Tnpsc General Tamil Previous Question Paper 18
41. ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்தில் உள்ளது என்பதைத் தெரிவு செய்க:
(அ) மேற்கு வங்காளம்
(ஆ) குஜராத்
(இ) உத்தராஞ்சல்
(ஈ) உத்திரப்பிரதேசம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) உத்தராஞ்சல்
அல்மோரா சிறை உத்தராஞ்சல் மாவட்டத்தில் உள்ளது,
42. கண்ணதாசன் படைத்த நாடகம்
(அ) மாங்கனி
(ஆ) ஆட்டனத்தி ஆதிமந்தி
(இ) கல்லக்குடி மகாகாவியம்
(ஈ) இராசதண்டனை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) இராசதண்டனை
கொடுக்கப்பட்டுள்ள நான்குமே கவிஞர் கண்ணதாசனின் படைப்புகள் ஆகும். அவற்றுள் “இராசதண்டனை” மட்டுமே நாடக நூலாகும்.
43. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. அயற்கூற்றில் வருவன.
(அ) மேற்கோள்குறிகள்
(ஆ) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
(இ) அது, அவை – அங்கே என மாறும்
(ஈ) காலப்பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்.
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
அயற்கூற்றில் தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறும்.
44. “புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரைத் தேர்ந்தெடு
(அ) டாக்டர்.மு.வ
ரதராசனார்
(ஆ) பேரறிஞர் அண்ணா
(இ) நேரு
(ஈ) காந்தி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) நேரு
45. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
(அ) ஆத்திச்சூடி
(ஆ) நாலடியார்
(இ) புறநானூறு
(ஈ) பழமொழி நானூறு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) புறநானூறு
புறநானூறு “தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே” – மதுரை கண்க்காயனார் மகனார் நக்கீரனார். பொருள்: தெளிந்த கடல் நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுவதனையும் பெதுவின்றித் தனதாக்கி ஒரு குடையின் கீழு; ஆட்சி செய்பவன் மன்னன். அவனுக்கும், நள்ளிரவிலும் பகலிலும் உறங்காது விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடி வீழ்த்த எண்ணுகின்ற கல்வியறிவற்ற ஒருவனுக்கும் உண்ணத் தேவைப்படும் பொருள் நாழியளவே, உடுத்தும் உடை மேலாடையும் இடுப்பாடையும் ஆகிய இரண்டே.
46. “போரை ஒழிமின்” என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
(அ) நெடுங்கிள்ளி
(ஆ) நலங்கிள்ளி
(இ) அதியமான்
(ஈ) சேரமான் நெடுமான் அஞ்சி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) நெடுங்கிள்ளி
கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு நெடுங்கிள்ளி போரை நிறுத்திவிட்டு உறையூர்க் கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்தான்.
47. பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
(அ) தேவாரம்
(ஆ) திருவாசகம்
(இ) புறநானூறு
(ஈ) பதிற்றுப்பத்து
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) திருவாசகம்
பழந்தமிழரின் விண்ணியல் அறிவு: திருவாசகம் அண்டப் பகுதியின் உண்டப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. – மாணிக்கவாசகர். பொருள்: 1.பெருவெடிப்பு கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்தது. 2.உலகம் உருண்டையானது.
48. “தேம்பாவணி” என்பது
(அ) கிறத்தவக் காப்பியம்
(ஆ) இசுலாமியக் காப்பியம்
(இ) வைணவக் காப்பியம்
(ஈ) சைவக் காப்பியம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) கிறத்தவக் காப்பியம்
தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர். இது கிறத்தவக் காப்பியமாகும். இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசை மாமுனிவர் இந்நூலின் பாட்டுடைத் தலைவர் ஆவார்.
49. “தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்
(அ) இளங்கோவடிகள்
(ஆ) கம்பர்
(இ) திருவள்ளுவர்
(ஈ) சீத்தலைச்சாத்தனார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) சீத்தலைச்சாத்தனார்
மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனாரை “தண்டமிழ் ஆசான்”. “சாத்தன் நன்னூற்புலவன்” என இளங்கோவடிகள் பாராட்டினார்
50. நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் “ஐவர்” என்பதன் இலக்கணம் யாது?
(அ) ஒன்றொழி பொதுச் சொல்
(ஆ) இனங்குறித்தல்
(இ) தொடர்மொழி
(ஈ) பொதுமொழி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) ஒன்றொழி பொதுச் சொல்
“நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர்” – “ஐவர்” என்பது இங்கு ஆண்களைக் குறிக்கின்றது. “வீட்டின் முன் ஐயர் கோலமிட்டனர்” “ஐவர்” என்பது இங்கு பெண்களைக் குறிக்கின்றது. எனவே “ஐவர்” என்பது ஒன்றொழி பொதுச் சொல் ஆகும்.