Tnpsc General Tamil Previous Question Paper 18
51. “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
(அ) வேற்றுமையணி
(ஆ) இல்பொருள் உவமையணி
(இ) ஏகதேச உருவக அணி
(ஈ) எடுத்துக்காட்டு உவமையணி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) வேற்றுமையணி
வேற்றுமை அணி. ஏதேனும் ஓர் ஒற்றுமையுடைய இரு பொருள்களுக்கிடையே வேற்றுமை கற்பித்துக் கூறுவது வேற்றுமை அணியாகும். ஒற்றுமை-புண்(வடு). வேற்றுமை-தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். நாவினால் கூறப்பட்ட தீய சொல்லால் ஏற்பட்ட வடு ஆறாது.
52. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” – இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளைத் தேர்ந்தெடு.
(அ) நிலம்-வாழ்க்கை
(ஆ) ஊன்றுகோல்-பெரியோர் சொல்
(இ) ஊன்றுகோல்-நிலம்
(ஈ) ஒழுக்கம்-வாய்ச்சொல்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) ஊன்றுகோல்-பெரியோர் சொல்
வினாவில் கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள் நல்லொழுக்கம் உடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் உதவும் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் எப்போதும் உதவியாக இருக்கும். ஊன்றுகோல் – பெரியோர் சொல்.
53. “பட்டியுள காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்” இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினைத் தேர்ந்தெடு.
(அ) அடிமறிமாற்றுப் பொருள்கோள்
(ஆ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(இ) மொழிமாற்றுப் பொருள்கோள்
(ஈ) விற்பூட்டுப் பொருள்கோள்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
கொண்டு கூட்டுப்பொருள்கோள் செய்யுளின் பல அடிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள சொற்களைப் பொருள் ஏற்குமிடத்து எடுத்துக்கொண்டு பொருளுக்கு ஏற்ற இடங்களில் கூட்டியுரைப்பது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும். “காளை படிபால் கறக்குமே நல்லபசு வேளை தவிரா துழும்” “பட்டியுள காளை வேளை தவறாது உழும். நல்ல பசு படிபால் கறக்கும்” என்று பொருள் கொள்ள வேண்டும்.
54. “தொண்டு செய்து பழுத்தபழம்” என்று பாரதிதாசன் போற்றுவது
(அ) பாரதியார்
(ஆ) தந்தை பெரியார்
(இ) காந்தியார்
(ஈ) அண்ணாதுரையார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) தந்தை பெரியார்
பாரதிதாசன் தந்தை பெரியாரைப் பற்றி எழுதிய கவிதை, “தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும்”
55. பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதத் தொடங்கினார்?
(அ) ஜார்ஜ் எல்.ஹார்ட்
(ஆ) வால்ட்விட்மன்
(இ) லிண்ட் ஹோம்
(ஈ) ஹால் சிப்மோன்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) வால்ட்விட்மன்
“அவனுக்கு (பாரதி) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டும் தெரியும் ஜப்பானிய ஹைக்கூ லாவகமும் புரியும் தாகூரையும் அறிவான் வாலட் விட்மனின் புதுக்கவிதை ஒளியையும் உணர்வான் காளிதாசனான அவன் ஷெல்லிதாசனாகவும் தன்னை அறிவித்துக் கொண்டவன் நவநவமான மொழிகளில் பேசியவன் – சிற்பி. பாலசுப்பிரமணியன்.
56. நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையைப் பொருத்துக:
அ. இசை நாவல்கள் – 1.நான்கு
ஆ. புதினங்கள் – 2. பத்து
இ. கவிதைத் தொகுப்புகள் – 3. மூன்று
ஈ. மொழி பெயர்ப்புகள் – 4. ஐந்து
அ ஆ இ ஈ
அ. 4 3 1 2
ஆ. 3 4 2 1
இ. 2 4 1 3
ஈ. 3 1 4 2
விடை மற்றும் விளக்கம்
விடை:
ஆ. 3 4 2 1
நாமக்கல் கவிஞரின் படைப்புகள்: இசைநாவல்கள்-3, கட்டுரைகள்-12, தன் வரலாறு-3, புதினங்கள்-5, இலக்கியத் திறனாய்வுகள்-7, கவிதைத்தொகுப்புகள்-10, சிறுகாப்பியங்கள்-5, மொழிபெயர்ப்பு நூல்கள்-4, மேலும் நாமக்கல் கவிஞர் பற்றிய குறிப்புகள், படைப்புகளின் பெயர்கள், பாராட்டுரைகள், மேற்கோள்கள் பக்க எண். 398-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
57. திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
(அ) இராமலிங்க அடிகளார்
(ஆ) தாயுமானவர்
(இ) குமரகுருபரர்
(ஈ) வில்லிபுத்தூரார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) குமரகுருபரர்
திருபனந்தாளிலும் காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவியவர் குமரகுருபரர் ஆவார். தனது இறுதிக் காலத்தில் காசிக்குச் சென்று மடம் அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்.
58. மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
(அ) சுவாமிநாத தேசிகர்
(ஆ) வீரமாமுனிவர்
(இ) சி.இலக்குவனார்
(ஈ) மீனாட்சி சுந்தரனார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) சுவாமிநாத தேசிகர்
“திருச்செந்திற் கலம்பகம்” என்ற நூலை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர் ஆவார். இவரின் ஆசிரியர் மயிலேறும் பெருமாள் ஆவார். இவருடைய ஆன்மிகக் குரு திருவாவடு ஞான தேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்தி ஆவார்.
59. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;” இத்தருமந்திரப்பாடல் இடம்பெற்ற தந்திரம் எது?
(அ) ஆறாம் தந்திரம்
(ஆ) இரண்டாம் தந்திரம்
(இ) மூன்றாம் தந்திரம்
(ஈ) எட்டாம் தந்திரம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) மூன்றாம் தந்திரம்
திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் 724-வது பாடல். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் செரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” – திருமூலர். பொருள்: நோய் முதலான காரணங்களால் உடம்பு அழியுமாயின் உயிரும் அழியும். அவ்வாறு அழிந்தால், உறுதி தரும் மெய்யறிவை அடைய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் வழிமுறைகளை அறிந்து உடம்பை வளர்த்தேன். அதனால் உயிரை அழிவிலிருந்து காத்தேன்.
60. “அங்கவியல்” திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம் பெற்றுள்ளது?
(ஆ) அறத்துப்பால்
(ஆ) பொருட்பால்
(இ) காமத்துப்பால்
(ஈ) எதுவுமில்லை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) பொருட்பால்
அறத்துப்பால்: பாயிரம், இல்லறவியல், துறவறவியல். பொருட்பால்: அரசியல், அங்கவியல், ஒழிபு. காமத்துப்பால்: களவியல், கற்பியல்.