Tnpsc General Tamil Previous Question Paper 13
51. “பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கின்றன” இத்தொடரானது எம்மொழி வகையைச் சார்ந்தது?
(அ) தனி மொழி
(ஆ) செம்மொழி
(இ) தொடர் மொழி
(ஈ) பொது மொழி
(இ) தொடர் மொழி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) தொடர் மொழி
52. பின்வரும் இலக்கணக்குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க. உரிச்சொற்றொடர்
(அ) நெடுநாவாய்
(ஆ) நனி கடிது
(இ) நன்னுதல்
(ஈ) நின்கேள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) நனி கடிது
நெடுநாவாய்-பண்புத்தொகை.
நனிகடிது-உரிச்சொல்.
நன்னுதல்-பண்புத்தொகை.
நின்கேள்-நான்காம் வேற்றுமைத்தொகை.
53. உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது – இது எவ்வகையானத் தொடர்?
(அ) தன்வினைத் தொடர்
(ஆ) பிறவினைத் தொடர்
(இ) செய்வினைத் தொடர்
(ஈ) செயப்பாட்டுவினைத் தொடர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) செயப்பாட்டுவினைத் தொடர்
54. சொற்களை இரண்டு முதல் ———— உறுப்புகளாகப் பகுப்பலாம்.
(அ) 3
(ஆ) 4
(இ) 5
(ஈ) 6
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) 6
சொற்களை இரண்டு முதல் ஆறு உறுப்புகளாகப் பிரிக்கலாம். அவையாவன: பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
55. ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தருவது
(அ) ஓரெழுத்து ஒரு மொழி
(ஆ) சொல்
(இ) கிளவி
(ஈ) மொழி
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) ஓரெழுத்து ஒரு மொழி
56. முதற் பொருளாவது
(அ) நிலமும் பொழுதும்
(ஆ) அகமும் புறமும்
(இ) உயிரும் மெய்யும்
(ஈ) திணையும் ஒழுக்கமும்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) நிலமும் பொழுதும்
முதற்பொருளாவது நிலமும் பொழுதும் ஆகும். கருப்பொருளாவது ஐந்து திணைகளுக்கும் உரிய தெய்வம், மக்கள், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில் ஆகியவையாகும்.
உரிப்பொருளாவது ஒவ்வொரு நிலத்திற்குமுரிய அக ஒழுக்கம் ஆகும்.
57. இலக்கணத்தில் பொருளாவது யாது?
(அ) செல்வம்
(ஆ) ஒழுக்க முறை
(இ) அடக்கம்
(ஈ) அறிவு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஒழுக்க முறை
இலக்கணத்தில் பொருளாவது ஒழுக்கமுறையாகும். அவை அக ஒழுக்கம், புற ஒழுக்கம் என இரண்டு வகைப்படும்.
58. தலைவன் – இச்சொல்லின் ஐகாரம் ——–மாத்திரை குறைந்து ஒலிக்கிறது
(அ) ஒன்றரை
(ஆ) ஒரு
(இ) அரை
(ஈ) இரண்டு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஒரு
“தலைவன்” – இச்சொல் இடையில் அமைந்த ஐகாரக்குறுக்கம் ஆகும். இதில் “ஐ” என்னும் எழுத்து தனக்குரிய 2 மாத்திரை அளவிலிருந்து 1 மாத்திரை அளவில் குறுகி ஒலித்தது
59. மதில்போர் பற்றிய புறத்திணைகளுக்குரிய புறப்பொருளைத் தேர்க
(அ) வட்கார்மேற் செல்வது, எதிரூன்றல்
(ஆ) நிரைகவர்தல், மீட்டல்
(இ) எயில்காத்தல், வளைத்தல்
(ஈ) அதிரப்பொருவது, செருவென்றது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) எயில்காத்தல், வளைத்தல்
உழிஞைத்திணை: பகைவர்களுடைய மதிலை வளைத்து போர் புரிதல் ஆகும்.
நொச்சித்திணை: பகைவர்கள் மதிலைக் கைப்பற்றாதவாறு பாதுகாத்தல் ஆகும்.
60. நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை – எவ்வகைச் சொற்றொடரைச் சார்ந்தது?
(அ) செய்தித் தொடர்
(ஆ) தனிநிலைத் தொடர்
(இ) கலவைத் தொடர்
(ஈ) தொடர்நிலைத் தொடர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கலவைத் தொடர்
கலவை வாக்கியம்: ஒரு தனிச் சொற்றொடர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது கலவை வாக்கியமாகும்.
எ.கா:நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை.
தொடர் வாக்கியம்: ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர் வாக்கியம்.
எ.கா:நேற்று புயல் வீசியது. அதனால் பள்ளிக்கு விடுமுறை.