Answer Key

Tnpsc Executive Officer Grade III Exam Previous Questions and Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil

Tnpsc Executive Officer Grade III Exam Previous Questions and Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil

EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE

1. கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் தேனரசன் படைப்பு இல்லை?

(அ) மண்வாசல்

(ஆ) வெள்ளை ரோஜா

(அ) பெய்து பழகிய மேகம்

(ஈ) மழை பற்றி பகிர்தல்கள்

2. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு

(அ) துட்டு

(ஆ) எட்டு

(இ) சாத்தன்

(ஈ) நிலம்

3. காலம் கடந்த பெயரெச்சம்

(அ) பண்புத்தொகை

(ஆ) வினைத்தொகை

(இ) உவமைத்தொகை

(ஈ) வேற்றுமைத்தொகை

4. பாஞ்சாலி சபதத்தில் பாம்புக் கொடியவன் என்றழைக்கப்படுபவன்?

(அ) துரியோதனன் (ஆ) துச்சாதனன் (இ) சகுனி (ஈ) கர்ணன்

5. காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை பேச்சினை மொழிபெயர்த்த பெருமகனார்

(அ) பாரதியார் (ஆ) கவிமணி (இ) திரு.வி.க (ஈ) வ.உ.சி

6. 1856ல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்

(அ) கமில்சுவலபில் (ஆ) ஆந்திரனோவ் (இ) ஸ்டென்கனோ (ஈ) கால்டுவெல்

7. “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” எனப் புகழ்ந்துரைத்த கவிஞர்

(அ) தேவநேயப் பாவாணர் (ஆ) சந்தக் கவிமணி தமிழழகனார்

(இ) பாரதியார் (ஈ) நாமக்கல் கவிஞர்

8. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க பாடும் பாடல் வகை எது?

(அ) நாட்டுப்புறபாடல் (ஆ) சங்க இலக்கியப்பாடல் (இ) பக்திப்பாடல் (ஈ) சமயப்பாடல்

9. “பகை” என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க:

(அ) நே (ஆ) சீ (இ) தூ (ஈ) மோ

10. தவறான ஒலி மரபுச் சொல்லைத் தேர்வு செய்க:

(அ) குயில் கூவும் (ஆ) மயில் அகவும் (இ) புறா குழறும் (ஈ) கிளி பேசும்

11. உழவு பற்றிய பழமொழியைத் தேர்வு செய்க:

(அ) அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் (ஆ) வேலியே பயிரை மேய்வது போல

(இ) ஆடிப்பட்டம் தேடி விதை (ஈ) வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்

12. “கூடா நட்புக் கேடாய் முடியும்”

– இப்பழமொழியால் நாம் அறிவனவற்றைத் தேர்க:

கூற்று 1: தீயவரோடு கொண்ட நட்பு துன்பத்தில் முடியும்.

கூற்று 2: நட்பு நமக்குக் கேடயம் போல பாதுகாப்பு தரும்

(அ) கூற்று 1 சரி (ஆ) கூற்று 2 சரி (இ) கூற்று 1ம், 2ம் சரி (ஈ) கூற்று 1ம், 2ம் தவறு

13. நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நல்மணம் கழிக – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

(அ) குறந்தொகை (ஆ) ஐங்குறுநூறு (இ) நற்றிணை (ஈ) அகநானூறு

14. பாவகையால் பெயர் பெற்ற சங்க இலக்கிய எட்டுத் தொகை நூல்கள்

(அ) பதிற்றுப்பத்து, பரிபாடல் (ஆ) கலித்தொகை, மதுரைக்காஞ்சி

(இ) மலைபடுகடாம், நெடுநல்வாடை (ஈ) பரிபாடல், கலித்தொகை

15. அகநானூறு ——— எனவும் அழைக்கப்படுகிறது

(அ) பெரியநூல் (ஆ) நெடுந்தொகை (இ) பழமொழி நானூறு (ஈ) இனியவை நாற்பது

16. அகன் அமர் காதல் ஐய? நின்னொடும் எழுவர் ஆனேம் என்று இராமன் யாரைக் குறிப்பிடுகிறான்?

(அ) குகன் (ஆ) சுக்ரீவன் (இ) அனுமன் (ஈ) வீடணன்

17. ஒவ்வொரு சிவனடியார் பெருமையையும் ஓர் அடியில் கூறும் நூலைப் பாடியவர்

(அ) சேக்கிழார் (ஆ) சுந்தரர் (இ) நம்பியாண்டார் நம்பி (ஈ) மாணிக்கவாசகர்

18. திருவிளையாடற் புராணத்தில் உள்ள திருவிளையாடல்களின் எண்ணிக்கை

(அ) 60 (ஆ) 63 (இ) 64 (ஈ) 18

19. முனைப்பாடியார் இயற்றிய “அறநெறிச்சாரம்” எத்தனை பாடல்களைக் கொண்டது?

(அ) 215 (ஆ) 225 (இ) 235 (ஈ) 205

20. அகர வரிசையில் அமைத்தெழுது: மீன், மண், முன், மான், மூடி, மெல்ல, மிளகு, மேடு

(அ) மான், மூடி, மிளகு, மேடு, மெல்ல, மீன், மண், முன்

(ஆ) மண், மீன், முன், மூடி, மிளகு, மேடு, மெல்ல, மான்

(இ) மண், மான், மிளகு, மீன், முன், மூடி, மெல்ல, மேடு

(ஈ) மான், முன், மூடி, மேடு, மெல்ல, மிளகு, மண், மீன்

21. வேர்ச்சொல் – காண்க:

ஞாலம்

(அ) ஞல் (ஆ) ஞாள் (இ) ஞால் (ஈ) ஞாலு

22. பொருத்தமான விடையைத் தெரிவு செய்க:

“குழந்தை தனது ஒரு விரலைக் காட்டி

இந்த விரல் சின்ன விரலா? பேரிய விரலா?

எனக் கேட்பது?”

(அ) வினா வழு (ஆ) மரபு வழு (இ) பால் வழு (ஈ) திணை வழு

23. பொருந்தாததைக் கண்டறிக:

(அ) வெண்டைக்காய் (ஆ) தண்ணீர்த்தொட்டி (இ) அத்திக்காய் (ஈ) ஆலங்காய்

24. ஆதிரையான் என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது?

(அ) பொருட்பெயர் (ஆ) காலப்பெயர் (இ) இடப்பெயர் (ஈ) பண்புப்பெயர்

25. சொற்களை முறைப்படுத்துக:

(அ) ஏகலை கலையை அம்பு விடும் தமிழ் என்றது (ஆ) அம்பு விடும் கலையை ஏகலை என்றது தமிழ்

(இ) அம்பு விடும் தமிழ் என்றது ஏகலை கலையை (ஈ) தமிழ் ஏகலை என்றது அம்பு விடும் கலையை

26. ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் தருக:

நா

(அ) கொடு (ஆ) ஆடை (இ) நாக்கு (ஈ) நான்

27. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

தால் – தாள்

(அ) தாலாட்டு – பாதம் (ஆ) சித்திரம் – வண்ணம் (இ) நூல் – எழுத்து மொழி (ஈ) பார்வை – மெய்

28. தமிழ், ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள் எவை?

(அ) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா (ஆ) சிங்கப்பூர், இங்கிலாந்து, இலங்கை

(இ) தாய்லாந்து, பிரிட்டன், பிஜித்தீவு (ஈ) இலங்கை, கனடா, மலேசியா

29. கிரேக்க அறிஞர் தாலமி தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக எந்த ஊரைக் குறிப்பிட்டுள்ளார்?

(அ) கோயம்புத்தூர் (ஆ) திருச்சிராப்பள்ளி (இ) திருப்பூர் (ஈ) கரூர்

30. தமிழகத்தின் தலைநகராக சென்னையே இருக்க வேண்டும் என்பதற்காக “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என முழங்கியவர்

(அ) தந்தை பெரியார் (ஆ) நேசமணி

(இ) சங்கரலிங்கம் (ஈ) ம.பொ.சிவஞானம்

31. அம்பேத்கரின் இயற்பெயர் ———- ஆகும்

(அ) இராம்ஜி சக்பால் (ஆ) சக்பால் (இ) இராம்ஜி (ஈ) பீமாராவ் இராம்ஜி

32. வாணிதாசனின் நூல்கள்

(அ) தமிழச்சி, கொடிமுல்லை, இதயக்கோயில் (ஆ) தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம்

(இ) தமிழச்சி, பிச்சைக்காரன், தொடுவானம் (ஈ) தமிழச்சி, பிச்சைக்காரன், இதயக்கோயில்

33. “ஆண்டிப்பண்டாரம் – உனை வேண்டிக்கொண்டேனே”

எனும் நாட்டுப்பாடலை ஒட்டி “தீண்டாதார் விண்ணப்பம்” பாடியவர்

(அ) பாரதியார் (ஆ) கவிமணி தேசிய விநாயகனார்

(இ) பாரதிதாசன் (ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

34. வேங்கடத்தில் குலசேகராழ்வார் ———–ஆக இருக்க விரும்பினார்

(அ) மீன் (ஆ) கொக்கு (இ) வில் (ஈ) படி

35. 1981-ல் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றியவர்

(அ) வையாபுரிப்பிள்ளை (ஆ) அ.சிதம்பர நாதன்

(இ) சாலை.இளந்திரையன் (ஈ) தேவநேயப்பாவாணர்

36. “தமிழ் மகள்” என பாரதியாரால் அழைக்கப்பெற்ற பெண்பாற்புலவர்

(அ) ஒளவையார் (ஆ) காக்கைப் பாடினியார் (இ) வெள்ளிவீதியார் (ஈ) நக்கண்ணையார்

37. கூற்றும் காரணமும்:

கூற்று: காவடியாட்டம் மரத்தண்டின் இரு முனைகளிலும் சிறப் வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர்.

காரணம்: “கா” என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பெயர்

(அ) கூற்று சரி காரணம் தவறு

(ஆ) கூற்றும் சரி காரணமும் சரி

(இ) கூற்று தவறு காரணம் சரி

(இ) கூற்றும் சரி காரணமும் சரி ஆனால் கூற்றிற்கான சரியான காரணம் இல்லை

38. “மரக்கால் கூத்து” – என்று அழைக்கப்படுவது

(அ) கோலாட்டம் (ஆ) பொய்க்கால் குதிரையாட்டம்

(இ) பொடிக்கழி ஆட்டம் (ஈ) கழியல் ஆட்டம்

39. “உலக சரித்திரம்” என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர்

(அ) காந்தியடிகள் (ஆ) இந்திரா காந்தி

(இ) ஜவஹர்லால் நேரு (ஈ) சர்தார் வல்லபாய் படேல்

40. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு:

வளவன் “கிணற்றுத் தவளை” போல வாழந்தான்

(அ) வளவன் எல்லாம் அறிந்தவன் ஆக வாழ்ந்தான்

(ஆ) வளவன் ஏதும் அறியாதவன் ஆக வாழ்ந்தான்

(இ) வளவன் குறுகிய அறிவுடையவன் ஆக வாழ்ந்தான்

(ஈ) வளவன் மூடனாக வாழந்தான்

41. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு:

பாரியின் பறம்பு மலையின் புகழ் “குன்றின் மேலிட்ட விளக்கு போல” பரவியது

(அ) விளக்கு குன்றின் மேல் அமைந்துள்ளது (ஆ) பறம்பு மலையின் புகழ் மங்கியது

(இ) பறம்பு மலையின் புகழ் ஓங்கியது (ஈ) பறம்பு மலையில் விளக்கு அமையவில்லை

42. கீழ்வருவனவற்றுள் “செய்வினை” – வாக்கியம் எது?

(அ) விருது வழங்கியது யார்? (ஆ) “வேலா இலக்கணத்தை நன்றாகப் படி”

(இ) அமைச்சர் விருது வழங்கினார் (ஈ) நான் இலக்கணம் கற்று வாழ்வில் உயர்ந்தேன்

43. பின்வருவனவற்றுள் வினாத்தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக:

(அ) கானலின் நீரோ (ஆ) வானகமே, இளவெயிலே, மரச்செறிவே

(இ) காட்சிப் பிழைதானோ (ஈ) நானும் ஓர் கனவோ

44. அடிநிமிர் வில்லாச் செய்யுட் தொகுதி

அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்

திறம்பட வருவது

(அ) கீழ்க்கணக்கு நூல்கள் (ஆ) மேற்கணக்கு நூல்கள் (இ) தொல்காப்பியம் (ஈ) நன்னூல்

45. கணிமேதாவியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்

(அ) சைவம் (ஆ) சமணம் (இ) வைணவம் (ஈ) பௌத்தம்

46. வாழ்வுக்குரிய அன்பு நெறியைக் கூறும் உயர்ந்த நூல் – திருக்குறள் என்று பாராட்டியவர் யார்?

(அ) மல்லார்மே (ஆ) ஆல்பர்ட் ஸ்வைட்சர் (இ) விட்னே (ஈ) வால்ட் விட்மன்

47. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது?

(அ) தேவாரம் (ஆ) பெரியபுராணம் (இ) திருமந்திரம் (ஈ) சிலப்பதிகாரம்

48. தேவநேயப் பாவாணர்

கூற்று 1: “மொழிஞாயிறு” என்றழைக்கப்படுகிறார்.

கூற்று 2: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.

கூற்று 3: “பள்ளிப் பறவைகள்” என்ற நூலை எழுதியவர்

(அ) கூற்று 1 மற்றும் 3 சரி (ஆ) கூற்று 2 மற்றும் 3 சரி

(இ) கூற்று 1 மட்டும் சரி (ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

49. தம் மீது எச்சமிட்ட கொக்கை விழித்துப் பார்த்து எரித்தவர்

(அ) போகர் (ஆ) புலிப்பாணி (இ) கொங்கணர் (ஈ) சட்டை முனி

50. அட்டமாசித்திகள் – இதில் அட்டம் எனும் சொல்லின் பொருள்

(அ) ஐந்து (ஆ) ஆறு (இ) எட்டு (ஈ) ஒன்பது

51. “வள்ளைப்பாட்டு” என்பது

(அ) உலக்கைப் பாட்டு (ஆ) வாய்ப்பாட்டு

(இ) தெம்மாங்குப் பாட்டு (ஈ) உழவுப்பாட்டு

52. தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்.

இயைபு சொற்கள் யாது?

(அ) தப்பேது, தருட்புகழை (ஆ) நான் செயினும், நீ பொறுத்தல்

(இ) இயம்பிடல், எந்தை (ஈ) வேண்டும், வேண்டும்

53. சந்திப்பிழை அற்ற வாக்கியத்தை கண்டறிக:

(அ) இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்

(ஆ) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மகளுக்கு புனிதமானதாகும்

(இ) இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்

(ஈ) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்

54. பிள்ளைத் தமிழுக்குரிய பருவங்கள்

(அ) 3 (ஆ) 10 (இ) 11 (ஈ) 9

55. பாரதி தன் குயில்பாட்டில் பாடும் பாடல் வரிகளைக் கண்டறிக

(அ) வார்த்தைத் தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா மார்பு துடிக்கு தடீ

(ஆ) பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

(இ) பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா

(ஈ) உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்

56. “நீராருங் கடலுடுத்த…” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்

(அ) சீவக சிந்தாமணி (ஆ) மணிமேகலை (இ) தேம்பாவணி (ஈ) மனோன்மணியம்

57. “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” – என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கேற்றதொரு இலக்கிய வடிவம்

(அ) பரணி (ஆ) உலா (இ) குறவஞ்சி (ஈ) பள்ளு

58. “குறம்” என கூறப்பெறும் சிற்றிலக்கிய வகை எது?

(அ) குறவஞ்சி (ஆ) கோவை (இ) மணிமாலை (ஈ) கலம்பகம்

59. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

புலி-புளி

(அ) விலங்கு-பழம் (ஆ) வண்ணம்-பறவை (இ) நூல்-எழுதுகோல் (ஈ) ஆடு-கன்று

60. சரியான தமிழ்ச்சொல் தெரிவு செய்க:

Folk Arts

(அ) நாட்டுப்புறக் கலைகள் (ஆ) நாட்டுப்புறக் கலை

(இ) நாட்டுப்புறப் பாடல் (ஈ) நாட்டுப்புற விழா

61. “ரேவதி” என்ற புனைப்பெயரில் படைப்புகளை எழுதியவர் யார்?

(அ) வல்லிக்கண்ணன் (ஆ) ந.பிச்சமூர்த்தி (இ) சு.சமுத்திரம் (ஈ) தி.ஜானகிராமன்

62. அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது?

(அ) மாறனலங்காரம் (ஆ) தண்டியலங்காரம்

(இ) தொல்காப்பியம் (ஈ) வீர சோழியம்

63. பழமொழிகள்:

ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழியில் சரியானதைக் கண்டறிக:

Arts is long but life is short

(அ) கல்வி கற்பவர் கரையில நாள் சில (ஆ) கல்வி கரையில, கற்பவர் நாள்

(இ) கற்பவர் நாள் சில கல்வி கரையில (ஈ) கல்வி கரையில நாள் சில கற்பவர்

64. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள ——- கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

(அ) 3581 (ஆ) 3481 (இ) 3681 (ஈ) 3781

65. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர்

(அ) கவிமணி (ஆ) பாரதிதாசன் (இ) பாரதியார் (ஈ) நாமக்கல் கவிஞர்

66. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாகத் தொடங்கும் காப்பியம் எது?

(அ) கம்பராமாயணம் (ஆ) சிலப்பதிகாரம் (இ) சீவக சிந்தாமணி (ஈ) மணிமேகலை

67. “முதிரையும் சாமையும் வரகும் மொய்மணிக்

குதிரைவா லியும்களம் குவித்துக் குன்று என”

– இவ்வரிகள் குறிக்கும் நிலம்

(அ) குறிஞ்சி (ஆ) முல்லை (இ) மருதம் (ஈ) நெய்தல்

68. திரிகடுகம் எனும் நூலின் வெண்பாக்களின் எண்ணிக்கை

(அ) 100-வெண்பாக்கள் (ஆ) 102-வெண்பாக்கள் (இ) 200-வெண்பாக்கள் (ஈ) 90-வெண்பாக்கள்

69. கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன்

(அ) செயங்கொண்டார் (ஆ) மூன்றாம் நந்திவர்மன்

(இ) முதற் குலோத்துங்க சோழன் (ஈ) தொண்டைமான்

70. தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை இயற்றியவர்

(அ) ஜி.யு.போப் (ஆ) கால்டுவெல்

(இ) எட்கார் ஆலன்போ (ஈ) வீரமாமுனிவர்

71. சரியான அகர சரிசையில் அமைந்த தொடரைத் தேர்க:

(அ) மழையில் மண்டூகம் மாய்ந்தது (ஆ) மண்டூகம் மழையில் மாய்ந்தது

(இ) மாய்ந்தது மண்டூகம் மழையில் (ஈ) மழையில் மாய்ந்தது மண்டூகம்

72. “படி” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு

(அ) படித்தவர் (ஆ) படித்தனர் (இ) படிக்கிறான் (ஈ) படிப்பான்

73. “வா” என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க

(அ) வருதல் (ஆ) வந்தான் (இ) வந்து (ஈ) வந்த

74. “அமர்ந்தான்” என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்க:

(அ) அமர் (ஆ) அமரர் (இ) அமரார் (ஈ) அமர்ந்த

75. பொருத்துக:

அ. செய்யுளிசை அளபெடை 1. எங்ங்கிறைவன்

ஆ. இன்னிசை அளபெடை 2. வரனசைஇ

இ. சொல்லிசை அளபெடை 3. கெடுப்பதூஉம்

ஈ. ஓற்றளபெடை 4. நல்ல படாஅ பறை

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 4 3 1 2

இ. 1 2 3 4

ஈ. 1 2 4 3

76. “மூடுபனி” என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு

(அ) பண்புத்தொகை (ஆ) வினையெச்சம் (இ) பெயரெச்சம் (ஈ) வினைத்தொகை

77. முகத்தைக் குறிப்பது ———- பெயர் ஆகும்

(அ) பொருட்பெயர் (ஆ) இடப்பெயர் (இ) குணப்பெயர் (ஈ) சினைப்பெயர்

78. “தமிழ் மாணவன்” என்று தம்மை அறிவித்துக்கொண்டவர் யார்?

(அ) ஜி.யு.போப் (ஆ) வீரமாமுனிவர் (இ) குணங்குடி (ஈ) பரிதிமாற்கலைஞர்

79. சேரநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுள் ஒன்று

(அ) தந்தம் (ஆ) தங்கம் (இ) பவளம் (ஈ) செம்பு

80. அடையாற்றில் அவ்வை இல்லம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

(அ) 1930 (ஆ) 1952 (இ) 1882 (ஈ) 1848

81. “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” என கரும்பைப் பிழியும் எந்திரம் பற்றிக் கூறும் நூல்

(அ) நற்றிணை (ஆ) பதிற்றுப்பத்து (இ) பரிபாடல் (ஈ) கலித்தொகை

82. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

(அ) கால்டுவெல் (ஆ) வீரமாமுனிவர் (இ) ஜி.யு.போப் (ஈ) ஷெல்லி

83. தத்துவச் சரடு, இருண்மை, அறிவியல் நுட்பம், படிமம், அங்கதம் ஆகியவற்றை உத்திகளாகக் கொண்டு கவிதை படைத்தவர்

(அ) ஞானக்கூத்தன் (ஆ) சி.மணி (இ) அப்துல் ரகுமான் (ஈ) தருமு சிவராமு

84. பிகூ, ரேவதி ஆகிய புனை பெயர்களில் படைப்புகளை எழுதியவர்

(அ) பசுவைய்யா (ஆ) கலாப்ரியா (இ) கல்யாணஜி (ஈ) ந.பிச்சமூர்த்தி

85. “காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்” என்று கூறியவர்

(அ) கண்ணதாசன் (ஆ) வாணிதாசன் (இ) முடியரசன் (ஈ) பாவாணர்

86. கொடுக்கப்பட்டுள்ள பெயர்களுள் கரிசிலாங்கண்ணியின் பெயர் அல்லாத ஒன்றினைக் கண்டறிக

(அ) கையாந்தகரை (ஆ) ஞானப்பச்சிலை (இ) பிருங்கராசம் (ஈ) தேகராசம்

87. “தமிழ்மொழி தோற்றமும் வளர்ச்சியும்” என்ற ஆங்கிலக் கட்டுரை எழுதியவர்

(அ) பரிதிமாற் கலைஞர் (ஆ) சி.இலக்குவனார் (இ) ஆறுமுக நாவலர் (ஈ) வையாரி

88. “வசன நடை கைவந்த வல்லாளர்” என்று ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர் யார்?

(அ) சங்கரதாஸ் சுவாமிகள் (ஆ) பரிதிமாற் கலைஞர் (இ) பரிமேலழகர் (ஈ) தாயுமானவர்

89. எப்பண்பின் அடிப்படையில் நாடகக் கலைஅமைந்துள்ளது?

(அ) போலச் செய்தல் (ஆ) பார்த்து செய்தல் (இ) பாடி செய்தல் (ஈ) அசைந்து செய்தல்

90. இரண்டு வாக்கியங்களுக்கிடையே வரும் சரியான இணைப்புச் சொல்லை அறிக:.

அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன். அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.

(அ) எனவே (ஆ) ஆகையால் (இ) ஏனெனில் (ஈ) அதனால்

91. விடைக்கேற்ற பொருத்தமான வினாவைத் தேர்க:

அன்னம் கூடை முடைந்தாள்

(அ) அன்னம் கூடை முடைந்தாளா? (ஆ) அன்னம் கூடை முடைந்தாள் என்பது சரியா?

(இ) அன்னம் என்ன செய்தாள்? (ஈ) அன்னம் என்பது பறவையா?

92. துவ்வா – என்பதன் எதிர்ச்சொல் யாது?

(அ) நுகருதல் (ஆ) கொடுத்தல் (இ) விலக்குதல் (ஈ) பறித்தல்

93. பொருந்தமற்ற இணை தேர்க:

இங்கே இருப்பது சிலகாலம்

இதற்குள் ஏனோ அகம்பாவம்

இதனால் உண்டோ ஒரு லாபம்

எண்ணிப்பாரு தெளிவாகும்.

– இப்பாடலில் இடம்பெற்றுள்ள நயங்களின்படி பொருந்தாத எதுகை, மோனை, இயைபு எது எனக் கண்டறிந்து எழுதுக:

(அ) இங்கே, இருப்பது – சீர்மோனை (ஆ) இதற்குள், இதனால் – அடி எதுகை

(இ) பாவம், லாபம் – இயைபு (ஈ) இருப்பது, இதனால் – இணை மோனை

94. கீழ்வருவனவற்றுள் “செயப்பாட்டு வினை வாக்கியம்” எது?

(அ) மூவர் தேவாரத்தை இயற்றினர் (ஆ) பாண்டியன் கதவைத் தட்டினான்

(இ) நான் மனம் திறந்து பேசுகிறேன் (ஈ) “பாண்டியன் பரிசு” – பாரதிதாசனால் பாடப்பட்டது

95. கீழ்க்கண்டவற்றுள் கட்டளைத் தொடர்கள் எவை?

1. ஆகராதியில் காண்க.

2. படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக.

3. காட்சியைக் கண்ட கவினுற எழுதுக.

4. புயலின்போது வெளியே செல்ல வேண்டாம்

(அ) 1,2 ஆகிய இரண்டும் சரி (ஆ) 1 மட்டும் கட்டளைத் தொடர்

(இ) 1,2,3 ஆகிய மூன்றும் கட்டளைத் தொடர்கள் (ஈ) 1, 4 ஆகிய இரண்டும் சரி

96. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக:

ஒருவர் புலவர்களுள் மருதன் இளநாகனார் சங்ககாலம்

(அ) ஒருவர் மருதன் இளநாகனார் புலவர்களுள் சங்ககாலம்

(ஆ) மருதன் இளநாகனார் புலவர்களுள் ஒருவர் சங்ககாலம்

(இ) ஒருவர் சங்ககாலப் புலவர்களுள் மருதன் இளநாகனார்

(ஈ) மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்

97. தாளாற்றித் தந்த பொருளென்று வள்ளுவர் உரைப்பது

(அ) மூதாதையர் கொடுத்த பொருள் (ஆ) இலவசமாக வந்த பொருள்

(இ) தன்முயற்சியால் ஈட்டிய பொருள் (ஈ) தானமாக தந்த பொருள்

98. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்

(அ) தொல்காப்பியம் (ஆ) நன்னூல் (இ) சங்க இலக்கியம் (ஈ) திருக்குறள்

99. பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதுலிய நூல்கள் உள்ளன” என்று கூறியவர்

(அ) கால்டுவெல் (ஆ) ஈராஸ் பாதிரியார்

(இ) தனிநாயக அடிகள் (ஈ) பெர்சிவல் பாதிரியார்

100. கன்னிமாரா நூலகம் அமைந்துள்ள இடம்

(அ) சென்னை அண்ணாநகர் (ஆ) சென்னை எழும்பூர்

(இ) சென்னை கோட்டூர்புரம் (ஈ) சென்னை கோயம்பேடு

101. பஞ்சாபி, வந்தே மாதரம் என்ற இதழ்களையும், மக்கள் என்ற ஆங்கில வார இதழையும் நிறுவியவரும் அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தவர் யார்?

(அ) லாலா லஜ்பத் ராய் (ஆ) சி.ஆர்.தாஸ் (இ) பி.ஜி.திலக் (ஈ) பி.சி.பால்

102. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தனது வழக்குரைஞர் தொழில் துவங்க உதவிய வியாபார நிறுவனம் எது?

(அ) தாதா அப்துல்லா நிறுவனம் (ஆ) டாட்டா மற்றும் பிர்லா நிறுவனம்

(இ) மலபார் தேயிலை நிறுவனம் (ஈ) சூரத் ஜவுளி நிறுவனம்

103. “1857 ஆம் ஆண்டு புரட்சி நாகரீகத்திற்கும் அநாகரீகத்திற்கும இடையே ஆன மோதல்” என்ற கருத்தை கூறியவர் யார்?

(அ) டி.ஆர்.ஹோம்ஸ் (ஆ) சர்.ஜேம்ஸ் (இ) சர்.சீலி (ஈ) சர்.லாரன்ஸ்

104. 1917-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக அன்னிபெசன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ——- கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

(அ) பம்பாய் (ஆ) கல்கத்தா (இ) சூரத் (ஈ) லக்னோ

105. 700 வரிகளுக்கு மேல் கொண்ட பாடலான மதுரைக்காஞ்சி என்ற நூலை எழுதியவர்

(அ) நக்கீரர் (ஆ) பரஞ்ஜோதி (இ) இளங்கோ அடிகள் (ஈ) மாங்குடி மருதனார்

106. சங்க இலக்கியத்தில் போர்க்களத்தினைக் கண்ட வீரத்தாயின் நிலையை போற்றியவர்

(அ) பொய்கையார் (ஆ) ஓக்கூர் மாசாத்தியார் (இ) பாலைக் கௌதமனார் (ஈ) பனம்பரனார்

107. பாஞ்சாலம் குறிச்சி கோட்டையின் மீது தாக்குதல் தொடுத்தவர் ——— ஆவார்

(அ) ஜாக்சன் (ஆ) மேஜர் பேனர்மான் (இ) ஜெனரல் மலார்டிக் (ஈ) ஜெனரல் பாஸ்காவென்

108. காலவரிசைப்படி பட்டியலிடுக:

1. ஈவே ராமசாமி தலைமையில் நீதிக்கட்சி “திராவிடக் கழகம்” என மாற்றி அமைக்கப்பட்டது.

2. ஈவே ராமசாமி சிறையில் இருந்துக் கொண்டு நீதிக்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. ஈவே ராமசாமி திராவிட நாடு மாநாடு நடத்தி அதில் சுதந்திர மற்றும் தனி திராவிட நாடு கோரிக்கை முன் வைத்தல்.

4. மெட்ராஸ் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி வென்றது.

(அ) 1,3,2,4 (ஆ) 3,4,1,2 (இ) 4,2,3,1 (ஈ) 2,1,3,4

109. “தென்னாட்டுத்திலகர்” என அழைக்கப்பட்டவர் ———– ஆவார்

(அ) வாஞ்சிநாதன் (ஆ) சுப்ரமணிய சிவா (இ) இராஜாஜி (ஈ) வ.உ.சிதம்பரனார்

110. முதன் முதலில் நீதிக்கட்சி ——– என்ற பெயரில் அழைக்கப்பட்டது

(அ) தென்னிந்திய இளைஞர் சங்கம் (ஆ) தென்னிந்திய நல உரிமை சங்கம்

(இ) தென்னிந்திய பத்திரிக்கை நிரூபர்கள் சங்கம் (ஈ) தென்னிந்திய இலக்கிய ஐக்கிய மன்றம்

111. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. மதராஸ் மகாஜனசபா – 1884.

2. தென்இந்திய மக்கள் சங்கம் – 1919.

3. புpராமணரல்லாதோர் பிரகடனம் – 1916.

4. மதராஸ் இலக்கிய சங்கம் – 1830

(அ) 2 மட்டும் சரி (ஆ) 4 மட்டும் சரி (இ) 2 மற்றும் 4 சரி (ஈ) 2 மற்றும் 3 சரி

112. உடல் உறுப்பு தானத்தில் முதுன்மையான மாநிலமாக இருப்பது எது?

(அ) உத்திர பிரதேசம் (ஆ) ஒரிசா (இ) தமிழ்நாடு (ஈ) கேரளா

113. பின்வருவனவற்றுள் தமிழ்நாடு மின-ஆளுமை முகமையின் செயல்பாடு ——– ஆகும்.

1. நிறுவனம் சார்ந்த கட்டிடக்கலை.

2. விதிமுறைகள், கொள்கைகள், தரப்படுத்துதல்கள்.

3. பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாடு.

4. உபரி இருப்புக் கொள்கை.

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1,2 மற்றும் 3 (ஈ) 2 மற்றும் 4 மட்டும்

114. தமிழ்நாட்டில் “ஆறுகளின் சரணாலயம்” என்று ——- அழைக்கப்படுகிறது.

(அ) கலக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்

(ஆ) சத்திய மங்கலம் புலிகள் சரணாலயம்

(இ) முதுமலை யானைகள் சரணாலயம்

(ஈ) வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

115. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படக் காரணமாக இருப்பது ——— ஆகும்

(அ) வறட்சியான நிலை (ஆ) அதிக மழை

(இ) சுற்றுலாவினர் வருகை (ஈ) சிறப்பு நகரம் திட்டம்

116. , , ல் அடுத்த உறுப்பு

(அ) (ஆ) (இ) (ஈ)

117. 7 x 5 x 3 x 2 + 3 என்பது ஒரு பகு எண்ணா? பகா எண்ணா? ஒரு முழுவா?

(அ) பகு எண் (ஆ) பகா எண் (இ) முழு எண் (ஈ) முழுக்கள்

118. ஒரு கோளத்தில் எத்தனை மீப்பெரு வட்டங்கள் உள்ளன?

(அ) இரண்டு (ஆ) மூன்று (இ) பத்து (ஈ) எண்ணிலடங்கா

119. ஒரு குறிப்பிட் குறியீடு மொழியில் “MEDICINE” என்ற வார்த்தை “EOJDJEFM”, என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் “COMPUTER” என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க

(அ) CMNQTUDR (ஆ) CNPRVUFQ (இ) RNVFTUDQ (ஈ) RFUVQNPC

120. ஒரு கனச் செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7:5:2 மற்றும் கன அளவு 35840 செ.மீ3 எனில் உயரத்தின் அளவு

(அ) 8 செ.மீ (ஆ) 16 செ.மீ (இ) 24 செ.மீ (ஈ) 32 செ.மீ

121. ஒரு திண்ம நேர்வட்டக் கூம்பின் கன அளவு 4928 க.செ.மீ மற்றும் அதன் உயரம் 24 செ.மீ. எனில் அக்கூம்பின் ஆரத்ததைக் காண்க: ()

(அ) 14 செ.மீ (ஆ) 15 செ.மீ (இ) 16 செ.மீ (ஈ) 17 செ.மீ

122. கூட்டு வட்டி காண்க: 1 ஆண்டுகளுக்கு அசல் ரூ.5,000, 20% ஆண்டு வட்டி வீதம் அரையாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.

(அ) ரூ.6,655 (ஆ) ரூ.1,655 (இ) ரூ.2,655 (ஈ) ரூ.1,665

123. ஆண்டுக்கு 13 வீதம் தனி வட்டிக்கு 4 ஆண்டுகளில் கிடைக்கும் மொத்த தொகை ரூ.3,080 எனில் அசலைக் காண்க:

(அ) ரூ.2,000 (ஆ) ரூ.1,850 (இ) ரூ.1,650 (ஈ) ரூ.1,550

124. ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 30 பேர் மாணவர்கள் எனில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையேயான விகிதம்

(அ) 2 : 3 (ஆ) 2 : 5 (இ) 5 : 3 (ஈ) 3 : 2

125. X,Y என்ற இரு எண்களின் மீ.பொ.வ (X,Y) = 4 மற்றும் மீ.பொ.ம. (X,Y) = 9696, X = 96 எனில், Yன் மதிப்பை காண்க:

(அ) 101 (ஆ) 404 (இ) 9212 (ஈ) 24

126. ஓர் ஆடையின் விலை ரூ.2,100 லிருந்து ரூ.2,520 ஆக அதிகரித்தால், அதிகரிப்பு சதவீதம்

(அ) 15 (ஆ) 18 (இ) 20 (ஈ) 25

127. ஒரு எண்ணில் 16% என்பது 40 எனில் அந்த எண் யாது?

(அ) 220 (ஆ) 240 (இ) 420 (ஈ) 520

128. 0.07%ஐ பின்னமாக மாற்றுக:

(அ) (ஆ) (இ) (ஈ)

129. சிறுநீர் கழித்த பின் சிறுநீர்குழாயில் ஏற்படும் அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தும் சுரப்பு ——— ஆல் சுரக்கப்படுகிறது.

(அ) புரோஸ்டேட் சுரப்பி (ஆ) பெரினியல் சுரப்பி

(இ) மலக்குடல் சுரப்பி (ஈ) கௌபர்ஸ் சுரப்பி

130. எலுமிச்சை புல்லின் தாவரவியல் பெயர் என்ன?

(அ) சயனோடான் டாக்டைலான் (ஆ) சீட்டேரியா இட்டாலிக்கா

(இ) அருண்டோ டோனாக்ஸ் (ஈ) சிம்போபோகான் சிட்ரேட்டஸ்

131. போர்டியாக்ஸ் கலவை என்பது ———- ஆகும்

(அ) CuSO4 + சுண்ணாம்பு (ஆ) ZnSO4 + சுண்ணாம்பு

(இ) HgCl2 + சுண்ணாம்பு (ஈ) K2CO3 + சுண்ணாம்பு

132. இரண்டு மின்னூட்டங்களின் இடைப்பட்ட இடப்பெயர்ச்சி “D” ஆக இருக்கும்போது, கவர்ச்சி விசை “F” ஆக உள்ளது. கவர்ச்சி விசை “16F” ஆக மாற இடப்பெயர்ச்சி என்ன?

(அ) (ஆ) (இ) (ஈ)

133. ஹப்பனிங், (1960) சட்ட விரோத கருக்கலைப்புப் பற்றிய பிரெஞ்சு நாடகம், சிறந்த திரைப்படத்திற்கான “கோல்டன் லயன் விருது” ——— திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது,

(அ) பாரிஸ் (ஆ) வெனிஸ் (இ) ஜெனிவர் (ஈ) வியன்னா

134. தமிழகத்தில் “சமூக நீதி நாள்” அனுசரிக்கப்படும் தினம்

(அ) அக்டோபர் 17 (ஆ) நவம்பர் 18 (இ) செப்டம்பர் 17 (ஈ) ஆகஸ்டு 18

135. இவற்றுள் எது வட சிக்கிம் மாநிலத்திலுள்ள டிசோங்கு எனும் இடத்தில் டிசம்பர் 2021 மாதத்தில் கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி இனம்

(அ) சாக்லேட் ஓர இறக்கை பட்டாம்பூச்சி (ஆ) எலுமிச்சை அழகி பட்டாம்பூச்சி

(இ) நீல வசீகரன் பட்டாம்பூச்சி (ஈ) கத்திவால் அழகி பட்டாம்பூச்சி

136. பட்டியல் பழங்குடியின மக்கள் அதிக சதவீதத்தில் காணப்படும் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

(அ) லட்சத்தீவுகள் (ஆ) மேகாலயா (இ) மிசோரம் (ஈ) நாகாலாந்து

137. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சுனாமி வருவதற்கு முன் நாம் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லை?

(அ) அருகிலுள்ள பாதுகாப்பான தங்குமிடத்திற்கு வழியை கண்டறிதல்

(ஆ) மாற்றுக் கட்டிடத்தை கருத்தில் கொள்ளல்

(இ) அவசர முதலுதவிப்பெட்டி வைத்திருத்தல்

(ஈ) தரை தளத்தில் வசிப்பவர்கள் அங்கேயே இருத்தல்

138. கில்கிட் மலைக்குடைவு பின்வரும் நிதிகளில் எவற்றில் செயல்களால் உருவாக்கப்பட்டது

(அ) கங்கை (ஆ) சிந்து (இ) பிரம்பபுத்திரா (ஈ) நர்மதா

139. கரோஷ்தி எழுத்து வடிவம் எதில் இருந்து உருவானது

(அ) பிரம்மி (ஆ) செமிட்டிக் (இ) ரோமன் (ஈ) அராமிக்

140. எப்போது மலையாளம் தனி மொழியாக மாறியது?

(அ) 6ஆம் நூற்றாண்டு (ஆ) 11ஆம் நூற்றாண்டு

(இ) 12ஆம் நூற்றாண்டு (ஈ) 9ஆம் நூற்றாண்டு

141. கீழ்க்கண்டவற்றுள் அக்பரது மிகச்சிறந்த இசைப்பாடகர் பற்றிய தவறான ஒன்று எது?

(அ) தான்சென் (ஆ) சூர்தாஸ் (இ) இராம்தாஸ் (ஈ) தாராசந்த்

142. குத்புதின் ஐபக்கால் முதலில் உருவாக்கப்பட்ட கட்டிடமானது ————- ஆகும்

(அ) குதுப்பமினார் (ஆ) அர்காய்-டின்-கா-ஜோம்ரா

(இ) குவாத் உல் இஸ்லாம் மசூதி (ஈ) ஜமாத் கானா மஸ்ஜித்

143. பெண்கள் மேம்பாட்டிற்கான துர்காபாய் தேஷ்முக் விருது பின்வரும் எந்த அமைப்பிற்கு வழங்கப்படுகிறது?

(அ) பெண்கள் மேம்பாட்டு அமைப்பு (ஆ) தன்னார்வ அமைப்பு

(இ) மத்திய சமூக நல வாரியம் (ஈ) மாநில சமூக நல வாரியம்

144. “உச்சநீதிமன்றம் இந்திய குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்க கடமைப்பட்டுள்ளது” இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து இதனைக் குறிப்பிடுகிறது?

(அ) ஷரத்து 143 (ஆ) ஷரத்து 144 (இ) ஷரத்து 145 (ஈ) ஷரத்து 146

145. மத்தியப் பட்டியல் உள்ளடக்கியது

(அ) 97 இனங்கள் (ஆ) 61 இனங்கள் (இ) 66 இனங்கள் (ஈ) 70 இனங்கள்

146. இந்திய அரசியலமைப்பை உருவாக்க வரைவுக்குழு எடுத்துக்கொண்ட காலம்

(அ) 2 ஆண்டுகள், 11 மாதம், 18 நாள் (ஆ) 2 ஆண்டுகள், 9 மாதம், 8 நாள்

(இ) 2 ஆண்டுகள், 7 மாதம், 18 நாள் (ஈ) 2 ஆண்டுகள், 5 மாதம், 20 நாள்

147. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் யார்?

(அ) டாக்டர் B.R.அம்பேத்கர் (ஆ) இராஜேந்திர பிரசாத்

(இ) ஜவஹர்லால் நேரு (ஈ) மேற்கூறியவற்றுள் எவருமில்லை

148. உற்பத்தி செய்யும் போது எந்த செலவை திரும்பபெற முடியாது?

(அ) உண்மை செலவு (ஆ) பிறவாய்ப்பு செலவு

(இ) மூழ்கும் செலவு (ஈ) உள்ளார்ந்த செலவு

149. எந்த ஜோடி தவறானது என கண்டுபிடிக்க

(அ) RBI-வங்கிகளின் வங்கி (ஆ) FCI-வணிக நிறுவனங்களுக்கு நிதி உதவி

(இ) IDBI-தொழில் நிதி (ஈ) EXIM வங்கி – ஏற்றுமதி இறக்குமதிக்கு நிதி உதவி

150. கீழ்க்கண்டவற்றுள் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் நன்மை/நன்மைகள் எது/யாவை?

1. அடுக்கு வரி விளைவுகளை நீக்குகிறது.

2. பொருள்கள் மற்றும் பணிகளுக்கு ஒரே மாதிரியான வரி.

3. மத்திய மாநிலங்கள் வரி முடிவுகளை எடுக்கிறது

(அ) 1 மற்றும் 2 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 மட்டும்

(இ) 12 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2 மற்றும் 3

151. ———- ஆண்டு சட்டம் இஸ்லாமியருக்கென தனி பிரதிநிதித்துவத்தை அறிமுகம் செய்தது.

(அ) 1919 (ஆ) 1935 (இ) 1947 (ஈ) 1909

152. செப்டம்பர் 1943ல், இந்திய தேசிய இராணுவம் எங்கிருந்து தனது டெல்லி அணிவகுப்பை துவங்கியது?

(அ) நேப்பாளில் உள்ள வெற்றி கோபுரத்தில்

(ஆ) இரண்டாம் பகதூர்ஷாவின் கல்லறையின் அருகில்

(இ) இராணுவத்தின் விசேஷ பயிற்சி மைதானத்திலிருந்து

(ஈ) இந்திய பெருங்கடலின் கரையிலிருந்து

153. “தெற்கிலிருந்து வந்த தீர்க்கதரிசி” என்று சிறப்பாக அழைக்ப்பட்டவர் யார்?

(அ) இராஜாஜி (ஆ) வ.உ.சிதம்பரம் (இ) பெரியார்.ஈ.வெ.இராமசாமி (ஈ) பாரதியார்

154. பேச்சுரிமையையும், கருத்துரிமையையும் பறிப்பதற்காகவே நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?

(அ) கிரிமினல் சட்டம் (ஆ) 1908ஆம் ஆண்டு தேசிய சட்டம்

(இ) 1910ஆம் ஆண்டு இந்திய பத்திரிக்கை சட்டம் (ஈ) 1906ஆம் ஆண்டு பத்திரிக்கை சட்டம்

155. சங்க காலத்தில் விவசாய நிலங்களை உள்ளிட்ட நிலப்பரப்பு ——— என அழைக்கப்பட்டது.

(அ) குறிஞ்சி (ஆ) முல்லை (இ) மருதம் (ஈ) நெய்தல்

156. பல்லவன் கோவில் தகடுகள் எதைப் பற்றி கூறுகின்றன?

(அ) சுவேதம்பரா சமண வரிசை (ஆ) திகம்பரா சமண வரிசை

(இ) புத்த கொள்கைகள் (ஈ) பல்லவ அரசர்களின் மரபு வரிசை

157.கீழ்க்கண்டவற்றுள் சி.என்.அண்ணாதுரையால் எழுதப்படாத படைப்பை கூறு:

(அ) ஆரிய மாயை (ஆ) ஓர் இரவு (இ) சொர்க்க வாசல் (ஈ) ஆனந்த போதினி

158. இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக “சக்கரவர்த்தினி” என்ற நாளிதழ் ——-ஆல் அர்ப்பணிக்கப்பட்டது

(அ) பாரதியார் (ஆ) ஈ.வே.ராமசாமி (இ) சி.என்.அண்ணாதுரை (ஈ) எம்.கருணாநிதி

159. சரியானதை தேர்வு செய்க:

1. திருக்குறள் அறிவையும் கல்வியையும் வலியுறுத்துகிறது.

2. குறள் மதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

3. குறள் கலை மற்றும் நடனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

4. குறள் வாய்மையையும் அடக்கத்தையும் வலியுறுத்துகிறது.

(அ) 1 மற்றும் 2 ஆகியன (ஆ) 2 மற்றும் 3 ஆகியன

(இ) 1 மற்றும் 4 ஆகியன (ஈ) 3 மற்றும் 4 ஆகியன

160. வருணன் என்ற கடவுளை வணங்கியவர்கள்

(அ) குறிஞ்சி நில மக்கள் (ஆ) முல்லை நில மக்கள்

(இ) நெய்தல் நில மக்கள் (ஈ) மருதம் நில மக்கள்

161. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் உப்பு சத்தியாகிரகத்தையும் எடுத்து நடத்தி கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி பெயரைக் குறிப்பிடுக

(அ) சரோஜினி (ஆ) ருக்மணி லஷ்மிபதி (இ) அம்புஜம்மாள் (ஈ) பார்வதி தேவி

162. தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2013-14ஆம் ஆண்டின்படி, பன்முக பரிமான வறுமை குறியீடு —— மாவட்டத்தில் முதன்மை அதிக குறியீடு பெற்று விளங்குகிறது

(அ) காஞ்சிபுரம் (ஆ) சென்னை (இ) கோயம்புத்தூர் (ஈ) தர்மபுரி

163. 2019-ல் அதிகமான உடல் ஊனமுற்றோரை பணிக்கு அமர்த்தியமைக்கு தமிழ்நாடு அரசு விருது யாருக்கு கொடுக்கப்பட்டது?

(அ) சக்தி மசாலா (த) நிறுவனம், ஈரோடு

(ஆ) எவரெஸ்ட் ஸ்டெபிலைஸ்சர் (த) லிட், சென்னை

(இ) எஸ்.கே.எம்.அனிமல்-பீட்ஸ் நிறுவனம், ஈரோடு

(ஈ) வேதாந்தா ஸ்டெர்லைட் தொழில், தூத்துக்குடி

164. மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, இந்தியாவில், ஊரக/கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்கட் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு யாது?

(அ) 6.5 சதவீதம் (ஆ) 5.5 சதவீதம் (இ) 4.5 சதவீதம் (ஈ) 3.5 சதவீதம்

165. கருத்து (A): இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது

காரணம் (R): மருத்துவ வசதிகள் அதிகரித்தல், சிறந்த கவனிப்பு ஆகியவை இறப்பு விகிதத்தை குறைக்கிறது

(அ) (A) சரி, ஆனால் (R) தவறு

(ஆ) (A) தவறு, ஆனால் (R) சரி

(இ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல

166. 31 மார்ச் 2013ல் தமிழ்நாட்டில் உள்ள 13.89 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.——- கோடியாகும்

(அ) ரூ.26,645 கோடி (ஆ) ரூ.38,748 கோடி (இ) ரூ.18,245 கோடி (ஈ) ரூ.17,648 கோடி

167. 2011-14லில் தமிழ்நாட்டின் இருப்பு பாதையின் அளவு ——— கி.மீராக இருந்தது

(அ) 2,671,43 கி.மீ (ஆ) 3,761,62 கி.மீ (இ) 4,861,34 கி.மீ (ஈ) 8,963,44 கி.மீ

168. F1=1, F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனில் F5 ஆனது

(அ) 3 (ஆ) 8 (இ) 5 (ஈ) 11

169. இரண்டு பகடைகளில் ஒன்றில் 1,2,3,4,5,6 என்றும் மற்றொரு பகடையில் 1,1,2,2,3,3 என்றும் முக மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. ஆவை இரண்டும் உருட்டப்படும் போது கிடைக்கும் முக மதிப்புகளின் கூடுதல் 4 கிடைப்பதற்கான நிகழ்தகவை காண்:

(அ) (ஆ) (இ) (ஈ)

170. Aஆனவர் Bஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க:

(அ) 36 நாட்கள் (ஆ) 27 நாட்கள் (இ) 18 நாட்கள் (ஈ) 9 நாட்கள்

171. முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 60 மீ. அதன் பக்கங்கள் 5:12:13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவைக் காண்க:

(அ) 130 மீ2 (ஆ) 120 மீ2 (இ) 110 மீ2 (ஈ) 100 மீ2

172. இரு கூம்புகளின் கன அளவுகள் சமம் எனில் அவற்றின் ஆரம் மற்றும் உயரம் ஆகியவற்றின் விகிதம்

(அ) 1:1 (ஆ) 1:2 (இ) 2:1 (ஈ) 1:3

173. 7 செ.மீ ஆரமுள்ள ஒரு கூம்பின் மொத்த பரப்பளவு 704 செ.மீ2 எனில் சாயுயரம்

(அ) 20 செ.மீ (ஆ) 25 செ.மீ (இ) 28 செ.மீ (ஈ) 30 செ.மீ

174. 6:X::Y:15 கீழ்காணும் விடைகளில் எந்த விடை Xக்கும், Yக்கும் முறையே பொருந்தாது?

(அ) 9,10 (ஆ) 3,30 (இ) 2, 45 (ஈ) 10, 10

175. செல்வன் ரூ.5,000 மூன்று மாதத்திற்கு ஒரு முறை சேமிக்கிறார் எனில் ரூ.1,50,000ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்?

(அ) 90 வருடங்கள் (ஆ) 7 வருடங்கள் (இ) 9 வருடங்கள் (ஈ) 30 வருடங்கள்

176. இரு எண்களின் மீ.பொ.வ. மதிப்பு 1 எனில் அவ்விரு எண்களை அழைக்கும் முறை

(அ) சார்பகா எண்கள் (ஆ) பகா எண்கள் (இ) இரட்டை எண்கள் (ஈ) ஒற்றை எண்கள்

177. ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்ற விலை 4:5 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் இலாப சதவீதம் காண்க:

(அ) 10% (ஆ) 20% (இ) 25% (ஈ) 30%

178. ஒரு குடும்பம் உணவகத்திற்குச் சென்று உணவுக்காக ரூ.350 செலவு செய்து கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தினார்கள் எனில் மத்திய மற்றும் மாநில சரக்கு சேவை வரியைக் கணக்கிடுக:

(அ) ரூ.87.5, ரூ.85.7 (ஆ) ரூ.8.75, ரூ.8.75 (இ) ரூ.85.7, ரூ.87.5 (ஈ) ரூ.7.85, ரூ.7.85

179. ஒரு தேர்வில் உள்ள மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 455 பேர் தேர்ச்சி பெறாதவர்கள் எனில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை.

(அ) 490 (ஆ) 700 (இ) 845 (ஈ) 1300

180. பார் உறுப்பு என்பது

(அ) செயல் நிலையில் உள்ள “X” குரோமோசோம் (ஆ) செயல்படாத கோல்கை கூட்டு பொருள்

(இ) செயல்படாத “X” குரோமோசோம் (ஈ) செயல்படாத டிக்டியோசோம்

181. நீர் நிலைகளின் ஆழமான அடித்தட்டுகளில் வாழும் உயிரினங்களை எவ்வாறு அழைப்பாய்?

(அ) நெக்டோனிக் (ஆ) பிளாங்டோனிக் (இ) பென்ந்திக் (ஈ) தெர்மிக்

182. தனிமங்களின் பண்புகள் மற்றும் செயல்பாடு அதன் அணு எண்ணைப் பொறுத்து இருக்கும் எனக் கூறியவர்

(அ) ரேங்க் (ஆ) வெர்னர் (இ) மென்டலீப் (ஈ) மோஸ்லே

183. ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழ் குளிர்விக்க வைக்க முடியாது. ஆந்த வெப்பநிலை.

(அ) -100OC (ஆ) 0 OC (இ) -273 OC (ஈ) -500 OC

184. “சத்யமேவ ஜெயதே” என்ற “வாய்மையே வெல்லும்” ——– எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளது.

(அ) சுரோஷ்தி (ஆ) பிராமி (இ) தேவநாகிரி (ஈ) அரெமிக்

185. சாகித்ய அகாடமி ———– இந்திய மொழிகளை அங்கீகரித்துள்ளது.

(அ) 13 (ஆ) 15 (இ) 17 (ஈ) 24

186. சூப்பர் கணிதமுறை மிஷன் படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூப்பர் கணினியின் பெயர் என்ன?

(அ) பரம் அக்னி (ஆ) பரம் சிவே (இ) பரம் வித்வான் (ஈ) பரம் ஸ்வயம்

187. பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

(அ) NGO பிரதம் (ஆ) NITI ஆயோக்

(இ) மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (ஈ) மேற்கூறியவை எதுவும் இல்லை

188. தங்க நாற்கர சாலைகளின் நான்கு பிரிவுகளை கீழ்கண்ட நகரங்களை இணைக்கிறது:

1. டெல்லி-மும்பை.

2. மும்பை-சென்னை.

3. சென்னை-கொல்கத்தா.

4. கொல்கத்தா-டெல்லி

மேலே உள்ள பிரிவுகளின் நீளத்தை இறங்கு வரிசையில் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

(அ) 3,4,1,2 (ஆ) 3,4,2,1 (இ) 4,3,2,1 (ஈ) 4,3,1,2

189. பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

(அ) இந்தியாவிலேயே உயரமான சிகரம் K2 ஆகும்.

(ஆ) இந்தியாவில் உயரமான நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும்

(இ) சிரபுஞ்சி இந்தியாவிலேயே ஈரமான பகுதியாகும்

(ஈ) இந்தியாவிலேயே மிகப்பெரிய பீடபூமி தக்காண பீடபூமியாகும்

190. எந்த சமயத்தலைவர் சமணத்திற்கும், பிராமணியத்திற்கும் சமூக இணக்கத்தினை உருவாக்கினார்?

(அ) அப்பர் (ஆ) ஹேமச்சந்திரா (இ) இராமானுஜர் (ஈ) சம்பந்தர்

191. “அய்மா” என்ற சொல் எதை குறிக்கின்றது?

(அ) மன்னர் முன் மண்டியிடுதல் (ஆ) நிலத்தில் முத்தமிடுதல்

(இ) நான்கு வணக்கங்கள் (ஈ) கடவுள் வழிபாட்டுக்கு ஒதுக்கப்படும் நிலம்

192. இந்தியாவில், நிக்கோலோ காண்டி மற்றும் அப்துர் ரஸாக் ——- ஆட்சியின் போது வருகை புரிந்தனர்.

(அ) சோழர்கள் (ஆ) பாண்டியர்கள் (இ) விஜயநகர் அரசர்கள் (ஈ) பாமினி சுல்தான்கள்

193. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி கூற்றுகளில் சரியானது எது?

1. வலுவான மத்திய அரசு.

2. ஒவ்வொரு தெருவிலும் தெரு விளக்குகள்.

3. தெருக்களில் குப்பை தொட்டி அமைந்திருந்தது.

3. பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கான குடியிருப்புகள் காணப்படுகிறது

(அ) 1, 2 மட்டும் சரி, 3, 4 தவறானது (ஆ) 1,3 மட்டும் சரி, 2, 4 தவறானது

(இ) 1,2,3 மட்டும் சரி, 4 மட்டும் தவறானது (ஈ) அனைத்தும் சரியானது

194. கீழ்வருவனவற்றை பொருத்துக:

அ. மத்திய புலனாய்வுப் பிரிவு 1. 1968

ஆ. மத்திய கண்காணிப்பு ஆணையம் 2. 1964

இ. முதல் லோக்பால் வரைவு லோக்சபாவில் அறிமுகம் 3. 1963

ஈ. அகில இந்திய சேவை (நடத்தை) விதி 4. 1954

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 1 4 3

இ. 3 2 1 4

ஈ. 1 3 2 4

195. இந்தியப் பிரதமரை நியமனம் செய்பவர்

(அ) ஆளுநர் (ஆ) சபாநாயகர் (இ) குடியரசுத் தலைவர் (ஈ) தேர்தல் ஆணையர்

196. அரசு நெறிமுறை கோட்பாட்டினை பின்வரும் நாடுகளில் எது முதன்முதலில் தங்கள் அரசியலமைப்பில் சேர்த்துக் கொண்டது?

(அ) அயர்லாந்து (ஆ) அமெரிக்கா (இ) இந்தியா (ஈ) ஸ்பெயின்

197. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I மாநிலம் பட்டியல்-II -2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி

மக்கட்தொகையளவு (நபர்கள்)

அ. மகாராஷ்ட்ரா 1. 104,099,452

ஆ. பீகார் 2. 84,580,777

இ. மேற்கு வங்கம் 3. 112,374,333

ஈ. ஆந்திர பிரதேசம் 4. 91,276,115

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 3 1 4 2

இ. 3 2 1 4

ஈ. 1 3 4 2

198. முதலீட்டுக்கலைப்பு வரவினங்களுக்கு —– நிதியாண்டில் ரூ.1,05,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(அ) 2017-2018 (ஆ) 2018-2019 (இ) 2019-2020 (ஈ) 2020-2021

199. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட மாதிரி

(அ) ஹராடு-டோமார் மாதிரி (ஆ) கால்டார் மாதிரி

(இ) மீட் மாதிரி (ஈ) மஹலநோபிஸ் மாதிரி

200. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

2011 மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி படித்தவர் அதிகமான சதவிகிதத்தில் உள்ள மாநிலங்களை வரிசைப்படுத்து

பட்டியல் I மாநிலம் பட்டியல் II எழுத்தறிவு வீதம் (%)

அ. கேரளா 1. 93.99%

ஆ. தமிழ்நாடு 2. 75.36%

இ. கர்நாடகா 3. 67.02%

ஈ. ஆந்திரபிரதேசம் 4. 80.09%

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 1 4 2 3

இ. 1 2 4 3

ஈ. 1 3 2 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin