Tnpsc Executive Officer Grade III Exam Previous Questions and Answer Key 2022 – Hindu Religious Saivam and Vainavam in Tamil
Tnpsc Executive Officer Grade III Exam Previous Questions and Answer Key 2022 – Hindu Religious Saivam and Vainavam in Tamil
EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE
1. நம்பி ஆண்டார் நம்பி, யார் வேண்டுகோளுக்கு இணங்க தேவார திருமுறை ஏடுகளை தில்லையில் கண்டெடுத்தார்?
(அ) பராந்தக சோழன்
(ஆ) இராஜராஜசோழன்
(இ) இராஜேந்திரசோழன்
(ஈ) குலோத்துங்கசோழன்
2. “முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து” என்ற பாடலை பாடியவர்
(அ) இளங்கோவடிகள் (ஆ) பட்டினத்தார் (இ) சேக்கிழார் (ஈ) மருதப்பிரான்
3. வைகானஸாகமம் ——— என்ற மகரிஷியின் மூலமாக உபதேசிக்கப்பட்டது.
(அ) போகர் (ஆ) விகனஸர் (இ) கொங்கனவர் (ஈ) விக்னேஷ்வர்
4. ருத்ரபேத ஆகமங்களின் எண்ணிக்கை ——— ஆகும்
(அ) 8 (ஆ) 18 (இ) 28 (ஈ) 10
5. “விக்கிரகம்” என்பது
(அ) கடவுள் விசேஷமாக விளக்கும் இடம்
(ஆ) கோயில் இருக்கும் இடம்
(இ) கோபுரம் இருக்கும் இடம்
(ஈ) திருவிழாக்காலம்
6. மந்திரம் அதிகம் கலவாமல் செய்யும் சடங்கு
(அ) சோடாசஸம்ஸ்காரம்
(ஆ) இலட்சார்சனை
(இ) பிரதேசாஷம்
(ஈ) சகஸ்ரநாமம்
7. “நீலோற்பலம்” மலர் எந்த யாம பூசைக்கு உகந்தது?
(அ) முதல் யாமம்
(ஆ) இரண்டாம் யாமம்
(இ) மூன்றாம் யாமம்
(ஈ) நான்காம் யாமம்
8. “சோணம்” என்பதன் பொருள்
(அ) சோதிப்பவன்
(ஆ) மருள்
(இ) சிவப்பு
(ஈ) பனை
9. “ஸம்ஹாரக் கோலம்” எத்தனையாவது நாள் திருவிழாவில் இடம் பெறும்?
(அ) 5ம் நாள்
(ஆ) 8 ம் நாள்
(இ) 10 ம் நாள்
(ஈ) 3 ம் நாள்
10. “ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு” என்ற பொருளை கொண்டது ———- ஆகும்
(அ) புராணம்
(ஆ) சாத்திரம்
(இ) தோத்திரம்
(ஈ) இதிகாசம்
11. பெண் இறைவனால் ஆடப்படும் “கூத்து” எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(அ) இலாஸ்யம் (ஆ) தாண்டவம் (இ) அபஸ்மாரம் (ஈ) சிலம்பொல
12. முப்பத்தாறு (36) சைவ தத்துவவங்கள் என்பவை
(அ) ஆன்ம தத்துவம் – 24, வித்தியாதத்துவம் – 7, சிவதத்துவம் – 5
(ஆ) ஆன்ம தத்துவம் – 22, வித்தியாதத்துவம் – 9, சிவதத்துவம் – 5
(இ) ஆன்ம தத்துவம் – 24, வித்தியாதத்துவம் – 5, சிவதத்துவம் – 7
(ஈ) ஆன்ம தத்துவம் – 21, வித்தியாதத்துவம் – 7, சிவதத்துவம் – 8
13. இவற்றுள் “அட்டவீரட்டங்கள்” கொண்ட தலம் எவை இல்லை?
(அ) திருக்கண்டியூர் (ஆ) திருக்கோவலூர் (இ) திருவதிகை (ஈ) திருக்காளத்தி
14. திருமூலர் அருளிய திருமந்திரம் எத்தனை தந்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன?
(அ) பத்து (ஆ) பன்னிரெண்டு (இ) ஒன்பது (ஈ) ஏழு
15. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” – என்ற கூற்றை கூறியவர்
(அ) மாணிக்கவாசகர் (ஆ) திருமூலர் (இ) சுந்தரர் (ஈ) திருஞான சம்பந்தர்
16. கீழ்கவருவனவற்றில் தென் திசைக் கயிலை பட்டியலில் வராத ஊர்
(அ) திருக்காளத்தி (ஆ) திருவந்திபுரம் (இ) திருச்சிராப்பள்ளி (ஈ) திருக்கோணமலை
17. ஆலய வழிபாட்டு முறையில் துவஜாரோகணம் என்பது
(அ) தீபாராதனை (ஆ) அபிஷேகம் (இ) வீதி உலா (ஈ) கொடியேற்றம்
18. அரிசி, மணல், கோமயம், விபூதி, சந்தனம் முதலியவற்றால் செய்யப்படும் இலிங்கம்
9அ) லோகஜம் (ஆ) கூணிகம் (இ) சைலஜம் (ஈ) இரத்னஜம்
19. “விண்ணிழி கோயில்” அமைந்துள்ள இடம்
(அ) திருவதிகை (ஆ) திருவீழிமிழலை (இ) திருவிண்ணகரம் (ஈ) கச்சூர்
20. குரு தன் சீடனுக்குச் செய்யும் உபகாரத்தை ——- எனக் கூறுவர்
(அ) குருரேவ (ஆ) குண்டலனி (இ) தீக்சை (ஈ) ஞானம்
21. அன்றாடம் மாறாமல் செய்து வரும் அநுட்டானம், பூசைக்கு ——– எனப்பெயர்
(அ) நைமித்திகம் (ஆ) காமியம் (இ) யோகஜம் (ஈ) நித்தியம்
22. “சரியை”யின் பொருட்டு, சிவாச்சாரியாரால் செய்யப்படும் தீக்கை
(அ) சமய தீக்கை (ஆ) நிர்வாண தீக்கை (இ) மந்திர தீக்கை (ஈ) நயன தீக்கை
23. சமய வழிபாட்டில் நித்தியம், நைமித்திகம், காமியம் என்ற மூன்றையும் செய்தற்கு உரியவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(அ) நிர்பீச தீக்கை (ஆ) சபீச தீக்கை (இ) மோட்ச தீக்கை (ஈ) பரம தீக்கை
24. “தென்முகக் கடவுள்” என்று அழைக்கப்படும் கடவுள்
(அ) விநாயகர் (ஆ) சண்டிகேஸ்வரர் (இ) தட்சிணாமூர்த்தி (ஈ) சரஸ்வதி
25. வேதசிவாகமங்களை நன்றாக ஓதி உணர்ந்து அவற்றில் கூற்பபெற்ற ஒழுக்கங்களை கடைபிடிக்காதவர்
(அ) உத்தமர் (ஆ) உத்தமருள் உத்தமர் (இ) உத்தமருள் அதர்மர் (ஈ) உத்தமருள் மத்திமர்
26. பொருத்துக:
அ. இருவினை யொப்பு 1. மலங்கள் நீங்கும் நிலை
ஆ. மல பரிபாகம் 2. ஆன்மா ஆணவ மலத்தோடு மட்டும் சேர்ந்த நிலை
இ. சத்தி நிபாதம் 3. விருப்பு வெறுப்பற்ற நிலை
ஈ. கேலாவத்தை 4. இறைவனது அருட்சக்தி ஆன்மாவின் மீது விழுதல்
அ ஆ இ ஈ
அ 4 3 2 1
ஆ. 3 4 1 2
இ. 4 1 2 3
ஈ. 3 1 4 2
27. 1.ஒரு மலத்தார் – விஞ்ஞானகலர்.
2. இரு மலத்தார் – பிரளயாகலர்.
3. மும்மலத்தார் – கன்கலர்.
இவற்றுள் சரியானது எது?
(அ) 1 ம், 2ம் சரி (ஆ) 1ம், 3ம் சரி (இ) 2ம், 3ம் சரி (ஈ) 1ம், 3ம் தவறு
28. “ஆக்கி எவையும் அளித்(து) ஆ சுடன் அடங்கப்” என்ற தொடரில் உள்ள ஆசு என்பதன் பொருள்
(அ) புகழ் (ஆ) பதி (இ) குற்றம் (ஈ) பசு
29.கொடிக்கவி பாடியவர் யார்?
(அ) அருள்நந்தி தேவர் (ஆ) மறைஞான சம்பந்தர்
(இ) மெய்கண்ட தேவர் (ஈ) உமாபதி சிவம்
30. பெரியபுராணத்தின் மற்றொரு பெயர்
(அ) திருமந்திரம் (ஆ) திருத்தொண்டர் புராணம் (இ) தேவாரம் (ஈ) திருவருட்பா
31. இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
(அ) திருமூலர் – திருமந்திரம்
(ஆ) மாணிக்கவாசகர் – திருவாசகம்
(இ) திருஞானசம்பந்தர் – திருவிசைப்பா
(ஈ) நம்பிஆரூரர் – திருநெறித்தமிழ்
32. “திருத்தொண்டர் புராணம்” ——— சமயநெறியோடு தொடர்புடையது
(அ) சைவம் (ஆ) வைணவம் (இ) சாங்கியம் (ஈ) பௌத்தம்
33. முதல் மூன்று சைவத் திருமுறைகளை இயற்றியவர்
(அ) திருஞானசம்பந்தர் (ஆ) சுந்தரர் (இ) மாணிக்கவாசகர் (ஈ) சேக்கிழார்
34. இறைவனோடு சேர மாணிக்கவாசகர் பின்பற்றிய மார்க்கம்
(அ) சகமார்க்கம் (ஆ) தாசமார்க்கம் (இ) சன்மார்க்கம் (ஈ) சத்புத்திர மார்க்கம்
35. திராவிட சிசு என ஆதிசங்கரரால் அழைக்கப்பட்டவர்
(அ) சுந்தரர் (ஆ) திருமூலர் (இ) சேக்கிழார் (ஈ) திருஞானசம்பந்தர்
36. முருகனை முழுமுதற் கடவுளாக கொண்ட சமயம்
(அ) சைவம் (ஆ) சாக்தேயம் (இ) ஸெளரம் (ஈ) கௌமாரம்
37. சைவசமயம் பேசும் வாதம் ——— ஆகும்
(அ) அஸச்சாரியவாதம் (ஆ) ஸத்சாரியவாதம்
(இ) சதஸத்சாரியவாதம் (ஈ) இவற்றில் எதுவுமில்லை
38. சன்மார்க்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
(அ) 1865 (ஆ) 1875 (இ) 1885 (ஈ) 1895
39. “மரணமிலாப் பெருவாழ்வு” பற்றி பேசியவர் யார்?
(அ) இராமலிங்க சுவாமிகள் (ஆ) ஸ்ரீராமகிருஷ்ணர்
(இ) ரமணமகரிஷி (ஈ) வேதாத்திரி மகரிஷி
40. சிவ தீக்கையில் ஏழாவது தீக்கை யாது?
(அ) திருநோக்கு பரிசம் (ஆ) பாவனை (இ) சாத்திரம் (ஈ) ஒளத்திரி
41. மத்துவரது – நிலைப்படி இறைவனுக்கும் உடலக்குமிடையே உள்ள காரண உறவு
(அ) உபாதான காரணம் (ஆ) நிமித்த காரணம்
(இ) இறுதிக் காரணம் (ஈ) வடிவக் காரணம்
42. மச்சம், கூர்மம் என்பன எவ்வகை புராணம் ஆகும்?
(அ) சிவபுராணம் (ஆ) விஷ்ணுபுராணம் (இ) அக்கினிபுராணம் (ஈ) சூரியபுராணம்
43. பொருத்துக:
புராணம் வகை
அ. பிரம கைவர்த்தம் 1. விஷ்ணு புராணம்
ஆ. ஆக்னேயம் 2. சுpவ புராணம்
இ. பாகவதம் 3. அக்னி புராணம்
ஈ. பவிஷ்யம் 4. சூரிய புராணம்
அ ஆ இ ஈ
அ. 4 1 3 2
ஆ. 3 4 2 1
இ 2 3 4 1
ஈ. 4 3 1 2
44. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதது எது?
(அ) குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமெழி
(ஆ) பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி
(இ) நம்மாழ்வார் – திருவாய்மொழி
(ஈ) பொய்கையாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி
45. “புருஷ” என்னும் சொல் ——–யை குறிக்கும்
(அ) நாராயணன் (ஆ) ஆன்மா (இ) உலகம் (ஈ) பாஸ்யம்
46. பிறப்பிலி என்று போற்றப்படுபவர்
(அ) ஆன்மா (ஆ) பரமபுருஷன் (இ) பிரபஞ்சம் (ஈ) பிரளயம்
47. பொய்கையில் அவதரித்ததன் காரணமாக இவர் ———- என்று அழைக்கப்பட்டார்
(அ) பொய்கையார் (ஆ) பேயார் (இ) பூதத்தார் (ஈ) அருள்மாறன்
48. நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்
(அ) லோகாச்சாரியர் (ஆ) ஆளவந்தார் (இ) இராமானுஜர் (ஈ) நாதமுனி
49. வேதம் தமிழ் செய்த மாறன் என போற்றப்படுபவர் யார்?
(அ) பூதத்தாழ்வார் (ஆ) பேயாழ்வார் (இ) பெரியாழ்வார் (ஈ) நம்மாழ்வார்
50. கருடாழ்வாரால் அயக்கிரிவ மந்திரம் உபதேசிக்கப் பெற்றவர்
(அ) வேதாந்த தேசிகர் (ஆ) பெருமாள் சீயர் (இ) நாதமுனிகள் (ஈ) ஸ்ரீபட்டர்
51. குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் அருந்தாது, அழாமலும் கண்மூடியும் கிடந்த ஆழ்வார்
(அ) திருமங்கையாழ்வார் (ஆ) மதுரகவியாழ்வார்
(இ) திருப்பாணாழ்வார் (ஈ) நம்மாழ்வார்
52. ஆழ்வார்களின் 1296 பாசுரங்களை இயற்றியது யார்?
(அ) பேயாழ்வார் (ஆ) நம்மாழ்வார் (இ) குலசேகராழ்வார் (ஈ) ஆண்டாள்
53. நம்மாழ்வாரின் திருவுருவத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்த ஆழ்வார் யார்?
(அ)தொண்டரடிப் பொடியாழ்வார் (ஆ) மதுரகவியாழ்வார்
(இ) திருப்பாணாழ்வார் (ஈ) பெரியாழ்வார்
54. பஞ்ச சம்ஸ்காரம் எனக் கூறப்படுபவை
(அ) மெய்,வாய்,கண்,மூக்கு,செவி
(ஆ) தனு,கரணம்,புவனம்,போகம்,அறம்
(இ) அணிமா,மகிமா,கரிமா,இலகிமா,பிராப்தி
(ஈ) தாபம்,புண்டரம்,நாமம்,மந்திரம்,அர்ச்சனம்
55. சௌர மத வழிபாட்டு நெறியில் எதனை வழிபடுகின்றனர்?
(அ) இயற்கை (ஆ) சூரியன் (இ) சந்திரன் (ஈ) பூமி
56. தீர்த்தங்கரர்களில் முதலாமவர்
(அ) மகாவீரர் (ஆ) பார்சுவநாதர் (இ) பாகுபலீசுவரர் (ஈ) ரிஷப தேவர்
57. உபநிடதங்களின் எண்ணிக்கை யாது?
(அ) 10 (ஆ) 108 (இ) 18 (ஈ) 118
58. கீழ் உள்ளவற்றில் எந்த கோசம் உபநிஷத்தில் இல்லை?
(அ) பிராணமய கோசம் (ஆ) ஜீவமைய கோசம்
(இ) அன்னமய கோசம் (ஈ) ஆனந்தமய கோசம்
59. விரோதிகளின் அழிவின் பொருட்டுச் செய்ய வேண்டிய கிரியா முறைகளைப் பற்றி கூறும் வேதம்.
(அ) இருக் வேதம் (இ) யஜீர் வேதம் (இ) ஸாம வேதம் (ஈ) அதர்வண வேதம்
60. நான்கு வேதங்களின் தன்மையை பொருத்துக:
(அ) இருக் 1. சுந்தங்,அநுஷ்ட்டு, திரிஷ்டு
(ஆ) யஜீர் 2. “கீதி”யை இசை
(இ) ஸாம 3. பயத்தை போக்குவது
(ஈ) அதர்வணம் 4. யாகங்கள்
அ ஆ இ ஈ
அ. 1 4 2 3
ஆ. 1 2 3 4
இ. 4 2 3 1
ஈ. 1 2 4 3
61. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:
கூற்று (A): வேதம் மறையெனப் பெயர் பெற்றது.
காரணம் (R): தெய்வீகமான கருத்துக்களைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருக்கிறது.
(அ) (A) மற்றும் (R) சரியானது (A) விற்கான காரணம் (R) ஆகும்
(ஆ) (A) மற்றும் (R) சரியானது (A) விற்கான காரணம் (R) இல்லை
(இ) (A) சரியானது ஆனால் (R) தவறு
(ஈ) (A) மற்றும் (R) தவறானது
62. அத்வைத முறைபடி பொருத்தி காண்:
அ ஆ
அ. சத் 1. முயற் கொம்பு
ஆ. அசத் 2. உலகம்
இ. சதசத் 3. பிரம்மம்
அ ஆ இ
அ. 2 3 1
ஆ. 3 2 1
இ. 3 1 2
ஈ. 1 2 3
63. உலகாயுத பிரிவின் மற்றொரு பெயர்
(அ) சமணம் (ஆ) மீமாம்சம் (இ) சாங்கியம் (ஈ) சாருவாகம்
64. யோக தத்துவத்தை வகுத்தவர் ———– ஆவார்
(அ) இராமானுஜர் (ஆ) சங்கரர் (இ) மத்துவர் (ஈ) பதஞ்சலி முனிவர்
65. கீழ்காணும் வாக்கியங்களை கவனி:
கூற்று (A): யோகம் என்பதற்குச் சேர்க்கையென்பது பொருள்.
காரணம் (R) : ஜீவாத்மா பரமாத்மாவோடு உள்ளத்தால் சேர்ந்துறைதலாம்.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(இ) (A) சரி ஆனால் (R) தவறு (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
66. “தரும-பூத-ஞானம்” என்றால் என்ன?
(அ) முதல் நிலை ஞானம் (ஆ) இறுதி நிலை ஞானம்
(இ) வழி நிலை ஞானம் (ஈ) ஜீவ நிலை ஞானம்
67. பின்வருவனவற்றுள் தவறான ஒன்றை தெரிவு செய்க:
1. சரீரங்களின் எண்ணிக்கை 5 ஆகும்.
2. சூக்கும சரீரம் யாதனாசரீரம் எனவும் அறியப்படும்.
3. சூக்கும சரீரத்தின் துணையின்றி கனவு காண முடியாது.
4. சூக்குக சரீரம் அழிந்தால்தான் சூஷ்ம உடல் உருவாகும்.
(அ) 1 (ஆ) 2 (இ) 3 (ஈ) 4
68. சபித்தற் பொருட்டு உரைக்கப்படும் மந்திரச் செய்யுளை ————- என்பர்.
(அ) சங்கதம் (ஆ) மங்கதம் (இ) அங்கதம் (ஈ) சுங்கதம்
69. இந்துமத கூற்றின் படி பறவைகளின் பிறப்பில் உள்ள பேதங்கள் எண்ணிக்கை எத்தனை?
(அ) 1,00,000 (ஆ) 2,00,000 (இ) 10,00,000 (ஈ) 3,00,000
70. மனித உடலமைப்பில் புறக்கருவிகளில் பிருதிவின் கூறுகள் யாவை?
(அ) மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை
(ஆ) நீர், உதிரம், சுக்சிலம், மூளை, மஜ்ஜை
(இ) ஓடல், நடத்தல், இருத்தல், கிடத்தல், நிற்றல்
(ஈ) குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்
71. திருமந்திர உரைத்திறன் வகைப்பாட்டில் நடுவில் இருப்பது
(அ) தந்திரம் (ஆ) மந்திரம் (இ) உபதேசம் (ஈ) இறைவன்
72. ஓம், நா.மோ,நா,ரா,ய,ணா,ய என்பன
(அ) எட்டுச் சூட்சுமம் (ஆ) எட்டு அட்சரங்கள் (இ) எட்டு மந்திரம் (ஈ) எட்டு மகாமனு
73. மகாசங்காரத்திற்கு பிறகு உயிர்வர்க்கங்கள் அனைத்தும் —— எனும் நிலையை அடைந்து அடங்கிக் கிடக்கும்
(அ) வித்தை (ஆ) கேவலம் (இ) சாரூபம் (ஈ) ஒளத்திரி
74. எல்லா உலகங்களும் ஒரே காலத்தில் அழிவதை ——— என்பர்
(அ) மறைவு (ஆ) அழிவு (இ) மகாசங்காரம் (ஈ) ஓழிப்பு
75. கடவுள் ரூபம், ரூபாரூபம், அரூபம் எனும் மூன்று நிலைகளில் எத்தனை விதமான பெயர்களைப் பெறுகிறார்?
(அ) ஒன்பது (ஆ) எட்டு (இ) ஏழு (ஈ) ஆறு
76. ஆரோபம், அத்தியாசம், பிராந்தி, மித்தை என்ற சொற்கள் குறிக்கும் கருத்து
(அ) மாயை (ஆ) அருள் (இ) பசு (ஈ) பதி
77. நரகம் என்பதன் இருத்தலை ஏற்றுக்கொள்ளும் வேதாந்தி யார்?
(அ) மத்துவர் (ஆ) இராதாகிருஷ்ணன் (இ) இராமானுசர் (ஈ) நிம்பார்க்கர்
78. விசிட்டாத்வைதத்தின் படி, ஆன்மாவின், “தர்மபூத ஞானத்திற்கும்” இறைவனின் தர்மபூத ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு
(அ) இறைவனின் ஞானம் பூரணமானது, ஆன்மாக்களின் ஞானம் குறைபாடு உடையது
(ஆ) இறைவனின் ஞானமும், ஆன்மாக்களின் ஞானமும் பூரணமானது
(இ)இறைவனின் ஞானம் மற்றும் ஆன்மாக்களின் ஞானம் குறைபாடு உடையது
(ஈ) இறைவனின் ஞானம் பூரணமானது, ஆன்மாக்களின் ஞானம் ஒன்றும் இல்லாதது சூன்யத்தைப் போல
79. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் எந்த மாதத்தில் தோன்றினார்கள்
(அ) தை (ஆ) மாசி (இ) ஐப்பசி (ஈ) சித்திரை
80. பொருத்துக:
ஆழ்வார்கள் பாடிய பாசுரம்
அ. மதுரகவியாழ்வார் 1. 473
ஆ. பெரியாழ்வார் 2. 10
இ. பேயாழ்வார் 3. 11
ஈ. திருப்பாணாழ்வார் 4. 100
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ. 3 1 4 2
இ. 2 4 1 3
ஈ. 4 3 2 1
81. பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் எனப்படுபவர்கள்
(அ) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
(ஆ) குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்
(இ) தொண்டர் அடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார்
(ஈ) திருமழிசை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வார்
82. பாரதத்தை இயற்றியவர் யார்?
(அ) சூத புராணிகர் (ஆ) வேத வியாஸர் (இ) வால்மீகி முனிவர் (ஈ) வியாச முனிவர்
83. இந்திய தத்துவத்தில் “பிரஸ்தானத்திரய” என்பது யாது?
(அ) உபநிடம், பகவத்கீதை மற்றும் பிரம்மசூத்திரம் (ஆ) கடவுள், உலகம் மற்றும் ஆன்மா
(இ) சிவன், பிரம்மன் மற்றும் விஷ்ணு (ஈ) வேதங்கள், உபநிடம் மற்றும் கீதை
84. கீதையின் இரண்டாம் ஆறு அத்தியாயம் (7 முதல் 12 வரை) ——— ஆகும்
(அ) கர்ம காண்டம் (ஆ) பக்தி காண்டம்
(இ) ஞான காண்டம் (ஈ) சுந்தரக் காண்டம்
85. சங்க இலக்கியங்களில் “முல்லைக்கலி” என்னும் நூல் யாரைப் பற்றியது?
(அ) கணபதி (ஆ) முருகன் (இ) சிவன் (ஈ) திருமால்
86. கீழ்கண்ட அட்டவணை Iல் அட்டவணை IIஐ இணைத்து சரியானவற்றைச் சேர்க்கவும்
அட்டவணை-I அட்டவணை-II
அ. பொய்கை ஆழ்வார் 1. முதல் திருவந்தாதி
ஆ. பேயாழ்வார் 2. இரண்டாம் திருவந்தாதி
இ. பூதத்தாழ்வார் 3. மூன்றாம் திருவந்தாதி
ஈ. திருமழிசை ஆழ்வார் 4. திருச்சந்தவிருத்தம்
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ. 4 3 2 1
இ. 1 3 2 4
ஈ. 2 1 4 3
87. பதிகத்தைத் ——— என்பர்
(அ) திருவாய்மொழி (ஆ) நாடகம் (இ) கூத்து (ஈ) வாய்பாட்டு
88. வைணவ தந்திரங்கள் கடவுளை எத்தனை படிகளாக பேசுகின்றன?
(அ) 3 (ஆ) 7 (இ) 5 (ஈ) 9
89. வைணவத் தந்திரத்தில் கடவுளுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன?
(அ) 6 (ஆ) 5 (இ) 3 (ஈ) 4
90. வைணவத்தின் காணப்படும் இருவகை ஆகமங்கள் யாவை?
(அ) வைகாநச ஆகமம் மற்றும் நாராயணீய ஆகமம்
(ஆ) வைகாநச ஆகமம் மற்றும் பாஞ்சராத்திர ஆகமம்
(இ) பாஞ்சராத்திர ஆகமம் மற்றும் நாரணயணீய ஆகமம்
(ஈ) பாகவத ஆகமம் மற்றும் வைகாநச ஆகமம்
91. சமண சமயத்தை சார்ந்து அதனை வளர்த்து வந்த —— பல்லவப் பேரரசனாகிய மகேந்திரவர்மனை சைவர் ஆக்கியவர் யார்?
(அ) திருஞானசம்பந்தர் (ஆ) திருநாவுக்கரசர் (இ) சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர்
92. திரிபுரங்களை எரித்த பின்பு இறைவன் ஆடிய ஆடலே ——- எனப்பட்டது
(அ) பரதநாட்டியம் (ஆ) தாண்டவம் (இ) கொடுகொட்டி (ஈ) களிநடனம்
93. “சிலப்பதிகாரம்” என்ற நூலில் “பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்” என்று எந்த கோயிலை குறிப்பிடுகின்றது?
(அ) சைவத் திருக்கோவில்களை (ஆ) சமணக் கோவில்களை
(இ) கண்ணகி கோவில் (ஈ) காவல் தெய்வம்
94. சைவ சித்தாந்தாவில் “சாயுஜ்யம்” என்பது
(அ) கடவுள் இருக்குமிடத்தில் இருப்பது (ஆ) கடவுள் வடிவத்தை அடைவது
(இ) கடவுளிடம் ஐக்கியமாவது (ஈ) கடவுளுக்கு அருகில் செல்வது
95. மெய்கண்டார் எழுதியது
(அ) சிவஞான போதம் (ஆ) சிவஞான சித்தயார் (இ) சிவப்பிரகாசம் (ஈ) திருவருட்பயன்
96. திருமுறைகளைத் தொகுத்து வழங்கியவர் யார்?
(அ) சேக்கிழார் (ஆ) திருநாவுக்கரசர்
(இ) நம்பியாண்டார் நம்பி (ஈ) மாணிக்கவாசகர்
97. திருமுறை என்னும் பெயர் ——— காலத்துக் கல்வெட்டுக்களில் தான் முதன் முதலாகக் காணப்படுகின்றது.
(அ) கரிகால சோழன் (ஆ) முதலாம் இராஜராஜ சோழன்
(இ) இராஜேந்திர சோழன் (ஈ) மூன்றாம் குலோத்துங்க சோழன்
98. சேக்கிழாரின் சிறப்புப் பெயர்
(அ) திராவிட சிசு (ஆ) வன்றொண்டர் (இ) உத்தம சோழப்பல்லவன் (ஈ) நம்பியாரூரன்
99. திருத்தொண்டர் புராணம் ———- என்பவர்களின் வரலாற்றை விவரிக்கிறது.
(அ) நாயன்மார்கள் (ஆ) ஆழ்வார்கள் (இ) சித்தர்கள் (ஈ) ரிஷிகள்
100. அம்மையிடம் திருமுலைப்பால் உண்டு ஞானம் பெற்றவர்
(அ) திருநாவுக்கரசர் (ஆ) சுந்தரர் (இ) மாணிக்கவாசகர் (ஈ) திருஞானசம்பந்தர்
101. நீலகண்ட சிவாச்சாரியரால் அருளப்பட்ட உரை
(அ) கண்ட பாசியம் (ஆ) சங்கர பாசியம் (இ) மத்துவ பாசியம் (ஈ) சுத்தாத்வைதம்
102. நிம்பர்க்கரின் கொள்கை ——– என்றழைக்கப்படுகிறது
(அ) பேதம் (ஆ) அபேதம் (இ) பேதாபேதம் (ஈ) அத்வைதம்
103. திருமழிசை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் எண்ணிக்கை
(அ) 216 (ஆ) 105 (இ) 173 (ஈ) 55
104. “மருணீக்கியார்” எனும் பெயர் பெற்ற சிவனடியார்
(அ) திருஞானசம்பந்தர் (ஆ) மாணிக்கவாசகர் (இ) திருநாவுக்கரசர் (ஈ) சுந்தரர்
105. “பிரதி பிம்பவாதம்” பேசும் தத்துவம்
(அ) சைவசித்தாந்தம் (ஆ) விசிஸ்டாத்வைதம் (இ) அத்வைதம் (ஈ) துவைதம்
106. பொருத்துக:
சுப்த மாதர் வாகனம்
அ. கௌமாரி 1. அன்னம்
ஆ. வாராஹி 2. மயில்
இ. பிராம்மி 3. கருடன்
ஈ. வைஷ்ணவி 4. எருமை
அ ஆ இ ஈ
அ. 4 1 3 2
ஆ. 1 2 3 4
இ. 3 2 1 4
ஈ. 2 4 1 3
107. “மந்திரமாவது நீறு” என்ற திருநீற்றுப் பதிகத்தை பாடியவர் யார்?
(அ) சுந்தரர் (ஆ) மாணிக்கவாசகர் (இ) திருஞானசம்பந்தர் (ஈ) திருநாவுக்கரசர்
108. சிவபெருமான், “தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”, என யாருக்கு அடியெடுத்துக் கொடுத்தார்?
(அ) மாணிக்கவாசகர் (ஆ) சுந்தரர் (இ) அப்பர் (ஈ) திருநாவுக்கரசர்
109. கர்ண பூஷணம் எந்த சடங்கு முறையை குறிக்கிறது?
(அ) குடுமி வைத்தல் (ஆ) திருமணம் (இ) காது குத்தல் (ஈ) பூணூல் இடுதல்
110. கிருத்திகை தோறும் விரதம் இருக்கும் முறைக்கு ——– எனப்பெயர்
(அ) வார விரதம் (ஆ) நட்சத்திர விரதம் (இ) திதி விரதம் (ஈ) சஷ்டி விரதம்
111. கூற்று (A) : திருவிழாக்கள் ஐந்தொழில்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றன.
காரணம் (R): திருவிழாக்கள் நடைபெறும் நாட்களில் முக்கிய சடங்குகள் பின்பற்றப்படுகின்றன
(அ) (A) மற்றும் (R) சரி மேலும் (A)விற்கான காரணம் (R) ஆகும்
(ஆ) (A) மற்றும் (R) சரி ஆனால் (A)விற்கான காரணம் (R) அல்ல
(இ) (A) சரி (R) தவறு
(ஈ) (A) தவறு (R) சரி
112. திருவிழாக்கள் பின்வரும் எந்தவொன்றை பின்பற்றி நடைபெறுகின்றன?
(அ) வேதங்கள் (ஆ) புராணங்கள் (இ) இதிகாசங்கள் (ஈ) ஆகமங்கள்
113. “நாற்றப் பாண்டம் நான்முழத்து ஒன்பது” என்னும் பாடலை பாடிய சித்தர் யார்?
(அ) அகப்பேய்ச் சித்தர் (ஆ) குதம்பைச் சித்தர் (இ) பட்டினத்தார் (ஈ) பத்திரகிரியார்
114. “ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்னால் விளம்புந் தகையதோ” – எனும் கூற்றை நல்கியவர்
(அ) குமரகுருபரர் (ஆ) சேக்கிழார் (இ) கபிலர் (ஈ) சுந்தரர்
115. “சந்திர ரேகை” என்னும் நூல் எழுதிய சித்தர்
(அ) கொங்கணர் (ஆ) கோரக்கர் (இ) தன்வந்திரி (ஈ) சுந்தரானந்தர்
116. சோட சோபசாரங்கள் எத்தனை?
(அ) 4 (ஆ) 8 (இ) 16 (ஈ) 32
117. கீழ்கண்ட கூற்றை ஆராய்க:
கூற்று (A): இறைவனை விக்கிரத்தில் ஆவாகனம் செய்த பிறகே, ஸ்தாபனம் செய்யப்பட வேண்டும். காரணம் (R): ஸ்தாபனம் என்பது இறைவனை அருள் செய்யுமாறு வேண்டுவதாகும்.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (A)விற்கான காரணம் (R) ஆகும்
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (A) விற்கான காரணம் (R) அல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
118. பொருத்துக:
அ. மார்பு 1. அர்த்த மண்டபம்
ஆ. கழுத்து 2. இலிங்கம்
இ. சிரம் 3. கர்ப்பகிரகம்
ஈ. புருவமத்தி 4. மகாமண்டபம்
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ. 3 4 2 1
இ. 4 2 1 3
ஈ. 4 1 3 2
119. சின் முத்திரை தொடர்பான பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. யோகத்தை கையால் காட்டும் அடையாளம் சின் முத்திரையாகும்.
2. பெருவிரல் இறைவனை குறிக்கும்.
3. சுட்டுவிரல் ஆன்மாவை குறிக்கும்.
4. மலங்களை விட்டு ஆன்மா இறைவனை அடைவதை இச்சின் முத்திரை உணர்த்துகிறது.
(அ) 1 மட்டும் சரியானது (ஆ) 3,4 மட்டும் சரியானவை
(இ) 2,3,4 மட்டும் சரியானவை (ஈ) அனைத்தும் சரியானவை
120. ஆலயங்களில் வேசரம் என்ற விமானம் ——— வடிவில் இருக்கும்
(அ) சதுரம் (ஆ) வட்டம் (இ) எட்டுக்கோணம் (ஈ) ஆறுகோணம்
121. எவ்வகை தீக்கை ஆணவ மலத்தை அகற்றுகிறது?
(அ) மந்த்ர தீக்கை (ஆ) யோக தீக்கை (இ) ஒளத்திரி தீக்கை (ஈ) நயன தீக்கை
122. மீன் தன் முட்டைகைளைக் கண்ணால் பார்த்துப் பொரித்துக் குஞ்சாக்குவது எவ்வகை தீக்கைக்கு ஒப்பானது
(அ) ஸ்பர்ச தீக்கை (ஆ) மானத தீக்கை (இ) நயன தீக்கை (ஈ) யோக தீக்கை
123. ஆலய பிரதிட்டைக்குரிய கிhயைககள் எத்தனை?
(அ) 18 (ஆ) 64 (இ) 108 (ஈ) 9
124. ஒவ்வோர் உயிரும் அனுபவிக்கும் இன்பதுன்பங்கள் ——– ஆகும்
(அ) தனு (ஆ) சாதி (இ) போகம் (ஈ) ஆயு
125. சைவ சமயத்தில் ஆலயங்களை கழுவுதல் மற்றும் மலர் தொடுத்தல் என்பது எதனை குறிக்கிறது?
(அ) சரியை (ஆ) கிரியை (இ) யோகம் (ஈ) ஞானம்
126. நிராதாரயோகத்தில் காண்பவன், காணப்படும் பொருள், காட்சி —— ஞானம் எனப்படும்
(அ) திரிரத்னம் (ஆ) திரிகளம் (இ) மும்மலம் (ஈ) திரிபுடி
127. சிவபெருமானது முழுமுதல் தன்மையை உணர்ந்து செய்யும் சிவ புண்ணியம்
(அ) புத்தி பூர்வ புண்ணியம் (ஆ) உபாயச் சிவ புண்ணியம்
(இ) அபுத்தி பூர்வ புண்ணியம் (ஈ) உண்மைச் சிவபுண்ணியம்
128. இறைவனின் எண்குணங்களில் ஒன்றான இயற்கையுணர்வுடைமை என்பதை வடமொழியில் இவ்வாறு அழைப்பர்
(அ) விசுத்த தேசம் (ஆ) அநாதி போதம் (இ) அலுப்த சக்தி (ஈ) நிராமயம்
129. “பதியினைப் போல் பசுபாசம் அனாதி” எனக் கூறியவர்
(அ) மாணிக்கவாசகர் (ஆ) தாயுமானவர் (இ) வள்ளலார் (ஈ) திருமூலர்
130. சத்-என்பதன் பொருள்
(அ) உள்ளது (ஆ) இல்லாதது (இ) என்றும் இல்லாதது (ஈ) அழிவது
131. சைவசமயம் கூறும் மாயையின் நான்கு காரியங்கள்
(அ) கேட்டல், சிந்தித்தல், தெளிதல், தீட்சை (ஆ) தனு, கரணம், புவனம், போகம்
(இ) ஆகமம், அனுமானம், பிரத்யட்சம், தீட்சை (ஈ) தீட்சை, ஆகமம், தெளிதல், போகம்
132. சைவ சமய தோத்திரங்கள் எனப் போற்றப்படுபவை
(அ) பன்னிரு திருமுறை (ஆ) மெய்கண்ட சாத்திரம்
(இ) திருவாசகம் (ஈ) சிவஞான போதம்
133. “பாசுபதம்” என்பது எவ்வகை சமயம்?
(அ) அகச்சமயம் (ஆ) புறச்சமயம் (இ) அகப்புற சமயம் (ஈ) புறப்புற சமயம்
134. பதினொன்றாம் திருமுறையில் “கபிலதேவ நாயனார்” அருளிய நூல்களின் எண்ணிக்கை
(அ) 3 (ஆ) 1 (இ) 5 (ஈ) 9
135. தமிழ் வியாசர் எனப் போற்றப்படும் சிவனடியார்
(அ) கபிலதேவ நாயனார் (ஆ) காரைக்கால் அம்மையார்
(அ) பட்டினத்டிகள் (ஈ) நம்பியாண்டார் நம்பி
136. மெய்கண்ட சாத்திரங்களின் எண்ணிக்கை:
(அ) 14 (ஆ) 12 (இ) 18 (ஈ) 27
137. “சக்தியும் சிவனும் சத்தென்னும் சொல்லின் பகுதி விகுதிகள்” என்று கூறியவர் யார்?
(அ) நீலகண்ட சிவாச்சாரியார் (ஆ) நீலகண்ட தேவனடியார்
(இ) மணிவாசகர் (ஈ) திருஞானசம்பந்தர்
138. சக்தியே தெய்வம் என சொல்லும் சமயம்
(அ) சாக்தேயம் (ஆ) ஸெளரம் (இ) கௌமாரம் (ஈ) காணாபத்தியம்
139. இராமலிங்க அடிகள் அவதரித்த ஊர்
(அ) வடலூர் (ஆ) கருங்குழி (இ) மருதூர் (ஈ) சிதம்பரம்
140. “கதாதரர்” என அழைக்கப்பட்ட அருளாளர் யார்?
(அ) ரமண மகரிஷி (ஆ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
(இ) இராமலிங்கர் (ஈ) இராமானுஜர்
141. இராமகிருஷ்ணர் யாருடைய அருளைப் பெற்றவர்?
(அ) கிருஷ்ணன் (ஆ) காளி (இ) ராமர் (ஈ) தெட்சிணாமூர்த்தி
142. சுவாமி விவேகானந்தர் பிறந்த வருடம்
(அ) 1853 (ஆ) 1863 (இ) 1873 (ஈ) 1883
143. ஆதிகாவியம் என அழைக்கப்படும் நூல்
(அ) இராமாயணம் (ஆ) மகாபாரதம் (இ) பகவத்கீதை (ஈ) பஞ்சமோ வேதம்
144. மூன்றாம் திருவந்தாதியின் எண்ணிக்கை யாது?
(அ) 100 (ஆ) 10 (இ) 216 (ஈ) 473
145. திருமுருகாற்றுப்படையில் திருமாலின் கொடியின் சின்னமாக குறிக்கப்படுவது
(அ) நாகம் (ஆ) அனுமன் (இ) புலி (ஈ) உவணம்
146. “பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்” எனும் பாடல் வரிகள் சுட்டும் கடவுள்
(அ) சிவன் (ஆ) விஷ்ணு (இ) பிரம்மன் (ஈ) சக்தி
147. “பிரஹ்ம சப்தப் பொருள் புருஷன்” என்பதில் “புருஷா” என்னும் சொல் இந்தக் கடவுளைக் குறிக்கும்
(அ) நாராயணன் (ஆ) சிவபெருமான் (இ) முருகன் (ஈ) விநாயகர்
148. வைணவ தத்துவத்தின்படி, பிரபஞ்சத்தை ஆக்கி, அளித்து, அழிக்கும் மிக மிக உயரிய உண்மைப்பொருள்
(அ) விஷ்ணு (ஆ) முருகன் (இ) சிவன் (ஈ) பிரம்மன்
149. “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் பிரபந்தத்தைப் பாடியவர்
(அ) நற்கலியன் (ஆ) ஆண்டாள் (இ) பேயார் (ஈ) மதுரகவியாழ்வார்
150. “உபதேசத்திருநாமம்” எனும் நூலை எழுதியவர் யார்?
(அ) பிள்ளைலோகாசார்ய சீயர் (ஆ) திருவரங்கத்து அமுதனார்
(இ) ஸ்ரீபட்டர் (ஈ) பின்பழகிய பெருமாள் சீயர்
151. வைணத்தின் சரணாகதியை வலியுறுத்துவது ———- ஆகும்
(அ) பத்தி (ஆ) பிரபத்தி (இ) குருபக்தி (ஈ) தேசபக்தி
152. காஞ்சியிலிருந்த யாதவப்பிரகாசரின் மாணாக்கர்
(அ) அபிராமி பட்டர் (ஆ) திருநாவுக்கரசர் (இ) இராமானுசர் (ஈ) சங்கரர்
153. வைணவ மரபில் “வளவே முலகில் ஆழ்வார்” என்று சொல்லப்படுவது யாரை?
(அ) திருப்பாணாழ்வார் (ஆ) நம்மாழ்வார் (இ) திருமங்கை ஆழ்வார் (ஈ) பெரியாழ்வார்
154. பொருத்துக:
அ. மகாவிரதம் 1. சீலம்
ஆ. திரிரத்தினம் 2. இல்லறம்
இ. அனுவிரதம் 3. கன்மத்தின் அழிவு
ஈ. நிர்ச்சரம் 4. துறவறம்
அ ஆ இ ஈ
அ. 4 1 2 3
ஆ, 1 3 4 2
இ. 3 4 2 1
ஈ. 4 1 3 2
155. வைசேடிக தத்துவத்தின் மறுபெயர்
(அ) ஒளலூக்கிய தரிசனம் (ஆ) நிரிஸ்வர வைசேடிகம்
(இ) வைதீக தரிசனம் (ஈ) வேதிக தரிசனம்
156. இறைவன் அம்மையப்பராகி இருவடிவில் தோன்றுவதேயன்றி ஒரு வடிவில் தோன்றுவது
(அ) உமா மகேசுவரர் (ஆ) சந்திரசேகரர்
(இ) அர்த்தநாரீசுவரர் (ஈ) சோமாஸ்கந்தர்
157. சங்கராச்சாரியர் பாஷ்யம் செய்த முதன்மை உபநிடதங்களின் எண்ணிக்கை
(அ) பத்து (ஆ) பதினாறு (இ) முப்பத்தாறு (ஈ) அறுபத்து மூன்று
158. உபநிஷதங்களின் மகாவாக்கியமான “தத் த்வம் அஸி” என்பதன் பொருள் யாது?
(அ) அது நீயே ஆகிறாய் (ஆ) நீ அதுவே ஆகிறாய்
(இ) உயிரும் நீயே ஆகிறாய் (ஈ) அனைத்தும் நீயே ஆகிறாய்
159. வேதசாரக் கிரியைகளை பற்றி சொல்லும் வேதம் எது?
(அ) இருக் வேதம் (ஆ) யஜீர் வேதம் (இ) ஸாம வேதம் (ஈ) அதர்வண வேதம்
160. மீளா நரகம் என்னும் நிலையை குறிப்பிடும் இந்து சமய பிரிவு
(அ) விசிஸடாத்வைதம் (ஆ) மத்துவ மதம் (இ) அத்துவைதம் (ஈ) சைவ சித்தாந்தம்
161. இந்து சமயத்திற்கு ஆதாரமாயமைந்த வேத நூல் ——- என அழைக்கப்படுகிறது.
(அ) ரிக் (ஆ) சுருதி (இ) ஸ்மிருதி (ஈ) உபநிடம்
162. “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார்” எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
(அ) திருக்குறள் (ஆ) திருமந்திரம் (இ) திருகுரான் (ஈ) திருவிவிலியம்
163. கீழ்க்கண்டவற்றுள் “மேலான அறம் எனப்படுவது அஹிம்ஸையே” என்று பொருள்படுவது எது?
(அ) ஹிம்ஸா பரஅமர்மா (ஆ) அஹிம்ஸா பரமோதர்ம
(இ) அஹிம்ஸா அபரகர்ம (ஈ) ஹிம்ஸா பரமாத்ம
164. முத்தி நெறியில் “ஞான நெறி” pயனை பின்பற்றிய சைவக் குரவர் யார்?
(அ) அப்பர் (ஆ) சம்பந்தர் (இ) சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர்
165. “சோர்வார்தாமே தான் ஆகச் செயுமவன்” என்று கூறியவர்
(அ) திருஞானசம்பந்தர் (ஆ) திருநாவுக்கரசர் (இ) சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர்
166. சைவ சமயத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய படிகள் எதற்கு உதவி செய்கின்றன?
(அ) மறுபிறப்பிற்கு (ஆ) சம்சார சாகரத்தில் உழல்வதற்கு
(அ) உயிர்கள் உய்வதற்கு (ஆ) நரகத்தை அடைவதற்கு
167. ஆன்மா மீண்டுவாராமல் அடையும் நிலைக்கு என்ன பெயர்?
(அ) தேகமுக்தி (ஆ) சீவமுக்தி (இ) பரமுக்தி (ஈ) விதேக முக்தி
168. ——– சரீரத்தில் சப்த, ஸபர்ச, ரூப, இரஸ, கந்தம் என்ற தன் மாத்ரை ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்று மூன்றும் உள்ளன.
(அ) சூக்கும (ஆ) குண (இ) கஞ்சுக (ஈ) ஸ்தூல
169. இந்து சமய தத்துவத்தின் படி ஆன்மாக்களின் உருவவேற்றுமை எத்தனை இலட்சங்களாகக் கூறப்படுகின்றன.
(அ) 33 இலட்சம் (ஆ) 108 இலட்சம் (இ) 84 இலட்சம் (ஈ) 96 இலட்சம்
170. கருப்பையில் தோன்றும் உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(அ) அண்டஜம் (ஆ) சுவேதஜம் (இ) உத்பிஜ்ஜம் (ஈ) சராயுஜம்
171. “சிவாய நமவென்று சிந்தித திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை” என்று கூறியவர்
(அ) திருஞானசம்பந்தர் (ஆ) மாணிக்கவாசகர் (இ) திருமூலர் (ஈ) ஒளவையார்
172. பொருத்துக:
அ. சூட்சும பஞ்சாக்கரம் 1. பாசத்தைக் கெடுக்கும்
ஆ. ஸ்தூல பஞ்சாக்கரம் 2. அருள், சிவத்தோடு சேர்த்து இன்பமளிக்கும்
இ. காரண பஞ்சாக்கரம் 3. இம்மை மறுமை பயன் அளிக்கும்
ஈ. முகா காரண பஞ்சாக்கரம் 4. மலத்தை நாசம் செய்யும்
அ ஆ இ ஈ
அ. 1 2 3 4
ஆ. 4 1 2 3
இ. 3 4 2 1
ஈ. 4 3 1 2
173. மனதிற்குள்ளாகவே மந்திரஜபம் செய்யும் முறையின் பெயர்
(அ) மானஸம் (ஆ) வாசகம் (இ) மந்தம் (ஈ) மத்யமம்
174. ரூபம் உடைய கடவுள் ——– ஆவார்
(அ) சிவம் (ஆ) சக்தி (இ) சதாசிவம் (ஈ) உருத்திரன்
175. வேதாந்த தத்துவத்தின்படி ஒரே பரமான்மா பல சீவான்மாக்களாகக் காணப்படுவதற்கு ———- தான் காரணம்
(அ) ஆனவம் (ஆ) கன்மம் (இ) மாயை (ஈ) துவேஷம்
176.சூரியன் ஒருவனாக இருந்து எல்லா உயிர்களுடைய கண்களுக்கும் ஒளியைக் கொடுப்பது போல ஒருவராய் இருந்து எல்லா உயிர்களுக்கும் விளக்கம் தருபவர்
(அ) கடவுள் (ஆ) முனிவர் (இ) மருத்துவர் (ஈ) சட்ட வல்லுனர்
177. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
மத்வர்.
1. பிரக்கிருதியை மாயை என்ற பெயரில் உள்பொருளாக கொண்டவர்.
2. வேதாந்திகள் கூறும் பொய்காட்சி அன்று மாயை என்றவர்.
3. இறைவனின் சக்தியே மாயை என்றவர்.
4. அபேதவாதத்தை ஆதரித்தவர்
(அ) 1 மட்டும் சரி (ஆ) 1ம் 2ம் சரி (இ) 1,2,3 சரி (ஈ) 4 மட்டும் சரி
178. பிரம்ம சூத்திரத்துக்கு இராமானுசர் எழுதிய உரை —— எனப்படும்
(அ) மாண்டூக்கிய காரிகை (ஆ) ஸ்ரீபாஷ்யம்
(இ) உபநிடத பாஷ்யம் (ஈ) பிரம்ம பாஷ்யம்
179. அச்சுதப் பிரகாசரின் சீடராகி துறவியானவர் யார்?
(அ) சங்கரர் (ஆ) இராமானுஜர் (இ) மத்வாசாரியர் (ஈ) நீலகண்ட சிவாசாரியார்
180. உபநிடதங்களை நிதித்தியாசனம் செய்தல் என்றால் ———- ஆகும்
(அ) கற்றல் (ஆ) சிந்தித்தல் (இ) தியானித்தல் (ஈ) எதிர்த்தல்
181. பொருத்துக:
அ. பெரியாழ்வார் 1. அருள்மாறன்
ஆ. நம்மாழ்வார் 2. நற்கலியன்
இ திருப்பாணாழ்வார் 3. விஷ்ணு சித்தர்
ஈ. திருமங்கையாழ்வார் 4. நற்பாணன்
அ ஆ இ ஈ
அ. 3 1 4 2
ஆ. 3 4 2 1
இ. 4 3 2 1
ஈ. 3 4 1 2
182. முனிவாகனர் என்று சிறப்பிக்கப்படுபவர்
(அ) திருமழிசை ஆழ்வார் (ஆ) திருப்பாணாழ்வார்
(இ) மதுரகவி ஆழ்வார் (ஈ) குலசேகராழ்வார்
183. கீழ்க்காணும் வாக்கியங்களை ஆய்க:
1. வேதத் துதிப்பாடல்கள் வைகானச வழிபாட்டாளர்களால் பயன்படுத்தப்பெறுகின்றன.
2. இந்த வழிபாட்டு முறை ஸ்ரௌத்த சாத்திரம் என்ற பெயராலும் வழங்கப்பெறுகின்றது
(அ) 1 மட்டும் சரியானது (ஆ) 1 மட்டும் தவறானது
(இ) 1 மற்றும் 2 தவறானவை (ஈ) 1 மற்றும் 2 சரியானவை
184. வைகானச ஆகமங்களில் உள்ள சக்கிதைகளின் எண்ணிக்கை
(அ) 108 (ஆ) 118 (இ) 128 (ஈ) 138
185. பரிபாடலில் பாடப்பெற்ற திருமாலின் அவதாரங்கள்
(அ) பத்து (ஆ) ஏழு (இ) ஆறு (ஈ) ஐந்து
186. “அமலனாதிபிரான்” எனும் நூலை இயற்றியவர் யார்?
(அ) திருவரங்கத்து அமுதனார் (ஆ) நாதமுனிகள்
(இ) வேதாந்த தேசிகர் (ஈ) திருப்பாண் ஆழ்வார்
187. “திராவிட வேதம்” எனப் போற்றப்பட்ட நூல்
(அ) நாலாயிர திவ்ய பிரபந்தம் (ஆ) தேவாரம்
(இ) திருவருட்பா (ஈ) திருவந்தாதி
188. தம்மைத் தலைவியாகவும் தம் குருவாகிய மறைஞான சம்பந்தரை தலைவனாகவும் வைத்து பாடிய நூல் எது?
(அ) நெஞ்சு விடுதூது (ஆ) கொடிக்கவி (இ) வினா வெண்பா (ஈ) உண்மை விளக்கம்
189. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
1. வைணவத்தின் முப்பொருள் உண்மையை “தத்துவத்திரயம்” என்பர்.
2. அவை பதி, பசு, பாசம் என்பனவாம்.
(அ) 1ம் 2ம் சரி (ஆ) 1ம் 2ம் தவறு (இ) 1 மட்டும் சரி (ஈ) 2 மட்டும் சரி
190. வைணவர்கள் கருத்துப்படி திருமாலின் வடிவங்கள் எத்தனை?
(அ) 3 (ஆ) 4 (இ) 5 (ஈ) 6
191. “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவாரே” என்ற பாடியவர்
(அ) பேயாழ்வார் (ஆ) நம்மாழ்வார் (இ) ஆண்டாள் (ஈ) பூதத்தாழ்வார்
192. சீவன் முத்தர் இயல்பு பற்றி கூறும் சிவஞான போத சூத்திரம்
(அ) ஒன்பதாம் சூத்திரம் (ஆ) பத்தாம் சூத்திரம்
(இ) பதினொன்றாம் சூத்திரம் (ஈ) பன்னிரண்டாம் சூத்திரம்
193. சைவ சித்தாந்த நூல்களின் இருபெரும் பிரிவுகள்
(அ) சாத்திர நூல்கள் மற்றும் தோத்திர நூல்கள்
(ஆ) தர்ம நூல்கள் மற்றும் நீதி நூல்கள்
(இ) புராண நூல்கள் மற்றும் பஞ்ச தந்திர நூல்கள்
(ஈ) கதை நூல்கள் மற்றும் கருத்து நூல்கள்
194. சைவ சித்தாந்தத்தில்”பசு” என்பதன் வேர்ப்பொருள் என்ன?
(அ) விலங்கு (ஆ) தெய்வம் (இ) கட்டுண்டது (ஈ) வழிபடுவது
195. 4,5,6-ம் திருமுறைகளை அருளியவர் யார்?
(அ) சம்பந்தர் (ஆ) அப்பர் (இ) சுந்தரர் (ஈ) காரைக்கால் அம்மையார்
196. திருமூலரின் திருமந்திரம் பன்னிருதிருமுறைகளுள் ——— திருமுறையாக உள்ளது
(அ) எட்டாம் (ஆ) பத்தாம் (இ) ஐந்தாம் (ஈ) பன்னிரெண்டாம்
197. திருவிசைப்பா ஆசிரியர்களில் முதல்வராக அறியப்படுபவர்
(அ) கருவூர்த் தேவர் (ஆ) திருமளிகைத் தேவர் (இ) கண்டராதித்தர் (ஈ) வேணாட்டடிகள்
198. திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றப்பட்ட இடம் ——— ஆகும்
(அ) திருவரங்கம் (ஆ) சீர்காழி (இ) சிதம்பரம்(தில்லை) (ஈ) திருவானைகாவல்
199. திருநாவுக்கரசர் எவ்விடத்தில் “கயிலாயக் காட்சியை” கண்டார்?
(அ) திருமறைக்காடு
(ஆ) திருமருகல்
(இ) மதுரை
(ஈ) திருவையாறு
200. எந்த சிவாசாரியர் வடநூல் ஆகமங்களின் நாற்பாதப் பொருள்களையும் வரிசைப்படுத்திக் கூறினார்?
(அ) திரிலோனசிவாசாரியர்
(ஆ) கபிலதேவர்
(இ) நக்கீர நாயனார்
(ஈ) நம்பி ஆண்டார் நம்பி