General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 1

Tnpsc General Tamil Previous Question Paper 1

Tnpsc General Tamil Previous Question Paper 1: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

உலக நிலைகளை அறியாதிருத்தல்

(அ) கீரியும் பாம்பும் போல

(ஆ) இலவு காத்த கிளி போல

(இ) கிணற்றுத் தவளை போல

(ஈ) அனலிடைப்பட்ட புழு போல

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கிணற்றுத் தவளை போல

கீரியும் பாம்பும் போல பகை
இலகு காத்த கிளி போல கிடைக்காத ஒன்றிற்காக காத்திருத்தல்
கிணற்றுத் தவளை போல உலக நிலைகளை அறியாதிருத்தல்
அனலிடைப்பட்ட புழு போல தாங்கவொண்ணா துன்பம் அடைதல்

2. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

பண்புத்தொகை:

(அ) நெடுந்தேர்

(ஆ) மலர்ச்சேவடி

(இ) செங்கோல்

(ஈ) கருங்குரங்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மலர்ச்சேவடி

மலர்ச்சேவடி – உவமைத்தொகை.

பண்புத்தொகை “மை” விகுதிபெற்று வரும்.

நெடுமை + தேர் – நெடுந்தேர்.

செம்மை + கோல் – செங்கோல்

கருமை + குரங்கு – கருங்குரங்கு

3. பெயர்ச்சொல்லின் வகையறிதல்:

“கரியன்” என்ற பெயர்சொல்லின் வகை அறிக.

(அ) சினைப்பெயர்

(ஆ) பொருட்பெயர்

(இ) பண்புப்பெயர்

(ஈ) தொழிற்பெயர்

விடை மற்றும் விளக்கம்

(இ) பண்புப்பெயர்

4. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள ‘நடலை’க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக:

(அ) Affection

(ஆ) Affliction

(இ) Attraction

(ஈ) Addition

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) Affliction

நடலை – துன்பம்

5. “ஆதிரையான்” என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக:

(அ) பண்புப்பெயர்

(ஆ) தொழிற்பெயர்

(இ) காலப்பெயர்

(ஈ) குணப்பெயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) காலப்பெயர்

பொன்னன் – பொன் + ன் + அன் (பொருட்பெயர்)

வெற்பன் – வெற்பு + அன் (இடப்பெயர்)

ஆதிரையன் – ஆதிரை + ய் + அன் (காலப்பெயர்)

கண்ணன் – கண் + அன் (சினைப்பெயர்)

கரியன் – கரி + அன் (பண்புப்பெயர்)

சொல்லன் – சொல் + அன் (தொழிற்பெயர்)

6. “இழுக்க லுடையழி ஊற்றுக்கோலற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” – அடிக்கோடிட்ட சொல்லுக்கு

இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க:

(அ) An assistant

(ஆ) Supporter

(இ) Staff

(ஈ) Friends

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) Supporter

வினாவில் கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள்: நல்லொழுக்கம் உடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் உதவும் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் நமக்கு எப்போதும் உதவியாக இருக்கும்.

ஊன்றுகோல் – Supporter

Assistant – உதவியாளர்

Staff – அலுவலர்

Friends – நண்பர்கள்

7. தன் வினை வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) இலக்கியா புத்தாடை அணிவித்தாள்

(ஆ) இலக்கியா புத்தாடை அணிந்தாள்

(இ) புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது

(ஈ) இலக்கியா புத்தாடை அணியாள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இலக்கியா புத்தாடை அணிந்தாள்

இலக்கியா புத்தாடை அணிந்தாள் தன்வினை
இலக்கியா புத்தாடை அணிவித்தாள் பிறவினை
புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது செயப்பாட்டு வினை
இலக்கியா புத்தாடை அணியாள் எதிர்மறை வாக்கியம்

8. திரு.விக.இயற்றிய “பொதுமை வேட்டல்” என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ——–

(அ) நானூற்று முப்பது

(ஆ) இருநூற்று ஒன்று

(இ) முந்நூற்று ஆறு

(ஈ) நானூற்று எழுபது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நானூற்று முப்பது

“பொதுமை வேட்டல்” என்ற நூலின் ஆசிரியர் திரு.வி.க. இந்நூலின் மைக்கருத்து நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தையே ஒரு குடும்பமாக கருதுவதாகும். இந்நூலின் 44 தலைப்புகளில் 430 பாக்கள் உள்ளன.

9. தழீஇ : இலக்கணக்குறிப்பு தருக:

(அ) செய்யுளிசை அளபெடை

(ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

(இ) இன்னிசையளபெடை

(ஈ) சொல்லிசை அளபெடை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சொல்லிசை அளபெடை

தழீஇ – சொல்லிசை அளபெடை. சொல்லிசை அளபெடை “இ” என்ற எழுத்தில் முடிந்திருக்கும். எ.கா: உரனசைஇ, நசைஇ, நிறீஇ

10. உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?

(அ) உலகு

(ஆ) உலவு

(இ) உளது

(ஈ) உளம்

விடை மற்றும் விளக்கம்

(அ) உலகு

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. ஒருமைப்பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(அ) அவன் கவிஞன் அல்லர்

(ஆ) அவன் கவிஞன் அன்று

(இ) அவன் கவிஞன் அல்லன்

(ஈ) அவன் அல்லன் கவிஞன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அவன் கவிஞன் அல்லன்

அன்று – ஒருமை அஃறிணை, அல்ல – பன்மை அஃறிணை, அல்லன் – ஒருமை உயர்திணை, அல்லர் – பன்மை உயர்திணை, “அவன் கவிஞன் அல்லன்” என்பதே சரியான தொடராகும்.

12. ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை ——–

(அ) துளசி

(ஆ) கீழாநெல்லி

(இ) தூதுவளை

(ஈ) கற்றாழை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தூதுவளை

தூதுவளையின் வேறுபெயர்கள்: தூதுளை, சிங்கவல்லி. இதனை வள்ளலார் “ஞானப்பச்சிலை” எனப்போற்றுகிறார்.

13. பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க:

வினைத்தொகை.

(அ) செந்நாய்

(ஆ) சூழ்கழல்

(இ) வெண்மதி

(ஈ) கண்ணோட்டம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சூழ்கழல்

சூழ்கழல் – வினைத்தொகை. சூழ்ந்த கழல், சூழ்கின்ற கழல், சூழும் கழல் என மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருவதால் இது வினைத்தொகையாகும். செந்நாய், வெண்மதி-பண்புத்தொகை. கண்ணோட்டம்-தொழிற்பெயர்.

14. தில்லையாடி வள்ளியம்மை – நாட்டில் பிறந்தார்

(அ) அமெரிக்கா

(ஆ) இத்தாலி

(இ) இந்தியா

(ஈ) தென்னாப்பிரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தென்னாப்பிரிக்கா

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898-ஆம் ஆண்டு முனுசாமி-மங்களம் இணையருக்கும் மகளாய்ப் பிறந்தார்.

15. “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?

(அ) அசதிக்கோவை

(ஆ) ஆசாரக்கோவை

(இ) திருக்கோவையார்

(ஈ) மும்மணிக் கோவை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) திருக்கோவையார்

“திருக்கோவையார்” என்ற நூலின் ஆசிரியர் மாணிக்கவாசகர். இவர் எழுதிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையில் அமைந்துள்ளன. இவர் தன்னை நாயகியாகக் பாவித்து, ‘திருவெம்பாவை” என்ற நூலை இயற்றினார். அதனால் மனம் மகிழ்ந்த இறைவனார் (சிவபெருமான்) மாணிக்கவாசகரிடம் “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று கூறினார். அதனால் இயற்றப்பட்டதுதான் “திருக்கோவையார்” என்னும் நூலாகும்.

16. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக:

(அ) வெண்பா

(ஆ) விருத்தப்பா

(இ) கலி விருத்தம்

(ஈ) கலித்தாழிசை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கலித்தாழிசை

17. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) களவழி நாற்பது – 1. நிலையாமை

(ஆ) முதுமொழிக் காஞ்சி – 2. வேளாண் வேதம்

(இ) நாலடியார் – 3. ஆறு மருந்து

(ஈ) ஏலாதி – 4. புறப்பொருள்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 3 1 2 4

(ஆ) 2 3 4 1

(இ) 1 3 4 2

(ஈ) 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 4 1 2 3

களவழி நாற்பது, போர்க்கள கொடுமைகளைப் பற்றி விளக்கும் புறப்பொருள் நூலாகும். முதுமொழிக்காஞ்சி வாழ்க்கையின் நிலையாமை பற்றிக் கூறுகிறது. நாலடியாரின் மற்றொரு பெயர் “வேளாண் வேதம்”. ஏலாதி கூறும் ஆறு மருந்துப் பொருள்களாவன. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு.

18. பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் – இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?

(அ) பிறவினை

(ஆ) தன்வினை

(இ) கலவை

(ஈ) செயப்பாட்டு வினை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தன்வினை

கற்றாள் – தன்வினை ; கற்பித்தாள் – பிறவினை

19. பொருந்தாத தொடரைக் கண்டறிக:

(அ) ஒறுத்தார் – பொறுத்தார்

(ஆ) அஞ்சாமை – துஞ்சாமை

(இ) அறிவுடையார் – அறிவிலார்

(ஈ) வையார் – வைப்பர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அஞ்சாமை – துஞ்சாமை

எதிர்ப்பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அஞ்சாமை x அஞ்சுவது என்பதே சரியான எதிர்ப்பதமாகும்.

20. காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாகக் கொண்டாடுகிறோம்?

(அ) கல்விப் பணி ஆற்றிய நாள்

(ஆ) கல்வி வளர்ச்சி நாள்

(இ) தொழில் முன்னேற்ற நாள்

(ஈ) தேசிய கல்வி நாள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கல்வி வளர்ச்சி நாள்

காமராஜரின் பிறந்தநாளான ஜீலை 15-ம் நாளை ஆண்டுதோறும் தேசிய கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

21. “நன்மை” என்பது

(அ) பொருட்பெயர்

(ஆ) சினைப்பெயர்

(இ) பண்புப்பெயர்

(ஈ) தொழிற்பெயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பண்புப்பெயர்

22. “நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?

(அ) கம்பர்

(ஆ) கபிலர்

(இ) இளங்கோவடிகள்

(ஈ) சீத்தலைச் சாத்தனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இளங்கோவடிகள்

கண்ணகியின் வரலாற்றை சீத்தலை சாத்தனார் மூலம் அறிந்த இளங்கோவடிகள், “சிலப்பதிகாரம்” என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறினார்

23. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) மு.வரதராஜன்

(இ) தேவநேயப் பாவாணர்

(ஈ) புதுமைப்பித்தன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேவநேயப் பாவாணர்

24. நிகண்டுகளில் மிகப் பழமையானது ——–

(அ) சேந்தன் திவாகரம்

(ஆ) சூடாமணி நிகண்டு

(இ) அகராதி

(ஈ) இதில் எதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சேந்தன் திவாகரம்

“திவாகர நிகண்டு” என்னும் நூல் கி.பி.8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர் முனிவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த “சேந்தன்” என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப்பட்டதால் இந்நூல் “சேந்தன் திவாகரம்” எனப்படுகிறது. தமிழில் இன்றுள்ள திகண்டுகளில் இதுவே காலத்தால் முந்தையது. “சூடாமணி நிகண்டு” 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டலபுருடர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.

25. பொருளறிந்து பொருத்துக:

அ. ஓ – 1. கோபம்

ஆ. மா – 2. சோலை

இ. கா – 3. நீர் தாங்கும் பலகை

ஈ. தீ – 4. திருமகள்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 2 4 1 3

(ஆ) 1 3 4 2

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 3 4 2 1

26. “முருகு பொருநராறு பாணிரண்டு முல்லை”

இத்தொடரில் “பாணிரண்டு” என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?

(அ) அகநானூறு, புறநானூறு

(ஆ) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு

(இ) திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை

(ஈ) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை

பத்துப்பாட்டு எவையெவை என விளங்கும் வெண்பா,

“முருகுபொருநராறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத தொடும் பத்து”

இப்பாடலில் “முருகு” என்பது திருமுருகாற்றுப்படை, பொருநராறு என்பது பொருநராற்று படை, பாணிரண்டு என்பவை சிறுபாணாற்றுப்படை மற்றும் பெரும்பாணாற்றுப்படை “கடாம்” என்பது மலைபடுகடாம் ஆகியவற்றை குறிக்கின்றன. மேலும் மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநெல்வாடை ஆகியவையும் பத்துப்பாட்டு நூல்களாகும்

27. அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

(அ) திருமூலர்

(ஆ) வீரமாமுனிவர்

(இ) திருநாவுக்கரசர்

(ஈ) கம்பர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திருமூலர்

28. பொருத்துக:

அ. Fanfare – 1. இணக்கமுள்ள

ஆ, Fangle – 2. வீட்டுப்புறா

இ. Fantail – 3. எக்காள முழக்கம்

ஈ. Facile – 4. நாகரிகம்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 3 4 2 1

(ஆ) 4 1 3 2

(இ) 2 3 4 1

(ஈ) 1 4 2 3

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 3 4 2 1

29. திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?

(அ) 1786

(ஆ) 1858

(இ) 1808

(ஈ) 1886

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1886

ஜி.யூ.போப் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886-இல் வெளியிட்டார்.

30. வருக-என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:

(அ) வினையெச்சம்

(ஆ) உருவகம்

(இ) உரிச்சொல் தொடர்

(ஈ) வியங்கோள் வினைமுற்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வியங்கோள் வினைமுற்று

க, இய, இயர் என்ற விகுதிகள் பெற்று வரும் சொற்கள் வியங்கோள் வினைமுற்றாகும்.

31. பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக:

(அ) கலம்பகம்-பதினெட்டு உறுப்புகள்

(ஆ) சிற்றிலக்கியங்கள்-தொண்ணூற்றாறு

(இ) பிள்ளைத்தமிழ்-பத்துப்பருவங்கள்

(ஈ) பரணி-100 தாழிசைகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பரணி-100 தாழிசைகள்

இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணி இலக்கியமாகும்.

32. பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

(அ) நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்

(ஆ) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

(இ) பெண்களே சமூகத்தின் கண்கள்

(ஈ) சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

கூற்று கூறியவர்

நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன் திரு.வி.க

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே இராமலிங்க அடிகளார்

பெண்களே சமூகத்தின் கண்கள் ஈ.வெ.ரா

சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம் அம்பேத்கர்

33. பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக:

(அ) மார்பு

(ஆ) வரகு

(இ) மடு

(ஈ) மாசு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மாசு

மார்பு, வரகு, மாசு-குற்றியலுகரங்கள். மடு-முற்றியலுகரம்

34. சித்துகளின் எண்ணிக்கை

(அ) பன்னிரண்டு

(ஆ) பதினெட்டு

(இ) பத்து

(ஈ) எட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) எட்டு

சித்துகளின் எண்ணிக்கை 8.

அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்

மகிமா – மலையைப் போல் பெரிய தேகத்தை அடைதல்

இலகிமா -காற்றைப்போல் இலேசாக மாறுதல்

கரிமா- மலைகளாலும் காற்றாலும் அசைக்க முடியாத அளவு கனமாக இருத்தல்

பிராப்தி – மனத்தினால் நினைத்த யாவற்றையும் அடைதல்

பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்

ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்துதல்

வசித்துவம் – அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

35. அடிவரையறை அறிந்து சரியான விடையைக் குறிப்பிடுக:

(1) 3-6 (2) 4-8 (3) 9-12 (4) 13-31

(அ) ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு

(ஆ) அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு

(இ) குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு

(ஈ) நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு

ஐங்குறுநூறு-3-6 அடி. குறுந்தொகை- 4-8 அடி. நற்றிணை- 9-12 அடி. அகநானூறு- 13-31 அடி

36. தன்வினையைத் தேர்ந்து எழுதுக:

(அ) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை

(ஆ) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்

(இ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்

(ஈ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்

அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை – எதிர்மறை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார் – பிறவினை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்றார் – தன்வினை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா? – வினா வாக்கியம்

37. பொருத்துக

பட்டியல் I – பட்டியல் II

அ. பேதையர் நட்பு – 1. உடுக்கை இழந்தகை

ஆ. பண்புடையார் தொடர்பு – 2. வளர்பிறை

இ. அறிவுடையார் நட்பு – 3. நவில் தோறும்

ஈ. இடுக்கண் களையும் நட்பு – 4. தேய்பிறை

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 4 2 1

(இ) 4 3 1 2

(ஈ) 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 4 3 2 1

பேதையார் நட்பு தேய்பிறை போல் தேய்ந்து போகும் தன்மையுடையது. அறிவுடையார் நட்பு வளர்பிறை போல் வளரும் தன்மையுடையது. பண்புடையார் நட்பு நூலின் நற்பொருள் கற்க கற்க இன்பம் தருவதைப் போன்றது. உடை நெகிழ்ந்தவனது கை உடனே உதவி மானத்தைக் காப்பது போல நண்பனுக்கு துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் சிறந்த நட்பு.

38. “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய தூய

நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப”

இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பற்றியவை எவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?

(அ) அன்பும் பண்பும்

(ஆ) அறிவும் ஆற்றலும்

(இ) அறனும் மறனும்

(ஈ) கற்பும் அருளும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கற்பும் அருளும்

39. “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?

(அ) தாவீது

(ஆ) கோலியாத்து

(இ) சூசையப்பர்

(ஈ) சவுல் மன்னன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சூசையப்பர்

தேம்பாவணியில் “வளன்” என்று குறிப்பிடப்படுபவர் சூசையப்பர் ஆவார். இந்நூலை இயற்றியவர் வீரமாமுனிவர். இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது இந்நூல், யோசோப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் “வளன்” என்று தமிழ்ப்படுத்தியுள்ளார்.

40. கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்:

(அ) ஆழி, அம்பி, ஆர்கலி

(ஆ) பௌவம், முந்நீர், பரிசல்

(இ) ஆழி, ஆர்கலி, பௌவம்

(ஈ) வாரணம், பரவை, புணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆழி, ஆர்கலி, பௌவம்

கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை. புணரி, அம்பி, பரிசல், புணை-படகு.

41. பொருத்தமான விடையைக் கண்டறி:

“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள்

(அ) பாட்டும் தொகையும்

(ஆ) சிலம்பும் மேகலையும்

(இ) இராமாயணமும் குறளும்

(ஈ) பாரதமும் இராமாயணமும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இராமாயணமும் குறளும்

தமிழுக்குக் கதி என்று போற்றப்படும் நூல்கள்: க-கம்பராமாயணம், தி-திருக்குறள். மேற்கண்ட கூற்றினைக் கூறியவர் செல்வ கேசவராய முதலியார் ஆவார்.

42. பொருத்துக:

பட்டியல்I பட்டியல் II

(அ) கண் வனப்பு – 1. செல்லாமை

(ஆ) எண் வனப்பு – 2. இத்துணையாம்

(இ) பண் வனப்பு – 3. கண்ணோட்டம்

(ஈ) கால் வனப்பு – 4. கேட்டார் நன்றென்றல்

குறியீடு:

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 3 1 2 4

(இ) 1 2 4 3

(ஈ) 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 3 2 4 1

சிறுபஞ்சமூலம்: கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை

எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்

கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு

வாட்டான்நன் றென்றல் வனப்பு. – காரியாசான்

43. ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்

(அ) அன்பு காட்டுதல்

(ஆ) ஆறுதல் கூறுதல்

(இ) வழிகாட்டுதல்

(ஈ) ஆதரவு தருதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வழிகாட்டுதல்

ஆற்றுப்படுத்துதல்-வழிகாட்டுதல். பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைப்படுகடாம்), ஆகிய நூல்கள் மன்னரிடம் பரிசில் பெற்ற ஒருவர் மற்றொருவரை மன்னரிடம் ஆற்றுப் படுத்துவதாக (வழிகாட்டுவதாக) அமைந்துள்ளன.

44. ஐஞ்சிறுகாப்பியம்-இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.

(அ) உதயண குமார காவியம்

(ஆ) இராவண காவியம்

(இ) நாக குமார காவியம்

(ஈ) யசோதர காவியம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இராவண காவியம்

ஐஞ்சிறுகாப்பியங்கள்: சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்.

45. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) புள் – 1. விரைவு

(ஆ) குலவு – 2. கலப்பை

(இ) மேழி – 3. அன்னம்

(ஈ) ஒல்லை – 4. விளங்கும்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 2 4 1 3

(ஆ) 4 1 2 3

(இ) 3 4 2 1

(ஈ) 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

46 பொருந்தாத இணையைக் கண்டறிய:

(அ) Mishap–விபத்து

(ஆ) Miserable-துக்ககரமான

(இ) Mislay-தவறான சொல்

(ஈ) Misdeed-கெட்டசெயல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) Mislay-தவறான சொல்

Mislay- தவறான இடத்தில் வைத்தல்

47. “வாழ்த்துவோம்” என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக:

(அ) வாழ்

(ஆ) வாழ்த்துதல்

(இ) வாழ்த்து

(ஈ) வாழ்த்தும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) வாழ்

வாழ்-வேர்ச்சொல். வாழ்த்துதல்-தொழிற் பெயர். வாழ்த்திய-பெயரெச்சம். வாழ்த்தி-வினையெச்சம்.

48. பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு:

கழை களை

(அ) கரும்பு அழகு

(ஆ) மூங்கில் காந்தி

(இ) வேய் சீலை

(ஈ) கழி அகற்று

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வேய் சீலை

49. சரியான பொருள் தருக: “இந்து”

(அ) நிலவு

(ஆ) துன்பம்

(இ) படகு

(ஈ) தலைவன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) நிலவு

50. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து” எனக் கூறியவர்

(அ) காந்தியடிகள்

(ஆ) பேரறிஞர் அண்ணா

(இ) மு.வரதராசனார்

(ஈ) பெரியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மு.வரதராசனார்

51. “மயில்” உரிய மரபுச் சொல்லை எழுதுக:

(அ) கரையும்

(ஆ) பிளிறும்

(இ) அலறும்

(ஈ) அகவும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) அகவும்

காகம்-கரையும், யானை-பிளிறும், ஆந்தை-அலறும், மயில்-அகவும்

52. “வந்தான்” என்னும் வினைமுற்று —– என வினையாலணையும் பெயராய் வரும்

(அ) வருவான்

(ஆ) வாரான்

(இ) வந்தவன்

(ஈ) வந்த

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வந்தவன்

வருவான்-எதிர்கால வினைமுற்று. வாரான்-எதிர்மறை வினைமுற்று. வந்தவன்-வினையாலணையும் பெயர். வந்த–பெயரெச்சம்

53. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் —- முடிவது சிறப்பு

(அ) ஆகாரத்தில்

(ஆ) ஏகாரத்தில்

(இ) ஓகாரத்தில்

(ஈ) ஈகாரத்தில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஏகாரத்தில்

ஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு. எனினும் ஓ, ஈ, ஆய், என், ஐ ஆகிய ஓசைகளிலும் முடியும்.

54.. “தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்”

கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

(அ) எதுகை மட்டும் வந்துள்ளது

(ஆ) மோனை மட்டும் வந்துள்ளது

(இ) எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன

(ஈ) எதுகையும், மோனையும் வந்துள்ளன

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மோனை மட்டும் வந்துள்ளது

55. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

(அ) தரங்கம், தையல், திட்பம், தோடு

(ஆ) தையல், தோடு, திட்பம், தரங்கம்

(இ) தரங்கம், திட்பம், தையல், தோடு

(ஈ) தரங்கம், தையல், தோடு, திட்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தரங்கம், திட்பம், தையல், தோடு

56. பொருத்துக:

புலவர் நூல்

(அ) உமறுப்புலவர் – 1. தொன்னூல் விளக்கம்

(ஆ) கம்பர் – 2. நரிவிருத்தம்

(இ) திருத்தக்கதேவர் – 3. சிலை எழுபது

(ஈ) வீரமாமுனிவர் – 4. முதுமொழிமாலை

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 4 2 3 1

(ஆ) 4 3 2 1

(இ) 3 1 4 2

(ஈ) 2 4 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 4 3 2 1

57. “உறுமிடத் துதவா உவர்நிலம்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

(அ) புறநானூறு

(ஆ) அகநானூறு

(இ) ஐங்குறுநூறு

(ஈ) திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புறநானூறு

புறநானூறு

அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்

உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்

வரையா மரபின் மாரி போலக்

கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுத லல்லது

படைமடம் படான்பிறர் படைமயக் குறினே. – பரணர். மேற்கண்ட பாடல் வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் குறுநில மன்னனை பரணர் புகழ்ந்து பாடியதாகும்

58. திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?

(அ) தேசபக்தன்

(ஆ) தென்றல்

(இ) இந்தியா

(ஈ) சுதேசமித்திரன்

விடை மற்றும் விளக்கம்

(அ) தேசபக்தன்

விளக்கம்:

திரு.வி.க.தேசபக்தன் என்ற பத்திரிகையில் 2 ½ ஆண்டுகள் ஆசியரியராகப் பணிபுரிந்தார். பின்னா திராவிடன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

59. “பொறு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரரைத் தேர்ந்தெடு,

(அ) பொறுத்தான்

(ஆ) பொறுத்து

(இ) பொறுத்தல்

(ஈ)பொறுத்தவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ)பொறுத்தவர்

பொறு-வேர்ச்சொல். பொறுத்தான்-வினைமுற்று. பொறுத்து-வினையெச்சம். பொறுத்தல்-தொழிற்பெயர். பொறுத்தவர்-வினையாலணையும் பெயர்.

60. “அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு” எனக் கூறியவர் யார்?

(அ) இராமலிங்க அடிகள்

(ஆ) தாயுமானவர்

(இ) ஆறுமுக நாவலர்

(ஈ) குமரகுருபரர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தாயுமானவர் 

61. மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து – இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.

(அ) அடி மோனை

(ஆ) அடி எதுகை

(இ) அடி இயைபு

(ஈ) சீர் மோனை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அடி மோனை

62. அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?

(அ) 1927

(ஆ) 1936

(இ) 1895

(ஈ) 1946

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1946

1946-ஆம் ஆண்டு மும்பையில் அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தைத் தொடங்கினார்.

63. “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக” – எனப் பாடியவர்

(அ) வள்ளலார்

(ஆ) பாரதியார்

(இ) பெருந்தேவனார்

(ஈ) பாரதிதாசனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) வள்ளலார்

64. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?

(அ) வாக்குரிமை

(ஆ) பேச்சுரிமை

(இ) சொத்துரிமை

(ஈ) எழுத்துரிமை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சொத்துரிமை

65. திரு.விக.பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ———– என்று அழைக்கப்படுகிறது

(அ) பல்லவபுரம்

(ஆ) இலட்சுமிபுரம்

(இ) தண்டலம்

(ஈ) இராமவரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தண்டலம்

66. கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ——-

(அ) தில்லையாடி வள்ளியம்மை

(ஆ) வேலுநாச்சியார்

(இ) இராணி மங்கம்மாள்

(ஈ) ஜான்சி ராணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இராணி மங்கம்மாள்

67. “உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்” – எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

(அ) கந்தபுராணம்

(ஆ) திருமந்திரம்

(இ) பெரியபுராணம்

(ஈ) திருவிளையாடற்புராணம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பெரியபுராணம்

பெரிய புராணத்தின் முதல் செய்யுள்:

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன்; அம்பலத்து ஆடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவோம்” – சேக்கிழார்

68. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்

(அ) வீண், வீழ்ச்சி, வீடு, வீதி

(ஆ) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி

(இ) வீழ்ச்சி, வீண், வீதி, வீடு

(ஈ) வீழ்ச்சி, வீடு, வீதி, வீண்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி

69. எடு – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக:

(அ) எடுத்த

(ஆ) எடுத்தல்

(இ) எடுத்து

(ஈ) எடுத்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) எடுத்து

எடு-வேர்ச்சொல். எடுத்த-பெயரெச்சம். எடுத்தல்-தொழிற்பெயர். எடுத்து-வினையெச்சம். எடுத்தான்-வினைமுற்று

70. “ஞால்” என்பதற்கு ———- என்பது பொருள்

(அ) தொங்குதல்

(ஆ) ஞாலம்

(இ) தொடங்குதல்

(ஈ) வாழுதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) தொங்குதல்

“ஞால்” என்ற சொல் “தொங்குதல்” என்ற பொருளில் வருவதால், எந்தப் பற்றுக்கோடுமின்றி அண்டவெளியில் தொங்குகின்ற உலகத்திற்கு “ஞாலம்” என்றும் தமிழர்கள் பெயரிட்டனர்.

71. “வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” – பாடியவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) சுரதா

(இ) தாரா பாரதி

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பாரதிதாசன்

72. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:

“அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்”

(அ) எதனால் ஐவரானார்கள்?

(ஆ) ஐவர் யார்?

(இ) ஐந்தாவதாக வந்தவன் யார்?

(ஈ) யாரிடம் கூறினான்?

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) எதனால் ஐவரானார்கள்?

73. தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?

(அ) வேதநாயகம் பிள்ளை

(ஆ) வீரமாமுனிவர்

(இ) H.A.கிருஷ்ணப்பிள்ளை

(ஈ) உ.வே.சாமிநாதையர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வீரமாமுனிவர்

முற்காலத்தில் எகர, ஓகர குற்றெழுத்துகள் வேறுபாடின்றிக் காணப்பட்டன. nf;> ng;-என்பது குற்றெழுத்துகள். கெ,பெ-என்று புள்ளியில்லாத எழுத்துகள் நெடில் எழுத்துகள். வீரமாமுனிவர் கெ,பெ-குறில், கே,பெ-நெடில் என எழுதும் முறையைக் கொண்டு வந்தார்.

74. “இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்” பாடவல்ல ஆசுகவி யார்?

(அ) காளமேகப்புலவர்

(ஆ) பாரதியார்

(இ) இளஞ்சூரியர்

(ஈ) முது சூரியர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) காளமேகப்புலவர்

ஆசுகவி என்பவர் “பாடு” என்று கூறியவுடன் பாடுபவர்.

75. தவறான கூற்றைத் தேர்வு செய்க:

(அ) “மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்”-ஆண்டாள்

(ஆ) “வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்”-குலசேகர ஆழ்வார்

(இ) “கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே”-எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

(ஈ) “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி”-மாணிக்கவாசகர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) “கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே”-எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

“கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே”-உமறுப்புலவர் (சீறாப்புரணம்)

76. பொருத்துக:

(அ) ஊ – 1. தலைவன்

(ஆ) ஐ – 2. ஊன்

(இ) நொ- 3. கடவுள்

(ஈ) தே – 4. துன்புறு

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 1 4 3 2

(ஆ) 2 1 4 3

(இ) 4 3 2 1

(ஈ) 3 1 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 2 1 4 3

77. பொருத்துக:

(அ) சிலப்பதிகாரம் – 1.சீர்திருத்தக் காப்பியம்

(ஆ) மணிமேகலை – 2. சொற்போர் காப்பியம்

(இ) சீவகசிந்தாமணி – 3. குடிமக்கள் காப்பியம்

(ஈ) குண்டலகேசி – 4. வருணனைக் காப்பியம்

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 3 1 4 2

(ஆ) 3 2 4 1

(இ) 2 1 3 4

(ஈ) 4 3 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 1 4 2

78. சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

(அ) காசினிக்கீரை

(ஆ) வல்லாரைக் கீரை

(இ) பசலைக்கீரை

(ஈ) அகத்திக் கீரை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வல்லாரைக் கீரை

79. தமிழ் படித்தால் எது பெருகும்?

(அ) புதுமை

(ஆ) திறம்

(இ) அறம்

(ஈ) புறம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அறம்

80. பொருத்துக:

(அ) Camphore – 1. பொய்க்கதை

(ஆ) Chide – 2. கலவரம்

(இ) Chaos – 3. சலசலப்பு

(ஈ) Canard – 4. கற்பூரம்

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 1 4 2 3

(ஆ) 3 1 4 2

(இ) 2 4 1 3

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 4 3 2 1

81. நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப்பெற்ற காப்பியம் எது?

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) பாஞ்சாலி சபதம்

(இ) மனோன்மணீயம்

(ஈ) மணிமேகலை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மனோன்மணீயம்

82. “மருகி” என்பது யாரைக் குறிக்கும்?

(அ) மருமகள்

(ஆ) மகள்

(இ) கொழுந்தி

(ஈ) மாமியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) மருமகள்

83. பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?

(அ) கண்ணன் பாட்டு

(ஆ) குயில் பாட்டு

(இ) பாப்பா பாட்டு

(ஈ) பாஞ்சாலி சபதம்

விடை மற்றும் விளக்கம்

விடை : (ஆ) குயில் பாட்டு

84. “புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றப்பட்டவர்

(அ) இராமலிங்க அடிகளார்

(ஆ) தாயுமானவர்

(இ) திரு.வி.க.

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளாரை “புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றியவர் பாரதியார்.

85. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) அன்பிலார் – 1. ஆர்வமுடைமை

(ஆ) அன்புடையார் – 2. உயிர்நிலை

(இ) அன்பு ஈனும் – 3. என்பும் உரியர் பிறர்க்கு

(ஈ) அன்பின் வழியது – 4. எல்லாம் தமக்குரியர்

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 2 3 4 1

(ஆ) 4 3 1 2

(இ) 1 4 2 3

(ஈ) 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 4 3 1 2

86. கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை

(அ) 100

(ஆ) 80

(இ) 96

(ஈ) 108

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 96

கம்பராமாயணத்தின் கம்பர் 96 ஓசை வகைகளைக் கையாண்டுள்ளார். “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணாற்றாறே’ என்ற கணக்கீடு உள்ளது.

87. “பண்ணொடு தமிழொப்பாய்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

(அ) திருவாசகம்

(ஆ) தேவாரம்

(இ) திருக்கோவையார்

(ஈ) திருமந்திரம்

விடை மற்றும் விளக்கம்

விடை : (ஆ) தேவாரம்

88. பொருந்தாத தொடரைக் கண்டறி:

(அ) அடக்கம் அமரருள் உய்க்கும்

(ஆ) கற்க கசடற

(இ) தீதும் நன்றும் பிறர்தர வாரா

(ஈ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஏனைய மூன்றும் திருவள்ளுவரின் கூற்றுகளாகும்.

புறநானூறு – 192

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா – கணியன் பூங்குன்றனார்.

89. பொருத்துக:

கூற்று கூறியவர்

(அ) தேரா மன்னா செப்புவது உடையேன் 1. மணிமேகலை

(ஆ) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2. கோவலன்

(இ) சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்குக 3. கண்ணகி

(ஈ) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4. ஆதிரை

குறியீடுகள்:

(ஆ) (ஆ) (இ) (ஈ)

(அ) 3 4 1 2

(ஆ) 3 4 2 1

(இ) 4 3 2 1

(ஈ) 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 4 1 2

90. 63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது?

(அ) கந்தபுராணம்

(ஆ) திருவிளையாடற்புராணம்

(இ) பெரியபுராணம்

(ஈ) தணிகை புராணம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பெரியபுராணம்

91. பொருத்தமான பழமொழியைக் கண்டறி:

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

(அ) ஞாயிறைக் கைமறைப்பார் இல்

(ஆ) முள்ளினால் முள்களையும் ஆறு

(இ) பாம்பு அறியும் பாம்பின் கால்

(ஈ) ஆற்று உணா வேண்டுவது இல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாம்பு அறியும் பாம்பின் கால்

92. “செழுங்கனித் தீஞ்சுவை” என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?

(அ) செழுமை + கனி + தீஞ்சுவை

(ஆ) செழும் + கனி + தீஞ்சுவை

(இ) செழும் + கனி + தீம் + சுவை

(ஈ) செழுமை + கனி + தீம் + சுவை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) செழுமை + கனி + தீம் + சுவை

செழுமை + கனி + தீம் + சுவை. செழுமை + கனி – பண்புப்பெயர் புணர்ச்சி. “ஈறுபோதல்” விதிப்படி மை விகுதி கெட்டு செழு + கனி என்றானது. “இனம் மிகல்” விதிப்படி வருமொழியின் முதலெழுத்திற்கு இனமான ‘ங்’ தோன்றி “செழுங்கனி” என்றானது. தீம் + சுவை – மெய்யீற்றுப் புணர்ச்சி. “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி வருமொழி முதலில் வந்த வல்லினத்திற்கு (சு) இனமான ஞகரமாகத் திரிந்து “தீஞ்சுவை” என்றானது.

93. “முடுகினன்” என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?

(அ) செலுத்தினான்

(ஆ) நிறுத்தினான்

(இ) வளைத்தான்

(ஈ) முரித்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நிறுத்தினான்

முடுகினான் என்பதற்கு “செலுத்தினான்” என்பது பொருளாகும். எனவே “நிறுத்தினான்” என்பது எதிர்ச்சொல்லாகும்.

94. “வையக மெல்லா மெமதென் றெழுதுமே” என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?

(அ) சேரன்

(ஆ) பல்லவன்

(இ) சோழன்

(ஈ) பாண்டியன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பாண்டியன்

“முத்தொள்ளாயிரம்” என்ற நூல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி புகழ்ந்து பாடுவதாகும்.

பாண்டிய மன்னனின் சிறப்பு: “நெருங்கி அமைந்த இலை போன்ற வடிவிலான வேலையுடைய பாண்டிய மன்னனின் யானையானது பகை மன்னரின் அகன்ற மார்பினை ஓலையாகக் கொண்டு தன் கூரிய தந்தத்தினை எழுத்தாணியாக்கி, “செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்கே உரியது” என எழுதியது”

95. சரியானவற்றைக் காண்க:

1. நீ + ஐ – நின்னை.

2. நீ + அது – நினது

3. நீ + ஆல் – நீயால்

4. நீ + கு – நீக்கு

(அ) 2, 3-சரி

(ஆ) 1, 2-சரி

(இ) 3,4-சரி

(ஈ) நான்கும் சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 1, 2-சரி

நீ + ஐ – நின்னை, உன்னை. நீ +அது – நினது, உனது. நீ+ஆல் – நின்னால், உன்னால். நீ+கு – நினக்கு, உனக்கு

96. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்து எழுதுக:

“கொக்கொக்க கூம்பும் பருவத்து”

(அ) காத்திருத்தல்

(ஆ) வெறுத்திருத்தல்

(இ) அறியாதிருத்தல்

(ஈ) மறந்திருத்தல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) காத்திருத்தல்

97. சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக:

(அ) ஊரன்

(ஆ) மூக்கன்

(இ) வறியன்

(ஈ) கடையன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மூக்கன்

98. மனக்குகை – இலக்கணக் குறிப்பு எழுதுக:

(அ) வினைத்தொகை

(ஆ) உவமைத்தொகை

(இ) உருவகம்

(ஈ) உம்மைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உருவகம்

உருவகம்: உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடின்றி உவமையினையே பொருளாகக் கூறுவது உருவகம் ஆகும். (எ.கா) இன்ப வெள்ளம், அடிமலர், மனக்குகை

99. சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற் பரிவகற்று “உறுவேனில்” – இலக்கணம் தேர்ந்து எழுதுக:

(அ) வினைத்தொகை

(ஆ) அன்மொழித்தொகை

(இ) தொழில் பெயர்

ஈ) உரிச்சொல் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

ஈ) உரிச்சொல் தொடர்

சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா போன்றவை உரிச்சொற்களாகும். உறுவேனிற் – உரிச்சொல் தொடர்

100. கீழ்க்காணும் தொடர்களில் எத்தொடர் சரியானது?

(அ) சன்மார்க்க கவி இராமலிங்க அடிகளார்

(ஆ) சிலம்புச் செல்வர் இளங்கோவடிகள்

(இ) இசைக்குயில் சரோஜினி நாயுடு

(ஈ) கவிக்கோ முடியரசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இசைக்குயில் சரோஜினி நாயுடு

புதுநெறி கண்ட புலவர், வள்ளலார்-இராமலிங்க அடிகளார். சிலம்புச் செல்வர்-ம.பொ.சிவஞானம். இசைக்குயில்-சரோஜினி நாயுடு. கவிக்கோ-அப்துல் ரகுமான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin