TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 9th October 2024

1. DRDOஆல் உருவாக்கப்பட்ட, “VSHORADS” என்பது என்ன வகையான ஏவுகணை?

அ. வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு

. Man-portable air-defence system (MANPADS)

இ. Terminal High Altitude Area Defence System (THAAD)

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • ராஜஸ்தானின் பொக்ரானில் மூன்று வெற்றிகரமான சோதனைகளுடன் நான்காம் தலைமுறை Very SHOrt Range Air Defence System (VSHORAD) மேம்பாட்டு சோதனைகளை DRDO நிறைவுசெய்தது. ஆள் எடுத்துச்செல்லக்கூடிய வான்-பாதுகாப்பு அமைப்பான VSHORAD என்பது குறுகிய தூரங்களில் குறைந்த உயர வான்வழி இடர்களை வீழ்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள DRDOஇன் ஆராய்ச்சி மையமான இமாரத், தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளது. குறும்படிவாக்கப்பட்ட ரியாக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (RCS) மற்றும் ஒருங்கிணைந்த பறப்பு மின்னணுவியல்போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை இந்த ஏவுகணை கொண்டுள்ளது. இது இரட்டை உந்துதல் திட மோட்டார்மூலம் இயக்கப்படுகிறது.

2. அண்மையில், “வணிகம்-தயார்நிலை குறியீட்டை” உருவாக்கிய அமைப்பு எது?

அ. UNDP

ஆ. உலக வங்கி

இ. IMF

ஈ. WEF

  • இந்தியா தனது மாநில வணிகத்தயார்நிலை தரவரிசையை புதிய உலக வங்கி B-READY குறியீட்டுடன் சீரமைக்கிறது. B-READY (Business-READY Index) என்பது கைவிடப்பட்ட எளிதாக தொழில் தொடங்குதல் தரவரிசைக்கு மாற்றாக உள்ளது. இது ஒழுங்குமுறை கட்டமைப்பு, பொதுச்சேவைகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய பொருளாதாரங்களின் வணிகச்சூழலை மதிப்பிடுகிறது.
  • எண்மமயமாக்கல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை இதன் முக்கிய கூறுகளாகும். ஒரு வணிகத்தின் சுழற்சி வட்டத்தில் தொடக்கம் முதல் நிறைவு வரையுள்ள பத்து அளவுருக்களை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது. ஒருநாட்டின் ஒழுங்குமுறை மற்றும் கொள்கைச்சூழலை மதிப்பிடுவதற்கு உலகளாவிய நிறுவல்கள் இதைப் பயன்படுத்தும்.

3. ‘சீரெஸ்’ ஆனது அண்மையில் எந்த வகையான வான்பொருள் என வகைப்படுத்தப்பட்டது?

அ. குள்ளக்கோள்

ஆ. சிறுகோள்

இ. வால் நட்சத்திரம்

ஈ. சந்திரன்

  • சீரெஸ் அதன் நிறைகாரணமாக ஒரு சிறுகோள் என்ற வகைப்பாட்டிலிருந்து ஒரு குள்ளகக்கோளாக மறுவகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பர்டூ பல்கலைக்கழகம் மற்றும் NASAஇன் சமீபத்திய ஆய்வுகள், அதன் மேலோடு 90% பனியால் ஆனது என்றும் இது ஒரு நீர்நிறைந்த கோளமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறது. கண்டுபிடிப்புகள் NASAன் டான் பணியின் தரவை அடிப்படையாகக் கொண்டவை; இது சீரெஸின் பள்ளம் மற்றும் பனிக்கட்டி கலவை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியது.

4. புவிசார் குறியீடு பெற்ற போடோ நாபம் மற்றும் போடோ ஒன்ட்லா ஆகியவை சார்ந்த மாநிலம் எது?

அ. மிசோரம்

ஆ. அஸ்ஸாம்

இ. ஒடிஸா

ஈ. ஜார்கண்ட்

  • சென்னையில் உள்ள புவிசார் குறியீடுகள் பதிவகம், போடோ நாபம் மற்றும் போடோ ஒன்ட்லா உட்பட அஸ்ஸாமில் இருந்து வந்த எட்டு தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது. போடோ நாபம் என்பது இரண்டு முதல் மூன்று மாதங்களில் காற்றில்லா முறையில் தயாரிக்கப்படும் ஒரு புளித்த மீன் உணவாகும். போடோ ஒன்ட்லா என்பது பூண்டு மற்றும் இஞ்சியுடன் பதப்படுத்தப்பட்ட அரிசித்தூளாகும். போடோ ஜூ குவ்ரான், மைப்ரா ஜூ பித்வி, போடோ ஜூ கிஷி, போடோ குவ்கா, போடோ நர்சி மற்றும் போடோ அரோனை ஆகியன பிற 6 பொருட்களாகும்.

5. ‘SIPCOT’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் தொழிற்பூங்காவாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • SIPCOT அல்லது தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கோடு கடந்த 1971இல் நிறுவப்பட்டது. 50 தொழில் பூங்காக்களுடன் இது 3,290 தொழிற்துறை அலகுகளை உருவாக்கியுள்ளது மற்றும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு, மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது. SIPCOT ஆனது துறைசார்ந்த பூங்காக்கள், புத்தாக்க மையங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிலையான வீடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

6. எந்த வைரஸிற்கான நிகழ்நேர PCR கண்டறியும் சோதனையான ‘Alinity m MPXV’ மதிப்பீட்டிற்கு அண்மையில் WHO ஒப்புதல் அளித்துள்ளது?

அ. Mpox

ஆ. ஜிகா

இ. டெங்கு

ஈ. எபோலா

  • உலக சுகாதார அமைப்பு (WHO) ‘Alinity m MPXV’ மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது; இது mpox-க்கான நிகழ்நேர PCR சோதனையாகும். இந்தச் சோதனையானது தோலிலுள்ள புண்களில் ஒற்றியெடுக்கப்பட்ட பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி வைரஸைக் கண்டறிந்து, உடனடி முடிவுகளை வழங்குகிறது. ஐயத்திற்கிடமான mpox பாதிப்புகளை விரைவாக உறுதிப்படுத்த சுகாதாரப் பணியாளர்களுக்கு இது உதவுகிறது; அது பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ‘Alinity m MPXV’ மதிப்பீடு என்பது WHOஇன் எமர்ஜென்சி யூஸ் லிஸ்டிங்கின் (EUL) முதல் mpox சோதனையாகும்; இது சுகாதார அவசரகாலங்களில் விரைவாக கிடைக்கும். Mpox என்பது விலங்குவழி பரவும் வைரஸ் நோயாகும், இது மனித தொடர்பு மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகள்மூலம் பரவுகிறது.

7. ‘ஆதி கௌரவ சம்மான்’ விருதை நிறுவியுள்ள மாநில அரசு எது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத்

இ. ஹரியானா

ஈ. பஞ்சாப்

  • 2024 அக்.04 அன்று இராஜஸ்தானின் மன்கர் தாமில் நடந்த முதல் ஆதி கௌரவ சம்மான் சமரோவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். இராஜஸ்தான் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஆதி கௌரவ சம்மான் விருதில் மூன்று பிரிவுகள் உள்ளன: ஆதிரத்னா, ஆதி சேவை மற்றும் ஆதி கிராமோத்தன் கௌரவ் சம்மான்.
  • விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின உறுப்பினர்களுக்கு ஆதிரத்னா கௌரவ சம்மான் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆதி சேவா கௌரவ சம்மான், பட்டியல் பழங்குடியினருக்கான முன்மாதிரியான சேவையை அங்கீகரிக்கிறது. சமூகப்பொருளாதார மேம்பாட்டிற்காக கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் ஜில்லா பரிஷத்களுக்கு ஆதி கிராமோத்தன் கௌரவ சம்மான் வழங்கப்படுகிறது.

8. 2024 அக்டோபர் நிலவரப்படி அந்நியச்செலாவணி கையிருப்பின் அடிப்படையில் பின்வரும் நாடுகளில் முதல் நான்கு நாடுகள் எவை?

அ. சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா

ஆ. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா

இ. உக்ரைன், நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் மியான்மர்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவுகள், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா

  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சமீபத்தில் முதன்முறையாக $700 பில்லியனைத் தாண்டியது. அவ்வாறு செய்யும் நான்காவது நாடாக இந்தியாவாகும். 2024ஆம் ஆண்டில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $87.6 பில்லியன் அதிகரித்துள்ளது; இது முந்தைய ஆண்டின் $62 பில்லியனைவிடவும் அதிகமாகும். 2024 அக்டோபர் நிலவரப்படி, அதிக அந்நியச் செலாவணி இருப்புகொண்ட முதல் நான்கு நாடுகள்: சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா.

9. எப்போது 2024 – தேசிய வனவிலங்கு வாரம் அனுசரிக்கப்பட்டது?

அ. செப்டம்பர் 1-7

ஆ. அக்டோபர் 2-8

இ. நவம்பர் 10-16

ஈ. டிசம்பர் 20-26

  • இந்தியாவில் 2024 – தேசிய வனவிலங்கு வாரம் 2024 அக்.02 முதல் 08 வரை, “நமது இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் – Safeguarding Our Natural Heritage” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது. கடந்த 1955ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்ட வனவிலங்கு நாளிலிருந்து உருவான இந்நிகழ்வு கடந்த 1957இல் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது. இந்திய வனவிலங்கு வாரியத்தால் 1952இல் நிறுவப்பட்ட இது, வனவிலங்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலை நோக்கமாகக்கொண்டது. வனவிலங்கு வாரமானது, பாதுகாப்பை ஊக்குவிப்பதிலும், இந்தியாவின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை முன்னிலைப்படுத்துவதிலும் கவனஞ்செலுத்துகிறது.

10. பெண் கல்விக்காக, “நிஜுத் மொய்னா” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மணிப்பூர்

இ. நாகாலாந்து

ஈ. மிசோரம்

  • அஸ்ஸாம் மாநில அரசு குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் போராடவும், மாணவிகள் உயர்கல்வியைத் தொடரவும் “நிஜுத் மொய்னா” திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் மாதாந்திர உதவித்தொகையை வழங்குகிறது: 11-12 வகுப்பு மாணவிகளுக்கு `1,000, பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு `1,250 மற்றும் முதுகலை மாணவிகளுக்கு `2,500. இத்திட்டதிற்குத் தகுதிபெற, மாணவிகள் தவறாமல் வகுப்புகளுக்குச் செல்லவேண்டும், ஒழுக்கத்தை வெளிப்படுத்த வேண்டும், தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படவேண்டும்; மேலும் முதுகலை பட்டப்படிப்பை முடிக்கும் வரை மணம்புரிதல் கூடாது. இம்முயற்சி அஸ்ஸாம் மாநிலத்தின் பெண்களை மேம்படுத்துவதையும், கல்வியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. உலக பருத்தி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 6

ஆ. அக்டோபர் 7

இ. அக்டோபர் 8

ஈ. அக்டோபர் 9

  • பருத்தியின் உலகளாவிய முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஆண்டுதோறும் அக்.07ஆம் தேதி உலக பருத்தி நாள் கொண்டாடப்படுகிறது. பருத்தி உழவர்களும் பருத்தித்தொழிலும் எதிர்கொள்ளும் சவால்கள்குறித்த விழிப்புணர்வை இந்நாள் ஏற்படுத்துகிறது. பருத்தி ஜவுளித்தொழிலில் மட்டுமின்றி கால்நடைத்தீவனம், மருத்துவப்பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

12. இந்தியா, கீழ்க்காணும் எந்த நகரத்தில், ‘2024 – மலபார் கடற்படை பயிற்சியை’ நடத்துகிறது?

அ. மும்பை

ஆ. விசாகப்பட்டினம்

இ. சென்னை

ஈ. கொச்சி

  • குவாட் நாடுகளின் கூட்டுக்கடற்படைப் பயிற்சியை இந்தியா அக்.08-18 வரை விசாகப்பட்டினத்தில் நடத்துகிறது. மலபார்-2024 என்று பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சியில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட கடல் மற்றும் துறைமுக கட்டங்கள் அடங்கும். இது வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள்போன்ற பல்வேறு இந்தியக் கடற்படை ஆயுதங்களை ஈடுபடுத்தும். மலபார் பயிற்சியானது கடந்த 1992ஆம் ஆண்டில் அமெரிக்க-இந்திய பயிற்சியாகத் தொடங்கப்பட்டு, கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கும், இயங்குதிறனை மேம்படுத்துவதற்குமான ஒரு பலதரப்பு நிகழ்வாக உருவானது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இருவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு.

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நடப்பாண்டில் இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹோபீல்டு, கனடாவைச் சேர்ந்த ஜியோபெரி ஹின்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் கூறுகளிலிருந்து இன்றைய ஆற்றல்மிகு இயந்திர கற்றலுக்கான அடிப்படை நடைமுறைகளை மேம்படுத்தியற்காக நோபல் பரிசுக்கு இவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

2. 104 செயற்கைக்கோள்களை செலுத்திவிட்டு… 8 ஆண்டுகளுக்குப் பிறகு புவிக்குத் திரும்பிய PSLV C37!

கார்டோசாட்-2டி உள்பட 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட PSLV C37 ஏவுகணையின் 4ஆம் நிலை, 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புவிக்குத் திருப்பிக்கொண்டுவரப்பட்டு கடலில் விழ வைக்கப்பட்டது. படமாக்கல் செயற்கைக்கோளான கார்டோசாட்-2டி, கடந்த 2017 பிப்.15ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

3. ஆண்டுக்கு `46,000 கோடி இறால் ஏற்றுமதி.

இந்தியா ஆண்டுக்கு `46,000 கோடி மதிப்பிலான இறால் மீன்களை ஏற்றுமதிசெய்வதாக மத்திய மீன்வளம், கால் நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியில், தற்போது இறால் மீன்கள் மட்டும் 70% பங்களிப்பை வழங்குவதுடன், ஆண்டுக்கு சுமார் பத்து இலட்சம் மெட்ரிக் டன் இறால் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டு, `46,000 கோடி மதிப்புள்ள இறால் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

1. What type of missile is “VSHORADS”, developed by DRDO?

A. Airborne Warning and Control System

B. Man-portable air-defence system (MANPADS)

C. Terminal High Altitude Area Defence System (THAAD)

D. None of the above

  • DRDO completed development trials of the 4th Generation Very Short-Range Air Defence System (VSHORAD) with three successful tests at Pokhran, Rajasthan. VSHORAD is a Man Portable Air Defence System (MANPAD) designed to neutralize low-altitude aerial threats at short ranges. It was developed by DRDO’s Research Centre Imarat, Hyderabad, with industry partners. The missile features advanced technologies like a miniaturised Reaction Control System (RCS) and integrated avionics, and is propelled by a dual-thrust solid motor.

2. Which organization recently prepared the “Business-Ready Index”?

A. UNDP

B. World Bank

C. IMF

D. WEF

  • India is aligning its state business readiness rankings with the new World Bank B-READY index. The B-READY (Business-Ready Index) replaces the discontinued Ease of Doing Business rankings.
  • It assesses the business environment of global economies based on regulatory framework, public services, and efficiency. Key areas include digitalization, environmental sustainability, and gender equality. The index evaluates ten parameters across a business’s lifecycle, from starting to closing. Global institutions and companies will use it to assess a country’s regulatory and policy environment.

3. ‘Ceres’ is recently classified as what type of celestial body?

A. Dwarf planet

B. Asteroid

C. Comet

D. Moon

  • Ceres was reclassified from an asteroid to a dwarf planet due to its mass. Recent studies by Purdue University and NASA revealed that its crust is likely composed of 90% ice, suggesting a history as a watery world. The findings are based on data from NASA’s Dawn mission, which provided insights into Ceres’ cratered surface and icy composition.

4. Bodo Napham and Bodo Ondla, which have received the Geographical Indications tag, are from which state?

A. Mizoram

B. Assam

C. Odisha

D. Jharkhand

  • The Geographical Indications Registry in Chennai has granted GI tags to eight products from Assam, including Bodo Napham and Bodo Ondla. Bodo Napham is a fermented fish dish prepared anaerobically over two to three months. Bodo Ondla is a rice powder curry seasoned with garlic and ginger. The other six products are Bodo Jou Gwran, Maibra Jou Bidwi, Bodo Jou Gishi, Bodo Gwkha, Bodo Narzi and Bodo Aronai.

5. ‘SIPCOT’ is an industrial park of which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Kerala

D. Andhra Pradesh

  • SIPCOT, or the State Industries Promotion Corporation of Tamil Nadu, was established in 1971 to foster industrial growth in Tamil Nadu. With 50 industrial parks, it has facilitated over 3,290 industrial units and generated millions of jobs. The initiative aims to enhance the state’s economy, targeting a $1 trillion economy by 2030. SIPCOT focuses on sector-specific parks, innovation centers, and sustainable housing for workers.

6. WHO has recently approved the Alinity m MPXV assay, a real-time PCR diagnostic test for which virus?

A. Mpox

B. Zika

C. Dengue

D. Ebola

  • The World Health Organization (WHO) approved the Alinity m MPXV assay, a real-time PCR test for mpox. This test detects the virus using swabs from skin lesions, providing immediate results. It helps health workers confirm suspected mpox cases quickly, aiding outbreak control. The Alinity m MPXV assay is the first mpox test on the WHO’s Emergency Use Listing (EUL) for faster availability during health emergencies. Mpox is a viral zoonotic disease that spreads through human contact and infected animals.

7. Which state government has instituted the ‘Adi Gaurav Samman’ award?

A. Rajasthan

B. Gujarat

C. Haryana

D. Punjab

  • President Droupadi Murmu attended the first Adi Gaurav Samman Samaroh in Mangarh Dham, Rajasthan, on October 4, 2024. The Rajasthan government established the Adi Gaurav Samman award, which has three categories: Aadiratna, Adi Seva, and Aadi Grammotthan Gaurav Samman.
  • Aadiratna Gaurav Samman awards Scheduled Tribe members excelling in sports, education, and culture. Adi Seva Gaurav Samman recognizes exemplary service for Scheduled Tribes. Aadi Grammotthan Gaurav Samman rewards Gram Panchayats, Panchayat Samitis, and Zilla Parishads for socio-economic improvements.

8. Which of the following are top four countries in terms of their forex reserves as of October 2024?

A. China, Japan, Switzerland and India

B. US, Australia, France and Russia

C. Ukraine, New Zealand, Bangladesh and Myanmar

D. UAE, Maldives, Singapore and Indonesia

  • India’s forex reserves recently surpassed $700 billion for the first time, making it the fourth country to do so after the other three. In 2024, India’s forex reserves have increased by $87.6 billion, which is more than the increase of nearly $62 billion in the entire previous year. As of October 2024, the top four countries with the highest foreign exchange reserves (forex) are: China, Japan, Switzerland, and India.

9. When is National Wildlife Week 2024 observed?

A. September 1-7

B. October 2-8

C. November 10-16

D. December 20-26

  • National Wildlife Week 2024 in India was celebrated from October 2 to 8, with the theme “Safeguarding Our Natural Heritage.” The event was first commemorated in 1957, having evolved from Wildlife Day, which was observed in 1955. It was established by the Indian Board of Wildlife in 1952. It aimed to raise awareness about wildlife protection. Wildlife Week has since become an annual event focused on promoting conservation and highlighting India’s rich biodiversity.

10. Which state government has recently launched “Nijut Moina Scheme” for girls education?

A. Assam

B. Manipur

C. Nagaland

D. Mizoram

  • The Assam government has launched the ‘Nijut Moina’ scheme to combat child marriage and support girl students in pursuing higher studies. The scheme provides monthly stipends: Rs 1,000 for Classes 11-12, Rs 1,250 for degree students, and Rs 2,500 for post-graduate students. To qualify, students must attend classes regularly, demonstrate discipline, perform well in exams, and delay marriage until after completing their post-graduation. This initiative aims to empower girls and promote education in Assam.

11. Which day is observed as “World Cotton Day”?

A. 6th October

B. 7th October

C. 8th October

D. 9th October

  • World Cotton Day is celebrated annually on 7th October to highlight cotton’s global significance. The day raises awareness about the challenges faced by cotton farmers and the cotton industry. Cotton is used not only in textiles but also for animal feed, medical supplies, and edible oil. India is the second-largest cotton producer globally, after China.

12. India hosts ‘Malabar Naval Exercise 2024’ in which city?

A. Mumbai

B. Visakhapatnam

C. Chennai

D. Kochi

  • India hosts the joint naval exercise of Quad nations from October 8 to 18 in Visakhapatnam. The exercise, named Malabar 2024, includes sea and harbor phases focusing on cooperation in the Indo-Pacific region. It features various Indian naval platforms, such as guided missile destroyers, submarines, and fighter aircraft. The Malabar exercise started in 1992 as a US-India drill and evolved into a multilateral event to enhance interoperability and address maritime challenges.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!