Tnpsc General Tamil Model Test 5
Tnpsc General Tamil Model Test 5
Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க
92 படலங்கள், 5027 பாடல்கள் | |
12 சருக்கங்கள், 2330 பாடல்கள் | |
5 சருக்கங்கள், 412 பாடல்கள் | |
10 சருக்கங்கள், 894 பாடல்கள் |
Question 2 |
கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக :
- விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை
- பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு
- காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக்காஞ்சி
- கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது 4. அகநானூறு போல் நாவாய் அசைந்தது.
4 3 2 1 | |
3 4 2 1 | |
1 2 4 3 | |
3 4 1 2 |
Question 3 |
‘திவ்விய கவி’ என்றழைக்கப்படுபவர் யார்?
குலசேகர ஆழ்வார் | |
ஆண்டாள் | |
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் | |
பெரியாழ்வார் |
Question 4 |
“சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா”? என்று கேட்டார் காந்தியடிகள்
அப்பெண்
“இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார், அப்பெண் யார்?
வேலு நாச்சியார் | |
அஞ்சலையம்மாள் | |
தில்லையாடி வள்ளியம்மை | |
அம்புஜத்தம்மாள் |
Question 5 |
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
பாம்பாட்டிச் சித்தர் | |
குதம்பைச் சித்தர் | |
அழுகுனிச் சித்தர் | |
கடுவெளிச் சித்தர் |
Question 6 |
“பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வெ.இராமலிங்கனார் | |
சுரதா |
Question 7 |
‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
அப்துல் ரகுமான் | |
வாணிதாசன் | |
முடியரசன் | |
துரை. மாணிக்கம் |
Question 8 |
மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ;
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் - என்று பாராட்டப்படுபவர்
உமறுப்புலவர் | |
அப்துல் ரகுமான் | |
ந. பிச்சமூர்த்தி | |
ஞானக் கூத்தன் |
Question 9 |
தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம் | |
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு | |
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை | |
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை |
Question 10 |
‘ஞான சாகரம்’ - இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்
பரிதிமாற்கலைஞர் | |
மறைமலையடிகள் | |
இரா.பி.சேதுப்பிள்ளை | |
திரு.வி.க. |
Question 11 |
“நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில்
ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து”
இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?
கபிலர் | |
ஒளவையார் | |
கவிமணி | |
பரணர் |
Question 12 |
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும் - இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?
பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது | |
பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது | |
கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது | |
நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது |
Question 13 |
‘காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே’ – என்று பாடியவர்
திருமூலர் | |
கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை | |
பாரதியார் | |
பாரதிதாசன் |
Question 14 |
“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே
நான் இறந்து விடுவேன்” - என்று கூறியவர்
காந்தியக் கவிஞர் இராமலிங்கர் | |
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் | |
ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ் | |
ருசிய அறிஞர் தால்கதாய் |
Question 15 |
தாயுமேது தந்தையேது
தனையர் கற்றத் தாருமேது
ஆயும்போது யாவும் பொம்ம
லாட்டமே பூலோகசூது என்று பாடியவர்
மீரா | |
சாலை, இளந்திரையன் | |
பாஸ்கரதாஸ் | |
பாரதிதாசன் |
Question 16 |
“சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர்
செய்த வேதனை விளையாட்டு” – எனப் பெரியார் குறிப்பிடுவது
மணக்கொடை | |
கைம்மை ஒழிப்பு | |
மூடநம்பிக்கை | |
குழந்தைத் திருமணம் |
Question 17 |
நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்
நாற்சீர் | |
முச்சீர் | |
ஐஞ்சீர் | |
அறுசீர் |
Question 18 |
இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்
உ, ஒ | |
இ, ஈ | |
அ, ஆ | |
ப, ம |
Question 19 |
இந்தியநாட்டை மொழிகளின் ‘காட்சிச்சாலை’ எனக் குறிப்பிட்டவர்
அகத்தியலிங்கம் | |
குற்றாலலிங்கம் | |
வைத்தியலிங்கம் | |
நாகலிங்கம் |
Question 20 |
‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ - இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டு சென்ற நாள்
1926 – டிசம்பர் - 6 | |
1936 – டிசம்பர் - 6 | |
1946 – டிசம்பா – 6 | |
1956 – டிசம்பர் - 6 |
Question 21 |
‘கோட்டோவியங்கள்’ என்பது
நேர்கோடு வரைவது | |
கோணக்கோடு வரைவது | |
வளைகோடு வரைவது | |
மூன்று கோடும் வரைவது |
Question 22 |
தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை
பேச்சுக்கலை | |
ஓவியக்கலை | |
சிற்பக்கலை | |
கட்டடக்கலை |
Question 23 |
“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்றவர்
பாரதியார் | |
ஷெல்லி | |
பாரதிதாசன் | |
இரசூல் கம்சதேவ் |
Question 24 |
‘கண்ணுள் வினைஞர்’ என்றழைக்கப்பட்டவர்
பாடகர் | |
ஓவியர் | |
நாட்டியர் | |
வனைபவர் |
Question 25 |
மோகனரங்கனின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்
வானொலி | |
பாவரங்கமேடை | |
தொலைக்காட்சி | |
அனைத்தும் |
Question 26 |
“இரட்டைக்கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்?
முடியரசன் | |
சுரதா | |
வாணிதாசன் | |
கண்ணதாசன் |
Question 27 |
“போலச் செய்தல்” பண்பை அடிப்படையாக கொண்ட கலை
சிற்பக் கலை | |
பேச்சுக்கலை | |
நாடகக்கலை | |
ஓவியக்கலை |
Question 28 |
‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்
பரிபாடல் | |
புறநானூறு | |
திருவாசகம் | |
தேவாரம் |
Question 29 |
முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை
அன்னிபெசண்ட் அம்மையார் | |
தில்லையாடி வள்ளியம்மை | |
முத்துலட்சுமி ரெட்டி | |
இராணிமங்கம்மாள் |
Question 30 |
‘என்றுமுள தென்தமிழ்’ என்றவர்
பாவாணர் | |
கம்பர் | |
திரு.வி.க | |
உவே.சா |
Question 31 |
‘அந்தமான்’ – எவ்வகை மொழி
தனிமொழி | |
தொடர்மொழி | |
பொது மொழி | |
ஓரெழுத்து ஒருமொழி |
Question 32 |
தொகைச் சொல்லை விரித்தெழுதுக
நானிலம்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் | |
குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை | |
குறிஞ்சி. முல்லை, மருதம், பாலை | |
முல்லை, மருதம், நெய்தல், பாலை |
Question 33 |
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க
பாதமலர் | |
அடிமலர் | |
தேன் தமிழ் | |
மொழியமுது |
Question 34 |
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி ----------- உள்ளன.
நாற்பத்திரண்டு | |
ஐம்பத்திரண்டு | |
அறுபத்திரண்டு | |
எழுபத்திரண்டு |
Question 35 |
பொருத்துக :
- பெயர்ச்சொல் 1. வந்தான்
- வினைச்சொல் 2. ஐந்தும் ஆறும்
- இடைச்சொல் 3. மாவீரன்
- உரிச்சொல் 4. வேலன்
1 4 3 2 | |
4 1 2 3 | |
3 4 1 2 | |
4 1 3 2 |
Question 36 |
ஆங்கில சொல்லிற்கு சரியான தமிழ் சொல் யாது?
“ஐனெயைn ளுரஉஉநளளழைn யுஉவ”
இந்தியச் சான்றுச் சட்டம் | |
இந்திய உரிமைச் சட்டம் | |
இந்திய வாரிசுரிமைச ;சட்டம் | |
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் |
Question 37 |
உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்
கால்டுவெல் - கெல்லட் | |
கமில் சுவலபில் - மாக்சுமுல்லர் | |
ஜி.யு.போப் - சூலியல் வின்சோன் | |
ஹிப்பாலஸ் - பிளைநி |
Question 38 |
கண்ணன் என்பது ----------------- பகுபதம் ஆகும்.
பொருட்பெயர் | |
சினைப்பெயர் | |
பண்புப்பெயர் | |
வினைப்பெயர் |
Question 39 |
நான், யான் என்பன
தன்மை ஒருமைப் பெயர்கள் | |
தன்மைப் பன்மைப் பெயர்கள் | |
படர்க்கைப் பெயர்கள் | |
முன்னிலைப் பெயர்கள் |
Question 40 |
“உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும் நூல்” –
திருக்குறள் | |
பதிற்றுப்பத்து | |
புறநானூறு | |
திருவாசகம் |
Question 41 |
மேரி கியூரி – பியூரிகியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
1911 | |
1934 | |
1903 | |
1905 |
Question 42 |
தமிழ க அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
கவிஞர் முத்துலிங்கம் | |
கவியரசர் கண்ணதாசன் | |
கவிஞா வெ.இராமலிங்கனார் | |
கவிஞர் பாரதிதாசன் |
Question 43 |
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?
1956 | |
1986 | |
1990 | |
1927 |
Question 44 |
“வங்க சிங்கம்” என அழைக்கப்படுபவர்
காந்தியடிகள் | |
ஜவஹர்லால் நேரு | |
வல்லபாய் பட்டேல் | |
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் |
Question 45 |
எட்டுத்தொகை நூல்களுள் இல்லாத ஒன்று
அகநானூறு | |
புறநானூறு | |
திருக்குறள் | |
பதிற்றுப்பத்து |
Question 46 |
நேரு மகளுக்கு எழுதிய கடித்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?
உணவு | |
உடல் நலம் | |
நூல்கள் | |
உடற்பயிற்சி |
Question 47 |
பட்டினம், பாக்கம் என்றழைப்பது
மலையை அடுத்து இருக்கும் ஊர்கள் | |
வயலை அடுத்து இருக்கும் ஊர்கள் | |
காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள் | |
கடலை அடுத்து இருக்கும் ஊர்கள் |
Question 48 |
தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1949இல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார் | |
1954இல் காமராசர் முதலமைச்சராக இருந்தார் | |
1944இல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார் | |
1947இல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார் |
Question 49 |
யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?
பாரி | |
பேகன் | |
அதியமான் | |
ஓரி |
Question 50 |
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்.
- இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
சிலப்பதிகாரம் | |
அகநானூறு | |
குறுந்தொகை | |
புறநானூறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
Tamiz 5model test la 45 question work… Pls check
2nd question answer wrong
corrected