Answer Key

Tnpsc District Child Protection Officer Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil & General Studies in Tamil

Tnpsc District Child Protection Officer Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil & General Studies in Tamil

DISTRICT CHILD PROTECTION OFFICER IN TAMILNADU APPROVED SCHOOLS AND VIGILANCE SERVICE

1. சொற்களை ஒழுங்குபடுத்துக:

“சொல்லையோ திரும்பத் சொல்வதுண்டு கருத்தையோ திரும்பச்”

(அ) கருத்தையோ சொல்லையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு

(ஆ) திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு கருத்தையோ சொல்லையோ

(இ) சொல்லையோ சொல்வதுண்டு கருத்தையோ திரும்பத் திரும்பச்

(ஈ) சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு

2. சொற்களை ஒழுங்குபடுத்துக:

“மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை”

(அ) அறியாமை எதியல்ல மிகப்பெரிய அறிவாற்றலின்

(ஆ) அறியாமை எதிரியல்ல அறிவாற்றலின் மிகப்பெரிய

(இ) அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல

(ஈ) மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை

3. ஏற்கனவே நேர்ந்ததைக் கூறும் விடை?

(அ) இனமொழி விடை (ஆ) உற்றது உரைத்தல் விடை

(இ) உறுவது கூறல் விடை (ஈ) நேர் விடை

4. பொருந்தா இணையைக் கண்டுபிடி:

விடை விளக்கம்

(அ) மறை விடை மறுத்துக் கூறும் விடை

(ஆ) உறுவது கூறல் விடை வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்

(இ) சுட்டு விடை உடன்பாட்டுக் கூறும் விடை

(ஈ) ஏவல் விடை மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை

5. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:

பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

(அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

(ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?

(இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?

(ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?

6. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா”? என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?

(அ) ஐய வினா (ஆ) அறி வினா (இ) அறியா வினா (ஈ) கொளல் வினா

7. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:

உரை கவிதாவால் படிக்கப்பட்டது.

(அ) செயப்பாட்டு வினைத்தொடர் (ஆ) செய்வினைத் தொடர்

(இ) தன்வினைத் தொடர் (ஈ)பிறவினைத் தொடர்

8. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:

செயப்பாட்டு வினையை கண்டறிக:

(அ) சட்டி உடைந்து போயிற்று (ஆ) அப்துல் நேற்று வந்தான்

(இ) கவிதா உரை படித்தாள் (ஈ) பாட்டுப்பாடுகிறாள்

9. “உயிரும் உடலும் போல” எவமை கூறும் பொருள் தெளிக:

(அ) ஒற்றுமை (ஆ) வேற்றுமை (இ) அன்பு (ஈ) பகை

10. உவமையால் விளக்கப் பெறும் பnhருத்தமான பொருளைத் தேர்க:

கண்ணை இமை காப்பது போல

(அ) ஒற்றுமை (ஆ) வேற்றுமை (இ) பாதுகாப்பு (ஈ) ஏமாற்றம்

11. தவறான கலைச் சொல்லைக் கண்டறிக:

(அ) Leadership-தலைமைப் பண்பு

(ஆ) Member of Legislative Assembly-சட்டமன்ற உறுப்பினர்

(இ) Punctuation-விழிப்புணர்வு

(ஈ) Equestrian-குதிரையேற்றம்

12. கலைச்சொல்:

Satellite

(அ) நுண்ணறிவு (ஆ) செயற்கைக்கோள்

(இ) செயற்கை நுண்ணறிவு (ஈ) மீத்திறன் கணினி

13. விடை வகைகள்:

“தேர்வு எழுதி விட்டாயா?”என்ற வினாவிற்கு “எழுதாமல் இருப்பேனா?” என்று கூறுவது

(அ) உற்றது உரைத்தல் விடை (ஆ) வினா எதிர் வினாதல் விடை

(இ) உறுவது கூறல் விடை (ஈ) வெளிப்படை விடை

14. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கண்டறிதல்:

(அ) சர்வர் (Server)-செதுக்கி

(ஆ) ஃபோல்டர்(Folder) -வையக விரிவு வலை வழங்கி

(இ) கர்சர்(Cursor) – ஏவி அல்லது சுட்டி

(ஈ) க்ராப்(Crop)-உறை

15. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்:

கம்யூட்டர்

(அ) ரோபோ (ஆ) கணினி (இ) மிஷின் (ஈ) காலிங்பெல்

16. ஊர்ப்பெயர்களின் மரூஉ-வை எழுதுக:

புதுச்சேரி என்பதன் மரூஉ

(அ) புதுக்கோட்டை (ஆ) புதுப்பேட்டை (இ) புதுவை (ஈ) புதுச்சேரி

17. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:

நாகப்பட்டினம் என்பதன் மரூஉ

(அ) நாகப்பட்டினம் (ஆ) நாகை (இ) நாகூர் (ஈ) பட்டினம்

18. நிறுத்தற்குறிகளை அறிக (எது சரியானது)

(அ) மகிழ்ச்சி, வியப்பு,அச்சம்,அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.

(ஆ) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை, வெளியிடும் இடங்களில், வியப்புக்குறி இட வேண்டும்.

(இ) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்பு குறி இட வேண்டும்.

(ஈ) மகிழ்ச்சி வியப்பு அச்சம், அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்பு குறி இட வேண்டும்.

19. சரியான நிறுத்தற்குறியிட்ட சொற்றொடரினைத் தேர்ந்தெடு:

(அ) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று வாழை இலை, பறித்து வந்தான்

(ஆ) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை, பறித்து வந்தான்

(இ) பொழிலன் தேட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்

(ஈ) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்

20.எழுத்து வழக்கு தொடரைத் தேர்ந்தெடு:

(அ) எங்கதெ பெரிசு (ஆ) எங்கதெ பெரியது

(இ) என் கதை பெரிசு (ஈ) என் கதை பெரியது

21. “சொல்றேன்” என்பதன் எழுத்து வழக்கு

(அ) சொல்லுவேன் (ஆ) சொன்னேன் (இ) சொல்வேன் (ஈ) சொல்கின்றேன்

22. சொற்களை சரியாக இணைத்து புதிய சொல் உருவாக்குக:

புளியங் ———-

(அ) கன்று (ஆ) குருத்து (இ) பிள்ளை (ஈ) மடலி

23. மனித நேயம் என்ற சொல்லில் இணைந்துள்ள இரண்டு சொற்களைக் கண்டறிக:

(அ) மனிதன், நேயம் (ஆ) மனிதம், நேயம்

(இ) மனிதர், நேயம் (ஈ) மனிதள், நேயம்

24. இவற்றுள் எது சரியானது?

நிகழ்காலத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) சுடர்க்கொடி பாடினாள் (ஆ) சுடர்க்கொடி பாடுகிறாள்

(இ) சுடர்க்கொடி (ஈ) சுடர்க்கொடியால் பாடப்பட்டது

25. மல்லிகைப் பந்தலின் கீழே தங்கினான்

தங்கினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்.

(அ) நிகழ்காலம் (ஆ) இறந்தகாலம் (இ) எதிர்காலம் (ஈ) சங்கதாலம்

26. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு

(அ) ஆழ்வார்கள் எத்தனை பேர்? (ஆ) ஆழ்வார்கள் பத்து பேர்?

(இ) ஆழ்வார்கள் தங்கும் இடம்? (ஈ) ஆழ்வார்கள் பாடிய பாடல்?

27. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:

(அ) அறநெறிச்சாரம் என்பதன் பொருள் என்ன?

(ஆ அறநெறிச்சாரம் அறிவுடையது?

(இ) அறநெறிச்சாரம் விளக்கம் தருவது?

(ஈ) அறிநெறிச்சாரம் பொருள் அறிவது?

28. ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக:

எனக்கு ———- பங்கு பிரித்துக் கொடுக்க வா!.

கீழே ஈரம் பார்த்து உன் ———-ஐ வை.

(அ) கை (ஆ) கால் (இ) அகல் (ஈ) அலை

29.வல்லினம் மிகும் மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக:

அ. பாலை பாடினான் 1.தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்

ஆ. பாலைப் பாடினான் 2. தேரினைப் பார்த்தான்

இ. தேரை பார்த்தான் 3. பாலினைப் பாடினான்

ஈ. தேரைப் பார்த்தான் 4. பாலைத் திணை பாடினான்

அ ஆ இ ஈ

அ. 4 1 3 2

ஆ. 2 3 1 4

இ. 4 3 1 2

ஈ, 2 4 1 3

30. பின்வரும் தொடரில் உள்ள நால்வகை சொற்களில் உரிச்சொல்லை தேர்ந்தெடு:

வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.

(அ) ஏறினர். (ஆ) வளவனும் தங்கையும் (இ) பேருந்து (ஈ) மாநகரம்

31. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:

(முழை)

(அ) சிங்கம் ———–யில் வாழும் (ஆ) பறவை ———-யின் வாழும்

(இ) யானை ————-யில் வாழும் (ஈ) எலி ———-யில் வாழும்

32. இரு பொருள் தருக.

(துய்ப்பது)

(அ) உண்பது, தூய்மை (ஆ) கற்பது, தருதல்

(இ) நுகர்வது, தூய்மை (ஈ) தூய்மை, தருதல்

33. இரு பொருள் தருக.

(நூல்)

(அ) ஆடை நெய்வது, மூதுரை அறநூல் (ஆ) பூணூல், செய்தி

(இ) அறநூல், மாலை (ஈ) ஆடை தைப்பது, நேரம்

34. அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்கள் பொருந்தக்கூடிய தொடரைக் கண்டறிக:

(பட்டு – பாட்டு)

(அ) கவலைப்பட்ட வாழ்விற்குப்ப பாட்டு அவசியம்

(ஆ) தூண்டிலில் பட்ட மீஐனப் பாட்டுப்ப பாடி இழுத்தான்

(இ) பட்டு மெத்தையில் பாட்டுக் கேட்டபடி தூங்கினாள்

(ஈ) துன்பப்பட்டு வாழும் வாழ்வில் பாட்டுக்கு என்ன வேலை?

35. குறில்-நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு தருக:

சிறு – சீறு

(அ) வறுமை – புலி (ஆ) கருமை – வலிமை

(இ) சிறுமை – பாய்தல் (ஈ) கருவி – சிறியது

36. கூற்று : பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது மங்கலம் ஆகும்

காரணம் : பொற்கொல்லர் பொன்னைப் “பறி” என்று உரைப்பர்

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி (ஆ) கூற்று சரி, காரணம் தவறு

(இ) கூற்று தவறு காரணம் சரி (ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

37. கூற்று: வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவர்கள் வட இந்தியாவில் பாலகங்காதர திலகரும், தென்னாட்டில் முத்துராமலிங்கரும் ஆவர்.

காரணம் : ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது,

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி (ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

(இ) கூற்று சரி; காரணம் தவறு (ஈ) கூற்று தவறு காhணம் சரி

38. கலைச்சொல் அறிதல்:

Paddy

(ஆ) சோளப்பயிர் (ஆ) நெற்பயிர் (இ) வாழை (ஈ) கரும்பு

39. கலைச்சொல் அறிதல்:

Poet

(அ) ஓவியர் (ஆ) எழுத்தாளர் (இ) கவிஞர் (ஈ) பாடகர்

40. அடிவகைகளில் தவறான இணை எது?

(அ) தாள்-கேழ்வரகு (ஆ) தண்டு-வாழை (இ) தூறு-புதர் (ஈ) கோல்-குத்துச்செடி

41. பூக்கையைக் குவித்து

பூவே புரிவோடு காக்க

என்று வேண்டியது

(அ) கருணையன் பூக்களுக்காக (ஆ) கருணையன் எலிசபெத்துக்காக

(இ) எலிசபெத் தமக்காக (ஈ) எலிசபெத் பூமிக்காக

42. சொல்லும் பொருளும் சரியானது எது?

(அ) பாசவர்-வெற்றிலை விற்பவர் (ஆ) ஓசுநர்-நெய்பவர்

(இ) மண்ணுள் வினைஞர்-சிற்பி (ஈ) வாசவர்-எண்ணெய் விற்பவர்

43. தொகையின் வகை எது?

“பெரிய மீசை சிரித்தார்”

(அ) வேற்றுமைத் தொகை (ஆ) உம்மைத்தொகை

(இ) அன்மொழித் தொகை (ஈ) பண்புத்தொகை

44. அருந்துணை என்பதை பிரித்தால்

(அ) அருமை + துணை (ஆ) அரு + துணை

(இ) அருமை + இணை (ஈ) அரு + இணை

45. சரியான அகர வரிசை எது?

(அ) உழவு, மண்,ஏர், மாடு (ஆ) மண், மாடு, ஏர், உழவு

(இ) உழவு, ஏர், மண், மாடு (ஈ) ஏர், உழவு, மாடு, மண்

46. வீரனைப் புகழ்ந்து பாடுவது எந்த திணை?

(அ) வெட்சித் திணை (ஆ) வஞ்சித் திணை

(இ) நொச்சித்திணை (ஈ) பாடாண் திணை

47. சரியான கூட்டுப்பெயரைத் தேர்ந்தெடு;

வேலமரம்

(அ) வேலந்தோப்பு (ஆ) வேல மரங்கள் (இ) வேலங்காடு (ஈ) வேலக்கொல்லை

48. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க:

(அ) உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக்கொண்டு பிறக்கின்றன.

(ஆ) கழுத்தை இடமாகக் கொண்டு உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் பிறக்கின்றன.

(இ) பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

(ஈ) பிறக்கினற் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு

49. பின்வருவனவற்றுள் முறையான தொடரைத் தேர்ந்தெடுக்க

(அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

(ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

(ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

50. பிழை திருத்துக:

கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.

(அ) கோவலன் சிலம்பு விற்கப் போனான் (ஆ) கோவலன் சிலம்பு விற்கப் போணாள்

(இ) கோவலன் சிலம்பு விற்கப் போனார் (ஈ) கோவலன் சிலம்பு விற்கப் போகின்றார்

51. பிழை திருத்துக:

கண்ணகி சிலம்பு அணிந்தான்

(அ) கண்ணகி சிலம்பு அணிவித்தாள் (ஆ) கண்ணகி சிலம்பு அணிந்துள்ளாள்

(இ) கண்ணகி சிலம்பு அணிந்தது (ஈ) கண்ணகி சிலம்பு அணிந்தாள்

52. சொல் – பொருள் பொருத்துக: (எதிர்ச்சொல் பொருத்துக)

(அ) எளிது 1. புரவலர்

(ஆ) ஈதல் 2. அரிது

(இ) அந்நியர் 3. ஏற்றல்

(ஈ) இரவலர் 4. உறவினர்

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 2 3 4 1

இ. 1 4 3 2

ஈ. 4 2 1 3

53. சொல் – பொருள் பொருத்துதல்:

அ. நாற்று 1. பறித்தல்

ஆ. நீர் 2. பாய்ச்சுதல்

இ. கதிர் 3. நடுதல்

ஈ. களை 4. பாய்ச்சுதல்

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 3 1 4 2

இ 4 2 1 3

ஈ. 2 3 1 4

54. ஒருமை பன்மை பிழை:

குழந்தைகள் ———- இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்

(அ) தாம் (ஆ) தம்மால் (இ) தமக்கு (ஈ) தன்னால்

55. ஒருமை பன்மை பிழை நீக்குக:

சிறுமி ———— கையில் மலர்களை வைத்திருந்தாள்.

(அ) தன் (ஆ) தாம் (இ) தனது (ஈ) தமது

கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தேர்ந்தெடு:

ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஒலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது. திருவனந்தபுரம் நடுவண் நூலகம். கோல்கத்தாவில் 1836-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது. உலகில் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.

56. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?

(அ) சரசுவதி மகால் நூலகம் (ஆ) கன்னிமாரா நூலகம்

(இ) திருவனந்தபுரம் நடுவண் நூலகம் (ஈ) தேசிய நூலகம்

57. சரசுவதி மகால் நூலகம் அமைந்துள்ள இடம் யாது?

(அ) தஞ்சாவூர் (ஆ) திருச்சி (இ) கோவை (ஈ) சென்னை

58. தேசிய நூலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆண்டு

(அ) 1836 (ஆ) 1953 (இ) 1957 (ஈ) 1837

59. உலகில் மிகப் பெரிய நூலகம் எது?

(அ) தஞ்சை சரஸ்வதி மஹால் (ஆ) கன்னிமாரா நூலகம்

(இ) லைப்ரரி ஆப் காங்கிரஸ் (ஈ) லைப்ரரி ஆப் அமெரிக்கா

60. தேசிய நூலகத்தின் சிறப்பம்சம்

(அ) ஓலைச்சுவடிகள் (ஆ) புத்தக நகல்கள் (இ) ஆவணக்காப்பகம் (ஈ) படிமங்கள்

61. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

(அ) பயன்னில்லா (ஆ) பயன்இலா (இ) பயனிலா (ஈ) பயன்இல்லா

62. “சீரிளமை” – பிரித்தெழுதுக

(அ) சீர்+இளமை (ஆ) சீர்மை+இளமை (இ) சீரி+இளமை (ஈ) சீற்+இளமை

63. வெங்கரி – பிரித்தெழுதுக:

(அ) வெம்+கரி (ஆ) வெங்+கரி (இ) வெண்+கரி (ஈ) வெம்மை+கரி

64. சேர்த்து எழுதுக:

முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

(அ) முத்துசுடர் (ஆ) முச்சுடர் (இ) முத்துடர் (ஈ) முத்துச்சுடர்

65. முதுமை + மொழி : சேர்த்து எழுதும் போது கிடைக்கும் சொல் அறிக:

(அ) முதுமொழி (ஆ) முதியமொழி (இ) முதல்மொழி (ஈ) முதுமைமொழி

66. பிரித்து எழுதுக:

உயர்வடைவோம்

(அ) உயர்+வடைவோம் (ஆ) உயர்+வடை+ஓம்

(இ) உயர்வு+அடைவோம் (ஈ) உயர்+அடைவோம்

67. பிரித்து எழுதுக:

“செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(அ) செம்மை+பயிர் (ஆ) செம்+பயிர் (இ) செமை+பயிர் (ஈ) செம்பு+பயிர்

68. எல் – எதிர்ச்சொல் தருக:

(அ) பகல் (ஆ) எல்லை (இ) தானியம் (ஈ) இரவு

69. வெற்பு – எதிர்ச்சொல் தருக:

(அ) மலை (ஆ) பள்ளம் (இ) மழை (ஈ) பட்டம்

70. பொருந்தாத இணை எது?

(அ) க்ராப்-செதுக்கி (ஆ) கர்சர்-ஏவி (இ) சர்வர்-உலவி (ஈ) ஃபோல்டர்-உறை

71. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

“குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”

(அ) கருங்காலி (ஆ) செங்காலி (இ) சந்தனம் (ஈ) அகில்

72. பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) துவைi-பவளம் (ஆ) மல்லம்-வளம் (இ) கோடு-கொம்பு (ஈ) செறு-செருக்கு

73.பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) ஏறுகோள்-எருதுகட்டி (ஆ) திருவாரூர்-கரிக்கையூர்

(இ) ஆதிச்சநல்லூர்-அரிக்கமேடு (ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

74. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) நாற்று-நடுதல் (ஆ) நீர்-பாய்ச்சுதல் (இ) கதிர்-அறுத்தல (ஈ) களை-அடித்தல்

75. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

(அ) அப்துல்கலாம் பிறந்த நாள்-ஆசிரியர் நாள்

(ஆ) விவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் நாள்

(இ) காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள்

(ஈ) ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் நாள்

76. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

(அ) திங்கள்-மாதம் (ஆ) பகலவன்-கதிரவன்

(இ) மெய்-உண்மை (ஈ) பொய்மை-மெய்ம்மை

77. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களை அறிக:

1. புதிகம் என்பது பத்துப்பாடல்களைக் கொண்டது.

2. பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது.

3. விழாக்களின் போது இசை கருவிகளை இசைப்பது வழக்கம்.

4. விழாக்கிளன் போது இசைக் கருவிககளை இசைப்பது வழக்கம்.

(அ) 1 மற்றும் 3 சரி (ஆ) 2 மற்றும் 3 சரி (இ) 1 மற்றும் 4 சரி (ஈ) 2 மற்றும் 4 சரி

78. இளமைப் பெயர்கள் கண்டு பொருத்துக:

அ. புலி 1. குட்டி

ஆ. சிங்கம் 2. கன்று

இ. ஆடு 3. குருளை

ஈ. யானை 4. பறழ்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 4 2 1

இ. 3 1 4 2

ஈ. 4 1 2 3

79. வழுவற்ற தொடரைக் காண்க:

(அ) கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதின

(ஆ) கைகள் இரண்டும் உதவவே என சான்றோர்கள் கருதின

(இ) கை இரண்டும் உதவவே எனச் சான்றோர் கருதினர்

(ஈ) கைகள் இரண்டும் உதவவே எனச் சான்றோர்கள் கருதினர்

80. வழுவுச் சொல்லற்ற தொடரை அறிக:

(அ) சிற்பி சிலையைச் செய்தான் (ஆ) சிற்பி சிலையைச் செதுக்கினான்.

(இ) சிற்பி சிலையை வனைந்தாள் (ஈ) சிற்பி சிலையை வார்த்தான்

81. வல்லினம் மிகா இடத்தைக் காண்க:

(அ) குடி தண்ணீர் (ஆ) கனா கண்டேன் (இ) தனி சிறப்பு (ஈ) பூ பந்தல்

82. Crying Child will get milk:

இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக:

(அ) பாலைப் பார்த்தால் குழந்தை அழும் (ஆ) அழுத பிள்ளை பால் குடிக்கும்

(அ) அழுதால் குழந்தைக்குப் பால் கிடைக்கும் (ஈ) அழுத பிள்ளை பால் பால் குடிக்காது

83. சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக:

(அ) கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுகிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளது தமிழ்

(ஆ) கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை தானே நிலை நிறுத்திக்கொண்டுள்ளதுத் தமிழ்

(இ) கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளதுத் தமிழ்

(ஈ) கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்

84. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக:

(அ) Wealth-கடமை (ஆ) Courtesy-நற்பண்பு

(இ) Poverty-பொதுவுடைமை (ஈ) Ambition-அயலவர்

85. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக:

(அ) Herostone-புடைப்பியல் (ஆ) Epigraphy-பண்பாட்டியல்

(இ) Excavation-அகழாய்வு (ஈ) Inscription-கல்வெட்டு

86. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக:

திணை – தினை

(அ) உயர்திணை-ஊர் (ஆ) ஒழுக்கம்-தானியம்

(இ) திண்ணுதல்-வாக்கியம் (ஈ) திண்ணை-துணிவு

87. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக:

அலை – அழை

(அ) வரவழைத்தல், கடலலை (ஆ) கடலலை, வரவழைத்தல்

(இ) அலைதல், வரவழைத்தல் (ஈ) அலைத்தல், வரவழைத்தல்

88. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

சரியான இணையைத் தேர்ந்தெடு:

(அ) நாவாய், வங்கம் (ஆ) ஆழி,சுழி (இ) அழி,ஆழி (ஈ) கப்பல்,பேருந்து

89. ஆழி,முந்நீர்,பௌவம் ஆகிய சொற்கள் கீழ்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது?

(அ) சக்கரம் (ஆ) மூன்று (இ) கடல் (ஈ) வெந்நீர்

90. “படி” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக:

(அ) படித்தான் (ஆ) பாடினான் (இ) கற்றான் (ஈ) கற்பனை

91. “பாடினாள்” – வேர்ச்சொல்லைத் தருக:

(அ) பா (ஆ) வா (இ) பாடு (ஈ) ஆடு

92. “ஆடு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் வடிவம் தருக:

(அ) ஆடுதல் (ஆ) ஆடி (இ) ஆடியவன் (ஈ) ஆடினான்

93. “ஆடு” என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினைஎச்சத்தை உருவாக்குக:

(அ) ஆடி (ஆ) ஆடுதல் (இ) ஆடிய (ஈ) ஆடினான்

94. அகரவரிசைப்படி சொற்களை சீர்; செய்க:

(அ) கிண்ணம்,காட்சி,கீரி,கல்வி,கேள்வி (ஆ) கீரி,கிண்ணம்,காட்சி,கல்வி,கேள்வி

(இ) கல்வி, காட்சி,கிண்ணம்,கீரி,கேள்வி (ஈ) காட்சி,கிண்ணம்,கீரி,கல்வி,கேள்வி

95. அகரவரிசைப்படி சொற்களை சீர்; செய்க:

(அ) சூடு,செடி,சுடு,சோழன்,சேரன் (ஆ) சுடு,சூடு,செடி,சேரன்,சோழன்

(இ) செடி,சுடு,சேரன்,சோழன்,சூடு (ஈ) சோழன்,சேரன்,சுடு,சூடு,செடி

96. அகரவரிசையில் எழுதுக:

(அ) முதல்,மீமிசை,மிசை,மலை,மாலை (ஆ) மிசை,மீமிசை,மலை,மாலை,முதல்

(இ) மலை,மாலை,மிசை,மீமிசை,முதல் (ஈ) மலை,மாலை,முதல்,மிசை,மீமிசை

97. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து:

(அ) பாட்டி,பணம்,பேட்டை,போ,பெட்டி (ஆ) பணம்,பாட்டி,பெட்டி,பேட்டை,போ

(இ) பெட்டி,பணம்,பேட்டை,போ,பாட்டி (ஈ) போ,பாட்டி,பெட்டி,பணம்,பேட்டை

98. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து:

(அ) வேற்றுமை,வீடு,வாரம்,விசிறி,வலிமை

(ஆ) வீடு,வாரம்,வேற்றுமை,விசிறி,வலிமை

(இ) வாரம்,வேற்றுமை,விசிறி,வீடு,வலிமை

(ஈ) வலிமை,வாரம்,விசிறி,வீடு,வேற்றுமை

99. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து:

(அ) நான்கு,நன்மை,நெருப்பு,நீட்சி,நிலம் (ஆ) நிலம்,நெருப்பு,நான்கு,நீட்சி,நன்மை

(இ) நன்மை,நான்கு,நிலம்,நீட்சி,நெருப்பு (ஈ) நெருப்பு,நிலம்,நன்மை,நீட்சி,நான்கு

100. அகரவரிசையில் எழுதுக:

(அ) பள்ளம்,பாலை,பிணி,பீடு,புணை (ஆ) பாலை,பள்ளம்,பீடு,புணை,பிணி

(இ) பிணி,பள்ளம்,பீடு,புணை,பாலை (ஈ) பீடு,பாலை,பள்ளம்,புணை,பிணி

101. கல்கத்தாவில் உள்ள இந்துக் கல்லூரியை நிறுவியவர்

(அ) வாரன் ஹேஸ்டிங்ஸ் (ஆ) மார்ஷ்மென் (இ) மெக்காலே (ஈ) டேவிட் ஹேர்

102. இந்தியா இறையாண்மை கொண்ட நாடாக உருவானது

(அ) 4 செப்டம்பர் 1947 (ஆ) 27 ஜீன் 1947 (இ) 15 ஆகஸ்ட் 1947 (ஈ) 15 மார்ச் 1947

103. சி.ராஜகோபாலாச்சாரி 1930 ஏப்ரல் 13 அன்று உப்பு சட்டத்தை மீறுவதற்காக 98 சத்தியாகிரகிகளின் 150 மைல் அணி வகுப்பை ———— முதல் வேதாரண்யம் வரை நடத்தினார்

(அ) மதுரை (ஆ) திருச்சி (இ) தஞ்சை (ஈ) மெட்ராஸ்

104. அண்ணாதுரை செயல்படுத்த ஆர்வமாக இருந்த முதல் யோசனை, ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ ——— வழங்குவது

(அ) அரிசி (ஆ) சர்க்கரை (இ) கோதுமை (ஈ) பருப்பு

105. ——– ஆண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களின் தார்மீக மற்றும் பொருள் முன்னேற்றத்திற்காக பம்பாயில் “பஹிஷ்கிருத் ஹித்கரனி சபா” என்ற அமைப்பைத் தொடங்கினார்

(அ) 1891 (ஆ) 1924 (இ) 1955 (ஈ) 1923

106. ஆர்யா மகிளா சபாவை ஸ்தாபிப்பதில் அதிக உதவி செய்த திறமையான மராட்டிய பெண்.

(அ) பண்டிட் ரமாபாய் (ஆ) முத்துலெட்சுமி ரெட்டி (இ) அம்புஜாம்மாள் (ஈ) லட்சுமி

107. பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி/நிகழ்வு வகையின்படி ஒழுங்கமைக்கவும்.

(அ) தானாபூரில் கிளர்ச்சி

(ஆ) மீரட்டில் கிளர்ச்சி

(இ) ஜான்சியின் ராணி லட்சுமிபாய் மரணம்

(ஈ) மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார்

(அ) 2,3,1,4 (ஆ) 1,2,4,3 (இ) 4,2,1,3 (ஈ) 3,1,4,2

108. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்ற போது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் பெயரை குறிப்பிடுக:

(அ) அண்ணாதுரை (ஆ) காமராஜர் (இ) கருணாநிதி (ஈ) ஜெயலலிதா

109. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”

என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற தீர்ப்பு எது?

(அ) அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு (ஆ) ஆஷ் கொலை வழக்கு

(இ) அஸ்வினி குமார் வழக்கு (ஈ) குத்திராம் போஸ் வழக்கு

110. கீழ்கண்டவற்றில் அயோத்திதாசர் பண்டிதர் பற்றி சரியான கூற்று எது?

1. இவர் 1870ல் அத்வைத்னந்தா என்ற சபையை நீலகிரியில் ஆரம்பித்தார்.

2.1881ல் திராவிட மகாஜன சங்கத்தை ஆரம்பித்தார்.

3.1897ல் ஒரு பைசா தமிழன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்.

4. 1898ல் சாக்கிய புத்தக சங்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தார்

(அ) 1,2 மட்டும் சரி (ஆ) 2,3 மட்டும் சரி (இ) 3,4 மட்டும் சரி (ஈ) 1,2,3,4 சரியானது

111. எந்த ஆளுநர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் “கண்ட பேரரசர்” என்று அழைக்கப்பட்டார்?

(அ) கர்சன் (ஆ) டியூப்ளே (இ) ராபர்ட் கிளைவ் (ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்

112. இயற்கைப் பொருள்கள் இயங்கிக் கொண்டிருப்பது போலவே மனித வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறும் வாதம்.

(அ) வரலாற்றுப் பொருள் முதல் வாதம் (ஆ) பொதுவுடைமை

(இ) மிதவாதம் (ஈ) பொருளாதாரப் பொருள் முதல் வாதம்

113. “தாளாண்மை இல்லாதவன்” என்று திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?

(அ) ஊக்கம் இல்லாதவன் (ஆ) தர்மம் செய்யாதவன்

(இ) விடாமுயற்சி இல்லாதவன் (ஈ) கோபம் கொள்ளதவன்

114. பசுவய்யா என்ற பெயர் கொண்ட நான்கு இலக்கியப் படைப்பாளிகளில் யார்?

(அ) சுந்தர ராமசாமி (ஆ) தர்மர் (இ) ஜெயகாந்தன் (ஈ) பொன்னீலன்

115. தமிழ் நாடகத்தின் தலையாசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்?

(அ) சங்கரதாஸ் சுவாமிகள் (ஆ) பம்மல் சம்பந்தர்

(இ) டி.கே.சிதம்பரனார் (ஈ) வ.வே.சுப்பிரமணியம்

116. ‘Houangtche” குறிக்கும் இடம்

(அ) காஞ்சி (ஆ) மைசூர் (இ) பாண்டியர்கள் (ஈ) புகார்

117. காசிக் காண்டம் என்னும் நூலை இயற்றியவர்?

(அ) இரட்டையர்கள் (ஆ) செயங்கொண்டார்

(இ) குமரகுருபரர் (ஈ) அதிவீரராம பாண்டியர்

118. பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும் பரிந்து அவ்வேட்டைத்

தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் வாய் மணக்கும்

– எது?

(அ) திருவாசகம் (ஆ) படிக்காசுப் புலவரின் பாடல் ஏடு

(இ) திருப்புகழ் (ஈ) தமிழ்ச்சுவடி

119. “சங்கப் பாடல்களைத் தரத்தில் மிஞ்சியவை உலக இலக்கியத்தில் இல்லை என்று கூறிய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்க கழகப் பேராசிரியர்

(அ) ஹார்ட் (ஆ) ஆர்.ஈ.ஆஷர் (இ) தீக்கன் (ஈ) இராபர்ட் கால்டுவெல்

120. “ஓங்குதிரை வியன் பரப்பின்

ஒலிமுந்நீர் வரம்பாக்……”

– என்ற அடியில் காணப்படும் “முந்நீர்” என்பதன் பொருள்

(அ) ஆற்றுநீர், ஊற்று நீர், மழைநீர் (ஆ) ஓடை நீர், குடி நீர், மழைநீர்

(இ) குளிர்ந்த நீர், ஊற்றுநீர், ஆற்றுநீர்; (ஈ) தண்ணீர், வெந்நீர், மழைநீர்

121. 1.இந்த இடம் தாமிரபரணி ஆற்றிங் கரையில் அமைந்துள்ளது.

2. தூழிகள் புதைக்கப்பட்ட களம் 114 ஏக்கர் பரப்பளவில் பரவி காணப்படுகிறது.

மேற்கூறிய கூற்றுக்கள் எந்த தொல்பொருள் தளத்தைப் பற்றி விவரிக்கிறது?

(அ) ஆதிச்சநல்லூர் (ஆ) அரிக்கமேடு (இ) கீழவளவு (ஈ) கழுகுமலை

122. “களவழி நாற்பது” எந்த அரசரை புகழ்ந்துரைக்கிறது?

(அ) அதிகமான் (ஆ) முதலாம் குலோத்துங்கன் (இ) நெடுங்கிள்ளி (ஈ) செங்கணான்

123. தமிழ்நாடு மாநிலமானது எத்தனை வேளாண்-கால நிலைகளை கொண்ட துணை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

(அ) 11 (ஆ) 7 (இ) 9 (ஈ) 3

124. எந்த நகரம் ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது?

(அ) சென்னை (ஆ) மதுரை (இ) பெங்களுரு (ஈ) மைசூர்

125. தமிழ்நாட்டில் உழவன் செயலி அறிமுகப்படுத்திய ஆண்டு

(அ) 2018 (ஆ) 2019 (இ) 2020 (ஈ) 2021

126. திறன் மேம்பாட்டு கல்வி திட்டம் – இதை எந்த நிறுவனம் கையாள்கிறது?

(அ) என்.சி.இ.ஆர்.டி (ஆ) யூ.ஜி.சி (இ) என்.ஏ.ஏ.சி (ஈ) என்.யூ.இ.பி.எ

127. கிராமப்புற மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் யாரால் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது?

(அ) இந்திய தேர்தல் ஆணையம் (ஆ) மாநில தேர்தல் ஆணையம்

(இ) மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி (ஈ) திரும்பும் அதிகாரி

128. 2011 கணக்கெடுப்பு கூற்றின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை நெருக்கம் ——— இருந்தது

(அ) 333 நபர் ஒரு சதுர கிலோமீட்டர் (ஆ) 444 நபர் ஒரு சதுர கிலோமீட்டர்

(இ) 555 நபர் ஒரு சதுர கிலோமீட்டர் (ஈ) 666 நபர் ஒரு சதுர கிலோமீட்டர்

129. 2011ல் தமிழ்நாட்டில் மொத்த எழுத்தறிவு விகிதாச்சாரம் ———- இருந்தது

(அ) 60.33% (ஆ) 70.33% (இ) 80.33% (ஈ) 90.33%

130. தமிழ்நாட்டில், முதலமைச்சர் சூரிய சக்தி பசுமை வீடு திட்டம் ———- ஆண்டு தொடங்கப்பட்டது

(அ) 2010 (ஆ) 2011 (இ) 2012 (ஈ) 2013

131. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு

(அ) 1968 (ஆ) 1970 (இ) 1971 (ஈ) 1980

132.தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவின் ———- மிகப் பெரிய மற்றும் ———– அதிக மக்கள் கொண்ட மாநிலமாகும்.

(அ) 12வது மற்றும் 7வது (ஆ) 13வது மற்றும் 15வது

(இ) 11வது மற்றும் 6வது (ஈ) 10வது மற்றும் 4வது

133. மாலாவிடம் 10 செ.மீ., 11 செ.மீ., 12 செ.மீ……, 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?

(அ) 4615 செ.மீ2 (ஆ) 4625 செ.மீ2 (இ) 4635 செ.மீ2 (ஈ) 4600 செ.மீ2

134. இரண்டு தொடர் தள்படிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம்

(இ) 40% (ஆ) 45% (இ) 5% (ஈ) 22.5%

135. ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்?

(அ) 16 1/3% (ஆ) 41 2/3% (இ) 12 2/5 % (ஈ) 10 2/5%

136. ஒரு கலையரங்கத்தில் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன எனில் கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் உள்ளன?

(அ) 600 (ஆ) 600 (இ) 78 (ஈ) 18

137. 9,3,1,… என்ற பெருக்குத் தொடர் வரிசையின் 8வது உறுப்பைக் காண்க.

(அ) 1/27 (ஆ) 1/81 (இ) 1/243 (ஈ) 1/729

138. A என்பது +, B என்பது -, C என்பது x மற்றும் D என்பது ÷ எனில், ன்2C15B7A100D10 மதிப்பு என்ன?

(அ) 24 (ஆ) 26 (இ) 33 (ஈ) 36

139. EXAMINATION என்ற வார்த்தை FYBNJOBUJPO என்ற குறியீட்டால் குறிக்கப்பட்டால் CERTIFICATE என்ற வார்த்தை எவ்வாறு குறிப்பிடப்படும்?

(அ) DFSUJHJDBUF (ஆ) DFSUJGJDBUF (இ) DFSJUGJDBUF (ஈ) DFSUJGIDBUF

140. ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

(அ) 1/2 (ஆ) 1/3 (இ) 5/6 (ஈ) 2/3

141. நாளைய மழை பொழிவிற்கான, நிகழ்தகவு 0.91 எனில் மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

(அ) 0.09 (ஆ) 1.09 (இ) 0.09 (ஈ) 1.90

142. A என்பவர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B என்பவர் அதே வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார் எனில் Aயும் Bயும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(அ) 18 (ஆ) 17 1/7 (இ) 20 (ஈ) 16 1/6

143. A ஆனவர் Bஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க

(அ) 8 நாட்கள் (ஆ) 9 நாட்கள் (இ) 16 நாட்கள் (ஈ) 7 நாட்கள்

144. ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்?

(அ) 6 மடங்கு (ஆ) 18 மடங்கு (இ) 12 மடங்கு (ஈ) மாற்றமில்லை

145. ஒரு விட்டமும், உயரமும், உடைய உருளை, கூம்பு, கோளம் ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம்

(அ) 1 : 2 : 3 (ஆ) 2 : 1 : 3 (இ) 1 : 3 : 2 (ஈ) 3 : 1 : 2

146. P = ரூ.5,000 ஆண்டு வட்டி வீதம் R = 4%, N = 2 ஆண்டுகள் எனில், தனிவட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க:

(அ) ரூ.8 (ஆ) ரூ.16 (இ) ரூ.24 (ஈ) ரூ.32

147. ஓர் இயந்திரத்தின் விலை ரூ.18,000. அது ஆண்டுக்கு 16 2/3% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு ———— ஆக இருக்கும்.

(அ) ரூ.12,000 (ஆ) ரூ.12,500 (இ) ரூ.15,000 (ஈ) ரூ.16,500

148. ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ரூ.17,000 ஆகக் கிடைக்கிறது எனில் இந்தத் தொகையைக் காண்க

(அ) ரூ.612 (ஆ) ரூ.12,500 (இ) ரூ.4500 (ஈ) ரூ.10,620

149. ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளவு 50 லி ஆகும். தற்போது 30% தண்ணீர் நிரம்பியுள்ளது. எனில் அதில் 50% தண்ணீர் நிறைய இனனும் எத்தனை லிட்டர்கள் தேவை?

(அ) 15 லி (ஆ) 40 லி (இ) 10 லி (ஈ) 25 லி

150. x : y = 2 : 3, எனில் 3x + 2y : 2x + 5y.ன் மதிப்பு காண்க:

(அ) 5 : 2 (ஆ) 12 : 19 (இ) 10 : 13 (ஈ) 3 : 2

151. y ஆனது x +3 க்கு நேர்விகிதத்தில் அமைகிறது. மேலும் x = 1, y = 8, x = 3 எனில், எனில், y ன் மதிப்பு என்ன?

(அ) 3 (ஆ) 5 (இ) 10 (ஈ) 12

152. (x4-1) and (x2-2x+1) ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.சி.ம.காண்க:

(அ) (x+1) 2 (x2+1) (x-1) (ஆ) (x2-1) (x-1)2 (x-1) (இ) (x2 +1) (x-1) 2 (x+1) (ஈ) (x2+1) (x2-1) (x-1) 2

153. இரு எண்களின் பெருக்கல் பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 12 எனில் அவற்றின் மீ.பொ.ம. காண்க:

(அ) 210 (ஆ) 180 (இ) 150 (ஈ) 120

154.(-16) ÷ 4 க்கு சமமானது எது?

(அ) -(-16) ÷ 4 (ஆ) (-16) ÷ (-4) (இ) 16 ÷ (-4) (ஈ) (-4) ÷ (-16)

155. மீ.பொ.வ.காண்க:

x4-1, x4+5x3 -5x2 + 5x-6

(அ) (x4+1) (x-1) (ஆ) (x2+1) (x-6) (இ) (x4+1) (x+6) (ஈ) x4-1

156. ஓர் எண்ணில் 60% இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண்

(அ) 60 (ஆ) 100 (இ) 150 (ஈ) 200

157.ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவரது வருமானம்

(அ) 2% குறைகிறது (ஆ) 1% குறைகிறது (இ) 1% அதிகரிக்கிறது (ஈ) 2% அதிகரிக்கிறது

158. அணுவின் மின்னூட்டமானது ———— ஆகும்

(அ) நேர்மின்னூட்டம் (ஆ) மின்னூட்டமற்றது

(இ) எதிர் மின்னூட்டம் கொண்டது (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

159. மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றுவது ———— ஆகும்

(அ) டைனமோ (ஆ) மின்திருத்தி (இ) மின்மாற்றி (ஈ) மோட்டார்

160. சூறைக் காற்றில் கூரை தூக்கி எறியப்படுதல் கீழு;கண்ட எவற்றின் பயன்பாடு?

(அ) பாஸ்கல் விதி (ஆ) டாரிசெல்லா விதி (இ) பெர்னௌலியின் தேற்றம் (ஈ) ஹீக் விதி

161. ஒரு கிரிக்கெட் வீரர் தன் மட்டையால் பந்தை அடிக்கும் போது, மட்டை பந்தின் மீது செலுத்துவது —– ஆகும்

(அ) புவிஈர்;ப்பு விசை (ஆ) உராய்வு விசை

(இ) கணத்தாக்கு விசை (ஈ) மையவிலகல் விசை

162. ஒரு ஆசிரியர் சில இனிமையான தூண்டுதலின் உதவியுடன் ஒரு சிக்கலான யோசனையை கற்பிக்க முயற்சிக்கிறார். மற்றும் பல்வேறு சூழ்நிலைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்திய பிறகு மாணவர்கள் கற்றல் முறையை விரும்புகிறார்கள். இந்த முறைக்கு அடிப்படையான கோட்பாடு

(அ) முயன்று தவறிக் கற்றல் முறை (ஆ) பகுத்தறிந்து கற்றல் முறை

(இ) புலனுணர்வு கற்றல் முறை (ஈ) புலனுணர்வு கற்றல் முறை

163. தமிழ்நாட்டில் அமைந்து இருக்கும் அணு ஆற்றல் ஆராய்ச்சி மையத்தின் பெயர் ———— ஆகும்?

(அ) இஸ்ரோ (ஆ) ஐஜிகர் (இ) கேட் (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

164. பின்வருவனவற்றுள் எது அறிவியல் பகுத்தறிவு அல்ல?

(அ) மெய்சிந்தனை (ஆ) மறைமுக செயல் (இ) வெளிப்படை செயல் (ஈ) சிக்கல் தீர்த்தல்

165. எண்ணெய், இயற்கை வாயு, நிலக்கரி முதலியன ————- உதாரணமாகும்

(அ) புவி வெப்ப சக்தி (ஆ) உயிர் எரிபொருள்

(இ) படிம எரிபொருள் (ஈ) புதுப்பிக்கவல்ல சக்தி

166. ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் அமைந்துள்ள இடம்

(அ) புது டெல்லி (ஆ) தமிழ்நாடு (இ) கேரளா (ஈ) மத்திய பிரதேசம்

167. ஐ.நா.சபையின் ஆசியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது பெற்ற முதல் இந்தியர்

(அ) சஷ்மித்தா லேந்கா (ஆ) சதாமூர்த்தி

(இ) பிரிந்தா காரட் (ஈ) உமா பாரதி

168. வளர்ச்சி திட்டங்களுக்காக கூட்டாட்சியினை மறுவரையறை செய்வதில் மாநிலங்களுக்கிடையே நிதி ஆயோக் மேற்கொள்ளும் வழிமுறையானது

(அ) போட்டி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி முறை (ஆ) கூட்டுறவு கூட்டாட்சி முறை

(இ) ஒற்றை மற்றும் குறை கூட்டாட்சி முறை (ஈ) ஒத்து-தேர்வு கூட்டாட்சி முறை

169. அல்தாப் பாத்திமாவின் இண்டாவது புதினம் “தஸ்தக் நவ தோ” (1964) (The one who did not ask) எந்த மொழியில் எந்த வருடம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

(அ) ஆங்கிலம், 1994 (ஆ) மலையாளம், 1994 (இ) ஹிந்தி, 1994 (ஈ) உருது, 1994

170. 2020ல் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னங்கள் என்று அறிவிக்கப்பட்ட எத்தனை இடங்கள் இந்தியாவில் உள்ளன?

(அ) 38 (ஆ) 33 (இ) 30 (ஈ) 35

171. 2019ஆம் ஆண்டு 50வது தாதசாகிப்பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்

(அ) நடிகர் ரஜினிகாந்த (ஆ) நடிகர் அமிதாப்பச்சன்

(இ) நடிகர் அமீர்கான் (ஈ) நடிகர் அபிஷேக் பச்சன்

172. “வந்தே மாதரம்” என்ற பாடலை சமஸ்கிருதத்தில் இயற்றியவர்

(அ) ரபிந்திரநாத் தாகூர் (ஆ) சரோஜினி நாயுடு

(இ) பகிம்சந்திர சட்டர்ஜி (ஈ) பண்டிட் ரவி சங்கர்

173. 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள் எத்தனை?

(அ) 167 (ஆ) 177 (இ) 187 (ஈ) 197

174. இந்தியாவில் எந்த ஆண்டு விரைவு அஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது?

(அ) 1975 (ஆ) 1977 (இ) 1971 (ஈ) 1976

175.கூற்று (A) : கரிசல் மண் அவற்றின் மூலப்பொருட்களை வானிலைச் சிதைவுற்ற பாறைகளிலிருந்து பெறுகிறது.

காரணம் (R): கரிசல் மண்ணிற்கு அதிக நீரை தக்க வைக்கும் திறன் உள்ளது.

(அ) (A) மற்றும் (R) சரியானவை மற்றும் (R) என்பது (A) இன் உண்மையான விளக்கம்

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R), (A) யை விளக்கவில்லை

(இ) (A) மட்டுமே சரியானது (R) தவறானது

(ஈ) (A) மட்டுமே தவறானது ஆனால் (R) சரியானது

176. கர்மநாசா நதிநீர் சர்ச்சை எந்த மாநிலங்களுக்கு இடையில் உள்ளது.

(அ) பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் (ஆ) ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா

(இ) பீகார் மற்றும் உத்திரபிரதேசம் (ஈ) அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்

177. இந்தியாவில் நீண்ட மழைக்கால பருவத்தை கொண்டிருக்கும் மாநிலமானது

(அ) தமிழ்நாடு (ஆ) கேரளம் (இ) கர்நாடகம் (ஈ) குஜராத்

178. அச்சுநாயர் காலத்தில் விஜயநகர பேரரசு எத்தனை ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

(அ) 15 ராஜ்ஜியங்கள் (ஆ) 16 ராஜ்ஜியங்கள் (இ) 17 ராஜ்ஜியங்கள் (ஈ) 18 ராஜ்ஜியங்கள்

179. பானிபட் போரில் பாபரின் இராணுவத்தில் இருந்து தலைசிறந்த துப்பாக்கி வீரர்

(அ) உஸ்தாத் அலி (ஆ) ஜாஃபர்கான் (இ) ஹீமாயூன் (ஈ) ஹிண்டால்

180. சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட “லால் கிலா” எனப்படும் கோட்டைகை; கட்டியவர்

(அ) ஜஹாங்கீர் (ஆ) ஷாஜஹான் (இ) அக்பர் (ஈ) அவுரங்கசீப்

181. அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியானது 1906ம் ஆண்டு எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?

(அ) அலிகார் (ஆ) டாக்கா (இ) லக்னோ (ஈ) லாகூர்

182. விஜய நகரம் எந்த பெயரில் அழைக்கப்பட்டது.

1.பீஜநகர்.

2.விருபாட்ஷபுரம்.

3.ஹோஸ்பட்டணம்.

4. வித்யாநகரம்

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 2,3 மட்டும் (ஈ) 1,2,3,4

183. (A): அக்பர் சாரதா சட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்

(B) : இவர் ஆரணிக்கு குறைந்தது 18 வயதும் பெண்ணிற்கு 14 வயதுமாக தீர்மானித்து குழந்தை திருமணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.

(அ) (A) சரி ஆனால் (B) தவறு (ஆ) (A) மற்றும் (B) சரி

(இ) (A) தவறு மற்றும் (B) சரி (ஈ) (A) மற்றும் (B) தவறு

184. கீழ்வருபவற்றுள் அரசரின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை முன்வைத்த முதல் அரசர் யார்?

(அ) அலாவுதீன் கில்ஜி (ஆ) பால்பன் (இ) இல்ட்டுமிஷ் (ஈ) இரஷியா

185. ஹரப்பன் மக்களால் பயிரிடப்படாத பயிர் எது?

(அ) பார்லி (ஆ) கோதுமை (இ) பஞ்சு (ஈ) கரும்பு

186. மக்களின் குறை தீர்ப்புக்காக உருவாக்கப்பட்ட பழமையான முறை

(அ) ஓம்பட்ஸ்மன் அமைப்பு (ஆ) லோக்பால்

(இ) லோக் ஆயுக்தா (ஈ) மேற்கண்ட எவையும் இல்லை

187. கீழ்காணப்படும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளில், உச்ச நீதிமன்றத்தை குறிப்பவை யாவை?

(அ) விதி 36 முதல் 51 வரை (ஆ) விதி 79 முதல் 123 வரை

(இ) விதி 124 முதல் 147 வரை (ஈ) விதி 12 முதல் 35 வரை

188. தடுப்புக்காவலர் சட்டத்தின்படி மூன்று மாத காலத்திற்கு பிறகு செயல்படுத்த அனுமதிப்பவர் யார்?

(அ) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (ஆ) இந்திய தலைமை வழக்குரைஞர்

(இ) தலைமை வழக்கறிஞர் (ஈ) ஆலோசனைக்குழு

189. சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வினை முடிவுக்கு கொண்டு வருதல் ———– ஆகும்.

(அ) கலைப்பு (ஆ) ஒத்திவைப்பு (இ) முடிவுக்கு கொண்டு வருதல் (ஈ) அழைப்பு

190. கீழ்கண்டவற்றுள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முறைமைசாரா சாதனம் (கருவி) எது?

(அ) அரைமணி நேர விவாதம் (ஆ) பூஜ்ஜிய நேரம்

(இ) குறுகிய கால விவாதம் (ஈ) கேள்வி நேரம்

191. கீழ்கண்டவற்றுள் தவறானது எது?

(அ) அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்பின் நான்காம் பாகத்தில் உள்ளது.

(ஆ) 42வது சட்ட திருத்த்தின்படி அடிப்படைக் கடமை இந்திய அரசியலமைப்புடன் இணைக்கப்பட்டது.

(இ) 2002ஆம் ஆண்டு, 82வது சட்ட திருத்தத்தின் படி மேலும் ஒரு அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்டுள்ளது.

(ஈ) பொது பிரதிநிதித்துவச் சட்டம் 1951ல் அமல்படுத்தப்பட்டது.

192. அடிப்படை உரிமைகள் பற்றிய சரியான கூற்று

1. நீதிமன்றம் மூலமாக நடைமுறைப்படுத்தக் கூடியது.

2. இந்த உரிமைகள் முழுமையானது.

3.தேசிய அளவிலான அவசர நிலையின் போது விதி 20 மற்றும் 21ன் கீழ் உள்ளவைத் தவிர மற்ற அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்.

4. இவை இந்திய குடிமக்களுக்கு மட்டும் கிடைக்கப் பெறக் கூடியதாகும்.

(அ) 1,2மற்றும் 3 (ஆ) 1 மற்றும் 3 (இ) 1 மட்டும் (ஈ) 1,3 மற்றும் 4

193. தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் அரசியலமைப்பு விதி எது?

(அ) விதி 20 (ஆ) விதி 19 (இ) விதி 18 (ஈ) விதி 17

194. இந்திய ரிசர்வ் வங்கியின் பணம் சாராத பணிகள் யாவை?

(அ) வங்கிகளின் கடனை கட்டுப்படுத்துதல்.

(ஆ) அந்திய செலாவணி மாற்றத்தை கட்டுப்படுத்துதல்

(இ) வணிக வங்கிகளுக்கு உரிமம் அளித்தல்

(ஈ) வைப்பு காப்பீட்டு திட்டம்

(அ) அ மற்றும் ஆ (ஆ) ஆ மற்றும் இ (இ) இ மற்றும் ஈ (ஈ) அ மற்றும் ஈ

195. பல பரிமாண வறுமைக் குறியீட்டை உருவாக்கியது

(அ) Oxford மனித மேம்பாட்டு முயற்சி (HDI) (ஆ) UNO மனித மேம்பாட்டு முயற்சி (DHI)

(இ) UNDP (ஈ) Morris D Morris

196. ஜமீன்தாரி முறையை தொடங்கியவர் யார்?

(அ) ஜான் ஷோர் (ஆ) கார்வாலிஸ் பிரபு

(இ) மின்டோ பிரபு (ஈ) வில்லியம் பென்டிக்

197. விவாட் சே விஸ்வாஸ் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

(அ) நேரடி வரி (ஆ) மறைமுக வரி (இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ) (ஈ) இரண்டுமில்லை

198. இந்திய ரிசர்வ் வங்கி அரசுடைமையாக்கப்பட்ட நாள்

(அ) ஜனவரி 1, 1949 (ஆ) ஜனவரி 1, 1950 (இ) ஏப்ரல் 1,1949 (ஈ) ஏப்ரல் 1,1950

199. NITI ஆயோக் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் சரியானதைத் தேர்ந்தெடு:

1. NITI ஆயோக்கின் நோக்கம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது மற்றும் நாட்டில் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்துவது.

2. இந்திய பிரதமர் NITI ஆயோக்கின் அதிகார பூர்வ தலைவராக உள்ளார்

3. NITI ஆயோக்கில் 8 முழுநேர உறுப்பினர்கள் உள்ளனர்.

(அ) 2 மற்றும் 3 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மட்டும் (ஈ) 1 மற்றும் 2 மட்டும்

200. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு ————- இருக்கிறது

(அ) 7.8% விழுக்காடு (ஆ) 7% விழுக்காடு (இ) 8% விழுக்காடு (ஈ) 8.5% விழுக்காடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!