Tnpsc General Tamil Previous Question Paper 10
31. “கிறத்துவ சமயத்தின் கலைக் களஞ்சியம்” எனப்படும் நூல் எது?
(அ) விவிலியம்
(ஆ) இரட்சணிய யாத்திரிகம்
(இ) தேம்பாவணி
(ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) இரட்சணிய யாத்திரிகம்
விளக்கம்:
தேம்பாவணி: வீரமாமுனிவர் இயற்றிய பெருங்காப்பியமாகும்.
இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாராகிய சூசை மாமுனிவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு தேம்பாவணி அமைந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எனவே இந்நூல் “கிறித்துவ சமயத்தின் கலைக்க களஞ்சியம்” எனப்படுகிறது.
32. பொருத்தமில்லாதவற்றைத் தேர்ந்தெடு:
(அ) பக்கம்
(ஆ) வாழ்க்கை
(இ) மொத்தம்
(ஈ) புத்தகம்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) வாழ்க்கை
விளக்கம்:
பக்கம், மொத்தம், புத்தகம் ஆகியவை எண்ணிக்கையில் அடங்குவன. பார்க்க, தொட முடிந்த பொருட்களாகும். வாழ்க்கை எண்ணிக்கையில் அடங்காது. உணர்வுடன் சம்மந்தப்பட்ட வினைச் செயலாகும்.
33. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” எனக் கூறியவர்
(அ) தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
(ஆ) டாக்டர் அப்பாதுரையார்
(இ) பேரறிஞர் அண்ணா
(ஈ) டாக்டர்.மு.வரதராசனார்
விடை மற்றும் விளக்கம்
(இ) பேரறிஞர் அண்ணா
34. ஒளவையாரின் “மீதூண் விரும்பேல்” என்ற தொடருக்கு இணையான பழமொழியைத் தேர்ந்தெடு:
(அ) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
(ஆ) நிறை குடம் தளும்பாது
(இ) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
(ஈ) நொறுங்கத் தின்றால் நூறு வயது
விடை மற்றும் விளக்கம்
(இ) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
35. “சாதனைப் பூக்களை ஏந்து முன்னே” – இங்கு நல்ல செடி இளைப் பாறிடுமோ? – இது யாருடைய கூற்று?
(அ) சாலை. இளந்திரையன்
(ஆ) பாரதிதாசன்
(இ) தாரா பாரதி
(ஈ) கவிஞர் சுரதா
விடை மற்றும் விளக்கம்
(அ) சாலை. இளந்திரையன்
விளக்கம்:
“சாதனைப் பூக்களை ஏந்து முன்னே இங்கு நல்ல செடி இளைப்பாறிடுமோ? வேதனை யாவும் மறந்தது பார் செடி வெற்றி கொண்டேந்திய பூவினிலே – சாலை.இளந்திரையன். சாலை. இளந்திரையன் அவர்களின் “பூத்ததுமானுடம்” என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள “நிறக் நேரமில்லை” என்ற கவிதையில் மேற்கண்ட அடிகள் இடம் பெற்றுள்ளன.. பொருள்: செடிகள் பூப்பதற்கு முன் ஓய்வெடுப்பதில்லை. செடியின் வெற்றியானது பூவில் உள்ளதைப் போல, உன் வெற்றிகளால் துன்பங்கள் யாவும் ஓடிவிடும்.
36. கலித்தொகையில் கூறியுள்ளதைச் சரியாகக் கண்டறிந்து எழுதுக:
ஆற்றுதல் என்பது ——–
(அ) ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
(ஆ) புணர்ந்தாரைப் பிரியாமை
(இ) பாடு அறிந்து ஒழுகுதல்
(ஈ) பேதையார் சொல் நோன்றல்
விடை மற்றும் விளக்கம்
(அ) ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
விளக்கம்:
கலித்தொகை.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடுஅறிந்து
ஒழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை
– நல்லந்துவனார்.
மேற்கண்ட பாடல் கலித்தொகையில் “நெய்தற்கலி” பிரிவில் அமைந்துள்ளது. இப்பாடலின் ஆசிரியர் நல்லந்துவனார். கலித்தொகையை தொகுத்தவரும் இவரேயாவார். கலித்தொகையில் 33 பாடல்களை இவர் பாடியுள்ளார்.
பொருள்:
இல்லறவாழ்க்கையில், வறுமை உற்றவர்க்கு உதவுதலே, “ஆற்றுதல்” ஆகும். நட்புடன்
கூடினாரைப் பிரியாதிருத்தலே “போற்றுதல்” ஆகும்.
உலக உழுக்கம் (சான்றோர் வழி) அறிந்து ஒழுகுதலே பண்பாகும்.
தன் சுற்றத்தாரிடம் சினம் கொள்ளாதிருத்தலே அன்பாகும்.
37. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை
(அ) ஓவியக்கலை
(ஆ) இசைக்கலை
(இ) பேச்சுக்கலை
(ஈ) சிற்பக்கலை
விடை மற்றும் விளக்கம்
(இ) பேச்சுக்கலை
விளக்கம்:
ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக் கலையும் ஒன்று. இது நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலையாகும். இது மக்களுக்கு அறிவைப் புகட்டி அவர்களை உயர்ந்த இலட்சியப் பாதையில் அழைத்துச் செல்லும் வன்மையுடையதாகும்.
38. ஜி.யூ.போப் திருவாசகத்தை மொழிபெயர்த்த மொழி
(அ) ஆங்கிலம்
(ஆ) இலத்தீன்
(இ) ஈப்ரு
(ஈ) கிரேக்கம்
விடை மற்றும் விளக்கம்
(அ) ஆங்கிலம்
விளக்கம்:
ஜி.யூ.போப் அவர்களின் தமிழ்த்தொண்டு.
திருக்குறளையும் திருவாசகத்தையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் முதலிய நூல்களைப் பதிப்பித்தார்.
உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களைத் தொகுத்து விளக்கங்களுடன் “தமிழ் செய்யுட்கலம்பகம்” என்ற நூலை வெளியிட்டார்.
தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் ஆகிய அகராதி நூல்களை எழுதியுள்ளார். வினா-விடை முறையில் இரண்டு இலக்கண (தமிழ்) நூல்களை எழுதியுள்ளார்.
39. சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்
(அ) ரா.பி.சேதுப்பிள்ளை
(ஆ) பம்மல் சம்பந்த முதலியர்
(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(ஈ) பரிதிமாற் கலைஞர்
விடை மற்றும் விளக்கம்
(அ) ரா.பி.சேதுப்பிள்ளை
விளக்கம்:
ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர், எதுகை மோனையுடன் சுவைமிக்க இலக்கியச் சொற்பொழிவாற்றும் திறமையுடையவர். இதனால் “சொல்லின் செல்வர்” எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
40. அசுவினி முதலான இருபத்தேழு மீன்களுக்கு பண்டைத் தமிழர் ——- என்று பெயரிட்டனர்.
(அ) நாள்மீன்
(ஆ) கோள்மீன்
(இ) வெள்ளி
(ஈ) புதன்
விடை மற்றும் விளக்கம்
(அ) நாள்மீன்
விளக்கம்:
பண்டைத் தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்.
தானே ஒளிரக்கூடிய சூரியன் மற்றும் விண்மீன்கள் ஆகியவற்றிற்கு “நாள்மீன்” எனவும் சூரியனிடமிருந்து ஒளிபெற்று ஒளிரக்கூடியவற்றை “கோள்மீன்” என்றும் பண்டைத் தமிழர் பெயரிட்டனர்.