Tnpsc General Tamil Previous Question Paper 12
61. ஐந்தடி முதல் பன்னிரெண்டடி வரை வரும் பா
(அ) குறள் வெண்பா
(ஆ) சிந்தியல் வெண்பா
(இ) இன்னிசை வெண்பா
(ஈ) பஃறொடை வெண்பா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பஃறொடை வெண்பா
குறள் வெண்பா-இரண்டு அடிகள். சிந்தியல் வெண்பா-மூன்று அடிகள். இன்னிசை வெண்பா-நான்கு அடிகள். பஃறொடை வெண்பா-5 முதல் 12 அடிகள் வரை.
62. ஒருதலைக் காமம் என்பது
(அ) அன்பின் ஐந்திணை
(ஆ) பாடாண் திணை
(இ) கைக்கிளை
(ஈ) பெருந்திணை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கைக்கிளை
அன்பின் ஐந்திணை: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. பாடாண்திணை: ஒருவனுடைய புகழ், கல்வி, ஈகை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுதல். கைக்கிளை: ஒருதலைக் காமம். பெருந்திணை-பொருந்தாக் காமம்.
63. கீழ்வருவனவற்றுள் காலவாகு பெயரைக் கண்டறிக:
(அ) திசம்பர் பூ பூத்தது
(ஆ) இந்தியா வென்றது
(இ) வெள்ளை அடித்தான்
(ஈ) பொங்கல் உண்டான்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) திசம்பர் பூ பூத்தது
காலவாகு பெயர்: அவள் திசம்பர் சூடினாள். (திசம்பர் என்பது ஒருவகை மலரைக் குறிக்கிறது) இந்தியா வென்றது-இடவாகுபெயர் வெள்ளை அடித்தான்-பண்பாகு பெயர்; பொங்கல் உண்டான்-தொழிலாகு பெயர்.
64. உமறுப்புலவர் யாருடைய வேண்டுகோளின்படி சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார்?
(அ) அப்துல் காதிர் மரைக்காயர்
(ஆ) அபுல் காசிம்
(இ) காதிர் முகைதீன்
(ஈ) கடிகை முத்துப்புலவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) அப்துல் காதிர் மரைக்காயர்
இராமநாதபுரத்தின் மன்னர் சேதுபதியின் அமைச்சராக இருந்தவர் அப்துல்காதிர் என்ற சீதக்காதி மரைக்காயர். அவரின் வேண்டுகோளின்படி உமறுப்புலவர் சீறாப்புரணத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் நூல் முடிவடையும் முன்பாகவே சீதக்காதி மறைந்து விட்டார். அவருக்குப் பின் அபுல்காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது. கடிகை முத்துப் புலவர், உமறுப்புலவரின் தமிழாசிரியர் ஆவார்.
65. “ஒன்றுகொலாம்” என்னும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை எழுப்பியவர்.
(அ) ஞானசம்பந்தர்
(ஆ) திருநாவுக்கரசர்
(இ) சுந்தரர்
(ஈ) மாணிக்கவாசகர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருநாவுக்கரசர்
திங்களுர் அப்பூதியடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு அரவம் தீண்டி இறந்து விட்டான். “ஒன்றுகொலாம்” என்ற திருப்பதிகத்தைப் பாடி திருநாவுக்கரசர் இறந்த பிள்ளையை உயிர் பிழைக்க வைத்தார்.
66. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எனத் திரு.வி.க. கூறுவது.
(அ) கம்பராமாயணம்
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) பெரியபுராணம்
(ஈ) மகாபாரதம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) பெரியபுராணம்
67. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை – இவ்வடி இடம்பெற்ற நூல்
(அ) பரிபாடல்
(ஆ) நற்றிணை
(இ) மதுரைக்காஞ்சி
(ஈ) நெடுநல்வாடை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) பரிபாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவோடு புரையுஞ் சீரூர் பூவில் இதழகத் தனைய தெருவம் இதழகத்து அரும்பொருட் டனைத்தே அண்ணல் கோயில் – பரிபாடல். பொருள்: மதுரை மாநகரின் நடுவே அமைந்துள்ள அண்ணல் கோயிலும் அதனைச் சுற்றி முறையாக அமைந்திருந்த தெருக்களும் தாமரை மலரும் அதனைச் சுற்றியுள்ள அடுக்கடுக்கான இதழ்களையும் போலக் காட்சியளித்தன.
68. “காயும் வில்லினன், கல்திரள் தோளினான்” – எனப் போற்றப்படுபவன்
(அ) இராமன்
(ஆ) அர்ஜீனன்
(இ) குகன்
(ஈ) கர்ணன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குகன்
கம்பராமாயணம்-குகப்படலம் ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான் தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான் காயும் வில்லினன் கல்திரள் தோளினான் – கம்பர். பொருள்: போர்க்குணம் மிக்க குகனானவன் ஆயிரம் படகுகளுக்குத் தலைவன்; கங்கையாற்றுத் தோணித்துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்; பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்; மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
69. “மணநூல்” எனப் புகழப் பெற்றது
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) சீவகசிந்தாமணி
(இ) கம்பராமாயணம்
(ஈ) குண்டலகேசி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) சீவகசிந்தாமணி
70. மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையைப் பரிசாக வாங்கியவர் யார்?
(அ) பரஞ்சோதி முனிவர்
(ஆ) குமரகுரபரர்
(இ) நக்கீரர்
(ஈ) சீத்தலைச் சாத்தனார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) குமரகுரபரர்