Tnpsc General Tamil Previous Question Paper 12
71. பத்துப்பாட்டில் பாண்டிய நெடுஞ்செழியனை தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்கள் எவையெவை?
(அ) திருமுரகாற்றுப்படை மற்றும் மதுரைக்காஞ்சி
(ஆ) மலைபடுகடாம் மற்றும் பட்டினப்பாலை
(இ) நெடுநெல்வாடை மற்றும் மதுரைக்காஞ்சி
(ஈ) முல்லைப்பாட்டு மற்றும் குறிஞ்சிப்பாட்டு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) நெடுநெல்வாடை மற்றும் மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை: இந்நூலை இயற்றியவர் நக்கீரர். 188 அடிகளை உடையது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். மதுரைக்காஞ்சி: இந்நூலை இயற்றியவர் மாங்குடி மருதனார். 782 அடிகளை உடையது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
72. பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக:
(அ) உலா ஐந்துவகைப் பருவம்
(ஆ) கலம்பகம் பதினெட்டு உறுப்புகள்
(இ) பிள்ளைத்தமிழ் பத்துப் பருவங்கள்
(ஈ) பரணி ஐநூற்றி ஒன்பது தாழிசைகளைக் கொண்டது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) உலா ஐந்துவகைப் பருவம்
உலா-ஏழுவகைப் பருவங்கள். பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர, ஏழு வகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது “உலா” என்னும் சிற்றிலக்கியம் ஆகும். ஏழு வகைப் பருவங்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
73. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை தமிழாசிரியராக எவ்வூரில் பணியாற்றினார்?
(அ) தூத்துக்குடி
(ஆ) சாயர்புரம்
(இ) திருநெல்வேலி
(ஈ) நாகலாபுரம்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) சாயர்புரம்
74. மடப்பிடி யார்?
(அ) சீதை
(ஆ) பாஞ்சாலி
(இ) மாதவி
(ஈ) கண்ணகி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பாஞ்சாலி
பாஞ்சாலி சபதம் – விதுரனைத் தூதுவிடல் இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால் “கொம்பினை யொத்த மடப்பிடி யோடும் கூடியிங் கெய்தி விருந்து களிக்க நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதோர் நுந்தை” யெனவுரை செய்வாய் – பாரதியார். பொருள்: பாஞ்சாலியோடு பாண்டவரைத் தாம் விருந்துக்கு அழைத்த செய்தியை அவர்களிடம் கூறி, அழைத்து வருமாறு திருதாராட்டினன் தன் தம்பி விதுரனை பணித்தான்.
75. பொருள் தருக: சதுரங்கச்சேனை
(அ) யானைப்படை
(ஆ) குதிரைப்படை
(இ) தேர்ப்படை
(ஈ) நால்வகைப்படை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) நால்வகைப்படை
சதுர்-நான்கு. சேனை-படை. சதுரங்கச் சேனை-நால்வகைப்படை. நால்வகைப்படை-தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை.
76. “பெருமாள் திருமொழி”, “முகுந்தமாலை” – இந்நூல்கள் எழுதப்பட்ட மொழி.
(அ) தமிழ், வடமொழி
(ஆ) வடமொழி, ஆங்கிலம்
(இ) இலத்தீன், கிரீக்
(ஈ) தமிழ், இலத்தீன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) தமிழ், வடமொழி
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் குலசேகர ஆழ்வார். இவர் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் புலமை பெற்றிருந்தார். இவருடைய தமிழ்ப் பாசுரங்கள் “பெருமாள் திருமொழி” என வழங்கப்படுகின்றன. இப்பாசுரங்கன் நாலாயிரத்திவ்யப் பிரபந்தங்களுள் ஒன்றாக அமைந்துள்ளன. இவர் வடமொழியில் “முகுந்தமாலை” என்ற நூலினை இயற்றியுள்ளார்.
77. அப்பூதியடிகள் பிறந்த ஊர்
(அ) திருவழுந்தூர்
(ஆ) திருவாதவூர்
(இ) திங்களுர்
(ஈ) திருநாவலூர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) திங்களுர்
78. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக. ‘அடிகள் நீரே அருளுக’ என்றவர் யார்?
(அ) சீத்தலைச் சாத்தனார்
(ஆ) இளங்கோவடிகள்
(இ) திருத்தக்கத் தேவர்
(ஈ) நாதக்குத்தனார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) சீத்தலைச் சாத்தனார்
கண்ணகியின் வரலாற்றை சீத்தலைச் சாத்தனார் கூறக் கேட்ட இளங்கோவடிகள். “சிலப்பதிகாரம்” என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறினார். அதற்கு சீத்தலைச் சாத்தனார். “முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக” என்றார்.
79. “சூலை” என்பது
(அ) கண் நோய்
(ஆ) வயிற்று நோய்
(இ) இதய நோய்
(ஈ) கழுத்து நோய்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) வயிற்று நோய்
“சூலை” என்பது வயிற்று நோய். திருநாவுக்கரசர் சில காலம் “தருமசேனர்” என்ற பெயரில் சமண மதத்தைத் தழுவியிருந்தார். அவரை ஆட்கொள்ள நினைத்த இறைவன் (சிவபெருமான்) நாவுக்கரசருக்கு “சூலை” எனப்பட்ட வயிற்று நோயைக் கொடுத்தார். சூலை நோய் நீங்க தமக்கையாரின் அறிவுரைப்படி அதிகை வீரட்டானக் கோயிலுக்குச் சென்று
“கூற்றாயினவாறு விலக்கிலீர்” என்ற பதிகத்தைப் பாடி சிவபெருமானை வணங்கினார். பாமலையை செவிமடுத்த இறைவன் இவரின் சூலை நோயை நீக்கி “நாவுக்கரசு” என்ற பெயரை வழங்கினார். நாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.
80. துள்ளல் ஓசையைக் கொண்ட நூல் எது?
(அ) பரிபாடல்
(ஆ) கலித்தொகை
(இ) நற்றிணை
(ஈ) குறுந்தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கலித்தொகை
கலிப்பா துள்ளல் ஓசையுடையது. கலித்தொகை கலிப்பாவினால் ஆன நூலாகும்.