Tnpsc Executive Officer Grade IV Exam Previous Questions and Answer Key 2022 – Hindu Religion Saivam And Vainavam in Tamil
Tnpsc Executive Officer Grade IV Exam Previous Questions and Answer Key 2022 – Hindu Religion Saivam And Vainavam in Tamil
EXECUTIVE OFFICER, GRADE- IV (GROUP- VIII SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE
1. மனிதன் என்னும் சொல்லிலுள்ள “மன்” என்பதன் பொருள் யாது?
(அ) நிலையில்லாதவன் (ஆ) நினைப்பவன் (இ) விதைப்பவன் (ஈ) அறுப்பவன்
2. பொருத்துக:
அவத்தை இடம்
அ. துரியம் 1. கழுத்து
ஆ. சொப்பனம் 2. நாபி
இ. துரியாதீதம் 3. இருதயம்
ஈ. சுழுத்தி 4. மூலாதாரம்
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
அ. 3 1 4 2
இ. 4 2 1 3
ஈ. 2 1 4 3
3. ஆன்மா மலங்களிலிருந்து பிரிந்த நிலை ———– எனப்படும்.
(அ) சக்தினிபாதம் (ஆ) மலபரிபாதம் (இ) இருவினை ஒப்பு (ஈ) சீவன் முக்தி
4. ஆன்மாக்களின் மூவகை குணங்களை கண்டறிக:
(அ) சாத்வீகம், இராஜஸம், தாமஸம் (ஆ) வைகாரி, மத்திமை, சூக்குமை
(இ) அருத்தம், புத்திரன், உலகம் (ஈ) குரோதம், லோபம், மோகம்
5. அளவைகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க:
(அ) காண்டல் அளவை, கருதல் அளவை, நூலளவை
(ஆ) நூலளவை, காண்டல் அளவை, கருதல் அளவை
(இ) கருதல் அளவை, காண்டல் அளவை, நூலளவை
(ஈ) காண்டல் அளவை, நூலளவை, கருதல் அளவை
6. சிவனின் அவதாரமாக கருதப்படுபவர் யார்?
(அ) கணபதி (ஆ) சுப்ரமணியர் (இ) ஸ்ரீராமர் (ஈ) ஆதிசங்கரர்
7. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. கிருதயுகம் 1. 2400 வருடம்
ஆ. திரேதாயுகம் 2. 3600 வருடம்
இ. துவாபரயுகம் 3. 4800 வருடம்
ஈ. கலியுகம் 4. 1200 வருடம்
அ ஆ இ ஈ
அ. 2 3 4 1
ஆ. 2 1 3 4
இ. 4 3 2 1
ஈ. 3 2 1 4
8. கிருஷ்ணபட்சம் என்பது ——— பிறகு வரும் 15 நாட்கள்
(அ) கிருஷ்ண ஜெயந்திக்கு (ஆ) பௌர்ணமிக்கு
(இ) அமாவாசைக்கு (ஈ) கார்த்திகைக்கு
9. அத்வைதத்தின்படி ஈஸ்வரன் என்பவர்
(அ) நிர்குணபிரம்மன் (ஆ) பரபிரம்மன் (இ) அபரபிரம்மன் (ஈ) அனந்தபிரம்மன்
10. கீழ்க்கண்டவற்றுள் துவைத கொள்கையோடு பொருந்தாத ஒன்று எது?
(அ) உலகம் ஒரு தோற்றமல்ல, உண்மையானதே
(ஆ) பரமாத்மா, ஜீவாத்மா மற்றும் உலகம் நித்தியமானவை
(இ) முக்தி பெற்ற ஆன்மாவானது இறைவனோடு ஒன்றாகிவிடுகிறது.
(ஈ) ஜீவாத்மாக்களுக்கு ஜனனம் மற்றும் மரணம் உண்டு
11. துவைதம் என்பதன் பொருள் யாது?
(அ) இரண்டு (ஆ) மூன்று (இ) இரண்டு அல்லாதது (ஈ) ஒன்று
12. மத்துவர் எத்தனை வகையான பேதங்களை குறிப்பிடுகிறார்?
(அ) இரண்டு வகை (ஆ) ஐவகை (இ) எண்வகை (ஈ) மூவகை
13. ஆழ்வார்களின் பாசுரங்களை நாலாயிரதிவ்ய பிரபந்தமாக தொகுத்தவர்
(அ) நாதமுனி (ஆ) நம்மாழ்வார் (இ) ஆண்டாள் (ஈ) சடகோபன்
14. வேதங்கள் யாராலும் எழுதப்படவில்லை எனக் கூறுவது
(அ) அத்வைதம் (ஆ) விசிட்டாத்துஐவதம் (இ) பூர்வ மீமாம்சை (ஈ) துவைதம்
15. சப்த பிரமாணத்திற்ககு முதலிடம் தரும் தத்துவம்
(அ) அத்வைதம் (ஆ) வைசேசிகம் (இ) நியாயம் (ஈ) மீமாம்சை
16. “வியாப்தி” என்றச் சொல்லானது கீழ்க்கண்ட எந்த அளவையோடு தொடர்புடையது?
(அ) காண்டல் (ஆ) கருதல் (இ) உரை (ஈ) உவமானம்
17. யோகத்தின் அங்கங்கள் எத்தனை?
(அ) எட்டு (ஆ) பத்து (இ) பதினெட்டு (ஈ) பன்னிரெண்டு
18. வைசேடிகம் தரிசனத்தின் பார்வையில் ——– திரவியங்கள் உள்ளன.
(அ) ஒன்பது (ஆ) ஏழு (இ) ஐந்து (ஈ) இரண்டு
19. மீமாம்ச சூத்திரத்தை இயற்றியவர்
(அ) சாபர முனிவர் (ஆ) ஜைமினி (இ) புத்தர் (ஈ) குமரில பட்டர்
20. கீழ்க்கண்ட இரு பட்டியல்களை பொருத்துக:
அ. ஸ்தூல பஞ்சாக்கரம் 1. சிவாயநம
ஆ. சூட்சும பஞ்சாக்கரம் 2. சிவ
இ. காரண பஞ்சாக்கரம் 3. நமசிவாய
ஈ. முகாகாரண பஞ்சாக்கரம் 4. சிவாயசிவ
அ ஆ இ ஈ
அ. 3 1 4 2
ஆ. 4 2 1 3
இ. 2 3 4 1
ஈ. 1 2 3 4
21. பின்வருவனவற்றில் எத்திருக் கோயில்களில் பாஞ்சராத்ர ஆகம விதி பின்பற்றப்படவில்லை?
(அ) திருவேங்கடம் (ஆ) திருவரங்கம்
(இ) திருநாராயணபுரம் (ஈ) காஞ்சிபுரம்
22. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் அதிக சாத்திரங்களை அருளியது யார்?
(அ) மெய்கண்டார் (ஆ) உமாபதி சிவம்
(இ) அருணந்தி சவிhசாரியார் (ஈ) மணவாசகர்
23. ——— என்ற சாத்திரத்தின் பெரும் பகுதிகளை டாக்டர் கிராண்ட், நல்லசாமிப் பிள்ளை, சிவராமன் ஆகியோர் ஆங்கிலத்திலும், B.D.ஜெயின் இந்தி மொழியிலும் வெளியிட்டு இருக்கிறார்கள்
(அ) சிவஞானபோதம் (ஆ) சிவஞானசித்தியார்
(இ) சிவப்பிரகாசம் (ஈ) உண்மைநெறி விளக்கம்
24. இந்திய தத்துவ அமைப்பில், ஆத்திக பிரிவில் எத்தனை ——— அமைப்புகள் உள்ளது.
(அ) நான்கு வகை (இ) மூன்று வகை (இ) ஒன்பது வகை (ஈ) ஆறு வகை
25. பசுபதிநாதர் என்று அழைக்கப்படும் கடவுள் யார்?
(அ) மீனாட்சி (ஆ) சிவன் (இ) விஷ்ணு (ஈ) சக்தி
26. அங்க வழிபாடுகளில் எது சரியான அர்த்தம் கொள்கிறது?
(அ) பாத்யம்-உருவேற்றல் (ஆ) தியானம்-ஒன்றுதல்
(இ) ஸ்நானம்-அமர்வித்தல் (ஈ) புஷ்பம்-சந்தனம் பூசுதல்
27. சுவாமி விவோகனந்தரின் குருநாதர் யார்?
(அ) அரவிந்தர் (ஆ) ஸ்ரீராமகிருஷ்ணர் (இ) வள்ளலார் (ஈ) பூண்டி மகான்
28. ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த கோயிலில் அர்ச்சகராக இருந்தார்?
(அ) சக்தி கோயில் (ஆ) விநாயகர் கோயில் (இ) சிவன் கோயில் (ஈ) காளி கோயில்
29. வேதம் என்பதற்கு ———- நூல் என்பது பொருள்
(அ) அறிவு (ஆ) புகழ் (இ) இன்பம் (ஈ) பண்பு
30. ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்யப்பட்ட திருப்பதிகள் எத்தனை?
(அ) 100 (ஆ) 101 (இ) 110 (ஈ) 108
31. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து விடையளி:
கூற்று (A): ஆன்மா இறைவனை அடைந்து இன்புறும்
காரணம் (R): கச்சியப்ப முனிவர் இச்சின்முத்திரை காட்டுகிறது
(அ) (A) மற்றும் (R) சரியானது, (A) விற்கு காரணம் (R) ஆகும்.
(ஆ) (A) மற்றும் (R) சரியானது, (A) காரணம் அல்ல
(இ) (A) சரியானது ஆனால் (R) தவறு
(ஈ) (A) மற்றும் (R) தவறானது
32. ஆகாய தலம் என அழைக்கப்படும் ஊர்
(அ) திருச்சி (ஆ) காளஹஸ்தி (இ) சிதம்பரம் (ஈ) திருவண்ணாமலை
33. சைவத்திருமுறைகளைத் தொகுத்தளித்வர் யார்?
(அ) நம்பியாண்டார் நம்பி (ஆ) சேக்கிழார் (இ) மணிவாசகர் (ஈ) திருமூலர்
34. தெய்வானை எந்த சக்தியுடன் ஒப்பிடப்படுகிறார்?
(அ) இச்சாசக்தி (ஆ) கிரியாசக்தி (இ) ஞானசக்தி (ஈ) மாயசக்தி
35. பின்வருவனவற்றுள் சரியான, கடவுள் – வாகன தொகுப்பு எது?
(அ) சிவன் – கருடன், விஷ்ணு – மூஷிகம், விநாயகர் – நந்தி, அம்பிகை – சிம்மம்
(ஆ) சிவன் – சிம்மம், விஷ்ணு – நந்தி, விநாயகர் – கருடன், அம்பிகை – மூஷிகம்
(இ) சிவன் – மூஷிகம், விஷ்ணு – கருடன், விநாயகர் – சிம்மம், அம்பிகை – நந்தி
(ஈ) சிவன் – நந்தி, விஷ்ணு – கருடன், விநாயகர் – மூஷிகம், அம்பிகை – சிம்மம்
36. சார்ங்கம் என்னும் பெயர் விஷ்ணுவின் கையில் உள்ள எந்த ஆயுதத்தைக் குறிக்கும்?
(அ) வில் (ஆ) கதை (இ) சக்கரம் (ஈ) சங்கு
37. ஆலயத்தின் பிரதான திருமேனி நிறுவப்பட்டிருக்கும் கர்ப்பக்கிரகத்தின் மறு பெயர்
(அ) பிரகாரம் (ஆ) மூலஸ்தானம் (இ) விமானம் (ஈ) மூர்த்திஸ்தானம்
38. சிவாலயங்களில் வடக்குப் பிரகாரத்தில் கோமுகிக்கு அருகில் ஒரு தனி சன்னதியில் அமர்ந்திருக்கும் மூர்த்தியின் பெயர்
(அ) பைரவர் (ஆ) நந்தி தேவர் (இ) சண்டேசுவரர் (ஈ) தட்சிணாமூர்த்தி
39. ஆலயங்கள் அழிந்து போனால் திரும்பவும் புதுப்பித்துச் சீர்திருத்தம் செய்வது எது?
(அ) ஸ்தாபனம் (ஆ) அவகுண்டனம் (இ) அர்க்கியம் (ஈ) அநாவர்த்தம்
40. இறைவனின் அருவுருத்திருமேனியை ———, ———– என்றும் அறியப்படுகிறது.
(அ) சத்தன், இலயசிவன் (ஆ) உத்தியுத்தன், சதாசிவன்
(இ) பிரவிருத்தன், மகேசன் (ஈ) ஆகாசே, இந்த்ரியேஷ்
41. சைவசித்தாந்தத்தின் கருத்துப்படி எது சார்ந்ததன் வண்ணமாகும்?
(அ) கடவுள் (ஆ) ஆன்மா (இ) உடல் (ஈ) சிந்தனை
42. பாண்டிய மன்னாகிய கூன்பாண்டியன் ———- என்பவராலும், பல்லவப் பேரரசனாகிய மகேந்திரவர்மன் ———- என்பவராலும் சைவசமயத்திற்கு மாறினார்.
(அ) திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் (ஆ) திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர்
(இ) சுந்தரர், திருஞானசம்பந்தர் (ஈ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
43. “பெண்ணான் அலியெனும் பெற்றியன் காண்க” என சிவபெருமானை குறிப்பிடுவது
(அ) திருவாசகம் (ஆ) திருமந்திரம் (இ) திருப்பல்லாண்டு (ஈ) பெரியபுராணம்
44. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பொதுவாக எவ்வாறு குறிக்கப் பெறுகின்றனர்?
(அ) சந்தானக்குரவர் (ஆ) சமயக்குரவர் (இ) ஆச்சாரியார்கள் (ஈ) மாமுனிவர்
45. “சிவஞான சித்தியார்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
(ஆ) உமாபதி சிவம் (ஆ) தொல்காப்பியர்
(இ) இளங்கோவடிகள் (ஈ) அருள்நந்திதேவர்
46. கீழ்கண்டவற்றுள் நூல் – ஆசிரியர் சரியானதை குறிப்பிடுக:
1. சிவஞானபோதம் – மெய்கண்டார்
2. திருமந்திரம் – திருமூலர்
3. தொண்ணூறு கண்ணிகள் – திருகோணச்சித்தர்
4. திருவாசகம் – மாணிக்கவாசகர்
(அ) 1 மற்றும் 2 சரி (ஆ) 1 மற்றும் 3 சரி
(இ) 1 மற்றும் 4 சரி (ஈ) அனைத்தும் சரி
47. கீழ்கண்டோரில் மாணிக்கவாசகர் பின்பற்றிய மெற்நெறி ———- எனப்படும்
(அ) சற்புத்திர மார்க்கம் (ஆ) தாச மார்க்கம்
(இ) சக மார்க்கம் (ஈ) சன் மார்க்கம்
48. திருத்தொண்டத் தொகையின் பேருரையாய் விளங்கும் திருத்தொண்டர் புராணத்தை அருளிச்செய்தவர் யார்?
(அ) திருவாதவூர் அடிகள் (ஆ) நம்பியாண்டார் நம்பி
(இ) திருமாளிகைத் தேவர் (ஈ) சேக்கிழார்
49. முருகனுடைய வாகனம் எது?
(அ) நந்தி (ஆ) சேவல் (இ) கருடன் (ஈ) மயில்
50. காரைக்கால் அம்மையார், இறைவனிடம் வேண்டி கேட்ட “எற்புடம்பு” என்பது ————- ஆகும்
(அ) அழகிய உருவம் (ஆ) பேய் உருவம் (இ) விலங்கு உருவம் (ஈ) இறை உருவம்
51. கீழ்க்கண்டவற்றுள் பரமுக்தி தருவது எது?
(அ) கிரியை (ஆ) ஞானம் (இ) யோகம் (ஈ) சரியை
52. பொருத்துக:
அ. யோகம் 1. திருநாவுக்கரசர்
ஆ. சரியை 2. நம்பிஆரூரர்
இ. ஞானம் 3. திருஞானசம்பந்தர்
ஈ. கிரியை 4. மாணிக்கவாசகர்
அ ஆ இ ஈ
அ 2 1 4 3
ஆ. 2 4 1 3
இ. 3 1 4 2
ஈ. 4 2 1 3
53. “சகலாகம பண்டிதர்” எனப் பெயர் பெற்றவர்
(அ) பரஞ்சோதி முனிவர் (ஆ) மெய்கண்ட தேவர்
(இ) அருணந்தி சிவாச்சாரியார் (ஈ) உமாபதி சிவம்
54. ஐந்தாம் வேதம் என்று சிறப்பித்துக் கூறப்படும் நூல் எது?
(அ) தொல்காப்பியம் (ஆ) திருக்குறள் (இ) இராமாயணம் (ஈ) மகாபாரதம்
55. திருத்தொண்டர்புராணத்தை ——— என்றும் அழைப்பர்
(அ) பெரியபுராணம் (ஆ) கந்தபுராணம்
(இ) சிவபுராணம் (ஈ) திருவிளையாடற்புராணம்
56. கூற்று (A): அடியார்கள் இறைவனை அம்மையப்பராகக் கண்டனர்.
காரணம் (R): சமண சமயம் இளமைத் துறவை ஆதரித்தது
(அ) (A) மற்றும் (R) சரி, (A) விற்கான காரணம் (R) ஆகும்
(ஆ) (A) மற்றும் (R) சரி, (A) விற்கான காரணம் (R) அல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறானது
(ஈ) (A) மற்றும் (R) தவறானவை
57. முதன் முதலில் பதிகப் பெருவழியைக் காட்டியவர் யார்?
(அ) திருஞானசம்பந்தர் (ஆ) அப்பர்
(இ) மாணிக்கவாசகர் (ஈ) காரைக்கால் அம்மையார்
58. இவைகளில் எந்த அவதாரம் உபேந்திரர் என்ற பேருடன் தொடர்புடையது
(அ) வாமன அவதாரம் (ஆ) வராக அவதாரம் (இ) மச்ச அவதாரம் (ஈ) கூர்ம அவதாரம்
59. நேபாளத்தில் பின்பற்றப்படும் சைவப் பிரிவு ———- எனப்படும்
(அ) பிரத்தியபிஞ்சை சைவம் (ஆ) லகுலீச பாசுபத சைவம்
(இ) சிவாத்துவித சைவம் (ஈ) பாடாணவாத சைவம்
60. முதல் நாள் திருவிழா அன்று எல்லாக் கோவில்களும் எதனைக் கடைபிடிக்கிறார்கள்?
(அ) மண் எடுத்தல் (ஆ) குடமுழுக்கு (இ) அட்டபந்தனம் (ஈ) கொடியேற்றம்
61. திருஞானசம்பந்தர் ———– என்பாரின் சுர நோயை தீர்த்தார்
(அ) சேர மன்னன் நெடுமாறன் (ஆ) வரகுண பாண்டியன்
(இ) சோழ மன்னன் நெடுமாறன் (ஈ) பாண்டிய மன்னன் நெடுமாறன்
62. அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் தம்பதியினர் சிற்றின்பத்திலிருந்து விலகி கடவுள் பணி மேற்கொள்ளும் பொருட்டு ———–ஆன மாங்கல்யம் பூட்டுவர்
(அ) துளசி மணி (ஆ) உருத்திராட்சமணி (இ) நவமணி (ஈ) கருங்காளி மணி
63. சுக்லபட்ச ஏகாதசி ———– மாதத்தில் கொண்டாடப்படும்
(அ) தை (ஆ) மாசி (இ) பங்குனி (ஈ) மார்கழி
64. கீழ்க்கண்டவற்றுள் இறைவனின் ஐந்து தொழில்களில் சேராதது எது?
(அ) சிருட்டி (ஆ) சுருதி (இ) சம்ஹாரம் (ஈ) திரோபவம்
65. தசரா பண்டிகை எந்த மாதத்தில் கொண்டாடப்படுகின்றது?
(அ) புரட்டாசி (ஆ) ஐப்பசி (இ) கார்த்திகை (ஈ) மார்கழி
66. கீழ்க்கண்டவற்றுள் மந்திரத்தின் வகையோடு தொடர்பு இல்லாதது எது?
(அ) சித்தம் (ஆ) ஸாத்யம் (இ) ஸ்வசிதம் (ஈ) ஹபு
67. “அடியேன் இறைவனை வணங்குவதற்க அனுமதி செய்தருளும்” என்று யாரிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்?
(அ) விநாயகர் (ஆ) துவாரபாலகர் (இ) சண்டிகேஸ்வரர் (ஈ) அர்த்தநாரீஸ்வரர்
68. கீழ்க்கண்டவற்றுள் சிவபிரானின் “அட்டவீரட்டங்களில்” சேராதது எது?
(அ) திருக்கண்டியூர் (ஆ) திருக்கோவலூர் (இ) திருவதிகை (ஈ) திருவண்ணாமலை
69. நவராத்திரி விழாவில், நடு மூன்று நாட்களில் வழிபடுகின்ற பெண் தெய்வம்
(அ) பார்வதி தேவி (ஆ) இலட்சுமி தேவி (இ) சரஸ்வதி தேவி (ஈ) துர்கா தேவி
70. கீழ்க்கண்டவற்றுள் தென் திசைக்கயிலை வரிசையில் சேராதது எது?
(அ) திருக்காளத்தி (ஆ) திருச்சிராப்பள்ளி
(இ) திருக்கோண மலை (ஈ) திருவிடைமருதூர்
71. புதிதாகக் கட்டி முடித்த கோயிலை எவ்வாறு அழைப்பார்?
(அ) ஆவர்த்தம் (ஆ) அநாவர்த்தம் (இ) புனராவர்த்தம் (ஈ) அந்தரிதம்
72. திருக்கோயிலின் வகைகளாக அப்பர் கூறுவது யாது?
(அ) 18 வகை (ஆ) 12 வகை (இ) 5 வகை (ஈ) 10 வகை
73. ஆலய நிர்மாணங்களின் வகைகளை சரியாக வரிசைப்படுத்து
(அ) ஆவர்த்தம், அநாவர்த்தம், அனுஞ்ஞை மற்றும் அந்தரிதம்
(ஆ) புனராவர்த்தம், கலாகர்ஷணம், அநாவர்த்தம் மற்றும் அந்தரிதம்
(இ) ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம் மற்றும் அந்தரிதம்
(ஈ) அனுஞ்ஞை, ஸ்பர்சாகுதி, கலாகர்ஷணம் மற்றும் அந்தரிதம்
74. கோயிலின் அர்த்த மண்டபம் மனித உடலின் எந்த பகுதியை குறிக்கிறது?
(அ) செவி (ஆ) மார்பு (இ) தொப்புள் (ஈ) கழுத்து
75. பலிபீடம் ———-ஐ உணர்த்துகிறது
(அ) பாசம் (ஆ) பதி (இ) பசு (ஈ) பதி மற்றும் பசு
76. கீழ்க்கண்டவற்றுள் ஸ்தூலலிங்கமாக கருதப்படுவது எது?
(அ) கொடிமரம் (ஆ) கோபுரம் (இ) விமானம் (ஈ) கோபுரம் மற்றும் விமானம்
77. ———-யால் ஆணவமலம் அகலும் மற்றும் ——–யால் கர்மபாசம் விலகும்
(அ) மானத தீக்கை, யோக தீக்கை (ஆ) ஸ்பரிச தீக்கை, மானத தீக்கை
(இ) நயன தீக்கை, ஸ்பரிச தீக்கை (ஈ) மந்திர தீக்கை, ஒளத்திரி தீக்கை
78. கீழ்க்கண்டவற்றுள் நயனதீக்கையோடு பொருந்தாத கூற்று எது?
(அ) குரு தனது அருட்பார்வையால் மாணவனை நோக்குதல்
(ஆ) மெய்கண்டார் அருணந்தி சிவாச்சாரியாரை அருட்கண்ணால் நோக்கி தீக்கையளித்தார்
(இ) நயனதீக்கை மாயை மலத்தை அகற்றும்
(ஈ) குருவின் பார்வையால் மாணவனின் திருவருள் பெருகும்
79. “காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே” என்ற உபதேசத்தை வழங்கியது
(அ) மருதவாணன் (ஆ) சேந்தனார் (இ) பட்டினத்தார் (ஈ) இளங்கோவடிகள்
80. “உள்ளம் பெருங்ககோயில் ஊனுடம்பாலயம்”… என்ற பாடலை பாடியவர்
(அ) திருஞானசம்பந்தர் (ஆ) சுந்தரர் (இ) திருநாவுக்கரசர் (ஈ) திருமூலர்
81. திருமங்கையாழ்வார் அருளிய பாசுரங்கள் எத்தனை?
(அ) 6 (அ) 4 (இ) 12 (ஈ) 2
82. வைணவ ஆச்சாரியர்களில் ஒருவரான யமுனாச்சாரியார் எழுதிய நூல்
(அ) ஸ்ரீபாஷ்யம் (ஆ) யோகசாரம் (இ) சித்தித்திரயம் (ஈ) யோக ரகசியம்
83. இராமானுஜர் பிறந்த ஊர் எது?
(அ) ஸ்ரீரங்கம் (ஆ) காஞ்சிபுரம் (இ) ஸ்ரீபெரும்புதூர் (ஈ) காலடி
84. இராமானுஜர் ஏற்கும் வாதத்தின் பெயர் என்ன?
(அ) சத்காரிய வாதம் (ஆ) அசத்காரிய வாதம்
(இ) பரிணாம வாதம் (ஈ) விவர்த்த வாதம்
85. வைணவத்தில் “சேதம்” என்பதன் பொருள் யாது?
(அ) சேர்த்தல் (ஆ) பிரித்தல் (இ) உயிர் (ஈ) உலகம்
86. வைணவ மறைபொருளை இராமானுஜருக்கு உபதேசித்த ஆசிரியர்
(அ) பெரியவாச்சான் பிள்ளை (ஆ) நஞ்சீயர்
(இ) திருக்கோட்டியூர் நம்பி (ஈ) எவருமில்லை
87. திருமாலின் திருச்சங்கின் அம்சமாய்த் திகழும் ஆழ்வார் யார்?
(அ) பொய்கையாழ்வார் (ஆ) பூதத்தாழ்வார்
(இ) பேயாழ்வார் (ஈ) திருமழிசையாழ்வார்
88. “பக்தி சாரர்” என்னும் திருப்பெயரால் அறியப்படுபவர்
(அ) திருமங்கை ஆழ்வார் (ஆ) திருமழிசை ஆழ்வார்
(இ) மதுரகவி ஆழ்வார் (ஈ) ஆண்டாள்
89. கீழ்க்கண்டவர்களுள் கிணற்றில் உண்டானதொரு செவ்வல்லிப்பூவில் அவதரித்தவர் யார்?
(அ) பொய்கையாழ்வார் (ஆ) பெரியாழ்வார்
(இ) பூதத்தாழ்வார் (ஈ) பேயாழ்வார்
90. வேதங்களை திருடிச் சென்று கடலில் ஒளித்து வைத்தது யார்?
(அ) நரகாசுரன் (ஆ) ஹயக்கீரீவன் (இ) ஹிரண்யன் (ஈ) மகாபலி
91. வைணவத்தில் பாஞ்சஜன்யம் என்பது
(அ) கதை (ஆ) வேல் (இ) சங்கு (ஈ) அம்பு
92. திருடப்பட்ட வேதங்களை மீட்க, மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் எது?
(அ) கூர்மாவதாரம் (ஆ) வராகாவதாரம்
(இ) மச்சாவதாரம் (ஈ) பரசுராமாவதாரம்
93. பாஞ்சாராத்திர ஆகமத்தை அருளியவர் யார்?
(அ) எம்பெருமான் (ஆ) இராமானுஜர் (இ) வியாசர் (ஈ) ஆழ்வார்கள்
94. விஷ்ணு என்பதன் பொருள் யாது?
(அ) கற்பக மரம் (ஆ) புண்ணியம் (இ) அழித்தல் (ஈ) எங்கும் நிறைந்தவன்
95. சரியானவற்றை பொருத்துக:
வைஷ்ணவாகமம்
(அ) பாஞ்சராத்ட்ரா (ஆ) தைத்ரியா (இ) வேதாந்த சூத்ரம் (ஈ) சக்தாகமம்
96. வேதாந்தத்தில் காணப்பெறும் “லீலா வாதத்தின்” நோக்கம் எதனை விளக்குகிறது?
(அ) பிரபஞ்சப் படைப்பு (ஆ) “ஓம்” காரத்தை
(இ) வழிபாட்டு முறை (ஈ) முக்தி நிலை
97. “உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்” என்ற பாசுரம் எந்த நூலில் இடம் பெறுகிறது?
(அ) மனுஸ்மிருதி (ஆ) பிரம்மசூத்திரம் (இ) திருவாய்மொழி (ஈ) நியாயசூத்திரம்
98. மிக உயரிய தெய்வமாக மகாபாரத்தில் குறிப்பிடுவது எந்தக் கடவுளை?
(அ) நாராயணன் (ஆ) சிவன் (இ) அனுமன் (ஈ) பிரம்மன்
99. சரியான இணையைக் கண்டறிக:
1. மச்ச அவதாரம் – ஹிரண்யாக்ஷன்.
2. வராக அவதாரம் – மகாபலி.
3. வாமன அவதாரம் – ஹயக்கிரீவன்.
4. பரசுராம அவதாரம் – கார்த்தவீரியார்ஜீனன்
(அ) 1 (ஆ) 2 (இ) 3 (ஈ) 4
100. “பரபிரம்மமே” நாராயணன் என அறுதியிட்டு கூறிய உபநிடதம் எது?
(அ) தைத்ரிய உபநிடதம் (ஆ) சண்டோக்ய உபநிடதம்
(இ) மாண்டூக்ய உபநிடதம் (ஈ) சுபலா உபநிடதம்
101. உபநிடதங்களில் “நாராயணன்”, இறைவனை இராமானுஜர் எவ்வாறு அடையாளப்படுத்துகிறார்?
(அ) அய்த்ரேயா (ஆ) பரபிரம்மம் (இ) பரமேஷ்வரன் (ஈ) பிரமன்
102. சுத்தவித்தையின் அதிபதி யார்?
(அ) சதாசிவம் (ஆ) மகேசுவரன் (இ) உருத்திரன் (ஈ) சிவம்
103. காமம், கோபம், கொலை போன்றவை சைவசித்தாந்த குணங்களில் எதனுள் அடங்கும்
(அ) சாத்விகம் (ஆ) இராஜசம் (இ) தாமசம் (ஈ) சாத்விகம் மற்றும் இராஜசம்
104. கீழ்க்கண்டவற்றுள் உத்பிஜ்ஜம் உயிர்வர்க்கத்தோடு தொடர்பு இல்லாதது எது?
(அ) வேர்வை (ஆ) கொடி (இ) கொம்பு (ஈ) கிழங்கு
105. கீழ்க்கண்டவற்றில் புறக்கருவியின் பிருத்வி கூறில் சேராதது எது?
(அ) எலும்பு (ஆ) மஜ்ஜை (இ) தோல் (ஈ) நரம்பு
106. மூலகாரண மூர்த்தியாக கருதப்படும் கடவுள் யார்?
(அ) விநாயகர் (ஆ) பிரம்மா (இ) சிவன் (ஈ) முருகன்
107. ஓம் எனும் பிரணவத்தில் அமைந்துள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?
(அ) ஒன்று (ஆ) இரண்டு (இ) மூன்று (ஈ) நான்கு
108. அனைத்து மந்திரங்களுக்கும் மூலமந்திரமாக இருப்பது எது?
(அ) ஸ்வஸ்திக் (ஆ) காயத்ரி (இ) ஓம் (ஈ) ஸ்ரீம்
109. கீழ்க்கண்ட பட்டியல்களை பொருத்துக:
அ. பிருத்வி 1. திருக்காளத்தி
ஆ. அப்பு 2. திருவாரூர்
இ. தேயு 3. திருவானைக்கா
ஈ. வாயு 4. திருவண்ணாமலை
அ ஆ இ ஈ
அ. 1 3 2 4
ஆ. 4 3 1 2
இ. 3 2 4 1
ஈ. 2 3 4 1
110. “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று கூறியவர் இவர்
(அ) திருக்களிற்றுப்படியார் (ஆ) மணிவாசகர் (இ) திருநாவுக்கரசர் (ஈ) திருமூலர்
111. ஆனந்த தீர்த்தர் அல்லது பூர்ணபிரஞர் என்றும் அறியப்படுபவர் யார்?
(அ) சங்கராச்சாரியர் (ஆ) இராமானுஜர்
(இ) மத்வாச்சாரியர் (ஈ) பிள்ளை லோகாச்சாரியர்
112. கீழ்க்கண்டவற்றுள் மத்துவாச்சாரியார் ஏற்றுக்கொள்வது எது?
(அ) விஷ்ணுவும், சிவனும் முதன்மை கடவுளாவார்கள்
(ஆ) ஆன்மாக்களும், பருப்பொருளும் கடவுளிடம் இருந்து முழுவதும் தனித்திருப்பவை.
(இ) ஞான மார்க்கத்தின் மூலமாகவே மட்டும் கடவுளை அடையலாம்
(ஈ) முக்தி பெற்ற ஆன்மா கடவுளின் பேரின்பம் முழுமையும் அனுபவிக்க இயலாது
113. அத்வைதம் ஏற்கும் குணங்களையுடைய பரம்பொருள் எது?
(அ) நிர்குண பிரம்மன் (ஆ) சகுண பிரம்மன்
(இ) சங்கர நாராயணன் (ஈ) அர்த்தநாரீஸ்வரர்
114. இராமானுஜர் கருத்தின்படி இந்த உலகையும் உயிர்களையும் இயக்குவது
(அ) தானாக இயங்குகிறது (ஆ) இறைவன் இயக்குகிறார்
(இ) பல ஆன்மாக்கள் இணைந்து இயக்குகின்றன (ஈ) சிறு தெய்வங்கள் இயக்குகின்றனர்
115. இந்திய தத்துவ உட்பிரிவுகளில் கடவுள் இல்லை எனக் கூறும் சமயங்களின் எண்ணிக்கை
(அ) 2 (ஆ) 3 (இ) 6 (ஈ) 5
116. திருமாலின் ஆயுதங்களின் எண்ணிக்கை
(அ) மூன்று (ஆ) நான்கு (இ) ஐந்து (ஈ) ஆறு
117. ஐம்பெரும் பூதங்களில் உலகாயத மதம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை
(அ) நிலம் (ஆ) ஆகாயம் (இ) நீர் (ஈ) காற்று
118. குருமதம் என அழைக்கப்படும் பிரிவு
(அ) அத்வைதம் (ஆ) பௌத்தம் (இ) பிரபாகர மதம் (ஈ) விசிட்டாத்துவைதம்
119. சாங்கியம் கூறும் இருபத்தைந்தாம் தத்துவம்
(அ) மகத்து (ஆ) அகங்காரம் (இ) புருடன் (ஈ) மனம்
120. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக
பட்டியல்-I பட்டியல்-II
அ. வைசேடிகம் 1. அந்தரங்க சாதனம்
ஆ. ஸாமான்யம் 2. அட்டமாசித்திகள்
இ. யோகம் 3. அணுக்கொள்கை
ஈ. தாரணை 4. பொதுத்தன்மை
அ ஆ இ ஈ
அ. 3 4 1 2
ஆ. 4 3 2 1
இ. 3 1 4 2
ஈ. 3 4 2 1
121. சிவபுராணங்களின் எண்ணிக்கை
(அ) 10 ஆகும் (ஆ) 12 ஆகும் (இ) 18 ஆகும் (ஈ) 4 ஆகும்
122. சைவ சித்தாந்தம் கூறும் செம்பொருளோடும், ஞானத்தோடும் தொடர்புடைய திருக்குறளின் பகுதி
(அ) பொருட்பால் (ஆ) இன்பத்துப்பால்
(இ) அறத்துப்பால் (ஈ) பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால்
123. 108 உபநிடதங்களின் முக்கியமான உபநிடதங்கள்
(அ) 12 (ஆ) 20 (இ) 10 (ஈ) 9
124. வேதங்கள் எத்தனை வகைப்படும்
(அ) மூன்று (ஆ) நான்கு (இ) எட்டு (ஈ) பத்து
125. வெள்ளை நிற ஆடை உடுத்திய இறைவனின் பெயர் யாது?
(அ) விநாயகர் (ஆ) விஷ்ணு (இ) சிவன் (ஈ) முருகன்
126. “யாஜ்” என்னும் பதத்துக்கு ———- பொருள்
(அ) கற்றல் (ஆ) கற்பித்தல் (இ) கேட்டல் (ஈ) யாகம்
127. “சநாதனதர்மம்” என்று அழைக்கப்படும் சமயம்
(அ) புத்த சமயம் (ஆ) சமண சமயம் (இ) இந்து சமயம் (ஈ) சீக்கிய சமயம்
128. சுவாமி விவேகானந்தர் சர்வ “சமய மாநாட்டில் உரை நிகழ்த்திய நகரம்
(அ) சிக்காக்கோ (ஆ) இலண்டன் (இ) கொழும்பு (ஈ) கொல்கத்தா
129. பாம்பன் சுவாமிகள் மக்கள் அனைவருக்கும் கொல்லாவிரதத்தை அனுட்டித்து அருளிய நூல்
(அ)திருப்பா (ஆ) சீவயாதனா வியாசம் (இ) திருவெம்பாவை (ஈ) திருவருட்பா
130. “அருவச் சித்தி” அடைந்தவர் இவர்களுள் யார்?
(அ) மாணிக்கவாசகர் (ஆ) பாம்பன் சுவாமிகள்
(இ) மெய்கண்டார் (ஈ) ஸ்ரீமத் அருணகிரிநாதர்
131. மகாபாரதத்தை எழுதியவர் ———- ஆவார்
(அ) வேதவியாசர் (ஆ) நாதமுனி (இ) கபிலர் (ஈ) கம்பர்
132. கீழ்க்கண்டவர்களில் யார் சந்தானச்சாரியார் அல்லாதவர்?
(அ) மெய்கண்டார் (ஆ) மறைஞான சம்பந்தர்
(இ) நந்திதேவர் (ஈ) உமாபதி சிவம்
133. நாயன்மார்கள் மற்றும் சிவனடியார்களை “அளவிலாத பெருமையராகிய அடியார்” என கூறியது யார்?
(அ) சேக்கிழார் (ஆ) மெய்கண்டார் (இ) உமாபதி சிவம் (ஈ) பரஞ்சோதி
134. “ஆழ்வார்கள்” மொத்தம் எத்தனை பேர்?
(அ) 63 ஆழ்வார்கள் (ஆ) 24 ஆழ்வார்கள் (இ) 12 ஆழ்வார்கள் (ஈ) 4 ஆழ்வார்கள்
135. தென்முக கடவுளிடம் உபதேசம் பெற்ற முனிவர்கள் நால்வரின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு:
(அ) சனகாதி, சநாதனர், சநற்குமாரர், சநகர்
(ஆ) சநகர், சநந்தனர், சநாதனர், சநற்குமாரர்
(இ) சநகர், சநாதனர், சனகாதி, சநந்தனர்
(ஈ) சநகர், சநாதனர், சநந்தனர், சனகாதி,
136. தட்சிணாமூர்த்தி சிவன் கோவிலில் எந்த திசை நோக்கி வீற்றிருக்கிறார்?
(அ) தென் திசை (ஆ) மேற்கு திசை (இ) வடக்கு திசை (ஈ) கிழக்கு திசை
137. சிவபிரான் புரிந்த எட்டு வீரச் செயல்களை தன்னகத்தே கொண்ட தலங்கள் இவ்வாறு அறியப்படுகிறது?
(அ) அட்டகோண வீரட்டங்கள் (ஆ) சோழநாடு வீரட்டங்கள்
(இ) அட்ட வீரட்டங்கள் (ஈ) கொங்கு நாடு
138. இறைவனின் ஐந்தொழிலை வலியுறுத்தும் சமயம் எது?
(அ) சைவம் (ஆ) வைணவம் (இ) கிருத்துவம் (ஈ) இசுலாம்
139. சைவம் ஏற்கும் காரண – காரிய கொள்கை என்ன?
(அ) சத்-அசத் காரியவாதம் (ஆ) பிரத்திபிம்பவாதம்
(இ) அசத்காரியவாதம் (ஈ) சத்காரியவாதம்
140. சைவசித்தாந்தத்தின் மொத்த தத்துவங்களின் எண்ணிக்கை
(அ) 5 ஆகும் (ஆ) 36 ஆகும் (இ) 96 ஆகும் (ஈ) 3 ஆகும்
141. சாதார தீக்கை எத்தனை வகைப்படும்?
(அ) 5 (ஆ) 6 (இ) 7 (ஈ) 8
142. இளம்பெருமான் அடிகள் உள்ளிட்ட பன்னிருவர் அருளிச்செய்த பிரபந்தங்களின் எண்ணிக்கை
(அ) 27 (ஆ) 40 (இ) 147 (ஈ) 3000
143. கீழ்கண்டவற்றுள் பொருந்தாதவற்றை கண்டுபிடி:
(அ) நம்பி ஆரூரன் (ஆ) வன்றொண்டன் (இ) சுந்தரன் (ஈ) தருமசேனன்
144. “பராவனம் ஆவது நீறு” எனத் துவங்கும் பதிகத்தை அருளிச் செய்தவர்
(அ) திருநாவுக்கரசர் (ஆ) திருஞானசம்பந்தர் (இ) சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர்
145. “திருவருட்பயன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
(அ) உமாபதி சிவம் (ஆ) மனவாசகங்கடந்தார்
(ஆ) அருள்நந்திதேவர் (ஈ) திருக்டவூரார்
146. கீழ்க்கண்டவற்றுள் திருத்தொண்டர் புராணத்தோடு பொருந்தாத கருத்து எது?
(அ) அநபாய சோழன் வேண்டுகோளின்படி சேக்கிழார் பாடி அருளியது
(ஆ) கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது
(இ) இது திருவிசைப்பாவின் பேருரையாய் உள்ளது.
(ஈ) திருமுறைகளின் வரலாற்றையும், அவற்றின் ஆசிரியர்களின் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது.
147. நடராஜரின் சித்ரசபை எங்குள்ளது?
(அ) சிதம்பரம் (ஆ) மதுரை (ஈ) குற்றாலம் (ஈ) திருவண்ணாமலை
148. பெரியபுராணம் யாரைப் பற்றிய நூல்?
(அ) ஆழ்வார்கள் (ஆ) ஆச்சாரியார்கள் (இ) நாயன்மார்கள் (ஈ) சந்தனாச்சாரியார்கள்
149. நரியை பரியாக்கியவர் யார்?
(அ) சுந்தரர் (ஆ) திருஞானசம்பந்தர் (இ) திருநாவுக்கரசர் (ஈ) மாணிக்கவாசகர்
150. சுந்தரர் சிவனை பரவையாரிடம் தூதனுப்பிய செய்தி கேட்டு கோபப்பட்ட நாயனார்
(அ) எறிபத்தர் (ஆ) அரிவாட்டாயர்
(இ) நமிநந்தி அடிகள் (ஈ) ஏயர்கோன்கலிக்காமர்
151. கீழ்கண்டவற்றுள் பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்
(அ) திருவலகிடுதல் (ஆ) திருவமுது செய்தல்
(இ) பூமாலை சூட்டுதல் (ஈ) திருவிளக்கிடுதல்
152. வழிபாட்டில் உபாயநிலை என்பது ———– ஆகும்
(அ) பக்தியிற் கூடியது (ஆ) பக்தியிற் குறைந்தது
(இ) சக்தியில் கூடியது (ஈ) சக்தியில் குறைந்தது
153. கீழே கொடுக்கப்ட்டுள்ளதை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்யவும்
அ. சரியை 1. சாமீபம்
ஆ. கிரியை 2. சாரூபம்
இ. யோகம் 3. சாலோகம்
ஈ. ஞானம் 4. சாயுஜ்ஜியம்
அ ஆ இ ஈ
அ. 3 1 2 4
ஆ. 2 3 4 1
இ. 1 4 3 2
ஈ. 4 2 1 3
154. பொருத்துக:
அ. தாரணை 1. அதுவாதல்
ஆ, பிராணாயாமம் 2. தொகை நிலை
இ. சுமாதி 3. பொறைநிலை
ஈ. பிரத்தியாகாரம் 4. வளிநிலை
அ ஆ இ ஈ
அ. 4 3 1 2
ஆ. 2 4 1 3
இ. 3 4 1 2
ஈ. 3 1 4 2
155. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற தொடருக்குரியவர்
(அ) தாயுமானவர் (ஆ) பேரறிஞர் அண்ணாதுரை (இ) திருமூலர் (ஈ) நந்திதேவர்
156. திருக்கோவையார் என்ற நூலை இயற்றியவர் யார்?
(அ) சுந்தரமூர்த்தி (ஆ) திருமூலர் (இ) மாணிக்கவாசகர் (ஈ) திருநாவுக்கரசர்
157. மூவேந்தருள் திங்கள் மரபினர் என போற்றப்படுபவர்கள்
(அ) சேரர்கள் (ஆ) சோழர்கள் (இ) பாண்டியர்கள் (ஈ) பல்லவர்கள்
158. பொருத்துக:
அ. வேதம் 1. பிர்மகைவர்த்தம்
ஆ. சிவபுராணம் 2. ஸத்யம்வத
இ. விஷ்ணு புராணம் 3. பவிஷ்யம்
ஈ. சூரிய புராணம் 4. பாகவதம்
அ ஆ இ ஈ
அ. 3 1 4 2
ஆ. 3 2 4 1
இ. 2 3 4 1
ஈ. 2 1 4 3
159. பெரியபுராணத்தின்படி “எல்லா உயிர்களும் சிவசம்பந்தம் உடையவையே; யாவும் சைவமே’ என்ற பேருண்மையை புத்தர்களுக்கு போதித்தவர்
(அ) நம்பிஆருரர் (ஆ) சுந்தரர் (இ) மாணிக்கவாசகர் (ஈ) திருஞானசம்பந்தர்
160. திருமுறை என்றால் என்ன?
(அ) இறைவனைப் பற்றி வைணவ அடியார்கள் பாடிய நூல்கள்
(ஆ) இறைவனைப் பற்றி சைவ அடியார்கள் பாடிய நூல்கள்
(இ) இறைவனைப் பற்றி முகலாயர்கள் பாடிய நூல்கள்
(ஈ) இறைவனைப்ப பற்றி கிருத்துவர்கள் பாடிய நூல்கள்
161. நவராத்திரிப் பண்டிகை எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகின்றன?
(அ) மூன்று (ஆ) ஐந்து (இ) எட்டு (ஈ) ஒன்பது
162. பொருத்துக:
யாமம் அபிஷேகம்
(அ) முதல் 1. பஞ்சாமிர்தம்
(ஆ) இரண்டாம் 2. கருப்பஞ்சாறு
(இ) மூன்றாம் 3. பஞ்ச கவ்வியம்
(ஈ) நான்காம் 4. கொம்புத்தேன்
அ ஆ இ ஈ
அ. 1 4 2 3
ஆ. 1 2 3 4
இ. 2 1 4 3
ஈ. 3 1 4 2
163. திருமால் தன் கையிலுள்ள ———- ஆயுதத்தால் நரகாசூரனை அழித்தார்
(அ) சாரங்கம (ஆ) கதை (இ) நத்தகம் (ஈ) சக்கராயுதம்
164. நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களில் ——— தேவியை வழிபடுவார்
(அ) பார்வதி (ஆ) இலட்சுமி (இ) சரஸ்வதி (ஈ) இலட்சுமி மற்றும் சரஸ்வதி
165. “திருவிழா” என்பதன் மற்றொரு பெயர் என்ன?
(அ) கொடியேற்றம் (ஆ) அங்குரார்ப்பனம் (இ) மகோத்ஸவம் (ஈ) அவரோகணம்
166. தமிழ் மாதங்களில் மேஷ மாதம் எனப்படுவது
(அ) கார்த்திகை (ஆ) ஐப்பசி (இ) ஆடி (ஈ) சித்திரை
167. பொருத்துக:
பஞ்சபூதங்கள் அதிதேவதை
அ. பிருத்வி 1. இராமன்
ஆ. அப்பு 2. சதாசிவம்
இ. தேயு 3. விஷ்ணு
ஈ. வாயு 4. சிவன்
உ. ஆகாசம் 5. மகேசுவரன்
அ ஆ இ ஈ உ
அ. 1 3 4 5 2
ஆ. 1 4 5 2 3
இ. 2 1 5 4 3
ஈ. 4 3 2 5 1
168. பொருந்தாததைத் தேர்ந்தெடு:
(அ) சித்தம் (ஆ) ஸாத்யம் (இ) ஸ்வசிதம் (ஈ) பாநியம்
169. “குறிஞ்சிக் கடவுள்” என ———– குறிப்பிடுவர்
(அ) சூரியன் (ஆ) முருகன் (இ) திருமால் (ஈ) இந்திரன்
170. மூலமந்திரத்தை நூற்றெட்டு உருஜபித்து அதை ஈசுவரனுக்குச் சமர்பிப்பதை எவ்வாறு அழைப்பர்?
(அ) ஆசமநீயம் (ஆ) பாநீயம் (இ) தூபம் (ஈ) ஜபசமர்ப்பணம்
171. பாண்டி நாட்டில் அமைந்துள்ள மங்களா சாசனம் பெற்ற வைணவ ஸ்தலங்களின் எண்ணிக்கை
(அ) 18 (ஆ) 21 (இ) 22 (ஈ) 40
172. ஷேத்திரம் சரீரப்பிரஸ்தாரம் என்பது
(அ) கோயில்கள் பிரபஞ்ச வடிவில் அமைக்கப்பட்டுள்ளது
(ஆ) கோயில்கள் பூலோக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது
(இ) கோயில்கள் மனித உடல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது
(ஈ) கோயில்கள் கற்பனை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
173. “பாநீயம்” என்பது என்ன?
(அ) வாசைன தீர்த்தத்தை சமர்ப்பித்தல் (ஆ) மூலமந்திரம் சொல்லுதல்
(இ) தீபாராதனை காட்டுதல் (ஈ) நைவேத்தியம் செய்தல்
174. பூசையின் போது இறைவனின் பாதங்களை கழுவுவதற்கு ——— என்று பெயர்
(அ) அர்க்கியம் (ஆ) பாத்தியம் (இ) உபவீதம் (ஈ) தீராஜனம்
175. பொருத்துக:
கொடிமரத்தின் பாகம் உணர்த்தும் கடவுளின் தொழில்
அ. சதுர வடிவிலான அடிப்பாகம் 1. அழித்தல்
ஆ, உருண்ட நீண்ட மேல்பாகம் 2. படைத்தல்
இ. எண்கோணவடிவிலான நடுப்பாகம் 3. காத்தல்
அ ஆ இ
அ. 2 3 1
ஆ. 3 1 2
இ. 3 2 1
ஈ. 2 1 3
176. ஆலயங்களில் மிக முக்கிய பகுதி யாது?
(அ) கோபுரம் (ஆ) கலசம் (இ) கர்ப்பக்கிரகம் (ஈ) பலிபீடம்
177. கோயிலின் கர்ப்பக்கிரகம் மனித உடலின் ———- பகுதியோடு ஒப்பிடப்படுகிறது
(அ) கழுத்து (ஆ) முழங்கால் (இ) தொடை (ஈ) சிரம்
178. விஷ்ணு கோயிலின் கொடிமரத்தின் மேல் எந்த உருவத்தை அமைப்பர்?
(அ) நந்தி உருவம் (ஆ) கருடன் உருவம் (இ) சிங்கம் உருவம் (ஈ) மயில் உருவம்
179. பின்வருவனவற்றுள் எது தவறானது?
1. தலைஉச்சி – விமானம்.
2. புருவமத்தி – லிங்கம்.
3. மூக்கு – பலிபீடம்.
4. வாய் – ஸீநபநமண்டப வாசல்
(அ) 1 மட்டும் தவறானது (2) 2 மட்டும் தவறானது
(இ) 3 மட்டும் தவறானது (ஈ) 4 மட்டும் தவறானது
180.பின்வருவனற்றுள் எவை சரியானவை?
கொடிமர பிரதிட்டையின் நோக்கம்:
1. அசுரர்களை அழைப்பதற்காக.
2. சிவகணங்களை அழைப்பதற்காக
3. தேவர்களை அகற்றுவதற்காக.
4. பக்தர்களைப் பாதுகாப்பதற்காக.
(அ) 1 மற்றும் 2 சரியானவை (ஆ) 1 மற்றும் 3 சரியானவை
(இ) 2 மற்றும் 4 சரியானவை (ஈ) 3 மற்றும் 4 சரியானவை
181. பொருத்துக:
தீக்கைகள் மார்க்கங்கள்
அ. சமய தீக்கை 1. யோகம், ஞானம்
ஆ. விசேட தீக்கை 2. சரியை
இ. நிருவாண தீக்கை 3. கிரியை
அ ஆ இ
அ. 1 2 3
ஆ. 2 3 1
இ. 1 3 2
ஈ. 2 1 3
182. திருவாய்மொழி பாடல்களுக்கு 36,000 படி என்ற உரையை அருளியவர் யார்?
(அ) நம்பிள்ளை (ஆ) ஆளவந்தார்
(இ) மணவாள சீயர் (ஈ) வடக்குத் திருவீதிப் பிள்ளை
183. குலசேகர ஆழ்வார் பாடிய பாசுரத் தொகுப்பின் பெயர் என்ன?
(அ) இயற்பா (ஆ) பெருமாள் திருமொழி (இ) பெரிய திருமொழி (ஈ) திருமொழி
184. பின்வருவனவற்றுள் வைண ஆச்சாரியர் யார்?
(அ) நாதமுனி (ஆ) நம்மாழ்வார் (இ) மதுரகவி (ஈ) ஆண்டாள்
185. திருவாய்மொழியின் முதல் உரையாசிரியராக அறியப்படுபவர் யார்?
(அ) நாதமுனி (ஆ) இராமனுசர் (இ) ஆளவந்தார் (ஈ) நம்பிள்ளை
186. விசிட்டாத்வைதத்தின்படி அசித் என்பது
(அ) உணர்வுடையது (ஆ) உணர்வு அற்றது (இ) பரமானந்தம் (ஈ) மாயை
187. அவதார ரகசியம் எந்த நூலில் கூறப்படுகிறது?
(அ) வேதாந்த சூத்திரம் (ஆ) ஸ்ரீபாஷ்யம் (இ) கீதாபாஷ்யம் (ஈ) உபநிடதம்
188. இவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க:
(அ) நம்மாழ்வார் (ஆ) இராமானுஜர் (இ) ஆண்டாள் (ஈ) பெரியாழ்வார்
189. பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
(அ) நம்மாழ்வார் – கருடன் அம்சம்
(ஆ) பெரியாழ்வார் – திருவாழியின் அம்சம்
(இ) திருமங்கையாழ்வார் – திருச்சாரங்கத்தின் அம்சம்
(ஈ) ஆண்டாள் – வனமாலையின் அம்சம்
190.திருக்கடல் மல்லையில் அவதரித்த ஆழ்வார்
(அ) நம்மாழ்வார் (ஆ) பூதத்தாழ்வார் (இ) பேயாழ்வார் (ஈ) திருமழிசை ஆழ்வார்
191.பரகால நாயகி என வழங்கப்படுபவர்
(அ) ஆண்டாள் (ஆ) நம்மாழ்வார்
(இ) பெரியாழ்வார் (ஈ) திருமங்கையாழ்வார்
192. “மத்தளம் கொட்ட வரிசங்கம்” எனும் பாடலை பாடியவர்?
(அ) ஸ்ரீ ஆண்டாள் (ஆ) பெரியாழ்வார் (இ) பேயாழ்வார் (ஈ) மதுரகவி ஆழ்வார்
193. “உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்” எனத் தொடங்கும் பாசுரத்தை இயற்றியவர் யார்?
(அ) இராமானுஜர் (ஆ) நம்மாழ்வார் (இ) சங்கரர் (ஈ) மத்துவர்
194. இரகசிய திரயம் என்பது
(அ) இறைவன், ஆன்மா, உலகம் (ஆ) பிரம்மசூத்திரம், பகவத்கீதை, உபநிடதம்
(இ) திருமந்திரம், துவயம், சரமஸ்லோகம் (ஈ) இவை எதுவுமில்லை
195. வைணவத்தின்படி விஷ்ணுவின் இருபத்தைந்தாவது தத்துவ ரூபமாகப் போற்றப்படும் சொரூபம் எது?
(அ) பரவாஸீதேவர் (ஆ) வாஸீதேவர் (இ) சங்கர்ஷணர் (ஈ) பிரத்யும்னர்
196. பொருத்துக:
விஷ்ணுவின் வடிவங்கள் பொருள்
அ. பரம் 1. விக்கிர வடிவம்
ஆ. வியூகம் 2. ஆவதார வடிவம்
இ. விபவம் 3. கூட்டான வடிவம்
ஈ. அர்ச்சை 4. யாவும் கடந்து நிற்கும் வடிவம்
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 1 4 3 2
இ. 3 1 4 2
ஈ. 2 4 3 1
197. நாதமுனிகள் தொகுத்த நூல்
(அ) பன்னிரு திருமுறை (ஆ) நாலாயிர திவ்ய பிரபந்தம்
(இ) தோத்திர ரத்தினம் (ஈ) வேதாந்த சாரம்
198. வைணவம் குறிப்பிடும் குறிகளின் எண்ணிக்கை எத்தனை?
(அ) இரண்டு (ஆ) மூன்று (இ) நான்கு (ஈ) ஐந்து
199. திருமால் வழிபாடு எச்சமயத்தைச் சார்ந்தது?
(அ) சைவம் (ஆ) வைணவம் (இ) சமணம் (ஈ) பௌத்தம்
200. வைணத்தில் “அடையப்படுவது” என்று கூறுவது எதை?
(அ) பரஸ்வரூபம் (ஆ) ஸ்வஸ்வரூபம் (இ) உபாய சொரூபம் (ஈ) விரோதிஸ்வரூபம்