Tnpsc General Tamil Previous Question Paper 18
21. “———-“ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.
(அ) உலகெலாம்
(ஆ) ஒன்றுகொலாம்
(இ) உலகம் யாவையும்
(ஈ) திருமறையோர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) ஒன்றுகொலாம்
திங்களுர் அப்பூதியடிகளின் மகனை அரவந்தீண்டிய போது நஞ்சு நீங்க “ஒன்றுகொலாம்” என்ற பதிகத்தைப்பாடி அப்பர் அவனை உயிர்ப்பித்தார்.
22. பொருத்துக:
நூல் நூலாசிரியர்
அ. களவழி நாற்பது – 1. முன்றுறையரையனார்
ஆ. கைந்நிலை – 2. பொய்கையார்
இ. கார்நாற்பது – 3. புல்லங்காடனார்
ஈ. பழமொழி – 4. பண்ணங்கூத்தனார்
அ ஆ இ ஈ
அ. 2 3 4 1
ஆ. 1 2 3 4
இ. 4 3 1 2
ஈ. 3 1 2 4
விடை மற்றும் விளக்கம்
விடை: அ. 2 3 4 1
23. “அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்?” இது பயின்று வந்த நூல் எது?
(அ) பழமொழி
(ஆ) நாலடியார்
(இ) திருக்குறள்
(ஈ) ஆசாரக்கோவை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) பழமொழி
பழமொழி நானூறு களமர் பலரானும் கள்ளம் படினும் வளமிக்கார் செல்வம் வருந்தா – விளைநெல் அரிநீர்; அணைதிறக்கும் ஊர! அறுமோ நரிநக்கிற்று என்று கடல்? – முன்றுறையரையனார். பொருள்: விளைந்த நிலத்தை அறுக்கும் பொருட்டு உழவர்கள், நீர்; வடிய வடிகாலைத் திறக்கும் மருதநிலத் தலைவனே! நரி நக்கியது என்ற காரணத்தால் கடலின் நீருhனது வற்றியதுண்டோ? இல்லை. அதுபோன்று, களவு செய்பவர் மற்றும் ஏவல் செய்பவர், பலராலும் களவு செய்யப்பட்டாலும் பொருள் வருவாய் மிகுதியும் உடையவரின் செல்வம் குறைந்து வருந்துவதில்லை.
24. “அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?
(அ) ரழ வரும்
(ஆ) தந வரும்
(இ) றன வரும்
(ஈ) யத் தோன்றும்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) ரழ வரும்
“அண்ணம் நுனி நா வருட ரழவரும்” – நன்னூல் 83. மேல்வாயை நாக்கின் நுனி தடவுதனால் “ரழ” எழுத்துகள் பிறக்கும்.
25. னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
(அ) னல முன் டணவும் ணள முன் றனவும்
(ஆ) னல முன் றடவும் ணள முன் னணவும்
(இ) னல முன் றனவும் ணள முன் டணவும்
(ஈ) னல முன் றணவும் ணளமுன் டனவும்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) னல முன் டணவும் ணள முன் றனவும்
தனிக்குறில் முன் ஒற்று புணர்ச்சி. நிலைமொழியின் ஈற்றில் “ன” கர “ல” கர ஒற்றெழத்துகள் வந்து வருமொழியின் முதலில் வல்லினம் வந்தால் அந்த ஒற்றெழுத்துகள் “ற”கரமாக மாறும். எ.கா: பொன்குடம்-பொற்குடம். கல்சிலை-கற்சிலை. நிலைமொழியின் ஈற்றில் “ண”கர, “ள”கர ஒற்றெழுத்துகள் வந்து வருமொழியின் முதலில் வல்லினம் வந்தால், அந்த ஒற்றெழுத்துகள் “ட”கரமாக மாறும். எ.கா: மண்குடம்-மட்குடம், வாள்போர்-வாட்போர்.
26. “வித்தொடு சென்ற வட்டி” – என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?
(அ) பனையோலைப்பொட்டி
(ஆ) வயல்
(இ) வட்ட வடிவு
(ஈ) எல்லை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) பனையோலைப்பொட்டி
நற்றிணை.வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர பொருள்: பனையோலைப் பெட்டியில் விதை கொண்டு சென்று ஈரமுள்ள நிலத்தில் விதை;த உழவர்கள் அப்பெட்டியில் பல்வகை மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்தனர். வட்டி-பனையோலைப்பெட்டி.
27. “எந்த நாட்டில் அணு துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது?
(அ) இங்கிலாந்து
(ஆ) சிங்கப்பூர்
(இ) உருசியா
(ஈ) இந்தியா
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) உருசியா
உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இம் பெற்றுள்ளது.
28. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்.
(அ) மதங்க சூளாமணி
(ஆ) மத்தவிலாசம்
(இ) சாகுந்தலம்
(ஈ) மனோன்மணீயம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) சாகுந்தலம்
மறைமலையடிகள் 1907-ல் சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்த்து “சாகுந்தல நாடகம்” என்ற நூலை எழுதியுள்ளார். 1934-ல் சாகுந்தல நாடக ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
29. “உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்.
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) வில்லிப்புத்தூரார்
(ஈ) கம்பர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) கம்பர்
“உழர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” – கம்பர்.
30. “சூலியஸ் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்
(அ) திரு.வி.க
(ஆ) மறைமலையடிகள்
(இ) உ.வே.சா
(ஈ) கவிமணி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) உ.வே.சா
உ.வே.சாமிநாதய்யரின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிய அயல் நாட்டவர்கள் ஜி.யூ.போப் மற்றும் சூலியஸ் வின்சோன்.