Tnpsc General Tamil Previous Question Paper 18
31. “அறவுரைக் கோவை” என அழைக்கப்பெறும் நூல்
(அ) முதுமொழிக் காஞ்சி
(ஆ) ஆசாரக்கோவை
(இ) ஏலாதி
(ஈ) சிறுபஞ்சமூலம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) முதுமொழிக் காஞ்சி
“அறவுரைக்கோவை” என்று அழைக்கப்படும் முதுமொழக் காஞ்சியாகும். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க்கிழார் ஆவார். நீதி நூல்களுள் மிகச்சிறிய நூல் இதுவே.
32. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
(அ) திருவருட்பா
(ஆ) திருக்குறள்
(இ) மகாபாரதம்
(ஈ) இராமாயணம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) திருக்குறள்
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறளாகும்.
33. குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
(அ) சீவகசிந்தாமணி
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) மணிமேகலை
(ஈ) கம்பராமாயணம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) சிலப்பதிகாரம்
“தமிழ் இலக்கியத்தின் ஆதி காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். இந்நூல் குடிமக்கள் காப்பியம்” என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத் தலைவனும் தலைவியும் சாதாரண குடிமக்கள் என்பதால் இப்பெயர் பெற்றது” – தெ.பொ.மீ.
34. எட்டுத்தொகை நூல்களில் “நாடகப் பாங்கில்” அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
(அ) குறுந்தொகை
(ஆ) அகநானூறு
(இ) கலித்தொகை
(ஈ) ஐங்குறுநூறு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களில் “நாடகப் பாங்கில்” அமைந்துள்ள நூல் கலித்தொகை. இந்நூல் கலிப்பாக்களால் அமைந்துள்ளது. இசையோடு பாடுவதற்கேற்றது.
35. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இரு நூல்களைப் படைத்துள்ளார். அவர் யார்?
(அ) கபிலர்
(ஆ) மூவாதியார்
(இ) நல்லாதனார்
(ஈ) கணிமேதாவியார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) கணிமேதாவியார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கணிமேதாவியர் இயற்றியுள்ள இரண்டு நூல்கள் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது.
36. “என்காற் சிலம்பு மணியுடை அரியே” – இவ்வடிகளில்”மணி” என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க
(அ) பவளம்
(ஆ) முத்து
(இ) மாணிக்கம்
(ஈ) மரகதம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) மாணிக்கம்
சிலப்பதிகாரம் – வழக்குரை காரைத கண்ணகி கூற்று: “என்காற் சிலம்பு மணியுடை அரியே எனத் தேமொழியுரைத்தது செவ்வை நன்மொழி”. பொருள்: தன் காற் சிலம்பு மாணிக்கப் பரல்களை உடையது எனக் கண்ணகி கூறினாள்.
37. உம்மைத்தொகையில் “உம்” என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதைத் தேர்ந்தெடு
(அ) முதலில் வரும்
(ஆ) இடையில் வரும்
(இ) இடையிலும் இறுதியிலும் வரும்
(ஈ) இறுதியில் வரும்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) இடையிலும் இறுதியிலும் வரும்
உம்மைத்தொகை விரிவான சொல்
இயல்இசை இயலும் இசையும்
எண் எழுத்து எண்ணும் எழுத்தும்
இரவு பகல் இரவும் பகலும்
38. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு
(அ) மூன்றாம் வேற்றுமை
(ஆ) ஐந்தாம் வேற்றுமை
(இ) ஆறாம் வேற்றுமை
(ஈ) இரண்டாம் வேற்றுமை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) இரண்டாம் வேற்றுமை
இராமாயணம்-பெயர்ச்சொல். இதனுடன் இரண்டாம் வேற்றுமை உருபான “ஐ” சேரும்போது “இராமாயணத்தை” என்று செயப்படுபொருளாக மாறுகின்றது.
39. பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
(அ) மொழியமுது
(ஆ) அடிமலர்
(இ) தமிழ்த்தேன்
(ஈ) கயற்கண்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) தமிழ்த்தேன்
உவமை உருவகம்
அமுதமொழி மொழியமுது
மலரடி அடிமலர்
தேன் தமிழ் தமிழ்த்தேன்
கயற்கண் கண்கயல்
40. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்” இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு
(அ) கீழ்க்கதுவாய் மோனை
(ஆ) கூழை மோனை
(இ) ஒரூஉ மோனை
(ஈ) மேற்கதுவாய் மோனை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) கூழை மோனை
செய்யுளில் முதற்சீரில் வந்த முதல் எழுத்தே அடுத்து வரும் சீர்;களில் வந்தால் அது மோனைத் தொடையாகும். 1,2,3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வந்தால் அது கூழை மோனை ஆகும். 1,2,4-ம் சீர்;கள் கீழு;க்கதுவாய் மோனை 1,4-ம் சீர்;கள் ஒரூஉ மோனை, 1,3,4-ம் சீர்கள் மேற்கதுவாய் மோனை.