Tnpsc Field Surveyor & Draftsman Exam Previous Questions Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil
Tnpsc Field Surveyor & Draftsman Exam Previous Questions Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil
FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN IN TAMIL NADU SURVEY AND LAND RECORDS SUBORDINATE SERVICE & TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE
1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(கண்ணெழுத்து)
(அ) சங்க காலத்தில் ஓவியங்களை —— என்று அழைத்தனர்.
(ஆ) நேர்கோடு, வளைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை ——— என்று அழைத்தனர்
(இ) வண்ணங்கள் குழப்பும் பலகையை ———— என்று அழைத்தனர்.
(ஈ) கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியங்களை ——- என்று அழைத்தனர்.
2. அடைப்புக்குள் உள்ள ஒலி மரபுச் சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(பேசும்)
(அ) குயில் ——- (ஆ) மயில் ——- (இ) கிளி ——— (ஈ) கூகை ———
3. சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு:
இது கோவிலா தேரா என்று தெரியவில்லை. ——— தான் குழப்பத்துடன் பார்த்தேன்.
(அ) உடனே (ஆ) அதனால் (இ) மேலும் (ஈ) ஏனெனில்
4. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:
நெல்லையப்பர் கோவில் ——– உள்ளது?
(அ) எவ்விடம் (ஆ) எங்கு (இ) ஏன் (ஈ) எதற்கு
5. பொருத்தமான காலம் கண்டறிக:
(அ) போட்டியில் வென்றார் (நிகழ்காலம்) (ஆ) மேடையில் பேசுகிறான் (எதிர்காலம்)
(இ) தடுப்பூசி செலுத்தினேன் (இறந்த காலம்) (ஈ) பள்ளிக்குச் செல்வேன் (இறந்த காலம்)
6. பொருத்தமான காலம் கண்டறிக:
(அ) மிதிவண்டி ஓட்டுவேன் (எதிர்காலம்) (ஆ) திடலில் ஓடினேன் (எதிர்காலம்)
(இ) பெயர் சூட்டினார் (நிகழ்காலம்) (ஈ) வீட்டிற்குச் செல்வேன் (நிகழ்காலம்)
7. பொருத்தமான காலம் கண்டறிக:
(அ) நாங்கள் வருவோம் (நிகழ்காலம்) (ஆ) அவன் வருகிறான் (இறந்த காலம்)
(இ) அவை வருகின்றன (நிகழ்காலம்) (ஈ) அது வந்தது (எதிர்காலம்)
8. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு:
பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக:
(அ) முருகா, வந்தியா? (ஆ) முருகா, வண்ட்டியா?
(இ) முருகா, வந்துவிட்டாயா? (ஈ) முருகா, வந்துட்டியா?
9. சரியான நிறுதத்தற்குறிகளை உடைய சொல்லைக் கண்டறிக:
(அ) காகத்திற்கு காது உண்டா! அதற்கு காது கேட்குமா?
(ஆ) காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா!
(இ) காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
(ஈ) காகத்திற்கு காது உண்டா! அதற்கு காது கேட்குமா!
10. ஒரே எழுவாயில் பல வாக்கியங்களை தொடரும் இடத்தில் —— வரும்
(அ) அரைப்புள்ளி (;) (ஆ) முக்காற்புள்ளி (:) (இ) முற்றுப்புள்ளி(.) (ஈ) வினாக்குறி (?)
11.வியப்புக்குறி இட வேண்டிய சரியான தொடரைக் கண்டறிக:
(அ) இயல் இசை நாடகம் (ஆ) நல்லவன் வாழ்வான்
(இ) தமிழின் இனிமைதான் என்னே (ஈ) சேக்கிழார் எழுதிய நூல் எது
12. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(அ) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தனர்
(ஆ) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தான்
(இ) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தன
(ஈ) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தது
13. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(அ) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
(ஆ) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தனர்.
(இ) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
(ஈ) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருப்பவை.
14. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(அ) இலக்கியக் கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றது.
(ஆ) இலக்கியக் கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றவை
(இ) இலக்கியக் கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றன.
(ஈ) இலக்கியக் கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றனர்
15. பிழை திருத்துதல்:
(ஒரு – ஓர்) (ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க)
(அ) ஒரு அணில் மரத்தில் ஏறின (ஆ) ஓர் அணில் மரத்தில் ஏறின
(இ) ஓர் அணில் மரத்தில் ஏறியது (ஈ) ஒரு அணில் மரத்தில் ஏறியது
16. சரியான தொடரைத் தேர்ந்தெடு:
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.
இது – எவ்வகைத் தொடர்?
(அ) வினாத்தொடர் (ஆ) கட்டளைத் தொடர்
(இ) செய்தித்தொடர் (ஈ) உணர்ச்சித் தொடர்
17. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
(அ) நீலாம்பிகை அம்மையார் மறைமலை அடிகளின் மகள் ஆவார்
(ஆ) நீலாம்பிகை அம்மையார் மகள் மறைமலை அடிகள் ஆவார்
(இ) மறைமலை அடிகளாரின் நீலாம்பிகை அம்மையார் மகள் ஆவார்
(ஈ) மறைமலை அடிகளாரின் மகள் ஆவார் நீலாம்பிகை அம்மையார்
18. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க:
(அ) பழங்குடியினர் இயற்கையைப் போற்றும் உணர்வினைக் கொண்டிருந்தனர்
(ஆ) இயற்கையைப் போற்றும் உணர்வினை பழங்குடியினர் இருந்தனர் கொண்டு
(இ) பழங்குடியினர் உணர்வினைக் கொண்டு இருந்தனர் இயற்கையைப் போற்றும்
(ஈ) உணர்வினை பழங்குடியினர் கொண்டிருந்தனர் இயற்கையைப் போற்றும்
19. கலைச்சொல் அறிதல்:
ESCALATOR
(அ) மின்தூக்கி (ஆ) மின்படிக்கட்டு (இ) மின்னஞ்சல் (ஈ) மின்நூல்
20. கூற்று: த், ந் – ஆகிய எழுத்துகள் இன எழுத்துகள் ஆகும். இவற்றை “நட்பெழுத்துகள்” எனவும் கூறுவர்.
காரணம்: த், ந் – இவ்விரண்டெடுத்தும் நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கின்றன.
(அ) கூற்று, காரணம் – இரண்டும் சரி (ஆ) கூற்று சரி, காரணம் தவறு
(இ) கூற்று தவறு, காரணம் சரி (ஈ) கூற்று, காரணம் – இரண்டும் தவறு
21. குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக: சிலை – சீலை
(அ) ஓவியம் – வண்ணம் (ஆ) இறைவன் திருவுருவம்-துணி
(இ) மணல் – குன்று (ஈ) மறை – வேதம்
22. இருபொருள் தருக:
திங்கள்
(அ) அறிவு, சந்திரன் (ஆ) அணி, மாதம் (இ) நிலவு, மாதம் (ஈ) உடல், நிலவு
23. சரியான இணையைத் தேர்க:
1. முகநூல் – App
2. மின்னஞ்சல் – Search Engine
3. செயலி – Touch Screen
4. புலனம் – Whatsapp
(அ) 3 (ஆ) 2 (இ) 1 (ஈ) 4
24. எதிர்ச்சொல்லை எடுத்தெழுது:
ஊக்கம்
(அ) உற்சாகம் (ஆ) சோர்வு (இ) உடைமை (ஈ) மயக்கம்
25. சேர்த்தெழுதுதல்:
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
(அ) பொங்கலன்று (ஆ) பொங்கல் அன்று (இ) பொங்கலென்று (ஈ) பொங்கஅன்று
26. “படிப்பறிவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) படி + அறிவு (ஆ) படிப்பு + அறிவு (இ) படி + வறிவு (ஈ) படிப்பு + வறிவு
27. “தற்பவம்” சொல்லைக் கண்டறிக:
(அ) லட்கூமி (ஆ) கமலம் (ஈ) இலக்குமி (ஈ) அலங்காரம்
28. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க:
Agency
(அ) முகவாண்மை (ஆ) முகவர் (இ) தானியங்கி (ஈ) அஞ்சலகம்
29. ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுது:.
ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping)
(அ) மின்னணு வணிகம் (ஆ) இணையத்தள வணிகம் (இ) மின்னணுமயம் (ஈ) இணையம்
30. விடை வகைகள்:
“கடைக்குப் போவாயா” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பாட்டுக் கூறல்
(அ) நேர்விடை (ஆ) ஏவல் விடை (இ) உற்றது உரைத்தல் விடை (ஈ) சுட்டுவிடை
31. “காஸ்மிக் ரேய்ஸ்” என்பது
(அ) புற ஊதாக் கதிர்கள் (ஆ) அகச்சிவப்புக் கதிர்கள்
(இ) விண்வெளிக் கதிர்கள் (ஈ) சூரியக் கதிர்கள்
32. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:
“கமலா சிலப்பதிகாரம் கற்றாள்”
(அ) முற்றுவினை வாக்கியம் (ஆ) பிறவினை வாக்கியம்
(இ) செய்வினை வாக்கியம் (ஈ) செயப்பாட்டுவினை வாக்கியம்
33. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக:
(அ) ஆசிரியர் பாடம் படிப்பித்தார் (ஆ) ஆசிரியர் பாடம் படித்தார்
(இ) ஆசிரியர் பாடம் படித்தாரா? (ஈ) ஆசிரியர் பாடம் படிக்கிறார்
34. சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி-விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
(அ) சாலை விதிகளில் முதன்மையான விதி எது? (அ) சாலை விதிகள் யாவை?
(இ) சாலை விதி என்றால் என்ன? (ஈ) சாலைகளின் இடப்பக்க விதி யாது?
35. “திருநின்றவூர்” எனும் ஊர்ப்பெயரின் மரூஉ எதுவெனக் கண்டறிக:
(அ) திருவூர் (ஆ) தேரூர் (இ) நின்றவூர் (ஈ) தின்னனூர்
36. சரியான தொடரைத் தேர்ந்தெடு:
விரிந்தது-விரித்தது
(அ) மழை பெய்ததால், பூவின் இதழ் விரிந்தது, மயில் தோகையை விரித்தது
(ஆ) மழை பெய்ததால், பூவின் இதழ் விரித்தது, மயில் தோகையை விரித்தது
(இ) மழை பெய்ததால், பூவின் இதழ் விரிந்தது, மயில் தோகையை விரிந்தது
(ஈ) மழை பெய்ததால், பூவின் இதழ் விரித்தது, மயில் தோகையை விரிந்தது
37. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டு பொருத்துக:
அ. Guild – 1. நிலப்பகுதி.
ஆ. Patent – 2. துணைத்தூதரகம்.
இ. Consulate – 3.காப்புரிமை.
ஈ. Territory – 4.வணிகக்குழு
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ 2 4 1 3
இ. 4 3 2 1
ஈ. 3 4 1 2
38. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:
சொற்களை ஒழுங்குபடுத்துக:
(அ) அறக்கோட்டமாக சிறைக் கோட்டத்தை மன்னன் வேண்டினான் மாற்ற
(ஆ) சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினான்
(இ) மன்ன் அறக்கோட்டமாக மாற்ற சிறைக்கோட்டத்தை வேண்டினான்
(ஈ) மன்னன் வேண்டினான் அறக்கோட்டத்தை சிறைக்கோட்டமாக மாற்றினான்.
39. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்:
(அ) வெய்யோ பொய்யோ மையோ ஐயோ (ஆ)ஐயோ பொய்யோ மையோ வெய்யோ
(இ) பொய்யோ ஐயோ மையோ வெய்யோ (ஈ) வெய்யோ மையோ ஐயோ பொய்யோ
40. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(அ) அவிழ் அலரி அசைத்த அரும்பு (ஆ) அரும்பு அவிழ் அசைத்த அலரி
(அ) அலரி அசைத்த அவிழ் அரும்பு (ஈ) அசைத்த அரும்பு அலரி அவிழ்
41. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(அ) கிளை கழை குச்சி கொழுந்தாடை (ஆ) கழை கிளை குச்சி கொழுந்தாடை
(இ) கொழுந்தாடை குச்சி கிளை கழை (ஈ) குச்சி கழை கிளை கொழுந்தாடை
42. “பௌவம்” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க:
(அ) முந்நீர் (ஆ) கடல் (இ) ஆழி (ஈ) ஊழி
43. தாவரத்தின் இளம் பயர் வகையை சுட்டாத சொல் எது?
(அ) நாற்று (ஆ) இளநீர் (இ) குருத்து (ஈ) பிள்ளை
44. நிலவகை அல்லாத சொல்லைக் கண்டறிக:
(அ) தரிசு (ஆ) பரிசு (இ) சுவல் (ஈ) அவல்
45. வலி,வளி,வழி-ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக:
(அ) துன்பம், காற்று, நெறி (ஆ) காற்று, நெறி, துன்பம்
(இ) நெறி,காற்று,துன்பம் (ஈ) துன்பம், நெறி,காற்று
46. CIVILIZATION என்பதன் தமிழாக்கம்
(அ) வேளாண்மை (ஆ) நாகரிகம் (இ) பயிரிடுதல் (ஈ) உழவியல்
47. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுது:
SUBMARINE
(அ) கப்பல் (ஆ) கலங்கரை விளக்கம் (இ) நீர்மூழ்கிக் கப்பல் (ஈ) துறைமுகம்
48. இவ்வாக்கியத்தில் உள்ள பிழையை நீக்குக:
(அ) என் மணம் இகல்ந்தால் இறந்து விடாது! (ஆ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது!
(இ) இரந்து விடாது என் மனம் இகழ்ந்தால்! (ஈ) என் மனம் இரந்தும் இகழ்ந்து விடாது!
49. சந்திப் பிழையற்ற தொடர் எது?
(அ) கைவினைக் கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்
(ஆ) கைவினைக் கலைகளுள் ஒன்றை கற்று கொள்வேன்
(இ) கைவினைக் கலைகளுள் ஒன்றைக் கற்று கொள்வேன்
(ஈ) கைவினைக் கலைகளுள் ஒன்றை கற்றுக் கொள்வேன்
50. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
விளக்கு – இருபொருள்
(அ) 1.இலக்கணப்பாடத்தை விளக்கிக்கூறு.
2. இளமையில் கல்.
(ஆ) 1. விளக்கை அணைத்து விடு.
2. கற்களால் ஆனது கோபுரம்.
(இ) 1. நல்ல நூல்களைப் படி.
2. ஆறு கால்களை உடையது ஈ
(ஈ) 1. இலக்கணப்பாடத்தை விளக்கிக் கூறு.
2. விளக்கை அணைத்து விடு
51. ஆறு – இச்சொல்லுக்கு இருபொருள் தருக:
(அ) ஆறுதல்-நதி (ஆ) நதி-எண் (இ) பொறுத்தல்-மனம் (ஈ) நதி-கடல்
52. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(மணிமேகலை)
(அ) எட்டுத்தொகை நூல்களில் ஒன்று —— (ஆ) பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று ——-
(இ) ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று ——— (ஈ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று —–
53. பொருத்தமான இணைப்புச் சொல்லுடன் தொடரை அமைக்க:
மழை நன்கு பெய்தது ——– எங்களால் விளiயாட முடியவில்லை
(அ) மழை நன்கு பெய்தது. எனென்றால் எங்களால் விளையாட முடியவில்லை
(ஆ) மழை நன்கு பெய்தது. எனவே, எங்களால் விளையாட முடியவில்லை
(இ) மழை நன்கு பெய்தது. மேலும் எங்களால் விளையாட முடியவில்லை
(ஈ) மழை நன்கு பெய்தது. ஏனெனில் எங்களால் விளையாட முடியவில்லை
54. பொருத்தமான இணைப்புச் சொல்லைக் கண்டறிக:
அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ———- அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது.
(அ) எனவே (ஆ) ஆகையால் (இ) அதுபோல (ஈ) ஏனெனில்
55. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர்
(அ) எவர் (ஆ) யாவர் (இ) யாரால் (ஈ) யார்
56. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
ஐம்பெருங்காப்பியங்கள் ——–
(அ) என்ன (ஆ) எது (இ) யாவை (ஈ) யாது
57. சொற்களை இணைத்து புதிய சொல்லை உருவாக்கல்:
சிங்கம் ——- சரியான சொல்
(அ) உறுமும் (ஆ) முழங்கும் (இ) பிளிறும் (ஈ) கத்தும்
58. பொருத்தமான மரபுச் சொல்லைத் தேர்ந்தெழுதுக:
ஆட்டு ——- வருகிறது
(அ) கூட்டம் (ஆ) மந்தை (இ) இனம் (ஈ) நிரை
59. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்:
புலியின் இளமைப் பெயர்
(அ) பறழ் (ஆ) குருளை (இ) கன்று (ஈ) குஞ்சு
60. கீழ்வருவனவற்றுள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொற்களை கண்டுபிடி:
(அ) வருவியா?-வந்ததா? (ஆ) வந்தாய்-வருவாய்
(இ) வந்தியா-வந்தாயா? (ஈ) வருகிறாய்-வருவாய்
61. வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் ———– என வழங்குகிறோம்
(அ) கதவு (ஆ) நிலைப்படி (இ) நுழையும் வழி (ஈ) வாசல்
62. பத்தியைப் படித்து வினாக்களுக்கு உரிய சரியான விடையைத் தேர்ந்தெடு:
முகிலன் பொங்கல் விழா கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கு செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். ஆதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்வாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்
62. முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்?
(அ) மாமா (ஆ) தாத்தா (இ) அக்கா (ஈ) சித்தி
63. தாத்தா வீட்டிலுள்ள காளையின் பெயர் என்ன?
(அ) கொற்றன் (ஆ) முகிலன் (இ) லட்சுமி (ஈ) செவலை
64. முகிலன் எவ்விழாவைக் கொண்டாட தாத்தா வீட்டிற்குச் சென்றான்?
(அ) பொங்கல் (ஆ) தீபாவளி (இ) கிறிஸ்துமஸ் (ஆ) பக்ரீத்
65. முகிலன் தோட்டத்தில் இருந்து எதை பறித்துக் கொடுத்து தாத்தாவுக்கு உதவுவான்?
(அ) பழங்கள் (ஆ) கீரைகள் (இ) காய்கறிகள் (ஈ) பூக்கள்
66. “செவலை” என்பது எதைக் குறிக்கிறது?
(அ) காளை (ஆ) பசு (இ) நாய் (ஈ) பூனை
67. சொல்-பொருள் பொருத்துக:
அ. குருளை 1. முலை
ஆ. கல் 2. குட்டி
இ. மல்லல் 3. வயல்
ஈ. செறு 4. வளம்
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 4 3 2 1
இ. 2 1 4 3
ஈ. 2 1 3 4
68. சொல்-பொருள் பொருத்துக:
அ. மட்டு 1. நாள்தோறும்
ஆ. வையம் 2. பாதுகாத்தல்
இ. பேணி 3. அளவு
ஈ. நித்தம் நித்தம் 4. ஊலகம்
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ. 3 4 2 1
இ. 4 3 2 1
ஈ. 4 3 1 2
69. சொல்-பொருள் பொருத்துக:
அ. கருணை 1.மழை
ஆ. மாரி 2. உலகம்
இ. பூதலம் 3. வயிறு
ஈ. கும்பி 4. இரக்கம்
அ ஆ இ ஈ
அ. 1 3 4 2
ஆ. 4 1 3 2
இ. 4 1 2 3
ஈ. 4 3 2 1
70. பின்வருவனவற்றுள் சரியான இணைகளைக் குறிப்பிடுக:
அ. புல் புற்கள்
ஆ. சொல் சொல்கள்
இ. பூ பூக்கள்
ஈ. மாதம் மாதக்கள்
(அ) அ,ஆ (ஆ) இ,ஈ (இ) அ,இ (ஈ) ஆ,ஈ
71. காரணப் பெயருக்கு எடுத்துக்காட்டினைத் தேர்ந்தெடுக்க:
(அ) மரம் (ஆ) மண் (இ) நாற்காலி (ஈ) காற்று
72. கலைச்சொல் அறிதல்:
HERO STONE
(அ) நடுகல் (ஆ) பொறிப்பு (இ) அகழாய்வு (ஈ) கல்வெட்டியல்
73. கலைச்சொல் அறிதல்:
MEDIA
(அ) ஊடகம் (ஆ) இதழியல் (ஈ) மொழியியல் (ஈ) பருவ இதழ்
74. வழுஉச் சொல்லற்ற தொடர் எது?
(அ) ஊசியில் நூலைக் கோர்த்தான் (ஆ) ஊசியில் நூலைக் கோர்ப்பான்
(இ) ஊசியில் நூலைக் கோத்தான் (ஈ) ஊசியில் நூலைக் கோர்க்கலாம்
75. வழுவற்ற தொடர் எது?
(அ) அதைச் செய்தது நான் அன்று (ஆ) அதைச் செய்தது நான் அல்ல
(இ) அதைச் செய்தது நான் அல்லேன் (ஈ) அதைச் செய்தது நான் அல்லை
76. பொருந்தும் இணையைக் காண்க:
(அ) கரி-குதிi (ஆ) அருவர்-காலன் (இ) பிலம்-மலைக்குகை (ஈ) மறலி-புதர்
77. பொருந்தாச் சொல்லைக் காண்க:
(அ) உம் (ஆ) ஐ (இ) மற்று (ஈ) மா
78. “பாட்டு + இருக்கும்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(அ) பாட்டிருக்கும் (ஆ) பாட்டுருக்கும் (இ) படியிருக்கும் (ஈ) பாடியிருக்கும்
79. குடந்தை ——- என்பதன் மரூஉ
(அ) குடகு (ஆ) கும்பை (இ) கும்பகோணம் (ஈ) குளித்தலை
80. தவறான ஊர்ப் பெயரின் மருஉவை எழுதுக:
(அ) உதகமண்டலம் – உதகை
(ஆ) புதுச்சேரி – புதுகை
(இ) மன்னார்குடி – மன்னை
(ஈ) திருநெல்வேலி – நெல்லை
81. சரியான ஊர்ப்பெயரின் மரூஉச்சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) புதுவை – புதுக்கோட்டை
(ஆ) புதுகை – புதுச்சேரி
(இ) நாகை – நாகப்பட்டினம்
(ஈ) மயிலம் – மயிலாடுதுறை
82. “கான்வர்சேஷன்” என்பது
(அ) உரையாடல் (ஆ) கலந்துரையாடல் (இ) பேசுதல் (ஈ) கூடிப்பேசுதல்
83. பிலாஸஃபர் (Philosopher) என்பவர்
(அ) பத்திரிக்கையாளர் (ஆ) மெய்யியலாளர் (இ) எழுத்தாளர் (ஈ) நெறியாளர்
84. “நிலவும் வானும் போல” – இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம்:
(அ) பண்புடைமை (ஆ) பணிவுடைமை (இ) வேற்றுமை (ஈ) ஒற்றுமை
85. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:
“பாட்டு கபிலனால் பாடப்பட்டது”
(அ) உடன்பாட்டு வாக்கியம் (ஆ) தன்வினை வாக்கியம்
(இ) எதிர்மறை வாக்கியம் (ஈ) செயப்பாட்டுவினை வாக்கியம்
86. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க:
(அ) மாணவன் மனம் திருத்தினான் (ஆ) மாணவன் மனம் திருந்தினான்
(இ) மாணவன் மனம் திருந்தினானா? (ஈ) மாணவன் மனம் திருந்தச் செய்தான்
87. ஒயிலாட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, போலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
(அ) ஒயிலாட்டத்தில் எந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது?
(ஆ) ஒயிலாட்டத்தில் எந்தெந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது?
(இ) ஒயிலாட்டத்தில் எவ்வாறான இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது?
(ஈ) ஒயிலாட்டத்தில் எதற்கான இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது?
88. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
பாரதியார் மகாகவி என அழைக்கப்படுகிறார்.
(அ) பாரதியார் இயற்பெயர் யாது? (ஆ) மகாகவி பாரதியா?
(இ) பாரதியார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? (ஈ) மகாகவி யார்?
89. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
பெருஞ்சித்திரனார் பாவலரேறு என்று அழைக்கப்படுகிறார்
(அ) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
(ஆ) பாவலரேறு யார்?
(இ) ஏன் பாவலரேறு என அழைக்கப்படுகிறார்?
(ஈ) பெருஞ்சித்திரனார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
90. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:
சொற்களை ஒழுங்குபடுத்துக:
(அ) மணிமேகலை மணிபல்லவத்தீவிற்குச் சென்றாள்
(ஆ) மணிபல்லவத்தீவிற்குச் சென்றாள் மணிமேகலை
(இ) மணிமேகலை சென்றாள் மணிபல்லவத்தீவிற்கு
(ஈ) பல்லவத்தீவிற்கு மணி மணிமேகலை சென்றாள்
91. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:
சொற்களை ஒழுங்குபடுத்துக:
(அ) முளையிலே விளையும் தெரியும் பயிர் (ஆ) விளையும் பயிர் முளையிலே தெரியும்
(இ) பயிர் விளையும் முளையிலே தெரியும் (ஈ) முளையிலே தெரியும் விளையும் பயிர்
92. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:
சொற்களை ஒழுங்குபடுத்துக:
(அ) ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை (ஆ) கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்
(இ) இல்லாமை ஆக்குவோம் கல்லாமையை (ஈ) இல்லாமை கல்லாமையை ஆக்குவோம்
93. வா-என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை எழுதுக:
(அ) வந்தவர் (ஆ) வந்தான் (இ) வருதல் (ஈ) வந்த
94.அழை-என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் கண்டறி:
(அ) அழைத்த (ஆ) அழைத்து (இ) அழைத்தல் (ஈ) அழைத்தான்
95. வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக: “பெறு”
(அ) பெற்று (ஆ) பெற்றவன் (இ) பெறுதல் (ஈ) பெற்றான்
96. வருக-வேர்ச்சொல்லைத் தருக
(அ) வரு (ஆ) வருதல் (இ) வா (ஈ) வந்த
97. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக:
(அ) ஒலி-நீங்கு (ஆ) ஒளி-வெளிச்சம் (இ) ஒழி-சீற்றம் (ஈ) கழி-சத்தம்
98. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க:
1. நேர்விடை – ஆடுவேன்
2. உற்றது உரைத்தல் விடை – கால் வலிக்கும்
3. ஏவல் விடை – நீயே செய்
4.சுட்டுவிடை – தலை வலிக்கிறது
(அ) 1,3 (ஆ) 1,4 (இ) 2,3 (ஈ) 2,4
99. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:
கம்ப்யூட்டர் (Computer) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
(அ) மின்னணி (ஆ) கணினி (இ) கனினி (ஈ) மின்னஞ்சல்
100. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைப் பொருத்துக:
அ. Volunteer 1.சமூக சீர்திருத்தவாதி.
ஆ. Social Reformer 2.வெளிநாட்டவர்.
இ.Entrepreneur 3.தன்னார்வலர்.
ஈ. Foreigner 4.தொழில் முனைவோர்
அ ஆ இ ஈ
அ. 2 3 4 1
ஆ. 4 2 1 3
இ. 3 1 4 2
ஈ. 1 4 2 3
101. முசிறியை “இந்தியாவின் முதல் பேரங்காடி” என்று கூறும் வெளிநாட்டு நூல் ——— ஆகும்
(அ) இயற்கை வரலாறு (ஆ) புவியியல்
(இ) எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் (ஈ) புத்த பதிப்புகள் (நாட்குறி புத்தகம்)
102. தவறான இணையைத் தெரிவு செய்க:
(அ) வ.உ.சிதம்பரம் – செப்டம்பர் 5,1872
(ஆ) சுப்பிரமணிய பாரதியார் – டிசம்பர் 11,1881
(இ) சி.இராஜாஜி – டிசம்பர் 10, 1878
(ஈ) காமராஜர் – ஜீலை 15, 1903
103. கூற்று (A): வேலு நாச்சியார் ஹைதர் அலியிடம் 5000 காலாட்படைகளும், 5000 குதிரைப் படைகளும் அனுப்பும்படி கடிதம் எழுதினார்.
காரணம் (R): வேலு நாச்சியார் ஆங்கிலேயரோடு மோதுவதில் தீவிரமாக இருப்பதைத் தெளிவுபடுத்தினார்.
(அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி எனினும் காரணம் (R) கூற்றை (A) சரியாக விளக்கவில்லை
(ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டுமே தவறானவை
(இ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி காரணம் (R) கூற்றை (A) சரியாகவே விளக்குகிறது
(ஈ) கூற்று (A) தவறானது, காரணம் (R) சரியானது
104. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த குழுவின் பெயர்
(அ) தார் குழு (ஆ) ஹன்டர் குழு (இ) ராய் குழு (ஈ) சைமன் குழு
105. தமிழ் நாட்டின் எந்த இரண்டு மாவட்டங்கள் அடிக்கடி புயலினால் பாதிக்கப்படுகின்றன?
(அ) தேனி மற்றும் மதுரை (ஆ) நாகப்பட்டினம் மற்றும் கடலூர்
(இ) விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் (ஈ) காஞ்சிபுரம் மற்றும் இராமநாதபுரம்
106. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கால வரிசைப்படுத்துக:
1. நவஜவான் பாரத் சபா.
2. இந்துஸ்தான் சோஷலிச குடியரசு அமைப்பில் பகத்சிங் சேர்ந்தார்.
3. பகத்சிங் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
4. பகத்சிங்கும் பி.கெ.தத்தும் மத்திய சட்டமன்றத்தின் மீது குண்டு வீசினார்கள்
(அ) 1,3,4,2 (ஆ) 2,1,4,3 (இ) 3,1,4,2 (ஈ) 4,3,2,1
107. “அல் ஹிலால்” என்ற வார செய்தித்தாளை ஆரம்பித்தவர் ——— ஆவார்
(அ) முகமது அலி ஜின்னா (ஆ) ரகமது அலி (இ) முகமது இக்பால் (ஈ) அபுல் கலாம் ஆசாத்
108. பின்வருவனவற்றைப் பொருத்துக:
திட்ட காலத்தில் ஊரக நலக் கொள்கைகள்:
(அ) பாரத நிர்மாண் 1. X திட்டம்
(ஆ) ஊரக ஏழைகளின் அடிப்படை தேவைகளை
உறுதி செய்தல் 2. XI திட்டம்.
(இ) ஊரக ஏழைகளுக்குப் புதிய ஊதியம் பெறும்
வழிகளை ஆக்குதல் 3. IX திட்டம்
(ஈ) ஊரகப் பகுதிகளில் புதிய உள்கட்டமைப்பு
வகைகளை உருவாக்குதல் 4. VIII திட்டம்
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ. 2 4 1 3
இ. 4 1 2 3
ஈ. 3 1 2 4
109. சொத்துக்களுக்கான வரி இந்தியாவில் யாரால் வசூலிக்கப்படுகிறது?
(அ) மைய அரசு (ஆ) மாநில அரசு
(இ) மைய மற்றும் மாநில அரசு (ஈ) உள்ளாட்சி அரசு
110. மத்திய அரசால் அல்லது மாநில அரசால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் யாருக்குச் செல்லும்?
(அ) ஒன்றிய அரசுக்கு (ஆ) மாநில அரசுக்கு
(இ) மத்திய மற்றும் மாநில அரசுக்கு (ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை
111. பின்வருபவை வறுமையின் பொருளாதார பிரச்சனையாகும்.
1.அதிகரிக்கும் வேலையின்மை.
2. தொழில்நுட்ப வளர்ச்சி.
3. மூலதனப் பற்றாக்குறை.
4. போதிய பொருளாதார வளர்ச்சியின்மை
(அ) 1,2 மற்றும் 3 (ஆ) 2.3 மற்றும் 4 (இ) 1,3 மற்றும் 4 (ஈ) 1,2 மற்றும் 4
112. 2022ஆம் ஆண்டிற்கான BRICS மாநாட்டை நடத்தும் நாடு ———- ஆகும்
(அ) பிரேசில் (ஆ) இரஷ்யா (இ) இந்தியா (ஈ) சீனா
113. ஆளுமையை (நபரை) அடையாளம் காண்க:
இவர் தமிழக அரசியல் இயக்கத்தில் பகுத்தறிவு கருத்துக்கள் மற்றும் அறிவியல் பார்வைகளை ஏற்படுத்தியவர்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டபவர்; இந்திய அரசியலில் சமதர்ம கருத்துக்களைப் பரப்பியவர்; இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.
(அ) ஜெ.சி.குமரப்பா (ஆ) ஈ.வே.ரா.பெரியார்
(இ) சிங்காரவேலர் (ஈ) மறைமலை அடிகளார்
114. கூற்று (A): இந்திய அரசமைப்பு விதி 312 அகில இந்தியப் பணிகள் தொடர்பானதாகும்.
காரணம் (R): ஒரே சீரான தன்மையுடைய அதிகாரவர்க்கம் இருக்க வேண்டும் என மாநிலங்கள் விரும்பின.
(அ) கூற்று (A) உண்மையாகும். காரணம் (R) தவறாகும்.
(ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாகும். மேலும் காரணம் (R) என்பது கூற்று (A)விற்கான சரியான விளக்கமாகும்.
(இ) கூற்று (A) தவறு. காரணம் (R) சரியாகும்
(ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாகும். இருப்பினும் காரணம் (R) என்பது கூற்று (A)விற்கான சரியான விளக்கம் அல்ல
115. தாடையற்ற முதுகெலும்பிகள் என்பவை யாவை?
(அ) தலை முதுகு பிராணிகள் (ஆ) வால் முதுகு பிராணிகள்
(இ) வட்டவாயுடைய உயிரிகள் (ஈ) இருவாழ் உயிரினங்கள்
116. மனித இரத்தத்தில் உட்கரு இல்லாத இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) நியூட்ரோஃபில்கள் மற்றும் ஈசினோஃபில்கள்
(ஆ) பேசோஃபில்கள் மற்றும் லிம்போசைட்கள்
(இ) மோனோசைட்கள் மற்றும் ஈசினோஃபில்கள்
(ஈ) முதிர்ச்சி அடைந்த எரித்ரோசைட்டுகள் மற்றும் திராம்போசைட்டுகள்
117. உயிரி வாயு உற்பத்தியில் படியும் கழிவுகளில் ——- அளவு மிகுந்திருப்பதால் சிறந்த உரமாகும்.
(அ) கார்பன் மற்றும் ஹைட்ரஜன் (ஆ) நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்
(இ) அயோடின் மற்றும் ஆன்டிமனி (ஈ) சோடியம் மற்றும் கால்சியம்
118. 298 K வெப்பநிலையில், 0.08M CH3COOH மற்றும் 0.06M CH3COONa கொண்ட கலவையில் உள்ள H3O+ அயனியின் செறிவினைக் கணக்கிடுக.
(அசிடிக் அமிலத்தின் Ka = 1.84 x 10-5)
(அ) 2.4533 x 10-5 mol l-1 (ஆ) 2.7613 x 10-5 mol l-1 (இ) 3.4533 x 10-5 mol2 l-2 (ஈ) 2.7713 x 10-5 mol l-1
119.ஓர் எண்ணின் 75% உடன் 75ஐ கூட்டினால் முடிவு அதே எண். அந்த எண்ணைக் கண்டுபிடி.
(அ) 50 (ஆ) 60 (இ) 300 (ஈ) 400
120. 400இன் 30% மதிப்பின் 25% என்ன?
(அ) 25 (ஆ) 30 (இ) 120 (ஈ) 150
121. கீழே உள்ளவைகளில், 21x2y, 35 xy2 ஆகியவற்றின் மீ.பொ.வ.காண்க
(அ) 7x (ஆ) 7y (இ) 7x2y (ஈ) 7xy
122. 4 செ.மீ ஐ மூலைவிட்டமாகக் கொண்ட கனசதுரத்தின் கனஅளவு என்ன?
(அ) 8 செ.மீ3 (ஆ) 16 செ.மீ3 (இ) 27 செ.மீ3 (ஈ) 64 செ.மீ3
123. ஒரு சீரான நாணயம் இரண்டு முறை சுண்டப்படுகிறது. குறைந்தது ஒரு தலை கிடைக்க நிகழ்தகவினைக் காண்க:
(அ) 1/4 (ஆ) 1/2 (இ) 3/4 (ஈ) 1
124. 32, 36, 45, 60 மற்றும் 80 ஆகிய எண்களால், மீதியின்றி வகுபடும் மிகச் சிறிய எண்
(அ) 1444 (ஆ) 1440 (இ) 1404 (ஈ) 1430
125. 8 நபர்கள் ஒரு வேலையை 16 நாட்களில் செய்து முடிப்பர். 4 நாட்கள் கழித்து மேலும் 8 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில், அவ்வேலையைச் செய்ய எடுத்துக் கொள்ளும் நாட்கள்
(அ) 4 (ஆ) 6 (இ) 8 (ஈ) 10
126. ஒரு மகிழுந்து 360 கி.மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் மகிழுந்து செல்லும் பொழுது 6 மணி 30 நிமிடங்களில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும் எனக் காண்க:
(அ) 400 கி.மீ (ஆ) 585 கி.மீ (இ) 600 கி.மீ (ஈ) 636 கி.மீ
127. ஒரு நீர்த்தொட்டியை 6 குழாய்களைக் கொண்டு நிரப்பினால் 1 மணி 20 நிமிடத்தில் அத்தொட்டி நிரம்பும் எனில் 5 குழாய்களைக் கொண்டு நிரப்பினால் எவ்வளவு நேரத்தில் அத்தொட்டி நிரம்பும்?
(அ) 96 நிமிடங்கள் (ஆ) 98 நிமிடங்கள் (இ) 94 நிமிடங்கள் (ஈ) 92 நிமிடங்கள்
128. A ஒரு வேலையை 10 நாட்களிலும் B அதே வேலையை 15 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ.1,500ஐ ஈட்டினர், எனில் அத்தொகையை எவ்வாறு பிரித்து கொள்வர்?
(அ) ரூ.800, ரூ.700 (ஆ) ரூ.900, ரூ.600 (இ) ரூ.850, ரூ.650 (ஈ) ரூ.950, ரூ.550
129. 15968ஐ எந்த எண்ணால் வகுக்கும் போது ஈவு 89 மற்றும் மீதி 37 கிடைக்கும்?
(அ) 169 (ஆ) 179 (இ) 181 (ஈ) 189
130. ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிறது எனில் அதன் வட்டி வீதம்
(அ) 5% (ஆ) 10% (இ) 15% (ஈ) 20%
131. ரூ.450 க்கு ஆண்டிற்கு 4.5% வட்டி வீதத்தில், தனிவட்டி முறையில், எத்தனை ஆண்டுகளில் ரூ.81 வட்டியாக கிடைக்கும்?
(இ) 3.5 ஆண்டுகள் (ஆ) 4 ஆண்டுகள் (இ) 4.5 ஆண்டுகள் (ஈ) 5 ஆண்டுகள்
132. கூற்று (A): இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட சமதர்ம, மதசார்பற்ற, ஜனநாயக, குடியரசாக அமைவதற்கு, உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்.
காரணம் (R): முகவுரை இந்திய அரசியல் சாசனத்தின் அதிகார மூலதனம் மற்றும் இந்திய நாட்டின் தன்மையை வெளிப்படுத்துகிறது.
(அ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஆ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A)யின் சரியான விளக்கம்
(இ) (A) தவறு ஆனால் (R) சரி
(ஈ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரியானது ஆனால் (R)க்கு சரியான விளக்கம் (A) இல்லை
133. கூற்று (A): அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் இந்திய “அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம்” என B.R.அம்பேத்கரால் விவரிக்கப்படுகிறது.
காரணம் (R): அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் நாட்டிற்கான வழிகாட்டியாக செயல்படுகிறது.
(அ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஆ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A)யின் சரியான விளக்கம்
(இ) (A) தவறு ஆனால் (R) சரி
(ஈ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரியானது ஆனால் (R)க்கு சரியான விளக்கம் (A) இல்லை
134. இந்தியாவின் மிகப்பெரிய உயர் நீதிமன்றம் எது?
(அ) கல்கத்தா உயர் நீதிமன்றம் (ஆ) சென்னை உயர் நீதிமன்றம்
(இ) அலகாபாத் உயர் நீதிமன்றம் (ஈ) டெல்லி உயர் நீதிமன்றம்
135. பொருத்துக:
நாடுகள் நாடாளுமன்றத்தின் பெயர்
அ. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1.டயட்
ஆ. ஜப்பான் 2. பாராளுமன்றம்
இ. பிரிட்டன் 3. போல்கட்டிங்
ஈ. டென்மார்க் 4. காங்கிரஸ்
அ ஆ இ ஈ
அ. 2 1 3 4
ஆ. 4 1 2 3
இ. 2 3 4 1
ஈ. 4 3 2 1
136. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்களைத் தொடர்புடைய இடங்களுடன் சரியாகப் பொருத்தவும்:
அ. தாமிரம் 1. கெத்ரி.
ஆ. தங்கம் 2. கோலார்.
இ. மணிக்கல் 3.பாதகூன்.
ஈ. துணி 4.உம்மா
அ ஆ இ ஈ
அ. 3 4 1 2
ஆ. 1 2 3 4
இ. 4 2 1 3
ஈ. 1 4 3 2
137. முகலாயர் காலத்தில் வங்கிப் பணிகள் பெரும்பாலும் ஷ்ராஃப்கள், சாஹீகர்கள் மற்றும் மகாஜன்களால் செய்யப்பட்டன என்று எந்தக் குறிப்புக் கூறுகிறது?
(அ) தஸ்கிராய்-உல்-வாகியாத் ஜௌஹரின் (ஆ) கேசவ் தாஸின் ரசிக் பிரியா
(இ) அபுல் ஃபஸ்லின் ஐன்-ஐ-அக்பரி (ஈ) சுஜான் ராயின் குலாசத்-உல்-த்வரிக்
138. ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்தவர்
(அ) முதலாம் அமோகவர்ஷர் (ஆ) இரண்டாம் கிருஷ்ணர்
(இ) மூன்றாம் இந்திரர் (ஈ) இரண்டாம் கோவிந்தர்
139. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் மட்டும் —— சதவீதம் உள்ளனர்.
(அ) 6.3% (ஆ) 7.4% (இ) 8.2% (ஈ) 8.6%
140. சரியான கூற்றைத் தேர்வு செய்க:
1. சமயக் சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும்.
2. ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு குழுவின் மீது ஆதிக்கம் செலுத்துதல்.
3. எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதியளித்தல்.
4. சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்
(அ) 1, 2 மட்டும் (ஆ) 2, 3 மட்டும் (இ) 4 மட்டும் (ஈ) 1,3 மற்றும் 4 மட்டும்
141. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் – I கணவாய் பட்டியல் – II இரண்டு இடங்களை இணைக்கிறது
அ. நிட்டி கணவாய் 1. கார்கிலுடன் காஷ்மீர்
ஆ. பென்சிலா கணவாய் 2. திபெத்துடன் உத்தரகண்ட்
இ. புர்சைல் கணவாய் 3. லடாக்குடன் சீனா
ஈ. ரோஹ்தாங் கணவாய் 4. ஸ்பிட்டியுடன் லாஹீல்
அ ஆ இ ஈ
அ. 2 1 3 4
ஆ. 2 3 4 1
இ. 2 3 1 4
ஈ. 2 1 4 3
142. இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
(அ) 1955 (ஆ) 1965 (இ) 1975 (ஈ) 1985
143. இந்தியாவில் அதிக மற்றும் குறைந்த மக்களடர்த்தி கொண்ட யூனியன் பிரதேசங்கள் யாவை?
(அ) புதுடெல்லி, புதுச்சேரி (ஆ) புதுடெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
(இ) புதுடெல்லி, கோவா (ஈ) புதுடெல்லி, ஏனாம்
144. பின்வருவனவற்றில் எது தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது?
1. SBSE – மாநில பள்ளிக் கல்வி வாரியம்.
2. BHSE – உயர் மதிப்பெண் தேர்வு வாரியம்.
3. TNBSE – தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியம்.
4. TNBHSE – தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியம்
(அ) 1 மற்றும் 2 சரியானது அல்ல (ஆ) 2 மற்றும் 3 சரியானது அல்ல
(இ) 3 மற்றும் 4 சரியானது அல்ல (ஈ) 1 மற்றும் 3 சரியானது அல்ல
145. வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
(அ) 1974 (ஆ) 1980 (இ) 1972 (ஈ) 2002
146. மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விருது
(அ) திருவள்ளுவர் விருது (ஆ) கோட்டை அமீர் மத நல்லிண விருது
(இ) பேரறிஞர் அண்ணா விருது (ஈ) பாவேந்தர் பாரதிதாசன் விருது
147. பின்வரும் கூற்றுள் குடிமக்கள் யார் என்பதில் தவறான கூற்றைக் காட்டுக:
1.குடிமக்கள் முழு சிவில் உரிமைகளை அனுபவிக்கிறார்கள். 3. ஆரசியல் சமூகத்தின் உறுப்பினர்கள். 4. குடிமக்கள் அரசியல் உரிமைகளை அனுபவிப்பதில்லை.
(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 மட்டும் (இ) 2 மட்டும் (ஈ) 3 மட்டும்
148. அமிழ்தத்தை விட இனிமையானது என்று வள்ளுவர் எதனைச் சுட்டுகின்றார்?
(அ) மக்கள் மெய் தீண்டல் (ஆ) தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்
(இ) புல்லாங்குழலின் இனிமை (ஈ) காதலி இன் “சொல்”
149. “நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் தொடர்பு” யாருடைய தொடர்பு இன்பம் தரும்?”
(அ) பேதையார் தொடர்பு (ஆ) அரிவையர் தொடர்பு
(இ) பண்புடையாளர் தொடர்பு (ஈ) அறிவுடையவர் தொடர்பு
150. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
(அ) 1990 (ஆ) 1978 (இ) 1979 (ஈ) 1993
151. சரியான இணையைத் தேர்வு செய்க:
அ. கண்ணாடி மணிகள் ` – பொருந்தல்.
ஆ. உடைந்த சங்கு வளையல் – கீழடி.
3. உருக்கு உலை – கொடுமணல்.
4. ஒரே மரத்தாலான படகின் பகுதி – புதுச்சேரியின் ஆரோவில்
152. சரியான விடையைத் தெரிவு செய்க:
1. சிவகங்கையின் “இராணி” வேலு நாச்சியார் ஆவார்.
2. காளையர் கோவில் போரில் கொல்லப்பட்ட முத்து வடுகநாதர் இராணி வேலு நாச்சியாரின் கணவராவார்.
3. வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதி குயிலி இவர் முதல் தற்கொலைப் படைவீரர் ஆவார்.
4. மருது சகோதரர்களின் உதவியுடன் வேலு நாச்சியார் மீண்டும் இராணியாக முடி சூட்டிக் கொண்டார்.
(அ) 1, 2 மற்றும் 4 சரி (ஆ) 1, 3 மற்றும் 4 சரி (இ) 2 மற்றும் 3 சரி (ஈ) அனைத்தும் சரி
153. —- தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடி கொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடத்திலும் காட்டியவர்.
(அ) இராமலிங்க அடிகள் (ஆ) அயோத்திதாசர் (இ) பாபா ராம்சிங் (ஈ) குருநானக்
154. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. பேரியார் ஈ.வெ.இராமசாமி சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
2. மக்கள் அவரை “பெரியார் அவரை “வைக்கம் வீரர்” என பாராட்டினர்.
3. பெரியார் “சித்திர புத்திரன்” எனும் புனை பெயரில் கட்டுரைகளை எழுதினார்.
4. B.R.அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்
(அ) 1 மற்றும் 4 சரி (ஆ) 2 மற்றும் 3 சரி (இ) 1,2 மற்றும் 4 சரி (ஈ) 2 சரி
155. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்ணரசி
(அ) குயிலி (ஆ) வேலு நாச்சியார் (இ) ராணி மங்கம்மாள் (ஈ) இராணி இலட்சுமி பாய்
156. கூற்று (A) : சாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கர் எழுதியுள்ளார்.
காரணம் (R): இந்து சமய நூல்களில் இருந்த சாதி முறையை விமர்சனம் செய்தார்.
(அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மற்றும் காரணம் (R) கூற்றின் (A) சரியான விளக்கமாகும்.
(ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) கூற்றின் (A) சரியான விளக்கமல்ல
(இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
(ஈ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
157. 1952இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி ——— ஆகும்.
(அ) நாகர்கோவில் (ஆ) விருதுநகர் (இ) ஸ்ரீவில்லிப்புத்தூர் (ஈ) அருப்புக்கோட்டை
158. பின்வருவனவற்றுள் எது நேருவின் குடும்பப் பெயர் ஆகும்?
(அ) ராய் (ஆ) குல் (இ) சர்கார் (ஈ) கௌல்
159. ‘இலக்க முறை பொருளாதாரத்தில் இந்தியா ஓர் உலகளாவிய போட்டியாளராகும்” எனக் கூறியவர்
(அ) அமர்த்தியாசென் (ஆ) மன்மோகன் சிங் (இ) சுந்தர் பிச்சை (ஈ) ஜவஹர்லால் நேரு
160. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. முதல் ஐந்தாண்டு திட்டம் – 1950-1955.
2. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் – 1966-1969.
3. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் – 1997-2002.
4. பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2012-2017
(அ) 1 மற்றும் 2 சரி (ஆ) 3 மற்றும் 4 சரி (இ) 1 மற்றும் 3 சரி (ஈ) 1 மற்றும் 4 சரி
161. கூற்று (A): சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை வைத்து வங்கி இணைப்புத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.
காரணம் (R): இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பயனாளிகளை வறுமைக் கோட்டிற்கு மேல் முன்னேற்றமடையச் செய்வதாகும்.
(அ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்
(இ) (A) தவறு, மற்றும் (R) சரி
(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
162. 2022இல் ASEAN கூட்டத்தை எந்த நாடு நடத்துகிறது?
(அ) கம்போடியா (ஆ) இத்தாலி (இ) உரோம் (ஈ) இலங்கை
163. உலக் அழகி பட்டத்தினை 2021இல் வென்றவர் யார்?
(அ) ஹர்னாஸ் சந்து (ஆ) நாடியா ஃபெரேரியா (இ) லாரா தத்தா (ஈ) நந்திதா பன்னா
164. பொருத்துக:
அரசியல் கட்சி 16வது சட்டமன்றத்தில் அதன் பலம்
அ. பாட்டாளி மக்கள் கட்சி 1. 18
ஆ. விடுதலை சிறுத்தைகள் கட்சி 2. 2
இ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3. 4
ஈ. இந்திய தேசிய காங்கிரஸ் 4. 5
அ ஆ இ ஈ
அ. 3 2 4 1
ஆ. 4 2 3 1
இ. 4 3 2 1
ஈ. 2 3 4 1
165. தூய்மை சக்தி ஆராய்ச்சி முயற்சி (CERI)யின் குறிக்கோள்
(அ) புதுமைகளை வளர்ப்பது (ஆ) மலிவாகவும் அணுகக்கூடியதாகவும் பெறப்படுவது
(இ) ஆராய்ச்சியின் மூலம் வளர்ப்பது (ஈ) மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும்
166. நவம்பர் 28, 2021 அன்று, 7.5 ரிக்டர் அளவு கொண்ட ஒரு மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடம்
(அ) இந்தோனேஷியா (ஆ) பெரு (இ) பாகிஸ்தான் (ஈ) நியூசிலாந்து
167. கீழ்க்கண்டவற்றில் எந்த தாவரம் வேர் ஒட்டுண்ணி தாவரமாகும்?
(அ) விஸ்கம் (ஆ) கஸ்கூட்டா (இ) லோரான்தஸ் (ஈ) ராப்ளசியா
168. பின்வரும் வினாக்களை கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்கவும்:
கூற்று (A): அசிட்டிக் அமிலம் வலிமை குறைந்த அமிலம்.
காரணம்(R): அசிட்டிக் அமிலத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும், ஒரே ஒரு ஹைட்ரஜனை மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும்.
(அ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு
(ஆ) கூற்றும் (A) காரணமும் (R) சரி, ஆனால் காரணம் (R) கூற்று (A) விவரிக்கவில்லை
(இ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி
(ஈ) கூற்றும் (A) காரணமும் (R) சரி. காரணம் (R) கூற்றை (A) நன்கு விளக்குகிறது
169. F என்ற விசை t என்ற சால அளவில் ஒரு பொருளின் மீது செயல்பட்டால் ஏற்படும் மதிப்பு, விசை மற்றும் கால அளவின் பெருக்கற்பலனுக்கு சமமாக இருக்கும். இதனை —— என்பர்
(அ) நிலைமம் (ஆ) உந்து விசை (இ) கணத்தாக்கு (ஈ) நேரியல் உந்தம்
170.இவற்றுள் எது பாகுமை விசையின் அலகு கிடையாது?
(அ) நியூட்டன் (ஆ) பாய்ஸ் (இ) Kgm-1s-1 (ஈ) Nsm-2
171. கீழ்காண்பவற்றுள் எந்தப் பொருளின் அடர்த்தி மிகுதியானது?
(அ) காற்று (ஆ) நீர் (இ) மண்ணெண்ணெய் (ஈ) மரம்
172. x2-2xy+y2 மற்றும் x4-y4 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி காண்க:
(அ) 1 (ஆ) x+y (இ) x-y (ஈ) x2-y2
173. (-5, 0), (0, -5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க:
(அ) 0 ச.அலகுககள் (ஆ) 25 ச.அலகுககள் (இ) 5 ச.அலகுககள் (ஈ) 125 ச.அலகுககள்
174. ஒரு வட்ட வடிவப் பூங்காவின் சுற்றளவு 352 மீ, பூங்காவின் பரப்பளவு காண்க:
(அ) 8956 மீ2 (ஆ) 448 மீ2 (இ) 1452 மீ2 (ஈ) 9856 மீ2
175. ஒரு மரம் வெட்டுபவர்க்கு ஒரு மரத்துண்டை 3 துண்டுகளாக்குவதற்கு 12 நிமிடங்கள் ஆகும் எனில் அதனை 5 துண்டுகளாக்க எவ்வளவு நேரம் தேவை?
(அ) 12 நிமிடம் (ஆ) 24 நிமிடம் (இ) 30 நிமிடம் (ஈ) 36 நிமிடம்
176. 12,16,24 மற்றும் 36ஆல் வகுபடும்போது ஒவ்வொரு முறையும் 7ஐ மீதியாக தரக்கூடிய மிகச்சிறிய மதிப்புடைய எண் ——- ஆகும்.
(அ) 151 (ஆ) 51 (இ) 36 (ஈ) 144
177. 382 என்பது 238 எனவும் 473 என்பது 347, ……… எனவும் எழுதப்பட்டால், பின்வரும் இரு எண்களில் எந்த இரு எண்களின் வித்தியாசம், மிகக் குறைவானதாக இருக்கும்
(அ) 473, 382 (ஆ) 629, 728 (இ) 629, 568 (ஈ) 728, 847
178. REDன் குறியீடு 6720 எனில் GREENன் குறியீடு
(அ) 1677199 (ஆ) 1677209 (இ) 16717209 (ஈ) 9207716
179. ABCD : OPQR : : WXYZ : ?
(அ) EFGH (ஆ) KLMN (இ) QRST (ஈ) STUV
180. இரண்டு இலக்கங்களைக் கொண்ட ஓர் எண்ணின் இலக்ககங்களின் கூடுதல் 9. ஆந்த எண்ணிலிருந்து 27ஐக் கழிக்க அவ்வெண்களின் இலக்கங்கள் இடம் மாறிவிடும். ஏனில், அவ்வெண்ணைக் காண்க:
(அ) 36 (ஆ) 45 (இ) 54 (ஈ) 63
181. சுருக்குக: 20 + [8×2+ {6×3-105}]
(அ) 40 (ஆ) 57 (இ) 52 (ஈ) 48
182. ரூ.640 ஆனது இரண்டு ஆண்டுகளில் கூட்டுத்தொகை ரூ.774.40 ஆகும். எனில் கூட்டு வட்டி விகிதம் காண்:
(அ) 10% (ஆ) 12% (இ) 12.5% (ஈ) 14%
183. ஓர் இரு சக்கர வாகனத்தின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1,00,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 5% வீதம் குறைகிறது எனில் அதன் தற்போதைய மதிப்பு
(அ) ரூ.80,000 (ஆ) ரூ.80,250 (இ) ரூ.90,250 (ஈ) ரூ.95,000
184. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்கள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவை எந்த புரட்சியின் முழக்கங்கள்?
(அ) அமெரிக்கப் புரட்சி (ஆ) பிரெஞ்சுப் புரட்சி (இ) ரஷ்யப் புரட்சி (ஈ) சீனப் புரட்சி
185. கூற்று (A): அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக மக்களவைக்கு பொறுப்புடையவர்கள்.
காரணம் (R): அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
(அ) (A) சரி ஆனால் (R) தவறு (ஆ) (A) மற்றும் (R) சரி (A) க்கான சரியான விளக்கம் (R) ஆகும்
(இ) (A) தவறு, (R) சரி (ஈ) (A) மற்றும் (R) சரி (A)க்கான சரியான விளக்கம் (R) ஆகாது
186. பின்வருவனவற்றுள் எது அரசியல் அமைப்பின் பாதுகாவலனாகக் கருதப்படுகின்றது?
(அ) சட்டமன்றம் (ஆ) ஆட்சித்துறை (இ) அமைச்சரவை (ஈ) உச்ச நீதிமன்றம்
187. கீழ்காண்பவற்றை அதன் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் சரியாக கால வரிசைப்படுத்தவும்:
1.மத்திய கண்காணிப்பு ஆணையம்.
2. மத்திய புலனாய்வு குழு.
3. மத்திய தகவல் ஆணையம்.
4. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்
(அ) 1,3,2,4 (ஆ) 2,4,3,1 (இ) 2,1,3,4 (ஈ) 3,2,1,4
188. சிந்து சமவெளி நாகரீகத்தின் வடக்கோர குடியிருப்பு எது?
(அ) சுட்காஜென்டோர் (ஆ) ஷோர்டுகை (இ) ஆலம்கிர்பூர் (ஈ) டைமாபாத்
189. சமுத்திரகுப்தர் காலத்தைச் சாராதவர்
(அ) புஷ்யவர்மன் (ஆ) பாஸ்கர்வர்மன் (இ) விஷ்ணுகோபா (ஈ) ஸ்ரீ மேகவர்மன்
190. சரியானக் கூற்றை தேர்வு செய்க:
1. இந்தியப் பாரம்பரியம் விருந்தோம்பல்,ஈகை,நட்பு,அன்பு,ஒழுக்கம்,உண்மை, ஆகியவற்றைக் கொண்டது.
2. அஜந்தா மற்றும் எல்லோரா ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
3.சமணர்கள் புத்த பூர்ணிமாவை கொண்டாடுகின்றனர்.
4. புரத நாட்டியம், குச்சுப்புடி,கதக்களி,மணிப்புரி மற்றும் ஒடிசி போன்றவை இந்தியாவின் புகழ் பெற்ற நடனக்கலைகளாகும்.
(அ) 1 மற்றும் 2 சரி (ஆ) 4 மட்டும் சரி (இ) 3 மட்டும் சரி (ஈ) 1,2 மற்றும் 4 ஆகியவை சரி
191. கூற்று (A): இமயமலை ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
காரணம்(R): இமயமலை சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக உருவாகியது.
(அ) (A)சரி (R)தவறு (ஆ) (A) தவறு (R) சரி
(இ) (A), (R) ஆகிய இரண்டும் சரி (ஈ) (A), (R) ஆகிய இரண்டும் தவறு
192. கங்கை நதியின் வலது கரையின் துணை நதி
(அ) ராம் கங்கா (ஆ) மனாஸ் (இ) கோசி (ஈ) யமுனா
193. கீழ்க்கண்ட ஆறுகளை அவற்றின் துணையாறுகளுடன் பொருத்தவும்:
அ. சிந்து நதி 1. கோமதி.
ஆ. கங்கை நதி 2. இந்திராவதி.
இ. பிரம்மபுத்திரா நதி 3. சீனாப்.
4. கோதாவரி நதி 4. சுபன்ஸ்ரீ
அ ஆ இ ஈ
அ. 3 1 2 4
ஆ. 2 4 3 1
இ. 2 4 1 3
ஈ. 4 2 3 1
194. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
அமைப்புகளின் பெயர்கள் அமைவிடம்
அ. அரசு மருத்துவக் கல்லூரி 1. தென் சென்னை
ஆ. புற்றுநோய்க்கான சிறப்பு மையம், அறிஞர்
அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 2. கே.கே.நகர், சென்னை.
இ. மறுவாழ்வு சிறப்பு மருத்துவ நிறுவன மையம் 3.காஞ்சிபுரம்.
ஈ. பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 4. திருவள்ளுர்
அ ஆ இ ஈ
அ. 1 3 4 2
ஆ. 3 4 2 1
இ. 4 3 2 1
ஈ. 3 4 1 2
195. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் (TNAU) கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) எங்கு உள்ளது?
(அ) தஞ்சாவூர் (ஆ) திண்டுக்கல் (இ) சேலம் (ஈ) திருநெல்வேலி
196. தாமிரபரணி என்பது ——– உச்சியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு வற்றாத நதியாகும்.
(அ) அகதஸ்தியர் கூடத்தில் பொதிகை மலை (ஆ) சிவஞான தீர்த்தம்
(இ) வருசநாடு மலைகள் (ஈ) தென்பெண்ணை
197. மனித வாழ்க்கைக்குரிய பழியென்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
(அ) நிலையற்ற வாழ்வு (ஆ) மக்கட்பேறு இல்லாத வாழ்வு
(இ) புகழற்ற வாழ்வு (ஈ) அன்பற்ற வாழ்வு
198. ஆள்வோரின் செல்வத்தைத் தேய்க்கும் படை எது?
(அ) கொடியோரை ஒறுத்தல் (ஆ) ஒல்லாது வானம் பெயல்
(இ) புகழ்ந்தாருக்குக் கொடுக்கப்படும் பரிசு (ஈ) ஆற்றாது அழுத கண்ணீர்
199. திருநங்கை நலவாரியம் பின்வருவனவற்றுள் எந்தத் துறையின் கீழ் செயல்படுகிறது?
(அ) சுகாதாரம் மற்றும் குடுமு;ப நலத்துறை (ஆ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
(இ) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை (ஈ) சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை
200. “இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு”
இக்குறளில் குறிப்பிடும் “இறை” என்பதன் பொருள்
(அ) இறைவன் (ஆ) அரசன் (இ) உயர்ந்தவன் (ஈ) மேன்மக்கள்