Tnpsc General Tamil Previous Question Paper 18
61. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
(அ) பெருமை
(ஆ) ஏமாற்றம்
(இ) பாதுகாப்பு
(ஈ) பொறுமை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) பாதுகாப்பு
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வி அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் அவனுக்கு உதவி செய்யும் தன்மையுடையது ஆகும். ஏமாப்பு-பாதுகாப்பு.
62. பிழையற்ற வாக்கியம் எது?
(அ) ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்.
(ஆ) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்.
(இ) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்.
(ஈ) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்.
தவறு சரி
ஓர் மாவட்டம் ஒரு மாவட்டம்
ஒரு அமைச்சர் ஓர் அமைச்சர்
மேற்க்கொண்டார் மேற்கொண்டார்
12 உயிரெழுத்துகளுக்கு முன்னால் மட்டுமே “ஓர்” என்ற சொல் வர வேண்டும். “ற்” என்ற எழுத்திற்கு அடுத்து ஒற்றெழுத்து வரக்கூடாது.
63. “எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்” எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு
(அ)செயப்பாட்டு வினைத்தொடர்
(ஆ) கட்டளைத்தொடர்
(இ) அயற்கூற்றுத் தொடர்
(ஈ) செய்வினைத்தொடர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) செய்வினைத்தொடர்
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைந்திருந்தால் அது செய்வினைத் தொடராகும். செயப்படுபொருளோடு இரண்டாம் வேற்றுமை வெளிப்பட்டு வரும். எ.கா:கம்பர் இராமாயணத்தை இயற்றினார். செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைந்திருத்தால் அது செயப்பாட்டு வினைத் தொடராகும். எழுவாயோடு “ஆல்” என்ற மூன்றாம் வேற்றுமை உருபையும் பயனிலையோடு “பட்டது” என்ற சொல்லும் சேரும் எ.கா: கம்பரால் இராமாயணம் இயற்றப்பட்டது.
64. பொருத்துக:
அ. என்றால் – 1. முற்றும்மை
ஆ. நுந்தை – 2. குறிப்பு வினைமுற்று
இ. யாவையும் – 3. மரூஉ
ஈ. நன்று – 4. தொழிற்பெயர்
அ ஆ இ ஈ
அ. 4 3 1 2
ஆ. 3 4 2 1
இ. 2 4 1 3
ஈ. 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை:
அ. 4 3 1 2
கொடுக்கப்பட்டுள்ள நான்கு சொற்களும் அதற்கான இலக்கணக் குறிப்புகளும் பகுதி-அ பிரிவு-15 (இலக்கணக் குறிப்பறிதல்) பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
65. “உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
(அ) ஜி.யூ.போபா
(ஆ) கால்டுவெல்
(இ) பாரதிதாசன்
(ஈ) பாரதியார்
விடை மற்றும் விளக்கம்
விடை:(ஆ) கால்டுவெல்
66. நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
(அ) தவத்திரு.சங்கரதாஸ்
(ஆ) பதிரிமாற் கலைஞர்
(இ) பம்மல் சம்பந்தனார்
(ஈ) திண்டிவனம் ராமசாமிராஜா
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) பதிரிமாற் கலைஞர்
பரிதிமாற் கலைஞர். “ரூபாவதி” “கலாவதி” போன்ற நாடகங்களை இயற்றியதோடு, பெண் வேடம் புனைந்து நடிக்கவும் செய்தார். மேலும் “நாடகவியல்” என்ற நாடக இலக்கண நூலை செய்யுள் வடிவில் இயற்றியுள்ளார்
67. கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
(அ) கரைவெட்டி
(ஆ) கோவன்புத்தூர்
(இ) வெள்ளோடு
(ஈ) சித்திரங்குடி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) கோவன்புத்தூர்
68. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது?
(அ) மதுரைக்காண்டம்
(ஆ) சுந்தர காண்டம்
(இ) திருவாலவாய்க்கண்டம்
(ஈ) கூடற்காண்டம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) திருவாலவாய்க்கண்டம்
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் திருவிளையாடற் புராணத்தில் திருவாலவாய்க் காண்டத்தில் அமைந்துள்ளது
69. “அஷ்டப்பிரபந்தம்” கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
(அ) எட்டு சிற்றிலக்கியங்கள்
(ஆ) எட்டு பெருங்காப்பியம்
(இ) ஆறு நூல்கள்
(ஈ) ஒன்பது உரைகள்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) எட்டு சிற்றிலக்கியங்கள்
“அஷ்டப்பிரபந்தம்” என்பது எட்டு சிற்றிலக்கியங்களைக் குறிக்கும். அஷ்டப்பிரபந்தம் என்ற நூலை எழுதியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். அஷ்டப்பிரபந்தம்: 1.திருவேங்கடந்தந்தாதி. 2.திருவரங்கத்து அந்தாதி, 3.திருவரங்கத்து மாலை, 4.திருவரங்கக் கலம்பகம், 5.திருவேங்கட மாலை, 6.அழகர் அந்தாதி, 7.அரங்கநாதர் ஊசல், 8.நூற்றெட்டு திருப்பதி அந்தாதி.
70. காந்தி புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
(அ) ஓராயிரத்து முப்பத்து நான்கு
(ஆ) ஈராயிரத்து முப்பத்து நான்கு
(இ) மூவாயிரத்து முப்பத்து நான்கு
(ஈ) நான்காயிரத்து முப்பத்து நான்கு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) ஈராயிரத்து முப்பத்து நான்கு
காந்திபுராணம் என்ற நூலை எழுதியவர் அசலாம்பிகை அம்மையார். இந்நூல் காந்தியடிகளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்றது. இந்நூல் ஈராயிரத்து முப்பத்து நான்கு (2034) பாடல்களைக் கொண்டது