Tnpsc Current Affairs in Tamil & English – 9th September 2024
1. அண்மையில், ‘5ஆவது இந்தியா-மாலத்தீவு பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை’ நடைபெற்ற இடம் எது?
அ. பெங்களூரு
ஆ. புது தில்லி
இ. சென்னை
ஈ. கொல்கத்தா
- இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான 5ஆவது பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை 2024 செப்.06 அன்று புது தில்லியில் நடைபெற்றது. விவாதங்களில் இருதரப்பு ராணுவப்பயிற்சிகள் அடங்கும்; இப்பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்குப் பிறகான முதலாம் பாதுகாப்பு பேச்சுவார்த்தையைக் குறிக்கிறது. முன்னர், மாலத்தீவு குடியரசுத்தலைவர் தனது, “இந்தியா ஔட்” என்ற பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றி, சீனாவுக்கு ஆதரவான கொள்கைகளில் சாய்ந்தார். இந்திய வெளியுறவு அமைச்சரின் மாலத்தீவு விஜயம் மற்றும் மாலத்தீவு குடியரசுத்தலைவர் இந்தியப்பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது.
2. அண்மையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், இந்தியா முழுவதும் எத்தனை புதிய NIDHI i-TBIகளை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்?
அ. 7
ஆ. 8
இ. 9
ஈ. 10
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் 8 புதிய NIDHI i-TBIகள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சியின் (DST-NIDHI) இணையதளத்தை IIT தில்லியில் தொடங்கி வைத்தார்; இது DST-NIDHIஇன் எட்டு ஆண்டுகளைக் குறிக்கிறது. புதுமைகளை ஆதரிப்பதன்மூலமும் அளவிடுவதன்மூலமும் புத்தொழில் நிறுவல்களை வளர்ப்பதற்காக 2016ஆம் ஆண்டில் National Initiative for Developing and Harnessing Innovations (NIDHI) தொடங்கப்பட்டது. NIDHI என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், நிதி அமைப்புகள் மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கியது. இது தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியத்தால் (NSTEDB) நிதியளிக்கப்படுகிறது.
3. ஒவ்வோர் ஆண்டும், “பன்னாட்டு எழுத்தறிவு நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 6 செப்டம்பர்
ஆ. 7 செப்டம்பர்
இ. 8 செப்டம்பர்
ஈ. 9 செப்டம்பர்
- பன்னாட்டு எழுத்தறிவு நாளானது 1967ஆம் ஆண்டு முதல் செப்.08ஆம் தேதி உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் நீதிமுறையிலான, அமைதியான மற்றும் நிலையான சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சியில் எழுத்தறிவின் பங்குபற்றி கொள்கை வகுப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டலாக இந்நாள் செயல்படுகிறது. மனிதனின் அடிப்படை உரிமையாக எழுத்தறிவுக்கான உலகளாவிய அர்ப்பணிப்பை இந்த அனுசரிப்பு வலியுறுத்துகிறது.
4. அண்மையில், இந்தியாவின் முதல் சிலிக்கான் கார்பைடு உற்பத்தி நிலையத்தைத் தொடங்கிய மாநிலம் எது?
அ. ஒடிஸா
ஆ. பீகார்
இ. ஹரியானா
ஈ. ஜார்கண்ட்
- ஒடிஸா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி சமீபத்தில் இந்தியாவின் முதல் சிலிக்கான் கார்பைடு உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். RIR பவர் மின்னணு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த வசதி புவனேசுவரில் உள்ள EMC பூங்காவில் `620 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்த வசதி, உலகளாவிய பவர் மின்னணு சந்தையில் இந்தியா மற்றும் ஒடிஸாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும். இது ஒடிஸாவை குறை கடத்தி உற்பத்திக்கான முக்கிய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
5. ஓர் அண்மைய அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய நெகிழி மாசுபாடுத்தியாக உள்ள நாடு எது?
அ. ரஷ்யா
ஆ. இந்தியா
இ. சீனா
ஈ. ஜப்பான்
- நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, ஆண்டுதோறும் 9.3 மில்லியன் டன்களை வெளியிடும் உலகின் மிகப் பெரிய நெகிழி மாசுபடுத்தியாக இந்தியா இருப்பதை வெளிப்படுத்துகிறது. நெகிழி உமிழ்வுகள் சுற்றுச்சூழலில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து கட்டுப்பாடற்ற நிலைக்கு நகரும் பொருட்கள் என வரையறுக்கப்படுகிறது.
- இந்தியாவின் நெகிழி மாசுபாடு உலகளாவிய உமிழ்வுகளில் சுமார் 20% ஆகும். இந்தியாவில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 0.12 கிலோ நெகிழிக் கழிவுகள் உருவாகின்றன. 2020ஆம் ஆண்டில் உலகளாவிய நெகிழிக் கழிவுகள் வெளியேற்றம் 52.1 மில்லியன் டன்கள் ஆகும். நைஜீரியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை முறையே 3.5 மற்றும் 3.4 மில்லியன் டன்களுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பெரிய மாசுபடுத்தும் நாடுகளாக உள்ளன.
6. மத்திய ஜவுளித்துறை அமைச்சரின் கூற்றுப்படி, தொழில்நுட்ப ஜவுளிகளின் ஆண்டு ஏற்றுமதி எந்த ஆண்டில் $10 பில்லியன் டாலர்களைத் தாண்டும்?
அ. 2025
ஆ. 2030
இ. 2035
ஈ. 2036
- 2030ஆம் ஆண்டுக்குள் தொழில்நுட்ப ஜவுளிகளின் ஆண்டு ஏற்றுமதி $10 பில்லியன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய ஜவுளி அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றுள் தொழில்துறை, செயல்திறன் மற்றும் உயர்-தொழில்நுட்ப ஜவுளிகள் அடங்கும். இந்த ஜவுளிகள் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளுக்கு அதிக இயல், இயந்திர, வெப்ப மற்றும் வேதிப்பண்புகளை வழங்குகின்றன. அவை கட்டுமானம், போக்குவரத்து, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் இதர பல்வேறு துறைகளில் சொந்தமாகவோ அல்லது பிற தயாரிப்புகளின் பாகங்களாகவோ பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை மற்றும் செயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ற அவை, அவற்றின் பயன்பாடுகளின் அடிப்படையில் 12 குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
7. அண்மையில், ‘தூய வளி நாள்’ என்றும் அழைக்கப்படும் நீலவானுக்கான தூய்மையான வளியின் 5ஆவது பன்னாட்டு நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?
அ. 1 செப்டம்பர் 2024
ஆ. 5 செப்டம்பர் 2024
இ. 7 செப்டம்பர் 2024
ஈ. 10 செப்டம்பர் 2024
- இராஜஸ்தான் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 7 செப்டம்பர் 2024 அன்று ஜெய்ப்பூரில் நீலவானுக்கான 5ஆவது பன்னாட்டு தூய வளி நாளைக் கொண்டாடியது. இந்நாள் இந்தியாவில் தூய வளி நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடன், தேசிய தூய வளி திட்டத்தின் உயர்மட்டக்குழுவின் 4ஆவது கூட்டம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடந்தது. ஐக்கிய நாடுகள் அவை 2019ஆம் ஆண்டு செப்.07ஆம் தேதியை நீலவானுக்கான பன்னாட்டு தூய வளி நாளாக அறிவித்தது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Invest in clean air now” என்பதாகும்.
8. ஸ்வச் வாயு சர்வேக்ஷன் – 2024இல் முதலிடத்தைப் பிடித்துள்ள நகரம் எது?
அ. ஜெய்ப்பூர்
ஆ. சூரத்
இ. கொல்கத்தா
ஈ. வாரணாசி
- முன்னர் 13ஆவது இடத்திலிருந்த சூரத், ஸ்வச் வாயு சர்வேக்ஷன் – 2024இல் இந்தியா முழுவதும் உள்ள 131 நகரங்களில் முதலாவது இடத்தைப் பிடித்தது. அந்நகரம், 2023-24இல் PM10 அளவை 12.71% குறைத்து, 194/200 மதிப்பெண்களைப் பெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த விழாவில் சூரத் `1.5 கோடி, கோப்பை மற்றும் சான்றிதழுடன் ‘தேசிய தூயவளி நகரம்’ என்ற பெருமையைப் பெற்றது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஸ்வச் வாயு சர்வேக்ஷன், காற்றின் துகள்களை 30% குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் கழிவு மேலாண்மை, தூசி, உமிழ்வு மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களை மதிப்பீடு செய்கிறது.
9. 2024 – பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது?
அ. 15
ஆ. 20
இ. 25
ஈ. 29
- 17ஆவது பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 செப்.8 அன்று பாரீஸ், ஸ்டேட் டி பிரான்சில் ஒரு விழாவுடன் நிறைவடைந்தது. இது 2024 ஆக.28 முதல் செப்.08 வரை பன்னாட்டு பாராலிம்பிக்ஸ் குழுமத்தால் நடத்தப்பட்டது. 18ஆவது கோடைக் கால பாராலிம்பிக்ஸ் – 2028இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்கள் வென்றதை விஞ்சி இந்தியா 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா 220 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இந்தியா 18ஆவது இடத்திலும் உள்ளன. நிறைவு விழாவில் ஹர்விந்தர் சிங் மற்றும் பிரீத்தி பால் ஆகியோர் இந்தியாவின் கொடியேந்திகளாக இருந்தனர்.
10. சுகன்யா சம்ரிதி யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு எது?
அ. 2014
ஆ. 2015
இ. 2018
ஈ. 2020
- 2024 அக்.01 முதல் சுகன்யா சம்ரிதி யோஜனாவுக்கான (SSY) புதிய விதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. SSY என்பது 2015இல், “பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: கற்பிப்போம்” இயக்கத்தின்கீழ் தொடங்கப்பட்டது; இது பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறு வைப்புத்திட்டமாகும். பாதுகாவலர்கள் தங்கள் பெண் குழந்தைக்கென SSY கணக்கைத்திறக்கலாம்; அப்பெண் சிறார் 10 வயதுக்குட்பட்டவராகவும், இந்தியராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு குறைந்தபட்சம் `250, அதிகபட்சமாக `1.5 இலட்சம் வரை வைப்புத்தொகை செலுத்தலாம்.
- 21 ஆண்டுகளில் இக்கணக்கு முதிர்வடையும். 18 வயதிற்குப் பிறகு கல்விக்காக 50% வரை பகுதியளவு பணத்தை எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. SSY வருமான வரிச்சட்டத்தின் 80C மற்றும் 10 பிரிவுகளின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. புதிய விதிகள் தாத்தா-பாட்டியிடமிருந்து சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் (அ) பெற்றோருக்கு பாதுகாவலர் பதவியை மாற்ற வேண்டும், இல்லையெனில் கணக்கு நிரந்தரமாக மூடப்படும் எனக் கூறுகிறது.
11. அண்மையில், இந்தியா-அமெரிக்கா கூட்டு இராணுவப்பயிற்சியான, ‘யுத் அபியாஸ்-2024’இன் 20ஆவது பதிப்பு நடத்தப்பட்ட இடம் எது?
அ. இராஜஸ்தான்
ஆ. குஜராத்
இ. மத்திய பிரதேசம்
ஈ. ஒடிஸா
- இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான யுத் அபியாஸ்-2024இன் 20ஆவது பதிப்பு ராஜஸ்தானில் உள்ள மகாஜன் களத்தில் தொடங்கியது. இந்தப் பயிற்சியானது 2024 செப்.09-22 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. யுத் அபியாஸ் என்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வருடாந்திர கூட்டு இராணுவப்பயிற்சியாகும், இது 2004 முதல் நடந்து வருகிறது. பயிற்சி, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி இரு ராணுவத்தினருக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. இப்பயிற்சியின் முந்தைய பதிப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வைன்ரைட்டில் நடந்தது.
12. ‘சுகம்யா பாரத் செயலி’ என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்?
அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஆ. பாதுகாப்பு அமைச்சகம்
இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
ஈ. விவசாய அமைச்சகம்
- 2021இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ‘சுகம்யா பாரத் செயலி’மூலம் 1,400 அணுகல்தன்மை புகார்கள் பதிவு செய்யப்பட்டு அதில் 75% புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளன. இச்செயலியானது சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் துறையின் ஒரு முன்முயற்சியாகும். இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் கட்டிடங்களில் உள்ள அணுகல் சிக்கல்களைப் புகாரளிக்க உதவுகிறது. ஜியோடேக் செய்யப்பட்ட நிழற்படங்களைப் பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அணுகல்தன்மை (Accessibility) இயக்கம் மற்றும் I-STEM உடனான கூட்டாண்மைகள் இச்செயலியின் வளர்ச்சியை ஆதரிக்கின்றன.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தேசிய கண் தான இரு வார நிகழ்வு.
தேசிய கண் தான இரு வார நிகழ்வு ஆண்டுதோறும் ஆக.25 முதல் செப்.8 வரை அனுசரிக்கப்படுகிறது.
1. Recently, where was the ‘5th India-Maldives Defence Cooperation Dialogue’ held?
A. Bengaluru
B. New Delhi
C. Chennai
D. Kolkata
- The 5th Defence Cooperation Dialogue between India and the Maldives was held in New Delhi on September 6, 2024. Discussions included bilateral military exercises, marking the first defence dialogue after recent tensions between the two nations. Earlier, the Maldives President, as part of his “India Out” campaign, had Indian military personnel withdraw and leaned towards pro-China policies. Recent cooperation between the two countries has improved following India’s External Affairs Minister’s visit to the Maldives and the Maldives President attending India’s Prime Minister’s oath ceremony.
2. Recently, the Union Minister of Science and Technology virtually inaugurated how many new NIDHI i-TBIs across India?
A. 7
B. 8
C. 9
D. 10
- The Union Minister of Science and Technology virtually inaugurated 8 new NIDHI i-TBIs and a Department of Science and Technology’s initiative (DST-NIDHI) website at IIT Delhi, marking 8 years of DST-NIDHI. The National Initiative for Developing and Harnessing Innovations (NIDHI) was launched in 2016 to nurture start-ups by supporting and scaling innovations. NIDHI involves central and state governments, academic institutions, financial bodies, and private sectors. It is funded by the National Science & Technology Entrepreneurship Development Board (NSTEDB).
3. Which day is observed as “International Literacy Day (ILD)” every year?
A. 6 September
B. 7 September
C. 8 September
D. 9 September
- International Literacy Day has been observed globally on September 8th since 1967. The day highlights the importance of literacy in building a just, peaceful, and sustainable society. It serves as a reminder to policymakers, practitioners, and the public about literacy’s role in personal and societal development. The observance emphasizes the global commitment to literacy as a fundamental human right.
4. Which state recently introduced India’s first silicon carbide manufacturing facility?
A. Odisha
B. Bihar
C. Haryana
D. Jharkhand
- Odisha Chief Minister Mohan Charan Majhi recently led the groundbreaking for India’s first silicon carbide manufacturing facility. Developed by RIR Power Electronics Limited, the facility is being set up at EMC Park in Bhubaneswar with an investment of Rs 620 crore. This facility represents a significant advancement for India and Odisha in the global power electronics market. It aims to position Odisha as a key hub for semiconductor production.
5. According to recent report, which country has secured the top spot as biggest plastic polluter in the world?
A. Russia
B. India
C. China
D. Japan
- A study published in Nature reveals India is the world’s largest plastic polluter, releasing 9.3 million tonnes annually. Plastic emissions are defined as materials moving from a controlled to an uncontrolled state in the environment. India’s plastic pollution accounts for about 20% of global emissions. India generates around 0.12 kilograms of plastic waste per capita per day. Global plastic waste emissions were 52.1 million tonnes in 2020. Nigeria and Indonesia are the second and third largest polluters, with 3.5 and 3.4 million tonnes, respectively.
6. As per the Union Minister for Textiles, annual export of technical textiles will cross $10 billion by which year?
A. 2025
B. 2030
C. 2035
D. 2036
- The Union Minister for Textiles announced that annual exports of technical textiles are expected to exceed $10 billion by 2030. Technical textiles are materials designed for their functional properties rather than aesthetics. They include industrial, functional, performance, and hi-tech textiles. These textiles offer high physical, mechanical, thermal, and chemical properties for various industrial uses. They are used in sectors like construction, transport, defense, medical, and more, either on their own or as parts of other products. They are made from both natural and synthetic fibers and are categorized into 12 groups based on their applications.
7. Recently, the 5th International Day of Clean Air for Blue Skies, also known as Swachh Vayu Diwas, is observed on which day?
A. 1 September 2024
B. 5 September 2024
C. 7 September 2024
D. 10 September 2024
- The Rajasthan State Pollution Control Board hosted the 5th International Day of Clean Air for Blue Skies on 7 September 2024 in Jaipur. This day is also known as Swach Vayu Diwas in India. Along with this, the 4th meeting of the Apex Committee of the National Clean Air Programme (NCAP) took place, chaired by Bhupendra Yadav, Union Minister for Environment, Forest and Climate Change. The United Nations declared 7 September as the International Day of Clean Air for Blue Skies in 2019. The theme for 2024 is “Invest in clean air now.”
8. Which city has secured first position in the Swachh Vayu Survekshan (SVS) 2024?
A. Jaipur
B. Surat
C. Kolkata
D. Varanasi
- Surat, previously ranked 13th, secured 1st place in the Swachh Vayu Survekshan (SVS) 2024 among 131 cities across India. The city scored 194 out of 200 marks and reduced PM10 levels by 12.71% in 2023-24. Surat was honored as a ‘National Clean Air City’ with ₹1.5 crore, a trophy, and a certificate at a ceremony in Jaipur. The Swachh Vayu Sarvekshan, initiated by the government, aims for a 30% reduction in air particulates and evaluates cities based on waste management, dust, emissions, and public awareness.
9. How many medals were won by India at the 2024 Paris Paralympics?
A. 15
B. 20
C. 25
D. 29
- The 17th Paris Paralympics concluded on 8 September 2024 with a ceremony at Stade de France, Paris. It was held from 28 August to 8 September 2024, organized by the International Paralympics Committee. The 18th Summer Paralympics will take place in Los Angeles, USA, in 2028. India won a record 29 medals, surpassing the 19-medal haul from the 2020 Tokyo Paralympics. China topped the medal tally with 220 medals, while India ranked 18th. Harvinder Singh and Preeti Pal were India’s flag bearers at the closing ceremony.
10. Sukanya Samriddhi Yojana was launched in which year?
A. 2014
B. 2015
C. 2018
D. 2020
- The government introduced new rules for the Sukanya Samriddhi Yojana (SSY), effective from 1 October 2024. SSY, launched in 2015 under the “Beti Bachao Beti Padhao” campaign, is a small-deposit savings scheme for girl children. Guardians can open an SSY account for their girl child, who must be under 10 years old and an Indian resident. The scheme allows a minimum deposit of ₹250 and a maximum of ₹1.5 lakh annually, with maturity at 21 years.
- Partial withdrawal up to 50% is allowed for education after age 18. SSY offers tax benefits under Sections 80C and 10 of the Income Tax Act. New rules require the transfer of guardianship from grandparents to legal guardians or parents, else the account will be permanently closed.
11. Recently, where was the 20th edition of India-USA joint military exercise ‘YUDH ABHYAS-2024’ conducted?
A. Rajasthan
B. Gujarat
C. Madhya Pradesh
D. Odisha
- The 20th edition of the India-USA Joint Military Exercise YUDH ABHYAS-2024 began at the Mahajan Field Firing Ranges in Rajasthan. The exercise is scheduled to be conducted from 9th to 22nd September 2024. Yudh Abhyas is an annual joint military exercise between India and the USA, ongoing since 2004. The exercise fosters cooperation between the two militaries, focusing on training, cultural exchanges, and developing joint operational skills. The previous edition took place at Fort Wainwright, Alaska, USA.
12. ‘Sugamya Bharat App’ is an initiative of which ministry?
A. Ministry of Social Justice and Empowerment
B. Ministry of Defence
C. Ministry of Science and Technology
D. Ministry of Agriculture
- Since its launch in 2021, over 1,400 accessibility complaints have been lodged through the Sugamya Bharat mobile app, with 75% resolved. The app is an initiative by the Ministry of Social Justice and Empowerment’s Department of Empowerment of Persons with Disabilities (DEPwD).
- It helps people with disabilities and the elderly report accessibility issues in public infrastructure, transportation, and buildings. Complaints are filed using geotagged photos, sent to relevant authorities. The app will soon be upgraded with AI features, including a chatbot and multilingual interface. Partnerships with Mission Accessibility and I-STEM support the app’s development.