Tnpsc General Tamil Previous Question Paper 14
61. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் மூன்றாம் திருவந்தாதியை இயற்றியவர்
(அ) பொய்கையாழ்வார்
(ஆ) பூதத்தாழ்வார்
(இ) நம்மாழ்வார்
(ஈ) பேயாழ்வார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பேயாழ்வார்
பேயாழ்வார்:
“திருமயிலை” என வழங்கப்படும் மயிலாப்பூரில் பிறந்த இவர் முதலாழ்வார்களில் மூன்றாமவர் ஆவார். இவருடைய பாசுரங்கள் “மூன்றாம் திருவந்தாதி” எனப்படுகிறது. இது நூறு வெண்பாக்களால் ஆனது.
62. தமிழ் எண் கணக்கைத் தீர்க்க:
ஙஅ+க0 ———?
(அ) ருஅ
(ஆ) சஅ
(இ) சஅ
(ஈ) எஅ
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சஅ
ங-மூன்று; அ-எட்டு; ஙஅ-38.
க-ஒன்று; 0-பூஜ்ஜியம்; க0-10; 38+10=48.
ச-நான்கு; அ-எட்டு; சஅ=48.
63. தென்னம் பொருப்பு என்பது
(அ) பொதிகை மலை
(ஆ) மேரு மலை
(இ) கழுகு மலை
(ஈ) நீல மலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) பொதிகை மலை
பொருப்பு-மலை. “தென்னம்” என்பது இங்கு தென் திசையைக் குறிக்கிறது. தென்திசையில் உள்ள மலை பொதிகைமலையாகும்.
64. “யான் பெற்ற பெருந்தவப் பே(று) என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே”
இவ்வடிகள் இடம் பெறும் நூல்
(அ) இராமாயணம்
(ஆ) நளவெண்பா
(இ) சிலப்பதிகாரம்
(ஈ) வில்லிபாரதம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) வில்லிபாரதம்
வில்லிபாரதம் (கர்ணன் கூற்று)
ஊன் பெற்ற பகழியினால் அழிந்தும் வீழ்ந்தும்
உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பேறு என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே!
– வில்லிபுத்தூரார்.
பொருள்: அர்ஜீனனுடைய கூரிய அம்பினால் துளைக்கப் பெற்று வலிமையிழந்து நான் வாடினாலும் உணர்வு உடையவனாகி, உன்னுடைய திருப்பெயரை உரைக்கும் பேறு பெற்றேன். நான் பெற்ற பெரும் பேறு இவ்வுலகில் யார்தாம் பெற்றார்? எனக்கூறி கர்ணன், கண்ணனைப் போற்றி வணங்கினான்.
65. “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” எனப் பாடியவர்.
(அ) வள்ளலார்
(ஆ) தாயுமானவர்
(இ) திருமூலர்
(ஈ) அப்பர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) வள்ளலார்
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்”
– வள்ளலார்
66. “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”
இப்பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) குறுந்தொகை
(ஈ) கலித்தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) புறநானூறு
புறநானூறு
பல்சான் நீரே பல்சான் நீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் நீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்கு விர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே
– நரிவெரூஉத் தலையார்.
பொருள்: வயதின் முதிர்ச்சியால் மீனின் முள்ளைப் போன்று தலைமயிர் வெளுத்து, உடலிலும் கன்னத்திலும் தோல் சுருங்கியுள்ள பயனில்லாத மூப்பினை அடைந்த சான்றோர்கள். எமன் உயிரைக் கவர வரும்போது வருந்திப் பயனில்லை. உயிருடன் வாழும்போதே நல்லவற்றை செய்ய வேண்டும். அஃது இயலாத போது தீயதை செய்தலையாவது கைவிட வேண்டும்.
67. கலித்தொகையில் நெய்தல் கலியைப் பாடியவர்
(அ) நல்லந்துவனார்
(ஆ) நக்கீரர்
(இ) கபிலர்
(ஈ) ஓரம்போகியார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) நல்லந்துவனார்
கலித்தொகை.
திணை பாடியவர் பாடல்கள்
குறிஞ்சி கபிலர் 29
முல்லை சோழன் நல்லுருத்திரன் 17
மருதம் மருதன் இளநாகனார் 35
நெய்தல் நல்லந்துவனார் 33
பாலை பெருங்கடுங்கோ 35
68. நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதிப் பாசுரங்களைப் பாடியவர்
(அ) மதுரகவியாழ்வார்
(ஆ) திருமழிசையாழ்வார்
(இ) திருமங்கையாழ்வார்
(ஈ) தொண்டரடிப்பொடியாழ்வார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) மதுரகவியாழ்வார்
நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்தது “கண்ணிநுண் சிறுதாம்பு” என்ற ஒரேயொரு பாசுரம்தான். இவர் பெருமாளைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆச்சாரியரான நம்மாழ்வாரேயே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே 11 பாசுரங்களைப் பாடியுள்ளார்.
69. காந்தியடிகள் எந்த நாடக நூலைப் படித்தது முதல் தன் பெற்றோரிடம் அன்பு செலுத்தலானார்?
(அ) சிரவணபிதூர்பத்தி
(ஆ) அரிசந்திரன்
(இ)பக்தப்பிரகலாதன்
(ஈ) இராமநாடகம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) சிரவணபிதூர்பத்தி
70. ”நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் பாடல் யாரை “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது?
(அ) பாரதிதாசன்
(ஆ) சுரதா
(இ) பாரதியார்
(ஈ) வெ.இராமலிங்கம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பாரதியார்
“நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பாடல் அப்பர் தேவாரத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடல்தான் பாரதியாரை “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது.