Tnpsc General Tamil Previous Question Paper 14
51. “ஐ” என்பதன் பொருள்
(அ) கண்
(ஆ) நான்
(இ) அழகு
(ஈ) அம்பு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) அழகு
ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்கள்:
ஐ-தலைவன், அழகு, வியப்பு.
52. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஆண்டு
(அ) 1715
(ஆ) 1755
(இ) 1785
(ஈ) 1815
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) 1815
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் காலம் 06.04.1815 முதல் 02.01.1876 வரையாகும்
53. “குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது” —— பருவம்
(அ) சப்பாணிப்பருவம்
(ஆ) அம்புலிப்பருவம்
(இ) வருகைப்பருவம்
(ஈ) முத்தப்பருவம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வருகைப்பருவம்
சப்பாணி பருவம்-9-ஆம் திங்கள்.
அம்புலிப்பருவம்-15-ஆம் திங்கள்.
வருகைப்பருவம்-13-ஆம் திங்கள்.
முத்தப்பருவம்-11-ஆம் திங்கள்.
54. பொருத்துக:
அ. மதுரகவி – 1. நால்வகைக் கவிகளையும் பாட வல்லவர்
ஆ. வித்தாரக்கவி – 2. “பாடு” எனக் கூறியவுடன் பாடுபவர்
இ. பாவலரேறு – 3. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்
ஈ. ஆசுகவி – 4. ஓசை நலம் சிறக்கப் பாடுபவர்
அ ஆ இ ஈ
அ. 3 2 1 4
ஆ. 4 3 1 2
இ. 1 2 4 3
ஈ. 2 4 3 1
விடை மற்றும் விளக்கம்
விடை: ஆ. 4 3 1 2
55. ”மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல்”
– இவ்வடிகள் இடம் பெறும் நூல்.
(அ) கார் நாற்பது
(ஆ) மதுரைக்காஞ்சி
(இ) இனியவை நாற்பது
(ஈ) ஐந்திணை ஐம்பது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) இனியவை நாற்பது
இனியவை நாற்பது
சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.
– பூதஞ்சேந்தனார்
பொருள்: வஞ்சகரைச் சேராமல் விலகியிருத்தல் இனியது. அறிவுடையாரின் வாய்ச் சொற்களைப் பின்பற்றி ஒழுகுதல் இனிது. நிலையான உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உரிமைப்பட வாழ்தல் இனியது.
56. “ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன்
வாசம் நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்ப”
– இப்பாடலடிகள் இடம் பெறும் நூல்.
(அ) பெரியபுராணம்
(ஆ) கந்தபுராணம்
(இ) சிலப்பதிகாரம்
(ஈ) மணிமேகலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) பெரியபுராணம்
பெரியபுராணம்-அப்பூதியடிகள் புராணம்.
ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விரும்பினுடன்
வாசம்நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்பத்
தேசமுய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும்
நேசமுற விண்ணப்பம் செயஅவரும் அதுநேர்ந்தார்
-சேக்கிழார்.
பொருள்: அப்பூதியடிகள், திருநாவுக்கரசரை ஓர் இருக்கையில் உட்காரச் செய்தார்;. விருப்பமுடன் பூசித்து வழிபட்டார்; திருநீற்றுக் காப்பேந்தி அணிந்தார்; மனமகிழ்வுற்றவராய் நாடுய்ய வந்தவரைத் திருவமுது செய்தருள விண்ணப்ப செய்தார்; திருநாவுக்கரசரும் அதற்கு இசைந்தார்.
57. “நீலமுடி தரித்த பல மலை சேர்நாடு
நீரமுத மெனப் பாய்ந்து நிரம்பு நாடு”
– இப்புகழ்மிக்க பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்.
(அ) குயில்பாட்டு
(ஆ) பாஞ்சாலி சபதம்
(இ) கண்ணன் பாட்டு
(ஈ) அழகின் சிரிப்பு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம் – சூழ்ச்சிச் சுருக்கம்.
நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு
நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு
கோலமுறு பயன்பமரங்கள் செறிந்து வாழுங்
குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு
ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்
பாலாடையும் நறுசெய்யும் தேனும் உண்டு
பண்ணவர்போல் மக்களெலாம் பயிலு நாடு
-பாரதியார்.
தூது சென்ற விதுரன் பாண்டவரின் நாட்டுவளம் கண்டு மகிழும் பகுதி.
பொருள்: நீலநிற மேகங்கள் தவழ்கின்ற பல மலைகளைக் கொண்ட நாடு; அம்மலைகளிலிருந்து வருகின்ற அருவி நீரானது அமுதமாகப் பாய்ந்து வளஞ்செய்கின்ற நாடு. அழகு மிக்க பயன்தரு மரங்கள் நிறைந்த குளிர்ந்த காடுகளும், பூக்கள் நிறைந்த சோலைகளும் கலந்திருக்கின்ற நாடு. உலகில் வாழ்கின்ற மக்களைப் பசியின்றிக் காப்பதற்கு ஏற்ற நன்செய், புன்செய்ப் பயிர்கள் செழித்து வளம் சேர்க்கின்ற நாடு. பாலாடை, நறுமண நெய், தேன் ஆகியவற்றை உண்டு தேவர்கள் போல் மக்கள் மகிழ்ந்திருக்கின்ற நாடு.
58. “நாற்கரணங்கள்” எனப்படுவது ———-
(அ) அறம், பொருள், இன்பம், வீடு
(ஆ) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
(இ) மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
(ஈ) வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
தமிழ்விடு தூது
அறம், பொருள், இன்பம், வீடு-விளைபொருள்கள்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா-வயலின் வரப்புகள்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம்-நாற்கரணங்கள்.
வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம்-செய்யுள் நன்னெறிகள்
59. “தமிழ் கெழு கூடல்” என்று மதுரையைப் போற்றிய நூல்
(அ)அகநானூறு
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) புறநானூறு
(ஈ) பரிபாடல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) புறநானூறு
மதுரையைப் போற்றிய இலக்கியங்கள்.
“தமிழ்கெழு கூடல்” – புறநானூறு.
“தமிழ்நிலை பெற்று தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை”
– சிறுபாணாற்றுப்படை.
“ஓங்குசீர் மதுரை, மதுரைமூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர்மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” – சிலப்பதிகாரம்.
60. “சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்” – எனக் கூறியவர்.
(அ) காந்தியடிகள்
(ஆ) இராமானுஜர்
(இ) பெரியார்
(ஈ) வள்ளலார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) வள்ளலார்