Tnpsc General Tamil Previous Question Paper 18
11. “புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினைத் தேர்ந்தெடுக்க
(அ) காகம்
(ஆ) கிளி
(இ) புறா
(ஈ) ஆந்தை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) புறா
சிலப்பதிகாரம்
“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” பொருள்: தேவர்களும் வியக்கும் வண்ணம் புறாவின் துன்பத்தை போக்கியவன் சிபி சக்கரவர்த்தி. “புள்” என்றால் பறவை என்பதே பொருளாகும். இங்கு “புள்” என்பது புறாவைக் குறிக்கிறது
12. “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” – என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
(அ) கற்றா
(ஆ) கன்றா
(இ) கறா
(ஈ) கன்ற
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) கன்றா
குற்றியலுகரப்புணர்ச்சி: கன்று ஆ – கன்றா. “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “கன்ற்ஆ” என்றானது. “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற வதிப்படி “கன்றா” என்றானது.
13. “விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” – இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?
(அ) மேற்கதுவாய் மோனை
(ஆ) கீழ்க்கதுவாய் மோனை
(இ) கூழை மோனை
(ஈ) ஒரூஉ மோனை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) மேற்கதுவாய் மோனை
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. 1,3,4-ஆம் சீர்கள் ஒன்றி வருவது மேற்கதுவாய் மோனையாகும்.
14. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
(அ) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
(ஆ) வினைத்தொகையில்வல்லினம் மிகாது
(இ) வன்றொடர்க் குற்றியலுகத்தின் பின் வல்லினம் மிகாது.
(ஈ) உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) வினைத்தொகையில்வல்லினம் மிகாது
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும். சாலபேசினான்-சாலப்பேசினான். தவசிறிது-தவச்சிறிது. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. சுடுகாடு-சுடுகாடு. விரிகதிர்-விரிகதிர். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். படித்துபார்-படித்துப்பார். தச்சுதொழில்-தச்சுத்தொழில். உவமைத்தொகையில் வல்லினம் மிகும். பவளம்செவ்வாய்-பவளச்செவ்வாய். மலர்கண்-மலர்க்கண்.
15. தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது எனத் தேர்ந்தெடு.
(அ) பண்புத்தொகை
(ஆ) அன்மொழித்தொகை
(இ) வினைத்தொகை
(ஈ) உவமைத்தொகை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) அன்மொழித்தொகை
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, (தொகைநிலைத் தொடர்கள்) ஆகியவற்றை அடுத்து ஒரு சொல் தொடர்ந்து (அ) தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும். எ.கா: பொற்கொடி நடந்தாள்-பொன்னால் ஆகிய கொடியின் தன்மை கொண்ட பெண் நடந்தாள்.
16. கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடு
(அ) செந்தமிழ் ஞாயிறு
(ஆ) செந்தமிழ்ச்செல்வர்
(இ) இலக்கியச் செம்மல்
(ஈ) தமிழ்பொருங்காவலர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) இலக்கியச் செம்மல்
தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர்கள்: செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர், மொழிஞாயிறு, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல் உட்பட 174 சிறப்புப் பட்டங்களைப் பெற்றுள்ளார். “இலக்கியச் செம்மல்” என்று சிறப்பிக்கப்பட்டவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார்.
17. “உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்னும் நூலை எழுதியவர் யார்?
(அ) இபான்
(ஆ) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
(இ) தால்சுதாய்
(ஈ) முனைவர் எமினோ
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) தால்சுதாய்
தால்சுதாய் இரஷ்ய அறிஞர். இவர் தமது நூலில் “இன்னா செய்தார்க்கும்” என்ற திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியுள்ளார். அதைப் படித்த காந்தியடிகள் திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்றுக் கொண்டு, தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்.
18. பொருத்துக:
அ. பெருஞ்சித்திரனார் – 1.காவியப்பாவை
ஆ. சுரதா – 2. குறிஞ்சித்திட்டு
இ. முடியரசன் – 3. கனிச்சாறு
ஈ. பாரதிதாசன் – 4. தேன்மழை
அ ஆ இ ஈ
அ. 2 3 4 1
ஆ. 3 4 1 2
இ. 2 4 1 3
ஈ. 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: ஆ. 3 4 1 2
19. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
(அ) கொய்யாக்கனி
(ஆ) கனிச்சாறு
(இ) கல்லக்குடி மகாவியம்
(ஈ) நூறாசிரியம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) கல்லக்குடி மகாவியம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள். கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பவாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம். “கல்லக்குடி மகாகாவியம்” கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டது.
20. திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
(அ) ஐம்பத்து மூவர்
(ஆ) எழுபத்தைவர்
(இ) அறுபதின்மர்
(ஈ) நூற்றுவர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) ஐம்பத்து மூவர்
திருக்குறளின் சிறப்பினை உணர்த்த இயற்றப்பட்டது. “திருவள்ளுமாலை” என்னும் “நூலாகும். இந்நூலில் 55 பாடல்களை 53 புலவர்கள் இயற்றியுள்ளனர்.