Tnpsc General Tamil Previous Question Paper 13
71. முருகனால் சிறையிலிடப்பட்டவன்
(அ) நான்முகன்
(ஆ) சிவன்
(இ) திருமால்
(ஈ) இந்திரன்
விளக்கம்:
(அ) நான்முகன்
அம்மானை (திருச்செந்திற்கலம்பகம்)
வீரன்நெடு வெள்வேல் வியன் செந்தில் எம்பெருமான்
பாரில்உயி ரெல்லாம் படைத்தனன் காண் அம்மானை,
பாரில் உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில்
ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை,
அறிந்து சிறை அயனுக் காக்கினன்காண் அம்மானை
– சுவாமிநாத தேசிகர்.
பொருள்: ஒளி பொருந்திய நெடிய வேலை ஏந்திய வீரனும் பெருமை பொருந்திய திருச்செந்தூரில் விளங்குபவனும் ஆகிய முருகப் பெருமான், உலகிலுள்ள உயிர்களை எல்லாம் படைத்தனன். உலகிலுள்ள உயிர்களை எல்லாம் படைத்தவனேயானாலும் அவன் நான்கு மறைகளையும் அறிவானோ? அவன், இவற்றையெல்லாம் அறிந்தே நான்முகனைச் சிறையிலிட்டனன்[/toggle]
72. திருக்குறள் ——- நூல்களுள் ஒன்று
(அ) பதினெண்கீழ்க்கணக்கு
(ஆ) பத்துப்பாட்டு
(இ) எட்டுத்தொகை
(ஈ) பக்தி நூல்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) பதினெண்கீழ்க்கணக்கு
73. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் உள்ளன?
(அ) 79
(ஆ) 99
(இ) 119
(ஈ) 9
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) 99
74. “மூவருலா” எந்த மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டது?
(அ) சேரர்
(ஆ) சோழர்
(இ) பாண்டியர்
(ஈ) பல்லவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சோழர்
சோழ மன்னர்களாகிய விக்கிரமச்சோழன், இரண்டாம் குலேத்துங்கச்சோழன், இரண்டாம் இராசராசசோழன் ஆகிய மூன்று அரசர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பட்ட நூல் “மூவருலா” ஆகும். இந்நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.
75. “வளன்” என்னும் பெயரால் அழைக்கப்பெறுபவர்
(அ) சூசை
(ஆ) பீட்டர்
(இ) டேவிட்
(ஈ) சேவியர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) சூசை
தேம்பாவணியின் காப்பியத் தலைவன் சூசை மாமுனிவர். யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் “வளன்” என்று தமிழ்ப்படுத்தியுள்ளார். வளங்களை வளரச் செய்பவன் என்னும் கருத்திற்றான் எபிரேய மொழியில் “சூசை” என்ற பெயர் வழங்குகிறது. அதன் நேரிய மொழி பெயர்ப்பாகவே “வளன்” என்ற பெயரை வீரமாமுனிவர் இட்டு வழங்கியுள்ளார்
76. நூலின் 97 வெண்பாவிலும் மனநோய் போக்கும் 5 கருத்துகள் கொண்டது
(அ) மலைபடுகடாம்
(ஆ) சிறுபஞ்சமூலம்
(இ) ஏலாதி
(ஈ) திரிகடுகம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம்:
இந்நூலை இயற்றியவர் காரியாசான். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகியவற்றின் வேர்கள் சேர்ந்து மருந்தாகி உடல் நோய் தீர்ப்பது போது, இந்நூலில் உள்ள 97 வெண்பாக்களிலும் அமைந்துள்ள ஐந்தைந்து அரிய கருத்துகள் மனிதர்களின் மனநோயைப் போக்குகின்றன.
77. களிற்றியானை, நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என 3 பகுதிகளை உடைய நூல்
(அ) புறநானூறு
(ஆ) அகநானூறு
(இ) பரிபாடல்
(ஈ) பதிற்றுப்பத்து
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) அகநானூறு
அகநானூறு
களிற்றியானை நிரை – 120 பாடல்கள்.
மணிமிடைப்பவளம்-180 பாடல்கள்.
நித்திலக்கோவை-100 பாடல்கள்.
78. “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று” என்று தலைவி தலைவன் மீதான நட்பை வியந்து பாடுவதாய் அமைந்த பாடலின் நூல்
(அ) நற்றிணை
(ஆ) ஐங்குறுநூறு
(இ) குறுந்தொகை
(ஈ) அகநானூறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குறுந்தொகை
குறுந்தொகை
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று’
நீரினும் ஆரள வின்றே சாரல்
கடுங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
– தேவகுலத்தார்.
பொருள்: மலைப்பகுதியிலுள்ள குறிஞ்சியின் கரிய கொம்புகளில் குறிஞ்சிப் பூக்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களிலிருந்து வண்டுகள் தேனைத் திரட்டுவதற்கு இடமாகிய நாட்டை உடைய தலைவனோடு “யான் கொண்ட நட்பானது நிலத்தை விடப் பெரியது; வானத்தை விட உயர்ந்தது; கடலை விட ஆழமானது” எனத் தலைவி கூறுகிறாள்.
79. “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” எனப் போற்றப்படுவது
(அ) தேம்பாவணி
(ஆ) இரட்சண்ய யாத்ரீகம்
(இ) இரட்சண்ய மனோகரம்
(ஈ) கிறித்துவின் அருள்வேட்டல்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) தேம்பாவணி
80. இயேசு பொருமானின் வளர்ப்புத் தந்தை யார்?
(அ) அந்தோணியார்
(ஆ) சூசை
(இ) தாவீது
(ஈ) பேதுரு
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) சூசை