Tnpsc General Tamil Previous Question Paper 22
Tnpsc General Tamil Previous Question Paper 22
Tnpsc General Tamil Previous Question Paper 22: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.
1. குன்றக்குடி அடிகளாரால் ‘கவியரசு’ என்னும் பட்டம் பெற்றவர்
A) ந. பிச்சமூர்த்தி
B) கவிஞர் சுரதா
C) பாரதிதாசன்
D) முடியரசன்
விடை : D) முடியரசன்
விளக்கம் :
கவிஞர் முடியரசனின் இயற்பெயர் துரைராசு ஆகும். ‘பூங்கொடி’ என்ற காவியத்திற்காக 1966 – இல் தமிழக அரசின் விருதினைப் பெற்றவர். பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் ‘கவியரசு’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
2. ‘குறுகினன்’ – சரியாகப் பிரித்தெழுதுக.
A) குறு + இன் + அன்
B) குறுகி + இன் + அன்
C) குறுகு + இன் + அன்
D) குறுக்கி + இன் + அன்
விடை : C) குறுகு + இன் + அன்
விளக்கம் :
குறுகினன் – குறுகு + இன் +அன்
குறுகு – பகுதி; இன் – இறந்தகால இலைநிலை ; அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
குறுகு + இன் – இது குற்றியலுகரப் புணர்ச்சி ஆகும்.
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி குறுக் + இன் என்றானது.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி புணர்ந்து ‘குறுகின்’ என்றானது.
குறுகின் + அன் – ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி ‘குறுகினன்’ என்றானது.
3. ஒப்புரவு – எதிர்சொல் தருக.
A) மறவாமை
B) உதவாமை
C) நாடாமை
D) இல்லாமை
விடை : B) உதவாமை
விளக்கம் :
‘ஒப்புரவின்’ பொருள் ‘உதவி செய்தல்’ ஆகும். எனவே அதன் எதிர்ச்சொல் ‘உதவாமை’ ஆகும்.
4. உவம உருபு பயின்று வராத தொடரைத் தேர்வு செய்க.
A) முழுவு உறழ் தடக்கை
B) தாய் போல் பேசும் மகள்
C) மான் மருளும்
D) வேய்புரை தோள்
விடை : C) மான் மருளும்
விளக்கம் :
உறழ், போல், புரை ஆகியவை உவமை உருபுகளாகும்.
“போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைப ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” – நன்னூல்
5. தவறான வினைமரபுத் தொடரைத் தேர்க.
A) தண்ணீர் குடித்தான்
B) உமி கருக்கினான்
C) முறுக்குத் தின்றான்
D) பால் குடித்தான்
விடை : D) பால் குடித்தான்
விளக்கம் :
சரியான வினைமரபு – பால் பருகினான்.
General Tamil Previous Questions Pdf
6. சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க.
A) உணவு, உடை, அடிப்படை தேவை – அந்த தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்.
B) உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்த தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும்.
C) உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்.
D) உணவு, உடை, அடிப்படை தேவை – அந்தத் தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்.
விடை : C) உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்.
7. Writs என்ற சொல்லின் பொருள்
A) சட்ட நுணுக்கங்கள்
B) சட்ட செயல்கள்
C) சட்ட ஆவணங்கள்
D) சட்ட சிக்கல்கள்
விடை : C) சட்ட ஆவணங்கள்
8. பொருள் கூறு – தண்
A) தண்ணீர்
B) குளிர்ச்சி
C) சோலை
D) தன்னுடைய
விடை : B) குளிர்ச்சி
விளக்கம் :
தண் – குளிர்ச்சி ; தண்ணீர் – குளிர்ச்சியான நீர்.
9. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
A) எடுத்துக்காட்டு உவமைஉஅணி
B) உவமையணி
C) பிறிது மொழிதலணி
D) பொருள் பின்வருநிலையணி
விடை : B) உவமையணி
விளக்கம் :
உவமையணி : ஒரு பொருளை அதன் தன்மை கொண்ட உயர்வான மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணி ஆகும்.
(எ.கா) கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
பொருள் : வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாகக் காத்திருக்க வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப் போல் விரைந்து செயல்பட வேண்டும்.
10. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக.
A) சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம்
B) செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு, சூடாமணி
C) சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம், சார்பு
D) சிறுகதை, சார்பு, சோளம், செவ்வாழை, சூடாமணி
விடை : A) சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம்
11. சரியான முறையில் அமைந்துள்ள சீர்களைத் தேர்க.
A) அரியவற்றுள் அரிதே, பெரியாரை எல்லாம்
B) அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரை
C) அரியவற்றுள் எல்லாம், பெரியாரை அரிதே
D) பெரியாரை எல்லாம், அரியவற்றுள் அரிதே
விடை : B) அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரை
விளக்கம் :
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் – குறள் எண் – 443
பொருள் : பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் அனைத்துப் பேறுகளையும் விட பெரும் பேறாகும்.
12. “கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்” என்பது
A) நேர்மறைத்தொடர்
B) எதிர்மறைத்தொடர்
C) பொருள் மாறா எதிர்மறைத்தொடர்
D) பொருள் மாறும் எதிர்மறைத்தொடர்
விடை : B) எதிர்மறைத்தொடர்
விளக்கம் :
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – உடன்பாட்டுத் தொடர்
கலைச்செல்வி கட்டுரை எழுதிலள் – எதிர்மறைத் தொடர்
கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள் – பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
13. முதலிலார்க்(கு) ஊதிய மில்லை, மதலையாம்
சார்பிலார்க் கில்லை நிலை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
A) ஏகதேச உருவக அணி
B) உவமையணி
C) எடுத்துக்காட்டு உவமையணி
D) பிறிதுமொழிதல் அணி
விடை : C) எடுத்துக்காட்டு உவமையணி
விளக்கம் :
எடுத்துக்காட்டு உவமையணி :
உவமை தனிவாக்கியமாகவும் உவமேயம் தனிவாக்கியமாகவும் அமைந்து, “போல” “போன்ற” “அன்ன” என்பதான உவம உருபுகள் மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
(எ.கா) முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை
பொருள் : முதலீடு இல்லாத வணிகருக்கு அதனால் வரும் இலாபமும் இல்லை ; அதுபோல் தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபெறும் இல்லை. இக்குறளில் ‘போல’ என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது.
14. கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை வகை எது?
அளவில்சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்
A) எதுகை தொடை
B) இயைபு தொடை
C) முரண் தொடை
D) மோனை தொடை
விடை : A) எதுகை தொடை
விளக்கம் :
அடிதோறும் (அ) சீர்கள்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகைத் தொடை ஆகும். வினாவில் கொடுக்கப்பட்டுள்ள சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்துள்ளது. எனவே இஃது எதுகைத் தொடையாகும். அடிதோறும் (அ) சீர்கள்தோறும் முதல் எழுத்து ஒன்றிவருவது ‘மோனைத்தொடை’ ஆகும்.
(எ.கா) அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
செய்யுளில் உள்ள அடிகள் (அ) சீர்களில் முரண்பாடான பொருளில் சொற்கள் அமைந்திருந்தால் அது ‘முரண் தொடை’ ஆகும்.
(எ.கா) ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் – செய்யுள் அடிகளில் இறுதிச் சீர் ஒன்றிவருவது இயைபுத் தொடை ஆகும்.
(எ.கா) எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
15. ஓர் அடியில் உள்ள நான்கு சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றிவரத்துடுப்பது
A) இணை மோனை
B) கூழை மோனை
C) பொழிப்பு மோனை
D) முற்று மோனை
விடை : D) முற்று மோனை
விளக்கம் :
ஓர் அடியில் உள்ள நான்கு சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்று மோனை ஆகும்.
முற்று மோனை
(எ.கா) (1, 2, 3 மற்றும் 4- ஆம் சீர்கள்)
1 2 3 4
அப்பதியில் அன்பருடன் அமர்ந்தகல்வார், அகலிடத்தில்
இணைமோனை : (1 மற்றும் 2 ஆம் சீகள்)
1 2
கோடி கோடி குறட்சிற பூதங்கள்
கூழைமோனை : (1, 2 மற்றும் 3 – ஆம் சீர்கள்)
1 2 3
அந்தணர்கள் அதியசித்தார் அருமுனிவர் துதி செய்தார்
பொழிப்பு மோனை : (1 மற்றும் 3 – ஆம் சீர்கள்)
1 3
கருத்தொன்று காதலினார் கனகமதில் திருவாரூர்.
16. ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்றவர்
A) தொல்காப்பியர்
B) பவணந்தி முனிவர்
C) ஔவையார்
D) இளங்கோவடிகள்
விடை : C) ஔவையார்
17. “சிறு எறும்பும் அதன் கையினால் எண் சாண் உடையதே” என்றவர்
A) பரணர்
B) பொய்யில் புலவர்
C) செம்புலப்பெயல் நீரார்
D) ஔவையார்
விடை : D) ஔவையார்
விளக்கம் :
கற்றதுகைம் மண்ணளவு கல்லாதது உலகளவென்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம் கூற வேண்டா : புலவீர்
சிறுஎறும்புந்தன் கையால்எண் சாண் – ஔவையார்
பொருள் : புலவர்களே ! இதுவரை நாம் படித்தது கைப்பிடி மண்ணளவே ஆகும். இன்னும் படிக்க வேண்டியவை உலகளவு என்று எண்ணியே கலைமகள் இன்றளவும் படித்து வருகிறாள். அதனால் மிகுதியாகப் படித்துவிட்டோம் என்ற செருக்குடன் வீண் வல்லமை பேசக்கூடாது. சிறு எறும்பும் அதன் கையினால் எட்டு சாண்கள் ஆகும்.
18. நூல்கள், நூலாசிரியர்கள் – பொருத்துக :
a) தொன்னூல் விளக்கம் 1. புகழேந்தி
b) மனுமுறை கண்ட வாசகம் 2. மாணிக்கவாசகர்
c) நளவெண்பா 3. இராமலிங்க அடிகளார்
d) திருக்கோவையார் 4. வீரமாமுனிவர்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 4 2 3 1
B) 4 3 1 2
C) 3 2 1 4
D) 1 2 4 3
விடை : B) 4 3 1 2
விளக்கம் :
தொன்னூல் விளக்கம் என்ற நூலை எழுதியவர் வீரமாமுனிவர். இந்நூலில் அவர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களைத் தொகுத்துள்ளார்.
இராமலிங்க அடிகளார் இரண்டு, உரைநடை நூல்களை எழுதியுள்ளார். 1. மனுமுறை கண்ட வாசகம், 2. ஜீவகாருண்ய ஒழுக்கம்.
‘நளவெண்பா’ என்ற காப்பியத்தை இயற்றியவர் புகழேந்திப் புலவர் ஆவார். இது நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூலாகும். வெண்பா யாப்பில் காப்பியப் பொருளைத் தொடர்நிலைச் செய்யுள்களாகப் பாடியதால் இவர், ‘வெண்பாவின் புகழேந்தி’ எனப் போற்றப்படுகிறார்.
‘திருக்கோவையார்’ என்ற நூலை இயற்றியவர் மாணிக்கவாசகர். திருவாசகம், திருவெம்பாவை ஆகியவை இவர் இயற்றிய பிறநூல்களாகும். “கோவை பாடிய வாயால் பாவை பாடுக” என்று இறைவன் ஆணையிட்டதால் திருவெம்பாவை என்ற நூலை மாணிக்கவாசகர் இயற்றினார்.
19. ‘நாறுவ’ என்னும் சொல் தரும் பொருள்
A) மூத்த
B) முளைப்ப
C) நறுமணம்
D) கெடாமல்
விடை : B) முளைப்ப
விளக்கம் :
சிறுபஞ்சமூலம்
பூவாது காய்க்கும் மரம் உள : நன்று அறிவார்.
மூவாது மூத்தவர், நூல் வல்லார் : தாவா.
விதையாமை நாறுவ வித்துன மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு – காரியாசன்
பொருள் : பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை தீமைகளை நன்குணர்ந்தவர்கள் வயதில் இளையவராக இருந்தாலும், அவர்கள் வயதில் மூத்தவர்களோடு வைத்து எண்ணத்தக்கவர்கள் ஆவர். பாத்தி அமைத்து விதை விதைக்காமலேயே தானே முளைத்து வரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்து கொள்வர்.
20. புலனழுக்கற்ற அந்தணாளன்’ – என்று புகழப்படும் சங்கப்புலவர்
A) பரணர்
B) கபிலர்
C) நக்கண்ணையார்
D) ஔவையார்
விடை : B) கபிலர்
விளக்கம் :
கபிலரைப் புகழ்ந்தவர்கள் மற்றும் புகழுரைகள் :
புகழ்ந்தவர் | புகழுரை |
நக்கீரர் | வாய்மொழிக் கபிலன் |
பெருங்குன்னூர்கிழார் | நல்லிசைக் கபிலன் |
பொருந்தில் இளங்கீரனார் | வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் ‘வெறுத்த’ என்றால் இங்கு விரும்பிய என்று பொருளாகும். |
பாறோகத்து நப்பசலையார் | புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன். |
21. “நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக முனைத்தும் மேம்படத் தக்கோன்’ – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) மலைபடுகடாம்
B) மதுரைக்காஞ்சி
C) முல்லைப்பாட்டு
D) பட்டினப்பாலை
விடை : A) மலைபடுகடாம்
விளக்கம் :
மலைபடுகடாம் என்ற நூல் நன்னன் சேய் நன்னன் என்ற மன்னனைப் பற்றி பாடப்பட்ட நூலாகும். இந்நூலை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் ஆவார். இந்நூலின் வேறுபெயர் ‘கூத்தராற்றுப்படை’ ஆகும்.
22. சீத்தலைச் சாத்தனாருக்கு தொடர்பில்லாத தொடரைக் கண்டறிக.
A) கூல வாணிகம் செய்தவர்
B) மதுரையில் வாழ்ந்தவர்.
C) முதற்சங்கப் புலவர்களில் ஒருவர்.
D) இளங்கோவடிகளின் உற்ற நண்பர்.
விடை : C) முதற்சங்கப் புலவர்களில் ஒருவர்.
விளக்கம் :
சீத்தலைச் சாத்தனார் என்ற புலவர் இளங்கோவடிகளின் நண்பராவார். இருவரும் கி. பி. 2 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். முதற்சங்ககாலம் என்பது கி. மு. நூற்றாண்டைச் சேர்ந்தது.
23. “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று அழைக்கப்படுவர் யார்?
A) கண்ணகி
B) மணிமேகலை
C) மாதவி
D) ஆதிரை
விடை : C) மாதவி
விளக்கம் :
‘நாடகமேத்தும் நாடகக் கணிகை’ என்று அழைக்கப்பட்டவர் சிலப்பதிகாரத்தின் கதை மாந்தர்களுள் ஒருவரான மாதவி ஆவார். தன்னுடைய நாட்டியத் திறமையினால் ‘தலைக்கோலி’ பட்டத்தை சோழமன்னனிடம் மாதவி பெற்றாள்.
24. சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடியது
A) நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள்
B) ஐந்து, ஆறு, ஏழு திருமுறைகள்
C) முதல் ஆறு திருமுறைகள்
D) ஒன்று, இரண்டு, மூன்று திருமுறைகள்
விடை : A) நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள்
விளக்கம் :
சைவத்திருமுறைகள் | ஆசிரியர் / ஆசிரியர்கள் |
1, 2, 3 ஆம் திருமறைகள் | திருஞானசம்பந்தர் |
4, 5, 6 ஆம் திருமுறைகள் | திருநாவுக்கரசர் |
7 – ஆம் திருமுறை | சுந்தரர் |
8 – ஆம் திருமுறை | மாணிக்கவாசகர் |
9 – ஆம் திருமுறை | ஒன்பதின்மர்
(ஒன்பது பேர் பாடிய பாடல்கள் உள்ளன) |
10 – ஆம் திருமுறை | திருமூலர் |
11 – ஆம் திருமுறை | பன்னிருவர் (12 பேர் பாடியுள்ளனர்) |
12 – ஆம் திருமுறை | சேக்கிழார் |
25. “நிதிதரு கவிதையும் நிலமகள் உருமையும்
இவையிவை யுடை நந்தி” – இத்தொடரில் ‘நந்தி’ என்ற சொல் குறிப்பிடும் சான்றோர் யார்?
A) நந்தீஸ்வரன்
B) நந்திவர்மன்
C) நந்திதெய்வம்
D) நந்தியின் பக்தன்
விடை : B) நந்திவர்மன்
விளக்கம் :
நந்திக்கலம்பகம்
நிதிதரு கவிதையும் நிலமகள் உரிமையும்
இவையிவை யுடைநந்தி
மதியிலி அரசர்நின் மலரடி பஇகிலர்
வானகம் ஆள்வாரே
பொருள் : செல்வத்தைத் தருகின்ற குடையும், நிலமகள் உரிமையும் ஆகிய இவற்றையுடைய நந்தி மன்னனே ! அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்காதவராகித் தேவர் உலகத்தை ஆள்பவராவர். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் மூன்றாம் நந்திவர்மன் ஆவான்.
26. பொருத்துக.
a) அடவி 1. பெண்யானை
b) வனப்பு 2. வலிமை
c) பிடி 3. காடு
d) வீறு 4. அழகு
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 1 2 4
B) 4 3 2 1
C) 2 1 3 4
D) 3 4 1 2
விடை : D) 3 4 1 2
27. தவறான தொடரைக் கட்டுக.
A) 19 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியது மனோன்மணீயம்.
B) காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பியது மனோன்மணீயம்.
C) மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்வது மனோன்மணீயம்.
D) இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதனில் இன்பம் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவது மனோன்மணீயம்.
விடை : A) 19 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியது மனோன்மணீயம்.
விளக்கம் :
மனோன்மணீயம் என்ற நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரனாரின் காலம் கி. பி. 1885 முதல் 1897 வரை ஆகும். இக்காலம் 19 – ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியாகும்.
28. சொற்பொருள் பொருத்துக :
a) பிரசம் 1. வறுமை
b) வறன் 2. தேன்
c) மதுகை 3. பெருஞ்செல்வம்
d) கொழுஞ்சோறு 4. பெருமிதம்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 2 4 3 1
D) 1 4 2 3
விடை : B) 2 1 4 3
விளக்கம் :
நற்றிணை – 110 – ஆவது பாடல்
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
‘உண்’ என்று ஓக்குப் பிழைப்ப தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீ இ மெலிந்துஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவினை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளான்.
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே ! – போதனார்
விளக்கம் : திருமணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்று வந்த செவிலி, நற்றாயிடம் வறுமையிலும் மகள் செம்மையாக வாழ்வதைச் சொல்லி இத்தகைய இல்லற அறிவை அவள் எப்படிப் பெற்றாள் என வியந்து கூறுதல்.
பொருள் : நம் வீட்டில் தேன் கலந்த இனிய பால் உணவை ஒளிமிக்க பொற்கலத்தில் இட்டு கொண்டு வரும் செவிலியர், நம் மகளை உண்ண வைப்பதற்காக இன்னொரு கையில் பூச்சுற்றிய மென்மையான சிறுகோலை வைத்திருப்பர். வீட்டின் முற்றத்தில் பந்தலின் கீழ் ‘இதை உண்பாயாக!’ எனச் செல்லமாக அக்கோலால் அடித்து வேண்டுவர். மகளோ ‘நான் உண்ணேன்’ என மறுத்து முத்துப்பரல்கள் இட்ட பொற்சிலம்பு ஒலிக்க அங்குமிங்கும் ஓடுவாள். செவிலியர் அவளைப் பின்தொடர முடியாமல் நடைதளர்ந்து எப்படி இத்தகைய அறிவையும் இல்லற நடைமுறையையும் கற்றாள்? தான் மணந்து கொண்ட கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும் தன் தந்தையின் வீட்டில் உள்ள வளமான உணவினைப் பற்றி நினைத்துப்பாராள். ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பது போல் ஒருபொழுது இடைவெளி விட்டு ஒருபொழுது உண்ணும் வன்மையைப் பெற்றிருக்கிறாள். என்ன வியப்பு?
பிரசம் – தேன் ; வறன் – வறுமை ; மதுகை – வன்மை, பெருமிதம் ; கொழுஞ்சோறு – வளமான உணவு (இப்பாடலில் வளமான பெருஞ்செல்வம் எனவும் எடுத்துக் கொள்ளலாம்)
29. சித்தர் பாடல்கள் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது
A) பக்தி உணர்வு
B) ஒற்றுமை உணர்வு
C) இயற்கை உணர்வு
D) சமூக உணர்வு
விடை : C) இயற்கை உணர்வு
விளக்கம் :
சித்தர்கள் சாமானிய மனிதர்கள் போல் அல்லாமல், தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழிமுறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழ்ந்தவர்கள். இயற்கை மருத்துவம், யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம், வானவியல், புவியியல், அறிவியல் ஆகியவற்றைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள்.
30. “நீலவான் மறைக்கும் ஆஸ்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்” – என்ற வரிகளில்
“ஒற்றைக்கால் நெடிய பந்தல்” எனக் குறிக்கப்பெறுவது எது?
A) மூங்கில் மரம்
B) தேக்கு மரம்
C) ஆல மரம்
D) அரச மரம்
விடை : C) ஆல மரம்
விளக்கம் :
விழுதும் வேரும்
தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள் ! தூண்கள்
ஆலிசைச் சுற்றி நிற்கும்
அருந்திறள் மறவர் ! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம் !
நீலவாள் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல் ! – பாரதிதாசன்
‘அழகின் சிரிப்பு’ என்ற நூலில் ‘விழுதும் வேரும்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. ஒற்றைக்கால் நெடிய பந்தல் என்பது ஆலமரத்தைக் குறிக்கிறது.
31. நூல்கள் – நூலாசிரியர்கள் – பொருத்துக.
a) அழகின் சிரிப்பு 1. நாமக்கல் கவிஞர்
b) தெய்வத்திருமூலர் 2. பாரதியார்
c) பாவியக் கொத்து 3. பாரதிதாசன்
d) கண்ணன் பாட்டு 4. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 1 2
B) 3 1 4 2
C) 2 3 1 4
D) 2 1 3 4
விடை : B) 3 1 4 2
32. பாரதியார் இயற்றிய ஞானரதம் என்னும் நூல் _______ வகையைச் சார்ந்தது.
A) சமய இலக்கியம்
B) கவிதை இலக்கியம்
C) உரைநடை இலக்கியம்
D) நாடக இலக்கியம்
விடை : C) உரைநடை இலக்கியம்
விளக்கம் :
பாரதியார் எழுதிய ‘ஞானரதம்’ என்ற நூல் தமிழின் முதல் உரைநடை காவியமாகும். அவர் இயற்றிய பிற உரைநடை நூல்கள் தராசு. சந்திரிகையின் கடை, மாதர், கலைமகள் ஆகியனவாகும்.
33. கீழ்க்கண்ட கூற்றுகளைப் படித்து சரியானவற்றைத் தேர்வு செய்க.
I. உவமைக்ககவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி. இராசகோபாலன்.
II. இவர் பழையனூரில் பிறந்தார்.
III. துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும். முதலிய சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார்.
IV. தேன்மழை என்னும் கவிதைநூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
சரியான விடையளி :
A) I, IV ஆம் கூற்றுகள் சரியானவை.
B) I, III, IV ஆம் கூற்றுகள் சரியானவை.
C) I, II, IV ஆம் கூற்றுகள் சரியானவை.
D) அனைத்து கூற்றுகளும் சரியானவை.
விடை : C) I, II, IV ஆம் கூற்றுகள் சரியானவை.
விளக்கம் :
சரியான கூற்று : கவிஞர் சுரதா இயற்றிய துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும் முதலியவை கவிதை நூல்களாகும்.
34. “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் யாருடையது?
A) சாலினி இளந்திரையன்
B) ஞானக்கூத்தன்
C) ஆலந்தூர் மோகனரகங்கள்
D) சாலை இளந்திரையன்
விடை : C) ஆலந்தூர் மோகனரகங்கள்
விளக்கம் :
ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் ‘இமயம் எங்கள் காலடியில்’ என்ற கவிதைத் தொகுப்பு தமிழக அரசின் விருதினைப் பெற்றதாகும்.
35. “உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி” என்று கூறியவர் யார்?
A) கவியரசன்
B) சுரதா
C) ந. பிச்சமூர்த்தி
D) முடியரசன்
விடை : C) ந. பிச்சமூர்த்தி
விளக்கம் :
பிறவி இருளைத் துளைத்து
சுழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி
எப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது
ரவியின் கோடானகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி
எப்படி உடலை நெளித்து நீட்டி, வளைத்து வளருகிறது
எப்படி அமிருதத்தை நம்பி, ஒளியை வேண்டி
பெருமரத்துடன் சிறு கழுகு போட்டியிடுகிறது
அதுவே வாழ்க்கைப் போர்
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி – ந. பிச்சமூர்த்தி
36. ‘பெருவெற்றி அல்லவோ அண்ணா என முழக்கமிட்டாய்’ என்று அறிஞர் அண்ணா யாருக்குக் கடிதம் எழுதினார்?
A) தங்கைக்கு
B) தம்பிக்கு
C) மக்களுக்கு
D) உறவினருக்கு
விடை : B) தம்பிக்கு
விளக்கம் :
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகு ‘காஞ்சி’ இதழில் ‘அன்புள்ள தம்பிக்கு’ என்று ஆரம்பித்து பொங்கள் வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் ஒவ்வொர் ஆண்டும் பொங்கள் திருநாளன்று மக்களோடு மக்களாக இருந்து அவர்கள் களித்திருக்கும் காட்சியைக் கண்டு ஆனந்தமடைந்த அண்ணா அவர்கள், பதவிக்கு வந்த பின்பு அவ்வாறு இருக்க முடியவில்லை என வருந்தினார்.
“நீ களித்திருக்கும் காட்சியினை கண்டு மகிழ்வுபெறும் நிலையிலே இருந்தேன். அங்ஙனம் இருந்து வந்த என்னை, அதிலே பெறும் இன்பம் வேறு எதிலும் இல்லை என்ற எண்ணம் கொண்ட என்னைப் பிடித்திழுத்துக் கொண்டுபோய் ஓர் பீடத்தில் அமர்த்திவிட்டாய் பெரு வெற்றி அல்லவோ அண்ணா என்று முழக்கமிட்டாய்”
37. ‘தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை, சொல், செயல்களையே போற்று’ – இது யாருடைய கூற்று?
A) பெரியார்
B) காந்தியடிகள்
C) மு. வரதராசன்
D) அறிஞர் அண்ணா
விடை : C) மு. வரதராசன்
விளக்கம் :
மு. வரதராசனார் அவர்கள் தாய்மொழி வளர்ச்சி பெறும் வழியை இளைஞர்களுக்கு கூறும் விதமாக ‘தம்பிக்கு’ என விளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “தமிழர்களிடையே” ஒற்றுமையை வளர்க்கும் செயல்களையே போற்று ! கொள்கைகள், கட்சிகள், இயக்கங்களை விட நாட்டு மக்களின் நன்மையையே பெரிதென எண்ணு ! நாட்டிலுள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சயெடுத்தல் போன்றவை ஒழிய பாடுபடு ! என்று கூறியுள்ளார்.
38. பல்லவர் காலச் சிற்புகள் எவ்வகை உருவகங்களைச் செதுக்குவதில் கைதேர்ந்திருந்தனர்?
A) குதிரை
B) யானை
C) கடவுள்
D) மனிதன்
விடை : B) யானை
39. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு :
a) சிறு பஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
b) குடும்ப விளக்கு 2. சங்க இலக்கியம்
c) சீவக சிந்தாமணி 3. அற இலக்கியம்
d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 1 2
B) 3 1 4 2
C) 2 3 1 4
D) 4 1 2 3
விடை : A) 3 4 1 2
விளக்கம் :
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் 11 நூல்கள் அறநூல்கள் (நீதி இலக்கியம்) ஆகும். அவற்றுள் சிறுபஞ்சமூலமும் ஒன்று.
பாரதிதாசன் இயற்றிய ‘குடும்பவிளக்கு’ தற்கால இலக்கியம் ஆகும். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான “சீவகசிந்தாமணி” காப்பிய இலக்கியமாகும்.
பதினெண்மேற்கணக்கு நூல்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்களாகும். ‘குறுந்தொகை’ எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
40. திராவிட என்னும் சொல் தமிழில் உருவான விதத்தை தேர்வு செய்க.
A) தமிழ் > திரவிட > திராவிட > திரமிள
B) தமிழ் > திரமிள > திரவிட > திராவிட
C) திரவிட > தமிழ் > திரமிள > திராவிட
D) திரமிள > திராவிட > தமிழ் > திரவிட
விடை : B) தமிழ் > திரமிள > திரவிட > திராவிட
விளக்கம் :
ஹீராஸ் பாதிரியார் கூற்று :
திராவிட என்னும் சொல்லே ‘தமிழ்’ என்னும் சொல்லில் இருந்து உருவானதுதான்.
தமிழ் 🡪 தமிழா 🡪 தமிலா 🡪 திரமிள 🡪 ட்ரமிளா 🡪 திராவிடா 🡪 திராவிட 🡪 என உருவாயிற்று.
41. ‘என்றுமுன தென்தமிழ்’ எனக் குறிப்பிட்டவர் யார்?
A) மரக்ஸ் முல்லர்
B) கபிலர்
C) கம்பர்
D) காளமேகப்புலவர்
விடை : C) கம்பர்
விளக்கம் :
கம்பராமாயணம்
நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அமுத கண்ணால்
நன்று வரவு என்று பலநல உரை பகர்ந்தான்
என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் – கம்பர்
பொருள் : அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்த நெடியோனாகிய ராமன் வணங்கினார். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ்பெற்றவராகிய அகத்தியர். ராமனை அன்போடு அணைத்து, ஆனந்த்க் கண்ணீர் விட்டு, ‘உன் வரவு நல்வரவாகுக’ என்று பல உபச்சார மொழிகளைப் பகர்ந்தார்.
42. முதன் முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் யார்?
A) குணங்குடி மஸ்தான் சாகிபு
B) ஆறுமுக நாவலர்
C) வீரமாமுனிவர்
D) ரா. பி. சேதுப்பிள்ளை
விடை : C) வீரமாமுனிவர்
விளக்கம் :
முதன் முதலாக ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை கி. பி. 1732 – இல் வீரமாமுனிவர் தொகுத்து வெளியிட்டார். சதுர் – நான்கு என்பது பொருளாகும். இந்நூலில் பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என்ற நான்கு பிரிவுகள் உள்ளன.
43. ஜி. யூ. போப் கி. பி. 1820 ஆம் ஆண்டு ________ ஆம் நாள் பிறந்தார்.
A) ஏப்ரல் 24
B) நவம்பர் 17
C) பிப்ரவரி 18
D) ஆகஸ்ட் 23
விடை : A) ஏப்ரல் 24
விளக்கம் :
கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வர்டு தீவைச் சேர்ந்த ஜியார்ஜ் யூக்ளோ போப் (ஜி. யூ. போப்) ஏப்ரல் 24, 1820 – இல் பிறந்தார். தமிழகத்திற்கு வந்து தமிழ்மொழியைக் கற்றறிந்து சமயத் தொண்டுடன் தமிழ்த்தொண்டினையும் ஆற்றிய அயல்நாட்டவர்களுள் இவர் முக்கியமானவர். 12. 02. 1908 இல் இங்கிலாந்தில் மறைந்தார்.
44. “பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது” – என உறுதியாக எடுத்துரைத்தவர் யார்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) அம்பேத்கர்
D) காமராசர்
விடை : B) பெரியார்
விளக்கம் :
“பெண்களை வீட்டில் முடக்கி வைத்து நாட்டு நடப்பை அறியவிடாமல் செய்ததே பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாகும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று ; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது.” ஈ. வெ. ரா. பெரியார்.
45. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ________ எனவும், சிற்றூர்கள் ______ எனவும் பெயர் பெற்றன.
A) கீழுர், மேலூர்
B) தென் பழஞ்சி, வட பழஞ்சி
C) பட்டினம், பாக்கம்
D) பட்டி, பாளையம்
விடை : C) பட்டினம், பாக்கம்
விளக்கம் :
பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ‘பட்டினம்’ எனப் பெயர் பெற்றன. (எ.கா) காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம்.
கடற்கரையில் உருவான சிற்றூர்கள் ‘பாக்கம்’ எனப் பெயர் பெற்றன. (எ.கா.) பட்டினபாக்கம், கோடம்பாக்கம், சேப்பாக்கம்.
46. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முந்தோன்றிய மூத்தகுடி” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
A) புறப்பொருள் வெண்பாமாலை
B) புறநானூறு
C) தொல்காப்பியம்
D) எதுவுமில்லை
விடை : A) புறப்பொருள் வெண்பாமாலை
விளக்கம் :
புறப்பொருள் வெண்பாமாலை : கரந்தைப்பாடல்
பொய் அகல, நாளும் புகழ்
விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கு ஒலிரூர் – கையகலக்
கல்தோன்றி மந்தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்தகுடி – ஐயனாரிதனார்
பொருள் : பொய்கள் அகன்று, என்றும் புகழ் பரவுவது உலகில் ஒன்றும் ஆச்சரியமில்லை. பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுங்குநிலை அகன்று வளங்கள் தோன்றி வயல்வெளி நாகரிகம் தோன்றிய காலத்திற்கு முன்பே ஆயுதங்களோடு காடு மலைகளில் சுற்றித் திரிந்த வாழ்க்கை நடத்தியவன் இந்தத் தமிழன்.
47. பொருத்துக :
a) அறிவு அற்றம் காக்கும் கருவி 1. பெருங்கதை
b) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் 2. ஔவையார்
c) தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த் 3. திருக்குறள்
d) அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி 4. பதிற்றுப்பத்து
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 3 4 1
B) 4 2 1 3
C) 3 1 4 2
D) 2 4 1 3
விடை : C) 3 1 4 2
விளக்கம் :
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண் – குறள் எண் 421
பொருள் : அழிவு வராமல் காக்கும் கருவியான அறிவானது, பகைகொண்டு எதிர்ப்பவர்க்கு அழிக்கமுடியாத உள்ளரணும் ஆகும்.
பண்டைத்தமிழரின் பொறியியல் அறிவினை விளக்கும் பாடல் வரிகள் “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” என்ற பெருங்கதையின் வரி அக்காலத்தில் ஆழ்துளை கிணறுகள் இருந்ததைக் கூறுகின்றது.
“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” என்ற பதிற்றுப்பத்தின் வரி பண்டைத் தமிழகத்தில் கரும்பைப் பிழிவதற்கான எந்திரங்கள் இருந்ததைக் கூறுகின்றது.
அணுவியல் அறிவு :
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்ற ஔவையாரின் பாடல் வரிகள் அணுவைப் பிளக்க முடியும் என்ற அணுவியல் வெளிப்படுத்துகிறது. இப்பாடல் திருக்குறளைப் பாராட்டுவதற்காக எழுதப்பட்ட திருவள்ளுவமாலை என்ற நூலில் அமைந்துள்ளது.
48. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்
A) மூவலூர் இராமாமிர்தம்
B) பண்டித ரமாபாய்
C) சாவித்திரிபாய் பூலே
D) நீலாம்பிகை அம்மையார்
விடை : A) மூவலூர் இராமாமிர்தம்
விளக்கம் :
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தமிழகத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்களுள் முதன்மையானவர். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேடையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, தேவதாசி முறையை ஆதரித்த தலைவர்கள் செல்வந்தர்கள், இளைஞர்கள் மேடையேறி அம்மையாரின் கூந்தலைப் பிடித்து அறுத்தெரிந்தனர். எதனையும் பொருட்படுத்தாமல் மீண்டும் தன் போராட்டத்தை அம்மையார் தொடங்கினார். இப்போராட்டத்தில் அவருடன் பெரியார், திரு. வி. க., வரதராசுலு, தர்மாம்பாள், நீலாம்பிகை அம்மையார், மலர் முகத்தம்மையார், தாமரைக் கண்ணி அம்மையார் போன்றோர் இணைந்து போராடினார். ‘தமிழகத்தின் அன்னிபெசண்ட்’ என்று அம்மையார் போற்றப்பட்டார்.
1938 – இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணியும் இவர்தான்.
49. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர்களுள் ஒருவர்
A) பண்டித ரமாபாய்
B) மூவலூர் இராமாமிர்தம்
C) சாவித்திரிபாய் பூலே
D) டாக்டர் முத்துலெட்சுமி
விடை : D) டாக்டர் முத்துலெட்சுமி
விளக்கம் :
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
1929 – இல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இவர் நியமனம் செய்யப்பட்டார்.
சட்டமன்ற மேலவை உறுப்பினராக இவர் செய்த சாதனைகள் : தேவதாசி ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தார்.
50. தொடி, இச்சொல்லின் பொருள்
A) வயல்
B) நெல்
C) வளையல்
D) உலக்கை
விடை : C) வளையல்
51. முல்லை நிலத்தில் நடைபெறும் தொழில்
A) தேனெடுத்தல்
B) ஏறுதழுவுதல்
C) நெல்லரித்தல்
D) மீன் பிடித்தல்
விடை : B) ஏறுதழுவுதல்
விளக்கம் :
தேனெடுத்தல் – குறிஞ்சி நிலம்
ஏறுதழுவுதல் – முல்லை நிலம்
நெல்லரித்தல் – மருத நிலம்
மீன் பிடித்தல் – நெய்தல் நிலம்
52. ஆசிரியப்பாவின் வகைகளில் இல்லாத ஒன்று எது?
A) நேரிசை ஆசிரியப்பா
B) நிரையிசை ஆசிரியப்பா
C) நிலை மண்டில ஆசிரியப்பா
D) அடிமறி மண்டில ஆசிரியப்பா
விடை : B) நிரையிசை ஆசிரியப்பா
விளக்கம் :
1. நேரிசை ஆசிரியப்பா 2. இணைக்குறள் ஆசிரியப்பா
3. நிலை மண்டில ஆசிரியப்பா 4. அடிமறி மண்டில ஆசிரியப்பா
53. பிழையற்றத் தொடரை எழுதுக.
A) அவன் கவிஞன் அல்ல
B) அவன் கவிஞன் அன்று
C) அவன் கவிஞன் அல்லன்
D) அவன் கவிஞன் அல்லர்
விடை : C) அவன் கவிஞன் அல்லன்
விளக்கம் :
‘அல்ல’ என்பது அஃறிணை பன்மைச் சொல் ‘அன்று’ என்பது அஃறிணை ஒருமைச் சொல். (எ.கா) இவை காடுகள் அல்ல ; இது காடு அன்று
‘ அல்லன்’ என்பது உயர்திணை ஒருமைச் சொல். (எ.கா) அவன் கவிஞன் அல்லன்.
‘அல்லர்’ என்பது உயர்திணை பன்மைச் சொல் (எ.கா) அவர்கள் கவிஞர்கள் அல்லர்.
54. பின்வரும் தொடர்களில் சரியான விடையினை எடுத்து எழுது. என் மாமா வந்தது
A) திணை வழு
B) மரபு வழு
C) கால வழு
D) இட வழு
விடை : A) திணை வழு
விளக்கம் :
‘என் மாமா வந்தது’ திணை வழு ஆகும். உயர்திணை எழுவாய்க்கு அஃறிணை விணைமுற்று அமைந்துள்ளது. வழுவற்ற தொடர் என் மாமா வந்தார்.
55. சந்திப் பிழையற்ற தொடரைக் கண்டறிக.
A) தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்
B) தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்
C) தமிழில் வரலாற்றுக் கருத்துகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்.
D) தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்.
விடை : C) தமிழில் வரலாற்றுக் கருத்துகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்.
விளக்கம் :
கருத்துகள் – தவறு, கருத்துகள் என்பதே சரி. ‘கள்’ என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
(எ.கா) கருத்து + கள் – கருத்துகள்
வாழ்த்து + கள் – வாழ்த்துகள்
பொருள் + கள் – பொருள்கள்
சொத்து + கள் – சொத்துகள்
56. ஒருமைப் பன்மை பிழையற்ற தொடரைத் தேர்க.
A) தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
B) தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
C) தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளன.
D) தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளன.
விடை : D) தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளன.
57. பொருத்துக :
a) தா 1. சோலை
b) கா 2. அம்பு
c) வே 3. தாவுதல்
d) ஏ 4. மறை
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 4 1 3
B) 3 1 4 2
C) 3 2 4 1
D) 4 3 1 2
விடை : B) 3 1 4 2
58. ‘தேசியம் காத்த செம்மல்’ எனத் திரு. வி. க. யாரைப் பாராட்டியுள்ளார்?
A) முத்துராமலிங்கர்
B) முத்து கிருஷ்ணன்
C) முத்தையா
D) முருகதாசர்
விடை : A) முத்துராமலிங்கர்
விளக்கம் :
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைத் தம் அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர் முத்துராமலிங்கர். விடுதலைப் போர் கடுமையாக இருந்த காலத்தி ஆங்கிலேய அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் “வாய்ப்பூட்டுச் ச்ட்டம்” போட்டது. திரு. வி. கல்யாண சுந்தரனார் இவருக்கு “தேசியம் காத்த செம்மல்” என்ற பட்டத்தை வழங்கினார்.
59. பொருத்துக :
a) கற்றல் 1. அடக்கு
b) பெற்ற 2. கல்
c) அடக்கி 3. கேள்
d) கேட்டவன் 4. பெறு
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 3 4 1
B) 4 2 3 1
C) 2 4 1 3
D) 3 2 1 4
விடை : C) 2 4 1 3
விளக்கம் :
‘கற்றல்’ என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் ‘கல்’
‘பெற்ற’ என்ற பெயரெச்சத்தின் வேர்ச்சொல் ‘பெறு’
‘அடக்கி’ என்ற வினையெச்சத்தின் வேர்ச்சொல் ‘அடக்கு’
‘கேட்டவன்’ என்ற வினையாலணையும் பெயரின் வேர்ச்சொல் ‘கேள்’
60. கோ – என்னும் வேர்ச்சொல்லில் உருவான சரியான தொடர் எது?
A) கோத்தல், கோட்டை, கோப்பு
B) கோத்தல், கோவை, கோப்பு
C) கோத்தல், கோலம், கோப்பு
D) கோத்தல், கோணல், கோப்பு
விடை : B) கோத்தல், கோவை, கோப்பு
விளக்கம் :
கோத்தல் – தொடுத்தல், ஒன்றிணைத்தல்
கோவை – சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை முறையாக ஒன்றிணைத்து கோக்கப்பட்ட நூல் ‘கோவை’ ஆகும்.
(எ.கா) பாண்டிக் கோவை, திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை.
கோப்பு – முறையாகத் தொகுக்கப்பட்ட தகவல்கள்
கோத்தல், கோவை, கோப்பு ஆகிய மூன்றும் ‘முறையாகத் தொகுக்கப்பட்டவை’ என்ற பொருளைப் பெறுகின்றன.
61. ஆதிரையான் – எவ்வகைப் பெயர்ப் பகுபதம்?
A) தொழிற்பெயர் பகுபதம்
B) இடப்பெயர் பகுபதம்
C) காலப்பெயர் பகுபதம்
D) பொருட்பெயர் பகுபதம்
விடை : C) காலப்பெயர் பகுபதம்
விளக்கம் :
காலத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் – ஆதிரையான், வேனிலான், இரவோன், சித்திரையான் போன்றவை.
தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் – தச்சன், கொல்லன், கருமான், உழவன் போன்றவை.
இடத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் – நாடன், மதுரையான், விழுப்புரத்தான் போன்றவை.
பொருளை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் – பொன்னன், செல்வந்தன் போன்றவை.
62. ‘தழீஇய’ என்பது ______ அளபெடை.
A) இன்னிசை
B) செய்யுளிசை
C) சொல்லிசை
D) ஒற்று
விடை : C) சொல்லிசை
விளக்கம் :
சொல்லிசை அளபெடை : செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் வினையெச்சப் பொருளைத் தரும் பொருட்டு பெயர்ச்சொல்லானது அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
(எ.கா) தழீஇ, உரனசைஇ, வரனசைஇ, நசைஇ, நிறீஇ.
தழீஇ – ‘தழீ’ என்னும் தொழிற் பெயர்ச்சொல் ‘தழீஇ’ (தழுவி) என வினையெச்சச் சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடையாகும். இவ்வளபெடை ‘இ’ என்னும் எழுத்தில் முடிந்திருக்கும்.
63. விடைக்கேற்ற வினா அமைக்க.
பங்கம்மானின் பெயர் மங்காத புகழோடு விளங்கும் என்பதில் ஐயமில்லை.
A) யாருடைய புகழ் மங்காது விளங்கும் என்பதில் ஐயமில்லை?
B) யாருடைய பெயர் மங்காது விளங்கும் என்பதில் இயமில்லை?
C) யாருடைய பெயர் மங்காத புகழோடு விளங்கும் என்பதில் ஐயமில்லை?
D) யாருடைய பெயர் புகழோடு விளங்கும் என்பதில் ஐயமில்லை?
விடை : C) யாருடைய பெயர் மங்காத புகழோடு விளங்கும் என்பதில் ஐயமில்லை?
64. யாமினி திருக்குறள் கற்றாள் – எவ்வகைத் தொடர்?
A) தன்வினைத் தொடர்
B) பிறவினைத் தொடர்
C) செய்வினைத் தொடர்
D) எதிர்வினைத் தொடர்
விடை : A) தன்வினைத் தொடர்
விளக்கம் :
கருத்தா தானே செய்யும் வினை ‘தன்வினை’ ஆகும்.
(எ.கா) யாழினி திருக்குறள் கற்றாள்.
கருத்தா பிறரைக் கொண்டு செய்விக்கும் வினை ‘பிறவினை’ ஆகும்.
(எ.கா) யாழினி திருக்குறள் கற்பித்தாள்.
ஒரு வினை நிகழாமையைக் குறிப்பது ‘எதிர்வினை’ ஆகும்.
(எ.கா) யாழினி திருக்குறள் கற்றிலள்.
65. உரிய விடையைத் தேர்வு செய்க :
a) தடக்கரி 1. புலி
b) உழுவை 2. சிங்கம்
c) மடங்கல் 3. பன்றி
d) கேழல் 4. பெரிய யானை
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 1 4 3
B) 1 2 3 4
C) 3 1 4 2
D) 4 1 2 3
விடை : D) 4 1 2 3
66. இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் _______
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு.
A) படை
B) பொழுது
C) செல்வம்
D) பகை
விடை : B) பொழுது
விளக்கம் :
திருக்குறள்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
பொருள் : காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகல் நேரத்தில் வென்றுவிடும். அதுபோல் பகைவரை வெல்லக் கருதும் வேந்தர்க்கும் அதற்குத் தகுந்த காலம் வேண்டும்.
அதிகாரம் – காலமறிதல் (49 – ஆவது அதிகாரம்)
இயல் – அரசியல், குறள் எண் – 481
67. திருக்குறளில் ‘உடைமை’ என்னும் பெயரில் திருவள்ளுவர் எழுதாத அதிகாரம் எது?
A) அன்புடைமை
B) ஆள்வினையுடைமை
C) ஒடுக்கமுடைமை
D) ஒழுக்கமுடைமை
விடை : C) ஒடுக்கமுடைமை
விளக்கம் :
திருக்குறளில் பத்து அதிகாரங்கள் ‘உடைமை’ என்னும் பெயரில் அமைந்துள்ளன.
1. அன்புடைமை | 6. அறிவுடைமை |
2. அடக்கமுடைமை | 7. ஊக்கமுடைமை |
3. ஒழுக்கமுடைமை | 8. ஆள்வினையுடைமை |
4. பொறாயுடைமை | 9. பண்புடைய |
5. அருளுடைமை | 10. நாணுடைமை |
68. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செயதற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள்
A) உழவு செய்தல்
B) பயிர் செய்தல்
C) விளைவித்தல்
D) உதவி செய்தல்
விடை : D) உதவி செய்தல்
69. “அன்புள இனி நாமோர் ஐவர்கள் உளரானோம்” – யார், யாரிடம் கூறியது?
A) இராமன் இலக்குவனிடம் கூறியது
B) இராமன் குகனிடம் கூறியது
C) குகன் இராமனிடம் கூறியது
D) இலக்குவன் குகனிடம் கூறியது
விடை : B) இராமன் குகனிடம் கூறியது
விளக்கம் :
கம்பராமாயாணம்
அயோத்திய காண்டம் – குகப்படலம்
இராமன் குகனை நோக்கி,
“துன்புள தெனீன் அன்றோ சுகமுளது அதுவன்றிப்
பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னேல்
முன்புளெம் ஒருநால்வேம் முடிவுள தென உன்னா
அன்புள இனி நாம்ஓர் இவர்கள் உளரானோம்”
– என்று கூறினான்.
பொருள் : இராமனின் பிரிவை எண்ணி வருந்திய குகனிடம் இராமன், துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பம் தோன்றுவது இயற்கை. இப்பிரிவு இடைக்காலத்ததே ; அதனை நினைத்து வருந்த வேண்டா ; முன்னர் நாங்கள் உடன்பிறந்தோர் நால்வராய் இருந்தோம் ; விரிந்த அன்பினில் இனி உன்னோடு ஐவரானோம்.
70. துன்பம் உண்டாயின அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை – என்ற பொருள் தரும் வரிகள் அமைந்த நூல்
A) தேம்பாவணி
B) கம்பராமாயணம்
C) சீவகசிந்தாமணி
D) மணிமேகலை
விடை : B) கம்பராமாயணம்
71. “கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குறுந்தொகை
B) நற்றிணை
C) அகநானூறு
D) புறநானூறு
விடை : A) குறுந்தொகை
விளக்கம் :
குறுந்தொகை
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கடுங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – தேவகுலத்தார்.
பொருள் : மலைப்பகுதியிலுள்ள குறிஞ்சியின் கரிய கொம்புகளில் குறிஞ்சிப் பூக்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களில் இருந்து வண்டுகள் தேனைத் திரட்டுவதற்கு இடமாகிய நாட்டை உடைய தலைவனோடு, “யான் கொண்ட நட்பானது நிலத்தை விடப் பெரியது ; வானத்தை விட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது எனத் தலைவி கூறுகிறாள்.”
72. புறநானூற்றின் கண் உள்ள துறைகள் எத்தனை?
A) 65
B) 55
C) 60
D) 63
விடை : A) 65
விளக்கம் :
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் 11 புறத்திணைகளும், 65 துறைகளும் உள்ளன. இவற்றில் உழிஞைத் திணைப் பாடல்கள் இல்லை.
73. “ஆறணியும், சடைமுடியார் அடியார்க்கு நீர் வைத்த” – இத்தொடரில் “ஆறணியும்” எனச் சுட்டப் பெறுபவர் யார்?
A) முருகன்
B) சிவன்
C) திருமால்
D) வருணன்
விடை : B) சிவன்
விளக்கம் :
பெரியபுராணம் – அப்பூதியடிகள் புராணம்
ஆறணியும் சடைமுடியார் அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந் தரில்நும்பேர் எழுதாதே
வேறொபேர் முன்னெழுத வேண்டியகா ரணம் என்கோல்
கூறுமென எதிர்மொழிந்தார் கோதில்மொழிக் கொற்றவனார் – சேக்கிழார்
பொருள் : அப்பூதியடிகளிடம் “கங்கையைச் சடைமுடியில் தாங்கிய சிவபெருமானின் அடியார்களுக்காக ஊரெல்லையில், நீவிர் வைத்த தண்ணீர்ப் பந்தலில் உம்பெயர் எழுதாமல், வேறுஒருவர் பெயர் எழுதிய காரணமென்ன்? சொல்வீராக?” என்று குற்றமற்றவராகிய திருநாவுக்கரசர் மொழிந்தார்.
74. பெரியபுராணம் என்னும் நூலுக்குச் சேக்கிழார் இட்ட பெயர்
A) திருத்தொண்டர் புராணம்
B) திருவிளையாடற் புராணம்
C) சிவபுராணம்
D) கந்தபுராணம்
விடை : A) திருத்தொண்டர் புராணம்
விளக்கம் :
செயற்கரிய செயல்களைக் செய்து பெருமை பெற்ற 63 சிவனடியார்களின் (திருத்தொண்டர்கள்) வரலாற்றையும் தொகையடியார் ஒன்பது பேரின் வரலாற்ற்றையும் கூறும் நூல் என்பதால் சேக்கிழார் இந்நூலுக்கு ‘திருத்தொண்டர் புராணம்’ என்று பெயரிட்டார். அந்நூலின் பெருமை கருதி பின்னாளில் அது ‘பெரியபுராணம்’ என்று அழைக்கப்பட்டது.
75. ‘முத்தொள்ளாயிரம்’ – இப்பாடலின் ஆசிரியர்
A) நல்லாடனார்
B) மிளைகிழான் நல்வேட்டனார்
C) பெயர் தெரியவில்லை
D) ஜெயங்கொண்டார்
விடை : C) பெயர் தெரியவில்லை
விளக்கம் :
முத்தொள்ளாயிரம்
இந்நூல் மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களைக் கொண்டதாகும். இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ‘புறத்திரட்டு’ என்னும் நூல் மூலமாக 108 வெண்பாக்களும், பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
130 பாடல்களுள் சேரமன்னன் பற்றிய பாடல்கள் 23, சோழ மன்னன் பற்றிய பாடல்கள் 46, பாண்டிய மன்னன் பற்றிய பாடல்கள் 61 உள்ளன. இந்நூலை இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை.
76. “வையகமெல்லா மெம தென்றெழுதுமே
மொய்யிலை வேல் மாறன் களிறு”
இப்பாடல் வரி இடம் பெற்ற நூல்
A) கலிங்கத்துப்பரணி
B) முத்தொள்ளாயிரம்
C) பிள்ளைத்தமிழ்
D) தமிழ்விடுதூது
விடை : B) முத்தொள்ளாயிரம்
விளக்கம் :
முத்தொள்ளாயிரம் – பாண்டிய மன்னன்
மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் – திருத்தக்க
வையக மெல்லா மெமதன் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு
பொருள் : நெருங்கி அமைந்த இலைபோன்ற வடிவிலான வேலை உடையவன் பாண்டிய மன்னன். அம்மன்னனின் யானை, தன் தந்தங்களை எழுத்தாணியாகவும் வீரம் செறிந்த வேற்படையை உடைய பகைமன்னரின் அகன்ற மார்புகளை ஓலைகளாகவும் கொண்டு செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்கே உரியது என எழுதும்.
77. “செங்கீரைப்பருவம்” – பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்?
A) மூன்றாம் பருவம்
B) நான்காம் பருவம்
C) இரண்டாம் பருவம்
D) ஐந்தாம் பருவம்
விடை : C) இரண்டாம் பருவம்
விளக்கம் :
மூன்றாம் பருவம் – தாலாட்டு (7 – ஆம் திங்கள்)
நான்காம் பருவம் – சப்பாணி (9 – ஆம் திங்கள்)
இரண்டாம் பருவம் – செங்கீரை (5 ஆம் திங்கள்)
ஐந்தாம் பருவம் – முத்தம் (11 – ஆம் திங்கள்)
78. “அண்டைப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றுனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.”
இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) திருமந்திரம்
B) திருவாசகம்
C) திருக்கோவையார்
D) திருவிளையாடற் புராணம்
விடை : B) திருவாசகம்
விளக்கம் :
திருவாசகம் – திருவண்டப்பகுதி
அண்டைப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றுனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன – மாணிக்கவாசகர்
பொருள் : உலகம் உருண்டை வடிவமானது. பிரபஞ்சத்தில் நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கோள்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் சிதறிக் கிடக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கோள்கள் கூட சிறியதாக மின்னுகின்றன. உலகம் உருண்டை என்று கலீலியோ 16ஆம் நூற்றாண்டில் கூறினார். ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே மாணிக்கவாசகர் கூறிவிட்டார்.
79. குலசேகராழ்வார் பாடல் ______ தொகுப்பில் உள்ளது.
A) பெரிய திருமொழி
B) திருவியற்பா
C) திருவாய் மொழி
D) முதலாயிரம்
விடை : D) முதலாயிரம்
விளக்கம் :
முதலாயிரத்தில் அமைந்துள்ள பிரபந்தங்கள்.
பெரியாழ்வார் | திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி |
ஆண்டாள் | திருப்பாவை, நாச்சியார் திருமொழி |
குலசேகராழ்வார் | பெருமாள் திருமொழி |
திருமழிசையாழ்வார் | திருசந்த விருத்தம் |
தொண்டரடிப் பொடியாழ்வார் | திருமாலை, திருப்பள்ளியெழுச்சி |
திருப்பாணாழ்வார் | அமலனாதிபிரான் |
மதுரகவியாழ்வார் | கண்ணிநுண் சிறுதாம்பு |
இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ள பிரபந்தங்கள். | |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம். |
மூன்றாம் ஆயிரத்தில் அமைந்துள்ள பிரபந்தங்கள். | |
பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி |
பூதத்தாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி |
பேய்யாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி |
திருமழிசையாழ்வார் | நான்முகம் திருவந்தாதி |
நம்மாழ்வார் | திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி |
திருமங்கையாழ்வார் | திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் |
நான்காம் ஆயிரத்தில் உள்ள பிரமந்தம் | |
நம்மாழ்வார் | திருவாய்மொழி |
80. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமக வைக்கப்பட்டிருப்பது
A) ஆண்டாள் அருளியது
B) குலசேகர ஆழ்வார் அருளியது
C) பெரியாழ்வார் அருளியது
D) திருமங்கையாழ்வார் அருளியது
விடை : B) குலசேகர ஆழ்வார் அருளியது
81. கீழ்க்கண்டவற்றுள் நாமக்கல் கவிஞரின் கவிதைத் தொகுப்புகளை மட்டும் தேர்வு செய்க.
A) திருமலர், இசைமலர், பல்சுவை மல்ர்
B) பாரதகீதம், கவிக்கனவுகள், அருட்செல்வம், புதுயுகப்பாட்டு
C) தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், இன்ப இலக்கியம்
D) பூத்ததுமானுடன், வீறுகள் ஆயிரம், சிரிப்பின் நிழல், தமிழ்ச்சிட்டு
விடை: B) பாரதகீதம், கவிக்கனவுகள், அருட்செல்வம், புதுயுகப்பாட்டு
82. “ உரைநடையின் சிக்கனந்தான் கவிதை; ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கன்ந்தான் அடக்கம்” – என்ற வரியின் ஆசிரியர் யார்?
A) அப்துல் ரகுமான்
B) கல்யாண்ஜி
C) கவிஞர் சுரதா
D) கலாப்ரியா
விடை: C) கவிஞர் சுரதா
விளக்கம்:
உரைநடையின் சிக்கனந்தான் கவிதை ; ஓங்கும்
உணர்ச்சிகளின் சிக்கனந்தான் அடக்கம்
வரவேற்பின் சிக்கனந்தான் பெண்ணின் நாணம்
மாளிகையின் சிக்கனந்தான் குடிசை யாகும்.
-கவிஞர் சுரதா
83. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் “செவாலியர்” என்ற விருதினைப் பெற்றவர் யார்?
A) கண்ணதாசன்
B) வாணிதாசன்
C) பாரதிதாசன்
D) சுப்புரத்தினதாசன்
விடை : B) வாணிதாசன்
84. வானம்பாடி இயக்கத்தில் ஒருவர்
A) வல்லிக் கண்ணன்
B) ந. பிச்சமூர்த்தி
C) வைரமுத்து
D) சிற்பி
விடை : D) சிற்பி
85. சாலை இளந்திரையனின் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற நூல்
A) பூத்தது மானுடம்
B) புரட்சி முழக்கம்
C) தேன்மழை
D) எதுவும் இல்லை
விடை : B) புரட்சி முழக்கம்
விளக்கம் :
கவிஞர் சாலை இளந்திரையனின் ‘புரட்சி முழக்கம்’ என்ற திறனாய்வு நூல் 1978 – ஆம் ஆண்டின் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.
86. ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியரால் குறிப்பிடப்படுவதுஎது?
A) பண்ணிசை நூல்
B) இசைக் கருவிகள்
C) இசை இலக்கண நூல்
D) பண்கள்
விடை : C) இசை இலக்கண நூல்
விளக்கம் :
பண்டைத் தமிழகத்தில் இசைக்கலை வேரூன்றியிருந்தது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியங்கள் இசை மரபுகளை வெளிப்படுத்தியுள்ளன. ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் இருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது.
87. பரிதிமாற் கலைஞர் இயற்றிய நாடகவியல் என்னும் நூல் எந்த நடையில் எழுதப்பட்டுள்ளது?
A) நாடக வடிவம்
B) செய்யுள் வடிவம்
C) உரைநடை வடிவம்
D) கவிதை வடிவம்
விடை : B) செய்யுள் வடிவம்
88. ஆசிரியரை அவர் எழுதிய சிறுகதையுடன் பொருத்துக.
a) விழிப்பு 1. ஜெயகாந்தன்
b) கரையும் உருவங்கள் 2. விந்தன்
c) ஒரு பிரமுகர் 3. சிவசங்கரி
d) மறுமணம் 4. வண்ண நிலவன்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 1 2
B) 3 2 1 4
C) 2 3 1 4
D) 2 4 1 3
விடை : A) 3 4 1 2
89. கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் யார்?
A) ஈஸ்ட்மன்
B) எடிசன்
C) எட்வர்டு மைபிரிட்சு
D) வால்ட் டிஸ்னி
விடை : D) வால்ட் டிஸ்னி
விளக்கம் :
கருத்துப் படத்தை அமைக்கத் தொடங்கியவர் வால்ட் டிஸ்னி ஆவார்.
இயக்கங்களை படம் பிடிக்கத் தொடங்கியவர் எட்வர்ட் மைபிரிட்ஜ்.
இவர் ஓடும் குதிரை இயக்கத்தை முதன்முதலில் படம் பிடித்தார்.
சுருள் சுருளாக பிலிம் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தவர் ஈஸ்ட்மென் ஆவார்.
1893 – இல் கினெட்டோஸ்கோப் என்ற கருவியை எடிசன் கண்டறிந்தார்.
90. ஆசிரியருடன் – நூலை பொருத்துக.
a) சுவாமி விபுலானந்தர் 1. நாடகத்தமிழ்
b) மறைமலையடிகள் 2. மதங்க சூளாமணி
c) பம்மல் சம்பந்தனார் 3. டம்பாச்சாரி விலாசம்
d) காசி விசுவநாதன் 4. சாகுந்தலம்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 1 2
B) 3 2 1 4
C) 2 4 1 3
D) 2 3 1 4
விடை : C) 2 4 1 3
விளக்கம் :
நாடக ஆராய்ச்சி நூல்கள்
சுவாமி விபுலானந்தரின் ‘மதங்க சூளாமணி’
மறைமலையடிகளின் ‘சாகுந்தலம்’
நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனாரின் ‘நாடகத் தமிழ்’
தமிழில் எழுதப்பட்ட முதல் சீர்திருத்த நாடகம் சாசி விசுவநாதரின் ‘டம்பாச்சாரி விலாசம்’ ஆகும்.
91. உரைடைக் காலம் என்பது
A) பத்தொன்பதாம் நூற்றாண்டு
B) இருபதாம் நூற்றாண்டு
C) பதினெட்டாம் நூற்றாண்டு
D) பதினேழாம் நூற்றாண்டு
விடை : A) பத்தொன்பதாம் நூற்றாண்டு
92. சரியான விடையைத் தேர்வு செய்க.
நோய்க்கும் மருந்து ________ என்பார் மீனாட்சி சுந்தரனார்.
A) இலக்கணம்
B) நாவல்கள்
C) இலக்கியம்
D) சிறுகதைகள்
விடை : C) இலக்கியம்
93. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் ______
A) திரு. வி. க
B) உ. வே. சா
C) பாவாணர்
D) அகத்தியர்
விடை : C) பாவாணர்
விளக்கம் :
“தொன்மை, முன்மை, நுன்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என்ற 16 செவ்வியல் தனமிகளைக் கொண்ட செம்மொழி நம் தமிழ்மொழி” – தேவநேயப் பாவாணர்
94. வேறுபட்ட இணை எது?
A) முசிறி – பேரியாறு
B) வெனிசு – மார்க்கோபோலோ
C) கொற்கை – தாமிரபரணி
D) காவிரிப்பூம்பட்டினம் – காவிரியாறு
விடை : B) வெனிசு – மார்க்கோபோலோ
விளக்கம் :
வெனிசு நாட்டைச் சேர்ந்த அறிஞரான மார்க்கோ போலோ பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல் சிறப்பாக நடைபெற்றது குறித்து எழுதியுள்ளார். ஏனைய மூன்று இணைகளும் துறைமுகம் – ஆறு ஆகும்.
மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகம் ‘முசிறி’ ஆகும்.
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்திருந்த இயற்கைத் துறைமுகம் கொற்கை ஆகும்.
காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் வடகரையின் மேல் அமைந்திருந்த இயற்கைத் துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம் ஆகும்.
95. ‘ஞானப்பச்சிலை’ என வள்ளலார் போற்றும் இலை
A) கீழாநெல்லி
B) துளசி
C) தூதுவளை
D) குப்பைமேனி
விடை : C) தூதுவளை
விளக்கம் :
தூதுவளை என்ற மூலிகையின் வேறு பெயர்கள் : தூதுளை, சிங்கவல்லி ஆகும். வள்ளலார் இதனை ‘ஞானப்பச்சிலை’ எனப் போற்றுகிறாள்.
96. இளைஞர்களே ! தமிழுலகின் இழிந்த நிலையை ஒருங்கள் (நினையுங்கள்) என அறைகூவல் விடுத்தவர் யார்?
A) தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
B) திரு. வி. கல்யானசுந்தரம்
C) மு. வரதராசனார்
D) பாரதிதாசன்
விடை : B) திரு. வி. கல்யானசுந்தரம்
விளக்கம் :
திரு. வி. கல்யாணசுந்தரனார் இளைஞர்களுக்கு கூறிய அறிவுரை “தமிழ்த்தாய் நேற்றோ இன்றோ பிறந்தவன் அல்லள்” அவள் மிகத் தொன்மை உடையவள். தாய்க்கொலை புரிவதா தமிழர் வீரம்?
தமிழ் இறந்த பின் தமிழ் மண் மட்டும் இருந்தென்ன? மொழி இறந்துபடின் நாடும் இறந்துபடுமன்றோ? தமிழுலகின் இழிந்த நிலையை ஒர்த்து உங்கள் பொறுப்பை உணருங்கள். தமிழ்த்தாயைப் புதுப் போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தில் அமர்த்த சூள் கொண்டு எழுங்கள் !”
97. ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை இயற்றியவர் யார்?
A) வீரமாமுனிவர்
B) எச். ஏ. கிருட்டிணனார்
C) இராமலிங்கர்
D) திருமூலர்
விடை : C) இராமலிங்கர்
98. அம்பேத்கர், “சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை தோற்றுவித்த இடம்”
A) சென்னை
B) திருச்சி
C) கொல்கத்தா
D) மும்பை
விடை : D) மும்பை
விளக்கம் :
அம்பேத்கரின் அரிய முயற்சியால் மும்பையில் உருவான ‘சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில்’ இன்றைய அறிவு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
99. நில மடந்தையும் தம் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு, விளையாட்டு காட்டுவாள் வேண்டி, “உழைத்துப் பெறு ! உரிய நேரத்தில் பெறு ! முயற்சி செய்து பெறு !” என்று அன்பு ஆணையிடுகிறாள் – என எழுதியவர் யார்?
A) பெரியார்
B) அறிஞர் அண்னா
C) ஜவஹர்லால் நேரு
D) காந்தியடிகள்
விடை : B) அறிஞர் அண்னா
விளக்கம் :
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகு எழுதிய பொங்கள் வாழ்த்துக் கடிதத்தில் மேற்கண்ட கூற்று இடம்பெற்றுள்ளது. இக்கடிதம் காஞ்சி இதழில் வெளிவந்தது.
100. “தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்” யார் யாரைப் பாடிய வரிகள்?
A) பாரதியார் – பெரியாரை
B) பாரதிதாசன் – பெரியாரை
C) சுரதா – வீரமாமுனிவரை
D) மு. மேத்தா – திருவள்ளுவரை
விடை : B) பாரதிதாசன் – பெரியாரை
விளக்கம் :
பாரதிதாசன் பெரியாரைப் பற்றிய எழுதிய கவிதை
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்.