1. குருதிப்புனல்
(ஆ) சு.சமுத்திரம் – 2. பெற்றமனம்
(இ) இந்திரா பார்த்தசாரதி – 3. சோற்றுப்பட்டாளம்
(ஈ) மு.வ. – 4. பாலும் பாவையும்
அ ஆ இ ஈ
(அ) 4 3 1 2
(ஆ) 4 1 3 2
(இ) 3 2 1 4
(ஈ) 2 4 3 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 4 3 1 2
64. சரியானவற்றைத் தேர்க:
உரிபொருள் திணை
1. ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம்
2. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் முல்லை
3. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல்
4. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் பாலை
(அ) 1, 2ம் சரி
(ஆ) 2, 3ம் சரி
(இ) 1,3ம் சரி
(ஈ) 3,4ம் சரி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 1,3ம் சரி
நிலம் உரிப்பொருள்
குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் இரங்கல் இரங்கல் நிமித்தமும்
பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
65. சரியானவற்றைத் தேர்க:
தெய்வம் திணை
1. முருகன் குறிஞ்சி
2. இந்திரன் மருதம்
3. துர்க்கை நெய்தல்
4. திருமால் பாலை
(அ) 2,3ம் சரி
(ஆ) 1,2ம் சரி
(இ) 2,4ம் சரி
(ஈ) 1,4ம் சரி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) 1,2ம் சரி
நிலம் தெய்வம்
குறிஞ்சி முருகன் (சேயோன்)
முல்லை திருமால் (மாயோன்)
மருதம் இந்திரன்
நெய்தல் வருணன்
பாலை துர்க்கை
66. இலக்கணக்குறிப்புச் சொல்லை எழுதுக:
இன்னிசை அளபெடை
(அ) சாஅய்
(ஆ) குறீஇ
(இ) படூஉம்
(ஈ) தாங்குறூஉம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தாங்குறூஉம்
தாக்குறூஉம்-இன்னிசைஅளபெடை
இன்னிசை அளபெடை மூன்று அசைகளைக் கொண்ட காய்ச்சீராக இருக்கும். தாங்/கறூ/ உம்
செய்யுளிசை அளபெடை:
இவ்வளபெடை ஈரசைச் சீர்களாக இருக்கும். சா/அய். புடூ/உம்
செல்லிசை அளபெடை:
இவ்வளபெடை “இ” என்னும் எழுத்தில் முடிந்திருக்கும். குறீஇ
67. பின்வரும் இணைகளில் பொருந்தாத இணையைத் தெரிந்தெடுத்து எழுதுக:
(அ) சூரியகாந்தி-நா.காமராசன்
(ஆ) ஞானரதம்-பாரதியார்
(இ) எழுத்து-சி.சு.செல்லப்பா
(ஈ) குயில்பாட்டு-பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) குயில்பாட்டு-பாரதிதாசன்
குயில்பாட்டு-பாரதியார்
68. பின்வருவனவற்றுள் எது பொருந்தாதது?
(அ) நாககுமார காவியம்
(ஆ) உதயண குமார காவியம்
(இ) குண்டலகேசி
(ஈ) நீலகேசி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குண்டலகேசி
குண்டலகேசி-ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். ஏனைய மூன்றும் ஐஞ்சிறு காப்பியங்களாகும்.
69. ஈற்றயலடி முச்சீராக, ஏனைய அடிகள் நாற்சீசராக – அமையும் பா வகை – பின்வருவனவற்றுள் எது?
(அ) நேரிசை ஆசிரியப்பா
(ஆ) நிலைமண்டில ஆசிரியப்பா
(இ) அடிமறி மண்டில ஆசிரியப்பா
(ஈ) இணை குறளாசிரியப்பா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) நேரிசை ஆசிரியப்பா
ஈற்றயலடி முச்சீராயும் ஏனைய அடிகள் நாற்சீராய் அமைந்திருப்பது நேரிசை ஆசிரியப்பா. அனைத்து அடிகளும் நாற்சீரடிகளாய் அமைந்திருப்பது நிலைமண்டில ஆசிரியப்பா. ஈற்றடியும் முதலடியும் நாற்சீரடிகளாய், இடையிலுள்ள அடிகள் இரு சீரடிகளாகவும், முச்சீரடிகளாவும் வருவது இணைக்குறள் ஆசிரியப்பா, பாடலில் உள்ள அடிகளை முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது அடிமறி மண்டிலய ஆசிரியப்பா அனைத்து அடிகளும் நாற்சீரடிகளாய் அமைந்திருக்கும்
70. பொருளறிந்து பொருத்துக:
சொல் பொருள்
(அ) கலாபம் – 1. கிளி
(ஆ) விவேகன் – 2. பொய்கை
(இ) வாவி – 3. ஞானி
(ஈ) அஞ்சுகம் – 4. தோகை
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 4 2 3 1
(இ) 4 2 1 3
(ஈ) 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 4 3 2 1
71. “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும்உடுக்களோடும்
மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள்” – எனத் தமிழின் பழஞ் சிறப்பினைப் பெருமிதம் பொங்கப் பாடிய கவிஞர்
(அ) பாரதியார்
(ஆ) கண்ணதாசன்
(இ) சுரதா
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) பாரதிதாசன்
72. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
நேற்று எங்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
(அ) வினா வாக்கியம்
(ஆ) செய்தி வாக்கியம்
(இ) பிறவினை வாக்கியம்
(ஈ) உணர்ச்சி வாக்கியம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) செய்தி வாக்கியம்
73. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
அறை-அரை என்ற சொல்லின் பொருள் யாது?
(அ) கட்டடப்பகுதி-ஒன்றில் பாதி
(ஆ) காலியானப்பகுதி-கட்டடப்பகுதி
(இ) ஒரு பொருளின் பாதி-ஓர் அறையின் பகுதி
(ஈ) ஒன்றில் பாதி-கட்டடப்பகுதி
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) கட்டடப்பகுதி-ஒன்றில் பாதி
74. பொருந்தாத இணையைப் கண்டறிக:
ஆசிரியர் இயற்றிய நூல்
(அ) வீரமாமுனிவர் பரமார்த்தகுரு கதை
(ஆ) தேவநேயப் பாவாணர் தமிழர் திருமணம்
(இ) திரு.வி.க சைவத் திறவு
(ஈ) பெருஞ்சித்திரனார் தமிழ்ச்சோலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பெருஞ்சித்திரனார் தமிழ்ச்சோலை
“தமிழ்ச்சோலை” என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
75. அகரவரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக:
(அ) பிட்டு, பூட்டு, பொன், பெண், பாட்டு
(ஆ) பூட்டு, பாட்டு, பிட்டு, பெண், பொன்
(இ) பாட்டு, பிட்டு, பூட்டு, பெண், பொன்
(ஈ) பொன், பெண், பாட்டு, பிட்டு, பூட்டு
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) பாட்டு, பிட்டு, பூட்டு, பெண், பொன்
76. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக:
(அ) வேதநாயகம் பிள்ளை – 1. மானவிஜயம்
(ஆ) சூரியநாராயண சாஸ்திரி – 2. அகலிகை வெண்பா
(இ) வெ.ப.சுப்பிரமணிய முதலியார் – 3. பாரிகாதை
(ஈ) ரா.ராகவையங்கார் – 4. நீதி நூல்
அ ஆ இ ஈ
(அ) 4 1 2 3
(ஆ) 1 2 4 3
(இ) 3 1 2 4
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 4 1 2 3
77. பின்வருவனவற்றுள் நா.பார்த்தசாரதி எழுதிய நூலைச் சுட்டுக:
(அ) கல்லுக்குள் ஈரம்
(ஆ) சமுதாய வீதி
(இ) யாகசாலை
(ஈ) முள்ளும் மலரும்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) சமுதாய வீதி
78. பின்வரும் தொகுப்பில் பொருந்தாத சொல்லினை எடுத்தெழுதுக:
(அ) செம்மை
(ஆ) பசுமை
(இ) கருமை
(ஈ) வெம்மை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) வெம்மை
வெம்மை-வெப்பம். ஏனைய மூன்றும் வண்ணங்களைக் குறிக்கின்றன
79. அகரவரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக:
(அ) மெல்ல, மீன், மையல், மண், முடி
(ஆ) மண், மீன், முடி, மெல்ல, மையல்
(இ) முடி, மீன், மெல்ல, மையல், மண்
(ஈ) மண், முடி, மையல், மெல்ல, மீன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) மண், மீன், முடி, மெல்ல, மையல்
80. “உதவு” என்ற சொல்லின் சரியான பொருள் உணர்த்தும் சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
(அ) உழைப்பின்றி உயர்வில்லை
(ஆ) உயர்ந்தோரை உலகு மதிக்கும்
(இ) உயர்வே மதிப்பைத் தரும்
(ஈ) உயர்ந்தோர் உதவும் உள்ளம் கொண்டவர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) உயர்ந்தோர் உதவும் உள்ளம் கொண்டவர்