Tnpsc General Tamil Previous Question Paper 10
41. “குறும்பொறை நாட்டையே கூத்தருக்குக் கொடுத்தவன்”
இச்சிறப்பிற்குரியவன்
(அ) பாரி
(ஆ) ஆய்
(இ) நள்ளி
(ஈ) ஓரி
விடை மற்றும் விளக்கம்
(ஈ) ஓரி
விளக்கம்:
முல்லைக் கொடி படர தன்னுடைய பெரிய தேரினை ஈந்தவன் பாரி.
ஒளிமிக்க நீலமணியையும் நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்க்குக் கொடுத்தவன் ஆய்.
பசிப்பிணியோடு வாடி வந்த இரவலர்களுக்கு அதிகமாகப் பொருள் வழங்கி அவர்களின் மனநிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி.
கூத்தாடுவோருக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்ந்தவன் ஓரி.
42. பெருநாரை, பெருங்குருகு முதலியவை ———- ஆகும்.
(அ) அறநூல்கள்
(ஆ) சிறுகாப்பியங்கள்
(இ) நாடக நூல்கள்
(ஈ) இசை நூல்கள்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) இசை நூல்கள்
விளக்கம்:
இசை நூல்கள்.
முதுநாரை (பெருநாரை) முதுகுருகு (பெருங்குருகு) களரியாவிரை, சிற்றிசை, பேரிசை, பரிபாடல், பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், தாளசமுத்திரம், இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை.
“இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும், பிறவும், தேவனிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிருந்தன” என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார பாயிரவுரையில் குறிப்பிடுகிறார்.
43. கண்ணதாசன் எழுதிய புதின நூல்களுள் “சாகித்ய அகாதெமி”
பரிசு பெற்ற நூல்.
(அ) ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
(ஆ) வேலங்குடித் திருவிழா
(இ) சிவப்புக்கல் மூக்குத்தி
(ஈ) சேரமான் காதலி
விடை மற்றும் விளக்கம்
(ஈ) சேரமான் காதலி
விளக்கம்:
கண்ணதாசன் எழுதிய “சேரமான் காதலி” என்ற புதினத்திற்கு 1980-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது
44. “ஆயம்”
உரிய பொருளைத் தேர்ந்தெடுத்து எழுது
(அ) தோழியர் கூட்டம்
(ஆ) சிறுமியர் கூட்டம்
(இ) மங்கையர் கூட்டம்
(ஈ) மக்கள் கூட்டம்
விடை மற்றும் விளக்கம்
(அ) தோழியர் கூட்டம்
45. படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்
(அ) ஈஸ்ட்மன்
(ஆ) எடிசன்
(இ) வாலட் டிஸ்னி
(ஈ) எட்வர்டு மைபிரிட்சு
விடை மற்றும் விளக்கம்
(அ) ஈஸ்ட்மன்
விளக்கம்:
ஈஸ்ட்மன்-படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்.
எடிசன்-ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர்.
எட்வர்டு மைபிரிட்சு-இயக்கப் படத்தைக் கண்டுபிடித்தவர்.
வால்ட் டிஸ்னி-கருத்துப்படத்தைக் கண்டுபிடித்தவர்.
46. “இரகசிய வழி”
– என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?
(அ) குற்றாலக் குறவஞ்சி
(ஆ) சீறாப்புராணம்
(இ) மனோன்மணீயம்
(ஈ) சீவகசிந்தாமணி
விடை மற்றும் விளக்கம்
(இ) மனோன்மணீயம்
விளக்கம்:
மனோன்மணீயம்
ஆசிரியர்-இராவ்பகதூர் பெ.சுந்தரம் பிள்ளை.
இந்நூல் பாண்டிய நாட்டு மன்னன் சீவகவழுதியின் மகள் மனோன்மணியின் வரலாற்றைக் கூறும் நாடக நூலாகும். இந்நாடகம் ஆங்கிலத்தில் லிட்டன்பிரபு என்பார் இயற்றியுள்ள “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற “இன்பியல்” முடிவைக் கொண்டதாகும்.
47. “இயேசு காவியம்”
– என்னும் நூலின் ஆசிரியர் பெயர் யாது?
(அ) வாணிதாசன்
(ஆ) கண்ணதாசன்
(இ) ஈரோடு தமிழன்பன்
(ஈ) மு.மேத்தா
விடை மற்றும் விளக்கம்
(ஆ) கண்ணதாசன்
48. நெய்தல் நிலத்துக்குப் பொருத்தமான ஊர்ப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) கோவில்பட்டி, காளிப்பட்டி
(ஆ) சிப்பிப்பாறை, மொடக்குறிச்சி
(இ) ஆத்தூர், தெங்கூர்
(ஈ) கீழக்கரை, பட்டினப்பாக்கம்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) கீழக்கரை, பட்டினப்பாக்கம்
விளக்கம்:
நெய்தல் நில ஊர்கள்.
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலப்பகுதியாகும்.
கடற்கரையில் உருவாகும் “நகரங்கள்” “பட்டினம்” எனப்பெயர் பெறும்.
எ.கா:காவிரிபூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம்.
கடற்கரைச் சிற்றூர்கள் “பாக்கம்” எனப்பெயர் பெறும்.
எ.கா: பட்டினப்பாக்கம், சேப்பாக்கம்.
பரதவர்கள் வாழ்ந்த ஊர்கள் “கரை” எனப்பெயர் பெறும்.
எ.கா:கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை, இக்காலத்தில் மீனவர்கள் வாழ்கின்ற ஊர்கள் “குப்பம்” எனப் பெயர் பெறும்.
எ.கா: நொச்சிக் குப்பம், மஞ்சக் குப்பம், மந்தாரக் குப்பம்
49. சீரான அகர வரிசையிலமைந்த சொல் வரிசையைச் சுட்டுக:
(அ) நோன்பு, நிலம், நீட்டம், நெருநல், நலம்
(ஆ) நீட்டம், நலம், நெருதல், நிலம், நோன்பு
(இ) நலம், நிலம், நீட்டம், நெருதல், நோன்பு
(ஈ) நலம், நெருதல், நிலம், நீட்டம், நோன்பு
விடை மற்றும் விளக்கம்
(இ) நலம், நிலம், நீட்டம், நெருதல், நோன்பு
50. பொருத்துக:
வரிசை ஒன்று வரிசை இரண்டு
அ. பாலடையும், நறுநெய்யும், தேனும் – 1. வினையெச்சங்கள்
ஆ. நல்முடி, நன்செய், புன்செய் – 2. தொழிற்பெயர்கள்
இ. காத்தல், படைத்தல், அழித்தல் – 3. எண்ணும்மை
ஈ. பாய்ந்து, செறிந்து, நிறைந்து – 4. பண்புத்தொகைகள்
அ ஆ இ ஈ
அ. 4 1 3 2
ஆ. 3 1 2 4
இ. 1 4 3 2
ஈ. 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
ஈ. 3 4 2 1
விளக்கம்:
பாலடையும், நறுநெய்யும், தேனும் – “உம்” விகுதி வெளிப்பட அமைந்ததால் இவை எண்ணும்மையாகும்.
நல்முடி, நன்செய், புன்செய் – “மை” விகுதி மறைந்து வந்ததால் இவை பண்புத் தொகைகளாகும்.
காத்தல், படைத்தல், அழித்தல் – “அல்” விகுதி பெற்று வந்ததால் இவை தொழிற்பெயர்களாகும்.
பாய்ந்து, செறிந்து, நிறைந்து – வினைமுற்றைத் தழுவி பொருள் கொடுப்பதால் இவை வினையெச்சங்களாகும்.