Answer Key

Tnpsc Executive Officer Grade IV Exam Previous Questions and Answer Key 2022 – General Studies in Tamil

Tnpsc Executive Officer Grade IV Exam Previous Questions and Answer Key 2022 – General Studies in Tamil

EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE

1. மரக்கலத்திற்குத் தமிழில் வழங்கும் பெயர்களில் ஒன்று

(அ) வாரணம்

(ஆ) பரவை

(இ) புணரி

(ஈ) திமில்

2. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் எவை தமிழகத்திலிருந்து அரசன் சாலமனுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள்?

(அ) மிளகும், சந்தனமும்

(ஆ) யானைத் தந்தமும், மயில் தோகையும்

(இ) முத்தும், துகிலும்

(ஈ) கரும்பும், அரிசியும்

3. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயும் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி

(அ) ராணி மங்கம்மாள்

(ஆ) அஞ்சலை அம்மாள்

(இ) வேலு நாச்சியார்

(ஈ) மூவலூர் இராமாமிர்தம்

4. உலகம் உருண்டையானது என்ற அறிவியல் சிந்தனை கொண்ட திருக்குறள்

(அ) சுழன்றும் ஏர்பின்னது உலகம்

(ஆ) ஆதிபகவன் முதற்றே உலகு

(இ) உலகந் தழீஇயது ஒட்பம்

(ஈ) எவ்வதுறைவது உலகம்

5. தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?

(அ) தேசியக்கொடி

(ஆ) தேசபக்தி

(இ) கதரின் வெற்றி

(ஈ) மனோகரன்

6. பொருத்துக:

அ. ஞானக்கண்ணாடி 1. உரைநடை வடிவிலான சமயநூல்

ஆ. வேதவிளக்கம் 2. நகைச்சுவைக் கதை நூல்

இ. தொன்னூல் விளக்கம் 3. சமய நூல்

ஈ. பரமார்த்தகுரு கதை 4. குட்டித் தொல்காப்பியம்

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 3 1 4 2

இ. 1 3 2 4

ஈ. 4 2 3 1

7. மொழி ஞாயிறு என்றழைக்கப்படுபவர்

(அ) தாமோதரனார் (ஆ) தேவநேயப் பாவாணர் (இ) இளங்குமரனார் (ஈ) வரதராசனார்

8. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை?

(அ) குடிமக்கள் காப்பியம் (ஆ) தமிழ்க்காதல் (இ) தமிழர் திருமணம் (ஈ) வீரச்சுவை

9. பொருத்துக:

அ. நட்சத்திரக் குழந்தைகள் 1. கல்கி

ஆ. கணையாழியின் கனவு 2. பி.எஸ்.ராமையா

இ. பிரபந்த கானம் 3. ந.பிச்சமூர்த்தி

ஈ. கொலு பொம்பை 4. மெளனி

சரியான விடையைத் தெரிவு செய்க:

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 3 1 4 2

இ. 2 1 4 3

ஈ. 2 3 4 1

10. மோகனா என்னும் பாலசரஸ்வதி பரதநாட்டியத்திற்காக எந்த வயதில் காஞ்சிபுரத்தில் மேடை ஏறினார்?

(அ) 10 வயதில் (ஆ) 7 வயதில் (இ) 12 வயதில் (ஈ) 16 வயதில்

11. நாடகக்கலையை மீட்டெடுப்பதே தனது குறிக்கோள் என்று கூறியவர்

(அ) கந்தசாமி (ஆ) ந.முத்துசாமி (இ) வேலுச்சாமி (ஈ) அழகர்சாமி

12. “காந்திமகான் கதை” எனும் இசை நூலின் ஆசிரியர்

(அ) வேழ வேந்தன் (ஆ) பெ.தூரன் (இ) கொத்த மங்கலம் சுப்பு (ஈ) தமிழழகன்

13. பாரதிதாசன் “குடும்பவிளக்கு” என்னும் நூலின் எப்பகுதியில் “விருந்தோம்பல்” எனும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார்?

(அ) ஐந்தாம் பகுதி (ஆ) முதல் பகுதி (இ) நான்காம் பகுதி (ஈ) இரண்டாம் பகுதி

14. தண்டமிழ் ஆசான் என யார்? யுhரைப் பாராட்டினார்?

(அ) கம்பர் – சடகோபரை.

(ஆ) இளங்கோவடிகள் – சீத்தலைச் சாத்தனாரை.

(இ) சீத்தலைச் சாத்தனார் – இளங்கோவடிகளை.

(ஈ) பாரதியார் – கம்பரை.

15. “இஸ்லாமிக் கம்பர்” எனப் போற்றப்படுபவர்

(அ) அப்துல் மரைக்காயர் (ஆ) முகமதுலெப்பை (இ) கடிகை முத்துப் புலவர் (ஈ) உமறுப்புலவர்

16. எட்டுத் தொகை நூல்களில் “ஓங்கு” என்னும் அடைமொழி பெற்ற நூல்

(அ) குறந்தொகை (ஆ) கலித்தொகை (இ) நற்றிணை (ஈ) பரிபாடல்

17. இரட்டுற மொழிதல் என்பது

(அ) ஒரு சொல் பல பொருட்களைத் தருதல் (ஆ) ஒரு சொல் இரண்டு பொருள்பட அமைந்து வருதல்

(இ) பல சொற்கள் ஒரு பொருள் தருதல் (ஈ) ஒரே சொல் மீண்டும் மீண்டும் பல முறை வருதல்

18. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?

(அ) கன்னியாகுமரி (ஆ) திருநெல்வேலி (இ) திருச்சி (ஈ) கோவை

19. மடந்தை பருவத்தின் வயது

(அ) 8-11 (ஆ) 12-13 (இ) 14-19 (ஈ) 20-25

20. கலம்பக உறுப்புகள்

(அ) ஆறு (ஆ) எட்டு (இ) பதினெட்டு (ஈ) பன்னிரெண்டு

21. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க:

(அ) பாசவர் – நெற்பவர்

(ஆ) ஓசுநர் – எண்ணெய் விற்பவர்

(இ) கண்ணுள் வினைஞர் – ஓவியர்

(ஈ) மண்ணீட்டாளர் – சிற்பி

22. கூற்று 1: கம்பர் பிறந்த தேரழுந்தூர் சோழநாட்டில் அமைந்துள்ளது

கூற்று 2: கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தப் புலவர்

(அ) கூற்று 1 மட்டும் சரி (ஆ) கூற்று 2 மட்டும் சரி

(இ) கூற்று இரண்டும் சரி (ஈ) கூற்றும் இரண்டும் தவறு

23. கூலவாணிகம் செய்தவர்

(அ) பரணர் (ஆ) இளங்கோவடிகள் (இ) கம்பர் (ஈ) சீத்தலைச்சாத்தனார்

24. அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன?

(அ) 2,8,12,18,22 … (இரண்டு. எட்டாக) (ஆ) 6,16,26,36,46… (ஆறு, ஆறாக)

(இ) 1,3,5,7,9… (ஒற்றைப்படை எண்களாக) (ஈ) 4,14,24,34,44… (நான்கு,நான்காக)

25. “அறுவர்க் கிளைய நங்கை” இறைவனை ஆடல் கண்டருளிய நங்கை எனப்படுபவள் யார்?

(அ) மாரியம்மன் (ஆ) துர்க்கை (இ) திருமகள் (ஈ) பிடாரி

26. கீழ்க்கண்ட நூல்களுள் எட்டுத்தொகை நூல்

(அ) நான்மணிக்கடிகை (ஆ) இன்னாநாற்பது (இ) கலித்தொகை (ஈ) நாலடியார்

27. “பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்” என்னும் தொடரில் “நூல்” என்பது எந்த நூலைக் குறிக்கிறது?

(அ) நான்மணிக்கடிகை (ஆ) நாலடியார் (இ) களவழி நாற்பது (ஈ) கார் நாற்பது

28. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதியை வலியுறுத்தும் நூல்களின் எண்ணிக்கை

(அ) 11 (ஆ) 10 (இ) 6 (ஈ) 9

29. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?

(அ) 70 (ஆ) 38 (இ) 25 (ஈ) 36

30. “மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்

மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து”

… மேற்கண்ட பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களைக் கண்டறிக

(அ) மனிதரெலாம், மனோபாவம் (ஆ) வானைப்போல் விரிவடைந்து

(இ) மனிதரெலாம், அன்புநெறி (ஈ) மனோபாவம் வானைப்போல்

31. வஞ்சகன் முதலைக் கண்ணீர் வடித்தான்

– இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?

(அ) மெய்யழுகை-உண்மையான அழுகை

(ஆ) எண்ணித் துணியாதார்-நல்லவன் வடிக்கும் கண்ணீர்

(இ) பொய்யழுகை, பொய்யான நட்பு, தீமை தரக்கூடிய கண்ணீர்

(ஈ) பொய்யில்லாத அழுகை

32. கீழ்க்கண்ட உவமைக்கு பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க:

“உடலும் உயிரும் போல”

(அ) ஒற்றுமையின்மை (ஆ) மகிழ்ச்சி (இ) வெளிப்படைத்தன்மை (ஈ) ஒற்றுமை

33. பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக

(அ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் (ஆ) நிலவன் புத்தகத்தைப் படித்தார்

(இ) நிலவன் பாடம் நடத்தினார் (ஈ) நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தார்

34. விடைக்கேற்ற வினா எது?

கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும்

குடக்கூத்து என்றும் கூறுவர்

(அ) கரகாட்டம் என்றால் என்ன? (ஆ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

(இ) கரகாட்டம் எப்போது நடைபெறும் (ஈ) கரகாட்டத்தினைப் போன்ற வேறு கலைகள் யாவை?

35. ஐம்பெருங்குழு, எண்பேராயம்-சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

(அ) திசைச் சொற்கள் (ஆ) வட சொற்கள் (இ) உரிச்சொற்கள் (ஈ) தொகைச் சொற்கள்

36. கீழ்க்கண்டவற்றுள் வினையெச்சம் அல்லாத ஒன்றைக் கண்டறிக:

(அ) வெந்து (ஆ) மூடுபனி (இ) வெம்பி (ஈ) எய்தி

37. நாற்காலி என்பது எவ்வகைப் பெயர் என கண்டறிக:

(அ) பொருட்பெயர் (ஆ) சினைப்பெயர் (இ) காலப்பெயர் (ஈ) பண்புப்பெயர்

38. “வா” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க

(அ) வந்தவர் (ஆ) வந்து (இ) வந்த (ஈ) வந்தான்

39. “ஓடு” என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை கண்டறிந்து எழுதுக:

(அ) ஓடுக (ஆ) ஓடுதல் (இ) ஓடிய (ஈ) ஒடிந்து

40. “நொந்தான்” சொல்லின் வேர்ச்சொல் யாது?

(அ) நொ (ஆ) நொந்த (இ) நொந்து (ஈ) நோதல்

41. சரியான வேர்ச்சொல்லைக் காண்க:

“கொண்டிலன்”

(அ) கொண்ட (ஆ) கொள் (இ) கொண்டனன் (ஈ) கொண்டு

42. தே-ஓரெழுத்து ஒரு மொழிக்கு உhயி பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) கடவுள் (ஆ) தலைவன் (இ) அரசன் (ஈ) கள்வன்

43. இளமைப்பெயர் மரபுபிழை நீக்கியது.

“யானை”

(அ) குஞ்சு (ஆ) பிள்ளை (இ) குட்டி (ஈ) கன்று

44.மரபுப்பிழை நீக்கி எழுதுக:

இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்

(அ) கூரைமூடினர் (ஆ) கூரை வேய்ந்தனர்

(இ) கூரை அமைத்தனர் (ஈ) கூரை இட்டனர்

45. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

(அ) அமுதமொழி (ஆ) அடி மலர் (இ) பூ விரல் (ஈ) முத்துப்பல்

46. பொருந்த மரபுச் சொல்லைக் கண்டறிக:

(அ) வாழைக்கச்சல் (ஆ) முருங்கைச்சரடு (இ) மாவடு (ஈ) பாலமூசு

47.அழுக்காறுடையான் – எதிர்ச்சொல் தருக:

(அ) பொறமை உடையவன் (ஆ) தூய்மை உடையவன் (இ) பொறாமையற்றவன் (ஈ) தூய்மை அற்றவன்

48. “உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே”

– இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல்

(அ) நன்னூல் (ஆ) அகத்தியம் (இ) தொல்காப்பியம் (ஈ) இலக்கண விளக்கம்

49. பொருத்துக:

திணை தெய்வம்

அ. குறிஞ்சி 1. வருணன்

ஆ. முல்லை 2. இந்திரன்

இ. மருதம் 3. திருமால்

ஈ. நெய்தல் 4. முருகன்

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 1 2 3 4

இ. 2 1 4 3

ஈ. 2 3 4 1

50. தம் வீரர்களுடன் பேர்க்களத்தில் போரிடும் போது சூடும் பூ எதுவென அறிக:

(அ) உழிஞை பூ (ஆ) வஞ்சிப்பூ (இ) தும்பைப் பூ (ஈ) நொச்சிப்பூ

51. இந்திய நூலகவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்

(அ) டாக்டர்.அம்பேத்கர் (ஆ) தேவ நேய பாவாணர்

(இ) முனைவர்.இரா.அரங்கநாதன் (ஈ) இரா.பி.சேதுப்பிள்ளை

52. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எங்கு பாதுகாக்கப்படுகிறது?

(அ) நடுவண நூலகம் (ஆ) கன்னிமாரா நூலகம் (இ) தேசிய நூலகம் (ஈ) ஆவணக் காப்பகம்

53. தெயவமணிமாலை திருவருட்பாவில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

(அ) மூன்றாம் திருமுறை (ஆ) ஐந்தாம் திருமுறை

(இ) ஆறாம் திருமுi (ஈ) நான்காம் திருமுறை

54. “ஏழைகளின் கற்பக விருட்சம்” என்று அழைக்கப்படும் மரம்

(அ) மாமரம் (ஆ) பலாமரம் (இ) தென்னை மரம் (ஈ) பனைமரம்

55. உலகளாவிய தமிழர்கள் தம் வருவாயை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தமிழை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது எதை காட்டுகிறது?

(அ) மொழிப்பற்றை (ஆ) தேசப்பற்றை (இ) மதப்பற்றை (ஈ) சமயப்பற்றை

56. உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் ——– காரணமாகும்

(அ) சமநிலை (ஆ) வேறுபாடு (இ) ஓட்டம் (ஈ) இயக்கம்

57. கால்நடைகளுக்கு ஊறு நேரா வண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்த இடங்களில் அமைந்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பெற்றன?

(அ) பாக்கம் (ஆ) பட்டி (இ) குறிச்சி (ஈ) கரடு

58. எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும் என்று கூறியவர்

(அ) அறிஞர் அண்ணா (ஆ) அண்ணல் அம்பேத்கர் (இ) தந்தை பெரியார் (ஈ) மகாத்மா காந்தி

59. “தமிழ் தாத்தா” என அழைக்கப்படுபவர் யார்?

(அ) உ.வே.சாமிநாதர் (ஆ) பாரதியார்

(இ) கவிமணி தேசிய விநாயகம் (ஈ) நாமக்கல் கவிஞர்

60. இந்தியாவில் முதன் முதலாகத் தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் துவக்கியவர்

(அ) மறைமலை அடிகள் (ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(இ) வையாபுரி (ஈ) ந.மு.வேங்கடசாமி

61. இதழ்களைக் குவிப்பதனால் பிறக்கும் எழுத்துக்கள்

(அ) (அ,ஆ,இ,ஈ) (ஆ) (உ,ஊ,ஒ,ஓ,ஓள) (இ) (எ,ஏ,ஐ,அ) (ஈ) (அ,எ,ஏ,ஈ)

62. “தட்சிணசித்திரம்” என்ற நூலுக்கு உரை எழுதியவர்

(அ) கருணாகரத் தொண்டைமான் (ஆ) மகேந்திரவர்மன்

(இ) இராசராசன் (ஈ) குலேசேகர பாண்டியன்

63. தமிழ் “நாடகத் தந்தை” எனப் போற்றப்படுபவர்

(அ) தி.க.சண்முகனார் (ஆ) பம்மல் சம்பந்தனார்

(இ) சங்கரதாசு சுவாமிகள் (ஈ) டி.எஸ்.இராசமாணிக்கம்

64. “மரபுக் கவிகையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படும் கவிஞர்

(அ) சுரதா (ஆ) வாணிதாசன் (இ) முடியரசன் (ஈ) அப்துல் ரகுமான்

65. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?

(அ) பாரதிதாசன் கவிதைகள் (ஆ) சுரதாவின் கவிதைகள்

(இ) ந.பிச்சமூர்த்தி கவிதைகள் (ஈ) கண்ணதாசன் கவிதைகள்

66. “சேரமான் காதலி” எனும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருதுபெற்ற திரைப்படக் கவிஞர் யார்?

(அ) கண்ணதாசன் (ஆ) மு.மேத்தா (ஈ) நா.காமராசன் (ஈ) நா.முத்துக்குமார்

67. பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குக் கொடுக்கப்பட்ட விருது

(அ) சாகித்திய அகாடமி விருது (ஆ) குடியரசுத்தலைவர் விருது

(இ) சோவியத் நாட்டு விருது (ஈ) தாமரைத் திரு விருது

68. “கல்லாத மூடரைக் காணவும் ஆகாது

கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று”

-எனப்பாடியவர் யார்?

(அ) ஒளவையார் (ஆ) திருமூலர் (இ) சுந்தரர் (ஈ) பாரதியார்

69. கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எனப் புகழப்படும் நூல் எது?

(அ) போற்றித் திருவகவல் (ஆ) இரட்சணியயாத்திரிகம்

(இ) இரட்சணிய மனோகரம் (ஈ) இரட்சணியக்குறள்

70. களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது

(அ) குத்துப்பாடல் (ஆ) தொழில் பாடல் (இ) வரிப்பாடல் (ஈ) தனிப்பாடல்

71. “எவரே

புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்”

– பாடலடிகள் இடம்பெறும் நூல்

(அ) பாஞ்சாலிசபதம் (ஆ) மனோன்மணீயம் (இ) கலிங்கத்துப்பரணி (ஈ) புறநானூறு

72. கலம்பகம் ——— வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று

(அ) பதினெட்டு (ஆ) தொண்ணூற்றாறு (இ) பத்து (ஈ) எட்டு

73. திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்கள்

(அ) 5 (ஆ) 3 (இ) 7 (ஈ) 6

74. சீறாப்புரணத்தில் உள்ள மொத்த விருத்தப்பாக்களின் எண்ணிக்கை

(அ) 5027 (ஆ) 5029 (இ) 5023 (ஈ) 5025

75. “இஸ்மத் சன்னியாசி” என்னும் பாரசீகச் சொல்லுக்குரிய பொருள்

(அ) வன்துறவி (ஆ) சமணத்துறவி (இ) தவத்துறவி (ஈ) தூயதுறவி

76. “பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்

அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை”

– இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்

(அ) பரிபாடல் (ஆ) கலித்தொகை (இ) நற்றிணை (ஈ) குறுந்தொகை

77. மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத்தலைவன்

(அ) பெருங்கௌசிகனார் (ஆ) நன்னன் (இ) பாரி (ஈ) பாணர்

78. “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைப்படும் கவிஞர் யார்?

(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன் (இ) கண்ணதாசன் (ஈ) கம்பதாசன்

79. “கம்பராமயணத்தில் துன்புள தெனின் அன்றோ சுகமுளது” – எனக்கூறுபவர் யார்?

(அ) குகன் (ஆ) இராமன் (இ) அனுமன் (ஈ) சீதை

80. கீழ்காணும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “உத்திரவேதம்” என அழைக்கப்படும் நூல்

(அ) திரிகடுகம் (ஆ) இனியவை நாற்பது (இ) திருக்குறள் (ஈ) முதுமொழிக்காஞ்சி

81. அரியவற்றுள் எல்லாம் அரிதே,

——– பேணித் தமராக் கொளல்

(அ) சிறியவரைப் (ஆ) பெரியாரைப் (இ) உறவினரை (ஈ) நண்பனை

82. தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம – இப்பழமொழியின் பொருள்

(அ) ஆள் பற்றாக்குறை (ஆ) உண்பவர்கள் பலர்

(இ) நேரமின்றி உழைப்பது (ஈ) ரொட்டி பற்றாக்குறை

83. பழமொழிகள்:

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

– இப்பழமொழி அமைந்த சரியான தொடரைத் தேர்ந்தெடு.

(அ) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்

(ஆ) நோயற்ற வாழ்வு வாழ்வோம் குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து

(இ) குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்

(ஈ) நோயற்ற வாழ்வே குறைந்த செல்வம் என்பதை உணர்ந்த நோயுற்ற வாழ்வு வாழ்வோம்

84. “தன்வினை” வாக்கியம் எது?

(அ) செங்குட்டுவன் தங்கம் வாங்கினான் (ஆ) நான் பொய் பேசேன்

(இ) நீ நன்றாகப் படி (ஈ) பொன்னி இன்னிசை பாட்டுவித்தாள்

85. தமிழ்ப் பாடத்தை முறையாகப் படி

– இத்தொடர் எவ்வகை வாக்கியம் என கண்டறிக:

(அ) கட்டளை வாக்கியம் (ஆ) செய்தி வாக்கியம் (இ) தனி வாக்கியம் (ஈ) உணர்ச்சி வாக்கியம்

86. போட்டியில் நான் முதற்பரிசு பெற்றிருப்பதாக ஆசிரியர் கூறினார்

– எவ்வகை வாக்கியம் கூறு?

(அ) தனி வாக்கியம் (ஆ) தொடர் வாக்கியம்

(இ) நேர்க்கூற்று வாக்கியம் (ஈ) அயற்கூற்று வாக்கியம்

87. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்:

தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்

(அ) தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு எது?

(ஆ) தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதலா?

(இ) ஏறுதழுவுதல் எம்மக்களின் வீர விளையாட்டு?

(ஈ) தொன்மையான தமிழர்களின் வீரவிளையாட்டு எது?

88. சரியான சொற்றொடரினைக் கண்டறிக:

(அ) பொதுமக்கள் எரித்தனர் தீயிட்டு அந்நியத்துணிகளை

(ஆ) எரித்தனர் அந்நியத்துணிகளை தீயிட்டு பொதுமக்கள்

(இ) தீயிட்டு எரித்தனர் பொதுமக்கள் அந்நியத்துணிகளை

(ஈ) பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்

89. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக:

(அ) உயிரெழுத்துகள் பிறக்கின்றன பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு

(ஆ) பிறக்கின்றன பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு உயிரெழுத்துகள்

(இ) கழுத்தை இடமாகக் கொண்டு பன்னிரண்டும் உயிரெழுத்துகள் பிறக்கின்றன

(ஈ) உயிரெழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

90. பல்லாண்டு, முத்து, ஆமணக்கு, கொம்பு அரசன்

– அகர வரிசைப்படுத்தி எழுதுக:

(அ) அரசன், ஆமணக்கு, கொம்பு, பல்லாண்டு, முத்து (ஆ) முத்து, பல்லாண்டு, ஆமணக்கு, கொம்பு, அரசன்

(இ) ஆமணக்கு, அரசன், கொம்பு, பல்லாண்டு, முத்து (ஈ) கொம்பு, முத்து, ஆமணக்கு, அரசன், பல்லாண்டு

91. அகர வரிசைப்படுத்தி எழுதுக:

(அ) சுற்றம், சிந்தனை, செய்யுள், சேரலாதன், சோம்பல்

(ஆ) சிந்தனை, சேரலாதன், சோம்பல், செய்யுள், சுற்றம்

(இ) சிந்தனை, சுற்றம், செய்யுள், சேரலாதன், சோம்பல்

(ஈ) செய்யுள், சுற்றம், சிந்தனை, சேரலாதன், சோம்பல்

92. “ஏ” என்னும் ஓரெழுத்து ஒருமொழி

(அ) ஏடு (ஆ) ஏறுதல் (இ) அம்பு (ஈ) அடுப்பு

93. ஒலிப்பு முறைமை அறிந்து சரியான பொருள் எழுதுக:

“ஊண்” என்றால் ——-; ஊன் என்றால் ——-

(அ) உணவு, இறைச்சி (ஆ) இறைச்சி, உணவு (இ) ஊனம், ஊஞ்சல் (ஈ) உள்ளம், உணவு

94. “உளை” என்பதன் பொருள்

(அ) பக்கம் (ஆ) பிடரி மயிர் (இ) அடுப்பு (ஈ) உதவு

95. “ஆஸ்பிடல்” என்ற சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல்

(அ) மருந்தகம் (ஆ) மருத்துவமனை (இ) மருத்துவ நிலையம் (ஈ) சுகாதார நிலையம்

96. Rational: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:

(அ) பகுத்தறிவு (ஆ) எழுத்தறிவு (இ) பட்டறிவு (ஈ) மெய்யறிவு

97. “இடர் உற மறையோரும் எரியுறு மெழுகானார்”

எனவரும் பாடலில் “இடர்” – என்பதின் எதிர்ச்சொல்

(அ) துன்பம் (ஆ) இன்பம் (இ) மேன்மை (ஈ) மாதவர்

98. பிரித்து எழுதுக:

பாசிலை

(அ) பசுமை + இலை (ஆ) பாசு + இலை (இ) பாசி + இலை (ஈ) பைசு +இலை

99. பைங்கூழ்

– பிரித்தெழுதுக:

(அ) பசிய + கூழ் (ஆ) பைம் + கூழ் (இ) பை + கூழ் (ஈ) பசுமை + கூழ்

100. புதுக்கவிதையின் தந்தை என போற்றப்படுபவர்

(அ) த.பிச்சமூர்த்தி (ஆ) பாரதிதாசன் (இ) கண்ணதாசன் (ஈ) வைரமுத்து

101. திராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்?

(அ) சர்.P.Tதியாகராயர் (ஆ) அயோத்தியதாசர் பண்டிதர்

(இ) ஜோதிபா பூலே (ஈ) அய்யா வைகுந்தர்

102. “வள்ளலார்” எனப் பலராலும் அறியப்பட்டவர்?

(அ) இராம கிருஷ்ணர் (ஆ) அயோத்திதாசர் (இ) இராமலிங்க அடிகள் (ஈ) அய்யன்காளி

103. கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது?

1. பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங் கண்ணனார்

2. பதிற்றுப்பத்து – எட்டு சேர மன்னர்கள் குறித்து பேசுகிறது

3. மதுரைக்காஞ்சி – முதுகுடுமி பெருவழுதி பற்றி குறிப்பிடுகிறது.

4. திருவஞ்சைக்களம் – கரிகால சோழனை பற்றி கூறுகிறது

(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3 (இ) 3 மட்டும் (ஈ) 4 மட்டும்

104. கீழ்க்காண்பவற்றைச் சரியாகப் பொருத்துக:

அ. உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 1. 1972

ஆ. தேசிய பசுமை தீர்ப்பாயங்கள் 2. 2010

இ. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 3. 2002

ஈ. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 4. 1986

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 2 3 1 4

(இ) 3 4 1 2

(ஈ) 4 3 1 2

105. ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறி

(அ) இரத்தச் சோகை (ஆ) உடல் பருமன் (இ) சிறுநீரக செயலிழப்பு (ஈ) இரவு குருட்டுத்தன்மை

106. தமிழ்நாடு அரசால் சிறப்பாகச் செயல்படும் நூலகர்களை பெருமைப்படுத்துவதற்காக ——– விருது வழங்கப்படுகிறது.

(அ) டாக்டர்.எஸ்.ஆர்.ரெங்கநாதன் (ஆ) திரு.கவிமணி (இ) காமராஜர் (ஈ) கலைஞர்

107. பொருத்துக:

ஐந்தாண்டுதிட்டங்கள் மந்திரிகள் அல்லது நோக்கங்கள்

அ. இரண்டாம் திட்டம் 1. ஹாரேட் டாமர்

ஆ. முதல் திட்டம் 2. மகலா நோபிசு

இ. ஓன்பதாவது திட்டம் 3. சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி

ஈ. மூன்றாவது திட்டம் 4. காட்கில் திட்டம்

அ ஆ இ ஈ

அ. 2 1 3 4

ஆ. 2 1 4 3

இ. 2 4 3 1

ஈ. 2 3 1 4

108. உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

(அ) டல்ஹெளசி பிரபு (ஆ) ஜார்ஜ் ராபின்சன் பிரபு

(இ) ரிப்பன் பிரபு (ஈ) மவுண்ட் பேட்டன் பிரபு

109. இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

(அ) 1985 (ஆ) 1986 (இ) 1987 (ஈ) 1988

110. இந்தியாவில் எந்தப் பகுதியில் அல்பைன் காடுகள் பெருமளவில் இருக்கின்றன?

(அ) தக்காண பீடபூமி (ஆ) கங்கை டெல்டா

(இ) கிழக்கு இமயமலை (ஈ) கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

111. இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்தக் கூறுகள் தன் கல்லறையில் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியவர்

(அ) அசோகர் (ஆ) அக்பர் (இ) ஷாஜஹான் (ஈ) ஒளரசங்கசீப்

112. இந்தியாவில் அமைந்துள்ள, சீக்கியர்களின் புகழ்பெற்ற யாத்திரைத் தலம்

(அ) மணாலி (ஆ) பாட்னா (இ) அமிர்தசரஸ் (ஈ) ஜலந்தர்

113. சோழ அரசின் மூத்த மகன் ——– என அழைக்கப்பட்டார்

(அ) யுவராஜன் (ஆ) இளவரசர் (இ) அரசர் (ஈ) ஆளுநர்

114. டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரச மரபு

(அ) கில்ஜி மரபு (ஆ) லோடி மரபு (இ) சையது மரபு (ஈ) துக்ளக் மரபு

115. எந்த அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கின்றது?

(அ) அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 48 (ஆ) அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 49

(இ) அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 50 (ஈ) அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 51

116. ஒன்றிய அரசாங்கம் எந்த ஆண்டு நீதியரசர் ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஆணையம் அமைத்தது?

(அ) 1990 (ஆ) 1985 (இ) 1983 (ஈ) 1981

117. 2005 தகவல் அறியும் உரிமச் சட்டப்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு என்ன?

(அ) 15 நாட்கள் (ஆ) 20 நாட்கள் (இ) 25 நாட்கள் (ஈ) 30 நாட்கள்

118. மாநிலத்தின் முதுலமைச்சரை நியமனம் செய்பவர் யார்?

(அ) ஆளுநர் (ஆ) பிரதமர் (இ) குடியரசு தலைவர் (ஈ) தலைமை நீதிபதி

119. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க:

(அ) 41 (ஆ) 42 (இ) 43 (ஈ) 44

120. (y3+1) மற்றும் (y2-1) ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியைக் காண்க:

(அ) (y2+1) (ஆ) (y+1) (இ) (y+1) (ஈ) (y+1)2

121. ஒரு உள்ளீடற்ற கோளத்தின் கன அளவு க.செ.மீ மற்றும் அதன் வெளி ஆரம் 8 செ.மீ எனில் அக்கோளத்தின் உள்விட்டத்தின் அளவு காண்க: (π= என்க)

(அ) 5 செ.மீ (ஆ) 10 செ.மீ (இ) 15 செ.மீ (ஈ) 20 செ.மீ

122. மேரி, நந்தினியின் வயதைப் போல் மும்மடங்கு மூத்தவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 ஆக இருக்கும் எனில், மேரியின் தற்போதைய வயதினைக் காண்க:

(அ) 45 (ஆ) 35 (இ) 25 (ஈ) 15

123. இராஜீவின் தந்தை வயதானது, இராஜீவின் வயதைப் போல் 3 மடங்கை விட 5 அதிகம். இராஜீவின் தந்தை வயது 44 எனில், இராஜீவின் வயது என்ன?

(அ) 10 (ஆ) 11 (இ) 13 (ஈ) 18

124. 72 மற்றும் 108 ஆகிய எண்களால் மிகச் சரியாக வகுபடக்கூடிய, மிகச்சிறிய 5 இலக்க எண் ———- ஆகும்

(அ) 10152 (ஆ) 11052 (இ) 15052 (ஈ) 09936

125. = = எனில் =

(அ) 7 (ஆ) 2 (இ) (ஈ)

126. P என்பது ÷ என்பதையும், Q என்பது x என்பதையும், R என்பது + என்பதையும், S என்பது – என்பதையும் 18Q12P4R5S6 குறித்தால், என்பதன் மதிப்பு

(அ) 50 (ஆ) 53 (இ) 54 (ஈ) 59

127. 4 P + S r q B # A 3 ? 7 C > Z % 6 d & Q @ 1 தொடரில் 16வது உறுப்பிற்கு இடதுபுறமுள்ள 7வது உறுப்பு என்ன?

(அ) A (ஆ) C (இ) Z (ஈ) S

128. A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க:

(அ) 6 நாட்கள் (ஆ) 7 நாட்கள் (இ) 8 நாட்கள் (ஈ) 9 நாட்கள்

129. 81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாட்களில் வண்ணமிடுவர். 160 மீ நீளமுள்ள அது போன்ற சுவரில் 27 நாட்களில் வரைய தேவைப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை காண்.

(அ) 40 (ஆ) 50 (இ) 55 (ஈ) 60

130. சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ரூ.52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ரூ.79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க:

(அ) 10% (ஆ) 11% (இ) 12% (ஈ) 13%

131. ராமன் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% வட்டிவீதம் 4 ஆண்டுகள் கழித்து ரூ.800 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால் அத்தொகையின் மதிப்பு

(அ) ரூ.2,000 (ஆ) ரூ.2,100 (இ) ரூ.2,400 (ஈ) ரூ.2,500

132. GST-யின் உள்ளடக்கங்கள் எத்தனை?

(அ) 2 (ஆ) 3 (இ) 4 (ஈ) 5

133. பின்வருவனவற்றுள் எது இந்தியாவில் அதிகமானோர் செய்யும் தொழில்?

(அ) வாணிகம் (ஆ) கலைப்பொருட்கள் (இ) வேளாண்மை (ஈ) சுரங்கம்

134. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

1954ஆம் ஆண்டு முதன்முதலில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) நடைமுறைப்படுத்திய நாடு

(அ) இந்தியா (ஆ) பிரான்ஸ் (இ) ஜப்பான் (ஈ) அமெரிக்கா

135. 2015-16ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி (NER) துவக்கநிலை நிகர மாணவர் சேர்க்கை வீதத்தின் அடிப்படையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

(அ) தமிழ்நாடு (ஆ) கேரளா (இ) மேற்கு வங்களாம் (ஈ) கர்நாடகம்

136. தமிழ் நாட்டில் உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ———- ஆவார்

(அ) ருக்மணி லட்சுமிபதி (இ) அம்புஜம்மாள் (இ) லட்சுமி செகல் (ஈ) மூவலூர் இராமாமிர்தம்

137. வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கழகத்தை எப்போது தொடங்கினார்?

(அ) 1905 (ஆ) 1906 (இ) 1907 (ஈ) 1908

138. தீங்கு செய்பவரைத் தண்டிப்பதற்கு உரிய வழியாக வள்ளுவர் எதனைச் சுட்டுகிறார்?

(அ) அவருக்குத் தீமை செய்தல் (ஆ) அவருக்கு அறிவுரை கூறல்

(இ) அவருக்கு நன்மை செய்தல் (ஈ) அவருக்கு பணிந்து போதல்

139. சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பை வள்ளுவர் எவ்வாறு சுட்டுகிறார்?

(அ) நனவிலும் துன்பம் தரும் (ஆ) கனவிலும் துன்பம் தரும்

(இ) மறுமையிலும் துன்பம் தரும் (ஈ) இன்பத்திலும் துன்பம் தரும்

140. புண் என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?

(அ) ஊழ் (ஆ) புலால் (இ) கண் (ஈ) நோய்

141. “அறம் பெருகும் வழி” எனத் திருவள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?

(அ) கோபச் சொற்களைக் கூறுதல் (ஆ) புகழ்ச் சொற்களைக் கூறுதல்

(இ) இனிய சொற்களைக் கூறுதல் (ஈ) பழியுடை சொற்களைக் கூறுதல்

142. உடலில் கலந்துள்ள பஞ்ச பூதங்களுத் யாரைப் பார்த்துச் சிரிக்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

(அ) வஞ்சமனத்தான் (ஆ) ஒழுக்கமில்லாதான் (இ) பொய்யுரைப்பவன் (ஈ) கல்லாதான்

143. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு யாது?

(அ) எலும்பு மஜ்ஜை (ஆ) குடல் (இ) மண்ணீரல் (ஈ) நுரையீரல்

144. கீழ்க்கண்டவற்றுள் அமிலத்தைக் குறித்த சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?

1. அமிலங்கள் H+அயனிகளை தருகிறது.

2. அமிலங்கள், நீர்க்கரைசலில், H+ அயனிகளை தருகிறது.

3. அனைத்து அமிலங்களும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிலீடு செய்யப்படக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களை கொண்டவை.

(அ) 1 மட்டுமே (ஆ) 2 மற்றும் 3 மட்டுமே (இ) 1 மற்றும் 2 மட்டுமே (ஈ) 1 மற்றும் 3 மட்டுமே

145. ——- குறைக்கவும், சாலையுடனான தொடு பரப்பை அதிகரிக்கவும், கனரக சரக்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களைக் கொண்டுள்ளன.

(அ) அழுத்தத்தை (ஆ) திசைவேகத்தை (இ) அடர்த்தியை (ஈ) மேற்கண்ட அனைத்தும்

146. நீயூட்டன் மீட்டர் (Nm) என்ற S.I. அலகு கீழ்க்கண்டவற்றுள் எவற்றிற்குப் பொருந்தும்?

(அ) இரட்டையின் திருப்புத்திறன் (ஆ) முடுக்கம் (இ) திசைவேகம் (ஈ) விசை

147. “செல்லாத பணம்” என்ற நாவலுக்காக 2020ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?

(அ) ராமு (ஆ) இமையம் (இ) செல்லப்பன் (ஈ) குமார்

148. 1985ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் உள்ளாட்ச்சி அரசாங்கம் தொடர்பாக நிறுவப்பட்ட குழு எது?

(அ) பல்வந்த்ராய் மேத்தா குழு (ஆ) G.V.K.ராவ் குழு

(இ) L.M.சிங்வி குழு (ஈ) அசோக் மேத்தா குழு

149. இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக கொண்டு 2017-ல் வரப்பட்ட புதிய வரி எது?

(அ) விற்பனை வரி (ஆ) சுங்க வரி (இ) சரக்கு மற்றும் சேவை வரி (ஈ) வருமான வரி

150. 2021இல் அதிக மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட நாடு

(அ) நார்வே (ஆ) சுவிட்சர்லாந்து (இ) டென்மார்க் (ஈ) சிங்கப்பூர்

151. சங்க காலம் என்பது ———- உலோக காலத்தோடு தொடர்புடையது

(அ) செம்பு (ஆ) இரும்பு (இ) தங்கம் (ஈ) வெள்ளி

152. வள்ளலாரின் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” எப்போது நிறவப்பட்டது?

(அ) 1865 (ஆ) 1867 (இ) 1866 (ஈ) 1868

153. 1891ல் சுதேசமித்ரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசிய பருவ இதழைத் தொடங்கியவர் ——–

(அ) கோகலே (ஆ) G.சுப்ரமணியம் (இ) T.முத்துசாமி (ஈ) P.ரங்கையா

154. தமிழக மக்கள் 6ஆம் நூற்றாண்டியிலிருந்தே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை கூறும் தமிழ்-பிரமி எழுத்துப் பொறிப்புகள் ——– இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

(அ) கீழடி (ஆ) கொடுமணல் (இ) ஆலங்குளம் (ஈ) உறையூர்

155. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்

(அ) மகாத்மா காந்தி (ஆ) எம்.எஸ்.சுவாமிநாதன் (இ) என்.ஆர்.விஸ்வநாதன் (ஈ) ஜவஹர்லால் நேரு

156. முக்கிய நகர்ப்புற ஒருங்கிணைப்பு உள்ள மாவட்டங்கள்

(அ) கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி

(ஆ) சென்னை, திண்டுக்கல் மற்றும் பெரியகுளம்

(இ) திருநெல்வேலி, சேலம் மற்றும் செங்கல்பட்டு

(ஈ) காஞ்சிபுரம், காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை

157. பின்வருவனவற்றில் லுகோடெர்மா அல்லது வெண்நோய் பற்றி உண்மை கருத்து எவை?

1. இது ஒரு தொற்றாத நோய்.

2. இது தோல் நிறமி இழப்பை ஏற்படுத்தும் ஒரு தோல் நோய்.

3. இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது.

(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3 (இ) 1 மற்றும் 3 (ஈ) 1,2 மற்றும் 3

158. பின்வருவனவற்றுள் எது நீர் வள பாதுகாப்பு முறை அல்ல?

(அ) சிக்கனமாக நிலத்தடி நீர் பயன்பாடு (ஆ) நவீன நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்துதல்

(இ) காடுகளின் பரப்பளவைக் குறைத்தல் (ஈ) மரபு வழி நீர்வளங்களைப் புதுப்பித்தல்

159. தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம் எது?

(அ) திருநெல்வேலி (ஆ) சென்னை (இ) கன்னியாகுமரி (ஈ) வேலூர்

160. இந்தியாவில் தாமிரப்படிவு அதிகமுள்ள மாநிலம் எது?

(அ) இராஜஸ்தான் (ஆ) அருணாசல பிரதேசம் (இ) உத்திரப்பிரதேசம் (ஈ) சட்டீஸ்கர்

161. “மான்சூன்” என்ற சொல் ———— மொழிச் சொல்லிலிருந்துப் பெறப்பட்டது.

(அ) உருது (ஆ) இந்தி (இ) அரபிக் (ஈ) கிரேக்க

162. பாண்டிய அரசு “செல்வ செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என புகழ்ந்து கூறிய அறிஞர் ———- ஆவார்.

(அ) பாஹியான் (ஆ) மார்க்கோ போலோ (இ) மெஸ்தனிஸ் (ஈ) ஹீவான் சாங்

163. பழமையான திராவிட மொழி ———- ஆகும்.

(அ) மலையாளம் (ஆ) தெலுங்கு (இ) தமிழ் (ஈ) இந்தி

164. சிந்து சமவெளி நாகரிக மக்களின் முதன்மையான தொழில் எது?

(அ) விவசாயம் (ஆ) போர்த்தொழில் (இ) வேட்டையாடுதல் (ஈ) மீன்பிடி தொழில்

165. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய குடியுரிமையைப் பெறும் வழி அல்ல?

(அ) சொத்துரிமை பெறுவதன் மூலம் (ஆ) வம்சாவழியின் மூலம்

(இ) பிறப்பின் மூலம் (ஈ) இயல்பு குடியுரிமை மூலம்

166. எந்த சட்டத்திருத்தச் சட்டம் இந்திய குறு அரசியலமைப்பு என அழைக்கப்படுகிறது?

(அ) 41வது சட்டத்திருத்தச் சட்டம் (ஆ) 42வது சட்டத்திருத்தச் சட்டம்

(இ) 43வது சட்டத்திருத்தச் சட்டம் (ஈ) 44வது சட்டத்திருத்தச் சட்டம்

167. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்?

(அ) மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (ஆ) மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்

(இ) மாநில ஆளுநர் (ஈ) மாநில முதலமைச்சர்

168. மின் ஆளுகை நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

(அ) 2009 (ஆ) 2010 (இ) 2007 (ஈ) 2005

169. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ரூ.96 எனில் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க:

(அ) ரூ.86 (ஆ) ரூ.84 (இ) ரூ.78 (ஈ) ரூ.80

170. 60,75 மற்றும் 90 ஆகிய மூன்று எண்களின் மீச்சிறு பொதுமடங்கு மற்றும் மீப்பெரு பொது வகுத்தி இவற்றிற்கிடையெயான வித்தியாசம் என்ன?

(அ) 895 (ஆ0 899 (இ) 845 (ஈ) 885

171. ஒரு நேர்வட்டக் கூம்பின் கனஅளவு 11088 செ.மீ3 ஆகும் கூம்பின் உயரம் 24 செ.மீ எனில், அதன் ஆரம் காண்க:

(அ) 20 செ.மீ (ஆ) 21 செ.மீ (இ) 19 செ.மீ (ஈ) 18 செ.மீ

172. நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?

(அ) 72 மீ2 (ஆ) 211.2 மீ2 (இ) 200.2 மீ2 (ஈ) 92 மீ2

173. ஒரு கடிகாரத்தை கண்ணாடியில் பார்க்கும்போது 12 : 15 எனக் காட்டுகிறது. ஏனில் கடிகாரத்தின் சரியான நேரம் எவ்வளவு?

(அ) 1 : 15 (ஆ) 11 : 45 (இ) 12 : 30 (ஈ) 12 : 45

174. கொடுக்கப்பட்ட, இரு எண்களானது 13 : 15 என்ற விகிதத்தில் உள்ளது மற்றும் அவற்றின் மீ.பொ.ம 39,780 எனில் அவ்விரு எண்கள் ———- ஆகும்

(அ) 670, 1340 (ஆ) 884, 1020 (இ) 884, 1040 (ஈ) 2652, 3060

175. கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். இன்று எனது பிறந்த நாள் எனக் கலா கூறினாள். வாணியிடம் “உன் பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடினாய்” எனக் கேட்டாள். அதற்கு வாணி “இன்று திங்கள் கிழமை, நான் என்னுடைய பிறந்தநாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன் எனப் பதிலளித்தாள்”. வாணியின் பிறந்தநாள் எந்த கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க:

(அ) வியாழக்கிழமை (ஆ) செவ்வாய்கிழமை (இ) புதன்கிழமை (ஈ) வெள்ளிகிழமை

176. அமுதா ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார், அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பர்?

(அ) 9 நாட்கள் (ஆ) 6 நாட்கள் (இ) 5 நாட்கள் (ஈ) 4 நாட்கள்

177. பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையேயான வித்தியாசம்

(அ) 233 (ஆ) 377 (இ) 610 (ஈ) 987

178. ஒருவரிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ … செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ண காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?

(அ) 4156 ச.செ.மீ (ஆ) 4165 ச.செ.மீ (இ) 4615 ச.செ.மீ (ஈ) 5615 ச.செ.மீ

179. ஒரு குறிப்பிட்ட அசலானது கூட்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்யும் போது 2 ஆண்டுகளில் ரூ.4.624, 3 ஆண்டுகளில் ரூ.4,913ம் தொகையாக கிடைக்கிறது எனில் அசல்

(அ) ரூ.4,096 (ஆ) ரூ.4,260 (இ) ரூ.4,335 (ஈ) ரூ.4,360

180. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது அதன் மக்கள் தொகை 238765 எனில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை

(அ) 248276 (ஆ) 268276 (இ) 348176 (ஈ) 368276

181. 1960-61இல் ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட “முன்னோடிதிட்டம்” என்ற புதிய தொழிலநுட்பம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

(அ) அதிக விளைச்சல் தரும் பழங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம்

(ஆ) வெண்மைப்புரட்சி

(இ) அதிக விளைச்சல் தரும் ரகங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம்

(ஈ) நிலப்புரட்சி

182. இந்திய அரசியலமைப்பில் அதிகாரங்களில் பிரிவில் ஏழாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட மத்தியப் பட்டியலில் எத்தனை இனங்கள் உள்ளன?

(அ) 61 (ஆ) 52 (இ) 96 (ஈ) 100

183. கீழ்க்கண்டவற்றில் மாறுபட்ட வரி எது?

(அ) செல்வ வரி (ஆ) வருமான வரி (இ) நிறுவன வரி (ஈ) முத்திரைத் தாள் வரி

184. 1940ஆம் ஆண்டு காமராசர் “வார்தா” சென்று சந்தித்தது

(அ) நேரு (ஆ) காந்திஜி (இ) திலகர் (ஈ) ஜின்னா

185. சரியான விடையைத் தேர்வு செய்க:

சென்னை மாகாணத்தின் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ———- ஆவார்

(அ) T.பிரகாசம் (ஆ) ராஜாஜி (இ) காமராசர் (ஈ) சுப்பிரமணிய சிவா

186. Dr.B.R.அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

(அ) 1987 (ஆ) 1989 (இ) 1990 (ஈ) 1991

187. எந்த காங்கிரஸ் அமர்வில் முழு சுதந்திரத்தை (பூர்ண ஸ்வராஜ்) தனது குறிக்கோளாக அறிவித்தது?

(அ) 1929 லாகூர் அமர்வு (ஆ) 1929 கல்கத்தா அமர்வு

(இ) 1932 லக்னோ அமர்வு (ஈ) 1932 டெல்லி அமர்வு

188. நீதிநெறியுடன் மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?

(அ) மக்கட்கு உயிர் (ஆ) மக்கட்கு அமிழ்து (இ) மக்கட்கு இறை (ஈ) மக்கட்கு உடல்

189. ஒருவரின் நகைக்கும் உவகைக்கும் பகையாக இருப்பது எது என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

(அ) அச்சம் (ஆ) அழுக்காறு (இ) அழுகை (ஈ) சினம்

190. பிறனில் விழைவானிடத்து எவை நான்கு நீங்காது இருக்கும்?

(அ) இன்பம், துன்பம், மகிழ்ச்சி, பொருள் (ஆ) பகை, பாவம், அச்சம், பழி

(இ) பொருள், பெருமை, சிறப்பு, மேன்மை (ஈ) வறுமை, துன்பம், பாவம், நோய்

191. பிறரால் விரும்பப்படாதவன் செல்வத்தைத் திருவள்ளுவர் எதற்கு ஒப்பாகக் கூறுகின்றார்?

(அ) ஊர் நடுவில் இனிய மரம் பழுத்தது போன்றது

(ஆ) யாருக்கும் பயன்படாது புதைத்து வைக்கும் செல்வத்துக்கு ஒப்பாகும்

(இ) களைகளைப் போன்று பயனற்றதாம்

(ஈ) ஊர் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது

192. கிளைக்காலிஸில் நடைபெறும் இடம் ———- ஆகும்

(அ) சைட்டோபிளாசம் (ஆ) மைட்டோகாண்டரியம் (இ) பசுங்கணிகம் (ஈ) நியூக்ளியஸ்

193. பாலூட்டிகளின் தனித்தன்மை ———– ஆகும்

(அ) குளிர் இரத்த விலங்குகள் (ஆ) காற்றறைகள் கொண்ட எலும்புகள்

(இ) செவுள்கள் இருப்பது (ஈ) தாய்-சேய் இணைப்புத்திசு

194. 3 : 1 என்ற விகிதாச்சாரத்தில் உள்ள அடர் அமிலங்கள் ———– தங்கத்தை சுத்தம் செய்யவும், சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.

(அ) HCl மற்றும் HNO3 (ஆ) HCl மற்றும் H2SO4 (இ) HNO3 மற்றும் H2SO4 (ஈ) HNO3 மற்றும் HCl

195. கரித்தாரிலிருந்து கிடைக்கும் எந்தப் பொருள் அந்துப்பூச்சி மற்றும் பிற பூச்சிகளை ஒழிப்பதற்குப் பயன்படுகிறது?

(அ) பென்சீன் (ஆ) அனிலீன் (இ) நாப்தலீன் (ஈ) டொலுயீன்

196. கீழ்க்காணும் அலகுகளில் வெப்பநிலையின் S.I.அலகு எது?

(அ) செல்சியஸ் (ஆ) கெல்வின் (இ) ஃபாரன்ஹீட் (ஈ) மேற்கூறிய அனைத்தும்

197. பின்வரும் நதிகளில் எது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று?

(அ) வைகை

(ஆ) தாமிரபரணி

(இ) கோதாவரி

(ஈ) பாலாறு

198. கீழ்க்கண்டவற்றுள் இஸ்ரோவின் எந்தத் திட்டம் மனிதர்களை விண்வெளிக்குக் குறைந்த சுற்றுப்பாதையில் அழைத்துச் செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது?

(அ) நாஸா

(ஆ ஸ்பேஸ்-எக்ஸ்

(இ) ககன்யான்

(ஈ) அப்போலோ II

199. பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?

(அ) 2004

(ஆ) 2005

(இ) 2006

(ஈ) 2007

200. தமிழ்நாடு அரசின் சமுதாய நலனுக்காக ஆற்றிய சேவைக்கு சிறந்த மூன்றாம் பாலினத்தவர் விருது பெற்றவர்

(அ) பானி

(ஆ) கிரேஷ் பானு

(இ) தஷா

(ஈ) ஃபஹிமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!