Tnpsc General Tamil Previous Question Paper 13
81. “திருத்தொண்டர் புராணம்” எனும் பெரியபுராணத்துக்கு முதனூலாக அமைந்தது எது?
(அ) திருத்தொண்டத்தொகை
(ஆ) திருவாசகம்
(இ) திருமந்திரம்
(ஈ) திருக்கோவையார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) திருத்தொண்டத்தொகை
சேக்கிழாரால் இயற்றப்பட்டது பெரியபுராணம். இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” ஆகும்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் “திருத்தொண்டத்தொகை” எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும் சுந்தரமூர்த்தி நாயனாரை காப்பித் தலைவராகக் கொண்டும், நம்பியாண்டார் நம்பி அவர்கள் எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை வழிநூலாகக் கொண்டும் பெரியபுராணத்தை சேக்கிழார் இயற்றினார்
82. “நாலடி நானூறு” என அழைக்கப்படும் நூல் எது?
(அ) நான்மணிக்கடிகை
(ஆ) நாலடியார்
(இ) இன்னாநாற்பது
(ஈ) இனியவை நாற்பது
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) நாலடியார்
83. கருதிமுதல் – என்ற சொல்லின் பொருள் யாரைக் குறிக்கின்றது?
(அ) யூதர்
(ஆ) இயேசுநாதர்
(இ) சீடர்
(ஈ) குற்றவாளி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) இயேசுநாதர்
84. சொல்லில் தோன்றும் குற்றங்கள் எத்தனை?
(அ) 3
(ஆ) 4
(இ) 6
(ஈ) 10
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) 4
குற்றங்கள் 10 வகையாகும்.
உடலில் தோன்றுவன (3)-கொலை, களவு, காமம்.
சொல்லில் தோன்றுவன (4)-பொய் பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்ற சொல்.
உள்ளத்தில் தோன்றுவன (3)-பேரவா, கடுஞ்சினம் கொள்ளுதல், தெளிவிலா அறிவு.
மேற்கண்ட குற்றங்களை, மணிமேகலையிடம் அறவண அடிகள் கூறினார்.
85. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர்.
(அ) நக்கீரன்
(ஆ) பரஞ்சோதி முனிவர்
(இ) தருமி
(ஈ) சிவபெருமாள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) பரஞ்சோதி முனிவர்
86. சிறுபஞ்சமூலம் என்ற நூலில் கடவுள் வாழ்த்துடன் ——- வெண்பாக்கள் உள்ளன.
(அ) தொண்ணுற்றொன்பது
(ஆ) தொண்ணூற்றேழு
(இ) தொண்ணூற்றாறு
(ஈ) நூற்றெட்டு
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) தொண்ணூற்றேழு
87. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய பருவம் எது?
(அ) அம்மானை
(ஆ) ஊசல்
(இ) சிறுதேர்
(ஈ) கழங்கு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) சிறுதேர்
அம்மானை, ஊசல், கழங்கு ஆகியவை பெண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய பருவங்களாகும்
88. “நான்” என்பது நான்காம் வேற்றுமை உருபு பெற்றால் ———– என ஆகும்.
(அ) என்னை
(ஆ) என்னால்
(இ) எனக்கு
(ஈ) நின்னை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) எனக்கு
நான்+கு-எனக்கு (4-ஆம் வேற்றுமை உருபு).
நான்+ஐ-என்னை (2-ஆம் வேற்றுமை உருபு).
நான்+ஆல்-என்னால் (3-ஆம் வேற்றுமை உருபு).
நீ+ஐ-நின்னை (2-ஆம் வேற்றுமை உருபு)
89. பொருந்தாததை எழுதுக.
உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்
(அ) உலா
(ஆ) கோவை
(இ) பிள்ளைத்தமிழ்
(ஈ) பரணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பிள்ளைத்தமிழ்
“உ.வே.சா” பதிப்பிக்காத நூல் எது?” என்று வினா அமைந்திருக்க வேண்டும்.
பிள்ளைத் தமிழ் நூலை உ.வே.சா. பதிப்பிக்கவில்லை.
உ.வே.சா. அவர்கள் உலா நூல்கள் 9, கேவை நூல்கள் 6, பரணி நூல்கள் 2 ஆகியவற்றைப் பதிப்பித்துள்ளார்.
90. “சாமிநாதன்” என்று ஆசிரியரால் பெயரிடப்பட்டவர்
(அ) அம்பேத்கர்
(ஆ) காமராசர்
(இ) உ.வே.சா
(ஈ) அண்ணா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) உ.வே.சா
“உ.வே.சா. அவர்களின் இயற்பெயர் வேங்கடரத்தினம். அவருடைய ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் “சாமிநாதன்” என்ற பெயரை இவருக்கு வைத்தார்.
உ.வே.சா. உத்தமதானபுரம் வேங்கடரத்தினம் சாமிநாதன்