Tnpsc General Tamil Previous Question Paper 18
81. பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
(அ) கலிங்கதுப்பரணி
(ஆ) திருக்குறள்
(இ) கம்பராமாயணம்
(ஈ) பரிபாடல்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) கலிங்கதுப்பரணி
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – அறிஞர் அண்ணா.
82. “தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்
(அ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(ஆ) ஜி.யூ.போப்
(இ) டாக்டர்.கிரௌல்
(ஈ) கால்டுவெல்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) டாக்டர்.கிரௌல்
“தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள். தமிழ் என்னை ஈர்த்தது. குறளோ என்னை இழுத்தது” – டாக்டர்.கிரௌல் கூற்று
83. மன்னிப்பு – எம்மொழிச் சொல்?
(அ) தமிழ்
(ஆ) தெலுங்கு
(இ) மலையாளம்
(ஈ) உருது
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) உருது
ஒருமுறை மிதிவண்டிகாரர் தன் செய்கைக்காக பாவாணரிடம் “மன்னிக்கவும்” என்று கூறினார். அதற்கு பாவாணர் ”மன்னிப்பு” என்பது உருதுமொழிச் சொல். “பொறுத்துக் கொள்க” என்பதே சரியான தமிழ்ச் சொல் என்று கூறினார்.
84. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன அடிசேரா தார் – இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக
(அ) உவமையணி
(ஆ) நிரல்நிறைஅணி
(இ) வேற்றுப் பொருள் வைப்பு அணி
(ஈ) ஏகதேச உருவக அணி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) ஏகதேச உருவக அணி
ஏகதேச உருவக அணி: செய்யுளில் ஒரு பொருளை உருவகம் செய்துவிட்டு, அதற்குத் தொடர்புடைய மற்றப் பொருட்களை அதற்கேற்ப, உருவகம் செய்யாமல் விட்டு விடுவதற்கு ஏகதேச உருவக அணி என்று பெயர். எ.கா: பிறவிப் பெருங்கடல நிந்துவர் நீந்தார் இறைவ னடி சேரா தார். இக்குறளில் பிறவியைக் கடலாக உருவகப்படுத்தி, அதைக் கடக்க உதவும் இறைவனடியைத் தெப்பமாக உருவகப்டுத்தாமையால், இஃது ஏகதேச உருவக அணியாகும்.
85. “முட்டையிட்டது சேவலா, பெட்டையா”?
(அ) திணைவழு
(ஆ) விடைவழு
(இ) மரபுவழு
(ஈ) வினாவழு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) வினாவழு
சேவல் ஆணினம், முட்டையிடாது. “முட்டையிட்டது சேவலா பெட்டையா? என்பது வினா வழுவாகும்.
86. பொருந்தாத சொல்லைக் கண்டறிதல்: மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்
(அ) மாணிக்கம்
(ஆ) முத்து
(இ) பவளம்
(ஈ) கிளிஞ்சல்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) கிளிஞ்சல்
ஏனைய மூன்றும் நவரத்தினங்களில் அடங்குபவை. நவரத்தினங்கள்: கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்.
87. சொல்லைப் பொருளோடு பொருத்துக:
சொல் பொருள்
அ. வனப்பு – 1.காடு
ஆ. அடவி – 2. பக்கம்
இ. மருங்கு – 3. இனிமை
ஈ. மதுர ம்- 4. அழகு
அ ஆ இ ஈ
அ. 2 1 4 3
ஆ, 3 2 1 4
இ. 4 1 2 3
ஈ. 1 2 3 4
விடை மற்றும் விளக்கம்
விடை: இ. 4 1 2 3
88. பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்
(அ) மு.சி.பூர்ணலிங்கம்
(ஆ) சி.வை.தாமோதரனார்
(இ) மறைமலையடிகள்
(ஈ) திரு.வி.கல்யாணசுந்தரனார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) சி.வை.தாமோதரனார்
பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்புலமையையும் கவிபாடும் திறமையையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்
89. “எவ்வகை செய்தியும் உவமங்காட்டி” என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம்பெற்ற நூல்
(அ) குற்றாலக் குறவஞ்சி
(ஆ) முல்லைப்பாட்டு
(இ) மதுரைக்காஞ்சி
(ஈ) திருமுருகாற்றுப்படை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி
“எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் பிறருங்கடி” – மாங்குடி மருதனார்
90. “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என அழைக்கப்படும் நகரம்
(அ) திருநெல்வேலி
(ஆ) தஞ்சை
(இ) திருச்சி
(ஈ) மதுரை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) மதுரை
பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத் தொட்டிலாகத் திகழ்ந்ததால் “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என மதுரை மாநகரம் அழைக்கப்பட்டது